Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15603
  • Joined

  • Last visited

  • Days Won

    174

Everything posted by goshan_che

  1. உங்களிடம் பல விடயங்களில் கருத்து முரண் இருந்தாலும். ஆங்கிலம் பேசினால் அறிவாளி, அல்லது ஆங்கிலம் பேசத்தெரியாதவன் முட்டாள் என எழுதுபவர்களை நீங்கள் லெப்ட் ரைட் வாங்கும் போது அதை மனதார ரசிப்பதுண்டு. ஆமோதிப்பதும் உண்டு. ஆனால் இன்று ஒரு சக தமிழன், அதுவும் உங்கள் நாட்டிலே வாழும், உங்களை போலவே புலம் பெயர்ந்து அல்லல்பட்டு அந்த நாட்டில் ஒரு நிலைக்கு வந்த, பல விடயங்களை தேடி அறிந்துள்ள தேடல் மிக்க ஒருவரை - ஆங்கில அறிவு இல்லை என ஒருவர் மட்டம் தட்ட, நீங்கள் ஒத்து ஊதுகிறீர்கள். சந்திரமுகியாக மாறிய ஜோதிகா போல்…அடிக்கடி நீங்கள் சொல்லும் மேட்டுகுடியாகவே நீங்கள் மாறிய தருணம் அண்ணை இது. இதை உங்களிடம் எதிர்பார்க்கவே இல்லை. # சில நேரங்களில் சில மனிதர்கள் பிகு: பதிலை எதிர்பார்க்க வேண்டாம். அப்படி பதில் போடுவதாயினும் ஒரு கிழமை, அல்லது மாசம் கூட ஆகலாம்🤣. ஐ யாம் ஸோ பிசியா -இங்கிலீஷ் ஸ்பீகிங் ஜெண்டில்மேன்- கெத்து தலைவா🫡
  2. உலக தரப்படுத்தல் வரிசையிலேயே வராத பல்கலைகழகத்தில், அதுவும் இளமானி படிப்பை முடித்து விட்டு, சர்வதேச கீர்த்தி பெற்ற பல்கலைகளில் முதுமாணி, முனைவர், மற்றும் ஒரு சில பேராசிரியர்கள் கூட உலாவரும் யாழ் களத்தில் - உங்களை நீங்களே “கற்பிதன்” என கற்பிதம் செய்த ஆள் என்ற வகையில் —- ஜேர்மனியில் வசிக்கும் ஈழத் தமிழரான கந்தையா அண்ணையிடம் நீங்கள் ஏன் இந்த ஆங்கில ஆவணத்தை காட்டி விளக்கம் கேட்கிறீர்கள்? இதே ஆவணத்தை நான் டொச்சில் இணைத்தால் நீங்கள் வாசிப்பீர்களா? (உங்கள் ஆங்கில அறிவே சொல்லும் படி இல்லை என்பது வேறு விடயம்). இங்கே எல்லாரும் சமம். மொழி அறிவை வைத்து ஒருவரை மட்டம் தட்டும் இந்த பெக்கோ வேலைகளை இனியாவது கைவிடுங்கள்.
  3. பதில் எழுத வச்சிடீங்களே பெரும்ஸ். ஒரு டிமாண்டும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. யாழில் எனக்கு மனதுக்கு பட்டதை மட்டும் எழுதி விட்டு போவேன். நான் விரும்பும் போது மட்டும். எனக்கு கருத்து பரிமாறும் நோக்கம் இல்லை என்பதால் அதை முன்பு போல் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்ற வினயமான வேண்டுகோள் மட்டுமே இது.
