Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. அது அந்தந்த சமூகத்தில் யார் அடக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. இந்திய தமிழ் சமூகத்தில் பிராமணர்கள் மிக அதீத, அளவுக்கு மீறிய வலுவை, அதிகாரத்தை கொண்டிருந்தனர். இன்றும் அரச ஒதுக்கீடு இல்லாத, சினிமா, கிரிகெட், போன்ற துறைகளில் இது தொடர்வதை காணலாம். இப்படி ஒரு நிலையை ஏது செய்வது சாதிய படி கட்டமைப்பு. பிராமணர்களை, உயர தூக்கி வைப்பது வேறு யாரும் அல்ல அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தேவரும், நாயக்கரும், பிள்ளைமாரும் தான். இதே சாதிய படி கட்டமைப்பு வட-கிழக்கு இலங்கை தமி சமூகத்திலும் உண்டு. ஆனால் ஒரு மிக முக்கியமான மாறுதல். இலங்கையில் இந்த படிக்கட்டின் உயரத்தில் இருந்து - செல்வாக்கு மிக்க தொழில்களை, பதவிகளை கைவசப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவோர்/செலுத்தியோர் பிராமணர்கள் அல்ல. மாறாக வெள்ளாளர். இலங்கை பிராமணர்கள் கோவில், அது சார்ந்த தொழில்களோடு மட்டு படுகிறார்கள். ஏனைய துறைகளில் மிளிர்ந்தோர் கூட தனி மனிதராகவே மிளிர்ந்தனர். ஆனால் ஒரு காலத்தில், கன்னங்கர இலவச கல்வியை தர முன்னர், ஒட்டு மொத்த இலங்கையின் நிர்வாக சேவையை சுவீகரித்து, வியாபாரம், மருத்துவம், கல்வி என பலதில் கோலோச்சிய சமுகம், வெள்ளாளர். குறிப்பாக யாழ்ப்பாண வெள்ளாள சமூகம். எப்போதும் மட்டற்ற அதிகாரம், அடக்குமுறைக்கு வழிவகுக்கும். அப்படி இலங்கையில் இந்திய-பிராமணர்கள் போல், அடக்குமுறை சாதியாக இருந்தவர்கள் வெள்ளாளர்கள். ஆகவே இலங்கையில் சாதி எதிர்ப்பு அவர்களை நோக்கியே அமைந்தது. நிற்க, இந்தியா போல், ஏன் இலங்கையில் சாதிய படி கட்டமைப்பின் உச்சியில் பிராமணர் இல்லை? இது ஒரு பி எச் டி ஆய்வுக்குரிய கேள்வி. யாரும் இதுவரை ஆராய்ந்ததாக தெரியவில்லை. பெளத்த-சிங்கள அடையாளம் ஒரு காராணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அவர்களின் புத்தகங்களில் தமிழருக்கு நிகராக, அவர்களின் மதகுருக்களாக அனுராதபுர, பொலநறுவை காலங்களில் இருந்த பிராமணர் மீது வெறுப்பு கக்கபடுவதை காணலாம். கடந்த 1000-500 வருடத்தில் தமிழர் பகுதிகள் சிங்கள மன்னர்களின் நேரடி அல்லது மறைமுக ஆளுகையில் பல காலம் இருந்தபோது, பிராமணர்களின் வகிபாகம் திட்டமிட்டு குறைக்கப்பட்டிருக்கலாம். அதே போல் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகாரம் செலுத்த போதுமானதாக இல்லாதிருந்திருக்கலாம். அல்லது நீங்கள் சொல்வது போல் யாழ்பாண மன்னர்கள் புத்திசாலிகளாக இருந்திருக்கலாம். அல்லது இந்த, வேறு காரணங்களின் கூட்டு விளைவாக இருக்கலாம்.
