Everything posted by goshan_che
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
மீண்டும் நீங்கள் திரி நெடுக மட்டும் அல்ல, சில வருடங்கள் முன் நான் எழுதியதை கூட வாசிக்காமல் கேள்வி கேட்பதாக தோன்றுகிறது எப்போ. நீங்கள் எஞ்சினியர் என்பதால் சூத்திரம் போல எழுதுகிறேன்😃. பாலியல் வன்கொடுமை = இசைவு (consent) இல்லாமல் உறவு கொள்ளல். Obtaining consent through deception, இசைவை ஏமாற்றி பெறுதல் மூலம் உறவுகொள்ளலும் = பாலியல் வல்லுறவு (ரேப்). இங்கே குற்றசாட்டு இசைவை “திருமணம் செய்வேன்” என்ற ஏமாற்றின் அடிப்படையில் அல்லது கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டேன் என ஏமாற்றி சீமான் பெற்றார் என்பதும், ஆகவே அவர் செய்தது பாலியல் வல்லுறவு என்பதும். இதை சாட்சிய அடிப்படையில் கோர்ட் முடிவு செய்ய வேண்டும். நிச்சயதார்தம் - இதை நிச்சயம் கோர்ட் கவனத்தில் எடுக்கும். ஆனால் ஒருவருக்கு நிச்சயம் ஆனபின், இன்னொருவருடன் காதல் ஏற்பட்டு, அவருடன் திருமணம் செய்யும் நோக்குடன் கூடி வாழ்வது கூட நடக்க கூடியதே. இது நீங்கள் நினைப்பது போல் - ஒரு smoking gun சாட்சி (விஜி அண்ணிக்கு எதிராக) இல்லை. பெரியார் மீது வழக்கு இல்லை ஏன் என்றால் அவர் போனது பாலியல் தொழிலாளியிடம் என்பதை ஏற்கிறேன். ஆனால் சீமான் மீது வழக்கு வந்து விட்டது? ஏன்? அவர் குடும்பம் நடத்தியது பாலியல் தொழிலாளியிடம் அல்ல. மாறாக காதலியிடம் என்பதுதான் விஜி அண்ணி வாதம்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
எதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள்? இந்த விடயத்தில் நீங்களும் வைரவனும் கட்டி பிரண்டதுதான் பக்கம் பக்கமாக உள்ளதே? துவாரகா வீடியோ வந்தபின் அது அவர் என நீங்கள் சொல்லவில்லை. ஆனால் வரமுதல், அருணாவை நம்பலாம், நல்ல செய்தி வரும், என வரப்போவது துவாரகாதான் என்ற தொனியில் நீங்கள் எழுதவில்லையா? அதைத்தான் சொன்னேன்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கதிர்காமரை போட்டதும். “அடியின்” ஒரு அங்கம்தானே தவிர நாய் குலைத்தது என்பதால் திருப்பி அவர் ஒரு போதும் குலைத்ததில்லை. உதாரணம் - பிரிந்த பின் கருணா குலைத்த எந்த குலைப்புக்கும் அவரோ, இயக்கமோ ஏட்டிக்கு போட்டியாக பதில் சொல்லவில்லை. நேற்றே எதிர்வு கூறி இருந்தேன். குற்றம் அற்றவர் எனில் ஏன் சீமான் டெல்லி வரை போய் தடை பெற வேண்டும்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வாழ்துக்கள் புலவர்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ரோவின் ஈழத்தமிழர் விடய தலையீடுக்கு முடிவு திகதி என்று ஒன்றில்லை. யார் போலிகாவை இறக்கினார்கள் - அப்பட்டமான இந்தியன் டெலி டிராமா அது இதே யாழ்களத்தில் குசும்பை காட்டவில்லையா? நான் முன்பே பலதடவை மிக தெளிவாக எழுதிவிட்டேன், சுப முத்துகுமார் கொலை முதல் எப்படி சீமான் மிரட்டலுக்கு பயந்து ரோவின் கைக்கூலி ஆகினார் என்பதை. நான் இதுவரை எழுதிய அத்தனை சந்தர்ப