Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஓட விட்டுத்தான் சொல்ல முடியும். என் கருத்து: டிரம்ப் உண்மையில் இப்படி கேட்பது, கனிமத்தை பெற அல்ல. மாறாக உக்ரேன் தரமுடியாத ஒன்றை கேட்கிறார். பின் அதை சாட்டி உக்ரேனை முழுமையாக கைவிடுவதே திட்டம். டிரம்பிடம் என்ன செய்தாலும் அது ரஸ்யாவின் நலனை காப்பதிலேயே முடியும். செலன்ஸ்கி துருக்கியை நெருங்குவதே சாலச்சிறந்தது என நினைக்கிறேன். டிரம்பையும், புட்டினையும் ஒரே நேரத்துல் வெட்டி ஆட முடியும் என்ற தைரியம் ஐரோப்பியருக்கு வந்திருப்பதாக படுகிறது. மேர்சின் பேச்சு, நேற்று டிரம்ப் முன்னிலையில் மக்ரோன் நடந்து கொண்ட விதம், இன்றைய ஈயுவுக்கு 25% வரி அறிவிப்பு… போன தடவை போல அன்றி, இந்த முறை ஈயு உயர்மட்டம் டிரம்ப்பை அவர் பாணியில் டீல் பண்ண முனைகிறது. இது டிரம்ப் புட்டினின் கூலி என்பதை கண்டுகொண்டதாலும் இருக்கலாம். பார்ப்போம் நாளைக்கு ஸ்டாமர் போய் காலில் விழுகிறாராரா அல்லது மக்ரோன் எடுத்த நிலையை எடுக்கிறரா என. அப்போ தெரியும் ஈயூ அணியில் பிரித்தானியாவும் உள்ளதா என. நிச்சயம் இவர்கள் சீனா பக்கம் தம் பார்வையை திருப்ப வேண்டும். ஏனைய மேற்கு நாடுகள் இல்லாமல் சீனாவுடன் ஒரு வர்தக போரை டிரம்ப் தொடங்கினால் தோல்வி நிச்சயம். புட்டினின் கையாள் டிரம்ப் விரும்புவதும் இதுவாகவே இருக்கலாம். ஆனால் ஈயூ சும்மா இருக்க முடியாது. டிரம்பை தேர்வு செய்தது அமெரிக்கா, அதன் பலனாக அவர்கள் இராணுவ, கேந்திர, பொருளாதார, இராஜதந்திர பின்னடைவை சந்தித்தால் அதை அமெரிக்க மக்கள்தான் அனுபவிக்க வேண்டும், நிவர்த்தி செய்ய வேண்டும்.
  2. யாழ்கள உறவுகளுக்கு short term memory loss என நினைக்கிறேன். சஞ்சய் இராமசாமி மாதிரி கருத்து எழுதுகிறார்கள். கீழே உள்ளதை உங்கள் உடம்பில் பச்சை குத்தி வைத்து கொள்ளவும். கருத்து எழுதமுன் இதை படித்து விட்டு எழுதவும். 2024 டிசம்பரில் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வென்றார் அவர் இதுவரை கடைபிடித்து வந்த அமெரிக்காவின் உக்ரேன்/ரஸ்யா கொள்கையை 180 பாகையால் திருப்பி, கனிம கொள்ளையிலும் ஈடுபட முனைகிறார். டிரம்ப் இப்போ வைக்கும் கனிம கொள்ளை கோரிக்கையை பைடனோ, வேறு எந்த மேற்கு நாடோ வைக்கவில்லை. ஆகவே ஜனவரி 2025 க்கு பின்ன்னான அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை வைத்து 2020-2024 அமெரிக்காவின் உக்ரேன் கொள்கையை மதிப்பிடமுடியாது.