  2. நீங்கள் எளிய பிள்ளை சீமானின் பக்தர் என்பதால் இப்படியான ஒரு எளிய ஆனால் பிழையான சமன்பாட்டை போடுவதாக படுகிறது. நான் தமிழ் நாட்டில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. ஆனால் சீமானை எதிர்கிறேன். இதற்கான காரணங்கள் இங்கே பலதடவை தெளிவாக எழுதப்பட்டுள்ளன. ஆனால இங்கே கேள்வி நான் யாரை ஆதரிக்கிறேன் என்பதல்ல. கேள்வி கீழ்கண்டதுதான். நான் சீமானை எதிர்கிறேன் நீங்கள் சீமான் கட்சி வளர்கிறது, அதை பார்து என் போன்றோர் படபடப்புக்கு ஆளாகிறனர் என்றீர்கள். அப்படி சீமான் கட்சி வளரவில்லை. 2026 இல் சீமான் தனியாக கேட்டால் 12% கூட எடுக்க மாட்டார். இல்லை என பந்தயம் கட்ட தயரா? ஒன்றில் பந்தயம் கட்ட வேண்டும். அல்லது சீமான் கட்சி வளரவில்லை என ஒத்துகொள்ள வேண்டும்.
  3. அப்போ லஞ்ச லாவண்யாவோ, பிஞ்ச பிரமிளாவோ…ஏதோ ஒரு காரணத்தால் சீமானின் கட்சியின் வளர்ச்சி 2026 இல் இல்லை என்பதை ஏற்கிறீர்கள்? தமிழ் நாட்டை தெலுங்கு வம்சாவழி ஆளக்கூடாது எனில், மலையாளி வம்சாவழியும் ஆளக்கூடாது என்பதில் தலைசுத்து, மசக்கை எதுவும் வரத்தேவையில்லை. லாசப்பல் என்ன பாரம்பரிய தமிழர் வாழிடமா? ஒவ்வொரு குடியேறி கூட்டமும் “மேட்டுகுடி” ஆகி வெளியேற அதை புதிய குடியேறிகள் நிரப்புவது வழமைதான். ஆனால் நான் கண்டது கலேயின் முகாம்களில் இருப்பது போல ஒரு நிலைமையை. அதைத்தான் கேட்டேன்.
  4. 1991 இல் பொருளாதார கொள்கை கம்யூனிசத்தில் இருந்து அல்ல. மூடிய சந்தை பொருளாதாரத்தில் இருந்து திறந்த சந்தை பொருளாதாரமாகவே மாறியது. ஆனால் சர்வதேச அரசியல் கொள்கை - பொருளாதார கொள்கை போல அன்றி படிபடியாக மாறி வருகிறது. நேரு காலத்து அணி சேரா கொள்கை இப்போ இல்லை. இப்போ இருப்பது நாமும் ஒரு அணிதான் என முந்தள்ளும் மோடி-ஜெய்சங்கர் கொள்கை நிலை. மேற்கு, இந்தியா மட்டும் அல்ல. சீனா போன்ற நாடுகளில் கூட ஷி காலத்தில் இப்போ இருக்கும் கொள்கை அல்ல மாவோ காலத்தில். ஆகவே அரசியல்வாதிகள், தலைவர்கள்தான் கொள்கையை முடிவு செய்வார்கள். இது இங்கே திரியில் பலரும் சொல்லி உள்ள ஒரு விடயம். நீங்கள் பழைய பாணியில் முயலின் மூன்றரைக்காலில் தொங்குகிறீர்கள்🤣.
  5. இந்த கதை எல்லாம் வேணாம். சீமான் கட்சி வளர்வதால் அவரின் (நானுட்பட்ட) எதிர்பாளருக்கு படபடப்பு என்றீர்கள். சரி 2026 இல் சீமான் தனியே நிண்டு 12% எடுப்பாரா - இல்லையா? பந்தயம் கட்ட ரெடியா? இல்லை எண்டால் சீமான் கட்சி வளர்கிறது என்பதை நீங்களே நம்பவில்லை என்பதே அர்த்தம். பிகு மற்ற அண்ணன் இந்த திரியிலும் எஸ். ஒளிச்சு நிண்டு பச்சை அடிக்கிறார்🤣. அட லாசெப்பல் பற்றி மட்டும் கதைப்போம் வாங்கோ அண்ணை 🤣.
