Everything posted by goshan_che
-
கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ.. தலைமை தாங்கும் அஜய் ரஸ்தோகி.. யார் இவர்? பின்னணி என்ன?
ஈஸ் இட்?🤣 இஸ் தட் இட்🤣
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
சுத்தம் சுகம் தரும்
-
கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ.. தலைமை தாங்கும் அஜய் ரஸ்தோகி.. யார் இவர்? பின்னணி என்ன?
இதில் எந்த தவெக ஆட்கள் மீதும் கொலை குற்றம் சுமத்தபட முடியாது. ஆனால் - சதி என்பது நிருபணமானால் - பல திமுக தலைகள் உருளலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஓம்…அப்போதே இந்த கட்டுரையை பகிர்ந்த்தேன். ஆனால் அப்போ சில திரிகளில்….எப்படி எண்டாலும் உழைத்தால் போதும்… உலகில் களவு செய்யாதவன் யார்… அப்படி இருந்தால் அவன் பிழைக்க தெரியாதவன்…. என்ற ரீதியில் கருத்துக்கள் பதியபட்டு கொண்டிருந்ததல்லவா…. அதில் ஒன்றில்தான் இந்த தம்பதிகள் உதாரண புருசர்களாகினர். லைக்காவையும் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள். அவர்கள் ஆரம்பம் பற்றி எழுதி - அதற்கும் வாங்கி கட்டிக்கொண்டேன் 🤣.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
சீமான் என்ற அழுக்கை…மழை, தூவானம் இல்லாவிட்டாலும், கிணத்தில் மோட்டார் போட்டு இறைத்தாவது கழுவி, கழுவி ஊத்தல் வேண்டும். என்னை கைய பிடிச்சு இழுத்தியா🤣
-
கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
இந்த தாயார் எழுதியது சுத்த அலப்பறைதான்…. மகளின் திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதை போட்டோ எடுத்து போடலாம்….அதற்குள்ளும் பூர்வகுடி, பூர்ஷுவா குடி என தனது இடதுசாரி அரசியலை நுழைத்த்திருக்க தேவையில்லை. ஆனால்….விமர்சனம் அதை விட்டு விட்டு, மாப்பிள்ளையின் இனம் சார்ந்து குரோதமாக அமைவது ஏற்புடையதல்ல.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
https://www.ft.com/content/51134511-15a3-4be0-acc3-5c84c10514ba இதில் இருவரின் படமும் உள்ளது. தெரிகிறதா?
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
உறவுகளுக்கு நினைவிருக்கும்… மேற்படியாரை புலம்பெயர் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி என கள உறவு நாதமுனி முன்னர் பிரஸ்தாபித்து இருந்தார். யாராவது நாதத்துக்கு ஒரு @ போட்டு விடவும் 🤣
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை. இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது. இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இருந்து தமது சொந்த வருமானமாக எடுத்துள்ளனர். பிரித்தானிய திறைசேரி, இன்னும் பல நிறுவனக்களுக்கும் இவர்கள் பல மில்லியன் ஆப்பை செருகி உள்ளனர். நிறுவனதின் சொத்து 150 மில்லியனை கோர்ட் முடக்கி உள்ளது. ஆனால் இது இவர்களின் கடனில் 10% மட்டுமே. இவர்களின் நீச்சல்தடாகம், சோனா, ஸ்பா வசதிகளுடனான, வேபிரிஜ் எனும் அதீத செல்வந்தர் வாழும் இடத்தில் உள்ள 5 மில்லியன் பெறுமதியான வீட்டை விற்கபோட்டுள்ளனராம். இவர்கள் இலங்கைக்கு தப்பி ஓடி இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. (மூலம் - பிரித்தானிய ஊடகங்கள் + யாழ்கள நிருபர் கோஷான் களத்தில் இருந்து🤣 ) https://www.theguardian.com/business/2025/sep/04/uk-court-freezes-150m-of-assets-of-collapsed-prax-lindsey-oil-refinery-owner https://www.theguardian.com/business/2025/aug/20/loan-irregularities-collapse-prax-lindsey-oil-refinery https://finance.yahoo.com/news/couple-behind-doomed-oil-refinery-070000350.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAEZhFmvvT-Q_g2dpoByQb88U5CLGaHOs6eKHVGfyQG1TemU60KuopVeWlK8Pp3WXx84mkZfOJIrh-0HKWxKKfgRoGpVoDqH6WCvCC4ao7KTBMevyKJB03V1x2Cp9ffzD-DfoN8KWJl9XRKg70LBfxjSEJ1YSS131b2y_Xb6pIJLd
