Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அதுவும் சரிதான்.
  2. சிரியாவில் நவா நகரில் உள்ள 112வது இயந்திரமயமாக்கபட்ட படையணியின் தலைமையகம் இஸ்ரேல் விமானங்களால் தாக்கப்பட்டதாகவும் சேதம் ஏற்பட்டதாயும் சிரிய அரச ஊடகம் தெரிவிக்கிறதாம். துருக்கி-பலஸ்தீன் நட்புறவு வைத்தியசாலையை இஸ்ரேல் தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
  3. காஸாவுக்கு போகும் நிவாரணத்தை தடுப்பது போர்குற்றம் என கருதப்படலாம் என சர்வதேச குற்றவியல் நீதி மன்றின் தலைமை வழக்கு தொடுனர் கூறியுள்ளார் (போரின் 3ம் நாளிலேயே யாழில் கூறப்பட்டதுதான்).
  4. அமேரிக்க மரைன் படையணி ஒன்று கிழக்கு மத்தியதரை கடல் பகுதியில் சேவையில் ஈடுபட உத்தரவாம். ஈரான் சார்பு யேர்மனின் ஹூத்தி குழுவாக இருக்கலாமாம். அவர்களிடம் இந்த ஏவுகணை இருக்க வாய்ப்பில்லை. ஈரான் கொடுக்காமல். —————— அமெரிக்காவிடம் பேட்ரியட் ஏவுகணை பாதுகாப்பை வழங்குமாறு ஜோர்தான் அவசரக்கோரிக்கையாம்.
  5. மிகவும் உறுதிப்படுத்த படாத செய்தி செங்கடலில் வைத்து ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இடை மறிக்கப்பட்டது. செங்கடல் என்றால் ஈரானில் இருந்து வர வாய்பில்லை. கடலில் இருந்து ஏவும் வல்லமை ஈரானுக்கு உள்ளதா?
  6. டாஜிகிஸ்தானில் பற்றி எரியும் யூத கலாச்சார நிலையம். 80 களுக்கு பிறகு ஈழத்தமிழர் புழக்கத்தில் வந்த இரு சொற்கள் - ஒன்று டயஸ்போரா (Diaspora -புலம் பெயர்ந்தவர்கள்). மற்றையது ப்போகிரம் (pogrom - இனக்கலவரம்). குறைந்தது இரெண்டு ஆயிரம் ஆண்டுகளாக இவை யூத இனத்துக்கு பழக்கப்பட்ட சொற்கள்.
  7. ரஸ்யபடைகளை தாக்கும் டாஜிகிஸ்தான் போராட்டக்காரார்.
  8. விமானநிலையத்தை கட்டுப்பாட்டில் எடுத்த ரஸ்ய அதிரடிப்படைகள்.
  9. ரஸ்ய பொலீஸ் வாகனத்தை தாக்கும் டாஜிகிஸ்தான் கும்பல். உள்ளே பொலிஸ் பாதுகாப்பில் ஒரு யூதர் இருப்பதாக நம்பபடுகிறது.
  10. உக்ரேன் பிணக்கில் நடுநிலை எடுத்து, கொஞ்சம் அம்பூலன்சை மட்டும் அனுப்பிய இஸ்ரேலுக்கு ரஸ்யா நல்ல தகடு கொடுத்துள்ளது.
  11. ஒரு உஸ்பெக் நபரை யூதர் என்ற சந்தேகத்தில் பாஸ்போர்ட்டை பிடித்து வைத்து கொண்டு விசாரிக்கும் கும்பல்.
  12. ரஸ்யாவின் முஸ்லிம் பெரும்பான்மை குடியரசு (மாநிலம்) களில் ஒன்று டாஜிஸ்தான். அங்கே விமான நிலையத்தில் இஸ்ரேலில் இருந்து விமானம் வந்த சமயம் - மதவாத கும்பல் கூட்டமாக சென்று விமான நிலையத்துள் புகுந்து அட்டகாசம் பண்ணியுள்ளது. யூதர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி. அதேபோல் ஹோட்டல்களிலும் புகுந்து அறை அறையாக “யூத வேட்டை” நிகழ்தியுள்ளனர். டிஸ்கி இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது என்றோ ஒரு நாள் அதை போஷிப்பவர்களை திரும்பி தாக்கும். மேற்கு இந்த பாடத்தை படித்த பின்னும் கூட, ரஸ்யா பாம்புக்கு பால் வார்த்தே ஆவோம் என அடம்பிடிக்கிறது. நேற்றுத்தான் ஹமாசை மொஸ்கோ கூப்புட்டு பேசினார்கள் - இதோ கையோடு நன்றிகடனை செலுத்தி விட்டார்கள்.
