Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்

Everything posted by goshan_che

  1. நீங்கள் மட்டும் இல்லை வாதவூரான், புலம்பெயர்ந்த ஆட்கள் எல்லாரும் இந்த விசயத்தில் உஷார்தான்🤣
  2. நோ…நோ பிக் ப்ரோ நீங்கள் என்னை தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள். இதுவரை எனது வாழ்க்கையை எடுத்தால் நான் அதில் அண்ணளவாக 59% ஐ யூகேயில் தான் கழித்துள்ளேன். 41%தான் இலங்கையில். ஆகவே நான் ஒரு பாதி இங்கிலீஸ்காரன்யா🤣. யாழ்கள வழக்கப்படி மரியாதையாக சொன்னால் மேற்கின் அடிமை. ஆகவே எனக்கு அதுவும் இதுவும் இரெண்டு கண்கள் போல. ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றோடு வாழவே முடியாது. எனக்கு இலண்டனில் இருந்து உதயன் வாசிக்கவும் பிடிக்கும், யாழ்பாணத்தில் இருந்து கார்டியன் வாசிக்கவும் வேண்டும். ஆறுமாதம் இங்கே நின்றால் நெய் பரோட்டா கேட்கும். ஆறு மாதம் அங்கே நின்றால் ஒரு ஷீஷ் கெபாப் விடாய்க்கும். ஆகவே அங்கே, இங்கே என வாழ்வதுதான் என் குறிக்கோள். ஆனால் - பெறக்கூடாது, பெற்றால் எம்மால் முடிந்தளவு வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அந்த வாய்புக்கள் ஒரு 3ம் உலக நாட்டை விட, உலகின் 4/5 வது பெரிய பொருளாதாரத்தில் அதிகம் என நான் நம்புகிறேன். ஆகவே என் இன்பத்துக்காக இப்போதைக்கு அங்கே, இங்கே என போகப்போவதில்லை. தந்தை இல்லாத ஆண் பிள்ளைகளின் சீரழிவை நேரிலேயே கண்டுள்ளேன். ஆகவே அந்த புரொஜெக்ட் முடியும் மட்டும் அரக்க முடியாது. அடுத்தது - அங்கே, இங்கே வாழ்வது என்றால் - காசு வேணும். ஆகவே சில ஏற்பாடுகளை இப்பவே செய்ய தொடங்கினால் காலம் கனியும் போது செய்யலாம். கற்ற கல்வி கடைசி வடக்கும் சோறு போடுமாமே? முயற்சித்து பார்க்கலாம். ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து இது நிறைவேறாமலே போகலாம். போகட்டுமே….போகும் போது நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். முடிந்தளவு அவற்றை இன்பமானதாக சேர்க்க முனைந்தோம் என்ற நிம்மதியில் கண் மூடலாம். #ஆண்டி ***யை தட்டினால் பறப்பது புழுதி🤣
  3. ஈரோடு இடைத்தேர்தலில் தொகுதியில் பெரும்பான்மையான செங்குந்த முதலியார் வேட்பாளரை நிறுத்தி விட்டு, அவர்களின் சாதி உணர்வை தூண்ட, தொகுதியில் 6% இருக்கும் கழிவு தொழில் செய்யும் அருந்ததியினரை வந்தேறிகள் என பேசி, சாதிய வன் கொடுமைக்காக வழக்கை சந்தித்த பெருமகன். திரைப்படத்தில் மட்டும் மூச்சு விடாமல் சாதி ஒழிப்பு வசனம் பேசுவார். கருணாநிதி கூடத்தான் பராசக்தியில் ஊழலை எதிர்த்து பக்கா வசனம் எழுதி இருப்பார்🤣. # சின்ன கருணாநிதி
  4. மும்மொழி வித்தகர் முதலமைச்சராக, எம்பி யாக இருந்து சொன்னதை கேட்காத உலகம் - வெறும் கட்டுக்காசை இழக்கபோகும் ஜனாதிபதி வேட்பளராக இருந்து சொன்னால் மட்டும் கேட்குமா? லாஜிக் இடிக்குதே?