சாட்சி கோர்வையையும் விட்டு விடுங்கள். நேற்று நாம் தமிழர் கட்சியில் Ex-Indian Army Wing என ஒரு விங் இருப்பதும், அவர்கள் சீமானுக்கு துப்பாக்கி பாதுகாப்பு வழங்குவதும், இப்படி வழங்க இந்திய சட்டத்தில் இடம் ஏதும் இல்லை என்பதையும் நான் ஆதாரபூர்வமாக எழுதினேன். ஒரு தமிழ் தேசிய கட்சியில் ஏன் Ex Indian Army Wing? அவர்களை பார்த்தால் எவரும் ரிட்டையர் ஆன ஆட்கள் இல்லை. முடி நரைக்காத கட்டுமஸ்தான ஆபீசார்கள். இராமதாஸ்களுக்கு, திருமாவுக்கு, இன்னும் எத்தனையோ பேருக்கு இல்லாத இந்த பாதுகாப்பு படை ஏன் சீமானுக்கு மட்டும்? ஏன் என்றால் சீமான் ரோவின் ஏஜெண்ட். ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் கூட சீமான் மீது கைவைக்காமைக்கு இதுவே காரணம். இதுமட்டும் அல்ல சுப முத்துகுமார் கொலையை ரோ செய்ய அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், சீமானும் அன்றை திமுக அரசும், குறிப்ப்பாக ஜாபர் சேட். இதுதான் சீமானின் ரோ பின்ணணி. 👆நாதகவின் ex Indian Army wing என்ற பெயரில் சீமான், வீடு, குடும்பத்தை சூழ நிறுத்தபட்டிருக்கும் “ ஆயுதம் தாங்கிய அதிகாரிகள்”
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இதை கருத்து வெற்றிக்காக எழுதாமல் விடவில்லை. இது மிகவும் வெளிப்படையாக தெரியும் விடயம் என்பதால் இதை எழுதவில்லை. நிச்சயமாக இதை பாவித்து சீமான் விமர்சிக்கும் அத்தனை பேரும் அரசியல் செய்கிறனர். பிஜேபி அதன் கூட்டணி கட்சியான பாமக ஆதரவு கொடுக்கிறது. அதிமுக விஜை நழுவலில் உள்ளார்கள் இந்த கால தாமததிற்கு அனைவரையும் விட மிக முக்கிய காரணம் சீமான். ஒவ்வொரு முறை இந்த வழக்கு மேலே எழும் போதும் தன் அரசியல் சக்தியை பாவித்து அதை முடக்கியவர் சீமான். ஜெ - காலத்தில் இந்த வழக்கை அதிமுக கையில் எடுக்கும் என பயம் காட்டியவுடன் - அவருக்கு ஆதரவு வழங்கி வழக்கை முடக்கினார். எடப்பாடி காலத்திலும் கனிம மணல், தூத்துகுடி, என பலதில் “சித்தப்பா” எடப்பாடி ஆதரவு நிலையை எடுத்து வழக்கை முடங்க செய்தார். திமுக வந்து விஜி அண்ணி திரும்பி வந்ததும், அவருடன் ஜீவனாம்சம் பேச்சு, உதயநிதியிடம் நள்ளிரவில் போன் பேச்சு என வழக்கை முடக்கினார்… மிக முக்கியமாக நீங்கள் எல்லோரும் கவனிக்க தவறும் விடயம் ஒன்று - இப்போதும் கூட இந்த வழக்கு பொலிஸ் ஸ்டேசனில் முடங்கித்தான் கிடந்தது. ஆனால் சீமான் தானே ஹைகோர்ட் போய் வழக்கை தள்ளுபடி செய்யும் படி கேட்டார். அவரின் கெட்ட காலம் ஒரு நேர்மையான நீதிபதி முன் வழக்கு போக - அவர் வழக்கை துரிதபடுத்த ஆணையிட்டார். இப்போதும் வழக்கை துரிதமாக நடத்த உதவுகிறாரா? இல்லையே. விசாரணைக்கு போகமாட்டேன் என உதார்விட்டு பின் போனார். நாளை டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு போய், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை தடை செய்ய கோருகிறார் (நிச்சயமாக இது அமித்ஷா ஏற்பாடுதான்). இப்போ சொல்லுங்கள் - இந்த வழக்கை இழுத்தடிப்பது சீமானா இல்லையா?
