Everything posted by satan
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
கந்தரோடையில் அன்று விகாரைகள் இருந்தன, அவை சைவ தமிழர்களால் தழுவப்பட்டது. பின் அதனை கைவிட்டு மீண்டும் தமது பூர்வீக மதத்தை தழுவியதாலேயே சைவ கோவில்கள் விகாரைகளாகி விகாரைகள் மறுபடி கோவில்களாகி இன்று சர்ச்சையாகியுள்ளது. அன்று நம் முன்னோர் சிலர் கிறிஸ்தவத்தை தழுவி, கைவிட்டதுபோல். அதையும் தவிர்த்து சிர்த்தாத்தன் சைவத்திலிருந்து தீண்டாமையை ஒழிக்க புறப்பட்டு, அவர் சீடர்களால் தோற்றுவிக்கப்பட்டது பௌத்தம். அது சிங்கள பௌத்தமல்ல. தமிழ் பௌத்தத்திலிருந்தே சிங்களம் தழுவியது அண்மையில் ஒரு சிங்கள தேரரே கூறியுள்ளார். நிற்க, இந்திய ஜனாதிபதி மோடியே தமிழே தொன்மையான மொழி எனக்கூறி தமிழில் விளித்ததாகசெய்திகள் வந்தது. அப்போ ஏன் இந்த கன்னடர் தமது எதிர்ப்பை காட்டவில்லை?
-
கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்
இப்போதைக்கு இலங்கை செய்யக்கூடியது, வாயை மூடிக்கொண்டிருப்பதுதான். துள்ளிக்குதித்தால் உலகம் முழுவதும் ஆதாரத்துடன் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் நினைவுநாள் அனுஷ்ட்டிக்கப்படும். இனப்படுகொலை நடைபெறவில்லை, அதற்கான போதுமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று விதண்டாவாதம் பண்ணியவர்களின் முகத்திரை கிழிக்கப்படும். புலிகள் பயங்கரவாதிகளல்லர் என்கிற உண்மை வெளிவரும். உண்மைகள் மறுக்கப்படும்போது, அவற்றை குழி தோண்டி புதைக்கும்போது, அவர்கள் போடும் மண்ணின் மேலேறி வெளியே வந்து நிலைநாட்டும். மூடிய எல்லைக்குள் சாட்சிகளின்றி மக்களை அழித்து பயங்கரவாதிகளென முத்திரை குத்தி புதைத்த உண்மைகள், கனடாவில் கிளம்பி சிங்களத்தின் குடல் கலங்க வைத்துள்ளது. வேறு வழியின்றி இலங்கை உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் நாள் வெகுதூரத்திலில்லை. புலிகளை பயங்கரவாதிகளாகவும், தமிழரின் போராட்டங்களை குலைக்கவும் அனுப்பப்பட்ட முகவர்களாலேயே சிங்களத்தின் முகத்திரை கிழிக்கப்படும் நினைவுத்தூபிகளை சிதைக்க கிளம்பினால். போர் முடிந்த கையோடு, போரில் ஈடுபட்ட இராணுவ தளபதிகளை வெளிநாட்டு தூதுவர்களாக அனுப்பி வைத்து அழகு பார்த்த முட்டாள்தனம், அவசரமாக, திருட்டுத்தனமாக அந்த நாட்டை விட்டு தப்பியோட வைத்தது. ஏன் அவர்களால் அங்கு நிலைத்து நின்று விசாரணையை எதிர்கொள்ள முடியவில்லை? அமெரிக்க வதிவிட அனுமதியுள்ள கோத்தாவால் அங்கு செல்ல முடியவில்லை? தமிழர் தாயகத்தில் நினைவு நாளை நிராகரிக்கலாம், சட்டங்கள் போட்டுத்தடுக்கலாம் அவை எல்லாம் வெளியில் உரக்கச்சொல்லும். சிங்களம் எத்தனைதான் கத்தினாலும் தன்னை நிரூபிக்க தோற்று விட்டது, அதன் முகவர்களுந்தான். அமைதியாக இருப்பதோடு தமிழருக்கெதிரான அடாவடிகளை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம். இல்லையேல் தானாகவே பொறியில் தலையை கொடுக்கும்.
