Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இதில் யாழ்கள உறவுகளின் நிலைப்பாடு என்ன? பழைய பூங்கா ஒரு வரலாற்று, மரபியல், சுற்றுச்சூழல் பூங்கா - அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். சுமந்திரன் எதிர்ப்பதால் நாம் ஆதரிக்கிறோம். பிகு இதை கட்டுபவர்கள் யார்? ஜேவிபி ஆதரவில் முளைத்த புதிய கள்வர்களா?
  2. புலம்பெயர் சில்லறைகள் திமுக மீது செய்த அத்தனை எதிர்வினைகளையும், திருமாவின் இலண்டன் கூட்டத்தில் நடந்த அவமானம், பெரியார் மீதான அவதூறுகள், கஞ்சா கோஸ்டிகள் புத்த வட்டத்தில் செய்த அநாகரீகம்… இப்படி பலதும் நடந்த போது அதை மெளனமாக வேடிக்கை பார்த்தனத் கஜன் போன்றோர்… இதன் பின்பும்… கஜனை ஒரு மனிசனாக மதித்து வரவேற்றது அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. வழமை போல்… புலம்பெயர் காவாலிகள் முகத்தில் கரி.
  3. உங்களுக்கும், உங்கள் தலைவர் பொன்னருக்கும் இந்த அரசியல் விளக்கம் வர 16 ஆண்டுகள் தேவைபட்டது என எடுத்து கொள்ளலாமா? 16 வருடமாக, ஓங்கோல் கருணாநிதி, இனத்துரோகி, சுடலை ஸ்டாலின், திருட்டு திமுக என தேவையில்லாத ஆணிகளை எல்லாம் புடுங்கி விட்டு…. இப்போ பேச்சுவார்த்தை என்றால் செல்வபெருந்தகையோடு கூட பேசவேண்டும், எதிரியோடு கூட பேச வேண்டும் என்கிறீர்கள். இதைத்தான் ஐயா 16 வருடமாக சொல்லிவாறோம், இப்ப நித்திரையால எழும்பி வாறியள்😂.
  4. வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு தரவுகளுக்கு பிறழ்விளக்கம் கொடுப்பது அழகல்ல என்பதும்… சுமன் சொன்னார் என்பதால் ஒரு கருத்தை எதிர்ப்பதும் … ஒரே போன்ற விடயங்கள் அல்ல. இதை நீங்களும் அறிந்தபடியால்தான் விளக்கம் வேண்டாம் என்கிறீர்கள் 😂.
  5. இந்த கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதால்தான்… பல மடைமாற்றுகளை செய்து இந்த கொள்கையை தவறு என அடம் பிடிக்கிறார்கள்.
  6. ஓம் தெரியும்…ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சம் தட்டு தடுமாறினாலும்…சிலோன்கார அடையாளம் இருந்தாலும், அடுத்தடுத்த சந்ததிகள் இந்தியரால ஏற்கப்பட்டு விட்டனர். இன்னும் 10,20 வருடத்தில் இந்த வேறுபாடு அறவே அற்றுவிடும். போகும் வழியில் மன்னாரில் ரயிலில் இருந்து இறங்கி வன்னிக்குள் போனர்வர்கள் இன்னொரு சிறிய தொகை. மலையக தோட்டங்களில் தங்கியோரை விட இவ்விரு குழுக்களும் ஒப்பீட்டளவில் மேம்பட்டே உளர். உங்களுக்கு புத்தி கொஞ்சம் மந்தமா? எவ்வளவு விளக்கி சொல்லியும் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள்? யாரும் வராமல் இருக்க காரணம் உங்களை போன்றவர்கள் இந்த திரியில் காட்டிய உங்கள் இந்த மையவாத குணத்தின் மீதான பயம், அருவருப்பு. அதை தூக்கி எறிந்து விட்டு சக தமிழராக அவர்களை நடத்துவோம் என்ற நம்பிகை வரும் படி அழையுங்கள். மடைமாற்று
  7. இவரின் அண்ணந்தான் முதலில் கவிதை சொல்கிறேன் என வந்து… பின்னர் கோவிகளை மீட்கிறேன் என காசு சேர்த்து… அதன் பின் சங்கி தனமான நடவடிக்கைகளை யாழில் செய்து… கடைசியில் ரவிராஜ் மனைவிக்காக அரசியலில் குதித்த …. உமாகரன் இராசையா…. இந்த குடும்பத்துக்கே எவருக்கும் இல்லாத அதீத வாய்ப்பு, வரவேற்பு இந்தியாவில் வழங்கப்படுகிறது. சிறிதர் வேம்பு எனும் சங்கியை கண்டு கொண்டது போல…. இவர்கள் மீதும் ஒரு கண்வைக்க வேண்டும். பிகு இருவருமே தலைவர், போராளிகளை வாயாரப் புகழ்வார்கள். சீமானை போல. இப்போதெல்லாம் யாரேனும் இப்படி பேசினாலே முதலில் சந்தேக படவேண்டும் என்பது பொதுவிதி போல் ஆகி விட்டது.