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
மேலே எழுதியது எனக்கான நினைவூட்டலும்தான். அது யாவரும் அறிந்த உண்மைதான் எனிலும் கயல் அண்னியின் தாய், காளிமுத்துவின் இரெண்டாம் தாரம் என்பதை நான் எழுதினேன். அது தேவையில்லாதது.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
மீண்டும் நினைவுபடுத்துகிறேன். பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவர்களுக்கும் சட்ட பாதுகாப்பு உள்ளது. ஒரு பாலியல் தொழிலாளியிடம் காசு கொடுத்து சேவையை பெற வேண்டும். இல்லாமல் நான் உன்னை கட்டி கொள்கிறேன் என ஏமாற்றி சேவையை மட்டும் பெற்றதோடு நில்லாமல் அவரின் பணத்தில் சாப்பிட்டும் இருந்தால் - அது குற்றமே. பிகு இது என் அப்பம்மா எனக்கு சொன்னது. நானும் பலருக்கு யாழுக்கு வெளியே சொல்வது. ஒரு பெண்ணின் உள்வீட்டு விடயங்கள் பற்றி நாம் கண்ணால் கண்டால் ஒழிய - கதைக்ககூடாது. நமக்கு பெண்பிள்ளைகள் இல்லாது கூட இருக்கலாம், ஆனால் நாளை மருமக்கள் வருவார்கள், பேரப்பிள்ளைகள் வருவார்கள். #பழிப்பு படலையில் ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது.
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
சும் இப்போ சேர்ந்து போட்டி என சொன்னது இதனால்தான். மாவை இல்லாதவிடத்து கிளிநொச்சி தவிர ஏனைய இடங்களில் பலரை சேர்த்து சும் ஒருவழியா முதலவர் ஆகப்பார்கிறார். அப்படி வந்தால் சிறியை விட பதவியில் மேலே போய்விடுவார்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உங்கள் விஜயலட்சுமி வந்து போகும் டைம்லனையும், சீமான் அரசியல் ஜம்ப் அடிக்கும் டைம்லைனையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை உறைக்கும். நீங்கள் உங்கள் “ஆண்கள் சங்கம்” கண்ணோட்டாதில் (பழைய ஐடி காலத்தில் இருந்து) இதை பார்பதால் பலதை தவறவிடுகிறீர்கள். விஜி அண்ணி இங்கே தான் தான் முதல் மனைவி, கோவிலில் மாலை மாற்றினோம் என்கிறார். கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாற்றினார் ஆகவே அவர் என்னுடன் வைத்த உறவு பாலியல் வல்லுறவு என்பது அவர்வாதம். இன்னொரு விசயம். உங்களுக்கும் இதே போல் எழுதிய ஏனையோருக்கும் - பாலியல்தொழிலாளி என்றாலுமே கூட அவர்களும் மனிதர்கள்தான். எமக்குரிய சட்டம் தான் அவர்களுக்கும். ஒரு பாலியல்தொழிலாழியை திருமணம் செய்வதாக பொய்சொல்லி ஏமாற்றி, உறவு வைப்பதும் குற்றம்தான். சீமான் முதலில் எதுவும் இல்லை என மறுத்து விட்டு இப்போ வெறும் பாலியல்தொழிலாளியுடனா உறவே அது என்கிறார். இதில் விஜயலட்சுமி ஆணாலவும், சீமான் பெண்ணாகவும் இருந்தால் என்ற உங்கள் கேள்விக்கு விடை - அப்படியே இருந்தாலும் - இது விசாரிக்கப்பட வேண்டிய வழக்குத்தான். இங்கே நாம் எப்போதும் வலியுறுத்தியது - நியாயமான விசாரணையை மட்டுமே. இப்போ அரிதாக ஒரு நீதிபதி - ஏன் இத்தனை ஆண்டு தாமதம் என கேட்டு வழக்கை துரிதப்படுத்தி உள்ளார். சீமான் குற்றம் ஏதும் இழைக்காவிடில் இதற்கு சந்தோசப்பட்டு, கேட்டவுடன் பொலிஸுக்கு போய், விசாரணைக்கு ஒத்துழைத்து, வழக்கை வெல்ல அல்லவா முயலவேண்டும்? ஏன் டெல்லிக்கு