Everything posted by goshan_che
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அரசியல் ஒரு பரமபதம்🤣 இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ… இன்பத்தில் ஆடுது என் மனமே… காலை எழும்பும் போதே ஒரு நல்ல செய்தியுடன் எழும்பினேன். அதே போல் இன்று அவுஸ் வெல்லும் என்றே மனது சொல்லிறது. இங்கிலாந்து வென்றாலும் ஓக்கே. புள்ளிகள் போனாலும் நம்ம பெ.பி வென்ற சந்தோசம் இருக்கும்.
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
மீள்பிரசுரம். 5 நாளைக்கு முன் எழுதியது.
-
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
பெளசரின் வாசகர் வட்ட கூட்டத்தை குழப்பிய கஞ்சா குடுக்கியள் இந்த பக்கம் தலைவைத்தும் படாயினம்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
ஐயோ…ஐயோ…ஒரு மோதல் தவிர்ப்பை அறிவித்து விட்டு, முக்கவும் முடியாம, ஈனவும் முடியாம நான் படும் அவஸ்தை இருக்கே…. எதிரிக்கு கூட வரக்கூடாது இந்த நிலை. 🤣🤣🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நானும் இதை கவனித்தேன். 90 களின் ஆரம்பத்தில் பாகிஸ்தானில், வசீம், வக்கார், முஷ்டாக் அஹ்மட் (பின்பு சக்லீன் முஷ்டாக்) பந்து வீசுவார்கள். நாலாவது அக்யூப் ஜாவிட், ஐந்தாவதாக சலீம் மலீக் - ஆமீர் சொஹில். இவர்களின் 20 ஓவர்களைதான் அடிக்க டார்கெட் பண்ணுவார்கள். அதுவும் மலீக் மெதுவாக ஓடி வந்து விக்கெட் டு விக்கெட் போடுவார். அடிக்கப்போய், வசீம், வக்காரிடம் இருந்து காப்பாற்றிய விக்கெட்டை இவரிடம் இழப்பவர்களும் அதிகம் 🤣. பிகு போட்டியில் என் தெரிவுகளில் ஒருவர் ரசீட். ஆனால் நேற்று ஒண்டும் இல்லை.
-
கோவையில் 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
சிறுமிகள் மீது கைவைக்கும் ஈனப்பிறப்புகள் ஸ்மார்ட் தொலைபேசிக்கு முன்பும் இருந்தார்கள். அதற்கு வக்காலத்து வாங்கும் ஈனர்களும் அப்போதும் இருந்தார்கள். நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு. இங்கே ரேபிஸ்ட் அத்தனை பேரும் 19, 20 வயது ஆட்கள். இவர்கள் எல்லாம் பபா குஞ்சுகள் - 18 வயதுக்கு குறைந்த பிள்ளையை தொடக்கூடாது என்ற அறிவில்லாதவர்கள், பாவங்கள் போன் பார்த்து கெட்டுப்போய்விட்டார்கள் 🤣. கேக்கிறவன் கேனையனாக இருந்தா…
-
சீமானுக்கு சிக்கலா..?
ஓணாண்டி சார் நீங்க எப்ப சார் நிருபர் ஆகினீங்க 🤣. தமிழக செய்தி பகுதியில் என்ன இணைக்க வேண்டும் என்ற நிர்வாக அறிவிப்பை மீளத்தருகிறேன். தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம். இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இப்படியான யூடியூப் வியாக்கியாங்களை அதற்குரிய இடத்தில் இணைத்து விடுங்கள். 🤣🤣🤣🤣 ஓணாண்டிக்கும், ஜஸ்டினுக்கும் இருக்கும் உறவு நிலை புரியாமல்… குறுக்கமறுக்கா ஓடி கொண்டு… நிர்வாகம் மீது புகார் வேறு.
