Everything posted by goshan_che
-
கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
நீங்களும் அப்படி நினைச்சீங்க இல்லையா? அப்ப நானும் அந்த மாதிரி நினைச்சது தப்பில்லையே?🤪 தேசம் நெட் ஜெயபாலனுக்கு ஒரு கொப்பி ரைட் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்🤣
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
பிகு ஒண்டை கவனித்தீர்களா? ஆகஸ்டு 2025 கருணாநிதி நினைவுநாளில், சீமானின் ஏவலர்களானா தூஷண துரை வகையறாக்கள், கருணாநிதி vs பிரபாகரன் என்ற அவதூறு போரை, அதை தொடர்ந்து இரு பகுதியும் இந்த இருவரையும் மாறி மாறி கேலி செய்யும் கீழ்தரமான சண்டையை முன்னைய வருடங்கள் போல் செய்யவில்லை? ஏன்? #சபரீசன் பெட்டி
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
மேலே சொன்னவை அனைத்தும் தமிழக தமிழர் நலனுக்கு சீமான் ஏன் கேடு என்பதற்க்காக வாதங்கள். எமக்கு சீமான் ஏன் கேடு என்பதற்கு இன்னும் சில பத்திகள் எழுத வேண்டும். சுருக்கமாக 2009 க்கு பின் ஈழத்தமிழர் ஒரு இனமாக மீண்டும் திரள்வதை தடுக்க, அவர்களுக்கான வெளி ஆதரவை தடுக்க பலர் பல இடங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர். புலத்தில் - அருண், சுமன், கருணா, பிள்ளையான் இத்யாதிகள். புலம்பெயர் தேசத்தில் - ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்டதாக பிரிந்து மாவீரர் தினம் கொண்டாடும் கள்ளர். போலிகா குரூப். தலையில்லாத செயலலகம், மாட்டு பண்ணை இத்யாதிகள். தமிழ் நாட்டில் சீமான். 2009 க்கு பின் இருந்த எம்மீதான பரிவை….மடை மாற்றி… திமுக, அதிமுக, காங், பிஜேபி, விசிக, திக என கிட்டதட்ட தமிழ்நாட்டின் 90% வாக்காளரை…. புலிகள்/ஈழத்தமிழர் அவர்களின் எதிரிகள் என கொண்டு போய் நிறுத்தியவர் சீமான். எமக்கு அடைக்கலம் தந்த அதே மக்களில் இருந்து சிலர் சீமானின் வருகையின் பின் எம்மை “அகதி” என திட்ட ஆரம்பித்தார்கள். ஒரு காலத்தில் கட்சி வேறுபாடின்றி மாவீரன் என போற்றப்பட்ட தலைவர் உருவ கேலிக்கு ஆளானார். இவை அனைத்தும் - சீமான்… தமிழக தலைவர்கள் vs பிரபாகரன் என்ற ஒரு தேவையில்லாத ஆணியை புடுங்கியதன் விளைவு. இதை அவர் திட்டமிட்டே செய்தார். செய்கிறார். இதன் உள்நோக்கம் 2/3 பங்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழருக்கும் மாறாத பகைகை மூட்டி விடுவது.
