Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இப்பவே நம்பிக்கையில்லா பிரேரணை ரெடி 🤣
  2. இங்கே ஜெட் வேகம், ராக்கெட் வேகம், ஒளியின் வேகம் என்றெல்லாம் கற்பனையில் உருட்டுபவருக்கும் தனியே நின்றால் 2026 இல் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் காலி என்பது தெரியும். 2026 வரைக்கும் டைம் இருக்கு - அது வரை உருட்டுவோம். 2026 க்கு பின் நடப்பதை அப்போ பார்த்துகல்லாம் என்பதுதான் இவர்கள் பலரின் நிலைப்பாடு. இல்லை…பேரறிஞர் எச் ராஜா, தம்பி அண்ணாமலை, அக்கா தமிழிசை என பல நாக்பூர் பயணிகள் பஸ்சை நிரப்பி இருப்பார்கள். காளியம்மாள் - அவர் பரம்பரை திமுக என நினைக்கிறேன் - ஆனால் திமுகவுக்கு போகக்கூடாது என்பதே என் விருப்பம். ஊழல் இல்லாத, நடைமுறை சாத்தியமான தமிழ் தேசியத்தை முன் தள்ளும் ஒரு கட்சி - த வெ க இருக்கிறது. அங்கே ஒரு பெண் ஆளுமைக்கு வெற்றிடமும் உள்ளது. அவர் அங்கே போகவேண்டும். தமிழ் நாட்டின் ஒரு பெரும் ஆளுமையாக வரவேண்டும் என்பதே என் அவா.
  3. இப்போ— டிரம்ப் புட்டினின் கையாள் என்ற என் தத்துவத்தை இங்கே அப்பிளை பண்ணி பாருங்கள். ஒரு சதிக் கோட்பாடு நிஜமாகும் தருணம் இது. அமெரிக்காவினை நேரே எதிர்த்து உடைக்க முடியாது என்பதால், உள்ளே இருந்து உடைக்கிறார் புட்டின். கிரேக்க இதிகாசத்தில் Trojan குதிரை எனப்படும் ஒரு மரக்குதிரை வரும். ஒரு அரசை போரில் வெல்ல முடியாத எதிரி அரசு, ஒரு பெரும் மரகுதிரையை செய்து அதனுள் போர்வீரர்களை பதுக்கி அனுப்பி வைக்கும். அந்த நாட்டினரும் பெரும் குதிரையை சுற்றி ஆடி பாடி மகிழ்ந்து, இரவில் தூங்க சென்ற பின், வீரர்கள் வெளிவந்து, அனைவரையும் போட்டு தள்ளுவார்கள். இப்படியான நகர்வுகளை ஆங்கிலத்தில் Trojan Horses என்பார்கள். IT யில் பின்னாளில் இப்படியான வைரஸ்சுகளை Trojan என அழைக்கவும் இதுவே காரணம். புட்டின் அமெரிக்காவுள் அதன் மூலம் மேற்குக்குள் அனுப்பி உள்ள Trojan Horse நாசகாரி தான் டிரம்ப். டென்மார்க்கோடு, கனடாவோடு, உக்ரேனோடு - டிரம்ப் எடுக்கும் நிலைப்பாடு எல்லாம் அமெரிக்காவை பலவீனப்படுத்தவே. ஆனால் டிரம்பும், வான்சும், மஸ்கும் அதிதீவிர ஆமெரிக்க வலது தேசியவாதம் என்ற Trojan குதிரைக்குள் பதுங்கி இருந்து இதை செய்கிறார்கள். இது அதி தீவிர வலதுசாரி கொள்கை போல இன்னுமொரு பேய்காட்டும் கதை. அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் என்ன வித்தியாசம்? அமெரிக்காவின் இராணுவ பலம். இராணுவ பலம், ஐரோப்பாவில் இருக்கும் கூட்டுக்கள், இவை எல்லாமும்தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஒரு அசுரனாக்கி வைத்துள்ளன. இதேபோல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆளுமையும். இவற்றை படிப்படியாக உடைத்தால் -அமெரிக்காவின் பொருளாதாரமும் அடி வாங்கும். ஆனால் இது உடனடியாக நடக்காது.
  4. வாழ்த்துக்கள் முதல்வர் அல்வாயான் அவர்களே..
  5. தமிழ் நாட்டு மருமகன்னா சும்மாவா🤣 ஷொகீப் பசீர் ஐ கொண்டுவந்திருக்கலாம். ஆர்ச்சர்…கவுண்டி விளையாட முன்னமே அவசர அவசரமாக பெற்றார் வழியாக கடவுசீட்டு கொடுக்கப்பட்டு இங்கிலாந்து டீமுக்குள் வந்தவர். வந்தது முதலே காயம்தான். இதில கவுண்டி சீசனும் முழு வீச்சில் விளையாடினால் ஆஸ்பத்திரியில்தான் மேட்ச் வைக்க வேணும்🤣
  6. ஆச்சர் ஒரு பாலப்பழ கட்சை விட்டு விட்டு அடுத்த ஒவரில் ரன்ஸை அள்ளி கொடுத்தார். Australia bossing this game.
