-
Posts
15627 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
எனது கருத்துகள். 1. ஒருவர் ஒரு மொழியில் பேசியதை முதலில் போட்டு விட்டு, அதன் மொழிபெயர்ப்பை இன்னொரு குரலில் அதை மேவி போடுவது - பொதுவான நடைமுறைதான். விபரண படங்களின் வாழ்நாள் ரசிகன் என்றவகையில் இது 1950 களில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை. இதில் ஒரு அதீத தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. 2. முன்பே நான் சொன்னது போல் பிபிசி, யாழ் என எல்லா ஊடகங்களுக்கும் ஒரு நோக்கு (Agenda) உண்டு. அதை ஒட்டியே அவர்கள் கதையாடல் (narrative) உம் இருக்கும். 3. ஆனால் இவர்களுக்கு ஒரு தொழில் மதிப்பும் உள்ளது (industry reputation). ஆகவே மிக பச்சையான பொய்களை - மாட்டி கொள்ள வாய்பிருக்கும் போது இவர்கள் சொல்ல மாட்டார்கள். 4. உதாரணமாக, கோஷானுக்கும், கடஞ்சா வுக்கும்தான் ரஸ்ய மொழி தெரியாது. ஆனால் ஆங்கிலமும், ரஸ்யனும் தெரிந்த கோடானு கோடிப்பேர் இருக்கிறார்கள். அந்த நிலையில் புட்டின் போர் என சொல்லாமல், இவர்கள் புட்டின் அப்படி சொன்னார் என பச்சை பொய்யை அவிழ்த்து விட்டால் மாட்டி கொள்வார்கள். 5. உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டினாலும். தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என்பது பழமொழி. ஏற்கனவே லின்சே க்ரேம் விடயத்தில் சொன்னதுதான். ஆகவே நீங்கள் கொடுக்கும் மொழிபெயர்ப்பை - என்னால் ஏற்க முடியாதுள்ளது. 6. நீங்கள் தந்துள்ள YouTube வீடியோவும் கூட 17ம் நிமிடத்தில் அந்த வார்த்தையை போர் என்றே மொழி பெயர்கிறது. 7. அடுத்து நான் சொன்ன நிகிட்டா யுரேவேவ் புட்டின் மீது “போர்” என சொன்னார் என புகார் கொடுத்த விடயம். 8. இப்படி பலதையும் சீர்தூக்கி பார்க்கும் போது, இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் (on the basis of currently available evidence) - புட்டின் யுத்தம் என்ற சொல்லை பாவித்தார் என்ற முடிவுக்கே என்னால் வர முடிகிறது. 9. ஆனால்…இது ஒரு தவறுதலாக வந்து விழுந்த வார்த்தையாக இருக்கலாம்…ஒரு பயிற்றப்பட்ட முன்னைநாள் உளவாளியாக புட்டின் வார்த்தை பிரயோகத்தில் மிக கவனமானவர். ஜோன்சன் போல உளறுவாயன் இல்லை. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும். 70 வயதில் இதை slip of the tongue ஆக புட்டின் சொல்லி இருக்கலாம் (அது Freudian Slip ஆக அமைந்தது முரண்நகை). 10. இது வெறும் slip of the tongue ஆ, அல்லது புட்டினின் நிலை மாற்றமா என்பதை இனி வரும் அவரின் நடவைக்கை, பேச்சை பார்த்து உறுதி செய்யலாம். குறிப்பாக எதிர்பார்க்கபடும் அவரின் பேச்சு - இதற்கான விடையை கொடுக்கலாம். -
பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
goshan_che replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளீர்கள். #tragicomedy -