  8. 😂 முன்பே சொல்லி உள்ளேன்னே ஐலண்ட்… அவர்கள் வட்டத்தை பெருப்பிக்கும் ஆட்கள்… மலையாளி, தெலுங்கன், பாண்டியன், கரைநாட்டு தமிழன், மலைநாட்டு சிங்களவன், கரை நாட்டு சிங்களவன், தெலுங்கு பழங்குடியினன் எல்லோரையும் சிங்களவர் என்ற ஒற்றை வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள். தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் எனும் தமிழனா? கவலையே இல்லை…தேவநம்பிய திஸ்ச சிங்களவனே என வரலாற்றை புனைந்தாவது அவனையும் வட்டத்து@ இழுத்து விடுவார்கள். நாம்? வட்டத்தை சிறுபித்து, அதற்குள் மேலும் பல வட்டங்களை கீறும் இனம். அண்மையில் தமிழகம் இருந்தும்…2000 ஆண்டுகளா ஏன் சிங்கள இனம் தொடர்ந்தும் இலங்கை தீவில் கோலோச்சுகிறது என்பதற்கான பதிலும் இதுவே.
  9. ஒட்டு மொத்த சமகால தமிழக-ஈழ தமிழர் உறவின் நிலையை சகல கோணங்ளிலும் ரத்தின சுருக்கமாக தந்துள்ளீர்கள். புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் என தம்மை காட்டி கொண்டு, சிலர் செய்த அவதூறு அரசியலின் பின்னும் கஜனை ஸ்டாலின் சந்தித்ததே என்னை பொறுத்தவரை கொஞ்சம் ஆச்சரியமான விடயம்தான். யாழில் கூட எங்கள் புலவர் பலத்த கஜன், சீமான் ஆதரவாளர். திமுக எதிர்ப்பாளர். இப்படி பலர் உளர். இனியாவது திராவிடத்தை புடுங்கிறோம், கிளறுறோம் என வேண்டாத வேலை செய்வதை இப்படியானவர்கள் விட்டு விட்டு, தமிழக தலைவர்கள் அனைவரையும் சம தூரத்தில் வைக்கும் வழிக்கு திரும்ப வேண்டும்.
  10. வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு இப்படி தரவுகளை தலைகீழாக வியாக்கியானம் செய்வது பெயருக்கு அழகல்ல. ஒரு காலத்தில் - புத்தளம் முதல் - நீர்கொழும்பு வரை தமிழர் நிலம். இப்போதும் ரயில் நிலைய பெயர்களை பார்த்தால் விளங்கும். சிங்கள ஏடுகள் கூட தெமல பற்றுவ, தமிழர் பற்று என சொன்ன இடம். இன்று? பெர்ணாந்து பிள்ளை, பெர்ணாண்டோ புள்ளேயாகி நிற்கும் அவலம். இரெண்டு தலைமுறைக்குள் இனமும், இடமும் மாற்றப்பட்டுள்ளது. நாளைக்கு இதே நிலைதான் காரதீப வுக்கும் 😂. சுதாகரிச்சு கொண்டு இப்போதே தமிழர் எண்ணிகையை சிந்தாமல், சிதறாமல் எமது தாயகத்தில் சேர்க்க வேண்டும். இல்லை எண்டால் “ஈழத்து புத்தன்” கோவில் அமைவதை தடுக்க முடியாது.
  11. இன்றைய இயற்கை அனர்த்தம் இதை பேறு பொருளாக்கி உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கைகான தேவை கல்லோயா குடியேற்றத்திட்டம், சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை, பின்னர் வந்த தொடர் கலவரங்களின் போதே ஏற்பட்டு விட்டது. 1983 இல் சீனியர் தொண்டா ஒவ்வொரு தோட்டமாக போய் வடக்கு போய்விடாதீர்கள் என மக்களை தடுத்தார். அப்போதே மஹோ, கெக்கிராவ என தோட்டங்களை விட்டு வெளியேறி சிங்கள பகுதியில் கூலி வேலை செய்த பலர் வன்னிக்கு வந்தனர். ஆகவே இது 80 ஆண்டுகளாக நடக்காமல் இருக்கின்ற, நடக்க வேண்டிய விடயம். அங்கே வெற்றிடம் ஏற்பட்டால் அதை நாம் ஏன் நிரவ வேண்டும்? அது சிங்களவரின் பாரம்பரிய தாயகம். அங்கே இந்த மக்கள் அடிமைகளாக அதாவது வெறும் வாக்கு, தொழில் செய்யும் இயந்திரங்களாக இருக்காமல் எம்மோடு வந்து விட்டால். அங்கே வேறு தமிழரை கொண்டு நிரவ வேண்டிய தேவை இல்லை.
