-
Posts
15606 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை
goshan_che replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
சரி இல்லை -
வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை
goshan_che replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
மாண்புமிகு கிம் எதை செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். எமகு தலைவரின் சகபாடி, மாண்புமிகு புட்டின் அவர்கள் சகல வள நிறை ரஸ்ய நல் நாட்டில், பின்பக்கத்தால் சிரிக்கவும் தடை விதித்துள்ளார் என்பதை கவனத்தில் எடுக்கவும். -
யாழ். பல்கலையின் சமுதாய சமையலறைத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு
goshan_che replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
நன்றி தம்பி -
கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஓம். இந்த விசயத்தில் பலரின் செயலும், சொல்லும் வேறு வேறாகவே இருந்தது. -
கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
நீங்கள் முன்பே ஊசி போடுகிறேன் என சொல்லி உள்ளீர்கள்தானே அண்ணை. நான் பொதுவாகத்தான் சொன்னேன். ஊசி போடத சிலர் உளர்தான். ஆனால் பலர் இல்லை என்பதை மறக்ககூடாது அல்லவா. இப்ப சைனாவில் நடப்பதை பார்க்க தெரியவில்லையா அண்ணை RNA அடிப்படையிலான ஊசி இல்லாவிட்டால் நிலமை எப்படி இருந்திருக்கும் என. -
யாழ். பல்கலையின் சமுதாய சமையலறைத் திட்டத்துக்கு அமோக வரவேற்பு
goshan_che replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இங்கே உள்ள Community Kitchen இன் பிரதி என்றாலும் நல்ல விசயத்தை கொப்பி அடிப்பதும் பாராட்டுக்குரியதே👏🏾. எல்லாருக்கும் இலவசமாக சாப்பாடு போடாமல் ஒரு உண்டியலை வைத்து “முடிந்தால், முடியுமானதை போடுங்கள்” என சொன்னால் - இன்னும் பலருக்கு உதவலாம், நீண்டகாலமாக. எத்தனை பேருக்கு இப்படி உணவளிக்க 50,000 செலவாகும்? தோராயமாக? -
இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷ்சு மாரசிங்க தன் வளர்ப்பு நாயுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக மாரசிங்கவுடன் இரு வருடம் கூடி வாழ்ந்ததாக கூறும் ஆதர்ஷா கரதன்ன என்ற பெண் குற்றம் சாட்டி உள்ளார். இந்த விடயத்தை ஒரு ஊடக சந்திப்பின் மூலம், ஆதர்ஷாவுடன் சேர்ந்து, எஸ்ஜேபி உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரன் வெளிக்கொணர்துள்ளார். இந்த துன்புறுத்தல் சம்பந்தமாக ஜானாதிபதியின் மனைவி, காரியதரிசிக்கு தெரியபடுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறுகிறார் ஆதர்ஷா. இந்த ஊடக சந்திப்புக்கு சற்று முன்னாக, தனிப்பட்ட காரணங்களை காட்டி, அஷ்சு மாரசிங்க ஜனாதிபதி-ஆலோசகர் பதவியை துறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.dailymirror.lk/top_story/Presidents-advisor-caught-in-a-storm-for-allegedly-sexually-abusing-pet-dog/155-250973
-
இதை கடந்து போகவே எண்ணினேன். ஆனால் சிலதை கடந்து போனால் அது உண்மையாகிவிடும் ஆபத்து இருப்பதால்…. ஒரு சிறு விளக்கம். யாரின் மீதும் தனிப்பட்ட தாக்குதல் செய்யவில்லை. யாருக்கும் துரோகி பட்டமும் கொடுக்கவில்லை. துரத்தவும் இல்லை. இருந்த தரவுகளை மட்டும் பகிர்ந்தேன். அதுவும் அந்த குட்டு உடைக்கப்பட்டபோது, குட்டை உடைத்தவரை மட்டும் மேற்கோள்காட்டி, “கண்ணை திறந்து விட்டீர்கள் நன்றி” என்று மட்டும் எழுதிவிட்டு விலகி விட்டேன். அதற்கு பதில் எழுதுகிறேன் பேர்வழி என சம்பந்தபட்டவர் இன்னொரு திரியில் வந்து வாயை கொடுத்து பின் பக்கத்தை புண்ணாக்கி கொண்டார். அதன் பின் தானாகவே வராமலும் விட்டுவிட்டார். இதுதான் நடந்தது.