- IMG_2057.jpeg
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
கவிதை (?) சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது🤣
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
ஊக்கத்துக்கும், இதை கவிதை என ஏற்றமைக்கும் நன்றி🤣. ஓம் அந்த கொள்கை விளக்கம் - “ஆடு தானாக பட்டியில் நிற்கிறது என காரணம் சொல்லாதே” என்ற வாசுவின் வரிகளுக்கான விளக்கமே. நீங்கள் பொருள் விளங்கியதில் தவறேதும் இல்லை. ஆனால் பெரியாரின் கொள்கைகளை அல்லது அவற்றில் பெரும்பகுதியை ஏற்று கொண்டு, நடைமுறைப்படுத்தும் சாதாரண மக்கள் கோடானு கோடிப்பேர் உள்ளார்கள். ஒரு சில இன்றைய அரசியல்-வியாதிகளின் செயல்பாட்டை வைத்து - ஒரு கொள்கையை மதிப்பிடுவது - கபடத்தனமானது. கவிநயத்தில் நிச்சயமாக. பொருளில்….வாசகர் முடிவுக்கு விடுகிறேன். மறந்தே போனேன்…அக்மார்க் சொந்தச் சரக்குத்தான்🤣. வாசுவின் கவிதையை வாசித்தவுடன் சில பத்து நிமிடங்களில் எழுதியது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அடுத்த முதல்வராக வர உங்களுக்கு வாய்புள்ளதாம். நாளைய முடிவுகள் அடிப்படையில். அல்வாய் எண்டால் ஓக்கே. சாவச்சேரி பக்கம் எண்டால் பெடியள் சரக்கை போட்டு விட்டு பிரின்சிபால்ட மண்டைய பொளந்துடுவானுகோ🤣
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அண்ணாமார், நொண்ணாமார் எல்லாருக்கும் நான் ஒரு வாபஸ் அறிக்கை கொடுக்க விரும்புகிறேன். உங்களை புட்டின் காதலர்கள், மேற்கு வெறுப்பாளர்கள் என நான் எழுதியது தவறு…தவறு…தவறுதான். நீங்கள் புட்டின் காதலர்கள் எண்டால் - இப்போ டிரம்ப் செய்வதை வரவேற்பீர்கள். நீங்கள் மேற்கின் ஏகாதிபத்தியத்தினை எதிர்பவர்கள் என்றால் செலன்ஸ்கி தன் நாட்டை “எழுதி கொடுக்கும்படி” டிரம்ப் கேட்பதை எதிர்ப்பதை ஆதரிப்பீர்கள். நீங்கள் இது இரெண்டுமே அல்ல. நீங்கள் செலன்ஸ்கி/உக்ரேனிய வெறுப்பாளர்கள். செலென்ஸ்கியை அமெரிக்கா ஆதரித்தாலும், எதிர்கிறீர்கள். செலென்ஸ்கி அமெரிக்காவை எதிர்த்தாலும் எதிர்கிறீர்கள். ஏன்…இப்படி என யோசித்துப்பார்த்தால் - ஒரே ஒரு காரணம் மட்டுமே எனக்கு புலப்படுகிறது. பொறாமை…. நாம் செய்ய முடியாததை, உக்ரேனியர்கள் செய்துவிடுவார்களோ என்ற அழுக்காறு, நமக்கு உதவாத மேற்கு அவர்களுக்கு உதவுகிறதே என்ற கறுவியம். அடுத்து சொல்ல போவதற்கு கடும் எதிர்வினை வரும் என தெரியும். ஆனாலும் சொல்கிறேன். தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை, எங்கே செலன்ஸ்கி செய்து விடுவாரோ எண்டு அங்கலாய்ப்பு. ஊரில் சில காதல் தோல்வி தாடி கேசுகள் இருக்கும். இவர்களையும் அண்ணா என்றே அழைப்பார்கள். இந்த அன்ணாக்கள் தமக்கு ஆப்பு அடிபட்டு விட்டது என்பதால் - ஊரில் இருக்கும் ஏனைய பெடியளையும் கூட்டி வச்சு கொண்டு “பொம்பிளைய நம்பாத தம்பி” என அவர்கள் வாழக்கையையும் சீரழிப்பார்கள். எவனாவது ஒருவன் ஒரு பிகரை செட் பண்ண முயற்சித்தால் - அதை கெடுக்க