Everything posted by satan
-
கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
மொத்தக்குடும்பமுமே ஊழல் குடும்பம் போலுள்ளது. நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்ளெல்லாம் உழைத்து வாழவில்லை, ஊழல் செய்தே வாழ்ந்திருக்கிறார்கள்.
-
மஹிந்த, மைத்திரி, ரணில், பசில்: கால்நடை ஊழலில் சிக்குவர்
சொல்லிக்கொண்டு இருக்காமல், கால அவகாசம் விடாமல்,ஒருவரும் தப்பிக்க முடியாமல் எல்லோரையும் உடனடியாக பிடித்து பூட்டுங்கள்.
-
தவறாக வாக்கினை அளித்த உறுப்பினர்!
ஐயோ கடவுளே! கட்சியின் தெரிவுக்கூட்டம். போட்டியில் சரியாக வாக்களிக்க முடியாதவர்களெல்லாம் அங்கத்தவர். என்ன சொல்வது இவர்களை? எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
-
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள், இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட இராணுவத்தினனே சாட்சி வழங்கி இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளான். அதோடு அந்த உடல்களில் உடைகள் எதுவும் காணப்படவில்லை என்று அறிய முடிகிறது.
-
புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..!
இந முறுகலை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது யார்? எங்கள் நிலத்தில், அவர்கள் விகாரைகளை கட்டி எழுப்பும்போது புத்தர் சிலைகளை வைக்கும்போது இனமுறுகலை ஏற்படுத்த வேண்டாம் என்று யாரும் போதிப்பதில்லை. ஆனால் எங்கள் நிலத்தில் எங்களுக்கு தடைகளாய் இருப்பவற்றை அகற்றும்போது கேள்வி கேட்க்கும்போது மட்டும் பொலிஸ்நிலையங்கள் விழித்துக்கொள்கின்றன. இனமுறுகல் பற்றி பாடம் நடத்துகின்றன. பிழைகளை சுட்டிக்காட்டி தவறு எங்கே என்று சொல்ல போலீசாருக்கு முதுகெலும்பு இல்லை, அதனாலேயே இவ்வளவு முரண்பாடுகள் ஏற்பட காரணம்.
-
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்
எங்களுக்கு தெரியாமல் அப்படி என்ன முன்னேற்றத்தை கண்டுள்ளார்கள்? எமது காணிகளில் சிலதை விடுவிக்கப்பட்டதை சொல்கிறார்களோ? இன்றைக்கு விட்டுவித்ததாக அறிவிப்பார்கள், நாளைக்கு செல்வதற்கு தடை என்பார்கள். இந்தளவிற்கும் எங்கள் சொந்தக்காணியை பார்வையிடுவதற்கு இத்தனை கெடுபிடிகள்.
-
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
கண்டிப்பாக! அதோடு சேர்த்து ஒரு கதையும் புனைவார்கள். அப்போ, அவர்கள் படையில் குழந்தைகளும் இருந்தனர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். நிர்வாணப்படுத்துவது சிங்களவரின் மரபு. அதை அப்படியே நிலைநிறுத்தி, தம்மை அடையாளப்படுத்த ஒரு துப்பை விட்டுச்சென்றுள்ளனர். அவர்கள் எத்தனை கதையெழுதினாலும் அவை, தம்மை மறைப்பதற்கும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குமே உதவும். இன்று அந்த உடல்கள் வெளிவந்தனவென்றால்; அவை வெறும் உடலங்கள் மட்டுமல்ல, அவற்றோடு சேர்ந்து உண்மையும் வெளிவந்துள்ளன. அவற்றை மறைக்க யராலும் முடியாது. வேண்டுமென்றால் என். என். பியின் முகத்திரை கிழியும். இந்த லட்ஷணத்தில சர்வதேசம் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டாமென கூற இவர்களுக்கு தகுதியில்லை. இவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்காது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் நீதியமைச்சர்.
-
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை!
இவர்களுடைய ஆசான்களுக்கு எத்தனை வருடங்களாம்? ம், ஒரு குற்றமா அவர்கள் இழைத்தார்கள்? அவ்வளவுக்கும் கணக்குப்போட்டால் வழ்நாள் முழுவதும். தமிழ் இளைஞர் யுவதிகளைசிறையிலடைத்து வேடிக்கை பார்த்தவர்களுக்கு, இப்போ உதறல் எடுத்து உளறித்திரிகிறார்கள், அந்த உளறலே இவர்களை சிக்க வைக்கும்.