  5. நீங்கள் சொன்னது மூன்று வகையில் சரி. 1. இலங்கையில் சிங்கள இனவாதம் தீராது. இது மிக சரி. அதே போல் 2. இனவாதம் தீரும் மட்டும் (அதாவது ஒரு போதும் இல்லை) எல்லாராலும் காத்திருக்க முடியாது. 3. அதே போல் மிக மோசமான இனவாதம், இன ஒதுக்கல் இருக்கிறது ஆனால்….. @பாலபத்ர ஓணாண்டி @சுவைப்பிரியன் போன்றோர் கூனி குறுகி அடிமை வாழ்வு வாழ்வதாக நான் நினைக்கவில்லை. அப்படி என்றால் அவர்கள் எப்போதோ டிக்கெட்டை எடுத்து சுவிஸ், யூகே திரும்பி இருப்பார்கள்.
  6. போறவை இப்ப ஒரு எட்டு போட்டு வாறது நல்லம். தேர்தலுக்கு பிறகு நிலைமை மோசமாகலாம்.
  7. @வாதவூரான் என்னை போட்டு தள்ளிய போது (முதலாவது வீடியோ)
  8. ஏனையோருக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் - கொப்பேகடுவ சந்தி/மன்னம்பிட்டியை தாண்டும் போது என் பீலிங் “சின்ராசுவை இனி கையில் பிடிக்க முடியாது” என்பதே😎.
  9. நான் இன்னுமும் துனிசியா போகவில்லை. ஆனால் போய் வந்தோர் பலர் ஆகா..ஓகோ எண்டுதான் புகழ்கிறார்கள். உங்கள் படங்களை பார்க்க போகும் ஆசை வருகிறது. வடையை பற்றி கவலை வேண்டாம் அண்ணை, உங்கள் வீட்டில் இருந்து அருகில்தானே அம்மாச்சி - மலிவு என்றால் மலிவு, தரம் என்றால் தரம். அதையும் தாண்டி புனிதமானது. ——- எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னியராகி நிலவினிலாடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போந்ததும் இந்நாடே மங்கையராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர் தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித் தழுவியதிந்நாடே - மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் அங்கவர் மாய அவருடல் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே -
  10. வரும் தேர்தலில் சொல்லுங்கோ என மக்களுக்கு இவர் சொல்கிறார். ————- சொல்கேயிம் உடன் யாராவது தமிழர் தரப்பு தொடர்பில் உள்ளதா? நல்லவர், கெட்டவர், நம்பமுடியாதவர், ஏஜெண்ட், சுயநலவாதி என்பவை சகலதுக்கும் அப்பால் - எமது கோரிக்கைகளின் நியாயம் இவருக்கு பாலா அண்ணையால் நன்கு உணர்த்தப்பட்டது என நினைக்கிறேன். இப்போ எமக்கு இவர் பரிந்துரைப்பது என்ன? யாருக்காவது தெரியுமா?
  11. உண்மையான பெயர் அப்புஹாமிகே உடவளவே ஜெரால்ட் சிசில் வாமதேவ என்பதாம்🤣. செய்தியில் இவரை “இலங்கையர்” என எழுதிய போதே இவர் தமிழர் இல்லை என்பது தெரிந்திருக்க வேண்டும். தமிழர் என்றால், யாழ்பாணத்தில், சுன்னாம், சின்னதம்பி வீதியை பூர்வீகமாக கொண்ட எண்டு நீட்டி முழக்கி இருப்பம் எல்லோ🤣
  12. பிகு ஒருத்தர் என் இக்னோர் லிஸ்டில் 3 வது நபராக சேர்ந்து விட் ரொம்பவே துடிக்கிறார்🤣.