ஓடி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் நேர்மையான தீர்ப்புக்கு, டெல்லி உச்ச நீதிமன்றத்தை தடை போட கோருகிறார்? தமிழ்தேசியத்தை சீமான் தூக்கி நிற்பதால் அவரின் மீதான பாலியல் வன்புணர்வு குற்றசாட்டை நாம் மழுங்கடிக்க வேண்டும் என்பது மிக கீழ்தரமான நிலைப்பாடு. சீமான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, வழக்கை டெல்லி போய் முடக்காமல், சென்னை ஹைகோர்ர்டில் தான் நிரபராதி என்பதை நிறுவ வேண்டும். அப்போ நீங்கள் போலிக்காவை முந்தள்ளி அவர் துவாரகாதான் என சொல்லியது - அருணா ரோவின் கையாள் என்பதை வெளிகொணர? அதேபோல் இப்போ சீமானை ஆதரிப்பதும் - அவர் ரோவின் ஆள் என இனம் காட்ட? நாங்கள்தான் அவசரடுகிறோம்😂? அப்படியா அண்ணை? பிகு நண்பா..ஓ…நண்பா.. என் காதென்ன punchbag ஆ? இந்த குத்து குத்துகிறீர்களே? காதுகள் பாவம் இல்லையா? (இதன் ஒரிஜினல் வேர்ஷனில் கெட்டவார்த்தை இருப்பதால் மாற்றியுள்ளேன்).
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அவர் பாலியல் தொழிலாலிகளிடம் போனார் உண்மைதான் - இங்கே சீமான் பாலியல் தொழிலாலிகளோடு போனார் என்பது அல்ல வழக்கு. வழக்கு சீமான் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது. புகார் அந்த பெண் கூறியது. பெரியார் மீதோ வேறு எவர் மீதோ இப்படி ஒரு பெண் புகார் கூறவில்லை. இதுதான் வித்தியாசம். இப்போ சீமான் அவரோடு கணிசமான காலம் கூடி வாழ்ந்த பெண்ணை - பாலியல் தொழிலாளி என்கிறார். அப்போ சீமான் யார்? Pimp ஆ? பெரியார் மட்டும் அல்ல, எனது பாட்டனர், காந்தி உட்பட அநேகர் அப்போ பால்ய திருமணம்தான். அது 80 வருடம் முந்திய உலகு.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
அதை இங்கே சுட்டிகாட்டியது. உங்களை தாக்க அல்ல. மாறாக நீங்கள் ஒரு சமூக பிரமுகர். உங்கள் சொல்லை கேட்பவர் பலர் இருப்பார்கள். போலிக்கா, அருணா, சீமான் போன்றவர்களிடம் நீங்களும் ஏமாந்து ஏனையோரும் ஏமாற துணை போகாதீர்கள் என்பதை சொல்லவே. நீங்களே பலதடவை எழுதியுள்ளீர்கள் உங்களுக்கு சீமானில் நல்ல அபிப்பிராயம் இல்லை என. கன விடயங்கள் தெரியாது என. அப்போ ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? ஏன் சீமான் ex Indian Army wing ஒன்றை வைத்துள்ளார் என யோசித்து கூட பார்க்காமல் அதை ஏதோ தமிழர் இராணுவம் என்ற பீடிகையோடு பகிர்கிறீர்கள். நீங்கள் ஏமாந்தால் ஓக்கே. மக்களையும் கூடவே அழைத்து சென்று கிணத்தில் தள்ளி விடாதீர்கள்🙏. இப்படி சொன்னது விஜி அண்ணி விவகாரத்துக்கு அல்ல. தாயை புணருமாறு பெரியார் கூறினார் என சீமான் ஆதரமில்லாத ஒன்றை கூறினார். மனோதத்துவத்தின் படி projection என்ற ஒரு விடயம் உள்ளது. தம் மனதில் இருக்கும் செக்ஸ் சைக்கோ எண்ணங்களை, இப்படி இன்னொருவர் செய்தார் அல்லது கூறினார் என “சுமத்துவதுதான்” இந்த projection. அப்படி சொல்லிய திரியிலே இது பற்றிய விளக்கத்யும் கொடுத்தேன். நீங்கள் எப்போதாவது யாழுக்கு வருவதால் அது கண்ணில் படவில்லை போலும்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இரெண்டு வித்தியாசங்களை கவனிக்க