Everything posted by satan
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்தில்லை. புலிகளை தண்டிப்பதற்கு முதல் இந்த வன்முறையை தூண்டியவர்கள், அதற்கான காரணம் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக நீதிபதியை மாற்றியவர் யார், ஏன், எதற்காக காரணம் வெளிக்கொணரப்படவேண்டும். கோயில்களை இடிக்கவும், இறைச்சிக்கடை வியாபாரத்தலங்கள் அமைக்க அனுமதியளித்தவர் யார்? அனைவரும் விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டு அவர்களது முறைகேடான பதவிகள் பறிக்கப்பட்டு அவர்களது வங்கிக்கணக்குகள் ஆராயப்பட்டு முறைகேடான பணச்சேர்ப்பு பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதாவது தமிழரும் முஸ்லிம்களும் இணைந்திருந்தால் தமது திட்டம் நிறைவேற்ற முடியாது, ஆகவே எங்களை இரண்டு படுத்த அவர்களுக்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது. தமிழரை பெலயீனப்படுத்த முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை தருவதாக வாக்களித்து செயற்பட்டிருக்கிறார்கள். தமிழர் முடிந்தபின் இவர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா? அதன் பலனை கண்டோமே. இவர்களிடம் இருந்து கிழக்கை பறிப்பது சிங்களத்துக்கு ஒன்றும் பெரிய காரியமல்ல. சொந்த காணியை பறிக்க முடியுமென்றால், கள்ளக்காணியை பறிப்பது ஒன்றும் பெரிய பிரச்னையல்லவே. அறிவு இல்லாத ஜென்மங்கள் தங்களையும் தனிமைப்படுத்தி, தமிழரையும் அழிக்கிறார்கள். அதனாற்தான் வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்தஆறு ஓடும் என்று எச்சரிக்கிறார்கள் பின் விளைவை எதிர்பாராமல். இதையே போரின் பின் விநாயக மூர்த்தி முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தனும் சேர்ந்து கோரஸ் பாடுகிறார்கள். வடக்கு கிழக்கு இணைவது தமிழர் பெலம் பெறும் என்பது சிங்களத்துக்கு நன்றாகவே தெரியும். ஆகவே இந்த மூடர்களை அது பாவித்து தன் திட்டத்தை நிறைவேற்றுகிறது. பேசுவது தமிழ், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்லக்கூடாதாம். அறிவு எவ்வளவு என்று பாருங்கள்!
-
வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!
அவர்களுக்கு அது கேவலமாக தெரியாது. இனத்தை விற்று, அவர்களுக்கொரு தீர்வு வந்து விடக்கூடாது என்பதற்காக அலைகிறார்கள். தீர்வு வந்தால்; இவர்கள் யாருக்கு சேவகம் செய்வது? எப்படி உயிர் வாழ்வது? இப்போ, இது ஒரு தொழில்! நாளாந்தம் மனித நேயம் பேசிக்கொண்டு நமது இழப்பில் வியாபாரம் செய்கிறார்கள்.
-
கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்!
ஓ.... கடத்தல் மன்னர்கள் சிறையில் இருப்பதால், வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா தொழில்? தொழில் அனுபவம் காணாது போலுள்ளது.
-
தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்?
தங்களது ஊழல்களையும் குற்றங்களையும் மறைப்பதற்காக ராஜ பக்ஸக்கள் செய்யும் திசை திருப்பல்கள். வெகு சீக்கிரம் உயர்த்த ஞாயிறு விசாரணை முடிந்து இவர்களை தூக்கு மேடைக்கோ, சிறைக்கோ ஆயுள் தண்டனையில் அனுப்ப, இதெல்லாம் அடங்கும். மின்சாரக்கதிரையில் ஏற அவதிப்பட்டவர் இங்கே போகட்டும். அவருக்கு தெரியும் தான் செய்த குற்றங்களுக்கு அதுதான் தண்டனையென்பது.