-
பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா
இன்னும் நீங்கள் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன, சொல்லுங்கள். நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம். இந்த ஆள் ஒருநேரம் தேசியத்தலைவரை போற்றுகிறார், இன்னொரு நேரம் பழிகூறுகிறார். ஆனால் இவருக்கும் ஜனாதிபதி கனவு உண்டு. அதனாலேயே மகிந்தரையும் நம் தலைவரையும் அடிக்கடி சுட்டிகாட்டிப்பேசுகிறார். இனிமேல் தமிழர் இவருக்கு வாக்களிக்கப்போவதில்லை.
-
போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!
ஈராக் அணுஆயுதம் தயாரிக்கிறது என்று சொல்லி அமெரிக்கா அந்த நாட்டை துவம்சம் செய்தது. அதன் பின் செய்த ஆய்வறிக்கையில் அப்படி ஏதும் அங்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதற்காக அமெரிக்கா வருந்தவுமில்லை மன்னிப்பு கேட்கவுமில்லை. தங்கள் சுயநலத்திற்காக ஏதோவொரு காரணத்தை காட்டி அந்த நாட்டின் வளங்களை சுரண்டி அரசியலில் முரண்பாடுகளை தோற்றுவித்து அந்த நாட்டை சுடுகாடாக்குவது இவர்களின் வழமை. இவர்கள் அணுஆயுதம் தயாரிக்கலாம், வைச்சிருக்கலாம், தாக்கலாம் ஆனால் மற்ற நாடுகளை கட்டுப்படுத்துவது. இதற்கெல்லாம் இவர்கள் விலை கொடுப்பார்கள். மத்திய கிழக்கிலே அவர்கள் தங்கள் சட்டங்களோடு வாழ்ந்து வந்தவர்களை, அவர்களின் வளங்களை சுருட்ட புகுந்து அவர்களை உலகெங்கும் இழுத்துவிட்டு அவர்களின் கொலைவெறியை மற்றயவர்கள் மேல் திணித்தது அமெரிக்கா. அமெரிக்காவுக்குள் அவர்கள் குடியேறுவதற்கு தடை விதித்த ட்ரம், அவர்கள் நாட்டுக்குள் புகுந்து அவர்களின் வளங்களை சுரண்டியது சரியா? கண்டிப்பாக மத்திய கிழக்கினாலேயே அமரிக்காவிற்கு அழிவு.
-
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
நாட்டை கட்டியெழுப்ப விரும்புவோரை வரவேற்கிறார், தன் நாட்டுக்கு திரும்பிய வயோதிபரை கைது செய்கிறார். இவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
-
பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்
இலங்கையில் தமிழருக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்தன, நடக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பல தமிழத்தலைவர்களுடன் உடன்படிக்கைகள் கைச்சசாத்திடப்பட்டன அவைகள் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டன, கிழித்தெறியப்பட்டன, வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டன. இதற்கு ஒவ்வொரு இனவாதியும் பிக்குகளும் விடுக்கும் அச்சுறுத்தல்கள், நினைவூட்டல்கள், முந்தைய வரலாறுகள் சாட்சி. அப்படியிருக்கும்போது போரின்போது மஹிந்த அரசாங்கம் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குமூலம், புலிகளை அழித்த பின்பே தமிழர்க்கு தீர்வு என நிபந்தனை வைத்தார். அப்போ, தமிழருக்கு அரசியல் பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அது ஏன், அளிக்கப்போகும் தீர்வை புலிகள் இருக்கும்போது அளித்திருக்கக்கூடாது? புலிகளும் அந்த தீர்வுக்காகவே