ரிசி சுனக்கிற்கு காரின் பின் இருக்கையில் இருக்கை பட்டி இன்றி பயணித்த குற்றத்துக்காக தண்டம் விதித்தது பிரித்தானியாவின் லாங்கஷேர் காவல்துறை. பிரித்தானியாவில் தனது அரசாங்கத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு சிறு வீடியோவை ஓடும் காரில் இருந்து வெளியிட்டே இப்படி சிக்கலில் மாட்டி உள்ளார் ரிசி. ஒரு தண்ட அறிவிப்பு 42 வயதான இலண்டன் ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது லாங்கஷேர் காவல்துறை. ரிசி தவறை முழுமையாக ஏற்று மன்னிப்பு கோருவதுடன், தண்டதையும் செலுத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்பு கொவிட் விதிகளை மீறி விருந்தில் கலந்தமைக்காக பொரிசுடன் சேர்த்து ரிசிக்கும் தண்டம் விதிக்கப்பட்டது நினைவுகூறதக்கது. பிரதமர் சட்டங்களை புறம்தள்ளி நடப்பதை இது காட்டுவதாக அரசியல்வாதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். (செய்தியின் சுருக்கம், மொழிபெயர்ப்பல்ல). https://www.bbc.co.uk/news/uk-politics-64353054
-
பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
goshan_che replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
நன்றி. தேர்தல் அரசியல் = 1 அல்லது 2 எம்பி சீட் என கருதுகிறேன். சரிதானே? ஆனால் இவர்களின் இலட்சியம் இனத்தின் மீட்சியா? இல்லை தேர்தலில் வெல்வதா? இவர்கள் சீனவை அணுகி, இனத்துக்கு நல்லது நடந்தால் - தேர்தல் போனால் போகுது உரோமம் எண்டு விட்டு விடலாம் அல்லவா? அப்புறம் நல்லது நடந்தால் சனம் அவர்களை கொண்டாடும் அல்லவா? அப்போ வட கிழக்கின் அத்தனை சீட்டுகளையும் வெல்லலாமே? இந்தியாவுக்கு அதில் தமிழர் சார்பாக தலையிட ஒரு தேவை இருக்கவில்லை. ஆகவே சும்மா இருந்தது. இதைதான் கிள்ளுகீரை என்கிறேன். Taken for granted. தமிழரும் சீனாவுடன் பேசுகிறார்கள் என்றால் - இந்தியா சிங்கள தரப்பை நடத்துவது போல் எம்மையும் நடத்துவதை தவிர வேறு வழியில்லையே? இல்லாவிடில் தமிழர் தரப்பு சீனாவை அணுகும் என்ற நிலை உருவானால் நிச்சயம் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். நம்ப சொல்லி யார் சொன்னது? எமக்கு உதவி செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துள் இந்தியாவை தள்ள வேண்டும். அதற்கு தமிழரின் ஒரு தரப்பு இந்தியாவோடு நின்றால் மறு தரப்பு சீனாவோடு நிற்க வேண்டும். ஏலவே மேற்கு எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு மோடில் இருக்கும். 2 எம்பி மக்கள் ஆதரவு தளம் உள்ள சைக்கிள்காரர்தான் சீனாவை அணுக தோதான ஆட்கள். -
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
நீங்கள் தேடும் வீடியோ கீழே. ஆனால் இது DW வினுடையது. DW என்பது பிபிசி மாதிரி ஒரு ஜேர்மன் public service broadcaster. ஆகவே நீங்களும் உங்கள் சகபாடிகளும் அவர்கள் தரவை நம்ப போவதில்லை. இந்த வீடியோவின் ரஸ்ய பிரதி கிடைக்குமா என தேடி பாருங்கள். மேலதிக தகவல்: புட்லர் இப்படி போர் என சொன்னதும் அவரின் சொந்த நகரான சென் பீட்டர்ஸ் பேர்க் கினை சேர்ந்த உள்ளூர் க அரசியல்வாதி ஒருவர், நிக்கிட்டா யூரெவெவ் என்பது அவர் பெயர், புட்டின் மீது வழக்கு போடபோவதாயும் சொன்னார். ரஸ்யன் மொழியை இந்த ரஸ்ய அரசியல்வாதி தவறாக விளங்க வாய்பில்லை என நினைக்கிறேன். ஆனால் இதை பற்றியும் மொஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்திதான் உள்ளது. இவர் எந்த சமூலவலை பரப்பில் இப்படி கூறினார் என தெரியவில்லை. நிகிட்டா இதை பற்றி ரொய்டர்ஸ்சிடமும் பேசி உள்ளார். ஆனால் ரொய்டர்சையும் நீங்கள் நம்புவதில்லை என நினைக்கிறேன். -
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
🤣 …இதை வாசிக்கறச்சே…சிரிச்சு மாளாமல்… நேக்கு கண்ல ஜலம் வச்சிண்டுடுத்துன்னா🤣 -
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