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
முஸ்லிம்கள் மீது புலிகளின் இனச்சுத்திகரிப்பு என சிறிலங்கா அரசு அதை சுட்டிக்காட்டி அரபு முஸ்லீம் நாடுகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசு ஆதரவில் இயங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரின் அட்டகாசம் அதிகரித்திருந்தது. தமிழ்க்கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாக்கியது. அப்பாவித்தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு, விரட்டப்பட்டு, காடுகளிலும் உறவினர் வீடுகளிலும் இழப்புகளோடு தஞ்சமடைந்து இருந்தபோது, இப்போது மனித நேயம் பேசும் ஒருவரும் அந்த மக்களுக்கு பாதுகாப்பளிக்கவில்லையே? அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் அன்று புலிகளைத்தவிர யாரும் முன்வரவில்லை. அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்தவர் விநாயக மூர்த்தி முரளிதரன். அன்று யாழ்ப்பாண தலைமையகத்திற்கு சென்ற விநாயக மூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி பற்றி முறையிட்டார். விநாயக மூர்த்தி முரளிதரனின் தூண்டுதலிலேயே யாழ்ப்பாணமுஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் எதிரொலி இங்கும்நிகழ்ந்து விடக்கூடும் எனும் அச்சம் எழுந்திருக்கலாம், அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலையை தவிர்ப்பதற்காக முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அங்கு அப்படியான ஒரு சூழலை முதலில் வலிந்து தோற்றுவித்தவர்கள் முஸ்லிம்களே! அன்றும் இன்றும் அவர்களுடைய குறிக்கோள், தமிழரை கிழக்கிலிருந்து அழித்தொழிப்பதே. அருண் சித்தார்த் சொல்லுது, குருக்கள் மடத்தில் நடந்த படுகொலைகள் புலிகளால் நடத்தப்பட்டதாம். அதற்காக புனர்வாழ்வளிக்கபட்ட முன்னாள் புலிகளும், புலம்பெயர் புலிகளும் தண்டிக்கப்படவேண்டுமாம், இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் முன்னாள் புலிகள் தண்டிக்கப்படக்கூடாதாம். காசு கொடுத்து தப்பி போய் வெளிநாடுகளில் இருந்துகொண்டு போராடுகிறார்களாம். இவருக்கு அப்போது தப்பிப்போக காசு இல்லைபோலும், அந்த வயிற்ரறெரிச்சலை கொட்டுது, தனது எஜமானை சிக்க வைப்பதும், இன்னும் இந்த பிரச்சனை மறக்கப்படாமல் இருப்பதற்கும் இவர்களே காரணமாயிருப்பதால், அவர்கள் மீது கோபமும் இப்படி கதைக்க வைக்கிறது. இவன் தமிழனா? இவனை பேசாமல் என்ன செய்வது? எந்த தொழிலும் உயர்வானதே, ஆனால் இவன் இப்போது இனத்தை விற்றுசெய்யும் தொழில் ஈனத்தனமானது, அருவருக்கத்தக்கது. மரியாதையை யாரும் கேட்டுப்பெற முடியாது, அது நமது நடத்தையால் பிறர் நமக்குத் தருவது, பிறருக்கு நமது செயல் மீது ஏற்படும் ஈர்ப்பு.
