Everything posted by goshan_che
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
நியமாய் ஐய்யே😂
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
இந்தமுறை தொடரூந்தில் போகவில்லை… ஆனால் 2024 இல்…கொழம்ப கொடுவ சிட்ட காங்கசந்துறே தக்வா யன தும்பிரிய வேதிகாவ துனேங் பிட்டத்வெய்… என்ற அதே அறிவுபுத்தான்… இப்போதும் திருமலை மட்டகளப்பு போகும் கிழக்கு ரயில் தடம் வடக்கு தடத்தின் மார்க்கத்தில் இருந்து-மஹோ-வில்தான் பிரிகிறது. முன்னர் போலவே கல்லோயாவில் கிழக்கு தடம், திருமலை, மட்டகளப்பு என மேலும் பிரிகிறது. ஒரே மாற்றம். முன்னர் கல்லோயாவில் மட்டகளப்பு போபவர்கள் அதே ரயிலில் இருக்க, திருமலை போவபர்கள் இறங்கி ரயில் மாற வேண்டும். இப்போ செய்தியின் படி திருமலை போபவர்கள் ரயிலில் இருக்க, மட்டகளப்பு போவபர்கள் இறங்கி மாற வேண்டும் போலுள்ளது. எனக்கும் ஆச்சரியமாக உள்ளது. நான் கேட்டபோது மாசகணக்கில் ஆகும் என சொன்னார் கோட்டையில் இருந்த டிக்கெட் விற்பவர். ஆனால் திணைக்கள வெப்சைட் 2 ரயில்களை மட்டுமே பட்டியல் இட்டுள்ளது. இரவு மெயிலை காணவில்லை. வெள்ளத்துக்கு முன் தினமும் 4 ஓடியது என நினைக்கிறேன்.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
இப்போ இருக்கா தெரியவில்லை. கொவிடுக்கு முன்பு போனேன். ஏசி பஸ் 250௹ அப்போ எடுத்தார்கள் என நியாபகம். விமான நிலையம் - கட்டுநாயக்க பஸ் நிலையம் இலவச பஸ், கட்டுநாயக்க பஸ்நிலையம்-கோட்டே விரைவுபாதையில் ஏசி பஸ் (ரோசா வான்).
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
உங்களுக்கு புரியவில்லையா? ஒரு காலத்தில் தம்பிள்ளைகளை போராட கொடுத்த சமூகத்தில் இப்போ தையிட்டி விகாரை போராட்டத்துக்கு வெறும் 17 பேர் மட்டுமே போகும் நிலை! இதை ஆதவன் பெரும் போராட்டம் என எழுதலாம்… பொலிசார் பிடித்து சென்றதை சித்திரவதை என நிரோசன் லூசு கூத்தாடலாம்… ஆனால் மக்கள் இதில் அந்நியபட்டு போய் பலகாலம் ஆகிவிட்டது. யாரும் கல் எல்லாம் எடுத்து கொடுக்க தேவையில்லை - விகாரைகளும், சிங்கள மயமாதலும் தவிர்க்கவே முடியாத புள்ளியை தாண்டி நகர்ந்து விட்டதாகவே எனக்கு படுகிறது. இதை இப்போது கூட புத்திசாலித்தனமாக, ஒற்றுமையாக எதிர்கொள்ள முடியாமல் சுமன் v ஶ்ரீ v கஜன் எனவும், புலம்பெயர் நாட்டில் மேலும் பல பிரிவுகளாகவும் தமக்குள் அடிபடும் இனத்தை - நையண்டியை தவிர வேறு எந்தவகையில் அணுக எனக்கு தோணவில்லை என்பதே என் எழுத்தின் பின்னால் உள்ள வெம்பாரம்.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
Mobitel வட்டிக்கையாளர் எனில் இங்கே டிக்கெட் வாங்கலாம். நான் டயலாக் ஆனால் நண்பர் வாங்குவார். https://www.mobitel.lk/online-ticket-reservation#e-Ticket
-
தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
தள்ளாடி விழுந்ததெல்லாம் சித்திரவதையில் அடங்காது😂 சித்திரவதை என்ன என்பதையும் இலங்கை படை அதை எப்படி செய்யும் என்பதையும் மன்னிப்பு சபை ஈறாக பல உலக அமைப்புகள் வெளிகொணர்ந்துள்ளன. இந்த தவிசாளர் தனக்கு சுயவெளிச்சம் தேட இப்படி ஆஸ்பத்திரியில் போய் இருந்து அலப்பறை செய்வதால்…. உண்மையான சித்திரவதை சம்பவங்களை கூட அமைப்புகள் கண்டு கொள்ளாமல் விட வாய்ப்புக்கள் அதிகம். போன தலைமுறை அரசியல்வியாதிகள்தாம் “பே விளாத்தியள்” எண்டால் இந்த தலைமுறை “பெரிய விளாத்திகளாக” அல்லவா இருக்கிறார்கள்.
