-
Posts
15603 -
Joined
-
Last visited
-
Days Won
175
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
🤣 சென்னை - கொச்சின்-டமாஸ்கஸ்-பலாலி எண்டுதான் போகுமாம்🤣 -
ரஷ்ய எண்ணெய் விலை வரம்பு : ஸ்திரத்தன்மை, விலை மலிவில் இந்தியா அக்கறை
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
👆🏼இதுதான் பிரச்சனை. காப்பீடு முழுவதும் மேற்கின் கையில். ரஸ்யா தானாக பல பழைய எண்ணை கப்பல்களை வாங்கி ஓட்ட முயற்சிக்கிறது. ஆனால் அது அத்தனை இலகு அல்ல. மறுவளமாக, சவுதி இளவரசர் மீதான வழக்கு, வம்பு எல்லாவற்றையும் மேற்கு கை கழுவிவிட்டது. இன்றைக்கு யூகேயில் பெற்றோல் £1.55 போகிறது. சர்வதேச சந்தையில் பரல் $ 71. பொதுவாக எண்ணை விலை டிசம்பரில் குறையும். அது போலல்லாமல் இந்த இறங்குமுகம் நீடித்தால் - அது போரின் முடிவை விரைவாக்கும். -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
அப்படியா? ஹக்கீமின் தமிழ் பள்ளிநாட்களில், சட்ட கல்லூரி நாட்களில் இருந்தே அருமையாக இருக்கும்(மாம்). பலாலில தொடங்கி சிரியாவில வந்து நிக்கிறம்🤣 -
எக் அண்ட் டொமேட்டொ தொரோயிங் கம்பையிண்ட் கோர்ஸ். இந்த கோசில் சேர்ந்தால் ஒரு கிலோ முட்டைகோசு இனாம்!
-
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
ஓம் நாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய வருகையை ஏதோ 300 ஆண்டு சமாச்சாரம் என நினைக்கிறோம். ஆனால் கிபி 52 இலேயே புனித தோமையர் முசிறிக்கு வந்து சிரிய கிறிஸ்தவத்தை தாபித்து உள்ளார். பிகு நயந்தாரா சிரியன் கிறிஸ்தவ மரபாம் - இதுவும் @வாலிஅருளியதுதான்🤣 ஜேர்மன் அரசை கவிழ்க்கும் சதி புரட்சியில்… @குமாரசாமி ..🤣. ஆள் இப்ப வருவார் பாருங்கோ. -
ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
1. நிச்சயமாக நீங்கள் கோசான் அல்ல. 2. பிளேனில் 1000 தரம் பயணித்தாலும் விமானி ஆக முடியாது. எத்தனை தரம் பேப்பர் போட்டாலும், உறை போட்டாலும் - புரிதல் இல்லாவிட்டால் - விளக்கம் கஸ்டம்தான். 3. என் தீனி - ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு முன் செலன்ஸ்கி, புட்டின், பைடனுடன் தலா 30 நிமிடம் பேசுவேன்🤣 வட்டா👋 -
நாங்கள் ஒரு ஒன்லைன் எக் தொரோயிங் கோர்ஸ் ஆரம்பிப்பமா? நல்ல காசு பார்க்கலாம்🤣
-
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
பிகு சேரமான் பெருமாள் பற்றி எனக்கு அறிமுகம் செய்தவர் @வாலி -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
ஒன்றை கவனித்தீர்களா பாக்கு நீரிணையின் இரு பகுதியில் எங்கு வசித்தாலும் இந்த மக்களின் வீட்டு மொழி தமிழ் அல்லது ஆதியில் தமிழாய் இருந்த மலையாளம்தான். இவர்கள் எப்படி முஸ்லிம் ஆனார்கள்? வட இந்தியா போல் படை எடுப்பால் அல்ல. மிக பிந்திய நாட்கள் வரை தென்னிந்தியா, இலங்கை இஸ்லாமிய படை எடுப்புக்கு ஆளாகவில்லை. ஆகவே, அரபு வர்த்தகர்+உள்ளூர் வாசிகள் என்பதே சரியாகபடுகிறது. அதன் பின் உள்ளூர்வாசிகளும் சாதி கொடுமையில் இருந்து தப்ப கூட்டம் கூட்டமாக மதம் மாறி இருக்கலாம். சேரமான் பெருமாள் மஸ்ஜிஸ் இந்தியாவிலேயே பழமையான மசூதி. இதை பற்றி தேடிப்பார்த்தால் - உண்மையில் நமது இன்றைய வேறுபாடுகள் எவ்வளவு மேலோட்டமானவை என புரியும். ஆனால் இப்போ டூ லேட். -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