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
காலங்காலமாக ஒரு இனத்தை குறிவைத்து, அவர்களது பொருளாதாரம், உடைமை, உயிர் என்பவற்றை தாக்கி அழித்து துரத்தும்போது, சிங்களத்தோடு தோளோடு தோள் நின்று வாரிச்சுருட்டியது இந்த ஈனப்பட்ட இனம். முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து மக்கள் பிரதிநிதி என்று பாராளுமன்றம் போனவர், முஸ்லிம்களின் மேடைகளில் தோன்றி முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூப்பாடு போட்டார். ஆனால் குறிவைத்து அப்பப்போ தாக்கியழிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதாரம் காணாது என்று உரத்துச்சொல்லிப்போட்டு, இன்றும் இந்த மக்களின் பிரதிநிதி தான் என்று அடாவடி பண்ணுகிறாரோ அது தெரியவில்லையா? கிழக்கு மாகாணத்த்துக்கு ஒரு முஸ்லீம் முதலமைச்சராக வந்தால் கிழக்கை முற்றாக கைப்பற்றி முஸ்லீம் மாகாணமாக மாற்றவேண்டும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை இல்லாது செய்ய வேண்டுமென்ற முஸ்லிம்களோடு சேர்ந்து முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தாரே தாங்கள் அறியவில்லையா? ஊர்காவற்படை என்பது தமிழருக்ககெதிராக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட ஒரு ஆயுத குழு. அது கிழக்கில் செய்த அட்டூ ழியங்கள் யாவரும் அறிவர். அப்படியான ஒரு அழிவு வடக்கில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்படிருக்கலாம். அதற்காக அவர்கள் பின் மன்னிப்பும் கேட்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் செய்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டார்களா? இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் அப்பப்போ கூறி தமிழர் தான் குற்றவாளிகள் என அவர்கள் நிறுவுகிறார்கள், அதற்கு வக்காலத்து கொடுப்பதும் நாம் தான். சிங்களம் தமிழரை தாக்கினால் அவர்களோடு கேளாமலேயே ஒன்று சேர்ந்து தாக்குகிறார்கள் தமிழரை,சிங்களம் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கிளம்பியபோது ஒரு முஸ்லீம் அரசியல்வாதி சொன்னார் நாட்டை இரண்டுபடுத்தும் போரில் முஸ்லிம்களை கேளாமலேயே தாம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி போரிட்டபோதும் அரசாங்கம் தங்கள் மீது வன்முறையை கட்டவிழ்ப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் தங்களுக்கு அந்த நேரத்தில் தமிழரிடமிருந்து ஆதரவு தரவேண்டுமென்றும் பேசினார்கள். எப்படி இருக்கிறது அவர்களது நிஞாயம்? தமிழர் அதிகாரம் கேட்டால் மட்டும் தங்களுக்கும் வேண்டுமென்று கூச்சலிடுகிறார்கள். கேட்க வேண்டியது, அது என்ன அவர்களோடு சேர்ந்து கூடிக்குலாவுவது, தமிழர் கேட்டவுடன் மட்டும் இவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது? இந்த இனம் ஒரு கொள்கை இல்லாமல் ரத்தம் குடித்து வாழும் இனம். அதனால் சிங்களம் இவர்களை பயன்படுத்துகிறது. ஹிஸ்புல்லா, நசீர் போன்றவர்கள் அவர்களுடன் சேர்ந்தவர்கள் கிழக்கில் வேண்டுமென்றே கொலைகளை நடத்தினர் தமிழருக்கெதிராக. அதை ஹிஸ்புல்லாவே வெளிப்படையாக கூறியிருக்கிறான். கிழக்கு முஸ்லிம்களுடைய மாகாணமாக்குவதற்காக திட்டமிட்டு படுகொலைகளை நடத்தி அந்த மக்களை விரட்டினான். இப்போ பாருங்கள்... முழுமையான விசாரணைநடத்தி பறிக்கப்பட்ட நிலங்கள் மீள அந்த மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமென்கிற நிலை வந்தால், வந்தால்.... முஸ்லிம்கள் எப்படி மாறுவார்கள் என்று! ஹி ஹி என்று கொண்டு, எந்த வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் வந்து ஒட்டிக்கொள்வார்கள்.
-
பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி
இது வருடாவருடம் நடக்கும் சம்பவம். எத்தனை கஸ்ரப்பட்டு படித்து முன்னுக்கு வருகிறார்கள், இது சாதாரண மாணவர்கள் செய்யும் வேலையல்ல. நாளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டியவர்கள். இவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் இவர்களை திருத்த முடியாது. பிறரின் துன்பத்தில் மகிழும்மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்.
-
சிஸ்ட்டர் அன்ரா
நான் நினைக்கிறன் இவருடைய ஒரு தங்கை மருத்துவ தாதியாக பணியாற்றியவர். எனது கணிப்பு சரியா? மிகவும் சிவந்த நிறமுள்ளவர்.
