Everything posted by goshan_che
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
நான் முதன் முதலில் பார்க்கும் போது சீனோர் இழுத்து மூடிய நிலையில் இருந்தது. அப்படியே கொஞ்ச தூரம் போனால் நேவி காம்ப். சின்னவயதில் செங்கை ஆழியான் கடற்கோட்டை நாவல் வாசித்ததில் இருந்து அதன் மீது ஒரு அதீத காதல். எப்படியாவது காசு உழைத்து அதை வாங்கி, அதில் குடியேறி விட வேண்டும், போர்ட்டில் வேலைக்கு வந்து போகவேண்டும் எனவெல்லாம் கூட யோசித்தது உண்டு. ஜெட்டியில் போய் நின்று பார்த்து வருவதோடு சரி. அப்போ ஊர்காவற்துறை போகும் பாதையும் உடைந்து கிடந்தது. யுத்த முடிவில், கடற்கோட்டை உள் போய் பார்க்கவும், பாதையில் பயணிக்கவும் வாய்ப்புக்கிட்டியது.
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
அந்த காலத்தில் உங்கள் பிரதம எஞ்சினியராக ஒரு நெடு நெடு என வளர்ந்த மனிதர் இருந்தாரா அண்ணை? அதேபோல் போர்மென் உதவியாளராக கொஞ்சம் கட்டையாக நிறைய தலைமுடியோ கொஞ்சம் ரஜனி சாயலில் இன்னொருவர் இருந்தாரா? இப்பவும் எண்ணை மட்டும் அல்ல ரொம்ப சுவையான எள்ளுருண்டை தயாரிப்பும் வீட்டு கைத்தொழிலாக நடக்கிறது. பழக இனிமையான மக்கள்.
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
நல்ல ஆனைக்கோட்டை எண்ணையில் உருட்டிய உருட்டு போல இருக்கண்ணை😀. அந்த மதகில் ஐந்து நீரை கட்டுப்படுத்தும் துவாரங்கள் உள்ளன என்பதால் காரணப்பெயர் என நான் கேள்விப்பட்டேன். கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.
-
சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?
சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது மற்ற மூவரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தேவகி, ஷாலினி, பவானி ஆகியோர் திருவள்ளூர் பொன்னேரியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஷாலினி என்பவர் அரசுக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? https://www.vikatan.com/சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண...
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
2023 இல் நடந்தாய் வாழி வழுக்கை ஆறே என்ற பெயரில் இந்த மாரிகால ஆற்றின் வழி நடக்கும் ஒரு நடை பயணம் நடந்தது. இதன் walk path ஐ ஒரு trekking போல பிரபல்ய படுத்தினால், சாரணரும் உள், வெளி நாட்டு பயணிகளும் ஆர்வமாக கலந்துகொள்வார்கள்.
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
- இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
👆👇 ஏனைய இனங்களை பார்த்து குத்தி முறிவதில் பலனேதும் இல்லை மக்காள். இயற்கையாகவே நீங்கள் ஆப்பை செருகிகொள்வீர்கள். கொழும்பிலும், கம்பஹாவிலும் இலங்கை தமிழர் எண்ணிக்கை சதவீதம் எப்படி கூடியுள்ளது என பார்க்க ஆவல்.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
நான் எழுதிய கருத்தின் பின்னர் வசி உட்பட பலர் எழுதியவை. தாம் ஒருவரோடு, அல்லது பலரோடு பழகிய அனுபவத்தை மட்டும் வைத்து ஒட்டு மொத்த இனத்தையே எடை போடுகிறார்கள். இது 1990 இல் புலிகள் எடுத்த அதே அணுகுமுறை. அதாவது தனிமனிதர்களின் அல்லது குழுக்களின் தவறுக்கு இனத்தையே பழிகூறுவது. நாம் வாயளவில் மன்னிப்பு கேட்டாலும், பலரின் முஸ்லிம்கள் பற்றிய பார்வை 1990 இல் இருந்து அப்படியே உள்ளது என்பதை இது காட்டுகிறது. சாத்ஸ்சுக்கான பதில் - கோட்ட காலத்தில் முஸ்லிம் ஊர்காவல் படை இருக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் பலர் அரச படையுடன் சேர்ந்து இயங்கினர். அமைச்சராகவும் இருந்தனர். ஆனால் இதை 1990 காலத்தோடு ஒப்பிட முடியாது. 