இருக்கலாம். இலங்கையில் எம்மை போலவே, சிங்களவரை போலவே முஸ்லிம்களும் வந்தேறி+பூர்வ குடியின் வாரிசுகளாகவே இருக்க முடியும். இலங்கையில் யாரும் 100% பூர்வகுடியும் இல்லை, 100% வந்தேறியும் இல்லை, வேடர்களை தவிர என்பது என் கருத்து. ஆகவே சாட்டியில் பலகாலமாகவே -90 வரை இவர்கள் வாழ்ந்திருக்கலாம். அரபு வர்தகர்கள் இலங்கையை செரெண்டிப் என அழைத்துள்ளார்கள். அப்படியே இங்கே குடும்பங்களை உருவாக்கி அவர்களை இஸ்லாமியராக வளர்தெடுத்திருக்கிறார்கள். இப்படிதான் காத்தான்குடியும், பேருவளையும் முஸ்லிம் ஊரகளாகி இருக்க வேண்டும். அதே போல் யாழ்பாணத்தில் ஒரு ஊரும் உருவாகியது என்பது தர்க்க நியாயம் உள்ளதுதான். தகவல்கள் வந்தால் சொல்லவும். AfD யை இறக்க வேண்டியதுதான். தமிழர் பிரிவு செயலாளர் உங்கட அண்ணைதானே🤣. -
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!
goshan_che replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
ஓம். அணு ஆயுத பாவனை என்பது இரு பெரிய அணுஆயுத நாடுகள் போரிடும், அல்லது முறுகிகொள்ளும் போது ஒரு விபத்தாக நடக்கவே வாய்ப்பு அதிகம், திட்டமிட்ட பாவனையை விட. கியுபா மிசைல் பிணக்கு நேரம் இதுக்கு வாய்ப்பு இருந்தது. நேட்டோ எட்டி நின்று ஒரு அணு ஆயுதநாடல்லாத உக்ரேன் மூலம் செய்யும் போரில் விபத்தான அணு ஆயுத பாவனைக்கும் வாய்ப்பு குறைவு. உண்மையில் இந்த யுத்தத்தை ரஸ்யா வென்றால் அடுத்து நேட்டோ-ரஸ்யா நேரடி மோதல் வெடிக்கும். அப்போ இரு வகை அணு ஆயுத பாவனைக்குமான நிகழ்தகவு அதிகரிக்கும். ஆகவே, அணு ஆபத்தில் இருந்து உலகை காக்க இந்த போரில் உக்ரேன் வெல்ல வேண்டும் ஆனால் ரஸ்யா முழுமையாக தோற்கடிக்கபடக்கூடாது. -
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!
goshan_che replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
ஓம். இது அப்படியே 1930களின் மீள் ஒளிபரப்பு. அப்போ சேர்ம்பலீன் இப்போ மேர்கல். அப்போ அடொல்வ் இப்போ விளாடிமிர். இதை இந்தமுறை மேற்கு ஐரோப்பா+ வட அமெரிக்கா மிக விரைவாக இனம் கண்டு விட்டது. உண்மையில் 2014 இல் இறுக்கி இருக்க வேண்டும். -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
நாதம், அது சாட்டி. வேலணையில் இருக்கு. உங்கட டில்கோ ஒரு விடுதியும் வச்சிருக்கார். Cha - aa -tt - ee . தமிழ் பெயர் என்றுதான் நினைக்கிறேன். முஸ்லிம் சாவுகட்டு (தர்ஹா?) இருப்பது உண்மை. 1990 க்கு முன் முஸ்லிம்கள் சிறிய அளவில் வசித்தார்கள் என நினைக்கிறேன். சும்மா இரும் ஐயா. நானே கருத்தோட கருத்தா அதை கலந்து விட்டேன் என்று இருந்தேன், இப்படியா பப்பரபாம் அடிப்பீர்கள்🤣. -
மகாராணியார் ஒரு விபத்து. இவர்களில் 1,2ம் எலிசபெத்தை தவிர மிகுதி எல்லாரும் தகுதியற்றோரே. ஆனால் நாட்டின் அடிமைபுத்தி இப்போதைக்கு மாறாது. @விசுகு
-
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!