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
இதில் எடப்பாடி மிஸ்ஸின். உண்மை. இது எமக்கு புரிவது போல் மக்களுக்கும் புரியும். திமுகவை இந்த விடயத்தில் விமர்சிக்காமல், விஜையை போட்டு தாக்கோ தாக்குவது எதிர்மறை விளைவையே நாதகவுக்கு கொடுக்கும். அதுவும் விகடன் சீமான் சபரீசனிடம் பெட்டி வாங்கி விட்டார் என விகடன் எழுதிய பின், இப்படி நடப்பது கிட்டதட்ட பெட்டி வாங்கியே உள்ளார் என்பதை சாதாரண மக்கள் மனதில் ஆழப்பதிக்கும். ஒரு ஈழதமிழனின் நியாயமான மனநிலை. ஆனால் இதன் பிரதியீடு பாஜக அமைசர்கள் உள்ள தமிழ் நாடு அரசு எனில் - அதை விட தமிழக மக்கள் நலனுக்கு திமுக ஆட்சி தொடர்வதே உசிதமானது.
-
கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ.. தலைமை தாங்கும் அஜய் ரஸ்தோகி.. யார் இவர்? பின்னணி என்ன?
கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ.. தலைமை தாங்கும் அஜய் ரஸ்தோகி.. யார் இவர்? பின்னணி என்ன? Shyamsundar IUpdated: Monday, October 13, 2025, 12:12 [IST] முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். Also Read ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முக்கிய தீர்ப்புகளை வழங்கிய சஞ்சய் ரஸ்தோகி 2014ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இந்த பதவி உயர்வு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். நீதிபதி அஜய் ரஸ்தோகி 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கான தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றவர், உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. Recommended For You வழக்கு பின்னணி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு கடந்த வாரம்தான் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. அவரின் பெயரில் வழக்கு பதியப்பட்டது. சிபிஐ விசாரணை வேண்டும் என்று இவர்கள் மனுதாக்கல் செய்தனர். இதனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கு கழகம் கூட்டத்தில் பலியான சிறுவனின் பெற்றோர் தரப்பு வாதம் வைத்தது. அதாவது அரசு நியமித்த SIT மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் SITஐ கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில்தான் இன்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/who-is-retired-judge-ajay-rastogi-who-will-lead-the-cbi-investigation-in-tvk-vijay-karur-incident-742699.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
புகழ் வணக்கமும், சிரம்தாழ்ந்த நன்றிகளும் ஐயா.
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
இதில் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்னார் என்பது தொட்டு பல சீமானின் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். இவை ஏலவே பல திரிகளில் அடித்து நொருக்கப்பட்ட வாதங்கள் என்பதை வாசகர் அறிவர். யாழில் கட்சி பிரச்சாரம் செய்யத்தடை என்பதால் - என்னை கேள்வி கேட்டு… ஒரு நூதன பிரச்சாரம் செய்ய முனைகிறீர்கள் என்பது தெரிகிறது🤣. ஆனால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடை தேவை எனில் யாழில் “சீமான்” என தேடி, அதில் நான் எழுதிய கருத்துக்களை வாசித்தால் பதில்கள் கொட்டி, கொட்டி கிடக்கும்🤣.