  13. ஓம். பெரும் போர் வருவது அமரிக்கா சீனா இருவரின் கையில் மட்டும்தான் தங்கியுள்ளது. ரஸ்யா, ஏனைய நேட்டோ நாடுகள், ஈரான், இந்தியா எல்லாம் பிராந்திய யுத்தத்தைத்தான் ஏற்படுத்தும் வலுவுள்ளன.
  14. எனது உள்ளுணர்வு சொல்கிறது சண்டை விரைவில் ஈரான் - அமெரிக்கா சண்டை ஆகப்போகிறது என.
  15. @நன்னிச் சோழன் நேச நாடுகள் கூட்டு ஏலவே உருவாகி விட்டன, அச்சு நாடுகளின் கூட்டு இப்போதான் மெல்ல மெல்ல உருவாகிறது.
  16. இது காஸாவின் மத்திய பகுதி இல்லையாம். காஸா-இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து 3 கி.மி காஸாவுக்கு உள்ளே இருக்கும் ஒரு கடற்கரை பகுதியாம்.
  17. அப்படிப்பார்த்தால் உலகில் பல நாடுகள் பயங்கரவாதிகள்தானே (சங்கிலியன் உட்பட). நவீன துருக்கி திறம் எண்டு இல்லாவிடினும் இஸ்லாமிய நாடுகளில் மிக முற்போக்கான நாடு. எர்டஹோன் கொஞ்சம் மதவாதமாக மாற்றி வைத்துள்ளார். காஸாவின் மத்தியில் இஸ்ரேலிய கொடியாம்.
  18. இது நழுவல் போக்கு அல்ல. நீங்கள் மேலே சொல்லி இருப்பது ஒரு ஊகம். மேற்கு நாடுகள், ரஸ்யா, இந்தியா மேற்கொள்ளும் வெளிவிவகார தகிடுதத்தங்கள் மிக அரிதாகவே உள்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஈராக் ஆக்கிரமிப்பு, வியட்நாம் போல அரிதாக சிலதை தவிர்த்து ஏனையவற்றை இந்த நாட்டின் மக்கள் - மெளனம் சம்மதம் என்பதாக அங்கீகரித்தே உள்ளார்கள். இப்போ காஸாவை எடுங்கள், யூகேயில் உள்ள அத்தனை கட்சிகளும், ஏறக்குறைய ரிசியின் நிலைப்பாட்டில்தான் உள்ளன. கான், யூசூப் போல சிலர் தசை ஆடினாலும், அரசியல் கட்சிகள் மத்தியில் அணுகுமுறையில் பெரிய மாற்றம் இல்லை. மக்கள் நிலைப்பாடு கூட ரிசியின் நிலைப்பாட்டை அணுகியே. இல்லாமல் மக்கள் மத்தியில் ஒரு நிலைப்பாட்டு மாற்றம் வந்திருப்பின், ஏதாவது ஒரு கட்சி தன் நிலைப்பாட்டை அதை நோக்கி நகர்த்தி இருக்கும். இதை நான் - மக்கள் பெரும்பாலான சமயங்களில் உள்நாட்டு விவகாரங்களையே கவனத்தில் எடுக்கிறார்கள், வியட்நாம், ஈராக் போல ஒரு யுத்தத்தில் நாட்டை கொண்டு போய் மாட்டாதவரை - அவர்களின் தேர்தல் தீர்மானத்தில் வெளிவிவகாரம் பெரிய பாதிப்பை தருவதில்லை என்கிறேன். இதை நான் உலக அரசியல் சுய நலன் சார்ந்தது, அதில் யாரும் நியாயமாக நடக்க முடியாது என்பதை உணர்ந்த வாக்காளரின் சிந்தனை தெளிவினால் அவர்கள் எடுக்கும் முடிவு என நம்புகிறேன் (யூகே தேர்தலில் நான் வாக்களிக்கும் போது வெளிவிவகாரத்தை கணக்கில் எடுப்பதே இல்லை) . நீங்களோ இல்லை, பணபலமும், அரசியல் மிரட்டலும், கொலையும் வாக்காளரை இப்படி நடக்க வைக்கிறன என்கிறீர்கள். இவை இரெண்டுமே உண்மைதான். உதாரணமாக பிரெக்சிற்றை ஒப்பேற்ற, அந்த வாக்கெடுப்பில் வெல்ல, ஒரு எம்பியை கொன்றார்கள், துருக்கி இணைய போகிறது என அரசியல் பயம் காட்டினார்கள், தேர்தல் விதிமுறையை மீறி பணத்தை சமூகதளங்களில் செலவழித்தார்கள். ஆகவேதான் - வெளிவிவகாரங்களில் மக்கள் அதிகம் தலையிடாமல் அதை அரசுகளை நடத்த விடுவதற்க்கும் நீங்கள் சொல்வது, அல்லது நான் சொல்வது இரெண்டுமே காரணமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நம் இருவரின் வியாக்கியானமும் ஊகத்தின் பால்பட்டதே. இரண்டையும் நிறுவ முடியாது.