  3. 96 உலக கோப்பை இறுதி ஆட்டம் நினைவிருக்கும். வார்ண் பந்தை துணியால் ஒத்தி ஒத்தி போடுவார். அப்படி இருந்தது பனிப்பொழிவு (அந்த மேட்சில் அவுசுக்கு ஆடிய ரைபில், இந்த தொடரில் அம்பயர்). அதன் பின் நடந்த இன்னொரு தொடரிலும் இறுதி ஆட்டத்தில் பனி பெரும் பங்கு வகித்தது. லாகூரின் எந்த மேட்சிலும் இந்த தொடரில் அவ்வளவு பனிப்பொழிவு இல்லை. ஆனால் அந்த மேட்ச் நடந்தது மார்ச் மாதம் நடுப்பகுதியில். ஒருவேளை மார்ச்சை நெருக்க பனிபொழிவு கூடக்கூடும். நண்பரிடம் கேட்டுபாருங்கள். கொசுறு லாகூர் இப்போதும் பஞ்சாபில்தான் உள்ளது. Pakistani Punjab. 1992 செமிபைனலை நினைச்சா இப்பவும் ரத்த கண்ணீர் வரும்😭
  4. ஆக மொத்தத்தில். ஒரு பிரித்தானிய பிரஜைக்கு, அவரின் பெற்றார் எங்கே பிறந்தார்கள் என்பதை மட்டும் வைத்து, வேலை மறுக்கப்படாது.
  5. தலையிடமுடியாது என்பதை விட. தலையிட வேண்டிய தேவை இங்கே எழவில்லை. நீதிமன்றம் ஏன் இதில் தலையிட வேண்டும்? வழக்கு போட்டவர் குற்றத்தை நிருபிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் தன் நிரபராதி என ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். பிரெஞ்சு நீதிமன்றங்கள் போல், பிரித்தானிய நீதிமன்றங்கள் inquisitorial அல்ல. அதேபோல் இது ஒரு public inquiry யும் அல்ல. இது உங்கள் speculation. ஒரு ரேசிஸ்ட் அதிகாரி பொய்யாக அந்த பையனை discourage பண்ண சொல்லி இருக்கலாம். உங்களை போல் விளக்கம் பத்தாமல் அந்த அதிகாரி இப்படி சொல்லி இருக்கலாம். அந்த அதிகாரி அப்படி எதுவும் சொல்லாமல், வழக்கில் இருந்து தப்ப அந்த பையன் பொய் சொல்லி இருக்கலாம் இதில் எதுவாவது ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதுதான் நடைமுறை என்பது அல்ல.
  6. நான் சொல்வது தியரி அல்ல. Both in theory and in practice எழுத்திலும் நடைமுறையிலும். அதுதான் என் வாழ்ந்த அனுபவத்தை my own lived-experience எழுதினேன். Windrush - ஒரு scandal -அதாவது சட்டத்திலோ, guidance இலோ, இல்லாதாவிடயத்தை, சட்டத்தை மீறி செயல்பட்டது. ஒரு இடத்தில், விடயத்தில் scandal நடந்தத்தால் அனைத்து விடயத்திலும் அப்படி என கூற முடியாது. குறிப்பாக வாழ்ந்த அனுபவம் lived experience வேறாக இருக்கும் போது. யாரும் தலையிடமாட்டார்கள் ஏன் என்றால் அது ஒருவர் தான் வழக்கில் இருந்து தப்ப சொன்ன பொய். எத்தனையோ வெளிநாட்டில் பிறந்தவர்களே DV கிளியரன்ஸ் எடுத்திருக்கும் போது, ஒருவர் தான் தப்ப, ஒரு defence case argument இல் இப்படி சொன்னால் அதை யாரும் கணக்கில் எடுப்பதில்லை.
  7. குடுத்து வச்ச மனிசன் ஜி நீங்கள் ஆப்கானிஸ்தான் 300 தாண்டியவிடனேயே இங்கிலாந்து கிட்டப்போய் தோற்கும் என நினைத்தேன். ஆனால் ஒவர்டன் நிண்டு ஆடியபோது மாற்றியும் யோசித்தேன். வாழ்த்துக்கள் முதல்வர்💐💐💐. இவ்வண், மாண்பு மிகு துணை-முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர்🤣
  8. 👍 கடைசி ஐந்து ஓவர் பார்த்தேன். தோத்தாலும் இங்கிலாந்து டிக்கெட் காசுக்கு குறை வைக்காமல் தோத்தார்கள்🤣.
  9. எனக்கு மட்டினில் சுழல் பந்து வீசி அனுபவம் இல்லை. ஆனால் 13 கீழ் போட்டியில் ஒரு மணிக்கட்டால் சுழற்றுபவர் மட்டினில் நல்லா போட்டார்.