  4. கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி 1990 மாசி பிறந்தது, என் நகரை விட்டு நாசி படைகள் வெளியேற வழியும் திறந்தது. தன்னைதானே வல்லரசுப் படை என பீற்றி கொண்ட ஒரு காட்டுக்கூட்டம், மூட்டை கட்டிக்கொண்டு ஓடியது. கூடவே ஓடியது, கூட்டியும், காட்டியும் கொடுத்த கொள்ளை கூட்டம். எங்கள் ஆட்டை, கோழியை, எலுமிச்சையை, மாம்பழத்தை ஆட்டையை போட்ட மிருகங்கள். எங்கள் மங்கையர் மானத்தை விலை பேசிய அரக்கர்கள். நாசி அரிக்கும் நாற்றத்துடன் அலைந்த வாழும்-பிணங்கள். கையில் கிடத்தைதை எல்லாம் அள்ளி கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் நகரின் மத்தியில் அவர்கள் நாட்டு கொடி அலங்கோலமாய் கிழிந்து தொங்கியது. கொடி மட்டும் அல்ல, உலகின் பெரும் இராணுவம் என்ற மதிப்பீடும்தான் அங்கே கிழிந்து தொங்கிகொண்டிருந்தது. அவர்கள் எம் நாட்டில் கைப்பற்றிய முதலாவதும் கடைசியுமான ஒரே பிராந்தியத் தலைநகர் இதுதான். இங்கேதான் அசைக்கமுடியாத படை என்ற விம்பத்தையும் “வீரமும் களத்தே போட்டு, வெறுங்கையோடு” ஓடினார்கள். அல்லோலகல்லோல பட்டது என் நகர். பிள்ளைகள் வருகிறார்களாம். தேனீரும் கையுமாக அவர்களை தேடி இருந்தன இலட்சம் சோடி கண்கள். கைலாகுகளும் கட்டிப்பிடித்தல்களும் கணக்கு வழக்கின்றி இடம்மாறின. எங்கள் மக்களின் ஆரவாரம் கண்டு அனுமானிற்கும், அவன் சேனைக்கும் வயிற்றில் பற்றியது நெருப்பு. அனுமானின் வால்பிடிகளுக்கோ - நெருப்பு குதத்திலேயே குந்தி இருந்தது. கோணேஸ்வரரும், அந்தோனியாரும் இனி சுதந்திரமாக சப்பாத்தி(து)க்காரர்களின் தலையீடின்றி கொடியேறலாம். மண்மூட்டைகளுக்கு பின்னால், குருதி குடிக்கும் மூட்டை பூச்சிகள் மறைந்திருந்த எங்கள் வீடுகளில் இனி நாம்சுதந்திரமாக குடியேறலாம். காட்டுக்குள் இருந்து எங்கள் காவல் தெய்வங்கள் வந்து விட்டார்கள். எங்கள் நாயகர்கள் நகர் மீண்டு விட்டார்கள். Kherson இல் மீண்டும் கம்பீரமாய் பறந்தது புலிக்கொடி.
  5. யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி? யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை. @Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன் அண்ணாவின் விலகலின் பின் பொறுப்புடனே எழுதுகிறனர். கற்ப்ஸ் மட்டும்தான் ஊரில் சைக்கிளில் போகும் எல்லாரையும் துரத்தும் செல்லபிராணி போல, யாழுக்கு வரும் அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தபடி உள்ளார் 🤣. ஆனால் ஏனையோர் கண்ணியமாக விலகி நடப்பதால் இதனால் அதிக பாதிப்பில்லை. ஆனால் நிர்வாகம் தன் வகிபாகத்தை செய்யவில்லை. 1. நிழலி, இணையவன் ஒரு சேவையாக கருதி மட்டுறுத்தலில் அதிக நேரம் செலவிட வேண்டும். 2. நிழலி, இணையவன் தம்மை போல இன்னும் இரு மட்டுறுத்தினரையாவது வளர்க்க வேண்டும். எராளன், தனி, சுவி அண்ணா, சுவை போன்ற நிதானமானவர்களில் இருந்து தெரியலாம். 3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி). இவை நடக்கும் போது, இப்போ இருப்பது போல் அதிக நேரம் செலவழிக்கும் மட்டுவின் மனதுக்கு பிடிக்காத கருத்துகள் நீக்கப்பட்டு, பஜனை மன்றம் போல தொனிக்காமல், பல வகையான கருத்தும் யாழில் பகிர மீண்டும் வாய்ப்பு உருவாகும். நான் ஒரு போதும் யாழில் ஏனைய கருத்தாளருடன், கருத்துடன், முரண்பட்டு விலக கூடியவன் அல்ல. ஆனால் ஒரு நியாயமான நிர்வாகம் உள்ளது என்ற நம்பிக்கை இல்லாத போது கருத்தாடி மினெகெடுவது பைத்தியகாரத்தனம். இது எனது கருத்து மட்டுமே. கருத்தாடல் செய்யும் நோக்கம் அறவே இல்லை. பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.
  6. அழைப்புக்கு நன்றி ஜி. தனி மடலிட்டோருக்கும் நன்றி. எல்லா போட்டியாளருக்கும் வாழ்த்து.