-
சிஸ்ட்டர் அன்ரா
ம். நன்றாகவே தெரியும். பெயரை நான் சொல்லாமல் விட்டதற்கு காரணம் ஒருவேளை அவராக இல்லாமல் இருந்திருந்தால் என்பதற்காகவே. அவர் யாழ்ப்பாண பெண்கள் பாடசாலையில் அதிபராக இருந்திருப்பார் என நினைக்கிறன். அவர்களை இரணைமடுவுக்கு சுற்றுலா கூட்டிச்சென்றபோது தவறுதலாக இரு பெண்கள் குளத்தில் விழுந்து இறந்து விட்டார்கள். இதனால் மிகவும் மனமுடைந்து கஸ்ரப்பட்டார்கள்.
-
உன்னால் முடியும் தம்பி
என்ன இது? நல்ல நண்பர்கள், கலியாண வீட்டில் பொட்டலம் எல்லாம் கடத்தி, கட்டியணைத்தீர்கள். விலாசம் தெரியாமலா? விலாசம் தராமலா பார்சல் வரவில்லை என்று ஏங்குகிறார்? பயணம் போவதும் வருவதும் பிரச்சனையல்ல, கொண்டுவரும் பொருட்களை கொடுத்து முடிப்பதே பெரிய வேலை.
-
LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு.
இது தொல்பொருள் அமைச்சுக்கு தெரியுமோ? உடனடியாக வந்துதடை ஏற்படுத்தி தேடத்தொடங்கி விடுவார்களே? பௌத்த சாசன அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு தமிழரின் காணிகளை பிடித்த அமைச்சரின் பெயரை மறந்து விட்டேன், அவரும் மறைந்து விட்டாரா? கள்ளரின் தொலைபேசிகளும் செயலிழந்து விட்டனவாம்.
-
உன்னால் முடியும் தம்பி
யாரோ அப்பாவி சின்னப்பையன், பெற்றோரோடு அமர ஆசைப்படுகிறார் என்று நினைத்திருப்பார். அது சரி, தங்களின் பயணக்கட்டுரை எப்போ வெளிவருகுதாம்? படிக்க ஆவல்! கொண்டுவந்த பொட்டலங்கள் பகிர்ந்தளிச்சாச்சா உரியவர்களுக்கு, அன்பானவர்களுக்கு, வேண்டப்பட்டவர்களுக்கு?
-
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
தொழில் நுட்ப கோளாறான விமானம் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது? நெதன்யாகு பாவம், அவர் யாரையும் கொலை செய்ய நினைக்கவில்லை. நேற்று சத்துணவுக்கு வரிசையில் நின்ற குழந்தைகளை இலக்கு, இன்று தண்ணீருக்கு நின்ற குழந்தைகள் இலக்கு. ஆனால் அது தொழில் நுட்ப கோளாறா, நெதன்யாகுவின் மூளைக்கோளாறா? போர் முடியுமுன்னோ பின்னோ நெதன்யாகு அரசியலில் இருந்து துரத்தப்படுவார்.