-
மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா? - வீரகத்தி தனபாலசிங்கம்
இரெண்டு இடத்திலும் இல்லை. இதை மலையகத்தில் உறுதி செய்ய போராடவேண்டும் என்பது மடைமாற்றும் அல்லது தட்டி கழிக்கும் போக்கு. அவர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதே அவர்கள் எதிர்கால சந்ததியாவது காணி உரிமையை அடைய சாத்தியமான ஒரே வழி.
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
மிக பிந்திய செய்தி ஒன்று அனுர தொய் பபா… அவருக்கு மூக்கை பிடித்தால் வாயை திறக்கத்யெரியாது…. பிகு காவடியில்தான் எத்தனை எத்தனை வகைகளடா சாமி😂
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இதில் வழக்கு போட்டவர் சுமன்னால் போன தேர்தலுக்கு உள்ளீர்க்கப்பட்ட “கிட்டு” என்கின்ற கிருஸ்ணவேணி என நினைக்கிறேன். நிழலிக்கும் தெரிந்தவர்தான் என நினைக்கிறேன். இந்த வழக்கை போட அவருக்கு முடியாது எனில் மாநகரசபை அல்லது பசுமை அமைப்புகள் போடலாம். இந்தியாவின் பசுமை தீப்பாயம் போல கொழும்பிலும் ஒரு அமைப்பு உள்ளது. ரிசார்ட் வில்பற்றில் போட்ட கள்ள ரோட்டில் அது தலையிட்டது. சுமனை குறை சொல்வதே பிறவி கடன் என இராமல் - இப்படி ஏதும் அல்லது மேன்மிறையீட்டுக்கு முயலாலம். சுமன் இதையாவது செய்தார்…. கஜன், சிறிகந்தா, மணி, தவராசா….எல்லாரும் லோயர்தானே? ஒரு துரும்ப்பைதன்னும் தூக்கி போட்டவையோ?
-
ட்ரம்பின் முடிவுகளால் பிளவடைய போகும் இலங்கை - திணறும் இந்தியா!
தமிழ் வின் இந்த ஆண்டின் சிறுவர் நகைச்சுவை இலக்கிய விருதை தட்டி செல்கிறது😂
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
உங்கள் கருத்தில் நான் தவறேதும் சொல்லவில்லை. நீங்கள் உட்பட சுமன் பற்றிய பலரின் பார்வைதான் எனதும். ஆங்கிலத்தில் “கழுவிய தண்ணீரோடு, குழந்தையையும் எறிய கூடாது” என்பார்கள். என் நிலைப்பாடும் அதுவே. ஒத்தை சீட்டு ஒப்பிலாமணி தாக்கப்பட்டார்😂
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
அது…வந்து….அதாகப்பட்டது…நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்….