  6. 🤣 குறிகாட்டுவான் பெயர் பொருத்தம் அந்தமாதிரி. அது சரி குறிகாட்டுவான் புங்குடுதீவுதானே? முதலில் செய்யும் ஜட்டியை கதிர்காம கந்தனுக்கு காணிக்கையா அனுப்புங்கோடாப்பா. அந்தாள் வருச கணக்க்கா வெயிட்டிங்🤣🤣🤣
  7. வாழ்க்கை முடிவில் எம்மை சூழ இருப்பவர்கள், வரும் வரலாறு எம்மை கூட்டி கழித்து பிளஸ் சா? அல்லது மைனசா என ஒரு அறுதி கணிப்பை எழுதும். முன்னோடி போராளி, சமரசமில்லாத சாதிய எதிர்பாளர் என்ற மிக பெரிய பிளஸ். போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்த போது அதை வெளியே இருந்து பலவீனபடுத்த தன்னாலான சகலதையும் செய்த ஒருவர், அதன் மூலம் முள்ளிவாய்க்கால் அவலம் உட்பட்ட அவலங்களில் மறைமுக பங்கெடுத்தவர் என்ற மிக பெரிய மைனஸ். எனது பார்வையில் மைனசே விஞ்சி நிற்கிறது. சார்ந்தோருக்கு அனுதாபங்கள். "What's in a name? That which we call a rose by any other word would smell as sweet." பெயரில் என்ன இருக்கிறது, நாம் ரோசா என அழைப்பதை வேறு எந்த பெயரில் அழைத்தாலும், அது அதே நறுமணத்தையே தரும். -ஷேக்ஸ்பியர்-
  8. தலித் என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் - சிதைக்கப்பட்டவர்கள். இந்திய சாதிய அமைப்பில், சாதிகளின் பிரிவுக்கு வெளியே, அதாவது ஆக குறைந்ததாக கருதப்படும் சாதியிலும் குறைவாக, அதாவது சாதிய கட்டமைப்புக்கு வெளியே உள்ள மக்கள் தான் தலித் என விளிக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் out-cast என்றனர். இதன் மாற்று பெயர்களாக தீண்டதகாதவர் (untouchables) என்பது வழங்கியது. இதை மாற்றி இவர்கள் கடவுளின் பிள்ளைகள், எனவே இவர்களை ஹரிஜனம் என அழைக்க வேண்டும் என்றார் காந்தி. பழைய விகடன், குமுதத்தில் இந்த சொல் கையாளப்பட்டிருக்கும். ஆனால் இப்படி ஒரு பெயரை தமக்கு அளிப்பது தலையை தடவி இழிக்கும் போக்கு (patronizing) என கூறிய அம்பேத்கர் அதை மறுதலித்து, எதை இழிசொல்லாக கூறினரோ அதுவே எம் பெருமை மிகு அடையாளம் என தலித் என்ற சொல்லை முன்னிறுத்தினார். கூடவே அவர் சமைத்த அரசியல் ஆட்டம் இந்த சாதிகளை ஒரு பட்டியலில் இட்டதால் அவர்கள் பட்டியலினத்தவர் (schedule castes) என்றும் வழங்கப்படுகிறனர். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் எழுச்சி, அதை தொடர்ந்து வந்த விசிக, தேவேந்திர குல வேளாளர் சாதிய அமைப்புகளின் எழுச்சி இந்த சொல்லின் பாவனையை, தலித்-மக்கள் மைய அரசியலை அதிகரித்தது. நிற்க, இங்கே ஆரம்பத்தில் நான் கூறிய தலித் என்ற அடையாளத்துள், அதாவது சாதிய கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டம் என இலங்கையின் வடக்கு-கிழக்கில், மூன்று