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அவர்களும் கையில் எடுக்கட்டும். நமகென்ன பயம்? நாம் என்ன இல்லாததையா கிளறுகிறோம்? அன்று தொடங்கி இன்றுவரை இடையறாமல் இதற்காக குரல் கொடுத்தோம் போராடினோம். அவர்களும் தங்களால் இயன்றதை செய்யட்டும். அவர்கள்; மக்கள் புலிகள் இல்லையாம், தமிழ் மக்களின் சனத்தொகையில் இருபத்தைந்து வீதமே புலிகளாம், புலிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையாம். மக்கள் செல்வாக்கு இல்லாமலா முப்பது ஆண்டுகள் புலிகள் நிர்வாகம் நடத்தினர்? வெள்ளைவத்தை வரை முள்ளிவாய்க்கால் நினைவு கூருகிறார்கள்? மக்கள் புலிகள் இல்லை என்றால் இருபத்தைந்து சதவீத புலிகளையா சிங்களம் கொன்றது? அப்போ ஏன் தமிழ் மக்களை வயது வேறுபாடின்றி வகைதொகையின்றி கொன்றது? எதற்கு வெள்ளைவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவு கூருகிறார்கள்? என கேள்வி எழுப்புது ஒன்று. நாங்கள் எங்கை வேண்டுமானாலும் செய்வோம் அதற்கு இவருக்கு ஏன் வயிறு எரியுது? இவ்வளவு நாளும் கிண்டாத செம்மணியை இப்போ ஏன் கிண்டவேண்டுமென்று வேறு கேள்வி? எப்போ வேண்டுமானாலும் கிளறலாம். அங்கே தமிழரின் உடல்கள் கொன்று புதைக்கப்படுள்ளது. மக்கள் வேறு புலிகள் வேறு என்பவர் பொதுமக்களின் உடலையே தாம் புதைத்ததாக அடையாளம் காட்டியுள்ளனர். இப்போ என்னவென்றால்; தென்பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் இடம்பெற்றுள்ளது, சிங்கள சட்டத்தரணி இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டி முறையிட்டிருக்கிறார், இப்படியே போனால் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்தால் தமக்கு அரசியல் செய்ய ஏதுமில்லை, அதோடு அடித்தே கொன்று போட்டாலும் போடுவார்கள் என்றொரு பகுதி பதைபதைக்குது, அவர்களுக்கு கால் கழுவி, ஏவல் வேலை செய்து பிழைக்கும் கூட்டம் பிழைப்பு போகுதே என கூக்குரலிடுகுது. அனுரா உண்மையில் சமாதானத்தை, நாட்டின் முன்னேற்றத்தை விரும்பினால் இதய சுத்தியோடு நீதி விசாரணை நடத்தி ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும். அப்போ இந்த ஏவல் கூட்டம் ஓடி ஒதுங்கும். அனுரா ஆட்சியேற்றவுடன் சவால் விட்டவர்கள் இப்போ, ஒருவர் ஒருவராக ஓடி மறைக்கின்றனர், நோயாளிகளாகின்றனர். அவ்வளவு சுமையை தாங்கி நாட்டை ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இது உங்களுக்கான பதிலல்ல, பலபேர் காண முடிவதால் எழுதுகிறேன்.
-
சிஸ்ட்டர் அன்ரா
ஒரு கன்னியாஸ்திரி கரவெட்டியை சேர்ந்தவர். அவரும் அந்நேரம் மக்களோடு மக்களாக மக்களுக்காக சேவை செய்தவர். இன்னொருவர் சிவந்தமேனி அழகான முகத்தோற்றமுடையவர் பெயரை மறந்துவிட்டேன் இவர்கள் இருவரும் எனக்கு அநேகமாக தெரிந்தவர்கள் இதிலொருவர் அல்லது அவர்கள் ஒருவருமே இல்லாமல் வேறொருவராக இருக்கலாம் உங்கள் அன்ரா. அவர் யாராக இருந்தாலும், இறைவனில் ஆறுதலடைவாராக!
-
இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி!
சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே யும் காணாமல் ஆக்கப்படுவாரா அல்லது உண்மையை தென்னிலங்கைக்கு தெளிவு படுத்துவாரா?
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
இல்லை. அருண் சித்த்தார்த், நேரத்து ஒரு பெயர் பட்டியலோடு அலைகிறார். தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிஞாயமும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கிக்கொடுக்கப்போகிறாராம், அதற்காக காத்திருக்கலாமென நினைக்கிறன்.
