Everything posted by goshan_che
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ரிப்பளிக் டிவிக்காக சிட்னியில் இருந்து புத்தன்🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இதை யாராவது இந்திய அரசியல் தலைமைகள், தலைமைகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பின்…. அவர்கள் கண்ணில் காட்டி விடுங்கள். குறிப்பாக யாழ் களத்தை நோட்டமிடும் றோ அதிகாரிகள் (ரோ மாமாக்கள் அல்ல அவர்களுக்கு அந்தளவு அதிகாரம் இல்லை) இதை உங்கள் அரசியல் எஜமானார் கண்களுக்கு எடுத்துப்போங்கள். ஒரு காலத்தில் நேரு காந்தி படங்கள் தொங்கிய வீடுகள் நம் வீடுகள். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் இயற்கையான உறவாக இருந்த ஒரே இனம் நாமே. இன்று உலகெங்கும் பரவி வாழும் நிலையில் நாம் இந்தியாவுக்கு மிகபலமானதான ஒரு நட்பு சக்தியாக இருந்திருப்போம். இலங்கையில் எமக்கென ஒரு சுயாட்ட்சி பிரதேசமும் இருந்துருப்பின். இன்று நிலைமை தலைகீழானமைக்கு - இந்தியாவின் அணுகுமுறையே பிரதான காராணம். இன்னமும் திருந்த இடமும், நேரமும் உண்டு. செத்தகிளிக்கு சிங்காரம் எதுக்கு🤣 முரளிக்கு மறை கழண்டு விட்டதா? நான் பார்க்க அநேகர் இருவரில் எவருக்கும் சார்பாக எழுதவில்லை. இரெண்டு பக்கமும் இராணுவம் அடி வாங்குவதை பார்த்து குதூகலிக்கிறோம். இதை ஒரு தப்பு எண்டு பேசிகொண்டு🤣 நீங்களும் திருப்பி சுடலாமே🤣
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
இந்த ஊத்தைதான் சிறுமியை டியூசன் வகுப்பில் வைத்து அவமானப்படுத்தியதாம். இந்த ஊத்தைதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபி வேட்பாளர். இன்னும் இந்த ஊத்தை மீது ஒரு வழக்கும் இல்லை. சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு போட, அல்லது விசாரிக்கவாவது, சகல முகாந்திரமும் உள்ளது. ஆனால் இந்த ஊத்தையை ஜேவியும் குறிப்பாக சரோஜா அக்கா பாதுகாக்கிறனர். ஊத்தை தானாக சி ஐ டி க்கு போய், மானநஸ்டம் என புகார் கொடுக்கிறது. இவரின் நண்பர்தான் சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்.
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
இடமாற்றமா? இந்த கழிசறையையும் அதன் நண்பரையும் பிணையில் வரமுடியாத படி உள்ளே போட வேண்டும். ஆனால் ஜேவிபி இவர்கள் வீட்டுக்கு பொலிஸ் காவல் கொடுக்கிறது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
மோடி ஜி, அமித் ஜி - இந்தியா கிரிகெட்டில் டி கப் தூக்கினால் கூட ஓடியந்து டிவிக்கு முன்னால் நிற்பார்கள். இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இப்படி பெரிய வெற்றிகளை குவித்தும் மூன்று நாளா இருவரும் மிஸ்ஸிங். ஒரு வேளை தியானம், கியானம் ஏதும் செய்யினமோ🤣
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
முழு பூசணிக்காயை சோர்றுக்குள் மறைக்கப்பார்கிறார்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நீங்க 87-89 இல் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்தீர்களா? ஒரு வேளை அமெரிக்கன் அல்லது இஸ்ரேல்காரன் முஸ்லீம் போல வேடம் அணிந்து தாக்கி இருப்பானோ? இரெட்டை கோபுரம் முதல் பின்விழைவு தமக்கு ஆப்பாக அமைத்த முட்டாள்தனமான பல தீவிரவாத தாக்குதல்கள் உண்டு.