தவறுகிறீர்கள். இதே போல் எந்த தமிழ் நாட்டு அரசியல்வாதியின் மீதும் எந்த ஒரு பெண்ணும், பொலிஸ் முறைப்பாடு, கோர்ட் எண்டு போகவில்லை. அப்படி போனால் அவர்கள் நடத்தையும் தூக்கி பிடிக்கப்படும். சீமான் ரோவின் பணிப்பில், ஈழதமிழர்-தமிழக தமிழர் இடையே பகைமூட்டும் ஒரு ஏஜெண்ட் என்பது என் நம்பிக்கை. ஆகவே அவரை அடிக்க கிடைக்கும் சந்தர்பத்தை எல்லாம் பயன்படுத்தி கொள்வேன். இது என் நிலைப்பாடு மட்டுமே.
-
சீமானுக்கு குட்நியூஸ்? நடிகை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனு.. மார்ச் 3ல் விசாரணை
பாபர் மசூதி புகழ் உச்ச நீதிமன்றம் அமித் ஷா கையில் என்பதும் சீமான் அங்கே விசாரணை இன்றி விடுவிக்கபட வாய்ப்பு அதிகம் என்பது யதார்த்தம். ஆனால் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு வடிவில் தீர்ப்பு கிடைக்கும்.
-
சீமானுக்கு குட்நியூஸ்? நடிகை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனு.. மார்ச் 3ல் விசாரணை
அமித்ஷா வழிப்படி நாளைக்கு சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லும் என்பதை நீங்கள் இருவரும் ஊகித்து விட்டீர்கள் போலுள்ளது. அரசியல் தரகுவேலை செய்து நீதிமன்றில் இருந்து தப்பலாம். ஆனால் மக்கள் மன்று 2026 இல் என்ன தீர்ப்பு கொடுக்கும் என பார்ப்போம்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
தலைவர் அடிக்கு மட்டுமே அடியை பதிலாக கொடுத்தார். அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை, அவர் அதே பாணியில் கையாளவில்லை. ஒரு கேவலமான மனிதரின் பாலியல் ஒழுங்கீனம் குறித்த திரியில் தேவையில்லாமல் தலைவரை செருகியவர் நீங்கள். ஆகவேதான் அந்த பதில்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
விஜி அண்ணிக்கான நீதி கிடைக்காமல் போகவே வாய்ப்பு அதிகம். நாளை அமித்ஷா கட்டளைபடி டெல்லி நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க தடை போடுவார்கள் என்றே நினைக்கிறேன். விஜி அண்ணி விடயத்தில் நான் எப்போதும் கோரி நின்றது, நேர்மையான பொலிஸ் விசாரணை, வழக்கு என்பன மட்டுமே. மசூதி இருந்த இடத்தில் - ராமர் கோவில் இருக்கவில்லை, ஆனால் மசூதியை உடைத்த இந்துக்கள் மணம் புண்படும் எனவே இப்போ இராமர் கோவில் கட்ட வேண்டும் என தீர்ப்பு கொடுத்த இந்திய உச்ச நீதிமன்றம் இதில் நீதியை காப்பாற்றும் என நான் நம்பவில்லை. ஆனால் நீதி தோற்கிறது என்பதால் மட்டும் அதை பேசாமல் இருக்க முடியாது. எனக்கு உள்ள வழி யாழில் - அதிலாவது பேசினேன் என்ற மனநிறைவு இருக்கும். கருணா, பிள்ளையான், சீமான் என பாலியல் ஒழுக்கம் கெட்டவர்களை தேடி தேடி போய் ஆதரிக்கும் உங்களுக்கு என் செண்டிமெண்ட் விளங்க கஸ்ட்மாயிருப்பது வியப்பல்ல.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