goshan_che replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
இன்னுமொரு முக்கியமான விடயம். வாழ்க்கையில் ஒரு போதும் பிளக்மெயில் பண்ணுவோருக்கு அடிபணியக்கூடாது. இப்போ புட்ஸ் அணுஆயுதம் பாவிப்பார் என பயந்து உக்ரேனை தாரை வார்த்தால், இன்னும் 5 வருடத்தில் போலந்து…10 வருடத்தில் ஜேர்மனி…பிரான்ஸ் என்று போகும். ஆகவே மேற்கு+சீனா அணுகும் முறையே சிறந்தது. -
அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக புடின் தெரிவிப்பு!
goshan_che replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
இது பற்றி கடைசியாக நாம் விவாதித்த திரியில் இதை எழுதி இருந்தேன். அணு ஆயுத பாவனை இரு வகைப்படும் 1. மூலோபாய அணு ஆயுத பாவனை (Strategic Nuclear Weapons use) மூலோபாய அணு ஆயுதம் ஒரு ரஸ்ய ஜனாதிபதியால் எப்போ பிரயோகிக்க பட முடியும் என்பதை விபரிக்கும் ஒரு வரையறை உள்ளது. அதற்கு என்று ஒரு protocol உண்டு. அதற்கு ஜனாதிபதியும் தளபதிகளும் கட்டுப்பட்டோர். இதன்படி ரஸ்யாவின் இருப்பு கேள்விக்குறி (existential threat to Russia) என்றால் மட்டுமே ஒரு ரஸ்ய ஜனாதிபதி அணு ஆயுதத்தை பிரயோகிக்க முடியும். இந்த நிலைப்பாட்டில் ஒரு மாற்றமும் இல்லை என பல தடவைகள் புட்டினும், லெவெரோவ் உம், பெல்ஸ்கோவும் கூறி உள்ளனர். மேலே ஆதவன் பாதி விழுங்கி விட்ட செய்தியில் உண்மையில் புட்டின் இதை மீள வலியுறுத்தியே உள்ளார். அதாவது நாங்கள் பைத்தியகாரத்தனமாக அணு ஆயுதத்தை பாவியோம் என்று. அத்துடன் உக்ரேனிடம் அணு ஆயுதம் இல்லை. ஆகவே ரஸ்யாவுக்கு எதிராக நேட்டோ மட்டுமே அணு ஆயுதத்தை பாவிக்க முடியும். யுத்தத்தில் நேட்டோ இறங்காத வரை - ரஸ்யாவுக்கு existential threat இந்த யுத்தத்தில் வர வாய்பில்லை. உக்ரேன் ரஸ்யாவின் நிலத்தில் ஒரு இஞ்சியைதானும் கைப்பற்றவில்லை. ஆகவே ரஸ்யா உக்ரேனுக்காக மூலோபாய அணு ஆயுதத்தை பாவித்து, தானும் அழிந்து உலகையும் அழிக்காது. அப்படி செய்வதாயின் புட்டின், அவரின் கபெனிட், ஆயுதத்தை பாவிக்கும் அதிகாரிகள் வரை மூளை பிசகினால் மட்டுமே சாத்தியம். 2. தந்திரோபாய அணு ஆயுத பாவனை மீண்டும் இதை நேட்டோ செய்யாது. உக்ரேனால் முடியாது. ஆகவே ரஸ்யா உக்ரேனின் ஒரு நகர் மீது ஒரு குண்டை போடலாம் அல்லது செரெபியா உலை மீது தாக்கி கசிவை ஏற்படுத்தலாம். ஆனால் இங்கேதான் அமெரிக்காவின் எச்சரிக்கை நேரடியாக புட்டினுக்கு வழங்கபட்டுள்ளது. மூலோபாய ஆயுதத்தை உக்ரேனில் பாவித்தால் - பாரம்பரிய ஆயுதத்தை பாவித்து உங்கள் கருங்கடல் கடற்படை அணியை முழுமையாக ஒழிப்போம். இதை செய்யும் வல்லமை அமெரிக்காவுக்கு உண்டு என புட்டினுக்கு தெரியும். இப்படி அமெரிக்கா செய்தால் மூலோபாய அணு ஆயுதத்தை பிரயோகிக்கும் ரஸ்யாவின் இயலுமை 90% க்கு மேல் முடக்கப்படும். அது மட்டும் இல்லை - உக்ரேனில் தந்திரோபாய/மூலோபாய அணு ஆயுத பாவனை தம்மை பொறுத்தவரை ஒரு இலட்சுமணரேகை என சீனா மிக தெளிவாக புட்டினுக்கு விளக்கி விட்டது. மீறி அணு ஆயுதத்தை பாவித்தால் அமெரிகாவிடம் மட்டும் அல்ல, சீனாவிடமும் அடி வாங்க வேண்டி வரும் என புட்டினுக்கு தெரியும். ஆகவே புட்டினுக்கு அணு ஆயுத விடயத்தில் செக் மேட் வைக்கப்பட்டுள்ளது. இப்போ அவருக்கு கொஞ்சம் கவுரவமாக face saving விதமாக இந்த