  7. பிரித்தானிய ஈயுவை விட மோசம். அமெரிக்கா குதி என்றால்… எங்கே என்பது மட்டுமே இவர்கள் கேட்கும் கேள்வி.
  8. ஆச்சர் திரும்பி வந்து ஓவர் போடுகிறார். 2ம் பந்தில் பவுண்டரி. ஆனால் 3ம் பந்து ஸ்டம்பை உரசுமாப்போல் சொன்னது. 5ம் பந்து பவுண்டரி
  9. ஆச்சரின் காலம் முடிந்து விட்டது - அதில் பாதி காயத்தோடு போய் விட்டது. ஜோர்டன் நல்ல பீல்டர் ஆனால் இப்போ பந்து போட்டால் ஆச்சரை விட மோசமாக இருக்கும். டானியல் ஹொக், ஜொஷ் ஹல் இப்படி புது வீரர்களை கொண்டு வந்திருக்கலாம்.
  10. ஆச்சர் நொண்டிகொண்டு போறார். அவரின் ஓவர் 5 மிச்சம் இருக்கு.
  11. பனி பொழிவதென்றால் இப்ப பொழிய ஆரம்பிக்க வேணும். ஆரம்பித்து விட்டதா? மகன் ஹோம்வேர்க் செய்யவில்லை என மனைவி டீவியை நூத்து போட்டா 😭.
  12. ஐரோப்பிய யூனியன் ஒரு பிஸ்கோத்து. குறிப்பாக ஜேர்மனியும் பிரான்சும். ஒன்றில் அமெரிக்காவின் காலில் கிடப்பார்கள் அல்லது ரஸ்யாவின் காலில் கிடப்பார்கள். பின்லாந்துக்கும், போலந்துக்கும் உள்ள ரோசத்தில் பாதி கூட இவர்களுக்கு இல்லை. இந்த இரு சோத்துமாடுகளை (இராணுவ ஓர்மத்தில்) விட துருக்கி கூட ஒரு படி மேல். அத்தோடு டிரம்ப் கேட்டதுக்கு செலன்ஸ்கி ஒத்து கொண்டிருந்தால், ஜேர்மனியை விட டிரம்புக்கு நெருங்கியவராக செலன்ஸ்கி வந்திருப்பார். ஆகவே ஒன்றுக்கும் உதவாத - ஈயூவை நம்பி செலன்ஸ்கி டிரம்ப்போடு முண்டவில்லை. முந்தைய டிரம்ப் ஆட்சியில் கூட முண்டினார். ஏன்? டிரம்ப் - உக்ரேனிடம்/செலனஸ்கியிடம் இருந்து எதிர்பார்த்த சிலதை செலன்ஸ்கி கொடுக்க மறுத்தமையால். இதன் அடிப்படையில்தான் டிரம்ப் இம்பீச் பண்ண பட்டார். இங்கேயும் காரணம் டிரம்ப் கேட்டதுபோல் உக்ரேனின் நலனை செலன்ஸ்கி விட்டு கொடாமையே. இறைமையுள்ள, நிலம் உட்பட அதன் அத்தனை வளங்கள் பற்றியும் அது மட்டுமே தீர்மானிக்கும் உரிமை உடைய, ஈழத்தமிழருக்கான இனவழி தேசியத்தின் அடிப்படையில் அமைந்த சுதந்திர தனியரசை நீண்டகால நோக்கில் நிலை பெறச் செய்தல். இதுதான் அவரின் வாழ்வின் ஒற்றை நோக்கம். இதை அவரால் செய்து முடிக்க, முடியவில்லை.