சந்திரிக்கா மீது ஒரு பாடல் வரி கொஞ்சம் விகல்பமாக இருந்தமைக்கே அதை மாற்ற சொல்லி ஓடர் போட்ட கண்ணியவான் தலைவர். தனது நடத்தையால் - பாலியல் அவதூறு சொல்ல கூட முடியாத இடத்தில் அவர் இருந்தார். ஆனால் பிள்ளைகளை வெளியே படிப்பிக்கிறார், அரண்மனையில் வாழ்கிறார், ஸுவிமிங் பூல் கட்டினார் என அவர் மீது சொல்லபட்ட அவதூறுகள் எதையும் அவர் தானோ, தான் சார்ந்தோரோ பதில் அவதூறால் எதிர்கொள்ளவில்லை. இது யாரின் ஸ்டைல் தெரியுமா? நீங்கள் வாக்கு சேகரித்த கருணாவின் ஸ்டைல் - அவர்தான் போகும் இடமெல்லாம் கிளை போடுபவர்🤣. பாலியல் ஒழுக்ககேட்டால் அமைப்பில் இருந்து துரத்தப்பட்டவர். அல்லது நீங்கள் ஆதரித்து எழுதிய பிள்ளையானின் ஸ்டைல் -அவர்தான் TRO சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து கொலையும் செய்தவர்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
உங்கள் லிஸ்டில் அண்ணன் லேட்டஸ்டாக சொன்னதையும் 4வது பொயிண்டாக சேர்த்து கொள்ளுங்கள். செத்து போன தடா சந்திரசேகரனுடன் (மாவீரரை கேவலபடுத்தியவர்) - விஜி அண்ணி தனக்கு துணைவியாக வர டீல் பேசினாராம் 👇. இந்த ஜென்மத்தின் கேவலம்கெடும் தன்மைக்கு எல்லையே இல்லை. கொசுறு இப்போ சீமான்-விஜி பற்றிய சில விடயங்கள் புதிதாக அறிந்து கொண்ட கயல் அண்ணி செம அப்செட்டாம். அதனால்தான் வழமைபோல் இந்த முறை போலிஸ் விசாரணக்கு சீமானுடன் வரவில்லையாம். மாதம் ரூ.30,000..'சின்ன வீடாக' வைத்துக் கொள்ள பேரம்.. நடிகையின் புது வீடியோவுக்கு சீமான் சூடான பதில் Mathivanan MaranUpdated: Sunday, March 2, 2025, 16:51 [IST] தூத்துக்குடி: தம் மீது பலாத்கார புகார் கூறிய நடிகை ஒரு ப்ளாக் மெயில் பேர்வழி; பாலியல் தொழிலாளி; மாதம் ரூ.30,000 கொடுத்து தம்மை சின்ன வீடாக வைத்துக் கொள்ள பேரம் பேசியவர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தம்மை பாலியல் தொழிலாளி என சீமான் விமர்சித்ததைக் கண்டித்து நடிகை வீடியோ வெளியிட்டதற்கு பதிலடியாக சீமான் இதனைத் தெரிவித்துள்ளார். அவ (நடிகை) என்னிடம் வைத்த அதிகபட்ச கோரிக்கை என்ன தெரியுமா? என் மூத்தவரிடம்.. அவர் இறந்துவிட்டார்.. மாதம் ரூ.30,000 கொடுத்து என்னை மெயின்டெயின் செய்ய சொல்லுங்க என்பதுதான் அந்த நடிகை பேசிய பேரம்.. அதாவது தன்னை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ள சொல்லி பேரம் பேசினார். அப்போது எங்கப்பா பாரதிராஜா கேட்டார்..டே மகனே! என்னதான் வேணும் அவளுக்கு என கேட்டார்.. அதற்கு, ஒன்றுமில்லை.. ரூ.30,000 கொடுத்து என்னை வைத்துக் கொள் என்கிறாள்.. நான் வைத்துக் கொள்ளவா? உன் மருமகள் என்னை சோற்றில் விஷத்தைப் போட்டுக் கொல்வா.. பரவாயில்லையா? என்றேன். உடனே, அப்படியா சொல்றாடா? என கேட்டவர் பாரதிராஜா. Also Read இதை அவ (நடிகை) சொன்னாளா இல்லையா? என கேளுங்க..நானும் கண்ணியம் காத்து 15 ஆண்டுகள் வாயை மூடினேன். இனி எல்லாம் முடிவுக்கு வந்துருச்சு இல்லையா..அவ என்னைக்கு மரியாதை கொடுத்தா? நீ என்னை, என் குடும்பத்தை எல்லாம் மரியாதை இல்லாமல் பேசுற.. அப்ப நீ என்னை காதலித்தது என்பது எல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று? ஆங்கிலத்தில் ப்ளாக் மெயில் என்போம் இல்லையா. பணம் பறிக்கிறது..