-
மஹிந்த ராஜபக்ஷ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
நானுங்கூட இப்படித்தான் யோசித்தேன். எத்தனை தமிழ்ப் பெற்றோர் பிள்ளைகளை பெற்று, எதிர்பார்ப்போடு வளத்தார்கள். இன்று பிள்ளைகளும் இல்லை, வாழிடமும் இல்லை, தனிமரமாக ஏக்கத்தோடும் வலிகளோடும் ஊமைகளாய் செய்வதறியாது திகைக்கிறார்கள். அதற்கு காரணமானவர்கள் அந்த வலியை உணரவேண்டும், பிராயச்சித்தம் தேட வேண்டும். ஆனால் ஜெ. ஆர் .ஜெயவர்தனா செய்த கொடுமைகளுக்கு சாதாரண மனிதன் போலவே அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றதாம், அவருக்கும் புற்றுநோய் என நினைக்கிறன். தாம் செய்த அனிஞாயங்களுக்கு வருந்தி தங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது அவர்களின் இறுதிக்காலத்தில். ஆனால் யாரும் தங்களை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்வதில்லை. பண்டார நாயக்காவின் வாரிசுகள் அதனை தொடர்ந்தார்கள். அவர் தான் விட்ட தவறை ஏற்றுக்கொள்ளவுமில்லை சரி செய்யவுமில்லை. அவரின் மனைவி, மகள், மகன் அதன் வழியே தொடர்ந்தார்கள். சந்திரிகா இப்போ, அந்த தவறை ஒப்புக்கொண்டாலும் சரியான நேரத்தில் அதை செய்யாமல் காலத்தை தவறவிட்டு ஒப்புக்கொள்வதால், அரசியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது. உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறது. அரசியல் கதிரை ஏறுவதற்கு முன் தமிழருக்கு பிரச்சனையுண்டு, அவர்கள் எங்களால் வஞ்சிக்கப்பட்டார்கள், நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் அவற்றிற்கு முடிவு காண்போம் என வாக்குறுதியளித்து அதை பிரட்டிப்போட்டு, அதன் மேலே அரசியல் செய்து வருகிறார்கள் தற்போது வரை. குற்றம் செய்பவர் தன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது சரியென விளக்கமளித்து போதித்து வந்தால், அந்த வினை கட்டுப்பாடின்றி வளர்ச்சியுற்று இறுதியில் வீழ்ச்சியில் முடிவடையும் அதுவரை வீரியத்துடன் இருக்கும். அது அறமென போற்றப்படும் பின்பற்றப்படுபவர்களால்.
-
தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது
இவராவது கட்சியை விட்டுப்போவதாவது. அப்படியிருந்திருந்தால் எப்பவோ போயிருக்க வேண்டுமே, ஏன் ஒட்டிக்கொண்டு இருந்தார்? பதவியாசை! இவர் சுமந்திரன் ஆளுமல்ல, சுமந்திரன் இவர் ஆளுமல்ல. ஒவ்வொருவரும் தம் நலனுக்காக ஒருவரை ஒருவர் பாவிக்கிறார்கள். இரண்டு கட்சி கூட்டத்திற்கு போகவில்லையாம் பிறகு போனவாரம், ஒன்று கூட்டத்திற்கு போகாததின் காரணத்தை சுட்டிக்காட்டி பிழையை திருத்திய பின் கூட்டத்திற்கு போயிருக்க வேண்டும், இல்லையேல் அன்றே கட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும். தான் ஓரத்தில் பேசாமல் இருந்தவராம். இவர் தலைவர்? இனிமேல் மாற்றிக்காட்டுவாராம், யாப்பை திருத்த முடியவில்லையாம், ஆனால் தலைவர் எப்படி? இந்தக்கேள்வியை விடுங்கோ, அதற்கு என்னால் பதில் சொல்லமுடியாது என நழுவுகிறார். அப்போ தலைமை என்பது பதவி மட்டுந்தான் செயற்பட தேவையில்லை, பதில் சொல்லத்தேவையில்லை, இது இவரின் விவாதம். வழக்கு போட்டவர் மீளப்பெறுவதற்காகவா என கேட்க்கிறார். இதுவரையில் இவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஒன்றுதானும் மீளப்பெறவில்லையா அல்லது சிவஞானத்திற்கு அறளை பிறந்து விட்டதா? இவர் ஒரு தலைவர் அவரை ஒரு பேட்டி. இன்று ஒரு பேட்டி கொடுப்பார் நாளை அதை மறுத்து வேறொரு பேட்டி கொடுப்பார். நேர்மையான நீதியான கட்சி என்று மக்கள் வாக்கு போடுகிறார்களாம். மக்கள் வாக்கு போடுவார்கள் என்பதற்காகவே இங்கு ஒட்டிக்கொண்டு இருந்து வேறு கட்சி தாவுபவர்களும் வேறு கட்சியிலிருந்து இங்கு வந்து ஓடிக்கொள்கிறார்களே தவிர இவர்கள் யாரும் உண்மை நீதியுள்ளவர்களல்ல. யார் பெரியவன் என்பதே கட்சிக்குள் இவர்களின் போட்டி.