-
கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இப்படி கருத்து எழுத பல வயசாளிகள் இருந்திருக்கவும் மாட்டார்கள். -
உண்மையில் இந்த “சோசல் காசை” ஒரு வசவு போல் பாவிப்பது சோசல் காசில் இருப்போரை விட, அப்படி எழுதும் என் போன்றவர்கள் எப்படி பட்டவர்கள் என்றுதான் காட்டுகிறது என நான் நினைக்கிறேன். நினைத்து பார்த்தால், ஒருவரை சோசல் காசில் இருந்த படி கம்யூனிசம் கதைக்கிறார் என நான் எழுதியதற்கும் - அவரையே ஏழ்மையில் இருந்தபடி கம்யூனிசம் கதைக்கிறார் என எழுதுவதற்கும் அதிக வித்தியாசமில்லை. நான் உண்மையில் சொல்ல வந்தது “ முதலாளிதுவ நாட்டை தேர்ந்து எடுத்து வந்து விட்டு, அங்கே உழைக்க வலு இருந்தும் உழைக்காமல், பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டு, கம்யூனிச நியாயம் பிளக்கும் “தோழர்களை” தான். என்னதான் என்றாலும் ஏழ்மையை பழிப்பதை போல் ஒரு இழிகுணம் வேறு இருக்க முடியாது. தவறுக்கு வருந்துகிறேன்🙏🏾 பிகு. உண்மையில் பிரித்தானியாவில் அரச உதவியில் வாழும் பலர் கடும் உழைப்பாளிகள்🤣. பதிந்து 16 மணத்தியாலம் - ஆனால் பதியாமல் கிழமையில் 8 நாள் வேலை 🤣.
-
மேலே உள்ளதில் ஓரளவுக்கு எமது தேவைகளை பட்டியல் இட்டு உள்ளோம் என நான் நினைக்கிறேன். இனி இவற்றை ஒரு தலைப்பில் திரட்டி, ஒவ்வொன்றாக ஆராய்வோம். திரட்டப்பட்ட தேவைகளின் பட்டியலும், அலசலும் (List of needs (consolidated), discussion) உயிர் பாதுகாப்பு/பொலிஸ் அதிகாரம் மேலே உள்ள பட்டியலில் 1, 4,5, 7, 10, 15 புள்ளிகளை இது தொட்டு நிற்கிறது. எனது கருத்து நாம் ஏன் பொலிஸ் அதிகாரம் கோருகின்றோம்? ஏனென்றால் இலங்கை பொலீஸ் இனவாதமானது. எம்மை இன அடிப்படையில் முன்னர் பல ஆண்டுகளாக வஞ்சித்தது. நம்மை நாமே ஒழுங்கு படுத்த விரும்புகிறோம். எம்மை ஒழுங்கு படுத்துவோர், எம்மை போன்றோராக, எம்மில் இருந்து வருவோராக, எம் கூட்டு மக்கள் விருப்புக்கு கட்டுப்பட்டோராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். பொலீஸ் அதிகாரம் எம்மிடம் வந்தால் முன்பை விட எப்படி நிலைமை மாறும்? எமது ஊரில் இருக்கும் பொலிஸ் எமது மக்கள் பிரதி நிதிகளுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும். இனவாதம் இராது. சிங்களவர் என்பதால் யாருக்கும் எந்த சிறப்புரிமையும் கொடாது. தமிழர், முஸ்லிம் என்பதால் புறம் தள்ளியும் நடவாது. ஏன் சிங்களவர்கள் எமக்கு பொலிஸ் அதிகாரம் பகிர மறுக்கிரார்கள்? அது தம் கட்டுப்பாட்டில் இருந்து இந்த மண்ணை அகற்றி விடும் என நினைக்கிறார்கள். தனிநாட்டின் முதல் படியாகி விடும் என நினைக்கிறார்கள். அப்படி ஒரு பொலிஸ் சேவை சிங்களவருக்கு அநியாயம் செய்யும் என நினைக்கிறார்கள் சரி இங்கே இரு பகுதியின் நலன்களும் என்ன? தமிழர் - இனவாதம் அற்ற, உள்ளூர் மக்கள் சேவையில் இருக்கும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஆனால் சுயாதீனமான