தம்மால் ஆனசகலதையும் செய்வார்கள் இந்த அண்ணாமார். எதுவும் முடியாவிட்டால் வம்பளப்பார்கள். இதுதான் நீங்கள். தோல்வியை வெற்றியின் படிகட்டு ஆக்கலாம். அல்லது அதே படிக்கட்டில் இருந்து மேலே ஏறும் ஏனையரை கால்தடம் போட்டு விழுத்தலாம். இப்படி கால்தடம் போடும் பரிதாப ஜீவன்கள் நீங்கள். அடுத்து செலன்ஸ்கி பற்றி - நீங்களும், டிரம்ப்பும் செலன்ஸ்கியை கோமாளி எனலாம். ஆனால் புட்டினை எதிர்த்த அதே தீரத்துடனும், நேர்மையுடனும் டிரம்பையும் எதிர்க்கிறார் செலன்ஸ்கி. ஏன்? தன் நாட்டின், இனத்தின் நலன். மிக சுலபமாக டிரம்ப்கேட்பதை ஒத்து கொண்டு, அதில் தானும் சில பத்து பில்லியன்களை லபக்கி கொண்டு செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் இன்றும் துருக்கிக்கு போகிறார், ஈயூவை உந்த முயல்கிறார், எப்படியாவது தன் இனத்தை தன் நாட்டின் வளங்களை காக்க முயல்கிறார். எனக்கு, இது இலங்கை பேரினவாதம், இந்திய வல்லாதிக்கத்தின் இடையே தன் சின்னம் சிறிய இனத்தை காக்க முனைந்த என் தலைவரையே நினைவுபடுத்துகிறது. காக்கைகள் கரைந்து பொழுது விடிவதில்லை. சொந்த இனத்தின் வரலாற்று போரை தவிர்த்து வெளிநாடு ஓடி வந்த நாம் செலன்ஸ்கிக்கு கொடுக்க போகும் பட்டங்கள் நிலைக்கப்போவதில்லை. வரலாறு அதை பார்த்து கொள்ளும். பேடிகள் கோமாளி பட்டம் கொடுக்க தகுதியற்றவர்கள். செலன்ஸ்கி தோற்கலாம், வெல்லலாம், கொல்லப்படலாம், ஆனால் அவர் மேற்கின் பொம்மை அல்ல என்பதை அவரின் டிரம்ப் எதிர்ப்பு நிறுவியுள்ளது. இங்கே என்னையும் ஏனையோரையும் நாம் உக்ரேனை ஆதரிப்பது மேற்கின் மீது கொண்ட மோகத்தாலே என்றோரின் கதையும் புஸ்வாணமாக போய் விட்டது. நாம் எப்படி புட்டினை அவரின் உக்ரேன் மீதான கொள்ளையை எதிர்தோமோ, அப்படியே டிரம்பினையும் அவரின் உக்ரேன் மீதான கொள்ளையையும் எதிர்கிறோம். செய்வது ரஸ்யாவா, மேற்கா என்பல்ல எம் கருதுபொருள். செயல் அறமானதா இல்லையா என்பதே கருது பொருள். நான் அப்பவே சொன்னேன், எங்க அண்ணா அப்பவே சொன்னார் எண்டு அரிவரி பிள்ளை கணக்கா எழுதும் வளர்ந்த குழந்தைக்கு - டிரம்ப் வந்தால் இது நடக்கும் என நாம் எல்லோரும் எழுதினோம். அது மட்டும் அல்ல - 2025 இல் டிரம்ப் வெல்ல கூடும் என்பதால் - 2022 இல் புட்டின் ஆக்கிரமிப்பதை செலன்ஸ்கி சும்மா பார்த்து கொண்டிருக்க முடியாது. அப்போ அமெரிக்கா உதவியது பெற்றார். இப்போ துருக்கி கூப்பிடுகிறது போய் பேசுகிறார். நோக்கம் எப்போதும் தன் நாட்டின் இறையாண்மையை பேணுவதே.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ர வீட்டை அடத்தா கள்ள உறுதி முடிச்சதும் இல்லாமல் பாட்டு வேற 🤣 வாழ்த்துக்கள் பையன். ஆரோ Al Wayan எண்டு ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி ஆர் டி எக்ஸ் உடன் ஊடுருவி உள்ளாராம். கவனம்🤣 கேப்டன் விஜயகாந்தும் இல்லை பாதுகாக்க🤣.
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
👆இது- வாசுவின் இந்த👇 கவிதைக்கான எதிர்வினை.