  10. ஓம்…இதை மாற்ற கொஞ்சம் நேரம் எடுத்தது. வேகபந்தில் பல விடயங்கள் ரூட்டின் குழம்பினால் குழம்பிவிடும். கிட்டதட்ட மசள் மெமரி போல. அல்லது எனக்குத்தானோ தெரியாது. இரெண்டும் என நினைக்கிறேன்.
  11. வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் (தலைவர்), மானம் காத்தோர் (பெரியார்) சரித்திரம் தனிலே நிற்கின்றார்❤️. நன்றி நன்றி. சூழமைவு இல்லாமலும் பார்க்கலாம் என்பதில் உடன்பாடே.
  12. ஓம். யாழில் ஒரு திரியாக இந்த செய்தியை பகிர்ந்தேன்.
  13. வழமையாக யார் வெளியே போனாலும் சீமான் நாக்கை சுழட்டுவார். ஊழல் என்பார். கட்டுப்பாடு இல்லை என்பார். ஆனால் இந்த முறை ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் முதலாவது செய்தியாளர் சந்திப்பில் இருந்த “போனால் போகட்டும் போடா” வில் இருந்த வீரியம் கூட இன்று இல்லை. தங்கச்சி எந்த கழகத்தில் இணையபோகிறார் என்பது தெரியும், தங்கச்சிக்கு வாழ்த்துகளை நான் கூறிவிட்டேன் என கிழக்கு சீமை விஜயகுமார் ரோலினை எடுத்து கொண்டார் 😂. காரணங்கள் பல: காளியம்மாள் மீது எந்த குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை / அல்லது அதைவிட பெரிய சீமானை பற்றிய ஆதாரம் காளியம்மாள் வசமிருக்க கூடும். தனது விலகலை காளியம்மாள் கையாண்ட விதம். சீமான் மீது எந்த தாக்குதலும் செய்யவில்லை. உடனடியாக வேறு கட்சிக்கு போகவும் இல்லை. சிலமாத காலமாக கட்சியில் இருந்து தான் ஒதுக்கபடுவதை ஏனைய தம்பிகளுக்கு நடைமுறையில் காட்டினார். இடையில் அவர் போட்ட googley யில் யாழ்கள தம்பிகள் இருவர் கூட இனி காளியம்மாள் போக மாட்டார் என நம்பி, என்னை அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டி, பின் மூக்கறுந்து போய் நின்றனர். இதன் பின் அழைப்பிதழ் மூலம் ஒரு திடீர் மீடியா கவனத்தை ஏற்படுத்தி, பின்னர் 3 நாளின் பின் வாய்மூல அறிக்கை விட்டு அதன் பின் விலகலை அறிவித்து…கிட்டதட்ட 10 நாட்கள் மீடியா வெளிச்சம் தன் மீது படும்படி செய்துள்ளார். ஓடி கொண்டிருக்கும் 24/7 தமிழக மீடியாவில் இது சாதாரண விடயம் அல்ல. விஜையின் மாநாட்டு கதை கூட 3 நாளில் அடங்கி விட்டது. விரைவில் கழகம் ஒன்றில் இணையும் போதும் - அது ஒரு பேசு பொருளாகும், ஒரு நிகழ்வில் முக்கிய நிகழ்வாக நடக்கும் என்றே நினைக்கிறேன். இப்படி வழமையாக சீமானின் home turf ஆக இருக்கும் மீடியா வெளியில், சீமானை தாக்காமலே காளியம்மாள் இறங்கி அடிக்கிறார். வழமையாக இங்கே front foot இல் ஆடும் சீமான் வேறு வழியின்றி back foot இல் ஆடுகிறார். காளியம்மாளுக்கு கட்சியில் இருக்கும் மவுசு - இதை பலர் குறை மதிப்பீடு செய்கிறார்கள். ஆனால் நாதகவின் “குலதெய்வம்” என சீமானே கூறியவர் அவர். உண்மையான கட்சியின் அதிகார மையம், சீமான், பாக்கியராசன் என இருந்தாலும் - தம்பிகளை பொறுத்தவரை அறிவிக்கபடாத இரெண்டாம் தலைமையாக இவரே தோன்றினார். கட்சி சாராத மக்கள் மத்தியிலும் சீமானுக்கு