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
இங்கே நீங்கள் எழுதியவற்றுக்கான பதில் முன்பே பல தடவை யாழில் விவாதிக்கப்பட்டு உள்ளது. இனவழி தேசியம் வேறு, இனத்தூய்மைவாதம் வேறு. சீமான் தமிழ் நாட்டில் 300-600 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை புறம்தள்ளி, அவர்கள் ஆளதகுதி அற்றவர் எனக்கூறி முன்னெடுப்பது தமிழ் தேசிய அரசியல் அல்ல, அது தமிழ் நாட்டில் வாழும், வாக்குரிமை உள்ள, மக்களிடையே சாதிய பிளவை கூர்மையாக்கும், சாதியை-வைத்து இனம்பிரிக்கும், இனத்தூய்மைவாத வெறுப்பரசியல். எப்படி ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் தமிழக மக்களின் நலனுக்கு கேடோ, அதை ஒத்த கேடே சீமானின் சாதிய அடிப்படையில் அமைந்த இனத்தூய்மைவாதமும். இதில் மேலதிகமாக சீமான், சங்கிகளை பட்டும் படாமலும் விமர்சித்து கொண்டு, அவர்களின் கொள்கைகளை முந்தள்ளுவது, அரசியலை மத மயப்படுத்துவது, அவர் இப்போ இருக்கும்( தெலுங்கு வம்சாவழி ) திராவிட அரசியல்வாதிகளுடன் நேரடி மறைமுக கொஞ்சி குலாவுதல்களை செய்து கொண்டு, அதே சமயம் பச்சை பொய்களை கூறி பெரியாரை, பெரியாரியத்தின் முற்போக்கு விளைவுகளை மறுதலிப்பது அவர் ஒரு அரசியல் தரகர் என்பதையும், பாஜக பி டீம் என்பதையும், இப்போ திமுக சி டீம் என்பதையும் உறுதி செய்கிறது. 2009 க்கு முதல் அன்றாடம் காய்ச்சியாக இருந்த அதன் பின் எந்த தொழிலும் இன்றி நீலம்க்கரையில் 6 கோடி பங்களா, அதி சொகுசு ஜப்பான் பஜெரோ, மலைநாட்டில் கோப்பி தோட்டம் என வலம் வருவது, அவர் அரசியலை பாவித்து களவு எடுத்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது. அவர் கட்சியில் பொலிஸ் கிராப்புடன் திடீரென தோன்றிய “முன்னாள் இந்திய இராணுவ வீரர்” விங், அவர் வீட்டில் ஆயுதம் தாங்கிய சிவில் உடை தரித்தோர் இருப்பது - அவர் ரோ ஏஜெண்ட் என்பதை காட்டி நிற்கிறது. இத்தனைக்கும் மேலாக சுப முத்துகுமார் மரணம் அதில் சீமான், தூஷண துரைமுருகன் பங்கு. சீமான் தமிழ் இனத்தில் தோன்றியிள்ள புற்று நோய் கட்டி. இது வளர்வது போல் தோன்றினாலும் அது வளர்ச்சி அல்ல. வெட்டி வீசி விடுவதே ஒரே வழி. பிகு : மக்கள் ஆதரவு. புலிகளின் அதிபுச்ச புள்ளியில் கூட டக்லஸ் யாழ்ப்பாணத்தில் 10% வாக்கு எடுத்தார். சீமானுக்கு விழும் வாக்க்கில் பலது நோட்டோவுக்கு சமனாக மக்கள் வேறு தெரிவின்றி போடுவது. அப்படி அவருக்காக விழும் வாக்கு கூட அவரின் நயவஞ்சகம் புரியாத, மேடையில் அவர் பேசுவதுதான் அவரின் உண்மையான முகம் என நம்பும் அப்பாவிகளின் வாக்கு.
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
நான் சீமான் சம்பந்தமான எந்த நேர்மறை கருத்தையும் பதிவதில்லை. ஏன் என்றால் எனக்கு அவரை பிடிக்காது. அவரை அரசியலில் முடமாக்குவதே தமிழக, ஈழ தமிழருக்கு நன்மை என்பது என் நிலைப்பாடு. ஆனால் சீமான் பற்றி விகடன் போன்ற ஒரு நிறுவனம் நேர்மறையான கட்டுரை எழுதினால், அதில் எழுதபட்டதை விமர்சிப்பேனே ஒழிய, விகடன் நாதக ஊதுகுழல், அல்லது சீமானிடம் காசு வாங்கி கொண்டு எழுதுகிறது என சொல்வதில்லை. இதுதான் வித்தியாசம். ஆனால் தம்பிகளின் யூடியுப் சேனல்களை, உ+ம் தூசண துரை, முன்னர் அய்யநாதன், ராவணன் குடில் - அவை பிரச்சார தளங்கள் என அடையாளம் காட்டுவேன். சண்டிவி, கலைஞர் டிவிக்கும் அதுவே.