  12. இத்தனை காலம் இந்தியாவை புறக்கணிப்பதாக சொல்லி விட்டு… எடுத்த எடுப்பில் பிஜேபியை சந்திக்க முடியாது… ஆகவே இப்போதைக்கு பிஜேபி பி டீமை சந்தித்துள்ளார்கள். தமிழ் நாட்டினூடாக அமித்ஷாவை நெருங்க மிக பொருத்தமான ஆள்தான் சீமான்.
  13. ஒரு காலத்தில் சிங்களவன் ஒட்டுமொத்தமாக ஆளில்லா காணிகள் எல்லாம் “புனித பூமி” என அறிவிப்பான்…அப்ப குய்யோ, முறையோ என கத்துவார்கள்.
  14. சந்தர்ப்பம் கூறுக: இதன் மிக முக்கிய ஏற்பாடொன்று இலங்கை நீதிமன்றத்தில் யாரால், எச்சந்தர்பத்தில் காயடிக்கப்பட்டது? (புள்ளிகள் யாரால் - 1 புல்டோ எச்சந்தர்பத்தில் - 1 போண்டா).
  15. முக்கியமான விடயம் ஒன்று… 2009 முதல் 16 வருடமாக இந்தியாவை “செத்தாலும் வரமாட்டேன், செத்த வீட்டுக்கும் வரமாட்டேன்” என சொல்லி புறக்கணித்தவர் பொன்னர். இப்ப “இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டில் என்ன” என்ற நிலைக்கு தமிழ் தேசிய அரசியல் வந்த பின், திடீர் நிலைமாற்றம். ஏன் நிலைமாற்றம் என்பதற்கோ, முந்திய நிலைப்பாட்டுக்கு மன்னிப்போ எதுவும் இல்லை. பாராட்டகூடிய விடயம் - அனைவரையும் சந்தித்தது. பனையூர் ஜமீனை சந்திக்க இவர்கள் விரும்பவில்லையா? அவர் விரும்பவில்லையா தெரியவில்லை.
  16. கோஷான்? சாத்ஸ், உங்களுக்கு ஆக்டோபர் 1987 - மே 2009, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோமா?
  17. சுமன் லவ்வர்ஸுக்கு ஒரு சிறுகுறிப்பு. சுமன் வானத்தில் இருந்து வந்தவர் அல்ல. உங்களவர்தான். உங்களுக்குரிய அத்தனை “சிறப்பு குணாதிசயங்களையும்” ஒருங்கே சேர்த்து அமைக்கப்பட்ட மாதிரிதான் சுமன். சுமனை நீங்கள் இனம் கண்டு வெறுப்பது போலத்தான் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் உங்களை வெறுப்பதும்.
  18. என்ன இது ஏலும் எண்டா எண்ட ஏரியாவுக்கு வா என்ற வடிவேல் ஜோக் அடிக்கிறீர்கள். எவனும் வரமாட்டான் - ஏன் என்றால் உங்கள் “சுரண்டல் புத்தி” பற்றியும், தாகத்துக்கு தண்ணீர் கேட்கும் வெளி மாவட்ட ஆட்களுக்கு ஜாம் போத்தலில் தண்ணி கொடுக்கும் உங்கள் தீண்டாமை பற்றியும் அவர்களுக்கு பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து வடிவாக தெரியும். இந்த மன , செயல் அழுக்குகளை மாற்றி கொண்டு, அவர்களை எம் சொந்தங்கள் என உணர்ந்து அழையுங்கள் என்பதே நான் சொல்வது. காந்தியம் டேவிட் ஐயா, இன்னும் சிலர் போல், குப்பையில் பூத்த குண்டுமணிகள் இதை முன்பே செய்துள்ளனர். நானோ, மனோவோ, சுமனோ இதை புதிதாக கண்டுபிடிக்கவில்லை.
  19. ஏன் அங்கே இருக்க முடியவில்லை? பிரதான காரணங்களில் ஒன்று, எனக் தேவையான வேதனத்தை, எனது துறையில் தரும் வேலை அங்கே இல்லை. நீங்கள் நினைப்பது போல் கொலிடே போய் போத்தல் தண்ணீ குடிக்கும் “கனடா” - இல்லை நான். ஒவ்வொரு முறை நான் போய் வந்து, கண்டு, கேட்டு, உய்த்து சொல்லும் விடயங்கள் பல அடுத்து நிதர்சனமாவதை யாழ்களம் அறியும். உங்களை போல அனுரகாவடிகள் பல யாழில் உருவாகிவிட்டதை கண்டு கொண்டு, ஜேவிபிக்கு யாழில் ஆதரவு பெருகுகிறது என்பதை கடந்த தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பே யாழில் பதிவு செய்தேன். ஆகவே கனடாவில் இருந்து கற்பனையில் கிறுக்கும் உங்களை விட எனக்கு நாட்டின் நிலமை சற்று அதிகமாக புரியும் என்பது என் தாழ்மையான கருத்து.