-
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்
இன்று அருண் சித்தாத்தின் அறைகூவல் ஒன்று பாத்து வயிறு கிழிய சிரித்தேன். டக்லஸின் அறைகூவல் மறைய இவர் ஆரம்பித்திருக்கிறார். ஒரு விஷச்செடியிலிருந்து இன்னொரு விஷம் உருவாகும். மூன்றரை லட்ஷம் தமிழரில் இருபத்தைந்து வீதம் புலிகளாம் ஆகவே புலிகள்தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்று சொல்ல முடியாதாம். அப்போ சிங்களம் கொன்ற தமிழர் எத்தனை லட்ஷம்? ஏன் அவர்களை சிங்களம் கொன்றது? புலிகளை அழித்து விட்டோம் என்று கர்சித்துக்கொண்டு இன்னும் ஏன் தமிழர் நிலப்பரப்பில் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள்? முஸ்லிம்களின் படுகொலைக்கு நீதிவேண்டி புலம்பெயர் தமிழரை தண்டிக்கப்போகிறாராம். அவர்களின் கொலைக்கு எல்லா ஆதாரங்களுமுண்டாம். சரி, ஆதாரமிருந்தால் ஏன் இதுவரை தோண்டவில்லை? சரியான நிலம் அடையாளம் காணப்படவில்லையாம். நாங்கள் எல்லா ஆதாரம், சாட்சி, பொறுப்பு எல்லாவற்றுடனுமே தோண்ட தொடங்கினோம். அதை நிறுத்தியது யார்? ஏன் அரசோடு ஓத்துஇயங்கிய இவர்களால் அதை செய்ய முடியவில்லை? கோவில் பாடசாலைகளில் கொலை செய்தார்களாம் புலிகள். அப்போ இலங்கை அரசு செய்யவில்லையா? புலிகள் இருக்கும்போது ஏன் இவர் அதை கேட்கவில்லை? அப்போ இவர் எங்கே ஒளிந்திருந்தார்? இப்போ, இவருக்கு வயிறு வளக்க ஒரு தொழில் வேண்டும், அதற்கு ஒரு இயக்கம் வேண்டும், அதற்காக ஒட்டுக்குழுக்கள், கொலைகளை சந்தித்தவர்களை தன்னோடு இணையட்டாம். தான் நீதி வாங்கித்தருவாராம். மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல விளக்கு மாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். இப்போ அனுரா தனக்கு அழைப்பு விடுப்பார் என்று குரல் கிழிய கத்துது. துணுக்காயில் நான்காயிரம் பேரை புலிகள் கொன்றார்களாம், அதற்கான லிஸ்ற் இல்லை இந்த முகவரிடம். முஸ்லிம்கள் எழுபத்திரண்டு பேர் என லிஸ்ற் காட்டுது. வெகுவிரைவில் தன வாயாலேயே கெடப்போகுது. மக்கள் ஒருபோதும் புலிகள் பக்கம் இல்லையாம். மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் எவ்வாறு முப்பது ஆண்டுகள் நீடித்தது? என்ன அறிவாளி? வயிறு வளப்பதற்கு இப்போ ஒரு இயக்கம் தேவைப்படுகிறது இவருக்கு. மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்க வந்து செருப்பால அடி வாங்கியும் புத்தி வரல இதுக்கு. பாப்போம் அனுராவின் பதில் எப்படியிருக்குமென்று. கத்தி கத்தியே மாரித்ததவளை தனக்கு ஆபத்தை வருவிக்குமாம். நீதிக்காக கதைக்கிறானா, இனத்துக்காக கதைக்கிறானா, வயிற்றுப்பிழைப்புக்காக நடிக்கிறானா? வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளியெல்லாம் கதிகலங்குது. இது கண்டும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முழைத்த காளான் துள்ளிகுதிக்குது. இதுக்கு தமிழரசுக்கட்சியில இடம் கிடைத்திருந்தால்; இதன் நிலையை நினைத்துப்பாருங்கள்! கடவுளாய்ப் பார்த்துத்தான் குதிரைக்கு கொம்பு கொடுக்கவில்லை.