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
காங்கிரஸ் விஜையை வைத்து ஆட்சியில் பங்கு என ஆரம்பித்து கொஞ்சம் அதிக சீட் கேட்பதோடு அடங்கி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். விஜை+அதிமுக மட்டுமே ஆட்சியை பிடிக்க கூடிய சேர்க்கை. விஜையோடு தனியே காங்கிரஸ் சேர்ந்தால் விஜை ஒரு சீட் காங்கிரசுக்கு ஏதும் இல்லை என்பதே கரூருக்கு முன்பு கூட நிலமை. இப்படி இருப்பதையும் கெடுக்க காங்கிரஸ் விரும்பாது. அதுவும் செல்வபெருந்தகை இருக்கும் வரை. கூடவே பீகாரில் நித்கிஷ், பிஜேபி இடையே லடாய் என்கிறார்கள். ஆகவே இந்தியா கூட்டணியை பலமாக்க கிடைக்கும் சந்தர்பத்தில் பலவருடம் கூட நின்ற திமுகவை விட்டு, விஜையோடு வருவதில் தேசிய, மாநில மட்டங்களில் காங்கிரசுக்கு எந்த அனுகூலமும் இல்லை. இப்படித்தான் நானும் எண்ணுகிறேன். ஆனால் விஜை கொஞ்சம் மைதானத்தில் இறங்கி விளையாட வேண்டும். டெண்டுல்கர் ஆயினும் டிரெசிங் ரூமில் இருந்து செஞ்சுரி அடிக்க முடியாது🤣.
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
இந்த கோணத்தில் நானும் சிந்தித்து பார்த்தேன். இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் சேருவோம் என டெல்லி தலைமை முடிவெடுத்தாலும்… உள்ளூர் பாஜக ரொம்பவே சோர்ந்து போய்விடுவார்கள். இது வானதி உட்பட அத்தனை சிட்டிங் எம் எல் ஏ களும் பதவி இழப்பதை உறுதி செய்யும். அடுத்த அண்ணாமலையின் இத்தனை வருட உழைப்பு வீண். நயினார் முதல் ராஜா வரை ஆவலோடு காத்திருப்போர் நிலை? இப்படி ஒரு முடிவை டெல்லி எடுத்தால்… தமிழக பாஜக ரொம்பவே துவண்டு போகும். அது என்றோ ஆட்சியை பிடிக்கும் நீண்டகால திட்டத்தை பாதிக்கும். எனவே இப்படி ஒரு முடிவு வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். கூடவே, இன்னும் சில நாட்களில் நயினாரின் பிரச்சாரத்தை பாஜக பொறுப்பாளரும், எடப்பாடியிம் ஆரம்பித்து வைக்கிறார்கள். கூட்டணி நன்றாக ஜெல் ஆகிவிட்டது. இனி பிரிவது கடினம்.
-
சிவவாக்கியம் எனும் தேன்
கண்ணதாசன் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இதை பார்த்த போது நானும் நினைத்தேன், இவ்வளவு பகுத்தறிவோடு ஆன்மீகத்தை அணுகிய மனிதனை, மண்ணை சோறாக்கினார், மூங்கிலை வெட்டி தங்கம் எடுத்தார் என விட்டலாச்சார்யா கதை போல திரித்து பின்னாளில் அசிங்கபடுத்தியுள்ளார்கள் என. இது யேசுவுக்கும் புத்தருக்கும் கூட நடந்த விடயம்தானே.