பொலிஸ் சேவை. சீங்களவர் - இலங்கை அரசுக்கு கட்டுப்பட்ட, பச்சையாக சொல்வதானால் ஒரு சிங்களவரின் மேற்பார்வையில், அநேகம் சிங்களவர் இருக்கும், ஒரு பொலீஸ் சேவை. இங்கே இரு பகுதியின் நலன்களும் ஒன்றோடு ஒன்று 180 பாகையில் முரண்படுவதாக தெரிகிறது? இதில் இருந்து இருபகுதி நலன்களும் நிறைவாகும் ஒரு நிலையை எப்படி அடையலாம்? உங்கள் கருத்துகளை பிரேரியுங்கள். கவனத்தில் எடுக்கவும்: 1. பொலிஸ் சேவை என்பது, அவர்கள் கட்டுப்படுத்தும் உள்ளூர் சமூகம் பரிச்சயமான மனிதர்களால், உள்ளூர் சமூகத்தின் அணைவுடன் நடத்தப்படவேண்டும் என்பதே உலக நடைமுறை. 2. நீங்கள் வாழும் நாடுகளில் எப்படி பொலிஸ் சேவை உள்ளூரியல் (localism), சுயாதீனம் (independence), அதிகார பரவலாக்கல் (decentralisation), போன்ற இயல்புகளை உள்வாங்குகிறது என்பதை கவனத்தில் எடுக்கலாம்.
-
முகு 1. கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. அனைவரின் கருத்துக்களையும் உள் எடுத்து கீழே உரையாடலை தொடர்கிறேன். குறிப்பாக @புலவர் @முதல்வன்@Kandiah57 @Justin அண்ணைகள் சொன்னவற்றில் சிலதை தேவைகளின் பட்டியல் என்ற தொனிப்பொருள் அலசப்பட்டபின் அலசுவது பொருத்தமாய் இருக்கும் என்பதால் இப்போதைக்கு அந்த விடயங்களை தரித்து வைக்கிறேன் ( parking them for the time being). 2. இடையில் வந்த கண்நோய், வேலையில் எதிர்பாராமல் வந்த பழு காரணமாக புதனன்று தொடர முடியாமல் போய்விட்டது. பரவாயில்லை எப்படியும் பெப்ரவரி 4 ம் திகதி வரைக்கும் டைம் இருக்குத்தானே🤣. 3. எனது ஜனநாயகம், மேற்கு நாடுகள், தனி நாட்டு கோரிக்கை பற்றிய நிலைப்பாடு இங்கே அநேகர் அறிந்ததே. ஆகவே கோஷான் எவரிடமோ (மேற்கு) காசு வாங்கி கொண்டு ஏலவே தீர்மானிக்கப்பட்ட திட்டம் ஒன்றை தமிழர் தலையில் கட்ட, ஒரு “நிலத்தை பண்படுத்தும்” (preparing the ground) செயலில் இறங்கி உள்ளார் என யாரும் நினைக்க கூடும். அது நியாயமான சந்தேகம்தான். ஆனால் அப்படி எதுவும் இல்லை. என்று சொல்வதை தவிர என்னால் வேறு ஏதும் செய்யமுடியாது என்பதால். “அப்படி எந்த உள் நோக்கமும் இல்லை” என சொல்லி தொடர்கிறேன். தேவைகளின் பட்டியல் (திரட்டப்படாதது - non-consolidated) 1. உயிர் பாதுகாப்பு - இலங்கையில் அரச, அரசு சாரா வன்முறையில் இருந்து தனியாகவும், ஒரு இன குழுவாகவும், நாட்டின் எப்பாகத்திலும், குறிப்பாக வடக்கு-கிழக்கில் பாதுகாக்கப்படல். வன்முறை நிகழின் அதற்குரிய தகுந்த சட்ட நிவாரணத்தை பெற கூடியதாக இருந்தல். 2. காணி உரிமை - இப்போ நாம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை தக்க வைத்தல் (கவனிக்க இது ஒரு தேவை, நிலை அல்ல - எமது நிலை ஒட்டு மொத்த வடக்கு கிழக்கும் எமது என்பது). 