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
"காஸாவில் உள்நாட்டுப் போருக்கான சிறந்த சூழல்" - 7,000 வீரர்களுக்கு ஹமாஸ் அவசர அழைப்பு
இஸ்ரேலுக்கு முழு பலஸ்தீனத்தையும் தாரை வார்க்காமல் ஹமாஸ் ஓயமாட்டார்கள்.
-
கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
நீங்களும் அப்படி நினைச்சீங்க இல்லையா? அப்ப நானும் அந்த மாதிரி நினைச்சது தப்பில்லையே?🤪 தேசம் நெட் ஜெயபாலனுக்கு ஒரு கொப்பி ரைட் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்🤣
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
பிகு ஒண்டை கவனித்தீர்களா? ஆகஸ்டு 2025 கருணாநிதி நினைவுநாளில், சீமானின் ஏவலர்களானா தூஷண துரை வகையறாக்கள், கருணாநிதி vs பிரபாகரன் என்ற அவதூறு போரை, அதை தொடர்ந்து இரு பகுதியும் இந்த இருவரையும் மாறி மாறி கேலி செய்யும் கீழ்தரமான சண்டையை முன்னைய வருடங்கள் போல் செய்யவில்லை? ஏன்? #சபரீசன் பெட்டி
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
மேலே சொன்னவை அனைத்தும் தமிழக தமிழர் நலனுக்கு சீமான் ஏன் கேடு என்பதற்க்காக வாதங்கள். எமக்கு சீமான் ஏன் கேடு என்பதற்கு இன்னும் சில பத்திகள் எழுத வேண்டும். சுருக்கமாக 2009 க்கு பின் ஈழத்தமிழர் ஒரு இனமாக மீண்டும் திரள்வதை தடுக்க, அவர்களுக்கான வெளி ஆதரவை தடுக்க பலர் பல இடங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர். புலத்தில் - அருண், சுமன், கருணா, பிள்ளையான் இத்யாதிகள். புலம்பெயர் தேசத்தில் - ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்டதாக பிரிந்து மாவீரர் தினம் கொண்டாடும் கள்ளர். போலிகா குரூப். தலையில்லாத செயலலகம், மாட்டு பண்ணை இத்யாதிகள். தமிழ் நாட்டில் சீமான். 2009 க்கு பின் இருந்த எம்மீதான பரிவை….மடை மாற்றி… திமுக, அதிமுக, காங், பிஜேபி, விசிக, திக என கிட்டதட்ட தமிழ்நாட்டின் 90% வாக்காளரை…. புலிகள்/ஈழத்தமிழர் அவர்களின் எதிரிகள் என கொண்டு போய் நிறுத்தியவர் சீமான். எமக்கு அடைக்கலம் தந்த அதே மக்களில் இருந்து சிலர் சீமானின் வருகையின் பின் எம்மை “அகதி” என திட்ட ஆரம்பித்தார்கள். ஒரு காலத்தில் கட்சி வேறுபாடின்றி மாவீரன் என போற்றப்பட்ட தலைவர் உருவ கேலிக்கு ஆளானார். இவை அனைத்தும் - சீமான்… தமிழக தலைவர்கள் vs பிரபாகரன் என்ற ஒரு தேவையில்லாத ஆணியை புடுங்கியதன் விளைவு. இதை அவர் திட்டமிட்டே செய்தார். செய்கிறார். இதன் உள்நோக்கம் 2/3 பங்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழருக்கும் மாறாத பகைகை மூட்டி விடுவது.