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
பாலியல் வன்கொடுமையை மூடி மறைத்து, சிறுமி மீதே மனபிறழ்வு உள்ளவர் எனவும் விமர்சிக்கிறார் ஜேவிபி யின் சரோஜா அக்கா. எங்கே யாழ்கள அனுர காவடிகள்? பள்ளி மாறி போனபின் இன்னொரு பள்ளியில் உள்ள இந்த நபரின் ஆசிரியர்-நண்பர், இதே வன்கொடுமை விடயத்தை பலநூறு மாணவர்களுக்கு முன் சொல்லி அவமானப்படுத்தியதாலேயே சிறுமி உயிரை மாய்த்துள்ளார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முடிச்சிவிட்டீங்க போங்க 🤣 பாக்கிஸ்தானை இந்தியா முடிந்த வகையில் எல்லாம் கிரிகெட்டில் ஒதுக்கியது. பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தே ஐ பி எல்லை நிறுத்தி விட்டது. பிகு போட்டியில் நான் வென்றதாக அறிவிப்பதுதான் நியாயமான முடிவாக இருக்கும் என கருத்து கணிப்புகள் சொல்வதாக இந்தியன் செய்தி சேனல்கள் சொல்கிறன🤣. பிரேக்கிங் நியூஸ் - ரிபப்லிக் டீவி கோஷான் முதலாம் இடத்தில் இருக்கும் புள்ளி பட்டியல் வெளியானது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கிட்டதட்ட சகல, பெரிய, சிறிய மீடியாக்கள், யூடியூப்பர் எல்லாரும் இதேதான் நிலை. ஒரு நாடே மங்குனிகளாக இருக்கிறார்கள்🤣.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கராச்சி செய்தி பொய் போல இருக்கிறது. நான் இதுவரை கண்ட போர்களில் பொய் செய்தியை இரு பக்கமும் இப்படி பரப்பி கண்டதில்லை.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
பாப்பரசர் கர்தினாலாக இருக்கும் போது யேசு ஒரு குடியேறி என்றவகையில் பல கருத்துக்களை சொல்லி உள்ளார். டிரம்பின் மாகா கூட்டம் இவர் தெரிவானதில் ரொம்பவே அப்செட்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அதனால்தான் பாஸ் சொல்லுறம்… வட இந்தியா பழையபடி மொகாலயா ஆகட்டும்… சேரர் வராட்டில் போகட்டும்… நாங்கள் அகண்ட சோழம் காண்போம்🤣. பிகு பகிடிக்கு இல்லை…நான் கார்கில் போர் நேரம் தமிழ் நாட்டில் இருந்தேன். போர் நடப்பதை டீவியில்தான் காண முடிந்தது. இது பட்டர் நாண் vs நெய் சப்பாத்தி சண்டை. இதில் நாம் தசை ஆட ஏதும் இல்லை. அதேபோல் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்ல. அவர்கள் தம்மை தமிழாராகவே உணர்வோர். எளிய சங்கிகள் கொழுப்பெடுத்து காஸ்மீரை ஆக்கிரமித்தால் அடிப்பாந்தானே. அதற்காக தமிழ் நாட்டு முஸ்லிம்களை யாரும் அந்நியப்படுத்த கூடாது. ராவல் பிண்டி ஸ்டேடியத்தை இன்று பகல் இந்தியா தாக்கியது. நான் யாழ்கள போட்டியில் வெல்ல போவதை தடுக்க இரு நாடுகளும் சதி செய்கிறன. 🤣 நீங்க வேற.. இந்திய எல்லைக்குள் 300 கிமி உள்ள நிண்டதையே பொசுக்கி போட்டாங்கள். இதுக்க லாகூர் போய்ட்டாலும்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
Robert Prevost - எனும் அமெரிக்க கார்தினெலே பாப்பரசராக தெரிவாகியுள்ளார். இவர் பதின்நான்காம் லியோ என அறியப்படுவார்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நிலமையை மேலும் மோசமாக்குவது… அதாவது இன்னும் ஐந்து விமானங்களை கயலாங்கடைக்கு அனுப்புவது… இந்தியாவின் நோக்கம் அல்ல.🤣 ஜெய்சங்கர் சீனன் குசும்பு 👇
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
யூகேயில் இருந்து வந்த டாக்டர் சத்தியமூர்த்தியும். ? இதுதான் சரியான குறிப்பு. கொக்கட்டி சோலையில் ஒன்றை வைத்து வவுணதீவு முகாம் மீதும் தாக்கியதாக நினைவு.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
உண்மைதான். ஆனால் இந்த முறை ஆளுபவர்களின் கையாக இருக்கும் ஆண்டகை ரஞ்சித்துக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னார்கள். இந்த கறுப்புத்தோல் இனவாதிக்கு வேறு யாரும் வெள்ளை வந்தால் பரவாயில்லை.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ரபேலை(களை) வீழ்த்த பாகிஸ்தான் என்ன செய்தது? ரபேல் 250 கிமி பாயும் மீட்டியோர் மிசைல் உடையது. வழமையாக சீனா ஏற்றுமதிக்கு 150 கிமி மிசைல்களையே வழங்கும். ஆனால் பாகிஸ்தான் சீனா தான் மட்டும் பாவிக்க என தயாரித்த 300 கிமி பாயும் மிசைலை பெற்று கொண்டது. ஆனால் பாக்கிஸ்தானிடம் உள்ள மிசைல் ஏவும் JF17 சீன போர் விமானங்கள் 150 கிமி மட்டும் “பார்க்கும்” ரேடார் உடையன. ஆனால் பாகிஸ்தானிடம் இருக்கும் சுவீடனின் சாப் 2000 ரேடார் விமானம் 400 கிமி வரை பார்க்கும் ரேடார் உடையது. இதில் இருந்து இந்தியாவுக்குள் 400 கிமி தொலைவில் இருந்த ரபேல்களின் லொக்கேசனை கண்டு, அதை சாப் JF17 க்கு கொடுக்க, JF17, “கண்ணை மூடி கொண்டு” அந்த ரபேல்களின் லொக்கேசனை நோக்கி 300 கிமி பாயும் மிசைல்களை ஏவியதாம்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