மக்கள் கூட்டங்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு படுகிறது. அவையாவன, பறையர், நளவர், பள்ளர் (தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்). ஆகவே இவர்கள் மட்டுமே இலங்கையில் தலித் என்ற அடையாளத்துக்குள் அடங்க கூடியவர்கள். ஆனால் பிரிதானியர் கூட இவர்களை சாதிய கட்டமைபுக்கு அப்பாற்பட்டோர் என, பட்டியல் இடவில்லை என்பது நோக்கத்தக்கது. ஆகவே, இந்த மூன்று மக்கள் பிரிவினர் கூட, இலங்கையில் outcast ஆக நடத்தபட்டனரா, படுகிறனரா என்பது கேள்விக்குரியது. இலங்கை சாதிய கட்டமைப்பு இவர்கள் மூவரையும் சாதிய கட்டமைபுக்குள் உள்வாங்கியே உள்ளது என்போரும் உளர். அப்படியாயின் இவர்கள் கூட தலித் என்ற அடையாளத்துள் வரார். அதேபோல் இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டம் தனியே இவர்களை மையபடுத்தி மட்டும் அல்ல, அது வெள்ளாள சாதிய அடக்குமுறைக்கு எதிராக, முற்போக்கான ஒரு சில வெள்ளாளர் உட்பட வெள்ளாளர் அல்லாதோரின் உரிமை போராட்டமாகவே அமைந்தது. இலங்கையில் நடந்த, நடக்கின்ற சாதி எதிர்ப்பு அரசியல் - நீங்கள் சொன்ன சாதியினர் + தலித் என்ற அடையாளத்துள் வரும் சாதியினர் அனைவருக்குமான, வெள்ளாள ஆதிக்க எதிர் அரசியலே ஒழிய - அது தலித் மைய அரசியல் அல்ல. உதாரணம் மூலம் சொல்வதாயின், திருமாவளவன் தலித் மக்களின் நலனை முந்தள்ளும் தலித்திய அரசியல்வாதி. பெரியார் பிராமணர் அல்லாதோர் நலனை முந்தள்ளிய பிராமண ஆதிக்க எதிர்ப்பு அரசியல்வாதி. இலங்கையில் திருமாவின் அரசியல் நடக்கவில்லை. இலங்கையில் நடந்தது, நடப்பது வெள்ளாள ஆதிக்க எதிர்ப்பு அரசியல். வரும் காலத்தில் இலங்கையில் நளவர், பள்ளர், பறையர் சாதியிரனரை மட்டும் பிரதிநிதிதுவபடுத்தி ஒரு அரசியல் முன்னெடுக்கப்படின் - அதை தலித் அரசியல் எனலாம்.
  9. இலங்கையில் இன்றளவும் கூட இந்த சொல் பாவனையில் இல்லை. டொமினிக் ஜீவா போன்றோரிடம் நேரடியாக பழகிய போதும், சண்முகதாசன் போன்றோரை பற்றி வாசித்து, கேட்டறிந்ததிலும் இவர்கள் தம்மை தலித்கள் என்றோ, தலித்திய போராளிகள் என்றோ சுய அடையாளப்படுத்தவோ, சமூகம் அவ்வாறு அடையாளபடுத்தவோ இல்லை. தமிழ் நாட்டுக்கே அம்பேத்கருக்கு பின்பு வந்த சொல்தான் தலித். அதை கீழே விளக்குகிறேன். எதிலும் தமிழ் நாட்டை பார்த்து குறி சுட்டு கொள்வதில் சோபா சகதி, வரதராஜ பெருமாள் போன்றோருக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. அதன் ஒரு வெளிப்பாடே இது. இன்றளவும் இலங்கையில் இருந்து, இலங்கைக்காக எழுதும் வடக்கு, கிழக்கு எழுத்தாளர்கள் இந்த சொல்லை அதிகம் பாவிப்பதில்லை. மலையக, மேலக எழுத்தாளரிடம் உண்டு - தமிழ்நாட்டு சாதிய அமைப்பு அப்படியே அவர்களிடம் தொடர்வதால் அது லொஜிக்கலானதும் கூட.