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
இங்கே நீங்கள் எழுதியவற்றுக்கான பதில் முன்பே பல தடவை யாழில் விவாதிக்கப்பட்டு உள்ளது. இனவழி தேசியம் வேறு, இனத்தூய்மைவாதம் வேறு. சீமான் தமிழ் நாட்டில் 300-600 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை புறம்தள்ளி, அவர்கள் ஆளதகுதி அற்றவர் எனக்கூறி முன்னெடுப்பது தமிழ் தேசிய அரசியல் அல்ல, அது தமிழ் நாட்டில் வாழும், வாக்குரிமை உள்ள, மக்களிடையே சாதிய பிளவை கூர்மையாக்கும், சாதியை-வைத்து இனம்பிரிக்கும், இனத்தூய்மைவாத வெறுப்பரசியல். எப்படி ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் தமிழக மக்களின் நலனுக்கு கேடோ, அதை ஒத்த கேடே சீமானின் சாதிய அடிப்படையில் அமைந்த இனத்தூய்மைவாதமும். இதில் மேலதிகமாக சீமான், சங்கிகளை பட்டும் படாமலும் விமர்சித்து கொண்டு, அவர்களின் கொள்கைகளை முந்தள்ளுவது, அரசியலை மத மயப்படுத்துவது, அவர் இப்போ இருக்கும்( தெலுங்கு வம்சாவழி ) திராவிட அரசியல்வாதிகளுடன் நேரடி மறைமுக கொஞ்சி குலாவுதல்களை செய்து கொண்டு, அதே சமயம் பச்சை பொய்களை கூறி பெரியாரை, பெரியாரியத்தின் முற்போக்கு விளைவுகளை மறுதலிப்பது அவர் ஒரு அரசியல் தரகர் என்பதையும், பாஜக பி டீம் என்பதையும், இப்போ திமுக சி டீம் என்பதையும் உறுதி செய்கிறது. 2009 க்கு முதல் அன்றாடம் காய்ச்சியாக இருந்த அதன் பின் எந்த தொழிலும் இன்றி நீலம்க்கரையில் 6 கோடி பங்களா, அதி சொகுசு ஜப்பான் பஜெரோ, மலைநாட்டில் கோப்பி தோட்டம் என வலம் வருவது, அவர் அரசியலை பாவித்து களவு எடுத்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது. அவர் கட்சியில் பொலிஸ் கிராப்புடன் திடீரென தோன்றிய “முன்னாள் இந்திய இராணுவ வீரர்” விங், அவர் வீட்டில் ஆயுதம் தாங்கிய சிவில் உடை தரித்தோர் இருப்பது - அவர் ரோ ஏஜெண்ட் என்பதை காட்டி நிற்கிறது. இத்தனைக்கும் மேலாக சுப முத்துகுமார் மரணம் அதில் சீமான், தூஷண துரைமுருகன் பங்கு. சீமான் தமிழ் இனத்தில் தோன்றியிள்ள புற்று நோய் கட்டி. இது வளர்வது போல் தோன்றினாலும் அது வளர்ச்சி அல்ல. வெட்டி வீசி விடுவதே ஒரே வழி. பிகு : மக்கள் ஆதரவு. புலிகளின் அதிபுச்ச புள்ளியில் கூட டக்லஸ் யாழ்ப்பாணத்தில் 10% வாக்கு எடுத்தார். சீமானுக்கு விழும் வாக்க்கில் பலது நோட்டோவுக்கு சமனாக மக்கள் வேறு தெரிவின்றி போடுவது. அப்படி அவருக்காக விழும் வாக்கு கூட அவரின் நயவஞ்சகம் புரியாத, மேடையில் அவர் பேசுவதுதான் அவரின் உண்மையான முகம் என நம்பும் அப்பாவிகளின் வாக்கு.
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
நான் சீமான் சம்பந்தமான எந்த நேர்மறை கருத்தையும் பதிவதில்லை. ஏன் என்றால் எனக்கு அவரை பிடிக்காது. அவரை அரசியலில் முடமாக்குவதே தமிழக, ஈழ தமிழருக்கு நன்மை என்பது என் நிலைப்பாடு. ஆனால் சீமான் பற்றி விகடன் போன்ற ஒரு நிறுவனம் நேர்மறையான கட்டுரை எழுதினால், அதில் எழுதபட்டதை விமர்சிப்பேனே ஒழிய, விகடன் நாதக ஊதுகுழல், அல்லது சீமானிடம் காசு வாங்கி கொண்டு எழுதுகிறது என சொல்வதில்லை. இதுதான் வித்தியாசம். ஆனால் தம்பிகளின் யூடியுப் சேனல்களை, உ+ம் தூசண துரை, முன்னர் அய்யநாதன், ராவணன் குடில் - அவை பிரச்சார தளங்கள் என அடையாளம் காட்டுவேன். சண்டிவி, கலைஞர் டிவிக்கும் அதுவே.