இடை மறித்து இடை மறித்து பணம் பறிக்கிறவருக்கு பெயர் என்ன சொல்லுவீங்க? Recommended For You என்னை எல்லோரும் சேர்ந்து பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு காரணம்.. ஒரு பாலியல் தொழிலாளிக்காக.. அதை எப்படி ஏற்பது? மானங்கெட்ட நீங்களே அப்படி பேசும்போது தன்மானத்துக்காக போராடும் மகன் எப்படி பேசனும்? மானத்துக்காக உயிரை விட்டவன் கூட்டத்தில் வந்த நான் எப்படி பேசனும்? எல்லோரும் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார். https://tamil.oneindia.com/news/tuticorin/seeman-claims-actress-is-a-blackmailer-alleged-rs-30-000-deal-684359.html
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் கருணாநிதியோ வேறு எந்த தமிழக சினிமாகாரரோ, அரசியல்வாதியோ கீழ்கண்ட நரகல் வேலையை செய்யவில்லை👇. Living/earning off the proceeds of prostitution அதாவது ஒரு பாலியல் தொழிளாலி, பாலியல் தொழிலை செய்து கொண்டுவரும் பணத்தில் வாழ்வது - இந்திய சட்டப்படி இதுவும் குற்றம்தான். ஒரு பாலியல் தொழிளாலியுடன் குடும்பம் நடத்தி, அவர் உழைத்து கொண்டு வரும் பணத்தில் வாழ்ந்த கேவலம் கெட்ட பிறப்புகள் எல்லாம் பிரபாகரனின் மகனாம் - அதுக்கு முட்டு கொடுக்க ஆட்கள் வேறு.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
என்னத்தை சொல்லி என்ன அண்ணை… நீங்கள் போலிகளை நம்பி ஏமாறுபவர் என்பது யாழில் தெள்ள தெளிவாக நிறுவப்பட்ட ஒரு விடயம். போலிகா மட்டும் அல்ல, அண்மையில் போஸ்கோ, கிருபா விடயத்திலும் நீங்கள் கிருபாவை பற்றி முரண்பாடாக எழுதியதை சுட்டி இருந்தேன். அதைத்தான் நான் மேலே சுட்டி காட்டினேன் தவிர தூற்றல் அல்ல. இப்படியான உங்கள் வேலைகள் மூலம் நீங்கள் மேலும் மேலும் நச்சுகளை ஊக்குவிக்குறீர்கள். இதற்கு நீங்கள் கொடோனிலேயே இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். வறுத்தல் - நிச்சயமாக, கருணா, கேபி, பிள்ளையான், சீமான் இவர்களுக்கு ஆதரவாக எந்த கருத்து எழுந்துதாலும், அதை என்னால் முடிந்தவரை திரத்தி அடிப்பேன். கோஷான் எழுதுவதால் உண்மையை கூட நான் கண்டுகொள்வதில்லை என்பதில் பல்லிளிக்கிறது உங்கள் மெச்சூரிட்டி🤣. உண்மை யார் சொன்னாலும் உண்மைதான். முடிந்தால் சீமான் பற்றிய என் விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள், பேடித்தனமாக கீழே உள்ளது போல் “இவர்கள் எல்லாம் தமிழின துரோகிகள்” என எழுதாமல். நீங்கள் போலிக்கா, அருணாவுக்கு முட்டு கொடுத்து, அது உண்மை என முன் தள்ளி இந்த இனத்துக்கு செய்த துரோகம் போல் நான் ஒரு போதும் செய்ததில்லை.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
மாகாணசபை முதல்வர் order of precedence அடிப்படையில் ஒரு கபினெட் அமைச்சருக்கு நிகரானவர். அதன் பின் மூன்று படி கீழேதேன் பா.உ. சிறிதரனுக்கு முதலவர் ஆசை இருப்பதாகத்தான் கேள்வி. சிறி முதல்வர் வேட்பாளர் ஆனால், சும் எம்பி ஆகி விடுவார். இல்லை எண்டால் சும் முதல்வர் வேட்பாளர் ஆகி விடுவார். சிறிதரனின் நிலைமை டெலிகேட் பொசிசன்🤣.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இப்போதும், எப்போதும். எதிலும்.