  7. சில விடயங்களை மீளப் போய் பார்ப்பது - நாம் விடயங்களை சரியாக அணுகுகிறோமா இல்லையா என கணிக்க உதவும். மேலே எழுதியது 11 மாதங்களுக்கு முன். உக்ரேன் போருக்கு முன். பணவீக்கம் இப்போ 8% தொடுகிறது. வங்கியின் வட்டி வீதம் 1.75. இன்னும் இரு வாரத்தில் 2.25 ஆகலாமாம். அடுத்த வருட ஆரம்பத்தில் பணவீக்கம் 22% ஆகலாம் என்கிறது கோல்ட்மன் சாக்ஸ். அப்போ வங்கி வீதம் 5%? ஆக கூடும்? என்றால் மோர்ட்கேஜ் 5 வருட டீலுக்கு 8% ? https://www.theguardian.com/business/live/2022/aug/30/pound-uk-recession-economy-mortgages-energy-market-gas-business-live
  8. ஓம். பிஜேபி செய்யாவிட்டாலும் தமக்கு ஆபத்து என நினைத்தால் குடும்பம் செய்யும்.
  9. பகிர்வுக்கு நன்றி. பி டி ஆர் - சொல்வதுதான் உண்மை. இத்தனை வேறுபாடுகள் கொண்ட ஒரு நாடு, வாள்முனையில் அல்லாமல் (கஸ்மீர் தவிர்த்து) 75 ஆண்டுகள் நிலைத்ததே அதிசயம்தான். ஆனால் அதிசயங்கள் எல்லாம் முடிவுக்கு வருவதுதானே இயல்பு. இந்திய அதிசயத்தை முடிக்க வந்த தூதர்கள்தான் சங்கிகள். இஸ்லாமியர்கள், தேசிய இனங்களுக்கான வெளியை சுருக்கி, சுருக்கி இனி இங்கே இருக்க முடியாது என்ற நிலைக்கு இந்தியாவை இட்டு போக கூடிய ஒரே சக்தி சங்கி கூட்டம்தான். அந்த வகையில் தமிழ் தேசியத்துக்கு இது உவப்பான செய்திதான்.
  10. என்ன விளம்பரம் செய்யுறாங்களோ தெரியேல்ல. மேதகு II படம் வந்ததும் தெரியேல்ல. ஓடினதும் தெரியேல்ல. லண்டன் ல எங்க ஓடுதாம்? வெள்ளி திரையில் பார்க்க ஆசையாய் இருக்கு.
  11. அருமையான பதிவுகள் வசி. கலை சொற்களை விடாப்பிடியாக தமிழில் எழுவதற்கு 👏. இந்த திரியில் எழுதுவது குறைந்து விட்டாலும் வாசிப்பது குறையவில்லை.
  12. வழமையாக நான் யூட்டியூப் பதிவுகளை குறிப்பாக வரலாறு சம்பந்தமான பதிவுகளை கரிச்சுகொட்டுவேன்🤣. ஆனால் உண்மையிலேயே இது “பராவாவில்லை ரகம்”. ஆனால் ரவிதாசனும் ஏனைய இருவரும் உத்தம சோழன் காலத்தில்தான் கண்டு பிடிக்க பட்டனர் என்பது ஆதாரபூர்வமாக நிறுவபட கூடியதாக தெரியவில்லை. அவர்கள் தண்டிக்கபட்டதாக கூறும் கல்வெட்டு ராஜராஜன் காலத்துக்குரியதே. அதற்கு முன்பே, உத்தம சோழன் ஆட்சியில் அவர்கள் கண்டுபிடிக்க பட்டார்கள் என்பதற்கு ஆதராம் இருக்கிறதா? அறிந்தோர் சொல்லவும். எனக்கு உத்தம சோழன் மீதுதான் சந்தேகம். அநிருத்த பிரம்மராயருக்கு பின், உத்தம சோழன் கொலையாளிகளில் ஒருவரை பிரதம அதிகாரி ஆக்கினான் என்பதும். 16 வருடம் பட்டத்து இளவரசனின் கொலை மர்மம் துலங்காமல் இருந்தது என்பதும், ராஜராஜன் ஆட்டி கட்டில் ஏறியதும் கொலையாளிகள் தண்டிக்கபட்டனர் என்பதும் உத்தம சோழன் நோக்கி கையை காட்டுகிறது. அடுத்து உத்தம சோழனுக்கு கொலை செய்ய முகாந்திரம் இருந்தது. கண்டராதித்தனின் மகனாக அவரே வந்திருக்க வேண்டிய பட்டத்துக்கு, ஆதித்தன் வருகிறார். உத்த சோழன் தான் கொலையை செய்தார் எனில் ஏன், ராஜராஜன், 1. அவருக்கு பட்டத்தை விட்டு கொடுத்தார்? 2. ஏன் கொலையாளிகளை கொல்லாமல் விட்டார் என்ற கேள்விகள் எழுகிறன. ஒன்றில் ராஜராஜன் இதை உத்தம சோழன் செய்திருப்பார் என நம்பவில்லை, அறியவில்லை அல்லது சோழ வம்சத்தில் பட்டத்துக்காக சகோதர கொலை நடந்தது என்பதை பதிவு செய்ய அவர் விரும்பாமல் போகலாம். ஆனால் இந்த கொலைக்கான பழி தீர்தலாகவே காந்தளூர் சம்ஹாரத்தை நிகழ்த்தினார் என நான் நம்புகிறேன்.