1990 போலன்றி இது அவர்கள் அமைப்பாக அல்லது, தனி மனிதர்களாக அரசுக்கு ஆதரவழித்த நிகழ்வு. டக்லஸ், கருணா என பல தமிழர்களும் ஆதரவழித்தனர். அதை வைத்து ஒட்டுமொத்த தமிழரை குற்றம் சொல்ல இயலாதே. புதிதாக ஒவ்வொரு வருடமும் ஒரு கதை சேர்ப்பது பற்றி ஏலவே என் கருத்தை முதலாம் பதிவிலே கூறிவிட்டேன். நீங்கள் சொல்வது உண்மையே ஆகினும் (எனது தனிப்பட்ட வாழ்வில் சுயநலமிகளை இன வேறுபாடின்றி சகல இனத்திலும் கண்டுள்ளேன்) அதனால் மட்டும் அவர்களுக்கு அவர்கள் வாழிடத்தில் இருக்கும் உரிமையை நாம் இல்லை என மறுக்க முடியாது.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
3. நான் பேசிப்பார்த்தவரை பல முஸ்லிம்களின் மனநிலை - சிங்களவரும் தமிழரும் ஒன்றே என்பதே. இது அவர்கள் மத அடிப்படையில், அனுபவ அடிப்படையில் அடைந்த முடிவு. இதில் நாம் முரண்படலாம். ஆனால் முடிவை திணிக்க கூடாது. திணிக்க முடியாது என்பதே கள யதார்த்தம்.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
கொஞ்சம் ஒரு முஸ்லீமாக இருந்து யோசித்து பாருங்கள். இது பச்சோந்திதனம் அல்ல. தம் இனத்தின் நல்வாழ்வுக்கு எது தேவை என்ற சுய நலன் மட்டுமே. சிங்களவன் எம்மைத்தான் அடித்தான். அவர்கள் ஏன் அதற்கு சிங்களவனோடு முண்ட வேண்டும்? கோட்டா காலத்தில் அவர்கள் தாக்கப்பட்ட போது நாம் பார்வையாளராத்தான் இருந்தோம் இல்லையா? சிங்களவர்-முஸ்லிம்களின் 1900 களில் ஏற்பட்ட பிணக்கை, முஸ்லிம் விரோதமாக, சிங்களவர் ஆதரவாக தீர்க்க உதவினார் என்றுதானே இராமனாதனை மனிதர்கள் வண்டி இழுத்து போனார்கள்? முஸ்லிம்கள் நாடெங்கிலும் பரந்து வாழ்கிறார்கள். எம்மைபோல் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் வடக்கு அல்லது கிழக்கில் “அடி” உடையோர் அல்ல அவர்கள். அவர்களில் பலருக்கு பேருவளையும், காலியும், வெலிகமவும், இன்ன இடங்களும்மே சொந்த இடங்கள். எனவே அவர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை. இதை எப்படி பிழை என்றோ, பச்சோந்திதனம் என்றோ கூற முடியும். அவர்கள் தமது இனநலன் கருதியே செயல்படுகிறனர். அவர்களை பொறுத்தவரை: தற்போது இருப்பது அல்லது 1948 இன் பின் இருப்பது போல இருக்க சம்மதம். அதாவது சிங்கள மேலாண்மையின் கீழ் இருக்க சம்மதம். ஆனால் தமிழர் மேலாண்மையின் கீழ் இருக்க சம்மதம் இல்லை. தமிழருக்கு ஒரு அலகு கொடுக்கின், எமக்கும் அதுபோல் வேண்டும். இதில் என்ன தவறு உள்ளது. அவர்கள் மிகதெளிவாக தமது இனநலன் சார்ந்து கூட்டு முடிவெடுக்கிறார்கள். நாம் அவர்கள் எமது இனநலனுக்கு முடிவை மாற்றி எடுக்க வேண்டும் என நினைப்பதுதான் தவறானது. பிகு 1. நாட்டை பிரித்து அதில் ஒரு துண்டை எமக்கு தாருங்கள் என எந்த முஸ்லீமும், எப்போதும் கோரவில்லை. மாறாக நாட்டை பிரிக்காமல் தமிழருக்கு இனப்பரம்பல் அடிப்படையில் ஒரு அலகை கொடுக்கின், எமக்கும் அப்படியே தாருங்கள் என்பதே அவர்கள் கோரிக்கை. அதேபோல் சிங்களவர் அவர்களை அடித்த போதும், முஸ்லிம்கள் நாமும் தமிழர் என எம்மிடம் உதவி கோரவில்லை. உங்களை போல நாமும் ஒரு சிறுபான்மை இனம் என்றே சொன்னார்கள்.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