-
பிள்ளையானின் கட்சி காரியாலயம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிஐடியினரால் முற்றுகை!
சிவநேசதுரை சந்திரகாந்தனால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சடலங்கள் வெளிவருமா?
-
பயங்கரவாதத்துக்கு எதிராக கனேடிய அரசு எடுக்கும் நடவடிக்கையை 'இனப்படுகொலை' என்பீர்களா? - கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி
ஆயுதமேதுமில்லாமல் தங்கள் வாழ்வை கொண்டுசென்ற மக்களை இனவழிப்பு செய்து, தப்பியவர்களை கப்பலில் ஏற்றி விரட்டியதை மனிதாபிமானம் என்பீர்களா? தங்கள் இனம் அழிக்கப்படுவதை தடுக்க ஆயுதம் ஏந்தியதை பயங்கரவாதம் என்பீர்களா? தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தனியார் காணியில் விகாரைகள் எழுவதை தடுத்தீர்களா? இனவாதம் கக்கியவர்களை தண்டித்தீர்களா? தங்கள் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்களை சொந்த இடங்களில் குடியேற்றினீர்களா? காணாமல் ஆக்கியவர்களை உறவுகளிடம் ஒப்படைத்தீர்களா? போர்குற்றவாளிகளை காப்பாற்றி அவர்களாலேயே கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர். கடிதம் எழுத்துவதாலேயோ, கண்டனம் தெரிவிப்பதாலேயோ நாட்டில் சுபீட்ஷத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாது. அப்படி நீங்கள் நினைத்தால்; உங்கள் அறம் பற்றியபுரிதலில் ஏதோ தவறு இருக்கிறது. உங்களுக்கு அறத்தை கற்பித்தவர்கள் தவறாக போதித்து வழி நடத்தியுள்ளார்கள். காசுக்கு வழக்கு பேசுவதற்கும், மக்கள் மேல் தொடுக்கும் போருக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் உங்களது புரிதலும் குற்றம் சாட்டுதலும். நீங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் அதன் பின் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டாரா என்பதே கேள்வி. ஆமா, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு சிங்களம் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டிருக்கிறது. காரணம் அவர்கள் உங்கள் முகவர்களாகவே செயற்பட்டிருக்கிறார்கள். அதையே காலங்காலமாக செய்து வருகிறீர்கள், அதில் எந்த சந்தேகமுமில்லை எங்களுக்கு. சட்டத்தை, அதிகாரத்தை எல்லோருக்கும் சமமாக பயன்படுத்தும் கனடாவில் பிரிவினைவாதம் தலைதூக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அதை செய்யாமல் விட்டு, மற்றைய இனத்தின் சுதந்திரத்தை, வாழ்விடத்தை அபகரித்ததனாலேயே பிரச்சனை தோன்றியது. பிரச்சனையின் தோற்றுவாயே சிங்களம், பௌத்தம் என்கிற வெறியே. அதை ஏற்றுக்கொண்டு தீர்வுகாணாதவரை நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். மற்றைய இனத்தின் பாரம்பரியம், உரிமையை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவர்களை சீண்டிக்கொண்டிருந்தால் சமாதானம் ஏற்படாது. உண்மை நீதி என்றால் என்னவென்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு நீதியமைச்சர் பதவி ஒரு கேடு. சரியாக சொன்னீர்கள். நீங்கள் நாட்டில் வன்முறைகளை தூண்டுவதும், இனங்களை பிரித்தாழுவதும், இனமத முறுகலை ஏற்படுத்துவதும் நாட்டை அழிப்பதும் உங்கள் அரசியல் தேர்தல் ஆதாயங்களுக்காகவே!
-
தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?