  13. ஐயரபாத் ரெட்ஹில்ஸ் விலை ஏற்றம் போல் இங்கேயும் ஒரு செங்குத்தான விலை ஏற்றம் வருமோ?
  14. ஐயர்வாள் மதுரையை தரம் உயர்த்தி பலாலி-மதுரை சேவையை நிரந்தரமாக்க வேண்டும். எப்போ விமானடிக்கெட் பார்த்தாலும் டெல்லி மிக மலிவாக இருக்கும். சென்னை அப்படி இல்லை. இடப்பற்றாகுறை தரையிறங்கு கட்டணத்தை அதிகரிக்க வைத்துள்ளது என நினைக்கிறேன். திருப்பதி போபவகளுக்கு பரந்தூரில் இறங்குவது வசதியாக அமையும் என எண்னுகிறேன்.
  15. ஓம் நான் இங்கே பச்சை தண்ணி என்றது சோமபானம் கலக்காத தண்ணியை. சூடான திரவத்தை அருந்துவது வியர்க்க வைப்பதன் மூலம், வியர்வை ஆவியாவதன் மூலம் உடலை குளிர்விக்கும் என்பது சரிதான்.
  16. 😢 மூண்டு ஆலோசனைகள் 1. நிறைய பச்ச தண்ணி 2. நிறைய பச்ச தண்ணி 3. நிறைய பச்ச தண்ணி
  17. நீங்கள் சொல்லும் இசைவாக்கம் ஒரு காரணியாக இருப்பினும் அது மட்டும் இல்லை. ஏனென்றால் அங்கே இப்போதும் போய் காண்டாவன நேரம் நிண்டிருக்கிறேன் ஆனால் இங்கே போல் உணருவதில்லை. அதே போல் இலங்கையில் கூட 38 என்பது அகோர வெய்யில்தான். 40 எல்லாம் டெல்லி, அபுதாபி பக்கம்தான். https://www.dailymirror.lk/breaking_news/SL-experiencing-highest-temperatures-in-140-years:-Prof--Jayaratne/108-165441 இங்கே பாருங்கள் 👆. 37 ஐயே வரலாறு காணாத வெப்ப நிலை என்கிறார்கள் இலங்கையில் (2019இல்). நீங்களும் இப்போதும் அடிக்கடி ஊருக்கு போறவர். உண்மையை சொன்னால் நான் வெய்யிலில் இப்போதும் அதிகம் நிற்பது எண்டால் ஊரில்தான். இங்கே ஒரு 5 நாள் அடிக்கும். பொதுவாக வார நாளில். ஆகவே வீட்டில்தான். ஆனால் ஊரில் நல்ல வெய்யிலில் திருவிழா, பீச், கிரிகெட் மச் - ஆனால் இங்கே இருப்பது போல் தோலை சுடும் வெப்பத்தை உணர்வதில்லை. உண்மை. மேலே தந்த கட்டுரை இதை ஆமோதிக்கிறது.
  18. என் அனுபவத்தில் அதே 38 பாகை வெய்யில் என்பது ஊரை விட இங்கே அதிக செறிவுடன் இருப்பதாக நான் உணர்கிறேன். வேறு யாரும் இப்படி உணர்வதுண்டா? மத்திய தரை கோட்டுக்கு அருகில் இருக்கும் வெய்யில் போல் அல்ல tropic of cancer/ capricorn (கடக/மகர கோடு) அருகில் உள்ள நாடுகளில் சமர் காலத்தில் விழும் வெய்யில் ? பூமி 23.5 பாகை சாய்ந்துள்ளதால், சம்மர் காலத்தில் சூரியனுக்கு அருகில் வட தென்னரை கோளங்கள் வரும். ஆனால் மத்திய தரை பகுதி எப்போதும் சூரியனில் இருந்து தூரத்திலேயே இருக்கும். இதனாலேயே ஊரில் 38பாகை வெய்யிலை விட இங்கே 38 பாகை வெய்யியில் அதிக intense ஆக உள்ளது? இது எனது விளக்கம் மட்டுமே, பிழையாகவும் இருக்கலாம். யாரும் விசயம் தெரிந்தவர்கள் இதை விளக்கினால் நல்லம்.