நன்றி நன்னி. இதுவும் கூட தமிழ் தேசிய பேரினத்தில் அடங்கும் இனக்குழு எனவே முஸ்லிம்களை அழைக்கிறது. முஸ்லிம்களை பொறுத்தமட்டில் இலங்கை சோனகர், இலங்கை தமிழருக்கு நிகரான ஒரு இனம். என்பதே அவர்கள் நிலைப்பாடு. நாம் 12% அவர்கள் 10% எனும் போது, அவர்கள் வாழும் இடங்கள் அவர்களினதும் மரபுவழி நிலப்பரப்புத்தான் எனும் போது, இது நியாயமான கோரிக்கை போலவே எனக்கு படுகிறது. என்ன நாம் போராடினோம் அவர்கள் போராடவில்லை. ஆனால் போராடினோமா இல்லையா என்பதல்லவே உரிமை உள்ளதா இல்லையா என்பதன் அளவுகோல்?- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இது நான் அறியாதது. தகவலுக்கு நன்றி. ஆதாரம் தந்தால் மகிழ்வேன்.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அருமை.- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
கட்டாயம் முயல்வார்கள். 50 ஆயிரம் லோனோடு ஓடிய ஆட்களை கூட இலங்கை போய் தேடுவதாக கேள்விப்பட்டேன். ஆனால் பணமாக, கிரிப்டோவாக கொண்டு போயிருப்பின் மீட்பது கஸ்டம். அதே போல் பிள்ளைகள் பெயரில் உள்ளவையும் பறிப்பது ஈசி அல்ல. கிரிமினல் குற்றச்சாட்டு இல்லை எனில் மேலும் கஸ்டம். நாமம் வங்கிகளுக்கும், வரி கட்டும் நமக்கும்தான்.- யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
ம்ம்ம்…புரிகிறது- இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
தமிழ் கார்டியன் மிக நுணுக்கமான ஒரு கட்டுரையை எழுதியுள்ளது. தமிழாக்கம் கூகிள்: தமிழர் தாயகத்தின் மக்கள் தொகை வீழ்ச்சி - இலங்கையின் 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு The Tamil homeland’s falling population – Sri Lanka’s 2024 census இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிதாக வெளியிடப்பட்ட முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள், மக்கள் தொகை இழப்பு மற்றும் தேக்கநிலையின் அடிப்படையில் தமிழ் வடகிழக்கு, குறிப்பாக வன்னிப் பகுதி, தீவின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக எவ்வாறு உள்ளது என்பதை விளக்குகின்றன. இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையின் “மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு - 2024 முதற்கட்ட அறிக்கை”யின்படி, வன்னியின் மையப்பகுதியை உருவாக்கும் மூன்று மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகியவை முழு தீவிலும் மிகக் குறைந்த மக்கள் தொகை எண்ணிக்கை, மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் அடர்த்தி விகிதங்களைக் கொண்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் பல தசாப்தங்களாக நீடித்த ஆயுத மோதலின் பேரழிவு தாக்கத்தை பிரதிபலிக்கின்றன, இதில் 2009 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் நடந்த இனப்படுகொலை மற்றும் இன்றுவரை நீடிக்கும் இராணுவமயமாக்கல் ஆகியவை அடங்கும். 122,542 குடியிருப்பாளர்களுடன் முல்லைத்தீவு முழு தீவின் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகையைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து மன்னார் 123,674 மக்கள்தொகை மற்றும் கிளிநொச்சி 136,434 மக்கள்தொகை கொண்டவை. வவுனியாவில் 172,257 மக்கள் தொகை மட்டுமே பதிவாகியுள்ளது. தீவு முழுவதும் மிகக் குறைந்த மக்கள் தொகை நான்கு மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளது, அடுத்த அருகிலுள்ள மாவட்டமான திருகோணமலையில் பாதிக்கும் குறைவான மக்கள் தொகை 442,465 ஆகும் - இது தமிழர் தாயகத்தின் மற்றொரு மாவட்டம். தமிழர் தாயகத்தின் வளர்ச்சி விகிதமும் தேக்க நிலையில் உள்ளது. 