  19. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ————- இன்னொரு விமானம் தாங்கி தாக்குதல் அணியான ட்வைட் ஐசின்கோவர் ஜிப்ரால்டர் நீரிணைய தாண்டி மத்திய தரை கடலினுள் உள்ளிட்டது.
  20. இப்படி போராடுபவர்களும் கூட தத்தம் சுய நலத்துடனே போராடுவர். ஈராக் சம்பந்தமாக போராடியோர், இலங்கைக்கு போராடவில்லை, இலங்கைக்கு போராடியோர், காஸாவிற்கு போராடவில்லை. மிக சொற்பமானவர்களே போராடுவர். மிகுதி தம்பாட்டை பார்க்கும். ஏன் என்றால் இதுதான் நியதி என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியும். இல்லை என்றால் மேற்கில் எப்போதோ இஸ்ரேலை, இலங்கையை ஆதரிக்காத கட்சிகள் பதவிக்கு வந்திருக்கும்.
  21. நீங்கள் மேற்கை பற்றி அதீத எதிர்பார்ப்போடு உள்ளீர்கள். தமது இராணுவத்தின் அழிப்பை குறைக்க, இரெண்டு ஜப்பானிய நகரங்களை தவிடு பொடியாக்கியவர்கள் மேற்கு. இதை விட ஒரு யுத்த குற்றம் உலகில் இருக்க முடியுமா? இன்று வரை அதுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. சர்வதேச ஒழுங்கில், நீதி, நியாயம், மனித உரிமை, ஜனநாயக விழுமியம், லொட்டு, லொசுக்கு எல்லாம் இரெண்டாம் பட்சம். இதே போலத்தான் இனங்களின் சுய நிர்ணய உரிமையும். பங்களாதேசில் சுய நிர்ணயத்தை ஆதரித்த இந்தியா, கஸ்மீரிலும், இலங்கையிலும் அதை முடக்க்கியது. அதே போலத்தான் ரஸ்யாவும். அபகாசியா, தென் ஒசெசியாவின் சுய நிர்ணயத்தை அங்கீகரிக்கும், ஆனால் எம்மை அங்கீகரிக்காது. நாடுகள் இந்த தத்துவங்களை தம் சுய நலனுக்கு ஏற்ப கையில் எடுக்கும், கைவிடும். இந்த கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஈழத்தமிழர் ஒரு அடி கூட முன் நகர முடியாது. # வல்லான் வகுப்பதே (சர்வதேச) சட்டம், நடைமுறை.
  22. ஸ்டார் லிங்கை இவ்வாறு பயன்படுத்துவதை முடிந்தளவு எம்மிடம் உள்ள வளங்களை கொண்டு தடுப்போம் என்கிறது இஸ்ரேல்.
  23. ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்லர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர். இன்றைய பாலஸ்தீன ஆதரவு பேரணியில் துருக்கிய ஜனாதிபதி பேச்சு.
  24. 👆🏼திட்டமிட்டு இஸ்ரேலிய படைகள் மீது, மருத்துவ நிலைய பெயர்பலகை அருகே நின்று கவிண் மூலம் கல்லடித்து, அதை பத்திரிகையாளரை கொண்டு படம் பிடித்து, ஏலவே தயாராக உள்ள மருத்துவ உதவியாளர்களிடம் சிகிச்சை எடுக்கும் பலஸ்தீன இளைஞன் என்கிறது ஒரு இஸ்ரேல் சார்ப்பு கணக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.