  20. அவர்களை ஏன் போராட சொல்லுவான். அவர்கள் வந்து நாம் கொடுக்கும் உதவிகளில் தம்பாட்டை பார்த்து கொள்வார்கள். நீங்கள் சொன்னது போல் அடிக்கடி கொலிடே போவதால் சொல்கிறேன். தாயகத்தில் அங்கே ஒன்றும் போராட்டங்கங்கள் கனன்று கொண்டு இல்லை. பலர் இராமன் ஆண்டால் என்ன இராவணம் ஆண்டால் என்ன நிலை. கணிசமானோர் உங்களை போல் அனுர காவடிகள். இந்த சூழ்நிலையில் மலையகத்தில் இருந்து வரும் மக்கள் அவர்கள் பாட்டை பார்த்தபடி வாழலாம். தண்ணீரூற்றில், புதுகுடியிருப்பில், சுன்னாகத்தில், சாவக்ச்சேரியில் இன்னும் பல இடங்களில் முஸ்லிம்கள் வந்து குடியேறி வாழ்வதை போல. நிச்சயம் இதுவும் மடை மச்தெர்ச். முன்பே குசா அண்ணை வெட்டியது. நீங்கள் புது மமபட்டியோடு வந்துள்ளீர்கள். அனால் கருத்து மடைமாற்றுத்தான்.
  21. கவலையே வேண்டாம், இலங்கையின் வேறு எந்த பகுதி தமிழனும் வடக்குக்கு, குறிப்பாக யாழ்பாணம் வர மாட்டான். மலையக மக்களுக்கும் ஏனையவருக்கும் சுமந்திரன் உட்பட்ட உங்கள் அனைவரையும் பற்றிய போதிய பட்டறிவு இருக்கிறது. ஆகவேதான் 2009க்கு பின் முஸ்லிம்கள், சிங்களவர் வந்த போதும் வேறு எந்த பகுதி தமிழனும் வரவில்லை. உங்கள் இடங்கள் பறிபோகும்… அதை என்ன செய்தாலும் தடுக்க முடியாது … காளி கோவில்கள், மாட்டிறைச்சி கடைகளாக… கந்தரோடை…கந்துறுகோட்டேயாக சம்பில்துறை ஜம்புகோளவாக… நயினாதீவு நாகதீபவாக.. இன்னும்… தையிட்டி…. வெடுக்கு நாறி… அலம்பில்… நாயாறு… ஒட்டு மொத்த மன்னார் மாவட்டம்… 20, 30 வருடத்தில் எதுவும் மிஞ்சாது. ஆனால் இங்கே எந்த வேறு மாவட்ட தமிழனும் இருக்க மாட்டன். உங்களுக்கு கொடுத்து வாழ தெரியாது… அடித்து பறித்த பின் அங்கலாய்க்க மட்டுமே தெரியும்.
  22. தன் இனம் என வந்தால் அவனுக்கு 100, உங்களுக்கு 10. அந்த பத்தும் புலிகளின் தியாகத்துக்காக மட்டுமே.
  23. இதுதான் battered women syndrome அதாவது நெடுகாலம் கொடுமை அனுபவிக்கும் பெண் ஒரு தருணத்தில் கையில் கிடைப்பாதல் எடுத்து ஒரே போடாய் போடுவது.
  24. மடைமாற்று - வாங்கி வீட்டீர்களா? இப்போ புதிய டிசைனில் கிடைக்கிறது. செப்பல் ஷாட்👏 என்னது மலையக தமிழர் “தாயகத்தில்” இதுவா நிலமை? # இந்திராகாந்தி செத்துட்டாவா? இங்கே பலரின் எழுத்தை வைத்து உண்மையில் இவர்கள் இதுகாறும் சக தமிழனின் நிலை பற்றி என்ன அறிந்து வைத்துள்ளார்கள் என்பது விளங்குகிறது. பலருக்கு மலையக நிலமையை விட, குருதிஸ், உக்ரேன், ரஸ்ய மக்களின் பிரச்சனை பற்றிய அறிவு கூட😂. அந்தளவுக்கு இவர்கள் இந்த மக்களை, அவர்களின் பிரச்சனைகளை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை என்பதே உண்மை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.