3. நிதிச் சுதந்திரம் - எமது பகுதிகளில் (இவை எவை என இன்னும் வரையறுக்கவில்லை, இதில் நிலை/நலன் மயக்கம் ஏற்படும் -பிறகு வருவோம்) நாம் வரி அறவிடவும், வெளிநாட்டு அரச, தனியார் நேரடி உதவிகளை பெறவும், நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றவும், மாற்றவும் (இதில் வரையறை கட்டாயம் இருக்கும் - பூரண நிதிச் சுதந்திரம் = தனிநாடு) அதிகாரம் உடையோராய் இருத்தல். 4. உயிர் அச்சமும் இன்றி, வன்முறை, அடக்குமுறை இன்றி இயங்கும் வாழ்வியல். 5. பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், கல்வி / பொருளாதார, சுதந்திரம். 6. என்னுடைய பாரம்பரிய நிலம், சுற்றுச்குழல், இயற்கை வளம் இவற்றை அடாத்தாக யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கும் உரிமை. 7. என்னுடைய பிறந்த மண்ணில் இரண்டாம் பிரஜையாக நடாத்தப்படாமல் கௌரவமாக வாழ ஒரு அரசியல். 8. என்னுடைய மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு விழுமியங்கள் நான் விரும்பும் படியே ஒழுகி கடைபிடிக்கும் தடையில்லாத வாழ்வியல். 9. ஆண், பெண், மற்றும் இதர வர்க்கங்களுக்கிடையே சமூக ஒடுக்கு முறைகள்/வேறுபாடுகள் கலைந்த தமிழ் தேசியம். 10. வன்முறையில், உயிர்பயத்திலிருந்து பாதுகாப்பு 11. நிலம் மீது உரிமை 12. மொழி 13. இணைந்த வடகிழக்கு 14. காணி 15. பொலிஸ் 16. கல்வி அதிகாரங்கள் உள்ள ஒரு அலகு. 17. எந்த மதங்களும் இலங்கை நிதியுதவி வழங்க கூடாது
-
அப்பவும் இதைதானே சொன்னேன். போடுவது போடாதது அவரவர் விருப்பம்… எனக்கு எப்போதும் இதை பற்றி அக்கறை இருந்ததில்லை. ஆனால் எப்படி இரெண்டு சீவன்கள் ஒரே மாரி ஒரு விடயத்தை பிழையாக விளங்கி கொண்டுள்ளார்கள் என யோசித்து வியக்கிறேன். நான் என்ன கேட்கிறன்… எப்படி ஒரு கொமினிஸ்டுக்கு எழுதிய கருத்தை உங்களுக்கான கருத்து என எடுத்தீர்கள்? அதுக்கு இதுவா அண்ணை பதில்
-
லைக் போடுவது போடாதது அவரவர் விருப்பம். நான் சொல்ல வந்தது—— நீங்கள்தான் சம்பந்தமே இல்லாமல் யாருக்கோ எழுதிய கருத்துக்கு டென்சன் ஆகிறீங்கள் எண்டால் - லைக் போட்ட சீவனும் நான் எழுதியதை அப்படி விளங்கி இருக்கு எண்டு யோசிக்கத்தான்—— எப்படி… எப்படி உங்களை ஒரு இடதுசாரி, கொமீனிஸ்ட் என நான் எழுதுவேன் என எவராலும் நினைக்க முடியும் என்று எனக்கு விளங்கவில்லை அண்ணை. உதுக்கு சிரிப்பு குறி நான் போடேல்லை🤣
-
அண்ணை நான் போட்ட தொப்பி மேலே உள்ள இருவருக்கும். அதை ஏன் நீங்கள் உங்கள் தலையில் போட்டதும் இல்லாமல் சுழண்டு, சுழண்டு பிரேக் டான்ஸ் ஆடுறியள்🤣. இதுக்குள்ள உங்களை தாக்குவதாக நினைத்து எனக்கு “சோசல்” பட்டம் வேற 🤪. நீங்கள் எப்ப அண்ணை கொமினிஸ்ட் ஆகினியள். நீங்கள் ஒரு பக்கா, முதலாளிதுவ, பழமைவாத, அடிப்படைவாத, வலதுசாரி - நேரடியாகவே டிரம்ப், AfD ஆதரவு கருக்களை பகிர்பவர். உங்களை போய் சிவப்பு கொள்கைகாரன் என நான் சொல்வேனா? இதை எப்படி உங்களுக்கு எழுதிய பதில் என்று எடுத்தீர்கள்? உங்கள் கருத்துக்கு ஆரோ ஒரு அப்பாவி சீவன் லைக் வேற போட்டிருக்கு🤣.