எப்படியாவது நாட்டில் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி தம்மையும் தமது ஊழல்களையும் மறைத்து ஆட்சியை பிடித்து விடமாட்டோமா என்று ஒரு கூட்டம் அலையுது. இதை அனுர எதிர்த்து நடவடிக்கை எடுத்தால், அவருக்கெதிராக மக்களை திரட்டி அவரை ஆட்சியிலிருந்து விரட்டிவிடலாம் என்கிற முனைப்போடு இறங்கி வேலை செய்யுது. வேலையே இல்லாமல் தெருவில் கொக்கரித்துக்கொண்டு சுகம், பதவி, பணம் அனுபவித்தவர்கள், இப்போ சட்டம், விசாரணையை எதிர்கொள்ள முடியாமல் பழைய ஆயுதத்தை கையிலெடுத்து இருக்கிறது. இதில சமாதானத்துக்காக போரிட்டோம், மனிதாபிமான முறையில் போரிட்டோம், நல்லிணக்கம், இந ஒற்றுமை பற்றி பாடம் வேறு. அந்தபிக்குவை பிடித்து விசாரித்து, தண்டனை வழங்கி, புத்த அங்கியை பறித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பிக்குகள் மத பணியை விட அரசியல் செய்வதை தடுக்க வேண்டும். இதை சரி செய்வது இலகுவான காரியமல்ல. "இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இராது." பணம் குறையுது, செல்வாக்கு சரியுது. அதை எதிர்கொள்ள திராணியில்லை, உழைத்து வாழ உடம்பு இடம்கொடாது, மீண்டும் கொள்ளையடிக்க முயற்சி இது. பயங்கரவாத சட்டம் எதற்கு இருக்கிறது, பயன்படுத்த எதற்கு தயக்கம்? இவர்கள் தயக்கம் அவர்களுக்கு தைரியம்.
-
இந்தியா எமக்கு வேண்டப்பட்ட நாடாக உள்ளது – வடக்கு ஆளுநர்
அற்ப சொற்ப நன்மைகளை காட்டி எங்களை அடிமைகளாக்க வேண்டாம், எங்கள் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கவேண்டாம், எங்களை விட்டு விலகி இருக்கச்சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு நன்மையானதை நாங்களே பெற்றுக்கொள்வோம். வலிய வந்து எங்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி அரசியல் செய்வது இந்தியா எனும் சகுனி. தாங்கள்சேர்ந்து அழித்ததை புனரமைப்புசெய்கிறார்கள். எதற்காக? பிராயச்சித்தமா? அழித்தவர் அதற்கான விலையை செலுத்துகிறார், இதற்கு உதவி என்கிற பெயரா? மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் மனிதாபிமான்களாம்? அழித்த உயிர்களை திரும்ப தர முடியுமா இவர்களால்? கோரிக்கைதான் வைக்க முடியுமா இவரால்? குட்டக்குட்ட குனிந்துகொண்டு, குட்டுகிறவனை புகழ்ந்து கொண்டே, தட்டிகேட்க்கிறவனை குற்றஞ்சாட்டிக்கொண்டே இருப்போம்!
-
வடக்கில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் மீள் எழுச்சி தன்மை : அவுஸ்திரேலியா, நோர்வே நாடுகளின் உதவியுடன் புதிய கருத்திட்டம் ஆரம்பம் !
ம், சுனாமி நிவாரணத்தையே தடுத்தவர்கள், பாப்போம் என்ன நடக்கிறதென.
-
குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
புலிகளும் வேண்டாம், இராணுவமும் வேண்டாம் என்று இடம்பெயராமல் தங்கள் வீட்டிலிருந்தவர்களையே இராணுவம் கொலை செய்து குழிதோண்டி புதைத்ததும் கிணறுகள் மலசல குழிக்குள் மூடியதும் தாங்கள் அறியாதது வியப்பே எனக்கு. தங்கள் காணிகளை, வீடுகளை பார்க்க சென்றவர்களை சுட்டுக்கொன்றதும் தெரியாததும் ஆச்சரியமே. கோவில்களிலும் வைத்திய சாலைகளிலும் தஞ்சம் புகுந்தவர்கள் மேல் குண்டுமழை பொழிந்ததும் கேள்விப்படாதது உங்கள் தவறே. எங்கெங்கோ வாழ்ந்தவர்களை விரட்டி புலிகளின் பின்னால் குவித்தது யார்? புலிகள் உருவாகமுதலே தமிழரை தேடித்தேடி கொன்றவர்கள் யார்? ஏதோ புலிகள் மக்களை தடுத்ததால்தான் இராணுவம் மக்களை