Everything posted by goshan_che
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அது மேற்கோபோபியா நோய்தாக்கம்.
-
பிரம்மாண்டமான கட்சி.. வரப்போகுது பாருங்க.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்.. தவெக? நாம் தமிழர்? எந்த கட்சி?
பிரம்மாண்டமான கட்சி.. வரப்போகுது பாருங்க.. எடப்பாடி தந்த சர்ப்ரைஸ்.. தவெக? நாம் தமிழர்? எந்த கட்சி? Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 11:08 [IST] காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்? இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும். அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். என்ன கட்சி எடப்பாடி பழனிசாமி கூறிய கட்சி எது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் வராது. விசிக, சிபிஎம்க்கு இப்போதுதான் எடப்பாடி அழைப்பே விடுத்துள்ளார். அதனால் அவர்கள் இல்லை. அமமுக கூட்டணியில் உள்ளது. இது போக நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உள்ளது. இதில் நாம் தமிழர் பாஜகவை எதிர்க்கும் கட்சி. ஆனால் நாம் தமிழர் - பாஜக இடையே கூட்டணி உருவாக போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் நடத்திய மீட்டிங் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இதனால் அந்த கட்சி நாம் தமிழரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இன்னொரு பக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடன் செல்கிறதா என்பதும் கேள்விதான். ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். இது எடப்பாடிக்கு ஏற்றதாக இருக்காது. எடப்பாடி தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்கிறார். இன்னொரு பக்கம் அவர் பாஜக உடன் சேர்வாரா என்பது சந்தேகம். ஏனென்றால் அவர்கள்தான் விஜயின் கொள்கை எதிரி. இதனால் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/a-big-party-is-going-to-join-in-our-nda-alliance-wait-and-see-says-edappadi-palanisamy-721053.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி த வெ க, பாஜக உள்ள கூட்டணிக்கு போல வாய்ப்பில்லை. கொள்கை எதிரி என மேடை போட்டு அறிவித்து விட்டு, அதை பலதடவை சொல்லி விட்டு - அவர்களிடம் கூட்டு வைக்கும் அளவுக்கு விஜை பிஸ்கோத்து அல்ல என்றே நினைக்கிறேன். நா த க வாக இருக்கலாம். அண்ணனுக்கு யு டர்ன் அடிப்பது ரஸ்கு சாப்பிடுவது போல். அத்தோடு ஆர் எஸ் எஸ் சுக்கும் அண்ணனுக்கும் கொள்கையில் அதிக வேறுபாடில்லை. ஆனால் பிரமாண்டமான கட்சி என்பதுதான் இடிக்கிறது🤣.
-
கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி
கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி Shyamsundar IUpdated: Thursday, July 17, 2025, 13:26 [IST] தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல். முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பதில் இந்த நிலையில்தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம். கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார். எடப்பாடி பதிலடி முன்னதாக தினகரனின் இந்த பேச்சு தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், அமித் ஷா சென்னைக்கு வந்த போதே இதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது. அதோடு இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் துன்று அமித் ஷாவே அறிவித்துவிட்ட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியபடிதான்.. அதை தாண்டி யார் பேசினாலும் அது சரியில்லை.. அமைச்சர் பேச்சை தாண்டி யார் என்ன சொன்னாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து, என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். அமித் ஷா சொன்னது என்ன? தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாகடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. நாங்கள் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது., என்றது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/it-is-nda-rule-not-aiadmk-rule-says-annamalai-to-edappadi-palanisamy-on-alliance-721157.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி தேர்தல் முடிந்ததும் எடப்பாடியும் இருக்க மாட்டார் அதிமுகவும் இராது. தன்னையும், கட்சியையும் காப்பாற்ற ஒரே வழி - தவெக கூட்டணிதான். ஆனால் இப்போ பாஜகவை கழட்டி விட்டால் - வழக்குகள் சரமாரியாக பாயும். டெலிகேட் பொசிசன்.
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
இந்த அமைபினர்க்கு உள்ள தைரியம் ஒரு தமிழ் எம்பிக்கும் இல்லை.
