-
Posts
15603 -
Joined
-
Last visited
-
Days Won
174
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by goshan_che
-
என்னது cheeky யா? சீரியல் கில்லர்🤣. பசிக்காக இன்றி fun க்கு கொலை செய்யிற ஆள் 🦷🧛♂️🐲🩸
-
அட பாவி மக்கா - அயலில் சண்டையை வேற கிளப்பி இருக்கா இது. #மர(ண)நாய்
-
இருவரும் நைட் டியூட்டி. எண்டாலும் வேற வேற செக்சன். ஒருவர் மரம் பாயுறது. மற்றவர் வேலி பாயுறது🤣
-
கெட்ட சாமான் இது. சின்ன வயசில் என் முதலாவது பிசினஸ் முயற்சியான கோழி பண்ணையை அடியோடு சாய்த்த வில்லன்😡. இரவில் கண்ணை மட்டும் கண்டுள்ளேன். 87 க்கு முந்திய ஒரு கறுத்த ஏரியா பொறுப்பாளரை அவரின் ஊரை சொல்லி மரநாய் என இயக்கத்தில் அழைப்பார்கள்🤣.
-
அடடே பிளேனுக்கே தண்ணி காட்டிடாங்களே🤣
-
மிஞ்சப்போவது வெறுமை அதை சொல்லும் கருத்துப்படம் அருமை.
-
உங்கள் நட்புக்கும் நன்றி பிரபா🙏🏾.
-
புட்டினும் புதுமாத்தளனும் - இறுதிப்பாகம் இடம் - அடிஸ் அபாபா காலம் - நல்ல காலம் இல்லை அன்பு நண்பன் அமுதனுக்கு, உடான்ஸ் சாமியார் எழுதி கொள்வது. மச்சான், போன முறை எழுதும் போது சோமாலியா போறன் எண்டு எல்லே எழுதினான் மச்சான், ஆனால் உந்த ஏஜென்சிகாரன் படுபாவி எத்தியோப்பாவில இறக்கி விட்டுட்டு எஸ்சாய்யிட்டான் மச்சான். ஆனால் எத்தியோப்பியா எண்டதும் நாங்கள் குறைவா நினைச்சது சரியான பிழை மச்சான் - இந்த பகுதிக்குள் வரும் ரிப்ட் சமவெளிதான் மனித நாகரிகத்தின் தொட்டிலாம் மச்சான். அது மட்டும் இல்லாமல் அபிசினியா எண்டு ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட மக்கள் கூட்டம் மச்சான் இவங்கள். ஆரம்பகால முஸ்லீம்கள் அரேபியாவில் இருந்து துரத்து பட்டு அகதியா வந்த போது அடைக்கலம் கொடுத்த செல்வம் கொழித்த கிறிஸ்தவ நாடும் கூட. பார் மச்சான் நிலமையை இப்ப - பஞ்சம் எண்டதுமே நினைவுக்கு வரும் ஒரு இனமாக மாறிப்போட்டுது. கிட்டதட்ட எங்கட கதையும் இது மாரித்தானே மச்சான்? ஆனாலும் மனசை விடாத மச்சான், கீழ போறது எல்லாம் மேல வரும். ஒவ்வொரு அஸ்தமனத்தின் பின்பும் ஒரு உதயம் வந்தே தீரும். இடையில் வரும் இரவுகளை மெழுகுதிரி கொண்டு கடப்பதுதான் புத்திசாலித்தனம். சரியடா மச்சான், கனக்க எழுத மனமில்லை. இந்த கடிதம் கொண்டுவாற சேவையும் மாசகடைசியோடு நிக்கப் போதாம். இனிமேல் நான் கடிதம் போடுறது சந்தேகம்தான். சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் எழுதுறன். பின்ன வரட்டே. என்றென்றும் நட்புடன். உடான்ஸ் சாமியார்
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
goshan_che replied to பகிடி's topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
நல்லதொரு படைப்பு பகிடி. எழுத்துப்பிழை ஓக்கே, கருத்து நேர்த்தியாக இருக்கிறது. பக்கம் சாராமல் நேர்மையாகவும் இருக்கிறது 👏🏾. -
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
goshan_che replied to ரஞ்சித்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
இங்கே நாங்கள் எல்லாம் உக்ரேனை கூகிள் மப்பில் (மப்பிலும்) பார்த்த கூடங்கள்தான். அந்த மக்கள் பற்றிய உங்கள் அனுபவங்கள் எப்படி? அவர்கள் பெரும்பாலும் இன, நிற வெறியர், நாஜிகள் என பலரும் மேற்கு ஐரோப்பாவில் இருந்து சொல்வது எந்தளவு உண்மை. எனது வேலையின் நிமித்தம் உக்ரேனில் இருக்கும் மட்டுபட்ட நாஜி பிரசன்னம் பற்றி அறிந்துள்ளேன். ஆனால் இது பல்கேரிய, ஹங்கேரி ஏன் ஜேர்மனியில் கூட உள்ள விடயம்தான். இதை விடவும் மேலதிகமாக இன வெறியர்களா உக்ரேனியர்கள்? உங்கள் அனுபத்தில்? -