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
காங்கிரஸ் விஜையை வைத்து ஆட்சியில் பங்கு என ஆரம்பித்து கொஞ்சம் அதிக சீட் கேட்பதோடு அடங்கி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். விஜை+அதிமுக மட்டுமே ஆட்சியை பிடிக்க கூடிய சேர்க்கை. விஜையோடு தனியே காங்கிரஸ் சேர்ந்தால் விஜை ஒரு சீட் காங்கிரசுக்கு ஏதும் இல்லை என்பதே கரூருக்கு முன்பு கூட நிலமை. இப்படி இருப்பதையும் கெடுக்க காங்கிரஸ் விரும்பாது. அதுவும் செல்வபெருந்தகை இருக்கும் வரை. கூடவே பீகாரில் நித்கிஷ், பிஜேபி இடையே லடாய் என்கிறார்கள். ஆகவே இந்தியா கூட்டணியை பலமாக்க கிடைக்கும் சந்தர்பத்தில் பலவருடம் கூட நின்ற திமுகவை விட்டு, விஜையோடு வருவதில் தேசிய, மாநில மட்டங்களில் காங்கிரசுக்கு எந்த அனுகூலமும் இல்லை. இப்படித்தான் நானும் எண்ணுகிறேன். ஆனால் விஜை கொஞ்சம் மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும். டெண்டுல்கர் ஆயினும் டிரெசிங் ரூமில் இருந்து செஞ்சுரி அடிக்க முடியாது🤣.
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
இந்த கோணத்தில் நானும் சிந்தித்து பார்த்தேன். இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் சேருவோம் என டெல்லி தலைமை முடிவெடுத்தாலும்… உள்ளூர் பாஜக ரொம்பவே சோர்ந்து போய்விடுவார்கள். இது வானதி உட்பட அத்தனை சிட்டிங் எம் எல் ஏ களும் பதவி இழப்பதை உறுதி செய்யும். அடுத்த அண்ணாமலையின் இத்தனை வருட உழைப்பு வீண். நயினார் முதல் ராஜா வரை ஆவலோடு காத்திருப்போர் நிலை? இப்படி ஒரு முடிவை டெல்லி எடுத்தால்… தமிழக பாஜக ரொம்பவே துவண்டு போகும். அது என்றோ ஆட்சியை பிடிக்கும் நீண்டகால திட்டத்தை பாதிக்கும். எனவே இப்படி ஒரு முடிவு வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். கூடவே, இன்னும் சில நாட்களில் நயினாரின் பிரச்சாரத்தை பாஜக பொறுப்பாளரும், எடப்பாடியிம் ஆரம்பித்து வைக்கிறார்கள். கூட்டணி நன்றாக ஜெல் ஆகிவிட்டது. இனி பிரிவது கடினம்.
-
சிவவாக்கியம் எனும் தேன்
கண்ணதாசன் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இதை பார்த்த போது நானும் நினைத்தேன், இவ்வளவு பகுத்தறிவோடு ஆன்மீகத்தை அணுகிய மனிதனை, மண்ணை சோறாக்கினார், மூங்கிலை வெட்டி தங்கம் எடுத்தார் என விட்டலாச்சார்யா கதை போல திரித்து பின்னாளில் அசிங்கபடுத்தியுள்ளார்கள் என. இது யேசுவுக்கும் புத்தருக்கும் கூட நடந்த விடயம்தானே.