-
உக்ரேனிய மக்களின் கட்டுப்பாட்டில்! “வாலையில் ஆடியவள், வயது போனாப்பின்பும் காலை, காலை தூக்குவாளாம்” என்பது போல் சில “தோழர்கள்”, புலம்பெயர் நாடுகள் தரும் சோசல் காசில் வீட்டில் இருந்து வேறு எவனதோ நாட்டின் முதாளாலிதுவம் தரும் பொருளாதார பாதுகாப்பை அனுபவித்த படி இப்படி சிவப்பு, சிவப்பாய் ரத்த வாந்தி எடுப்பது வழமைதானே. # லெனின் செத்துட்டாரா🤣
-
🤣 இதுதான் ரஸ்யாவின் ஆதரவாளர்கள் கடைசியாக வந்து சேரப்போகும் முட்டு சந்து என்பது எனக்கு அப்பவே தெரியும்🤣. அது எந்த முட்டு சந்து? தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தை, தேசிய இன வழி அரசுகளை (Nation states) - இனவெறியர்களாயும், நாஜிகளாயும், பாசிஸ்டுகளாயும் சித்தரித்து சகல இன வழி சிறுபான்மைகளையும் ஒரு பேரினம், கம்யூனிஸ்ட் தத்துவ அடிப்படையில் நசுக்கும், வரட்டு சிவப்பு சித்தாந்த முட்டு சந்து.🤣 இதே அடக்குமுறை வரட்டு சித்தாந்தத்தைதான் ஜேவியும் ஏன் மகிந்தவும் கூட கையில் எடுத்தார்கள். உழைக்கும் வர்க்கம் என்ற போர்வையில் தமிழர் இன உரிமையை நசுக்கும் சித்தாந்தம். அதுக்கு கஸ்ரோவின் ஆசியும் கிட்டியது. சோத்தாங்கையால் ஈழதனிழர் தேசிய இனவழி அரசு அமைக்க வேண்டும், தமிழ் நாடு பிரிந்து வந்து தேசிய இனவழி அரசாக வேண்டும் என எழுதியபடியே, பீச்சாங்கையால் லத்விய, ஸ்லொவீனிய, ஜார்ஜிய, உக்ரேனிய இன்னும் பல தேசிய இனங்களை ரஸ்ய பேரினவாதம்+கம்யூனிசம் கழுத்தை நெரிப்பதை ஆதரிக்கும் கட்டுரைகளை பகிர்கிறோம் பாருங்கள், இதுதான் அந்த முட்டு சந்து. பிகு புட்டினின் ரஸ்யா கம்யூனிஸ்ட்டு அல்ல, கப்பிடலிஸ்டும் அல்ல, ஜனநாயக நாடும் அல்ல. அது ஒரு மாபியா ஸ்டேட்.