வத்திகனில் கர்தினால்கள் கூடி பாப்பரசரை தேரும் கூட்ட கட்டிடத்தின் புகைகூண்டில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது. புதிய பாப்பரசர் தெரிவானதை இது குறிக்கிறது. BBC NewsPope conclave live: White smoke emerges as a new pope is...The new pope is expected to emerge on the balcony of the Vatican shortly - after a series of ballots by 133 cardinals.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனா கொடுத்த புதியவகை ஜெட், மிசைலை கொண்டுதான் ரெபேலுக்கு தண்ணி காட்டி இருக்காங்கள். இப்ப அமெரிக்கன், நேட்டோக்கு எல்லாம் வயித்த லேசா கலக்கி இருக்கும்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
LLB இலங்கை…. Fulbright Scholar…. Yale, Harvard இல் சட்ட மேற்படிப்பு, கலாநிதி, விசிட்டிங் லெக்சரர்…. உலகில் அந்த நேரம் பெயர் சொல்ல கூடிய அரசியல் சட்ட நிபுணர்களில் ஒருவர்… அப்போ அரசியல் சட்ட உதவி தேவைப்பட்ட கூட்டணி இவரை இதற்க்கா உள்வாங்கி இராது… திருசெல்வம் மகன் என்பதால்தான் உள்வாங்கி இருக்கும். நீலன் சந்திரிகா ஜனாதிபதி ஆக முன்னரே எம்பி ஆகி விட்டார். 1983 இலேயே நீலன் எம்பி. ஒரு நடப்பு கூட்டணி எம்பி சாக, அந்த இடத்துக்கு சிறையில் இருந்த குட்டிமணியை போட்டு, பின் அவர் பதவி ஏற்க அனுமதிக்காகையால் நீலன் எம்பி ஆகிறார். 83 கலவரம், 6ம் திருத்த சட்டத்தை எதிர்த்து கூண்டோடு பதவி விலகிய அல்லது பதவி இழந்த எம்பிகளில் நீலனும் ஒருவர்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இப்போதும் யதார்த்தை உணர மறுக்கும், புலம்பெயர் ஆட்கள் கூட இந்த விம்பத்தை கட்டி எழுப்புவதில் பெரும் பங்காற்றினர். கூடவே “மோட்டு சிங்களவன்” stereotype ற்கு மகிந்தவும் பொருந்தி வர - 2005 மாவீரர் தின உரை முடிவில் - எப்படியாவது சண்டையை ஆரம்பிதால் போதும் - அடுத்தது தமிழ் ஈழம்தான் என்ற நிலையிலேயே பலர் இருந்தனர். திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்றோர் டிவியில் தோன்றி அடுத்த பேச்சுவார்த்தை எல்லை நிர்ணயம் தொடர்பாக என்றனர். இதேகாலம்தான் என நினைக்கிறேன் குதிரை கஜன் 60,000 சவப்பெட்டி கதை பாராளுமன்றில் சொன்னார் என நினைக்கிறேன். ஆனால் திருநாவுக்கரசு, நிலாந்தன், கஜன் எவரும் அதன் பின் வந்த போரில் சாகவில்லை. ஆனால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்னும் அரசியல் செய்கிறார்கள், பேசுகிறார்கள்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இது நொண்டி சாட்டு அல்ல. நடைமுறையில் புலிகள் மட்டுமே பிரச்சினையை தீர்க்கும் வலு உள்ள தமிழர் தரப்பு என்பதும் 85-90% மக்கள் ஆதரவு அவர்களிடமே என்பதும் அனைவருக்கும் தெரியும். இதில் 100% நாமே ஏக பிரதிநிதிகள் என ஏற்க வேண்டும் என்ற பிடிவாதம் - பன்னுமுகதன்மை அற்ற, ஒற்றை சர்வாதிகார தலைமை என்ற இலங்கையின் பிரச்சாரத்துக்குத்தான் துணை போனது. நான் புலிகள் பயங்கரவாதிகள் என எங்கும் சொல்லவில்லை. நன்றி. இருபது வருடம் முந்தியது என்பதால் பலருக்கு பலது மறந்து போய்விட்டது. தேவையான நினைவூட்டல்.
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நாம் எதையும் காணாத போது…எதையும் ஐயம் திரிபற நிறுவ ஆதாரம் இல்லாதபோதும்…அனைத்தையும் லாம் இல் தான் எழுத முடியும். ஆகவே இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட “லாம்” விடைகள் உள்ளது. அதன் ஒரு “லாம்” இன் அடிப்படையில் எமக்கு பாரிய பின்விளைவை தந்த ஒரு கொலை நடந்துள்ளது. அவர்கள் எப்போதும் நடுநிலையாளர்கள் அல்ல. பேச்சுவார்த்தையை இலங்கை அரசும், புலிகளும் தத்தம் நிலையில் இருந்து குழப்ப முனைந்தார்கள். இலங்கை உலக நாடுகளின் பரிவு தன்மீது இருக்கும் படி பார்த்து கொண்டு கெட்டித்தனமாக குழப்பியது. புலிகள் இதற்கு நேர் எதிர் அணுகுமுறையை எடுத்தார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்திய பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்.