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
இந்த பிந்தங்கல் விஞ்ஞான, கணித பிரிவுகளில் அதிகம். கணக்கியல், கலை பிரிவில் ஏ எல்லிலும் பெண்கள் ஓரளவு சோபிப்பார்கள். யூகேயிலும் STEM எனப்படும் விஞ்ஞான பிரிவுகளில் பெண் பிள்ளைகளின் ஆர்வம் குறைவு - இதை அதிகரிக்கும் ஒரு வேலை திட்டத்தில் நான் ஒரு secondment செய்துள்ளேன். ஏதோ ஒரு அல்லது பல காரணிகளின் கூட்டு - விஞ்ஞான படிப்பில், 2ம், 3ம் தரநிலையில் பெண்கள் பிரகாசிக்காது விட காராணமாக இருக்க கூடும். இந்த காரணிகள் nature + nurture ஆக இருக்கும் என நினைக்கிறேன்.
-
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
- கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
Gary இதைவிடாது போராட வேண்டும். தனது வாக்காளர் ஒருவருக்கு பா ஊ இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம். அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான். இது இலங்கையின் சதி. ஆங்கிலேய வழி வந்த நாடுகளில் the PM has full confidence என சொல்லிய பலர், அநேகமாக சில வாரங்களுக்குள் வீட்டுக்கு போவதே அதிகம். இவருக்கு இப்படி நிகழாது இருக்க வேண்டும். ஊரில் உள்ள தமிழ் எம்பிகள் கூட்டாக ஒரு ஆதரவு கடிதத்தை கனேடியன் ஹைகொமிசனரிடம் கொடுக்கலாம்.- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்கிலாந்தின் வேகபந்து வீச்சாளருக்கு சமனாக அல்லது சற்று மேலாக பும்ரா, டீப், கிருஸ்ணா கூட்டு இருப்பதும், தற்போதைய வரட்சி காலநிலையும் காரணம் என நினைக்கிறேன். ஆனால் எட்பாஸ்டன் மைதானம் தயாரித்தவரின் தவறு என ஸ்டோக்ஸ் தனிப்பட்டு விமர்சித்தாராம். ஹெடிங்லி, லோர்ட்ஸ் இரெண்டும் இரு அணிகள், பேட்ஸ்மன், போலர்களுக்கு சமவாய்ப்பை வழங்கின. மான்செஸ்டர் மழைக்கு புகழ் போன இடம். ஸ்பின்னும் கிடைக்கும். பார்க்கலாம். இங்கிலாந்து டவுசனை கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஜடேஜா மட்டும்தான். ஓவல் இந்தியாவுக்கு வாய்பாகவே (எட்ஜ்பாஸ்டன் போல) இருக்கும் என நினைக்கிறேன்.- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
பெடியள் உப்பிடித்தான் ஓல் எல் ல சும்மா பம்பல் அடிப்பாங்கள்… ஆனால் ஏ எல் எண்டதும் விட்டு விளாசுவாங்கள். பெண்பிள்ளைகள் ஓ எல் நல்ல விலாசம் காட்டுவினம், ஆனால் ஏ எல் ல பெரிதா இராது. இது காலாகாலமாக நடக்கும் யதார்த்தம்.- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
தொடர் அருமையாக போகிறது. 3ம் டெஸ்ட் தேவையில்லாமல் இங்கிலாந்தை சீண்டி இந்தியா வாங்கி கட்டி கொண்டது. அதுவும் போலிங் போடும் போது சண்டித்தனம் காட்டிய சிராஜ் கடைசியில் துரதிஸ்டவசமாக அவுட் ஆகியமை - poetic justice 🤣. 2வது டெஸ்ட் ஆகிய பெர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்ட்டனில் நடந்த ஆட்டத்தை 4,5 ம் நாட்கள் போய் பார்த்தேன். என்ர லக்குக்கு இந்தியா வென்று விட்டார்கள். இந்திய ரசிகர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்து எனக்கு ஒரே காண்டு 🤣. ஆனால் நாலாம் நாள் கில், பாண்ட் அடித்த அடியை காண கண்கோடி வேண்டும். அதேபோல் ஆகாஷ் டீப் 5 நாள் பந்து வீச்சும் -அகோரம். ஆனால் 5ம் நாள் மழை உதவியோடு ஒரு நல்ல பார்ட்னசிப் போட்டிருந்தாலே, 2ம் டெஸ்டில் இந்தியாவை வெல்லாமல் தடுத்திருக்க முடியும். பார்ப்போம் அடுத்த மான்செஸ்டர், இலண்டன் ஒவல் போட்டிகளுக்கும் டிக்கெட் எடுத்து வைத்துள்ளேன். எனது லக் வேலை செய்யாது என நம்புவோம்🤣.- நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