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
அவர்கள் செம்மணி புதைகுழியின் குற்றவாளிகளை மறைக்க, காக்க இதை இப்போ கையிலெடுக்கிறார்கள். அவர்கள் யாரையோ குறிவைத்தே, இதை செய்து தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் யார் இதன் சூத்திரதாரிகள் என்பது. எல்லா புதைகுழிகளின் பின்னாலும் ஒரே நிறுவனம். நீங்களே தெரிவிப்பது இவர்களை கொன்றது யாரென்பதை. இலங்கை அரசும் அதனோடு ஒட்டியிருந்த பல உண்ணிகூட்டங்களில் ஒன்றும். எதற்கு அப்போது தமிழ் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர் காய வேண்டியிருந்ததோ அதுவே காரணம்.
-
தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!
நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆமத்துறு, இந்த பயங்கரவாதச்சட்டத்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இளைஞர் பாதிக்கப்படும்போதெல்லாம் ரசித்துக்கொண்டிருந்துவிட்டு, இப்போ இந்த பன்னிரண்டு பேருக்காக வீதியில் இறங்கி கொடி பிடிப்பதேன்? அன்றெல்லாம் உங்களுக்கு பயங்கரவாதசட்டம் தேவையாயிருந்தது, அதை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டியிருந்தது. இப்போ அது உங்களுக்கு எதிராக பாயும்போது அகற்ற வேண்டுமென்கிறீர்கள் அது என்ன நிஞாயம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? இயற்றினவர்கள் அதற்கு இரையாகும்போது நீங்கள் கூப்பாடு போடுவீர்கள், உங்களுக்கு போட்டு வளர்த்தவர்கள் அவர்களாச்சே. இப்போ உங்கள் தேவைக்கு தமிழரும் சேர்ந்து. இந்த பன்னிரண்டு பேரும் நாட்டுக்காக உழைத்தவர்களா, அனிஞாயத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களா? நாட்டை கொள்ளையடித்தவர்களுக்காக குரல் எழுப்பி மிகுதி கொள்ளையரையும் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்.
-
நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
தென்பகுதியில் இந்தச்சம்பவம், மக்களை கடற்படையினரே காப்பாற்றியதாக செய்திகள் வெளிவந்து, கடற்படையினருக்கு வாழ்த்துக்கள் குவியும். எத்தனை உயிர்களை கடலில் வைத்து வெட்டியும் கொன்றுமிருக்கும் இந்த கடற்படை. உயிருக்காக தங்கள் கைகளை உயர்த்தி உதவி தேடி கெஞ்சியிருப்பார்கள் எங்கள் மக்கள். அதில் எத்தனை குழந்தைகள் இருந்திருப்பர். இதனையும் அந்த காப்பாற்றப்பட்ட மக்கள் தெரிய முடிந்தால் தமிழரின் காருணியம், எதிரிக்கும் இரக்கம் கட்டும் மனநிலை புரிய வாய்ப்புண்டு. சுற்றுலா வரும் சிங்கள பயணிகளுக்கு இவைகளை தெரியப்படுத்த வேண்டும். முள்ளி வாய்க்கால் பேரவலம் முடிந்த பிற்பாடு, மஹிந்த, ஒவ்வொரு பௌத்த சங்கத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் ரூபா கொடுத்து வடக்கிற்கு தமது வீரத்தை காண்பிக்க, பௌத்த சங்க சுற்றுலா அனுப்பிவைத்தார். சம்பில் துறையில் தான் மிகப்பிரமாதமாக கட்டிய விகாரை எல்லாம், தன்னை தெற்கில் பிரபல்யப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட உத்திகள். அப்போ, தென்பகுதி சுற்றுலாப்பயணிகள் விறகுகள் தளபாடங்கள் என வாகனங்களில் வந்து தங்கிச்சென்ற வண்ணமிருந்தனர். அப்படியிருக்கையில் அவர்களது வாகனமொன்றும் விபத்தில் மாட்டிக்கொண்டது. ஆனால் எம்மக்கள் வெறுப்பை காட்டாமல் அவர்களை மீட்டு காப்பாற்றி அனுப்பி வைத்தனர். அந்த தோல்வி, இழப்பு, வெறுமை, போன்ற நிலையிலும் எம்மக்கள் மனிதாபிமானத்தை இழக்கவில்லை. இங்கே இருக்கிறார் புத்தன், ஜேசு, காந்தி, அல்லா. இதை புரியாமல் புத்தன் பெயரை வைத்துக்கொண்டு செய்வதெல்லாம் கொலை, கொள்ளை, அடாவடி.