2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், வவுனியா மாவட்டம் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது - வெறும் 0.01%. ஈழத் தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணம், அந்தக் காலகட்டத்தில் அடுத்த இழந்த வளர்ச்சி விகிதத்தை வெறும் 0.14% ஆகப் பதிவு செய்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் தீவில் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே இரண்டு மாவட்டங்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளன. இந்த சாதனை 1981 மற்றும் 2012 க்கு இடையில் நிகழ்ந்தது, அப்போது இரண்டு மாவட்டங்களும் முறையே -0.74% மற்றும் -0.18% வளர்ச்சியைப் பதிவு செய்தன. இது கிட்டத்தட்ட முற்றிலும் வெகுஜன இடப்பெயர்ச்சி மற்றும் அரச வன்முறை காரணமாகும். தமிழர் தாயகத்தின் வளர்ச்சி விகிதமும் தேக்க நிலையில் உள்ளது. 2012 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், வவுனியா மாவட்டம் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது - வெறும் 0.01%. ஈழத் தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணம், அந்தக் காலகட்டத்தில் அடுத்த இழந்த வளர்ச்சி விகிதத்தை வெறும் 0.14% ஆகப் பதிவு செய்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் தீவில் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே இரண்டு மாவட்டங்கள் என்ற பெருமையையும் பெற்றுள்ளன. இந்த சாதனை 1981 மற்றும் 2012 க்கு இடையில் நிகழ்ந்தது, அப்போது இரண்டு மாவட்டங்களும் முறையே -0.74% மற்றும் -0.18% வளர்ச்சியைப் பதிவு செய்தன. இது கிட்டத்தட்ட முற்றிலும் வெகுஜன இடப்பெயர்ச்சி மற்றும் அரச வன்முறை காரணமாகும். கொழும்பு போன்ற பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,500 பேருக்கு மேல் உயர்ந்தாலும், வடகிழக்கில் உள்ள தமிழ்ப் பகுதிகள் மக்கள் தொகை குறைவாகவே உள்ளன. முல்லைத்தீவின் சமீபத்திய வளர்ச்சி விகிதம் 2012 முதல் 2024 வரை 2.23% ஆக உயர்ந்திருந்தாலும், முழு தீவிலும் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி மாவட்டம் முல்லைத்தீவு ஆகும், சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் மட்டுமே உள்ளனர். அதைத் தொடர்ந்து மன்னார் (66/கிமீ²) மற்றும் வவுனியா (96/கிமீ²) உள்ளன. ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களின் போது கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் இறப்புகள் ஏற்பட்ட மற்றொரு தளமான கிளிநொச்சி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 115 பேருடன் ஐந்தாவது மிகக் குறைந்த இடத்தில் உள்ளது. கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகியவை கூட மக்கள் தொகை அடர்த்தி தரவரிசையில் கீழ் பாதியில் உள்ளன, இது தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இராணுவமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் வளர்ச்சியின்மை ஆகியவற்றின் நீண்டகால மக்கள்தொகை தாக்கத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வடகிழக்கு பின்தங்கிய நிலை ஒட்டுமொத்தமாக, தீவின் மக்கள்தொகையில் வடக்கு மாகாணம் வெறும் 5.3% மட்டுமே, கிழக்கு மாகாணம் 8.2% மட்டுமே, தீவின் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இங்கு வசிக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் வளர்ச்சியின்மையின் விளைவாக மட்டுமல்லாமல், பல