போராடினர். ம்.... அத்தனை வருடங்களாக உடன்படிக்கை செய்து, தமிழ்த்தலைமைகளின் ஆதரவை பெறுவதும், பின் கிழித்தெறிவதும் கலவரங்களால் அடக்குவதும் வரலாறு. அதனால் இந்தப்போக்கு தொடர்வதையே சிங்களம் விரும்பியது. அதற்குமேல் தமிழ் தலைவர்கள் செல்ல முயலவில்லை, விரும்பவில்லை. இதனால் எதை காட்டி நம்மை அச்சுறுத்தினார்களோ அதை தமிழ் இளைஞர்கள் கையில் எடுத்து, திருப்பி அச்சுறுத்த தொடங்கினார்கள். ஆயுதத்தின் வலிமை சிங்களத்திற்கு தெரியும், அதன் அழிவை தமிழர் சந்தித்தனர், அந்த அழிவை சிங்களம் ஏற்று தோற்றுப்போக விரும்பவில்லை. அடிபணிந்து தீர்வை கொடுத்து முதுகு வளைந்து உழைக்க விரும்பவில்லை. அது, தன் போன்ற கருத்துள்ள, சுய கௌரவத்தை விற்ற தமிழரையே தனது ஆயுதமாக பயன்படுத்தி, அவர்களின் விடுதலைப்போரை பயங்கரமாக்கியது. எமது தமிழ் தலைமைகள் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அன்றும் தவறிவிட்டனர். ஏனெனில் புலிகள் பக்கம் அதிகாரம் போவதை அவர்களும் விரும்பவில்லை. அதனால் நாட்டை விட்டு ஓடி மறைந்தார்கள். மக்களோடு நிற்க, அவர்களை தேற்ற, அவர்களுக்காக பேச யாரும் முன்வரவில்லை, காணாமல் போய் விட்டனர். மக்கள், அவர்களை தம் தலைவர்களாக தெரிந்தெடுத்ததன் பயன் அது. அப்போது எந்த நாட்டிலிருந்து யாராவது பேச்சுவார்த்தைக்கு வரும்போதெல்லாம், தங்களுக்காக பேசும் மீட்பர்களாக மக்கள் நம்பினார்கள். அங்கே தங்களுக்காக அவர்களுடன் பேச யாரும் முன்வரவில்லை. ஏதேதோ காரணங்களை சொல்லி புலிகளை, மக்களை கொன்று குவித்தார்கள். நிறைவில் கோத்தா சொன்னா(ன்)ர் புலிகளை அழித்து வெற்றி கொண்டு விட்டோம், ஆதலால் தமிழருக்கு இனி தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் இங்கு வாழ விரும்பினால் வாழலாம், ஆனால் அரசியல் உரிமை எதுவும் கேட்க முடியாது. சரத் பொன்சேகா கூறினார், தமிழர் வந்தேறு குடிகள் என்றார். அதன் பொருள் என்ன? இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தது தமிழர், போத்துக்கேயர் ஆட்சிக்கு முன் தமது இராசதானி வைத்து ஆண்டனர் தமிழர், வந்தேறு குடிகளுடனா துட்ட கைமுனு போரிட்டான்? ஏன் இன்னும் நமது தலைமைகள் அடித்து பிடித்து தலைமைக்கு போராடுகிறார்கள்? பழைய ஏமாற்று வித்தைக்கு துணை போவதற்கே. சர்வதேசம் நமக்கு விடிவை தருவதென்றால் எப்போதோ தந்திருக்க முடியும். நமது தலைமைகள் இன்னும் சிங்களத்தை காட்டிக்கொடுக்க, மக்களை காப்பாற்ற விரும்பவில்லை. அதையே சம்பந்தரும் செய்து காட்டினார். இன்று தலைமை என்று சொல்ல யாரும் இல்லாமல் விட்டுச்சென்ற சம்பந்தரை, சர்வதேச ராஜ தந்திரி என்று சொல்வோர், அவரால் நுழைக்கப்பட்டவர்கள் கட்சியை அழிக்க. இதுதான் சம்பந்தர் தனது அரசியலில் சாதித்தது! மக்களை ஏன் என்று கேட்க யாருமில்லாமல் தெருக்களில் தம் உறைவுகளை தேடி கண்ணீரோடு அலைகின்ற்னர். அவர்களைசந்திக்க, அவர்களது துயரங்களை, இழப்புகளை கேட்க, ஆறுதல் சொல்ல, தேற்ற, விடை கொடுக்க விரும்பாத தலைவர்கள் வாக்குகளுக்காக பதவிகளுக்காகஅடிபடுகின்றனர்.