  19. பண்டிதர் பூங்காவை நினைவு படுத்தியமைக்கு நன்றி. இங்கே இரு முதலையும் இருந்ததாக நினைவு. தீக்கோழி என்பார்கள் யாழில் இல்லை என நினைகிறேன். அதுவும் இருந்தது. அதே போல் ஆனைக்கோட்டையில் தியாகசீலம் என்று ஒரு அருமையான சிறுவர் பூங்காவும். மானிப்பாய் அந்தோனியாருக்கு அருகில் உறுதியின் உறைவிடம் என்று ஒரு அருங்காட்சியமும் இருந்தது. 87 க்கு முந்திய முயற்சிகள். இந்தியன் ஆமி வருகையோடு அழிந்து போனது. @நன்னிச் சோழன் எதிர்காலத்தில் தகவல் தேவைப்படலாம்.
  20. 😂 எடுத்து சொன்னால்தானே வடிவா விளங்கும்🤣
  21. அப்ப எனக்கு சின்ன வயசு ஆனால் ஆக்கள் வந்தது, பள்ளிகுடத்தில தங்கி இருந்தது நியாபகம் இருக்கு. பிறகு கொக்கிளாய் ஆஸ்பத்திரியோட நேவி நிப்பாட்டி போடுவான். 1990 சமாதான நேரம் கொக்கு தொடுவாய் போய் சிங்கள மீன்பிடி கிராமமாக மாறி போயிருந்த முகத்திவாரத்தில் இருந்து புல்மோடையை ஆற்றுக்கு அப்பால் பார்த்தேன். அதுதான் கடைசி. பிறகு 2014 இல் திரிகோணமலையில் இருந்து காட்டுபாதையால் தென்னை மரவாடி சந்தி வரை போய், வெலிஓயா, ஜானகபுர வழியாக செம்மலையில் வந்து ஏறினேன். கோடை காலம் எண்டடதால் முடியுமாய் இருந்தது மாரி எண்டால் வெள்ளம் விட்டிராது. செம்மலையில் இருந்து முல்லைதீவு ஆஸ்பத்திரி இருந்த சந்தி (பழைய ஆமி காம்ப்- சின்னதாக இருந்த இடம்) வரைக்கும் காப்பேட். அதே போல மாங்குளம் ரோட், புது குடியிருப்பு ரோட் கார்பெட். ஆனால் குடியேற்றம் நாயாறு தாண்டி வந்து விட்டிருந்தது. முல்லைதீவில் 90க்கு முன்னிருந்த ஒரு கட்டிடம்தானும் இல்லை. ஆனால் அதே வளவில் புதிதாக கட்டி உள்ளார்கள். கொழும்பு, இலண்டனை விட்டீர்கள்🤣. யாதும் ஊரே யாவரும் கேளிர். நம் ஊர் என்பதன் வரையாரைதான் என்ன? பெற்றோரின் பிறப்பை தவிர்த்து விட்டு - எனது ஊர் எது என யோசித்து நாஅனே கன்பியூஸ் ஆகி உள்ளேன்😂.
  22. அடே நம்மூரா 😍, ஒரு காலத்தில் முல்லைதீவு மாவட்டதிலேயே மாங்குளம், செம்மலையில்தான் போன் இருந்தது. அப்ப உங்களுக்கு சிலாவத்தை கடற்கரை ஈச்சம் காடு, புயலில் சிக்கிய பழைய கப்பல் எல்லாம் தெரிந்திருக்கும். நீங்கள் சொல்லும் காட்டுக்குள்தான் நான் கழுகு பாம்பை துவம்சம் செய்ததை பார்த்தது. கிளுவை வேலிகள், கல்யாணி பூ பற்றைகள் - குறிஞ்சி என்றால் நினைவில் வரும் மண். ஓம். 5 பட்டரி டோர்ச் வெளிச்சத்தில் இவரை நான் கண்டுள்ளேன். முகம் முழுக்க கண் - அப்படி ஒரு முழி. ஊரில் வடிவில்லாத ஆண்களை தேவாங்கு என்பார்கள்🤣.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.