அடுத்த அறியப்பட்ட ஒருவர் இவர் மட்டுமே. மீதம் எல்லாம் தம்பிகள் தம்வட்டத்துக்குள் மாறி மாறி முதுகு சொறிந்து கொள்ளும் யூடியூப்பர்கள்தான். காளியம்மாள் விலகல் பல தம்பிகளை சோர்வாக்கியுள்ளது. அவர் தாக்காமல், சீமான் தாக்கினால் - இந்த சோர்வு காளியம்மாள் மீதான பரிவாக காலம் எடுக்காது. பெண் - இன்று வரைக்கும் தமிழ் நாட்டு அரசியலில் ஒரு பெண், ஒரு ஆணை இட்டு, கண்ணை பொதுவெளியில் கசக்கிய பின், அந்த ஆண் அரசியலில் சோபிப்பது கடினம். இதில் சீமானுக்கு ஏலவே ஒரு பெரிய கத்தி கழுத்துக்கு மேலாக தொங்குகிறது. தலித் - அதிக விளக்கம் தேவையில்லை. இப்படியான காரணங்களால் காளியம்மாளை ஏனையோர் போல் பட்டம், பரிசம் கட்டி அனுப்பி வைக்க அண்ணால் முடியவில்லை. கொப்பளிக்கும் வன்மத்தை மறைத்தபடி “சமாளிக்கிறார்”. ஆனால் எவ்வளவு காலம் இப்படி அவரால் வாயை அடக்க முடியும் என்பது கேள்வி குறியே. போதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சீமானின் முதல் எதிரி அவர் வாய் என்பது தெரிந்ததே. இதுவரை கச்சிதமாக காய் நகர்திய காளியம்மாள் - திமுகவுக்கு போய் அனைத்தையும் சைவரால் பெருக்க கூடாது. செய்யமாட்டார் என்றே நினைக்கிறேன்.
  14. என் ஆசைக்கிளி ஆப்கானிஸ்தான் எதிர் என்னை வாழவைத்த தெய்வம் இங்கிலாந்து. டைலமா…டைலமா…டைல..டைல…dilemma 😂. ஆனாலும் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனவே கணித்துள்ளேன். ஒவ்வொரு தொடரிலும் ஒரு banana skin போட்டி இருக்கும். இப்படி ஒரு போட்டியில் வழுக்கி விழுவதில் இங்கிலாந்தை அடிக்க ஆள் இல்லை என்பது வரலாறு சொல்லும் பாடம் 😂. இந்த நிலையைத்தான் ஆங்கிலத்தில் catch 22 என்பார்கள். தமிழில் ஆப்பிழுத்த சிங்கம் (😂) எனலாம்.
  15. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பிரசாந்த் கிஷோர் சென்னை வந்து நேரே விஜை வீட்டுக்கு போனாராம். அங்கே ஆதவ், ஆனந்த், ஆரோக்கியசாமி (3ஆக்கள்😀) மந்திராலோசனைக்கு பின் நாளை 2ம் ஆண்டு நிறைவு விழாவில் கிஷோர் மேடை ஏறுகிறராம். முன்பெல்லாம் கிஷோர் திமுக மேடையில் ஏறவில்லை. அதிமுக+தவெக+பாமக+தேமுதிக கூடினால் திமுக+ ஐ அசைத்துப்பார்க்கலாம்.
  16. ஆனால் நேற்று முந்தினம் கும்பகோண மண்டல மாநாட்டுக்கு ஏகபட்ட சனமாம் என்கிறார்கள்.
  17. அப்படித்தான் தெரிகிறது. அதுவும் ஒரு மகன் பிறந்து அவரும் கிரிகெட் மட்டையோடு அலையும் போது… கிரிகெட் சரிவராவிட்டால் 25 வயசுக்கு மேல் இவன் என்ன செய்யபோகிறான் என்ற யோசனை எமக்கு தொற்றும் போதுதான் அதிகம் உறைக்கிறது 😂. ஆனாலும் எனக்கு பேச்சுவார்த்தைகள் முடிவில் “முடிவெடுக்கும் சுதந்திரம்” பெயரளவிலாவது இருந்தது என்பதும் உண்மையே. நான் விரும்பி இருந்தால் 12ம் ஆண்டில் திரும்ப விளையாட போய் இருக்கலாம். போகவில்லை. அந்தளவுக்கு “மண்டையை கழுவி”விட்டார்கள். ஆனால் இதற்கு முன்பே அவருக்கு நான் இப்படி மண்டையை கழுவிய சம்பவம் ஒன்று உள்ளது. பின்னொருநாளில் எழுதலாம்.