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
சங்கிகள் காங்கிரசின் பதவி சுகத்துக்கு ஆப்படித்தவர்கள். ஆகவே சங்கிளை அவர்கள் வளர்க்கவில்லை. ஆனால் 1990 களில் வடக்கே சங்கி ஆதரவு வாக்குகளை கவர காங்கிரஸ் முயன்றதே அதன் நிலை மாற்றத்துக்கும், இன்றைய அவல நிலைக்கும் காரணம். விபி சிங் என்ற அற்புதமான மனிதனை அகற்றி, மண்டல் கமிசன் விடயத்தில் பிஜேபி யோடு சேர்ந்து காங்கிரஸ் ஆடிய தப்பாட்டமே காங்கிரசின் வீழ்ச்சியின், பிஜேபியின் எழுச்சியின் முதல் அத்தியாயம். சங்கிகளை காங்கிரஸ் வளர்க்கவில்லை, ஆனால் ஜனதா வை அழிக்க காங்கிரஸ் செய்தவை+ வடக்கில் கிளறப்பட்ட மதவெறி பிஜேபி வளர ஏதுவானது. இதில் திமுக, அதிமுக என கூட்டணி வைத்த கட்சிகளுக்கும் பங்குண்டு. பிகு உங்களுக்கு ஆதரவான கருத்தை விகடன் வெளியிட்டால் பகிரும் நீங்கள்… சீமானை பற்றி விகடன் எழுதினால் திமுக கைக்கூலி, விபச்சார ஊடகம் என எழுதுவதேன் புலவர்? ஒரே விகடன் சில சமயம் கணிகையாய், சில சமயம் கண்ணகியாய் அமைவது எப்படி?
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். மேலே சில கட்சிகளை போலி என்றேனே? அப்படி ஒரு போலிதான் காங்கிரசும். ரஜீவை திமுக புலிகளை வைத்து கொலை செய்தத்து என்பார்கள் சில வருடங்களில் கூட்டணி. அதேபோல் மதசார்ன்மை என கூவி கொண்டே கரசேவையை அனுமதிப்பார்கள். ஆகவே தான் -(சங்கி) கொள்கையில் தடம் மாறாமல் இருக்கும் பாஜக மிக ஆபதானவர்கள். ஜெயலலிதா பற்றி நீங்கள் எழுதுவதில், திமுகவில் சில குடும்பங்கள், தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் கூட, களைய வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நானே இவை பற்றி பலதடவை எழுதியிம் உள்ளேன்.
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
ஐயா, உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இப்போ வாசகருக்கும் விளங்கி இருக்கும். நீங்கள் கோட் பண்ணி இருக்கும் எனது எழுத்துக்களை மீள ஒருதரம் வாசிக்கவும். அப்போதும் விளங்கவில்லை எனில் சொல்லவும், விரிவாக விளக்கம் தரலாம். புலவருக்கு விளங்கியாதால் லைக் போட்டுள்ளார்.
-
சிவவாக்கியம் எனும் தேன்
சித்தர்களில் சூப்பர் ஸ்டார் சிவவாக்கியர் 😎…… பெண்ணடிமை, சாதி, மூடநம்பிக்கை….. என பல இழிவுகளை 9ம் நூற்றண்டில் லெப்டு ரைட்டு வாங்கியிருக்காப்பல 🤣
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
இதை பகிர்ந்த அதே ஆள்தான் மேலே பாரதியாரை எல்லாம் இழுத்து சாம்பு மவன் வேம்பு, சங்கி இல்லை என எழுதினார் என்பதை சபையோர் கருத்தில் எடுக்க வேண்டும்🤣. NTK = RSSS என்பது இதைத்தான்.
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
உங்களை போல் நான் எங்கும் பாஜக இருக்கும் கூட்டணி வெல்வதை வரவேற்று எழுதவில்லை. அப்படி ஒரு உடன்பாட்டுக்கு விஜை போனால் அவரும் போலியே.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
அட… இவரை மட்டும் ஏன்யா அடிக்கிறீங்க…. முகராசி அப்படி 🤣🤣🤣
-
விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
விஜை சில சமயம் அதிமுக+பிஜேபி உடன் கூட்டணி போகாமல் - தனியே தொகுதி உடன்பாடு மட்டும் செய்துகொள்ள கூடும் என நினைக்கிறேன். 40-60 தொகுதிகளை விஜைக்கு ஒதுக்கி விட்டு, ஏனையவற்றில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடலாம். விஜை இந்த தொகுதிகளில் மட்டும் வேட்பாளரை நிறுத்தலாம். இரு பகுதியிம் ஆளை ஆள் திட்டாமல் அதே நேரம் ஒரே மேடை ஏறாமல் வாக்கு கேட்க லாம். பிகு தமிழ்நாட்டில் எல்லாமுமே போலிதான். திமுக/அதிமுக/தேமுதிக போலித் திராவிடம். நாதக போலித் தமிழ் தேசியம். கொள்கைவாத கட்சி என்றால் அது பாஜக மட்டுமே🤣.