  13. ஆள் time traveller என நினைக்கிறேன். டக்கென்று கொஞ்சம் முன்னால போய் ஸ்கோர்ர பாத்து வந்து எங்களுக்கு கலர்ஸ் காட்டுறார்🤣. பிகு மண் என்றால்- மருதனாமடம்-குரும்பசிட்டிக்கிடையேதான். கேள்விகளை கேட்டு ஆளை அமுக்குவம்🤣
  14. அசத்தலாக ஆட ஆரம்பித்தாலும், பினிஷிங்கில் சொதப்பும் தம் பாரம்பரியத்தை இங்கிலாந்து தொடர்கிறது. இங்கிலாந்து பந்து வீச்சும் சொல்லிகொள்ளும் படியாக இல்லை. பார்க்கலாம் அவுஸ் எப்படி துரத்துகிறது என. பென் டக்கட் அதிக கூடிய இடம் எடுப்பார் என எவரும் கணிக்கவில்லை என நினைக்கிறேன். பிகு இண்டைக்கு இந்த திரி ரொம்ப டல்லடிக்கிறது🤣
  15. வழமையாக அவுஸ், இந்தியா போன்ற நாடுகளில் திறமைக்கு பஞ்சம் இராது. பெரிய வீரர்கள் காயம்படும் போது உள்ளே வரும் புது வீரர்களிடமும் ஒரு பொறி இருக்கும். இந்த அவுஸ் வேக பந்து வீச்சாளர்களில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மிலிட்டரி மீடியம் பந்து வீச்சால் தொடர்களை வெல்ல முடியாது. ஸ்பின்னர்களும் விக்கெட் எடுக்கும் பந்துகளை வீசுவதாக தெரியவில்லை. இங்கிலாந்து late collapse பண்ணுவதில் விண்ணர்கள்🤣. இல்லாவிட்டால் 350 சாத்தியம். ஆஸ்ரேலியாவின் ஒரே நம்பிக்கை - லாகூரின் பனிப்பொழிவுதான் போல கிடக்கு🤣
  16. அரசியல் ஒரு பரமபதம்🤣 இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ… இன்பத்தில் ஆடுது என் மனமே… காலை எழும்பும் போதே ஒரு நல்ல செய்தியுடன் எழும்பினேன். அதே போல் இன்று அவுஸ் வெல்லும் என்றே மனது சொல்லிறது. இங்கிலாந்து வென்றாலும் ஓக்கே. புள்ளிகள் போனாலும் நம்ம பெ.பி வென்ற சந்தோசம் இருக்கும்.
  17. ஐயோ…ஐயோ…ஒரு மோதல் தவிர்ப்பை அறிவித்து விட்டு, முக்கவும் முடியாம, ஈனவும் முடியாம நான் படும் அவஸ்தை இருக்கே…. எதிரிக்கு கூட வரக்கூடாது இந்த நிலை. 🤣🤣🤣
  18. நானும் இதை கவனித்தேன். 90 களின் ஆரம்பத்தில் பாகிஸ்தானில், வசீம், வக்கார், முஷ்டாக் அஹ்மட் (பின்பு சக்லீன் முஷ்டாக்) பந்து வீசுவார்கள். நாலாவது அக்யூப் ஜாவிட், ஐந்தாவதாக சலீம் மலீக் - ஆமீர் சொஹில். இவர்களின் 20 ஓவர்களைதான் அடிக்க டார்கெட் பண்ணுவார்கள். அதுவும் மலீக் மெதுவாக ஓடி வந்து விக்கெட் டு விக்கெட் போடுவார். அடிக்கப்போய், வசீம், வக்காரிடம் இருந்து காப்பாற்றிய விக்கெட்டை இவரிடம் இழப்பவர்களும் அதிகம் 🤣. பிகு போட்டியில் என் தெரிவுகளில் ஒருவர் ரசீட். ஆனால் நேற்று ஒண்டும் இல்லை.
  19. சிறுமிகள் மீது கைவைக்கும் ஈனப்பிறப்புகள் ஸ்மார்ட் தொலைபேசிக்கு முன்பும் இருந்தார்கள். அதற்கு வக்காலத்து வாங்கும் ஈனர்களும் அப்போதும் இருந்தார்கள். நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு. இங்கே ரேபிஸ்ட் அத்தனை பேரும் 19, 20 வயது ஆட்கள். இவர்கள் எல்லாம் பபா குஞ்சுகள் - 18 வயதுக்கு குறைந்த பிள்ளையை தொடக்கூடாது என்ற அறிவில்லாதவர்கள், பாவங்கள் போன் பார்த்து கெட்டுப்போய்விட்டார்கள் 🤣. கேக்கிறவன் கேனையனாக இருந்தா…
  20. ஓணாண்டி சார் நீங்க எப்ப சார் நிருபர் ஆகினீங்க 🤣. தமிழக செய்தி பகுதியில் என்ன இணைக்க வேண்டும் என்ற நிர்வாக அறிவிப்பை மீளத்தருகிறேன். தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம். இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இப்படியான யூடியூப் வியாக்கியாங்களை அதற்குரிய இடத்தில் இணைத்து விடுங்கள். 🤣🤣🤣🤣 ஓணாண்டிக்கும், ஜஸ்டினுக்கும் இருக்கும் உறவு நிலை புரியாமல்… குறுக்கமறுக்கா ஓடி கொண்டு… நிர்வாகம் மீது புகார் வேறு.
  21. கவிதை (?) சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.