உண்மைதான். இங்கே வீதிகளின் மேலே ரயில் பாலம் இருப்பின் அந்த இடத்தில் வீதி இறங்கி செல்லும், அவை வெள்ளத்தில் நிரம்பும் போது, அவற்றூடு காரை செலுத்தி எஞ்சினை நாசாமாக்குவர் பலர். ஒரு இலங்கை பயணத்தில் புத்தளத்தில் இருந்து மன்னார் அரிப்பு பகுதியை ரிசார்ட் போட்ட கள்ள ரோட்டால் அடைய முயற்சித்தோம், வெள்ளம் அதிகம் என. சொல்லி நண்பன் ஒர் அளவுக்கு அப்பால் போகாமல் திரும்பி வந்து மடுவால் சுத்தி கொண்டு போனோம். அப்போ நண்பர் அதிகம் பயப்படுவதாக தோன்றினும். இப்போ அதுவே சரி எனபடுகிறது.- நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
யூகேயிலும் இப்போ சுருதி மாற தொடங்கிவிட்டது. உலக அளவில் 1% க்கும் குறைவாக உலகவெப்பமாதலுக்கு காரணமான நாம் என்ன செய்தாலும் ஒன்றும் ஆகாது. பணத்தை மீள் உருவாக கூடிய சக்திகளில் பாவிப்பதை விட வெள்ளம், அதீத வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் விடயங்களில் செலவிட வேண்டும். இப்படியான கதைகள் மெதுவாக வலுபெற்ய்லுகிறன.- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
நானும் எப்போதும் ஜோக் அடிக்கும் பேர்வழிதான் அல்வாயான். ஆனால் இந்த திரி ஒரு சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் பற்றியது. இடம், பொருள், ஏவல்.- சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
எந்த வித முன் ஆயத்தமும், சரிவருமா, ஏது நிலை என்ன என்ற ஆராய்ச்சியும் செய்யாமல், இந்தியாவின் கருத்து என்ன என அறியாமல், தனி நாட்டு கொள்கையை முன் வைத்து, மக்களை அதன்பால் ஒன்றிணைத்தது. இதன்பால் இளைஞர்களை ஒருங்கிணைத்தது. போகாத ஊருக்கு வழிகாட்டி உசுப்பேத்தியது. இந்தியா அது சரிவராது என உணர்த்திய பின்னும், அதை உணர்ந்த பின்னும், உடனடியாக மக்களிடம் திரும்பி அதை வெளிப்படையாக சொல்லி, தனி நாட்டு கோரிக்கையை கைவிடுகிறோம், ஏன் கைவிடுகிறோம் என்பதை விளக்கி, அந்த அடிப்படையில் வாங்கிய பா ஊ கதிரைகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. மாறாக கொழும்பிலும், சென்னையிலும் போய் ஒழிந்து கொண்டார். தனிநாட்டு கோரிக்கையே நடைமுறை சாத்தியமில்லை என தெரிந்துகொண்டு, அதை விட சாத்கியமில்லாத ஆயுத போராட்டம் மூலம் அதை அடையும் ஆரம்ப முயற்சிகளை உருவேற்றி, உசுப்பேற்றி வளர்த்தார். மாற்று அரசியல்வாதிகளை துரோகிகள் என பட்டியல் இட்டு, அரசியல் கொலை கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். அரசியல் கொலைகளை செய்தவர்களுடன் தொடர்பில் இருந்தார் ஈற்றில் அவரும் அதற்கே பலியானார். விடுதலை இயக்கங்களை போராளிகளை தன் அரசியல் இலாபத்துக்கான பீரங்கி சக்கைகள் cannon fodder போல் பாவிக்க முனைந்தார். இயகக்க்கள் இடையே சைக்கிள் ஓடினார். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அநியாயங்களை அடியோடு மறுத்து வெள்ளை அடித்தார். தன் மனைவி, பிள்ளைகளை அரசியல், போராட்ட-இராணுவ பதவிகளில் போட்டு ஒரு வாரிசு அரசியலை ஆரம்பித்தார். தனிபட்ட காரணம், பதவிக்காக இராஜதுரையை அவரின் ஊரிலேயே தோற்கடிக்க முனைந்து, அவரின் வெளியேற்றம் மூலம் வடக்கு-கிழக்கு பிரிவினைவாதத்தை கூர்மைபடுத்தினார். சம்பந்தர் செய்த நாச அரசியலை போல 10 மடங்கு செய்தவர் அமிர். ஆனால் சுட்டு கொல்லபட வேண்டியவர் அல்ல.- பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
எரோபிளேன் எல்லாம் ஓட்டத்தெரியும், ஆனால் கூகிள் மேப் பார்க்க தெரியாதோ🤣- நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