-
'போலீஸ் விசாரணையில் கொன்றுவிட்டனர்' - மதுரை பட்டியல் சாதி இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது?
அஜித்குமார் மரணத்தில் யாழ்களம் உட்பட கொதித்த கொதிப்பு இங்கே ஏன் இல்லை? அதில் சம்பந்தபட்ட பெண் திமுக அரசின் உயர் அதிகாரி அல்லது அரசியல்வாதி தயவில் அதை செய்தார் என சந்தேகிக்கபடுவதால் அதை வைத்து தத்தம் கட்சிகளுக்கு அரசியல் ஆதாயம் தேடலாம். இவர் பட்டியலின இளைஞர்.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
🤣 சீச்சீ அப்படி உங்களை சொல்வேனா. நீங்கள் வாத்தியார்….துரோணர் நியாயம் முழுவதும் விளங்கினாலும்…கெளரவ சேனையில் நிற்பது உங்கள் கடன் என நினைக்கிறீர்கள்🤣. நான் நிச்சயமாக அர்ஜுனன் இல்லை. யுத்தகளத்தில் நிண்டு ஓவர்திங்கிங் செய்வதில்லை நான் 🤣. கும்பகர்ணன் போல் துன்னுவான், தூங்குவான், எழும்பினா துலைச்சுபோடுவான் கரெக்டர் ஏதும் மஹாபாரதத்தில் உள்ளதா? அப்படி எண்டால் அதுதான்🤣. இல்லாவிடில் - சீமானியர் கேட்காமலே கொடுப்பதால் கர்ணன் 🤣.
-
"நா.த.க., த.வெ.க கட்சிகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் திரளும் காரணம் இதுதான்!" - பேரா. அருணன் நேர்காணல்
எதிர்க்கலாம் அருணன்…. பாலியல் குற்ற வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்று மூலம் தப்பிக்க நீங்கள் உதவ வேண்டும்… ரெடியா🤣
-
"நா.த.க., த.வெ.க கட்சிகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் திரளும் காரணம் இதுதான்!" - பேரா. அருணன் நேர்காணல்
மண்ணாகட்டி….. அப்படி அண்ணன் ஏற்று கொள்ளவில்லை. நன்றாக நினைவுள்ளது எனக்கு… சவாலில் தோற்ற பின் அவர்கள் பல கட்சிகளின் கூட்டு, நா தனியே, எனவே நாந்தான் உசத்தி என ஆமை ஓட்டை அப்படியே திருப்பி போட்டார்🤣. தம்பிகளும் திருவெம்பாவை காலத்தில் காலை எழுந்து நகரசங்கீர்தனம் போகும் பக்தர்கள் போல் சிங்கி சா போட்டார்கள். சீமான் பேரா வை “லூசாய்யா நீயீ” என ஒருமையில் கேட்க, பேரா “நீதான்யா லூசு” என பதில் சொல்ல…இருவரின் மேடை நாகரீகத்தையும் பார்த்து நாமெல்லாம் புல்லரிக்க…. அதெல்லாம் ஒரு காலம் 🤣.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
இதுக்கே டென்சன் ஆனா எப்படி. கீழே உள்ள பதிவில் அந்த கெட்டவார்த்தையை நெடில் அல்ல குறில் என்ற ரீதியில், வ நாவுக்கு பதிலாக டுனாவை போட்டு, கிட்டதட்ட நேரடியாகவே பதிவிட்டுள்ளார். நெல்லை செல்வின் பதிவின் ஊடாக. தமிழில் புலவரா…தூசணத்தில் புலவரா என எண்ணத்தோன்றுகிறது. புலவருக்கு: நீங்கள் தமிழ் நாட்டு அரசை, ஊடகங்களை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள்… அது உங்களுக்கும், ஸ்டாலினிற்கும், நிர்வாகத்துகும் உள்ள பிரச்சனை. ஆனால் நான் எழுதிய கருத்தை (பகிர்ந்த செய்தியை அல்ல) கோர்ட் செய்து….திராவிட ஊடகவியளார்கள் இப்படித்தான் என எழுதினால் - அது என்னைத்தான் குறிக்கும். வித்தியாசம் விளங்கும் என நினைக்கிறேன்.