How it started: 3 நாளில் கீவை பிடித்து ரஸ்ய கொடி ஏற்றுவோம்! How it is going: மொஸ்கோவில் விமான எதிர்ப்பு ஏவுகணை பொருத்துகிறோம்🤣 # வி(சர்)சேட நடவடிக்கை How it started: 3 நாளில் கீவை பிடித்து ரஸ்ய கொடி ஏற்றுவோம்! How it is going: மொஸ்கோவில் விமான எதிர்ப்பு ஏவுகணை பொருத்துகிறோம்🤣 # வி(சர்)சேட நடவடிக்கை -
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
கொசுறு (உறுதிபடுத்தப்படாத) தகவல் நேற்று மொஸ்கோவில் முக்கியமான சில கட்டிடங்கள் மீது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது. -
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அப்படி ஒரேயடியாக சொல்ல முடியாது. நானும் இப்போதான் இதை ஆராய தொடங்கி உள்ளேன். ஆனால் ரஸ்யாவின், ரஸ்யர்-அல்லாத குடியரசுகளில் மஸ்கோ மீதான நம்பிக்கியீனம், சுரண்டபடுவதான உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருப்பதாக படுகிறது. போரில் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது இந்த பகுதிக்கு இழப்புகள் மிக அதிகம். குறிப்பாக, Dagestan இல் மிக விரைவாக அந்த இன மக்கள் அழிக்கப்படுவதாகவும், எண்ணிக்கை குறைவதாயும், போரினால் இது மேலும் மோசமடைவதாய் அவர்கள் உணர்வதாயும் தெரிகிறது. சகல வளங்களையும் புட்டின் உக்ரேன் நோக்கி திருப்புவது, பல காலம் ரஸ்யாவின் கீழ் அடங்கி கிடந்த பல இன குழுக்களை இது ஒரு “வாழ்நாளில் மீள கிடைக்காத சந்தர்ப்பம்” என சிந்திக்க வைக்க கூடும். இதை கொம்பு சீவி விட நேட்டோ தயார் என்பது வெளிப்படை. -
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அது மேற்கின் சுய நலனை பொறுத்து. ஆனால் ஆயுதம் ஏந்தாத வழியில் போராடினால் அதை அந்த பட்டியலில் சேர்பதில்லை( ஸ்கொட்லாந்து, கட்டலோனியா, கியூபெக்). ரஸ்யாவும் நிலைப்பாடும் மேற்கின் பிரதியே. ஆபிரிக்க உதாரணம் வன்முறையான சதி புரட்சி (coup d’etat) என நினைக்கிறேன். இது பிரிவினைவாதத்திலும் வேறுபட்டது. -
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
பிகு இன்னொரு திரியில் மேற்கு ரஸ்யாவை துண்டாடுகிறது என ஒரு (சதி) கோட்பாட்டை முன் வைத்தீர்கள் அல்லவா? அதற்கு என்னால் தேடியும் ஆதாரங்களை எடுக்க முடியவில்லை. ஆனால்…. ரஸ்யாவில் இருந்து பிரிய வேண்டும் என்ற குரல்கள், ரஸ்யன் பெடரேசனின் இனவழி “குடியரசு” களில் கேட்க தொடங்கி விட்டது. கீழே இருப்பது இங்குசெட்டியாவில் நடந்தது - யார் இந்த மனிதன் என்ற தகவல்களை தேடி கொண்டிருக்கிறேன். தேடிப்பார்கிறேன். செருப்போடு வீட்டுக்குள் வர வேண்டாம்🤣 -
போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
22/12/22 அன்று புட்லர் கொடுத்த பத்திரிகை சந்திப்பில் முதன் முதலில் யுத்தம் என்ற பெயரை பாவித்தார். மிக அண்மைய நாட்களில் புட்டினின் இந்த நிலைப்பாடு மாறிவிட்டது என்றே படுகிறது. ரஸ்யாவை மேற்கு தூண்டாடுவதை எதிர்க்கும் நடவடிக்கை என்ற லைனை எப்போ புட்லர் எடுத்தாரோ அப்பவே “விசேட நடவடிக்கை” என்ற பதத்தை விட்டு “யுத்தம்” என்ற பதத்துக்கு மெதுவாக நகர தொடங்கிவிட்டார். விரைவில் புட்டின் ரஸ்யாவுக்கு ஒரு உரை ஆற்றுவார் என நினைக்கிறேன். இதில் சம்பிரதாயபூர்வ யுத்த பிரகடனம், மேலும் ஒரு சுற்று கட்டாய ஆட் சேர்ப்பு என்பன அடங்கும் என நினைக்கிறேன். -
சூப்பர் காரை வடிவமைத்த தாலிபான் அரசு - வியப்பில் உலகம்!