-
பெரியார் தொண்டர்
கற்ற பின் நிற்க அதற்குத் தக 🙏 வாசுவின் இந்த கவிதைக்கான பதில் கவிதை கீழே… ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனின், வளைந்த கைத்தடிதான். ஒ..தோழனே… அந்த மூலையில் ஒரு மறிக்குட்டி, கிடாய்கள் பலதை மேச்சல் தரை நோக்கி கூட்டி போனதை ஏன் நீ கண்ணுறவில்லை? உனக்குத்தெரியுமா தோழா? என் மறிக்குட்டிகள், உன்னை போல் ஓராயிரம் கிடாய்களே ஒரு நேர்கோட்டில், ஒத்தை ரோட்டில் கூட்டிச்செல்லவல்லன. இந்த ரோட்டும், நான் ஆரம்பித்ததில்லை நண்பா - ஈரோட்டில் ஆரம்பித்தது. என் காணியின் மூலையில் இருக்கும் வேலாயுத மேடை உன் கண்ணை உறுத்தியது என நினைக்கிறேன். புரிந்துகொள் நண்பா… யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்… உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம். நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா, எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல. எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்… நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும். பட்டியில் இருந்தாலும்….பட்டி நீங்கி பயணம் போனாலும். -கோஷான் சே-
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இலங்கையில் இந்த கார் £29,000. யூகேயில் 26,000. வெறும் £3000 தான் வித்தியாசம். ஒப்பீட்டளவில் இலங்கையில் பெற்றோல் காருடன் ஒப்பிடும் போது பைட் மலிவு…. எலக்ரிக் காருக்கு வரி குறைவு, பைட் இலங்கைக்கு profit margin ஐ குறைத்து விற்பதாக இருக்கலாம். ஏழை எண்டால் இப்ப நடுத்தர வர்க்கம்தானே அண்ணை🤣. அமெரிக்கா சீன வாகனங்களுக்கு கெடுபிடி (தம் வாகன உற்பத்தி துறையை பாதுகாக்க) என்பதால் பல நிறுவனங்கள் வருவதே இல்லை என கேள்விப்பட்டேன்.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஆகச் சிறிய சீன இறக்குமதி பைட் ஒரு கோடி தாண்டுது. இல்லை. இவை ஆடம்பர வசதிகளை அடைய கூடிய விலையில் தரும் “ஏழைகளின் டெஸ்லா” இவை. பிரிதானியாவில் எலெக்ரிக்கார் மார்கெட்டில் மலிவான கார்களில் பைட்டும் ஒன்று. இன்றைய நடைமுறை தெரியாது. 2020 க்கு முன். நான் அறிந்தவரையில். Manufactured date இல் இருந்து 3 வருடத்துட்பட்ட கார்களைதான் இறக்க முடியும்( ஜப்பான் ரிகொண்டிசன் என்றாலும்) . வாகனத்தின் “லக்சறி” அளவை பொறுத்து 150% -300% வரி இருக்கும்.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கொலையுண்டவர் டசின் கணக்காண கொலைகளில் தேடப்படுபவராம். கொண்டவர் சிரித்து கொண்டே வருவதை பார்த்தால் - மாபியா குழுக்களுகிடையான ஆட்புலம் வரையறுத்தல், உதாரண, பழிவாங்கல் கொலை என்றே நினைக்கிறேன். அரசாங்கம் செய்வதாயின் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் வைத்து செய்து தம் முகத்தில் கரி பூச மாட்டார்கள். ஜெயில் அல்லது வரும் வழியில் ஈசியாக போடலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆதாரத்தை தரவும், இல்லை எனில் மன்னிப்பு கேட்கவும் 🤣 எனக்கு கூவத்தூரில் ரிசார்ட் ரூம் + திரிஷா என்பதாக ஒரு தனி மடல் வந்துள்ளது 🤣
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அந்த நாமல் மீம்ஸ் வேற லெவல் 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் நினைப்பது போல எல்லாம் இல்லை…தனியாகத்தான் 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வந்தவரை இலாபம் 🤣 எல்லா நாளும் முடியாது…இண்டைக்கு வீட்டில் இருந்து வேலை. டிவியில் ஒரு கண். கணனியில் ஒரு கண். அங்க mute ஆகினால் இங்கெ un mute. இங்க mute ஆகினால் அங்க Un mute 🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣 கவாஸ்கர் முதலாவது உலக கோப்பையில் 60 ஓவரும் பட் பண்ணி (அப்போ இங்கிலாந்து சமர் டைம் மேட்சுகள் 60 ஓவர்), 34 சொச்சம் நாட் அவுட் அடித்த ஆள்🤣. ஆனால் எனக்கு இப்போதும் பிடித்த விளையாட்டு டெஸ்ட். அதுவும் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் மைதானம் நிரம்பி வழியும். போட்டியை நேரில் பார்க்க அருமையாக இருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாஸ்…. உங்க நல்ல மனசால யாழை இழுத்து மூட பண்ணி போடாதேங்கோ🤣. அதுவும் உந்த ஸ்கை ஸ்போர்ட்ஸ்காரன் எல்லா மொழியிலும் ஆட்களை வைத்து தேடுவானாம் எண்டு கேள்வி🤣