இருவரும் நலம் என்பதில் ஆறுதல். ஏனையவர்களும் நலமாய் இருக்கட்டும். புவி வெப்பமயமாதலை கேள்விக்கு உள்ளாக்கும் நாட்டில் இப்படி அடிக்கடி சேதம் வருவது துன்பியல்-நகைச்சுவை (tragic-comedy).- 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
இப்படியான திரிகளில் அறுவை ஜோக்குகளை தவிர்க்கலாமே?- சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
பிகு அமிர்தலிங்கம் இருந்த கட்சி - அதுவே நினைவு தினம் அனுஸ்டிக்கும் நிலைக்கு வந்து விட்டது - ஆகவே அமிரை நினைவு கொள்ள முடியாமல் போய் இருக்கலாம், ஆனால் அவரின் கட்சிக்கு அப்பாலும் 35 ஆண்டுகளாக அமிர் நினைவுகூரப்படுகிறார் என்பதே உண்மை. அமிர் வரலாறின் குப்பை தொட்டிக்கு உரியவர் என்பதே என் நிலைப்பாடும். ஆனால் லைன்சன்ஸ் எடுக்காமல் ஏரோபிளேன் ஓட்டினாலும், உண்மை ஒன்றுதான்🤣.- சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் ந...யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் நினைவுப் பேருரை நிகழ்வுமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கி...👆இது 2023 இல். 👇 இது 2 நாள் முன்பு Tamilwinஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!...இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36...- “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
- அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!
பாராட்டுக்கள். இது சம்பந்தமாக வரும் சகல சட்ட, சட்டத்துக்கு புறம்பான எதிர்வினையையும், சட்ட பூர்வமாக எதிர்கொள்ள இப்போதே தயார் நிலையில் இருக்க வேண்டும்.- “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
ஈரோடு கிழக்கில் இரு கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் கூட டெபாசிட்டை தக்க வைக்க முடியாமல் நாதக அவமானத்தோல்வி அடைந்தபோது… அதை வெற்றி என்றும், வாக்குவீத உயர்வு, 2ம் பெரிய கட்சி எனவும் நீங்களும் இன்னும் பலரும் கஞ்சா கப்ஸா கதைகளை அவிட்டு விட்டீர்கள் அல்லவா? அந்த திரியில், 2026 இல் சீமான் தனித்து நின்று 15% பெறமாட்டார் என பந்தையம் கட்ட அழைத்தேன். அத்தனை சீமானியர்களும் கூண்டோடு எஸ் (நீங்களும்)…. சீமானின் மீது விமர்சன பார்வை உள்ளவரான வாத்தியார் அண்ணா மட்டும் பந்தயம் கட்டினார்.- “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
சீமானை தோற்கடிக்க ஆள் வேற இறக்கவேணும் என நினைக்கிறியள் பாருங்கோ அண்ணை…. இதனால்தான் உங்கள் தமிழக அரசியல் புரிதலை யாழ்களமே கொண்டாடுகிறது.- குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
மிக சரியான பதில். இப்போ…. இப்படி ஒரு பதிலை சுமந்திரன் அல்லது சாணக்கியன் சொல்லி இருப்பின் எதிர்வினை எப்படி இருக்கும் என கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். கஜனோ, விக்கியோ, லுச்சா டொக்டரோ, மாம்பழமோ இப்படி சொல்லமாட்டார்கள். சொன்னால் என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும். 16 வருடமாக ஏன் ஒரே இடத்தில் நின்று சுத்துகிறோம் என்பதற்கான விடை இதுவே.- “சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
இருவரும் தனியாக நிற்கப்போவகாகவே தெரிகிறது. பார்ப்போம்… சொதப்புவது யார்… சாதிப்பது யார் என… (2026 சீமான் வாக்கு வங்கி பற்றிய என் சவாலை ஏற்ற ஒரே மானஸ்தன் வாத்தியார் அண்ணா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது 🤣). - கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.