goshan_che replied to nunavilan's topic in செய்தி திரட்டி
அதுவும் சிடிபி ல வேலை செய்த ஆட்கள் திருத்த முடியாத வாகனம் எண்டு ஒண்டு இல்லையாமே😎 -
பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
goshan_che replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
நம்பிக்கை எவரிடமும் இல்லை. ஆனால் சில பிரபஞ்ச உண்மைகளில் நம்பிக்கை உண்டு. 1. வெளி மத்யஸ்தம் இன்றி இலங்கையுடன் பேசும் எந்த பேரமும் ஏமாற்றத்தில்தான் முடியும். 2. தனியே தமிழர் இனப்பிரச்சனை மட்டும் அல்ல, இலங்கையில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இந்தியா அதில் தன் மூக்கை நுழைப்பதை தவிர்க்க முடியாது. குறிப்பாக இலங்கையில் பலகாலம் முதலாம் அதிகாரி/ உதவி ஸ்தானிகர் பதவிகளை வகித்த ஜெய்சங்கர் போன்றோர் இருக்கும் போது. 3. சீனாவினை தமிழர் தரப்பு நெருங்குவது போல் பாவனை மட்டும் செய்தாலே கூட, இந்தியா-இலங்கை தமிழரை கிள்ளுகீரையாக நினைக்கும், நடத்தும் தற்போதைய நிலையில் சிறிதளவேனும் மாற்றம் வர வாய்ப்புண்டு. 4. இந்தியாவை பகைத்து இலங்கையில் தலையிடும் அளவுக்கு மேற்குக்கு இலங்கை முக்கியம் இல்லை. மேற்கும் இந்தியாவும் அதிமுகவும், பாஜகவும் போல. கூட்டணியா இல்லையா, தனித்து செயல்படுகிறார்களா என்றெல்லாம் யோசிக்க தோன்றும். உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்கவும் கூடும் ஆனால் பெரிய தேர்தல் என்றால் ஒன்றாகி விடுவார்கள். 5. இந்தியாவே தலையில் அடித்து கொள்ளும் அளவுக்கு கோமாளித்தனமான அரசியல் செய்கிறார்கள் தமிழ் தேசியத்தரப்பினர். ஆம் ஒன்றை தவிர மிச்சம் எல்லாவற்றுடனும் 100% உடன்பாடு. சரக்கு வற்றவில்லை. இருந்தால்தானே வற்ற? இனியும் உலகமாந்தர் செவ்வாயில் குடியேறிய பின்னும் தொடரும்…. -
பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
goshan_che replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
நடக்க கஸ்டம் எண்டுதானே சைக்கிள் எடுத்தவை🤣 அவ்வளவு இலகுவாக இவர்களை போட்டுதள்ள முடியாது என நினைக்கிறேன். இவர்கள் சீனாவிடம் உயிர் உத்தரவாதம் கேட்டு அதன் பின் பேசலாம். சீனாவின் நண்பர்கள் என தெரிந்த பின், சீனா இவர்களை தம் சிறகின் கீழ் எடுத்த பின், இவர்களில் இந்தியா கைவைத்தால் - ஒரு இந்திய சார்பு அரசியல்வாதியை சீனா தூக்கும் என்பதை இந்தியா அறியும். இந்தியா -❌ மேற்கு -❌ இலங்கை - ❌ சீனா - ❌ என்றால் 🚴 காரார் யாருடந்தான் பேசி தீர்வுகாண போகிறார்கள்? -
பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
goshan_che replied to புலவர்'s topic in ஊர்ப் புதினம்
புலவர், இந்தியா கூப்பிடவில்லை எனும் போது, கூப்பிட்டும் யாரும் வரவில்லை என கூறும் சீனாவுடன் ஏன் சைக்கிள்காரார் ஒரு புகைப்பட-வாய்ப்பை ஆவது ஏற்படுத்தக்கூடாது? -
அமெரிக்காவில் 3.7 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த தீவு
goshan_che replied to nochchi's topic in செய்தி திரட்டி
யோசனை ஆகாது பக்தா! தெய்வகாரியத்தை செய்ய ஏது தயக்கம்? இந்த நற்கர்மாவை வேறு எவரும் லவட்டி கொண்டு போக முன் முந்தி கொள் மகனே. நன்றே செய், அதையும் இன்றே செய்! -
சூப்பர் காரை வடிவமைத்த தாலிபான் அரசு - வியப்பில் உலகம்!
goshan_che replied to nunavilan's topic in செய்தி திரட்டி
-
சூப்பர் காரை வடிவமைத்த தாலிபான் அரசு - வியப்பில் உலகம்!
goshan_che replied to nunavilan's topic in செய்தி திரட்டி
பங்களாதேசில் ஒரு மெக்கானிக் இருக்கிறார்… சும்மா புகாட்டி வெய்ரோன் எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு காரின் வெளிபுறத்தை தானே வடிவமைத்து உருவாக்குவார். ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் போது கியர் கையோட வந்தால் கம்பெனி பொறுப்பல்ல🤣 -
உக்ரேனில் ஹெலி வீழ்ந்ததால் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி
goshan_che replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அடுத்து செலன்ஸ்கி வெளில தலைகாட்டும் போது இந்த பதிவை ஒருக்கா திரும்பி வந்து பார்க்கவேண்டும்🤣