  18. இன்றைக்கும் இதே நிலமை என்றே நினைக்கிறேன். எனக்கு நன்றாக நியாபகம் உள்ளது, மட்டினில் வீசி விட்டு, முதன் முதலாக டிரெர்பில் ஒரே ஷோர்ட் போலாக போட்டு அடிவாங்கியது. யாழ் அணிகளும், கொழும்பு அணிகளும் மோதுகிறன என வாசிக்கும் போது, யோசிப்பேன் கிட்டதட்ட இரு வேறு விளையாடுகள் போல வித்தியாசம். எப்படி சாத்தியமாகிறது என. உண்மைதான் ஆனால் தடைகள் உள்ளும், புறமுகாக இருந்தன. கடைசிவரை பள்ளி கூட அணியில் சி டீமை தாண்ட முடியவில்லை. இதற்கு இனவாதம் அதை விட மேலாக மேட்டிமை (elitism)மற்றும் nepotism காரணம் என கருதுகிறேன். போன தடவை ஊருக்கு போன போது நண்பர்களின் பிள்ளைகள் இப்போ இதே பிரச்சனையை எதிர்கொள்வதாக கூறினர்.
  19. எனக்கு உண்மையில் திறமை இருந்ததா என்பதும் இன்றுவரை ஐயமே. அப்போதே ஆறடியை நெருங்கி விட்டேன் ஆகவே கோச்கள் டீமில் எடுப்பது இலகுவாக இருந்தது. இலண்டன் வந்து முதல் 6 வருடம் - மூச்சு விட நேரமில்லாத காலம். பிறகு இங்கே ஒரு கிராமபுற அணியின் 1st XI இல் 4 சீசன் ஆடினேன். அதே போல் எனது வேலையிடத்தில் ஒரு 6 a side அணியை உருவாக்கி, எமது வருடாந்த போட்டிகளில் மூன்று முறை சாம்பியன் சிப் வென்றோம். தமிழர் விளையாட்டு விழாவில் என் நண்பர்கள் தமது பள்ளியில் என் பெயரை பதிந்து ரெண்டு அல்லது மூன்று வருடம் ஆடியுள்ளேன். அதே போல் தமிழ் லீக் என ஒண்டை தொடங்கினார்கள் அதிலும் ஒரு அணிக்காக பெயரை கொடுத்தேன், இரெண்டு சீசன் சில ஆட்டங்கள். கடந்த 6/7 வருடமாக எதுவும் இல்லை. எனது சகாக்கள் 3 + மகன்கள் -இணைந்து நெட்ஸ் புக் பண்ணி பிராக்டிஸ் பண்ணுவது மட்டுமே. மகன்களுக்கு தான் பிராக்டிக்ஸ். எங்களுக்கு எக்சசைஸ் 😂.
  20. சதீசனின் தலமையில் நடந்த பிக் மேட்சில்தான் சுரேன்குமார் 132 அடித்தாரா? குகன் இப்போ இலண்டனில் இருப்பவர் எனில் - தெரியும். புரூடி நிச்சயமாக தெரியும். தெரியும் எண்டால் - அவர்களை எனக்கு தெரியும், அவர்களுக்கு என்னை நினைவிராது (விவேக்கின் எனக்கு ஐஜியை தெரியும் ஜோக் போல😀). இன்று வரை அதில் யார் பக்கம் நியாயம் என்பதில் எனக்கு தெளிவில்லைத்தான். ஆனால் வயசு போக போக, அப்பாவின் பக்கம் தராசு மேலும் தாழ்கிறது என்பது உண்மை.