-
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
நெடியவனை சந்திக்கச்சென்ற அனுராவுக்கு ஜேர்மனிய அரசாங்க வரவேற்பு என்றால்; நெடியவனின் அந்தஸ்து விளங்கவேண்டும் கம்மன்பிலவுக்கு. அதோடு விஜித ஹேரத்தின் ஆலோசனையில் இந்தச் சந்திப்பு நடந்ததாம். எப்போதுமே புலிகள் நினைப்பு. இவர்களே முன்னாள் புலிகளை அரசியலில் இணைக்க அனுராவை வற்புறுத்துகிறார்கள் போலிருக்கிறது. ஏன் இந்த அச்சம்? அவர்களின் அரசியல் வாழ்வு நிறைவடைந்துவிடுமென அஞ்சுகிறார்கள். தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விரைவில் தூசு தட்டி விசாரணைக்கு எடுக்க வற்புறுத்துகிறர்கள். அவரை நான் நெடியவன் என்றெல்லோ நினைத்தேன். ஒருவேளை நெடியவனின் பேச்சாளர் சிறியராக இருக்குமோ? அப்படியானால் பேச்சு சீரியஸாக இருக்குமென எதிர்பார்க்கலாம்!
-
இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு
இதுவரை எங்கள் சட்ட மேதைகளே மறந்துவிட்ட ஒரு காரியம். சிங்கள மக்களாலே நமக்கு நடந்த அனிஞாயங்கள் வெளிகொண்டுவரப்படவேண்டும். இவருக்கு முள்ளிவாய்க்கால் படுகொலை காணொளிகளை காட்டுங்கள்.
-
‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’
தமிழரசுக்கட்சிக்குள் இப்போ இருப்பவர்கள் மக்களுக்காகவோ இந அபிமானத்துக்காகவோ உழைக்க வந்தவர்களல்லர். கட்சியிலுள்ள பெலயீனத்தை வைத்து தங்களை தக்க வைக்கவும் மக்களை ஏமாற்ற வந்தவர்களுமாகும். மக்களின் உணர்வுகளின் மேலேறி பதவிகளை பெற வந்த குள்ள நரிகள். அவர்களுக்கு கொள்கை, இலட்சியம், நீதி, நிஞாயம் என்பதெல்லாம் வெறும் சொற்களே. சுமந்திரனுக்கு கட்சிக்குள் நுழையும்வரை அதன் கொள்கைகள் எல்லாம் தெரியாது. உள்நுழைக்கப்பட்டதும் அதை சிதைப்பதிலும் பதவியை பெறுவதிலும் கண்ணாக இருந்தார் காரியமாற்றினார். கட்சியை வெளியுலகில் தூற்றி அதை நிறைவேற்ற துடித்தார். அன்று தான் செல்லும் வெளிநாடுகளிலெல்லாம் விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விட்டவர், இன்று அவருடனேயே ஒப்பந்தம் செய்துள்ளார், கொள்கைகளை தனது சுய நலத்திற்காக பிரட்டியவர். இப்போ கட்சிகள் கொள்கைகளை மறுத்து செயற்பட்டதாக புலம்புகிறார். அநிஞாயங்களை தட்டிக்கேட்க துணிவில்லாமல் மௌனம் காத்த சிவஞானம் தனக்கேற்ற காரணங்களை காட்டி தன்னை நிஞாயப்படுத்துவதிலும் வெளிக்கிட்டுள்ளார். சாணக்கியன் சிங்களக்கட்சியில் போட்டியிட்டு தோற்று, தமிழ் மக்களின் உணர்வில் சவாரி செய்ய வந்தவர். இவர்களே தலைமைத்துவ போட்டிக்கு அடிபடுகின்றனர். இவர்களை விட்டு வெளியேற்ற மக்களால் மட்டுமே முடியும். பதவிக்காக வரும் சோம்பேறிகளையும், துரோகிகளையும் வீட்டுக்கு அனுப்பி தங்கள் உணர்வுகளை பாதுகாக்க வேண்டும். இல்லையேல் துரோகிகளின் கூடாரத்தை மாற்ற வேண்டும்.
-
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!
வடக்கில் தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் தமிழ்ப் பிரதேசங்களிலும் தனக்கு இராணுவபாதுகாப்பு தரப்படவேண்டும் என்று கேட்டு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை பெற்றவர், தமிழரை துடிக்க துடிக்க கொன்ற படையின் பாதுகாப்போடு எப்படி அந்த மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற முடியும்? எதற்காக தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மக்களுக்கு இவர் தலைவராக வேண்டும்? வேறு இளிச்ச வாய் கூட்டம் கிடைக்கவில்லையா? இவருக்கு அதிஷ்டம் கொடுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்களா? இதற்கும் சுமந்திரனின் அபிமானிகளால் பதில் தர முடியுமா?
-
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!
ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்ற சுமந்திரன், போர் முடிந்தபின்னும் மக்களுக்கெதிராக ஆயுதம் பாவித்த டக்கிலஸிடம் ஆதரவுதேடிப்போன சிவஞானத்தை ஏன் தடுக்கவில்லை? சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஷ்டம்என்று சொன்ன சுமந்திரன், புலிகளைச்சாட்டி நான் வாக்கு கேட்க்கவில்லை என்று சொன்ன சுமந்திரன், தமிழரோடு வாழாதவர், அவர்களின் இன்னல்களில் பங்கெடுக்காதவர், இன்றும் புலிகளை நேசிக்கும் மக்களின் தலைவனாக வர துடிப்பது ஏன்? தமிழருக்கு நடந்த கொடுமைகளை ஜெனிவா சென்று எடுத்துரைக்க பின்னடித்த சுமந்திரன், எப்படி அவர்களுக்கு விடுதலையை வேண்டிக்கொடுப்பார்? மன்னாரில் மனிதப்புதைகுழி தோண்டும்போது நானும் அங்கே சமூகமளித்திருந்தேன் என்று சொன்ன சுமந்திரன், அது கிடப்பில் போடப்பட்ட போது அதை வெளிக்கொணருவதற்கு என்ன செய்தார்? பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்வதுதான் அந்த மக்கள் சார்ந்து அவரது பொறுப்பா? இதற்கு பிறகும் இலங்கையில் நடந்தது இனவழிப்புதான் என்று நிரூபிப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று வாதாடுகிறார். எங்கோ இருக்கிற கனடா அமைச்சர் துணிந்து, இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான், அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று உரத்து சொல்லி வருவதோடு அதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக தடைகளை அறிவிக்கிறது. அது எப்படி கனடாவால் முடிந்தது? தமிழருக்கு நடந்த, நடக்கிற கொடுமைகளை வெளிக்கொணர, எடுத்துச்சொல்ல விரும்பாதவர், அந்தப்பிரச்சனையில் இலங்கைக்கு கால அவகாசம் வாங்கிக்கொடுப்பதற்கு அமெரிக்கா விரைய அவசியமென்ன? சுமந்திரனின் அனுதாபிகள் இதற்கு விளக்கம் தருவார்களா?
-
சாவகச்சேரி நகரசபையில் வீடா... சைக்கிளா...இன்று கடும்போட்டி
வாழ்த்துக்கள்! வெற்றி வீரப்பேச்சுகளை புறந்தள்ளி பொறுப்புணர்ச்சியுடன் மக்களுக்கு விசுவாசமாக உழையுங்கள். அவர்கள் மிகவும் விரக்தியடைத்துள்ளார்கள் தமது அரசியற் தலைமைகளின் செயல்களால். மக்களுக்கு தலைவனாக விரும்புகிறவர், தெரிந்துகொள்ளப்பட்டவர்; அவர்களுக்கு சேவையாளராக இருக்கட்டும், இருக்கவேண்டும். அப்போதே அந்த பதவி நிலைக்கும்.
-
தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்!
தங்கள் தங்கள் இடத்திலேயே காலங்காலமாக வழிபாடுகளை நடத்தி வந்த விகாரைகள் இருக்க, இங்கு ஏன் ஏறி எழுந்து வருகிறார்கள்? எங்கிருந்தாலும் வழிபாடு ஒன்றுதானே. இங்கு இருக்கிற, வந்து பிரச்சனைகளை தூண்டுகிற பிக்குக்களையும் சோதனை செய்ய வேண்டும். ஆயுதங்களும் கொண்டுவந்திருப்பார்கள். பிரச்சனை செய்வதற்கென்றே ஓசியில பஸ் சேவை, உணவு வசதி, தங்குமிட வசதியெல்லாம் கொடுத்து சமூக நல்லிணக்கத்தையும் கெடுத்து, சீர்கேடுகளையும் வளர்க்கிறார்கள்.
-
சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து
உந்த சுமந்திரன் கொசுறு, எல்லோரையும் கட்சியை விட்டு விரட்டியது, தானே எல்லா அதிகாரத்தையும் சுவீகரித்துக்கொள்வதற்காகவே. பாராளுமன்றத்தேர்தலில் கூட எல்லோரையும் கொலைகாரர், கள்ளர் என்று என்னென்னவோ எல்லாம் விமர்ச்சித்தவர். ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்றவர் டக்கிலஸின் காலடியில் கட்சியை விழவைத்தார், அங்கே இவருக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் வேறு வழியின்றி பாதை மாறி விக்கியர் வீட்டு கதவை தட்டியுள்ளார். இது அவரின் பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கே மக்களுக்காகவல்ல. மக்கள் கவனமாக செயற்படவேண்டும். மக்களாலேயே இந்த மாற்றம் ஏற்படுத்த முடிந்தது. தமிழரசுக்கட்சிக்கு விழுந்த வாக்குகளை, கிடைத்த செல்வாக்கை சுமந்திரன் தனதாக்கி அறிக்கை விடக்கூடாது.