கொலைசெய்ததுபோல் கதை பேசக்கூடாது. தங்கள் கைகளால் இராணுவத்திடம் கையளித்த தந்தையர், பிள்ளைகள், கணவன்மார் எங்கே? இவர்களை நம்பித்தானே கையளித்தார்கள்? பாடசாலைகள், வீடுகள் எல்லாம் ஏன் குண்டு வீசினார்கள்? புலிகளினாலா? புலிகளை அழித்தபின் தீர்வு என்று சொன்னார்களே, அந்த தீர்வு எங்கே? இன்னும் ஏன் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்? விகாரைகளை எழுப்புகிறார்கள்? தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, போர்நிறுத்த கண்காணிப்பு குழுவை ஏன் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்? சிறுவன் பாலச்சந்திரன்! அவன் ஆயுதம் ஏந்தவில்லை, அரசியல் பேசவில்லை, தனக்கு என்ன நிகழப்போகுது என்பதையே அறியாதவன். அவனை ஏன் கொன்றார்கள்? புலிகள் பயங்கரவாதிகள் என்கிறார்கள், இவர்கள் மனிதரை மீட்க போர்புரிந்தவர்கள், பொறுப்புள்ளவர்கள் இவ்வாறு செய்யலாமா? எங்கு போனாலும் தங்களுக்கு பாதுகாப்பில்லையென மக்களே புலிகள் பின்னால் ஓடினார்கள். மக்களை மீட்பதற்காக போர் புரிந்தவர்கள் அந்த மக்களை தங்க வைக்க வசதிகள் செய்திருந்தார்களா? அடிப்படை வசதியேதும்......? மக்கள் வெளியேறா வண்ணம் பாதைகளை, உணவு மருந்து விநியோகத்தை தடுத்தவர் யார்? யாரையும் உள்ளே அனுமதிக்காததன் நோக்கம் என்ன? மக்கட்தொகையை குறைத்து சொன்னதன் காரணம் என்ன? எப்படியாகிலும் அங்குள்ள மக்களை ஒரே இடத்தில் கூட்டி கொன்றுவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என்று பரப்புரை செய்வதற்கே. அதைத்தான் இன்றுவரை சொல்கிறார்கள். ஆயுத விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது, புலிகள் சரணடைய வெள்ளைக்கொடியோடு செல்ல பேச்சுவார்த்தை, காத்திருப்பு நடந்திருக்கிறது. இதில உள்ளுக்கை வரவிட்டு அடிப்போமென யாரிடம் புலிகள் சொன்னார்கள்?
-
பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா
இந்த மனிதன் நேரத்திற்கு ஒரு கதை பேசுபவர், இதனாற்தான் சிறையிலும் அடைக்கப்பட்டார். இவர், தான் போரை முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று வேறை பங்கு கேட்க்கிறார். தமிழர் எல்லோரும் வந்தேறு குடிகள் என்று சொன்னவருள் இவரும் ஒருவர். அமெரிக்கா சென்றபோது, தொலைக்காட்சி பேட்டியோ பத்திரிகைப் பேட்டியோ ஒன்றில் இவரது பேச்சுப்பற்றி கேள்வி கேட்டபோது, தான் அப்படி சொல்லவேயில்லை என மறுத்து விட்டார். சிறிது நாட்களில் நாடு திரும்பியவர் பின் அமெரிக்கா பக்கம் செல்லவேயில்லை. இவ்வளவுக்கும் இவர் அமெரிக்காவில் கிறீன் அட்டை பெற்றவர். வடக்கில் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று முரசு கொட்டிக்கொண்டு பாதுகாப்பு பிரச்சினையாம். அப்போ தெற்கு, ஒரே கலவரமும் சூடுமாக இருக்கிறதே, நீதிமன்றத்துக்குள் சூடு நடத்தப்படுகிறதே, அதற்கு என்ன சொல்லப்போகிறார்? இவரை யாரும் தென்பகுதியில் கண்டுகொள்வதேயில்லை, ராஜபக்ஸக்கள் எடுக்கும் போர் வெற்றி விழாவிலேயே இவருக்கு அழைப்பு கிடைப்பதில்லை. போர்முடிந்த கையோடேயே சிறைக்குள் போடப்பட்டவர், அவமானப்படுத்தப்பட்டவர். இவருக்குத்தான் தேர்தலில் நம்ம தலைவர்கள் ஆதரவு வழங்கியவர்கள். பார்த்தீர்களா நன்றிக்கடனை? வெகு விரைவில் மஹிந்தா, நாமலோடு இணைவார் போலுள்ளது. பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் பாம்பு கடிச்சுக்கொல்லுமே.