தசாப்த கால மோதல்கள், பாரிய அட்டூழியங்கள், கட்டாய இடம்பெயர்வு மற்றும் இராணுவமயமாக்கலையும் பிரதிபலிக்கின்றன. ஆயுத மோதலின் பேரழிவு எண்ணிக்கை, குறிப்பாக பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களைக் கொன்று லட்சக்கணக்கானவர்களை இடம்பெயர்த்த 2009 இனப்படுகொலை, இப்பகுதியின் மக்கள்தொகையை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. முறையான மீள்குடியேற்றம் இல்லாதது, தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களில் முதலீடு இல்லாதது ஆகியவை வன்னியிலும் தமிழர் தாயகம் முழுவதிலும் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தியுள்ளன. https://www.tamilguardian.com/content/tamil-homelands-falling-population-sri-lankas-2024-census- இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
போற போக்கை பார்த்தால் - தெற்கில் என் பி பி தோற்றாலும் வடக்கில் வெல்லும் போல இருக்கிறது. கிழக்கில் கஸ்டம். அங்கே தமிழர்களும், முஸ்லிம்களும், தத்தம் இனச்சார்பு அரசியலின் அவசியத்தை, அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தையும் தாண்டி, புரிந்துள்ளார்கள் என நினைக்கிறேன். வடமாகாண சபையை என் பி பி கைப்பற்றினால் - யாழ்கள ஊர்புதினம் பகுதியில் comments ஐ disable பண்ணி விடலாம்😂. வட்டுகோட்டை தீர்மானத்தோடு ஆரம்பித்த வட்டம் (பூச்சியம்) வந்த இடத்துக்கே மீள வந்து தன்னை பூர்த்தி செய்த இடமாக அந்த வெற்றி இருக்கும். வட மாகாணசபையை என் பி பி கைப்பற்றினால் - முதலாவது தீர்மானம்… மாகாணசபை ஒழிப்பை கோருவதாக அமையக்கூடும். பிகு கடக்கும் ஒவ்வொரு வருடமும் 1987 இல் எந்த பெரிய தவறை விட்டோம் என்பதை ஒவ்வொரு மடங்கு அதிகரித்தே, காட்டி செல்கிறது.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இப்படியாக இருதரப்பும், நம்ப நட, நம்பி நடவாதே அடிப்படையில் காணி உட்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை எட்ட வேண்டும். முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெருகுகிறார்கள், என்றால் அது அவர்கள் இஸ்டம். முடிந்தால் நீங்களும் பெருக்குங்கள். அதேபோல் மகிந்தவின் இரெண்டாம் ஆட்சியில் அபாயா களைவு உச்சத்தில் இருந்த போது - மிக கீழதரமாக யாழில் பேரினவாதிகளின் செயலை ஆதரித்து எழுதியதை எல்லாம் நாமும் நினைத்து பார்க்க வேண்டும். கொழும்பில் பொட்டை அழித்து விட்டு பஸ் ஏறிய காலத்தை கடந்து வந்த நாமே, அபாயா களைவை ஆதரித்து எழுதியது அசிங்கமானது. அண்மையில் கூட செருப்புதைக்கும் முஸ்லிம்களிடம் தங்கம் ஏது என ஒரு பொன்மொழி இங்கே உதிர்க்கப்பட்டது. இது முஸ்லிம்கள் மீது மட்டும் அல்ல, கிழக்கு தமிழர்கள், மலையக, மேலக தமிழர்கள் மீதும் கொட்டப்படும் விசம்தான். சில சமயங்களில் வடக்கு கிறிஸ்தவ தமிழர் மீதும் கூட கொட்டப்படும். நாம் ஒரு இனஒதுக்கலுக்கு உள்ளாகும் இனம் என்பதால் மட்டும், நாமே ஒரு ஒதுக்கும் இனம் என்பது இல்லை என்றாகி விடாது.