- "சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல் Vishnupriya RUpdated: Sunday, March 2, 2025, 14:36 [IST] இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை, நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் உன்னை சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என கண்ணீருடன் அந்த வீடியோவை நடிகை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். India-க்கு போட்டியாக China களம் இறக்கும் Pakistan வீரர் அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். சீமான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவரது கட்சியில் பெண்கள் எப்படித்தான் இருக்கிறார்களோ? என திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பது குறித்து நிருபர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "என்னை பாலியல் குற்றவாளி என சொல்வதற்கு நீங்கள் (கனிமொழி) யார், நீங்கள் என்ன நீதிபதியா, என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்தான் பெண், அவருக்கு மட்டும்தான் மனமிருக்கிறதா, அவருக்கு மட்டும்தான் காயம்படுமா? என் வீட்டில் பெண்கள் இல்லையா, என் தாய், என் சகோதரிகள் எல்லாம் இல்லையா, என்னை நேசிக்கும் மனைவி இல்லையா? அவருக்கெல்லாம் காயம்படாதா? நான் கேட்டதில் உங்களுக்கு கண்ணியம் குறைந்துவிட்டது என்றால் நீங்கள் செய்யும் செயலுக்கு என்ன பெயர், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பயந்து என்னை பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள். வழக்கு விசாரணையில் இருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும்? என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ந்து அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள். Enjoyment without responsibility என்று உங்களது தலைவர் பெரியார்தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில்தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறு, இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். நடந்தது என்ன: திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர் 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் 376 ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு அந்த நடிகை முதல் மனைவியா என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் சீமான் மீதான வழக்கை விசாரித்து 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்க போகிறது, என்ன மாதிரியான கண்டனங்களை தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/am-i-a-prostitute-seeman-you-have-to-answer-my-tears-says-actress-684309.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards அண்ணன் in self destruction mode 🤣. பாலியல் தொழிலாளியோடு வருடகணக்கில் குடும்பம் நடத்துபவருக்கு என்ன பெயர்? டபுள் MA? 🤣 பிகு இந்த வழக்கு வெல்லலாம், தோற்கலாம். சீமான் இதை எதிர்கொண்ட, கொள்ளும் வகையில் தனக்கு தானே ஆப்புகள் பலதை சொருகி கொண்டுள்ளார். - நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.