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
இதற்கு இடையிடையே… அனுர நன்றகா செய்கிறார்… இன்னும் செய்வார்… இனவாதத்தை அப்படி உடனே களைய முடியாது…. இது போன்ற காவடி சிந்துகளையும் சந்திலே பாடி விட வேண்டும்…. மிக முக்கியமாக வேறு யாரேனும் தமிழர் வடக்குக்கு வந்து வாழ நினைத்தாலே அவர்கள் மீது வள் வள் என பாய்ந்து….beware of the dog but be more aware of the owner என்பதையும் நிலைநாட்ட வேண்டும்…. ஜெயவே வா…. புது சரணாய்…
-
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ்
நன்றி. செயல் சொல்லும்படி இல்லை எனிலும் கொள்கையளவிலாவது ஈழ தமிழர் விடயத்தை சரியாக அணுகுபவர் ராம்தாஸ்.
-
சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து
இங்க இருந்த “ஒரு நாடு, இரு தேசம்” எங்கடா காணோம் 😂
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
சுமன் நல்ல சட்டத்தரணியும் இல்லை, நல்ல அரசியல்வாதியும் இல்லை, மனிதரை மனிதராக மதித்து நடத்த கூடிய நல்ல மனிதர் கூட இல்லை. பண்பு கிலோ என்னவிலை எனக்கேட்கும் சுண்ணாம்பு படிந்த மூளைதான் அவருக்கும். இதனால் மட்டும் அவர் சொல்லும் கருத்துகளை பிழை என பொய்யாக நாண்டு கொண்டு நிண்டு வாதிட வேண்டியதில்லை.
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
திட்டம் சரியானது என சொல்லவும் முடியவில்லை…. சுமனை குறை சொல்லவும் வேண்டும்… #டெலிகேட் பொசிசன்😂 பிகு ஒழுங்கா சட்டதுறையில் வேலை செய்ய தெரிந்த சட்டதரணிகள் அரசியலுக்கு வருவதில்லை 😉. இது சுமனுக்கும் பொருந்தும். நன்றி. நானும் உடன்படுகிறேன். கிழிஞ்சுது லம்பாடி லுங்கி😂
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
பார் சிறி விழுந்து போனார் எண்டு யாழ்களத்தின் 1ம், 2ம் குடி-மகன்கள் கவலைபடுகிறார்கள். விட்டுத்தள்ளுங்கள்😂 நடிகர் செந்தாமரை தொட்டு பல விடயங்களில் பொய் என தெரிந்தும் அதை மீள மீள பகிர்ந்து நிர்வாகத்திடம் குட்டு வாங்கிய “பொய்யர் திலகம்” தான் எங்கள் தமிழ் சிறி அண்ணா 😂. எனவே பார் சிறி தள்ளாடி விழுந்த கதையையும் நம்ப முதல் யோசிக்க வேண்டித்தான் உள்ளது. புராண காலே இந்தாங், தையிட்டி கம சிங்கள மாத்ரு பூமியக் ஹட்டியட்ட வார்த்தா வெலா தியன்னே…. தெமலயா பழயாங்ளா இந்தியாவட்ட… ஒயவாகே முஸ்லீம் லா பழயாங்களா அரேபியாவட்ட…
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
எண்ணி 17 பேர் 😂. மாபெரும் கண்ட. ஆர்பாட்டமாம்😂.