-
இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
எதையோ ஒண்ட கொடுத்து ஆளை அமைதிபடுத்த பார்க்கோணும்… இல்லாட்டில்…எனக்கா பரிசு இல்லை…பண்றேன் பார் எண்டு… மீண்டும் காசா போரை கூட ஆரம்பிக்க கூடிய ஆள்🤣. டிரம்பை கையாள ஸ்டிராமர் வழிதான் சிறந்தது. கூப்பிட்டு ஒரு ரெட் காப்பெட்…சார்ல்ச்சோட சான்ட்விச் அண்ட் டீ….. சொன்ன இடத்தில கையெழுத்து போடும் மனிசன்🤣
-
ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
ஜேவிபியும் ஏனைய சிங்கள கட்சிகள் போலத்தான். ஒரே வித்தியாசம் - நீங்கள் அவர்களோடு வர்க்க போரில் துணை நின்றால் உங்களை பாதுகாப்பார்கள். அதே நேரம் குழுவாக சேர்ந்து தமிழரை தாக்குவதில் ஒரு கை போடாவும் பின் நிற்க மாட்டார்கள். கொள்கை ரீதியில் தமிழரை ஒடுக்குவதில் ஏனைய கட்சிகள் “ஒரே இலங்கையர்” எனும் ஈரச்சாக்கை கையில் எடுத்தால்… ஜேவிபி…நாம் எல்லோரும் உழைக்கும் வர்க்கம் என்ற ஈரச்சாக்கை கையில் எடுப்பார்கள். ஆனால் வடக்கு-கிழக்கை பிரிக்க வழக்கு போட்டு வெல்வார்கள். இத்தனை வருட இழப்பின் பின் தமிழருக்கு கிடைத்த ஒரே சிறிய நன்மை வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு. எந்த இனவாத கட்சியும் அதை நீக்க துணியவில்லை. அதிகாரத்தில் இல்லாத போதும் கோர்ட்டுக்கு போய் ஜேவிபி நீக்கியது. அதே போல் முள்ளிவாய்க்கால்… நடப்பது மிக பெரும் அழிவு என தெரிந்தும்…மாட்டி கொண்ட தமிழர் பலர் உழைக்கும் வர்க்கம் என அறிந்தும்…: போரை, மேற்கின் வேண்டுதலுக்கு பணியாமல், விரைந்து முடிக்க மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்தார் அனுர. யூ என் பி, சுக, ஹெல உறுமய முகத்துக்கு நேரே இனவாதிகள் - சையனைடு. ஜேவிபி ஆசனிக்.
-
ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து
சங்ககார குடும்பம் கூட இப்படி செய்தனர். கொழும்பு நெல்சன் பிளேஸின் பல தமிழ் குடும்பங்கள் இன்று உயிர்வாழ டாக்டர் ஜெயதில வீடுதான் காரணம். ஆனால் இவர்கள் விதிவிலக்குகள். 1948-2009 முதல் இப்படியான விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்த்தால் - ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் கூட்டு மனோநிலையும்….. எந்த எல்லைக்கும், எந்த மோசமான அடக்குமுறையையும் பாவித்து தமிழர்களை அடக்கி விட வேண்டும் என்பதாகவே இருந்தது. 2009 -2021 வரை கூட அது மாறவில்லை. …. அடக்க வேண்டும் என்ற வெறி…அடக்கி விட்டோம் என்ற இறுமாப்பாக மாறி இருந்தது. 2021 ற்கு பின் கூட்டு மனோநிலை மாறிவிட்டதா? தெரியவில்லை.