-
நாட்டைப் பிரிக்கும் முயற்சி இன்னும் மாறவில்லை
அதற்கு ஏன் நீங்கள் இடம் அளிக்கிறீர்கள்? உங்கள் பிரஜைகளை நீங்கள் கௌரவத்துடன் வாழ விட்டால் மற்றவர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? தமிழரின் அரசியல் உரிமைகளை பறித்தது இந்தியாவா? அவர்கள் மீது கலவரங்களை தூண்டி கொன்று ஒழித்தது இந்தியாவா? அவர்களின் நிலங்களைபறித்தது இந்தியாவா? தமிழரின் பூர்வீக நிலங்களில் இராணுவ காவலரண்களை, விகாரைகளை உருவாக்கியது இந்தியாவா? பிக்குவிற்கு இப்போ சிங்களத்தை புனிதமாக்க வேண்டிய தேவையுள்ளது. எங்கோ கேட்டதை இங்கு வந்து கக்குகிறார். ஆனால் கண்ணுக்கு முன் நிகழ்ந்தவைகளை, நிகழ்த்தியவைகளை மறைக்கிறார். பிரச்சனைக்கு தீர்வு காண முயலாமல் பழியை வேறொரு பக்கம் காட்டி தொடருங்கள் அடுத்த அத்தியாயத்தை, அந்த இந்தியாவே வெகு விரைவில் உங்களையும் கூறு போடும். உள்நாட்டு பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வக்கில்லாமல் சர்வதேசத்துக்கு கொண்டு போய், பிச்சை எடுத்து, சர்வதேச படைகளையும் ஆலோசனைகளையும் கையாண்டு சொந்த மக்களை கொன்றொழித்த இந்த இந்த நாட்டுக்கு இறைமையேது, அதிகாரமேது, பொருளாதாரமேது? உங்கள் மதம் என்னத்தை போதித்தது, சாதித்தது? நீங்கள் போதிப்பது மத போதனையுமல்ல நீங்கள் ஆன்மீக வழிகாட்டியுமல்ல. உங்கள் வாயிலிருந்து வெளிவருவது இனவாதம் மதவாதம் அழிவின் வழிகாட்டிகள் நீங்கள். அதுபற்றி நீங்கள் வெட்கப்படுவதில்லை, பெருமை பேசிக்கொள்கிறீர்கள். அரசியல் கூட்டங்களில் அரசியல்வாதிகளில் முதல் இருக்கைகளை தேடுகிறீர்கள். உங்களுக்கு எதற்கு மதம், காவி? இரத்தம் குடித்து வாழும் விஷ ஜந்துக்கள். முகத்தில் குரூரம், வாயில் கக்கும் இனவாதம், அடாவடி, பொய், திரிப்பு. வேறு என்ன உங்களிடமுண்டு மக்களுக்கு போதிப்பதற்கு?
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
முன்னவர் கால்தடங்களை பின்பற்றுகின்றனர் கதிரையாசை, பதவியாசை பிடித்தவர்கள்.
-
சிஸ்ட்டர் அன்ரா
ஒருவேளை உங்கள் அன்ராவை நான் அறிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
பரவாயில்லை, நாட்டிலுள்ள எல்லா புதைகுழிகளையும் தோண்டுங்கள், அதற்கான காரணத்தையும் கர்த்தாக்களையும் கண்டு பிடியுங்கள். எல்லா கொலைகளுக்கும் பின்னால் இருப்பது, சிங்கள இனவாதமே. விடுதலைபோரின் எதிராளிகள், இனவாதிகளும் அரசுமேயொழிய சாதாரண மக்களலல்ல. சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே. அவர்களை இனங்கண்டு தண்டியுங்கள். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். தன்னை யாரும் தண்டிப்பதில்லை. அவர்களுக்கு பதவிகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!