Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. உடைந்த ரெக்கோர்ட்டை போல இதையே எத்தனை தரம்தான் திரும்ப, திரும்ப சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள்? அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா? இரு கைகள் தட்டாமல் ஓசை எழாது. அமெரிக்காவுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையான உறவு கசந்ததில் - அமெரிக்காவை போலவே ஈழத்தமிழருக்கும் சமபங்கு உண்டு. அமெரிக்கா இப்போ ஜேவிபி யை அணுகும் முறையை பார்த்தீர்களா? இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது. இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன். ஆனால் நாம் எம்மை அவர்களின் பங்காளிகள் என நிலை நிறுத்த தவறினோம். இதில் பாரிய தாக்கம் செலுத்தியது, சில ஈழத் தலைமகளின் செயலற்ற தனமும், சுயநலமும். அவர்களை அடுத்து வந்தவர்கள் திறமையானவர்களாயும், சுயநலமற்றவர்களாயும், தியாக எண்ணத்துடனும் இருந்தனர். ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது. இந்த மனநிலையே மேற்கு, கிழக்கு, நாலு திக்கிலும் அத்தனை பெரிய நாடுகளும் எம்மை சேர்ந்தழித்தமைக்கு வழி கோலியது. இதே அணுகுறையை, அதைவிட மிகவும் பலவீனமான நிலையில் இப்போ நீங்கள் முன்வைக்கிறீர்கள். இதை எழுதி அம்மஞ்சல்லிக்கு பயனில்லை என தெரியும். கேட்டதால் எழுதுகிறேன்.
  2. நாம் மட்டுமே போதும் நமக்கான தீர்வை அடைய என்ற அணுகுமுறை, அதன்பால் ஊருடன் பகைத்தது, அதனால்தான் 2009 நடந்தது. இதனால்தான் 2009 க்கு முன் நாம் இருந்த ஸ்டேடசில் நாம் இப்போ இல்லை. இதை நான் 2013 இல் யாழில் எழுத தொடங்கி 11 வருடங்கள். 2024 இல் கூட எழுத வேண்டி இருக்கிறது. அதுவும் உங்களை போல விடயம் அறிந்த ஒருவருக்கு.
  3. அவரவருக்கு அவரவர் அஜெண்டா மட்டுமே முக்கியம். இதை கூட சம்பந்தமே இல்லாமல் உங்கள் நா த க பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறீர்களே. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். இந்த தூசண அம்மணி வாயையே மூட முடியவில்லை, இதில், ஒவ்வொரு குரூப்பும் ஆளுக்கு ஆள் இந்த பெண்ணுடன் இவரும், அவரும் கூட்டு என்று கதை வேறு. இந்த சீத்துவத்தில் உங்க்ளுக்கு நாம் எமக்கான தீர்வை நாமே அடைவோம் என்ற நினைப்பெல்லாம் ஓவராக தெரியவில்லையா?
  4. அப்படியே தாளிச்சிடுவோமாக்கும்….. இந்த திரியை பார்த்தாலே தெரியவில்லை….வளைச்சு, வளைச்சு கதைக்க மட்டுமே செய்வோம் என்பது…. பிரான்சில் இல்லாத தமிழ் அமைப்புக்களா? லா சப்பல் எங்கள் கையில்… அடுத்த தலைமுறை பெரிய…பெரிய பதவிகளில்….. என்ன பிரயோசனம்…. எமக்கு எது முக்கியம்? இவரின் பேச்சை நிறுத்தணும். அடித்தது எமக்கு மனச்சாந்தியை தந்தது… ஆனால் இவரின் வாயை அடைத்ததா? அடித்தவர்கள் கடைநிலை மக்கள் - அடிப்பது ஒன்றே அவர்கள் வசமுள்ள ஆயுதம். ஆனால் கதைப்பதை நிப்பாட்ட கூடிய வல்லமை உள்ளவர்கள் பதுங்குகிறார்கள்.
  5. ஓ அப்படியா? தகவலுக்கு நன்றி. எனக்கு மகளிர் கிரிகெட், ஐ பி எல் இரெண்டும் சுத்தம்🤣. அதுதான் நினைக்கிறேன் என எழுதினேன். எங்கோ இவர் சன்ரைசர்ஸ் எண்டு தலையங்கம் வாசித்தேன். ——— ஆனால் வியாஸ்காந்தை வாங்கியது ஹைதரபாத் என்பது சரிதானே? வேறு ஏதாவது ஐபிஎல் அணி ஈழ தமிழருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதா?
  6. பார்த்தேன், ரசித்தேன், 10/10 எடுத்தே😎. பிறகு பெடியன் அங்கிள் எண்டெல்லே கூப்பிடுவான்🤣. நல்லா கேளுங்க எசமான்…அவர் எல்லாரும் தன்னை போல் மல்டி பில்லியனர் என நினைக்கிறார்🤣.
  7. 10,000 ஆண்டுக்கு முன் லெமுரியாவில் துறைமுக கட்டிய தமிழர்கள், அதில் இருந்து ஆமை வழித்தடத்தில் அப்பால்-23 என்ற கிரகத்தில் போய் உள்ளார்கள். அது ஒரு முழுத்தமிழ் கிரகம். அங்கே போகலாம் என கிளப்பி விட்டால்….. யாழிலும் சிலர் அறையை பூட்டி கொண்டு கையை அறுப்பார்கள் என நினைக்கிறேன்🤣.