சிக்கலில் இருந்து வெளிவர மேற்கு ஒரு வழியை தேடுகிறது. இராஜதந்திரிகள் இதை off ramping என்பார்கள். இப்போ புட்டின் அணு ஆயுதம் பற்றி கதைப்பது - இந்த இறுதி டீலில் தனது நிலையை அதிகரிக்கவே. ஆங்கிலத்தில் nuclear sabre-rattling என்பார்கள். https://www.spectator.co.uk/article/the-red-line-biden-and-xis-secret-ukraine-talks-revealed/ 👆🏼பைடன் - சொல்ஸ் - ஷி இடையே நடந்த உக்ரேன் பற்றிய இரகசிய உரையாடல் நிச்சயமாக ஆனால் நாயின் வாயை கட்டும் வித்தை தெரிந்தால் இதை இலகுவில் கையாளலாம் (மேலே வாசிக்கவும்). -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
டச்சுகாரன். இப்போதும் பெல்ஜியம்-ஜெர்மனி போகும் வீதியில் நெதர்லாந்து வழியாக போனால் ஒரிஜினல் Delft ஐ பார்க்கலாம். -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
அட ஆமா இல்ல. உண்மையில் மாதரசன் பட்டினம்தான் மதராஸ் ஆகியது. அதற்கு சற்று மேலே சென்னப்ப நாயக்கரின் பெயரில் சென்னை இருந்தது. வெள்ளைகாரன் தான் நிர்மாணித்த ஊரை சரியான பெயரின் திரிபிலே அழைத்தான். பின்னாளில் வந்த ஒரு கொள்ளைகாரன்- இனப்பாசம் மேலீட்டதால் - சென்னை என்று வைத்தார் என்று சொல்வார்கள். 🤣. அப்படியே மிளகா பஜ்ஜியும் தந்தா தூக்கலா இருக்கும் 🤣 -
ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது
goshan_che replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
பாஸ் Sun, ஐ Sau என எழுதியது டைப்போதான். அதை பற்றி நான் எழுதியது நகைசுவையாக. ஆனால் நீங்கள் Time Magazine ம், New York Times உம் ஒன்றென நினைத்து அடித்து விட்ட பீலா டைப்போ அல்ல. உங்களை நான் அப்படி எடை போடவில்லை. நீங்கள்தான் அப்படி எழுதினீர்கள். குறைந்தபட்சம் “நான் பிழையாக விளங்கி கொண்டேன்” என பெருந்தன்மையாக சொல்வீர்கள் என நினைத்தேன். அது கூட இல்லை, செந்தில் வாழைபழ ஜோக் மாரி அதுதான் இது என சடைகிறீர்கள். உங்களுக்கு முதலிலேயே சொல்லிவிட்டேன் RT, Sun, Daily Mail, Fox, CNN போன்ற குப்பை மேட்டில் நான் மேய்வதில்லை. நீங்கள் இணைத்தாலும் இடதுகையால் விலக்கி விட்டுத்தான் போவேன். RT க்கு மட்டும் அல்ல, வெரித்தாஸ், CCTV, Sun, Daily Mail, etc…etc -
யாழ். குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா?
goshan_che replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நன்றி -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
டுட்டுகோரின் -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
திருவல்லிக்கேணியை டிரிப்ளிகேன் எண்டுற ஆக்கள் எல்லோ🤣 -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்
🤣 மசுமசுப்புக்கு கஞ்சா-கப்சா (அதி விசேசம்) தான் சரி. எக்ஸ்ரா எபெக்டுக்கு நாலு செத்த பல்லியயையும், மூண்டு கறள் ஆணியையும் தட்டி போட்டிருப்பாங்கள். ஒரு பெக் அடிச்சால் போதும் - யார் என்ன கப்ஸா அடிச்சாலும் அப்படியே நம்பி உணர்ச்சி வசப்படும் படி ஆக்கும் 🤣. இதை விக்கிறவரை ஒரு கிழமையா காணவில்லை. வழமையா வெள்ளி சனி இந்த பக்கம் வாறவர். எதுக்கும் ஒரு 24 கேஸ் ஓட பண்ணி விடுறன். -
டிசெம்பர் 12 முதல் மீண்டும் பலாலி-சென்னை விமான சேவை?
goshan_che replied to goshan_che's topic in ஊர்ப் புதினம்