-
குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
ஒன்றுஅனுரா இனவாதிகளுக்கு பணிந்து போக வேண்டும், அப்படியானால் நாட்டில் சமாதானத்தை, நல்லிணக்கத்தை அவரால் கட்டியெழுப்ப முடியாது. கட்டியெழுப்ப வேண்டுமாயின் இந்த அச்சுறுத்தலுக்கு பணியாது, உண்மையில் இவர்கள் செய்த வேலைக்கு, இவர்களை சிப்பாய் என்று அழைத்ததே மேல், போரில் என்ன நடந்தது என நடந்தவற்றை காட்டுகிறேன் பார்க்க தயாரா என கொக்கரிப்பவர்களிடம் கேட்க வேண்டும். அப்படி போரில் நடந்த அக்கிரமங்களை நீங்கள் பார்க்கதயாரென்றால் இவர்கள் போர்க்குற்ற வாளிகள் ஆவர், பிரச்சனையில்லையா என கேள்வி கேட்க வேண்டும். ஆனால் அனுரா அதை செய்யமாட்டார், அதை செய்யவில்லையென்றால்; இந்த பிரச்சனை தொடர்கதைதான். ஆனாலும் சர்வதேசம் ஒருநாள் இவற்றை வெளியிடத்தான் போகிறது. இலங்கையில் இனவழிப்பு நடைபெறவில்லை என்பவர்கள். அப்போ என்ன சொல்லப்போகிறார்கள்? இனவழிப்பு நடைபெறவில்லையென்றால் ஏன் சணல் நான்கை பார்ப்பதற்கு இலங்கையில் தடை செய்துள்ளார்கள்? உங்கள் வீரர்களின் வீரத்தை, தியாகத்தை பார்க்க அவ்வளவு வெறுப்பு உங்களுக்கே. ஆனால் வெற்றி விழா, கோசம். அவர்கள் ஒன்றும் சும்மா போரிடவில்லை. இருக்கும்போது சம்பளம், இறந்தபின் குடும்பத்தினருக்கு சம்பளம். அதுவும் ஏம்மாற்றப்பட்டே போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
-
மஹிந்த ராஜபக்ஷ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்
உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று, வெகுவிரைவில் மஹிந்த குடும்பம் கைதுசெய்யப்படவுள்ளதாக வெளிவந்துள்ளது. அதனால் இவர்களும் இப்படியான செய்திகளை கசிய விடலாம். எல்லாம் ஆசுப்பத்திரி கேசுகள் தான். நேற்று நாமலின் அடிப்பொடிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ததற்காக துள்ளிக்குதித்தார்கள், அதிலிருந்தே தெரிகிறது இவர்களுக்கு நாள் நெருங்கி விட்டது. அச்சுறுத்தல் அதே நேரம் அனுதாபம் இது இவர்களின் வழமையான வேலைதானே. கொந்தளிக்கிற நாலுபேரை உள்ள போட்டால் மற்றவர்கள் தானாக மறைந்துவிடுவார்கள்.
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
கனடாவுக்கு எதிராக கண்டனத்தை செய்யாமலா விட்டிருக்கும்? வழக்கு என்பது போடமுடியாது, எங்கே போடுவது, ஐ. நாவிலா? அங்கே இவர்களுக்கெதிரான இந ஒடுக்குமுறை பாக்கி இருக்கிறதே? அவர்கள் நாட்டில் எதை கட்டவேண்டும், கட்டக்கூடாது என தீர்மானிப்பது அந்த நாட்டு மக்களும் அரசாங்கமுமே தவிர இந அழிப்பை செய்த இலங்கை அரசாங்கமல்ல. தனது நாட்டில் இந, மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைத்துக்கொண்டு, மற்றைய நாடுகளுக்கு அச்சுறுத்தல், கண்டனம், போதிப்பு. இப்போ கனடா இலங்கையின் மொழியிலேயே பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டது. அதனால் தூதுவரை அழைத்து கண்டனம் தெரிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றைய நாடுகளும் இதனை பின்பற்றக்கூடும். ஏனெனில் இந்தப்போரினாலேயே தமிழர் அந்தந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர், அந்த நாடுகளும் அவர்களை ஏற்றுக்கொண்டன.