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
ஓம்…brown belt, green belt என சொல்வார்கள். ஏலவே கட்டிடம் அல்லது கார்பார்க் இருந்தால் அது பிரவுன் பெல்ட். பிரவுன் பெல்டில் புதிய கட்டிடங்களை கட்ட அனுமதி கிடைப்பது இலகு. ஆனால் கிரீன் பெல்டில் கட்ட அனுமதி எடுப்பது மிக கடினம். கிரேட்டர் இலண்டனின் புறநகரில் கூட இந்த கிரீன்பெல்ட் அதிகம் உண்டு. போக்குவரத்துக்காக இலண்டன் 1-6 வலயங்களாக பிரிக்கப்பட்டுளது. 1,2,3 இல் கிரீன்பெல்ட் குறைவு ஆனால் சாலையோர மரங்கள், பாரிய நிலப்பரப்பை கொண்ட பூங்காக்கள் உள்ளன. இதில் சில பூங்கா என்பதை விட meadow எனப்படும் பற்றைகள் போலவே இருக்கும். வலயம் 4 இல் கணிசமாக ஆரம்பிக்கும் கிரீன் பெல்ட்டின் அளவு,5,6 என கூடி அதற்கு அப்பால் கிரீன் பெல்ட்த்தான் அதிகம் இருக்கும். அடுத்த நகரை அல்லது ஊரை அடையும் வரை. போன அரசும், இந்த அரசும் கிரீன்பெல்டில் கட்டுவதை கொஞ்சம் இலகுவாக்க முயல்கிறார்கள் ஆனால் பலத்த எதிர்ப்பு உள்ளது.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
இதை வாசித்த போது… போக்கிரி படத்தில் பீச்சியடிக்கும் பவுசர் தண்ணியை வடிவேலு அண்டகுடுத்து முட்டு கொடுத்த காட்சி கண் முன் வந்து போனது. இன்றைய அகதிகளை பார்த்து 20 வருடம் முந்திய அகதிகள் நகைக்க கூடாது. புலிகள் நிழல் அரசு இருந்த போது, புலிகள் பகுதியிலும் எம்மால் பாதுகாப்பாக வாழ முடியாது, புலிகள் கட்டாய ஆட் சேர்ப்புக்கு ஆளானேன், தப்பினேன் என பொய் கேஸ் கொடுத்த பச்சோந்திகால், அகதிகளை பற்றி கதைக்கவே இலாயக்கற்றவர்கள். ஆனால் யூகேயில் ஏல்ஸ்பெரி போன்ற நகர்களில் தமிழரை விட சிங்களவர் எண்ணிக்கை பல மடங்கு கூடியுள்ளது உண்மைதான். போற போக்கில் யூகேயிலும் மோட்டு சிங்களவன் உங்களை 9 வாயில்களிலும் பிதுக்கினாலும் ஆச்சரியமில்லை.
-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
உங்களுக்கு எல்லாமுமே தப்பு தப்பாக தெரிவது இன்று நேற்று நடப்பதல்ல. 2009 வரை புலிகள்/தலைவர் மற்றும் சமயம் இந்த இரெண்டும் ஒன்றாக கலக்ககூடாது என்பதில் உறுதியாக இருந்த நிலையில்…. 2009 ற்கு பின் எவன் ஒருவன் ஒருகையில் தலைவரையும், மறுகையில் ஏதோ ஒரு சமயத்தையும் ஏந்தி வந்தால் - அவர்களை சந்தேகத்துடன் அணுகுவதே அறிவுடமை. குறிப்பாக சங்கியாந்தம், வேலன், உமாகரன் என ஏலவே பலரை இப்படி எமக்கு வடக்கே உள்ளவர்கள் இறக்கி விட்டுள்ள நிலையில். அதுவும் இவர் உமாகரனின் தம்பி… அவரின் வேடம் கலைந்த பின் இவர் களம் இறங்கினார்…அல்லது இறக்கப்பட்டார்…. இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் அளவுக்கு அதிகமான வரவேற்பும் சந்தேகத்தை வலுக்க வைக்கிறது. இலண்டன் வந்த போது இலவச டிக்கெட் வேணுமா என கேட்டார்கள் - மறுத்து விட்டேன்.
-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
ஓம்…. இவர்கள் பின்னால் மற(கழண்ட)வன்புலவு சங்கியானந்தாத்தை இயக்கும் காவிக்கரம் போல் ஒரு காவிக்கரம் இருப்பதாகவே எனக்கு படுகிறது.
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
நான் நினைக்கிறேன் அவர் உங்கள் அளவு படிக்கவில்லை என…. சரி அதை விடுவோம் அடுத்தவர் படிப்பை பற்றி நாம் கதைத்தால் பிறகு நம்மை இன்னொருவர் நோண்டினால் கதை கந்தலாகி விடும். இந்த கட்டுமானம் அமைவது சரியா, பிழையா உங்கள் நிலைப்பாடு என்ன? சுமன் தரும் தமிழ் ஈழத்தில் வாழ்வதை விட காலம் பூராவும் அனுரவுக்கு காவடி எடுத்து வாழ்வை முடிப்பது சுகமானது😂
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தையிட்டி கமே, அபே கமே!