  21. பிரஜா உரிமை எப்போதும் சமம்தான். பிரிதானியாவில் மட்டும் அல்ல. மேற்கு முழுவதும். வெள்ளை பிரஜா உரிமை, கறுப்பு, பழுப்பு பிரஜா உரிமை என வேறுபாடுகள் இல்லை. அதே போல் பெற்றாரின் பிறந்த இடம், இங்கே பிறந்த பிள்ளைகளின் பிரஜா உரிமையை தரம் குறைக்கவும் மாட்டாது. ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது பெற்றார் அல்லது திருமணம் அல்லது வேறு எந்த வழியிலாவது உங்களுக்கு இன்னொரு நாட்டின் பிரஜா உரிமை இருந்து, நீங்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு நலனுக்கு விரோதமாக செயல்படின், உங்களின் பிரித்தானிய பிரஜா உரிமை மீளப்பெறப்படலாம். ஷைமைமா பேகம் வழக்கு போல. ஆனால் இதுவும் கூட எல்லாருக்கும் பொதுவானதே, ஒரு அமெரிக்கா குடியுரிமைக்கு உரித்துள்ள, வெள்ளை பிரிதானிய குடிமகன், பேகம் போல ஐசிஸ் உடன் சேர்ந்தால், பேகத்துக்கு நடந்தது அவருக்கும் நடக்கும்.
  22. இது ஒரு அதிகாரி வாய்மூலம் சொன்னார், என சதி, உளவுபார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் , குற்றம் தீர்க்கப்பட்டவர். தனது குற்றத்தை இல்லை என சொல்ல, சொல்லிய கதை. இதை நீதி மன்றமே நம்பவில்லை. அப்படித்தான் இருந்தாலும் அது ஒரு இனவாத அதிகாரியால் சொல்லபட்டாதவே இருக்கும். ஒழிய அது ஏற்று கொள்ளபட்ட நடைமுறை அல்ல. எனக்கு UK MoD யில் DV எனப்படும் developed vetting பாஸ்பண்ணி, பலவருடம் எஞ்சினியாராக வேலை செய்த இலங்கையில் பிறந்த தமிழரை தெரியும். இப்போதும் இலண்டனில் தமிழ் மொழி முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இந்த ஒற்றை உதாரணமே போதும். இன்னொன்றும் சொல்கிறேன் கேளுங்கள் - எனக்கு வேலை செய்த பம்பாயில் பிறந்த ஒரு பெண்மணிக்கு, DV க்கான referee யாகவும் நானே இருந்துள்ளேன். அவவும் DV பாஸ்பண்ணி புது வேலை எடுத்தும் போய்விட்டா. நீங்கள் அடியும் தெரியாமல், நுனியும் புரியாமல் உங்கள் வியாக்கியாத்தை கொடுக்கிறீர்கள். இந்த DV பற்றிய Guidance கீழே. இதிலும் நான் சொன்னபடிதான் உள்ளது. எந்த இடத்திலும் நீங்கள் சொன்னபடி இல்லை. https://www.gov.uk/government/publications/united-kingdom-security-vetting-clearance-levels/dv-guidance-pack-for-applicants யதார்த்தம் என நீங்கள் தப்பாக புரிந்து வைத்துள்ளது. இதுவரை நீங்கள் சொல்லியதற்கு (ஒரு நாள் முழுக்க கூகிள் பண்ணிய பின்னும்) ஒரு எழுத்து மூல ஆதாரத்தை, policy document ஐ தன்னும் உங்களால் காட்ட முடியவில்லை. உங்கள் முழு அறிவை முடிந்தால் ஆவணங்கள் மூலம் நிறுவுங்கள்😀. உங்களின் assumptions எல்லாம் யதார்த்தம் ஆகாது. அறிவும் ஆகாது. இல்லை அவர் ஈரானுக்கு உளவுபார்த்த குற்றவாளி. நான் எம் பிள்ளைகளை இப்படி செய்ய சொல்லவில்லை. அவர்கள் நாட்டுக்கு விசுவாசமாக வேலை செய்ய பெற்றார் வெளிநாட்டில் பிறந்தது ஒரு தடையே அல்ல.
  23. எப்படியாவது basement dungeon க்க இருந்து மேல வரமாட்டமா எண்டு ஒரு நப்பாசை😀
  24. முரளி (செஞசோன்ஸ்? நெட்டை),ப்ருடி நியாபகம் உள்ளது. ப்ருடி அப்போ கொழும்பு இந்துவில் பயிற்றுவிப்பாளர் ஆகி இருந்தார் என நினைக்கிறேன். ஏனையோரை கண்டால் தெரியலாம். அப்போ நான் ரொம்ப சின்ன வயது. அங்கே தொத்தி கொண்டு இருப்பேன். அநேக நாட்கள் பீல்டிங் மட்டும் கிடைக்கும் 😀.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.