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
ஒன்றுக்கு தப்பினால், இன்னொன்றில் மாட்டத்தானே செய்வார். இங்கு எமது பதிவுகளை பலநாடுகளில் உள்ளோர் வாசிக்கின்றனர் போலுள்ளது. இனி காரியம் ஆகலாம். இல்லை அடுத்த விமானத்தில் பசிலே வந்து இறங்கி விடுவார். அதனை சிங்கள அரசு விரும்பாது செய்யாது அதற்கு காரணமும் உண்டு.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஏன் கொழும்பை தவிர்த்து விட்டீர்கள்? முன்பு கொழும்பில் பல சைவ உணவகங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள் கூட புங்குடு தீவாருடையதாம். இப்போ பிரான்ஸிலுள்ள தமிழரில் பாதிக்குமேல் பெரும் பணக்காரர் அவர்கள்தானாம். எனது தூரத்து உறவினர்கள் கூட புங்குடுதீவில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். பணத்துக்காக அல்ல பழக்கம். நாங்கள் இடம்பெயர்ந்து இருந்தபோது, பல குடும்பங்கள் எமது வீட்டை சுற்றி வசித்தார்கள். அவர்களும் இடம்பெயர்ந்தவர்களே. அருமையான, இரக்கமுள்ள குடும்பம் ஒன்று. அவர்கள் இப்போ பிரான்சில் இருப்பார்கள் என நினைக்கிறன். அப்பவே அவர்களது பெரும்பாலான உறவினர் பிரான்சில் இருந்தார்கள், இவர்களும் அங்கு போகப்போவதாக கூறியிருந்தார்கள். கந்தையர், இனிமேல் நீங்கள் எத்தனை தடவை வேண்டுமானாலும் புங்குடுதீவை குறிப்பிடலாம் அவர் கோவிக்கமாட்டார் பெருமைப்படுவார்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சந்தேகமேயில்லை கழுதைதான்.
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
தமிழர் வாழும் நாடுகளெங்கும் நினைவுத்தூபிகள் எழும்பி இந அழிப்பை பறை சாற்ற வேண்டும். அப்போதான் சிங்களம் வாயை மூடிக்கொண்டு இருக்கும். எப்படியும் ஒருநாள் வளமாக சிக்கப்போகிறது. தான் எவ்வளவு மறைத்தாலும், தன்னை யாரும் நம்பவில்லை என்பதை இந்த ஒரு தூபியே சான்று. தெருவெங்கும் அரசியல்வாதிகளும், பிக்குகளும் நின்று தாங்கள் நடத்திய தமிழருக்கு எதிரான கொடுமைகளை சொல்லி இன்னும் அதுபோல் நடவாது ஒதுங்கி இருங்கள் என அச்சுறுத்திக்கொண்டு, சாட்சியம் சொல்லிக்கொண்டும் அவர்களின் நிலங்களில் அத்துமீறல்களை அரங்கேற்றிக்கொண்டும் இந அழிப்பு நடைபெறவில்லை என கூச்சல் போடுவது எந்தளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என சிந்திக்க தெரியாதவர்களாக இருக்கிறார்களே, இவர்களால் எப்படி சரியானதை சிந்திக்கவும் நாட்டை கட்டியெழுப்பவும் முடியும்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வேலன் சுவாமிக்கு இருக்கிற மரியாதை குறையுதா, சுமந்திரனுக்கு குறைந்த மரியாதை எகிறுதா என வரும் காலங்கள் நிரூபிக்கும்.
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
இவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்திருந்தால் ஒரு நினைவுத்தூபியோடு நின்றிருக்கும். இப்போ, வாயைக்கொடுத்து கனடா முழு மாநிலத்திலும் சர்வதேச நாடுகளிலும் தமிழ் இந அழிப்பிற்கு சான்றாக நினவுத் தூபிகள் எழ தூண்டிவிட்டுள்ளது இலங்கையின் அவசியமற்ற, நிஞாயமில்லாத கண்டனம். உண்மையை ஏற்றுக்கொள்ள துணிவில்லை, மனச்சாட்சியில்லை, இதில் வேறு குரைப்பு.
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
இன்னும் தீவிரமடைவதோடு தானாகவே இந்தியா மாட்டிக்கொள்ளும் .இலங்கை, இந்தியாவை கொம்பு சீவுவதுபோல் தெரிகிறது சில விடயங்களைப்பாத்தால். இது இந்தியாவின் யுத்தமென மஹிந்தா, பொன்சேகா அறிவித்துவிட்டனர். ஆனால் கனடாவில் இந்தியாவின் அச்சுறுத்தல் எல்லாம் வேகாது. அஇந்தியாவுக்கும் சேர்த்துதான் கனடா சொல்லும் செய்தி இந்த நினைவுத்தூபி. இந்தியாவுக்கு கனடாமேல் கடுப்பு இருக்கிறது அதை காட்ட முடியாது. உள்நாட்டில் சில கருத்துக்களை ஈழத்தமிழருக்கெதிராக விடலாம். இந்தியாவும் காலிஸ்தான், காஷ்மீர் மக்களை இப்படியொரு நிலையிற்தானே வைத்திருக்கிறது!