-
சவேந்திர சில்வா மற்றும் அமைச்சர் பிமல் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் சீற்றம்
அவர்களெல்லாம் தலைமைத்துவ போட்டியில் மும்முரமாக இருக்கின்றனர், இதுகளுக்கெல்லாம் அவர்களுக்கு நேரமேது. ஏதாவது ஓய்வு நேரம் கிடைத்தால் இவை பற்றி அறிக்கை விடுவார்கள்.
-
சிறைச்சாலை தலைமையகமே சட்டவிரோதமாக செயற்பட்டது; கைதிகள் விடுப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
நான் சொல்லேல.... எங்கும் எதிலும் ஊழல், அது அம்பலமாகும்போது தமிழர் பக்கம் பிரச்சனையை திசை திருப்புவது. இது உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சனையல்ல. இதற்கு அனுர நிறைய விலை கொடுக்க வேண்டி வரும், அதை செய்தால் இவரை யாரும் அசைக்க முடியாது அரசியலில்.
-
ராஜபக்சர்களை நெருங்கும் அனுர தரப்பு! கடும் பதற்றமான சூழல்! களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்!
இந்த திஸ்ஸ விகாரை கட்டுவதற்குமுன் எங்கே பௌர்ணமித்திருநாளை அனுசரித்தார்கள்? அங்கே அனுசரித்தால் புத்தர் ஏற்றுக்கொள்ள மாடாரோ? இதெல்லாம் தமிழ் மக்களை சீண்டும் செயல். திஸ்ஸ விகாரைக்கு வீம்புக்கு வருவோரை புத்தரே பழி வாங்க வேண்டும். இதுதான் சரத் வீர சேகராவின் இந நல்லிணக்கம். ஒரு மதத்தை தழுவும் மக்கள் சூழ்ந்துள்ள இடத்தில அவர்களின் வழிபாடுகளை தடுத்து, எங்கோ வாழுபவர்களுக்கு வழிபடும் இடம் அமைக்கிறார்கள். இவர்களைப்போல் அறிவாளிகள் வேறெங்குமில்லை.
-
செம்மணிப் புதைகுழி வேதனை....முகப்புத்தகத்தில் பிரதி பண்ணப்பட்டது
ஆமா, முன்னர் விசாரணை நடந்தது, பின்னர் அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. சொல்வது யார், மக்களின் அரசியற்தலைவர், சட்ட மேதை, ஆயுதப்போராட்டத்தை எதிர்ப்பவர். இதுவரை இவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, பத்தோடு பதினொன்றாக அறிக்கை விடுகிறார். இந்தியத்தூதுவரை சந்திக்கும்போது இதுபற்றி பேசினாரா? தனது பதவி பற்றி மட்டும் எடுத்துரைத்திருப்பார். யாரிடம் எதை முறையிடுவது என்று தெரியாமல் பேசும் நகைச்சுவையாளன்!
-
உண்மையிலேயே NPP தீய சக்தியா?