சும்மா திண்ணையில உலாத்த வந்த என்னை இழுத்து விட்டதும் இல்லாமல் நக்கல் வேற 🤣
-
டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு. ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது. எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது. இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா? “அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”. இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா…. இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வேற வழி இல்லை கட்டிலுக்கு கீழ பாயுவம். பொத்…..எங்கும் ஒரே இருட்டு….. திடீரென லைட் எரிகிறது ….. “என்னப்பா மறுபடியும் கனவே….” சலித்துக்கொண்டு கட்டிலுக்கு திரும்புகிறாள் 83 இல் கைக் குழந்தையாக வெளி நாடு வந்து விட்ட மனைவி. கட்டிலில் நாளை வாட்டர் பார்க் போகும் சந்தோசத்தோடு சலனம் இன்றி உறங்கிகொண்டிருக்கிறான் மகன். அப்பா? போடா பைத்தியக்காரா என ஏளனமாக சிரிக்கிறது கட்டில் அருகே இருக்கும் விளக்கு மேசையின் கால். மறுநாள் “மிஸ்டர் ராஜு உங்களுக்கு இருப்பது சிறுவயது யுத்த அனுபவங்கள் தந்த Post Traumatic Stress Disorder - நீங்கள் கொஞ்சகாலம் இந்த உக்ரேன் செய்திகளை பார்க்காமல் விடுங்கள்”. அட்வைஸ் பண்ணுகிறார் ஆங்கில வைத்தியர் மில்லர். “உங்கள் வலியை என்னாலும் உணர முடிகிறது ராஜு”. மில்லரின் கண்கள் பரிவை சொரிகிறன. “இது வலி இல்லை டாக்டர், வடு. ஆழ்மனதில் பதிந்து விட்ட அனுபவச் சுவடு. இன்னுமொருவனுக்கு அதுவே நடக்கும் போது இந்த சுவடு என்னை அறியாமலே தலையை தூக்கி பார்க்கும். இதை நீங்கள் அறியவோ, உணரவோ முடியாது”. வாய் வரை வந்த வார்த்தைகளை வலுகட்டாயமாக விழுங்கியபடி, “தங்க்யூ டொக்டர்” வினநயமா விடை பெற்றான் ராஜு.
-
🤣 சேம் பிளட்
-
உங்களை காண்பதும் சந்தோசம் சசி. தாமும் இதர பக்தர்களும் சோதனைக்கு ஆளானதை கண்டுதான் மகனே உடான்ஸ் சாமியார் இப்பூவுலகில் மீள அவதரிக்கும் முடிவை எடுக்கும் படி ஆகிற்று. இப்போதெல்லாம் home student, international student fee எண்டு ஒரு சின்ன நாட்டை வாங்கும் விலையில் பட்டங்கள் விலை போகையில் யாழில் அண்ணைமார் மனமுவந்து இலவசமாக தரும் பட்டங்களை மறுத்தல் ஆகாது மகனே🤣. இன்னொரு படத்தில் கருணால் சொல்லுவார் “****துறையில் உள்பாவாடை காணாமல் போனாலும் என்னை பிடிச்சு உள்ள போடுறார் இந்த ஏட்டையா” என்று. சேம் ஸ்டோரி🤣. வேறு ஒண்டும் இல்லை, முன்னர் எண்டா ஜஸ்டீனோட, துல்பென்னோட, கோசானோட தனகலாம். அவையள் இல்லை எண்டால் வாய் நம நமக்கும் தானே, அப்ப அடுத்த வட்டத்தில் இருக்கும் அப்பாவியள பிடிச்சு கடிச்சு துப்புறது🤣. நீங்களும் போனால் - சமையல் குறிப்பு எழுதுறவை கதி அதோ கதிதான்🤣.
-
🤣 ஆசை மச்சான், உடான்ஸ் சாமியாரின் அதி நவீன, கண்டம் விட்டு கண்டம் பாயும் மல்டி பரல் அணு ஏவுகணை உள்ள கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதிக்கு கண்ணிவெடி வைப்பதாக மிரட்டியதை உடான்ஸ் சாமியார் அவரின் பக்தை கமலா ஹரிசிடம் போட்டு கொடுத்து விட்டார் மச்சான். இனி உங்களுக்கு சூப்பின கோம்பையும் சந்தேகம்தான்🤣. 🤣 ப்ரோ, பவள்ளோ ஹாஸ் நோ சூடு நோ சொரணை ப்ரோ 🤣
-
வணக்கம் அண்ணை. கண்டது சந்தோசம். (நோயும் சொல்லி மருந்தும் சொல்வது போல் பத்தோடுபதின்னொன்றாக இதற்கும் பதிலை சொல்லி விடுங்கோ🤣🙏🏾).