-
கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா?
இலங்கையில் அது நடக்கவில்லையென மறுக்கப்படும்போது, உலகெங்கும் தமிழ் இந அழிப்புக்கான தூபிகள் எழும். இறுதியில் இலங்கையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ள வைக்கப்படுமா? பொறுத்திருந்து பாப்போம். மனிதர் ஒருவழியை மறுக்கும்போது, பலவழிகள் திறக்கப்படும். விதி எங்கோ அழைத்துச்செல்கிறது.
-
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!
விசுகர்! கட்டாயம் உங்கள் பணமும் இதில் இருக்குமென்றே நினைக்கிறன். தொண்ணூறு கோடியில் கட்டிடம் கட்டுமளவிற்கு அதை பராமரிப்பதற்கு, அங்கே அவ்வளவு மக்கள் இருக்கிறார்களா? வருங்காலத்தில் இதை பராமரிப்பார்களா? மக்களின் தேவைக்காக கட்டப்பட்டதாக தெரியவில்லையே?
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
அது சாமியார், நீதிமன்றத்திற்காக விபத்து, வைத்தியசாலை அனுமதி, வைத்தியர் அறிக்கை. அமெரிக்க வைத்தியசாலையில் புத்தர் சிலை வைக்கலாமா, வைத்தியசாலை உடை தவிர வேறு உடை அணியலாமா என்பதை யஸ்ரின் உறுதிப்படுத்தவேண்டும். அல்லது பசில் வீட்டை வைத்தியசாலை ஆக்கிவிட்டார்களா தெரியவில்லை? ஒரு வைத்தியசாலை அறிக்கை, விமானப்பயணத்தை மட்டும் ஏன் விளித்து எழுதியது? நோயாளிகளுக்கு பொதுவான அறிவித்தல் கொடுப்பார்கள், நாம் பயணம் செய்ய இருப்பதை தெரிவித்தால் மட்டுமே பிரத்தியேக விளக்கம் கொடுப்பார்கள். ஒரு சாதாரண கதிரையில் இருந்து விழுந்து ஆறுமாதம்...... விளங்கவில்லையா? கைதை தடுக்கும் வழி! இங்கிருந்திருந்தாலும் இந்த நாடகந்தான் நடந்திருக்கும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மஹிந்தவின் மகனை விசாரணைக்கு அழைத்தபோது, நான் நினைக்கிறன் ஒரு பாட்டி அவரின் பெயர் டெய்ஸீ என. அவருக்கு மறதி நோய் அவருடைய பணம் அது என்றும் அவரால் இப்போது நினைவு படுத்த முடியாதென்றும் அறிவித்தார்கள். உண்மையிலேயே அது அவரின் பணந்தானா? அவருக்கு மறதிநோய் இருப்பது உண்மைதானா என யாரும் உறுதிப்படுத்தியதாக தெரியவில்லை?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அசைவ உணவகம் என்று போராட்டம் வெடித்தது இப்போ அனுமதியில்லாமல் திறக்கப்பட்டது சைவ நெறி கற்பிக்கப்படவேண்டும் என்று சைவத்தை முன்னிறுத்தி பல்வேறு கோரிக்கைகள் சிங்கள பௌத்தத்துக்கும் தமிழ் சைவத்துக்கும் அதிக வித்தியாசமில்லை நமக்கு சைவ தமிழ் ஈழம் கேட்க்கிறார்களா இதில நாம் எங்கே ஒன்றிணைந்து போராடுவது எங்கே சைவ கோவில்கள் இடிக்கப்படுகிறதோ முரண்பாடுகள் தோன்றுகிறதோ அங்கே எல்லா மத தமிழர்களும் எதிர்க்கிறார்கள் ஒரு சமூகத்தில் மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் போது ஏற்படும் அழிவுகளை கண்டும் நாம் திருந்தவில்லை ஏற்றத்தாழ்வுகளை முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பெயர் மதமோ அது சார்ந்த அபிமானமோ இல்லை மத வெறி இப்போ வேலன் சுவாமி பற்றிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது போகப்போக இன்னும் வரும் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி! ஓ, அப்படியா! நானேதோ இந்தத்திரியில் விவாதிக்கப்பட்டது என்று நினைத்து விட்டேன். பாவம் சுமந்திரனை நீங்கள் ஏன் இதற்குள் இழுத்து வந்து வேலனுக்காக வாதாட பரிந்துரைத்தீர்கள்? இதுதான் பக்கா அரசியல்!