எழுபத்தாறு வருடங்களாக இனவாதத்திலும் சிறுபான்மை அடக்குமுறையில் ஊழல் லஞ்சம் கொலை கொள்ளையிலும் மக்களை ஏமாற்றி தங்களை தக்கவைத்துக்கொண்டது சிங்களம். அதிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாமல் தாங்களே தலைமை என்று வீராவேச பேச்சுக்களில் காலத்தை கடத்தியது தமிழ்த்தலைமை. இலங்கையில் நடப்பது பயங்கரவாதம் என்று கூறி சர்வதேசத்திடம் ஆதரவு திரட்ட சிங்களத்தால் முடிந்தது என்றால், அதற்கு தலைமை தாங்கி செல்ல தமிழரால் முடிந்ததென்றால், அதற்கு முன்னே தோன்றிய இனவாதத்தையும் கலவரங்களையும் அடக்குமுறைகளையும் அநீதிகளையும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல ஏன் நம்மவர்களால் முடியவில்லை, முயலவில்லை? எல்லோருக்கும் பதவி வேண்டும், அதற்கு அப்பாவி மக்களின் வாக்கு, உயிர், இழப்பு வேண்டும். அப்படி ஊறிப்போன ஒரு கூட்டிலிருந்து வந்த அனுர உடனேயே பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என கனவு காண்பதென்பது முட்டாள்தனம். இனவாதிகளை உடனேயே கைது செய்ய முடியாது, அப்படி செய்யாமல் இனவாதத்தை தீர்க்கவோ நாட்டை கட்டியெழுப்பவோ முடியாது. தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் அவர் தமிழருக்கு நன்மை செய்கிறார் என்கிற ஒரு பொறியே போதும் நாட்டை பற்ற வைக்க. தமிழரும் என்னை தெரிந்தெடுத்துள்ளார்கள், நான் அவர்களுக்கும் ஜனாதிபதி என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய கடமையுள்ளது. இது சிங்கள பௌத்தநாடு எனும் மாயையை மாற்றவேண்டும். அது அவ்வளவு இலகுவல்ல. நீண்ட பெரிய பொய்யை உடைப்பது சாதாரணமுமல்ல. ஆகவே மக்களே குற்றவாளிகளை காட்டிக்கொடுத்து, கைது செய்து தண்டியுங்கள் என்று சொல்லும் சூழல் வரவேண்டும் குரல் எழ வேண்டும், அதற்கான காரியங்களே ஆரம்பித்துள்ளன. இனவாதிகளுக்கு ஊழல் வாதிகளுக்கு நடுக்கம் ஆரம்பித்து விட்டது. கட்டிலாலை கதிரையாலை விழுகிறார்கள் ஏன் என்றால், அவர்களது அரசியல் கதிரை பலம் நழுவிப்போகிறது. தங்களுக்கு சிறை உறுதியென சொல்கிறார்கள், நாள்தான் தெரியவில்லை. எங்களை தண்டிப்பதை விட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்கிறார்கள். அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியே ஊழல்வாதிகளை கைது செய்வதுதான் என்பதே இவர்களுக்கு விளங்கவில்லை. மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப்பாயுமாம். துள்ளிக்குதித்தவர்கள், குரைத்தவர்கள், சவால் விட்டவர்கள் எல்லாம் மௌனிகளாகின்றனர். ஆகவே இவற்றை எல்லாம் கடந்து நீதியை நிலைநாட்டி நாட்டை கட்டியெழுப்பினால் சிங்கப்பூருக்கு ஒரு லீக்குவானி போல் இலங்கைக்கு அனுராவாக இருக்க முடியும். பொறுத்திருந்து பாப்போம், அவர்களுக்குள் இருக்கும் ஊழல்வாதிகள் இனவாதிகளையும் இனங்கண்டு களைய வேண்டும். நிற்க.... தமிழ்மக்களால் அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட கஜேந்திரனோடு சேர விரும்பாமல் டக்கிளசோடு சேரத்துடிப்பது ஏன்? கையில வெண்ணெயை வைச்சுக்கொண்டு ஊரெல்லாம் அலையுறார் சிவஞானம். ஏனென்றால், தங்களை மிஞ்சினவர் பதவிக்கு வரக்கூடாது, தாம் அடக்கியாள வேண்டுமென நினைக்கிறார்கள். ஒரு கட்சியின் கோப்பை மதிக்காதவர்கள், அதை கட்டிக்காக்க திறமையில்லாதவர்கள், மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள்? இவர்களெல்லாம் சட்ட மேதைகளாம், ஆரம்பகால உறுப்பினர்களாம், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பார்கள் ஆனால் வடக்கில் தமிழருடன் இணக்கப்பாட்டுக்கு வரமாட்டோம் அல்லக்கைகளோடுதான் கைகோப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள். விடுங்கள், வெகு விரைவில் டக்கிலஸிடம் குட்டு வாங்குவார்கள். அங்கு சுமந்திரன் பேச்சாளராக இருக்க முடியாது. டக்கிளஸ் போடும் நிபந்தனைகளே போதும் இவர்களுக்கு. எத்தனையோ முறை டக்கிளஸ் இவர்களோடு சேர முயன்றும் சேர்க்கவில்லை. இப்போ அவருக்கு தகுதியானவர்கள் சேரத்துடிக்கிறார்கள்.