  13. ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா கோசானோடு தனக எண்டே யாழ்களம் வாற கள்ள ஐடிக்கெல்லாம் இந்த ஆதாரமே ஓவர்…. கவ்வி கொண்டு ஓடவும்🤣
  14. போட்டுத்தள்ளுவது ஓகே, ஒரு @ போட்டு போட்டுதள்ளுங்கப்பு🤣
  15. அம்புலி மாமாதான் ஆதாரம்👇 https://www.india.com/viral/maharaja-of-alwar-once-as-a-revenge-used-rolls-royce-to-collect-garbage-from-the-streets-2944690/amp/ வாசித்து, கிரகிக்க முடியுமாய் இருக்கும் என நம்புகிறேன். பிகு 6 கார், 10 அல்ல.
  16. அப்படியில்லை, லண்டனில் கடைக்கு போன போது தன்னை அவமானப்படுத்தினர் என்பதால், பத்து ரோல்ஸ்ரொய்ஸ் காரை வாங்கி இந்தியாவில் ஊர் கூட்டும் குப்பை லாரியாக பாவித்த மஹாராஜக்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். இந்த நாடுகளில் எப்போதும் வளம், செல்வம் இருந்தது ஆனால் அது சிலரிடம் குவிந்து இருந்தது. மேற்கில் இது ஒப்பீட்டளவில் பரலவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்டம் என பார்த்தால்…. விமானம் தாங்கி கப்பல்கள் சீனா, ரஸ்யாவிடம் எத்தனை அமெரிக்கவிடம் எத்தனை என பார்த்தால் வேறுபாடு புரியும்.
  17. பிக் ப்ரோ, வடையை விடுங்கோ…ஸ்கோரை சொல்லுங்கோ…. நீங்களும் ஒரு ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன். ———- @nilmini அக்கா, 1982 ரோயல் தமிழ் பெடியள் (!!!) எல்லாரும் இலங்கையில் ரியூனியன் வைத்த வீடியோ வாட்சப்பில் பார்த்தேன். வரகுணன், சுமந்திரன், சஞ்சய் இராஜரட்ணம் இன்னும் உங்களுக்கு தெரிந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.
  18. இல்லை மன் மோகன் சிங் அப்படி சொல்லவில்லை. 1. மக்களின் சொத்துக்கள் என சொல்லவில்லை. நாட்டின் வளங்கள் என்றே சொன்னார். ஆகவே மோடி சொல்வது போல் தனியாரின் சொத்தை எடுத்து பிரிக்கும் கதைக்கே இடமில்லை. 2. முஸ்லிம்கள், பட்டியல் இன மக்களை குறித்து சொல்லி விட்டு. அதை தொடர்ந்து இதுவரை வளப்பங்கீட்டில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் கூட்டம், இனி வளபங்கீட்டில் முன்னுரிமை பெறும் எனும் தொனியில் சொன்னார். இதை மோடி விஷமதனமாக வேணும் என்றே misinterpret பண்ணி பேசியுள்ளார். https://www.hindustantimes.com/india-news/factcheck-did-manmohan-singh-advocate-first-right-to-resources-for-muslims-as-claimed-by-pm-modi-101713787488653-amp.html 👆🏼fact உ, check டு
  19. தமிழ் மக்களிற்கு மைத்திரி வெற்றிக்கு பின்னான 5 ஆண்டுகால கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க முடிந்தது என்பது என்னமோ உண்மைதான். ஆனால் எமது அரசியல் அபிலாசைகள் ஒரு அடிதன்னும் முன் நகர்ந்தனவா? அந்த வகையில் இலங்கையில் என்ன செய்தாலும் தமிழ் வாக்குகள் செல்லாகாசுகளாயா இருந்துள்ளன.
  20. நீங்கள் சொல்வதில் அதிகம் பிழை காண முடியாது. ஆனால் தமிழர்கள் ஒரே அணியாக திரண்டு மைத்திரியை வெல்ல வைத்த பின்னும் - அவர்கள் எதிர் பார்த்த எதுவும் நடக்கவில்லை, வாக்குகள் செல்லாகாசாகவே ஆனதும் உண்மைதானே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.