  10. வென்றால் மாலை, வெல்லாவிட்டால் பாடை 🤣
  11. இதெல்லாம் திமுக, அதிமுக வை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. நான் எந்த கட்சியும் சாராதவன். ஆனால் சீமான் வெறுப்பாளன். என்னோடு பந்தயம் கட்ட கேட்டா, முக்கு சந்தில் நின்று… நான் சதாம் ஹுசைனை பார்த்து கேட்கிறேன்… நான் ஜார்புஷ்சை பார்த்து கேட்கிறேன்… என சவால் விடுவது நியாமில்லை🤣.
  12. சிங்கமும், புலியும் இல்லாத நாட்டில் மனிதர்கள் சிங்கம், புலி என அடிபட்ட ஒரே நாடு சிறிலங்காதான்🤣. காட்டில் பெரும்பா லும் ஆண் சிங்கம் இரை தேடுவதில்லை. மனிசி கொண்டு வாறத சாப்பிட்டு விட்டு, ஹாயாக தூங்குவது, ஆட்புலத்தை பாதுகாப்பது, அந்த வேலைக்கு யாரும் கூப்பிடாமலே ஆஜர் ஆவது - இவைதான் அவரின் வேலைகள். அப்ப வீட்டோட மாப்பிள்ளைதானே🤣
  13. வீட்டோட மாப்புள்ள என்றால் மரியாதை அம்மட்டும்தான்🤣
  14. மொழி பெயர்ப்பு - தம்பி வாடா சேர்ந்து விளாடலாம். ப்ளீஸ்டா தம்பி🤣 ஆரம்பத்தில் விஜைக்கு தூது விட்டார். விஜை பெரியாரை தூக்கி கொண்டாடியவுடன் கோபத்தின் உச்சிக்கே போய் லாரில அடிபட்டு செத்துருவேன்னு சாபம் எல்லாம் விட்டார். இப்போ மறுபடியும் தூதுப்படலம். நேற்று இது. இன்று - இந்திய, திராவிட கட்சி தவிர வேறு எல்லாரிடமும் கூட்டணி வைப்பாராம். விஜை அதிமுகவையே 90 சீட் கேட்டு அலற விட்டதாக சொல்கிறார்கள். சீமானை🤣
  15. அதான் இன்னொரு திரியில் இந்த படபடப்பை பார்த்தோமே அண்ணை🤣. சீமான் தனித்து நின்று 2026 இல் எத்தனை வாக்கு வீதம் வாங்குவார் என ஒரு அருமை அண்ணனிடம் பந்தயம் கட்ட கோரினேன் - ஆள் எஸ்🤣. பிகு சீமான் கிடக்கட்டும், லா செஷப்பலுக்கு என்ன ஆயிற்று? கூட்டம், கூட்டமாக ஆபிரிக்க, அரேபிய இளைஞர்கள் மொய்த்து நிற்கிறார்கள். தமிழ் கடைகள் அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை - கொஞ்சம் தள்ளி போய் பார்க் பண்ணலாம் என போனால் வீதியிலேயெ டெண்ட் அடித்து வாழ்கிறார்கள். காரை அங்கே பார்க் பண்ண பயத்தில் இறங்காமலே வந்து விட்டேன். நீங்களாவது பதட்டபடாமல் பந்தயம் கட்ட தயாரா? செய்வீர்களா? செய்வீர்களா?