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அடுத்த முஸ்லிம் இளைய சந்ததி மேலே நன்னி எழுதியது தொடர்பாக சிந்திக்க வேண்டும். நினைவுகூரல் என்பது never again என்ற அடிப்படையில் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். Never again என்றால் பரஸ்பர வதைகளுக்கு மட்டும் அல்ல. 1990 இல் இனமுறுகலுக்கு தூபம் போட்ட, காணி அடிப்படையிலான பிண்ணக்கு, 60,70 களிலேயே கிழக்கில் ஆரம்பித்து விட்டது. இன்றும் அப்படியே இருக்கிறது. அஷ்ரப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் - 70களில் புதுக்கடையில் வக்கீல் அலுவலகம் வைத்திருப்பாராம். ஜூனியர் தமிழ் வக்கீல்கள் தேனீருக்கு காசில்லை எனில், கையில் உள்ள ஒரு பழைய சுதந்திரன் பேப்பருடன் அவரின் அலுவலகம் போனால் காணுமாம். சுதந்திரன் தமிழ் தேசிய அபிலாசைக்கு எதிரான பத்திரிகையாம். அதை கண்டது சினம் கொள்ளும் அஷ்ரப், இந்த குப்பையை ஏன் வாசிக்கிறீர்கள் என கடிந்து கொண்டு, சிலமணிநேரம் தமிழரசு கட்சியின் கொள்கை பற்றி விளக்கம் கொடுப்பாராம். கூடவே வடையும் தேனீரும். இதே அஷ்ரப். ஒரு பழைய பேப்பரை ரயிலின் கதவடியில் வச்சு, அதன் மேல் அமர்ந்து கிழக்கை விட்டு வெளியேற நேர்ந்ததாக பின்னாளில் மேடையில் பேசி உள்ளார். இந்த கசப்புகளில் இருந்து அவர்களை மீட்டு, சகோதரதுவத்தை வளர்க்க முஸ்லிம் இளையோர் முன்வரல் வேண்டும். அதே போல் தமிழ் இளையோர் மீதும் ஒரு கடமை உள்ளது. என்னை பொறுத்தவரை தமிழர்கள் முதலில் முஸ்லிம்களை வந்தான் வரத்தான் என நினைப்பதையும், அவர்கள் ஒரு இனமே அல்ல என மறுதலிப்பதையும் கைவிட வேண்டும். இதுவே இந்த பிரச்சனையின் ஆரம்பம். நீங்கள் என்ன நினைத்தாலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் கிட்டதட்ட ஈழவம்சாவளி தமிழரை நெருங்கி விட்ட ஒரு இனக்குழு. அவர்களை இலங்கை அரசியலமைப்பே அப்படி ஏற்கிறது. இதை நாம் மறுதலித்து அவர்களை எம்முள் அடக்கும் வேலை 80க்கு பின் ஒருபோதும் சரி வராததொன்று. ஆகவே அவர்களை ஒரு சக இனமாக மதித்து பேச்சுவார்த்தைக்கு போவதே நடக்ககூடியது. உங்கள் அங்கீகாரம் அவர்களுக்கு தேவையே இல்லை. ஆனால் இதை அங்கிகரிக்க மறுத்தால் ஒரு அடி கூட நகர முடியாது.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
😂 வாலி சார் நீங்க அடிவாங்கணுண்னு முடிவெடுப்பது உங்கள் சுதந்திரம் வாலி சார் 😂 சரியான முன்னோக்கிய பார்வை.- யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
2005 பேப்பரில் சுற்றி உள்ளது எண்டால் - இது அந்தகாலத்தில் பதுக்கி வைத்ததாய் இருக்கும்.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
அதேபோல் புலிகள் செய்தார்கள் நாம் செய்யவில்லை என தமிழர்கள் இதில் தப்ப முனைவது சட்டப்படி சரியாகலாம், மனச்சாட்சிப்படி அல்ல. ஐலண்ட் எப்போதும் புலிகளை ஏற்காத தமிழர் என நினைக்கிறேன். ஆனால் நாம் 90% மக்கள் அப்படி அல்ல. புலிகளை எம் பிள்ளைகளாக, தலைமையாக, பிரதிநிதிகளாக, காவலர்களாக ஏற்ற நாம் அப்படி அவர்கள் பிழைகளை கை கழுவ முடியாது. அதே போலத்தான் முஸ்லீம்களுக்கு ஜிகாத் குழுக்களும். புலிகள் அளவுக்கு கட்டுக்கோப்பாக இல்லை எனிலும், சரியோ பிழையோ அவர்கள் கிழக்கில் முஸ்லிம்களை பாதுகாக்க என ஆரம்பித்த ஆயுத குழுவே. பின்னாளில் நடந்த காத்தான்குடி சம்பவம் போன்றவை அப்படி குழுக்கள் அமைந்ததன் நியாயத்தை காட்டியும் நின்றன. ஜிகாத்தில் ஆயுதம் எடுத்தவர்கள் பலர் உண்மையான இன உணர்வினர். பலர் பின்னாளில் எம்பிகள். ஆனால் இலங்கை அரசு அவர்களை கையாண்ட விதம், புலிகள் போல அன்றி அவர்களை ஈ என் டி எல் எப் போன்ற ஒரு கட்டாகாலி அமைப்பாக்கியது. கூடவே இயல்பான மதவெறியும் சேர்ந்துகொள்ள - நாம் வெறுக்குக் ஜிகாத் காடைகள் உருவாகினர். ஆகவே முஸ்லிம்களும் ஜிகாத்தை ஏதோ வானத்தில் இருந்து குதித்தோர் என ஒதுக்க முடியாது. புலிகளின் தவறுக்கு இன்றைய தமிழர் தலைமையும், ஜிகாத்தின் தவறுக்கு இன்றைய