  8. 🤣 விதையில்லாத ஆலிவ், அநேகமா கொஸ்டோரிக்காவில் இருந்துதான் வந்திருக்கும்🤣
  9. அம்மு சன்ரைசர்ஸ் ஐதரபாத்துக்கு எடுபட்டதாக நினைக்கிறேன். அதே போல் நேற்று replacement ஆக யாழின் வியாஸ்காந்த் எடுபட்டுள்ளார். ஐ பி எல் லில் ஈழத்தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கும் ஒரே அணி கலாநிதி மாறனின் ஹைதரபாத் தான். @வாலி உங்கள் கவனத்துக்கும். நான் சி எஸ் கே (வாய்ப்பு முழுக்க இலங்கை வீரருக்கே) விட்டு, ஈழத்தமிழரை உள்ளீர்ர்கும் எஸ் ஆர் எச் க்கு மாற நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் @MEERA
  10. 🤣 நெல்லிக்காய் ஊறுகாய் தேடினேன் கிடைக்கவில்லை. உப்பில் ஊறவைத்த நெல்லியும் கிடைக்கவில்லை. ஆனால் இது நெல்லி போல இராது. சுவை 40% ஓலிவ் போல இருக்கும்.
  11. இல்லை ஐலண்ட் - ஆனால் சிங்கள பகுதிகளால் போகும் போது சிறிய சிறிய கடைகளில் அல்லது வீடுகளிலோ கூட வெளியில் ஒரு போர்ட்டில் அல்லது கார்போர் மட்டையில் “பத் கமு” (சோறு சாப்பிடுங்கோ) என எழுதி வைத்திருப்பர். போனால் நல்ல பாரம்பரிய உணவு கிடைக்கும். அதேபோல் வீதியோரங்களில் சோளம், எருமைத்தயிர்+கித்துள் பானியும் கிடைக்கும். ரட்ட கஜு என கேட்டா கச்சானும், தெம்பு ரட்டகஜு என கேட்டால் அவித்த கச்சானும் வாங்கலாம். தெற்கு அதிவேக சாலையின் சர்வீஸ்கள் பற்றி எழுதினேன் அல்லவா, அங்கேயும் பாரம்பரிய உணவுகள் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் அந்த feel மிஸ்ஸிங்.
  12. படத்தில் இருப்பதுதான் சிலோன் ஆலிவ் எனப்படும் வெரளு. பச்சை காய் அம்பரில்லா. முன்பு சிங்கள இடங்களில் பள்ளிக்கு வெளியால் வைத்து விற்பார்கள். எமது பகுதியில் இல்லை என நினைக்கிறேன். @பெருமாள் 👆🏼 பதில் உங்கள் கேள்விக்கு.
  13. அஜித் குமாரா, சைக் வண்டியும், தொந்தியும்🤣. ஐ ஆம் ஷோலே அமிதாப் லுக் எ லைக்🤣.
  14. இந்த தீவில் மட்டகளப்பு பக்கம் இருந்த மக்கள்தான் குடி ஏறி இருக்கவேணும், அங்கேதான் “இருக்கா” என்பதை “இரிக்கா” என சொல்வது🤣.
  15. ஆம்… இப்போ @satan இதில் உள்ள கைரேகையை வைத்து நான் யார் என துப்பு துலக்க துவங்கி இருப்பார்🤣 இது கறுத்தல் அல்ல, இலவச விட்டமின் டி சிகிச்சையின் பயன்🤣
  16. நன்றி. பிரயாணம் சுகமாக அமைய வாழ்த்து. ஊரால் வந்ததும் ஒரு பயணகட்டுரையுடன் ஆரம்பியுங்கள்.
  17. சும்மா முதல் பக்கத்தை தட்டிய போதுதான் உங்களுக்கு பதில் போடவில்லை என்பது உறைத்தது. நன்றியும். மன்னிப்பு கோரலும்🙏.
  18. நன்றி. உங்கள் எழுத்தும், சிந்தனையும் அபாரம். வேலைபளுவின் மத்தியிலும் சுண்டி இழுக்கிறது. குவாலிட்டி மட்டும் அல்ல குவாண்டிட்யும் பிரமிக்க வைக்கிறது. ஒருமுறை @Justinஜெயமோகனை தமிழின் prolific writer என அழைத்தார். அதே போல் நீங்கள் யாழின் புரோலிபிக் எழுத்தாளர். எப்படி சச்சின் ரன் அடிப்பதை மட்டுமே குறியாக கொண்டு விளையாடுவாரோ அப்படி அற்புதமாக, அசுர வேகத்தில் எழுதுகிறீர்கள். இதே போல் எப்போதும் தொடரவும்🙏.
  19. படங்கள் V சொர்கத்தின் சுவை, taste of paradise கெக்கிராவையில் ஒரு சிங்கள சாப்பாடு👆🏼. கொழும்பு புதுக்கடை தெருவோர “சவன்”. 👆🏼யாழ்பாணத்தில் தினேஷ் வெதுப்பகத்தில். 👆🏼ஏறாவூர் கடையில் பாலாண்டி. ————- 👇கொழும்பு வெள்ளவத்தை யாழ் உணவகம். பம்பலபிட்டியவில் மட்டு நகர் முறையில் பாடும்மீன் உணவகம். காலிமுகத்திடலில் இஸ்சு வடே, கந்தர் மடத்தில் பனங்கிழங்கு, சிலாபத்தில் கடலுணவு, சிலோன் ஒலிவ் எனப்படும் வெரளு, அம்பரில்லா👇. கடைசியாக டிஸேர்ட் - வெள்ளவத்த பொம்பே ஸ்வீட்டில் ஒரு ஐஸ்கிரீம் பலூதா👇

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.