-
உக்ரேன் ஐநாவால் அங்கீகரிக்கபட்ட, ரஸ்யாவும் ஏற்று கொண்ட எல்லைகளை உடைய நாடு - உக்ரேன் ரஸ்யாவில் இறங்கவில்லை. 2014 இல் உக்ரேனின் பகுதியான கிரிமியாவை ரஸ்யா பிடித்த போதும், அதன் பின் கிளர்சி படைகள் என்ற போர்வையில் டொன்பாசில் சில பகுதிகளை ரஸ்யா பிடித்த போதும் உக்ரேன் ரஸ்யாவை தாக்கி போரிடவில்லை. கிரிமியாவை விட்டு விலகியது. டொன்பாசில் அந்த பகுதிகளில் இருந்து பின்வாங்கி அடுத்த நிலைகளை பாதுகாத்தது. இப்போதும் ரஸ்யாதான் உக்ரேனில் இறங்கியது. இப்போதும் உக்ரேன் ரஸ்ய நிலத்தில் ஒரு இஞ்சியையேனும் ஆக்கிரமிக்கவில்லை. எனது வீட்டுக்குள் ஒரு களுசறை புகுந்து என் மகளின் கையை பிடித்து இழுத்தால் - ஆயுத பெட்டியில் சுத்தியல் மட்டுமே இருந்தால் - சுத்தியலால் தலையில் ஒண்டு போடத்தான் வேண்டும். வன்முறை ஆகாது எண்டு களுசறை செய்வதை வேடிக்கை பார்க்கவா முடியும்?
-
கீழே இருப்பது ரஸ்யாவின் யுத்த ஆட்சேர்ப்பு வீடியோ. மாதகணக்கில் சம்பளம் கொடாத தொழில்சாலைகள், பிள்ளையின் சல்லி முட்டியை உடைக்கும் பெற்றார், சண்டையில் முன் PTSD யால் பாதிக்கபட்ட்ச் நடுத்தர வயதினர் மீண்டும் யுத்தத்துக்கு அனுப்பபடும் அவலம், மகளுக்கு ஒரு போனை வாங்க தந்தை தன்னுயிரை பணயம் வைக்க வேண்டிய நிலை. நான் சொல்லவில்லை. ரஸ்யா சொல்கிறது. இந்த ரஸ்யாவில்தான் பாலும் தேனும் ஓடுவதாக, ரூபிள் வானுயர்வதாக, மேற்கின் தடை மீறி ரஸ்யபொருளாதாரம் வளர்வதாக யாழில் கம்பி கட்டும் கதைகள் சொல்லப்பஎஉகிறன🤣
-
என்ன வசி திரும்ப திரும்ப ஒரே சந்தேத்தை கேட்கிறீர்கள்🤣. சில நாட்கள் முன் timeline போட்டு - சொன்னேனே - எப்படி உக்ரேனியர்கள் ஈயூவில் சேர விரும்பினார்கள் - அதை எப்படி உக்ரேன் அரசை மிரட்டி ரஸ்யா தடுக்க பார்த்தது - மைதான் புரட்சி இதை எல்லாம் விளக்கினேன்? முன்பும் ஒரு முறை இதை சொன்னேன். நீங்கள் எழுதுவது ஏதோ உக்ரேன் மக்கள் எல்லாம் மொக்கு கேசுகள், அமெரிக்கா சொன்னால் பலத்த அழிவை சந்தித்து அடிபடுவார்கள், அழிந்து போவார்கள் என்பதை போல் ஒரு patronizing தொனியாக இருக்கிறது. இத்தனை அழிவுக்கு பின்னும் அந்த மக்கள் ஏகோபித்த ஆதரவு இருப்பதால்தான் 2022 பெப்ரவரிக்கு பின் ஒரு பெரு நகரை கூட ரசியாவால் தக்க வைக்க முடியவில்லை. முன்பு பல சிங்கள மேட்டுகுடிகள் சொல்வார்கள் - “சாதாரண தமிழருக்கு போரில் ஆர்வம் இல்லை, புலிகளும் ஆயுத வியாபாரிகளும்தான் போரை நடத்துகிறனர்”. இப்படித்தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும். ஹிமார்ஸ் என்ன, பேறியட் என்ன, எதை கொடுத்தாலும் உக்ரே நாட்டு மக்களும், இராணுவம் விரும்பாமல் போரை நடத்த முடியாது. ஆப்கானிஸ்தான் உதாரணம் முன்பே காட்டப்பட்டது.
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வழக்கை திசை திருப்புகிறார்கள்?