முஸ்லிம் தலைமையும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதே சரியாகும். உண்மையில் தலைவர் - ஹக்கீம் (அஷ்ரப் அல்ல) காலத்தில் இது பற்றி மன்னிப்பு கோரிய புலிகள், கூடவே ஜிகாத்தின் செயல்களுக்கு ஹக்கீம் அடையாள மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இருக்க வேண்டும். கிழக்கில் அவர்கள் செய்த அட்டூழியத்தின் நகலை சந்திக்க வந்த ஹக்கீமீடம் கொடுத்து இருக்க வேண்டும். இருதரப்பிலும் விட்ட பெரும் பிழைகளே முஸ்லிம்கள் அநியாயமாக வடக்கை விட்டு வெளி ஏற்றப்பட்டதன் சூழமைவு. இந்த சூழமைவு ஒரு போதும் வெளியேற்றிய மிலேச்ச, காட்டுமிராண்டி செயலை நியாயப்படுத்தாது. ஒரு நிழல் அரசு செய்திருக்க கூடாத summary punishment கூட்டு தண்டனை அது. ஆனால் யாழ்ப்பாண முஸ்லிமின் வலியும், வீரமுனை தமிழனின் வலியும் ஒன்றேதான். உளப்பூர்வமாக இரு தரப்பும் மன்னிப்பு கேட்க இப்போ ஒரு தடையும் இல்லை. கடந்த காலத்துக்கு மன்னிப்பு மட்டும் அல்ல, யாழில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை தமிழரும், கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலில் முஸ்லிம்களும் பரஸ்பரம் போடும் முட்டுகட்டைகளை தளர்த்தி நடப்பிலும் நல்லெண்ணப்படி நடக்கலாம். ஆனால் இரு இனங்களும் அடிப்படையில் ஒரே அடியில் இருந்து வந்தவை, ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இவர்கள் இப்படி வாழ வழி இல்லை என்பதே என் கருத்து.- அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
மிகவும் காத்திரமான கருத்து. நான் அவர்களின் வலியை இல்லை என சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய சேர்க்கையை கொண்டு வருவதுதான்…. இவர்களின் தலைவர்கள் இன்னும் கொஞ்சம் இதை பெருபித்து காட்டவிளைகிறார்களோ என எண்ண வைக்கிறது.- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
மிகவும் மேம்போக்காக நீங்கள் போட்டுள்ள கேள்வி கொத்தை வாசித்ததன் பிரகாரம் - இது ரஸ்யா, பெலரூஸ் போன்ற நாடுகளின் மீது உக்ரேன் போரின் பின்னதாக போடப்பட்ட தடை சம்பந்தமானதாகவே தெரிகிறது. ஆனால் - தப்பி ஓடியவர்ரை மீள கொண்டு வருவது extradition நாடுகடத்தல் சம்பந்தபட்டது. தமிழில் சகலதையும் நாடு கடத்தல் என பொதுவாக அழைக்கிறோம். ஆனால் பிரித்தானிய சட்டத்தின்படி இவை மூவகை படும். ரிமூவல் - நாட்டில் வசிக்கும் உரிமை இல்லாதவரை நாட்டை விட்டு வெளியேற்றல் டிபோர்டேஷன் - 12 மாதத்துக்கு மேல் குற்றம் தீர்க்கப்பட்டவரை நாட்டை விட்டு வெளியேற்றல் எக்ஸ்டிரடிசன் - ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு, இன்னொரு நாட்டிற்கு வந்தோரை, குற்றம் சாட்டப்பட்ட நாட்டுக்கே திருப்பி அனுப்புதல். இதில் எக்ஸ்டிரடிசன் இருவழி பாதை. அதாவது ஒரு பிரித்தானிய பிரசை, அல்லது பிரிதானியாவில் தங்கும் உரிமை உள்ளவரை வேறு ஒரு நாடு, வழக்குக்காக தம்மிடம் அனுப்பும் படியும், அதேபோல் வேறு ஓர் நாட்டில் உள்ளவரை தம்மிடம் அனுப்பும் படியும் பரஸ்பர கோர்ட்டுகள் தமக்கிடையே கோரிக்கை வைக்கலாம். ஆனால் இப்படி நடக்க நாடுகள் இடையே எக்ஸ்டிரடிசன் டீர்ட்டி எனப்படும் இருதரப்பு ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். உதாரணமாக இவர் இலங்கையில் போய் ஒழிந்தால் - இங்கிலாந்து ஹைகோர்ட் ஒரு கோரிக்கையை இலங்கை ஹைகோர்ட்டுக்கு அனுப்ப, அவர்கள் அதை பரிசீலித்த்து, சரியான கோரிக்கை எனில் உள்நாட்டு மந்திரி, பொலிஸ், இமிகிரேசனுக்கு ஆளை பிரித்தானியா அனுப்பும்படி