  16. கட்சியின் கொ.ப.செ பாஜக ஆதரவு பிரச்சாரம் செய்கிறார். அதை அண்ணன் கண்டிக்கவும் மாட்டார், அவரை கட்சியை விட்டு நீக்கவும் மாட்டார். ஆனால் அண்ணனும் கட்டிசியும் பாஜக எதிர் அரசியல் செய்கிறார்களாம் 🤣. எப்படியோ 2026 தேர்தலுக்கு என நல்ல லம்பான அமவுண்டாக அண்ணன் பிஜேபி டம் வாங்கி விட்டார். சொகுசு பங்களா, வெளிநாட்டு ஜீப் என திரைதுறையில் இருந்து சம்பாதிக்க முடியாததை எல்லாம் அரசியலிற்கு வந்து சம்பாதித்து விட்டார். அண்ணனுக்கு எப்போதும் மலர் மாலையும் மாப்பிள்ளை கோலமும்தான். தமது இன உணர்சியை, உழைப்பை அண்ணன் போல தரகர்களிடம் நம்பி இழக்கும் தம்பிகளுக்கு அன்றும், இன்றும், என்றும் பாடை கன்பார்மிடு.
  17. நாயகன் மீண்டும் வரான்… எட்டுத்திக்கும் ஜெயம்தானே🤣
  18. ஓம். எனது வயதை அண்ணளவாக கணித்து விட்டீர்கள். முடி கொட்டவில்லை, தலையில் ஆங்காங்கே வெள்ளி ஓடுகிறது. ஆனால் எண்ணை வைத்து இழுப்பதால் அது தெரிவதில்லை. காதோரம் நரை கொஞ்சம் உள்ளது. ஆகவே இப்போ கிம் ஜொங் பாணியில் காதை சுற்றிலும், தலையின் பின்புறமாகவும் சீரோவில் அடிக்கிறேன். தாடி பர பர என நரைத்து விட்டது. சிலவருடம் வரை கூட சால்ட் பெப்பர் சரிசமானாக இருந்தது. ஆனால் இப்போ 75% க்கு மேல் சால்ட். கருவாடு மீனாகிறது🤣
  19. பம்பலுக்கு இல்லை. உண்மையாகத்தான். 13-21 வயது காலத்தை தவிர மிகுதி காலம் எல்லாம் இதை செய்தே வருகிறேன். தலைக்கு வைப்பதும் நல்லெண்ணைதான். ஜெல் வைத்தால் தலையிடிக்கும். கிரீம் வைதால் சொடுகு முப்போகம் விளையும்🤣
  20. சிங்கத்துக்கு எண்ணை பூசினால், பூசின பிக்குவுக்கு சிங்கம் பாலூத்தி விடும் என்பதால் தவிர்த்திருக்கலாம்🤣. இப்பதான் முடியை வெட்டி நல்லா முழுகி போட்டு, நல்லெணை வச்சு மேவி இழுத்து கொண்டு வந்து யாழை திறந்தேன்….🤣.
  21. தர்மபிரபோ, உங்கள் புரோபைலை ஒரு நோட்டம் விட்டேன்….கருத்துக்களை சராசரியாக இருமாதம் ஒரு முறை பதிந்துள்ளீர்கள். குபேரனை விஞ்சிய கருத்து செல்வம் உங்களிடம் கொட்டி கிடந்தும் ஏன் இந்த கஞ்சத்தனம் 🤣.
  22. எவர் பங்களிப்பையும் குறைக்கும் நோக்கம் அல்ல. ஆனால்… வரலாறு எனும் புத்தகத்தில் சிலர் வசனமாக, இன்னும் சிலர் பந்தியாக, வெகு சிலர் பக்கமாக அமைவார்கள். அந்த புத்தகத்தில் ஒரு அத்தியாயமாக அமைந்தவர்களை, அதே புத்தகத்தில் காற்புள்ளிகளாக அமைந்தவர்கள் கிண்டல் பண்ணும் போது - இதை நினைவூட்ட வேண்டியதாகிறது.
  23. சொல்லுறதுதான் சொல்லுறியள் நல்ல கோழி சாண்ட்விச்சா சொல்லுங்கோ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.