ஆடர் போடுவார்கள். மிக அரிதாக ஒரு ஹைகோர்ர்ட்டின் விண்ணப்பத்தை, இன்னொரு நாட்டின் ஹைகோர்ட்டோ, அல்லது உள்நாட்டு மந்திரியோ நடைமுறைபடுத்தாமல் தவிர்க்கலாம். அண்மையில் அதீத மனவளர்ச்சி பிரச்ச்னையான அஸ்பேகஸ் சின்ரோம் உள்ள பதின்மவயதினன் ஒருவரை, ஹேக்கிங் குற்றசாட்டில் அமரிக்கா அனுப்ப வேண்டும் என பிரித்தானிய கோர்ட் முடிவு செய்தபோதும், தன் தனிஉரிமையை பயன்படுத்தி, பிரித்தானிய உள்துறை மந்திரி இதை செய்யாமல் விட்டார். அதேபோல் அமெரிக்காவுக்கு அனுப்பும் போது “மரணதண்டனை நிறைவேறாது” என்ற உறுதிமொழியை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதும் வழமை. இப்படியான எக்ஸ்டிரடிசன் ஒப்பந்தத்தை பிரித்தானியா அநேகமாக சகல நாடுகளிடமும் போட்டுள்ளது. விதிவிலக்குகள், ரஸ்யா, வடகொரியா, ஈரான், சோமாலியா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இன்னும் சில நாடுகள். ஜெமினி இப்படி சொல்கிறது. Countries with no extradition treaty Afghanistan, Algeria, Andorra, Angola, Armenia, Azerbaijan, Belarus, Bhutan, Bosnia and Herzegovina, Burkina Faso, Cambodia, Cameroon, China, Cuba, Georgia, Japan, Kazakhstan, North Korea, Russia, Somalia, Syria, and Vietnam. Countries that do not extradite their own citizens to the UK China, Russia, Croatia, Finland, France, Germany, Greece, Latvia, Poland, Slovakia, Slovenia, Sweden, and Turkey. அதேபோல் UAE உடன் ஒப்பந்தம் இருந்தாலும் அதை அமல்படுத்துவது மிக கடினமானது. பிரேசிலில் போய் ஒரு பிரேசிலியன் ஆளை மணம் முடித்தால், அங்கும் திருப்பி அனுப்ப மாட்டார்கள். அதே போல் மேலே சொன்ன நாடுகளிடம் ஒப்பந்தம் இல்லாவிடிலும், தனி வழக்குகளை அனுப்பலாம் case by case, individual consideration - அடிப்படையில். ஆனால் திரும்பி எடுப்பது மிக மிக கடினம். கவனிக்க: இப்போதுவரை இது ஒரு சிவில் வழக்கு, ஒரு சிவில் விசாரணை என்ற அளவில்தான் உள்ளது. இது இப்படியே முடியவே வாய்ப்பு அதிகம். நாட்டுக்கு ஆளை மீள கொண்டுவர - அதாவது extradite பண்ண அது ஒரு கிரிமினல் வழக்காக இருத்தல் அவசியம். ஆகவே இப்போதைக்கு (அநேகமாக எப்போதும்) சஞ்சீவும், ஆரணியும் அவர்கள் சுருட்டிய பணமும் - நலம், நலமறிய ஆவல் என்ற நிலைதான் 😂. ஒருவேளை சிவில் கோர்ட் தண்டம் அறிவித்தால், அதை இவர்கள் இருக்கும் நாட்டின் கோர்ட் மூலம் recover பண்ண முயலாலாம். இதனால்தான் சொன்னேன் - கடைசி 18 மாதங்களிலாவது, அடிப்பதை அடித்து கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடுவோம் என இவர்கள் இருவரும் திட்டமிட்டு செய்த களவு இது.- கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
இதைத்தான் அழகு தமிழில் உள்மனக்கிடக்கை என்பார்கள்😂. பின்னாளில் மனோதத்துவ நிபுணர் சிக்மன்ட் ப்ரோட் தனது Freudian concept இல் ஓர் அங்கமாக முன்வைத்த Freudian Slip என்பதும் இதுவே😂. பிகு காலையில் அவசர வாசிப்பில் தலையங்கம் கண்ணில் பட்டது… நானும் கோஷான் என்றே வாசித்தேன். நம்மதான் யாழில் பிரபலமாச்சே😂, நம்ம (நியாபகார்த்தமா?😂) பெயரை ஏதோ ஒரு கப்பலுக்கு வச்சிருக்காங்க போல எண்டு விட்டுவிட்டேன்😂. மைன்ட்வாய்ஸ் அநியாயமா ஒரு எழுத்தில் எல்லாம் மாறிப்போச்சு. இல்லாட்டில் கப்பல் என்னதுதான், மம்மி டாடி எல்லாம் கனடாவிலதான் லிவிங்ஸ்டன் எண்டு ஏதாவது உருட்டி இருக்கலாம்😂 - இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.