Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அதன் நவீனமயப்படுத்தலை யார் எப்படி பார்த்து உறுதிப்படுத்துவதாம் ? பாட்டி எப்போதும்போல் முகட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார். இவர்கள்? ஹா ஹா அவர்களும் அதேதான், எப்போதும்போல். மரண வீடாக இருந்தாலும் இதுதான் நடக்கிறது.
  2. இதே மாதிரியான ஒரு கதை அண்மையில் கேள்விப்பட்டேன். ஒரு முதியவர் தனது குடும்ப வைத்தியரிடம் தனது நோயின் காரணமாக சென்றாராம். வைத்தியர் அவரை பரிசோதித்து ஆலோசனை கூறுவதற்குள், முடிந்ததா வைத்தியரே, இப்போது நான் போகலாமா, போகலாமா? என்று அவசரமாக கேட்டுக்கொண்டே இருந்தாராம். பொறுமையிழந்த வைத்தியர், இப்போ எங்கே போவதற்கு இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என பொறுமையிழந்து கேட்டாராம். அதற்கு அந்த மனிதர், தனது மனைவியை பார்க்க போவதாக கூறினாராம். ஏன் அவருக்கு ஏதாவது உதவி தேவையா? என்று கேட்டாராம் வைத்தியர். இல்லை, அவர் முதியோர் இல்லத்தில் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றாராம் அந்த மனிதர். ஆமா உங்கள் மனைவிக்கு மறதி நோய் என்றால், உங்களையும் அவர் அடையாளம் காணாமாட்டாரே, பின் எதற்கு இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என்று வைத்தியர் கேட்டாராம். ஆம், அவருக்கு என்னை அடையாளம் தெரியாது, ஆனால் எனக்கு அவள் தான் எனது மனைவி என்று தெரிகிறதே. எனக்கு நினைவுள்ளவரை, அவருக்கு உயிருள்ளவரை அவள்தான் என் மனைவி என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறிய அந்த மனிதரை, வைத்தியர் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாராம். எனக்குத்தெரிந்து, நம்மூரில் பலர் வயதான தம்பதியினர். மனைவியர் நடமாட முடியாத நிலை, கணவர்மாராலும் முடியாது, இருந்தாலும் தம்மை கவனியாது தமது மனைவியரை அடுத்தவரின் உதவியோடு கருத்தாக கவனித்து வந்தனர், ஆனால் அவர்கள் மனைவியருக்கு முன்பே இறந்துவிட்டனர். மனைவியரின் நிலையை நினைத்துப்பாருங்கள்! கணவர் இறந்தபின் அதிக காலம் அவர்களால் வாழ முடியவில்லை, ஆறு மாதம் ஒரு வருடத்திற்குள் அவர்களும் இறந்துவிட்டனர். மனமொத்த தம்பதியினர் என்று பலரும் புகழ்ந்து கொண்டனர். காரணம் அதுவல்ல என நான் நினைக்கிறன்.
  3. எதற்காக கடத்தல்காரருக்கு பாதுகாப்பு வழங்கினீர்கள்? உங்களிடம் கையளித்த போரில் சம்பந்தப்படாத மக்களை இல்லையென்று ஆக்கிய நீங்கள், இவர்களை மட்டும் பாதுகாத்ததன் நோக்கம் என்ன? போரிட மறுத்த, அல்லது போர்க்களத்திலிருந்து விலகிச்செல்ல முயன்ற இராணுவத்தினரையே சுட்டுக்கொன்ற நீங்கள், இவர்களுக்கு இரக்கம் காட்டியதேனோ? ஏன் அன்று அதை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை தாங்கள்?
  4. ISS க்கும் இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை? ஏன் ISS இவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும்?
  5. உங்களுக்குள்ளேயே வாதாடி, ஒரு முடிவுக்கு வாருங்கள். இவர்கள் இராணுவத்துக்கு உதவி செய்து போர் முடிவடைந்ததா அல்லது அவர்கள் எதுவுமே செய்யாமல் அவர்களை அரவணைத்து பதவி பணம் அந்தஸ்து வழங்கினீர்களா? அப்படியென்றால் ஏன் என தெரிவியுங்கள். அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டின் இப்படி பல நாடுகள் உதவி செய்யாதிருந்திருந்தால் நாம் இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்றீர்கள், இப்போ இந்த துரோகிகளையும் சேர்த்துக்கொள்கிறீர்கள். அப்படியானால் நீங்களோ உங்கள் இராணுவத்தினரோ புலிகளை வெற்றி கொள்ளவில்லை. இராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவித்ததும், மஹிந்தா வெற்றி விழா கொண்டாடியதும் வெறும் ஏமாற்று நாடகம்.
  6. இப்போ, மீண்டும் தான் சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளார். எல்லோரும் சேர்ந்து ஆடிய ஊழிக்கூத்துதான் இது. அவர்கள் பயன்படுத்திய பகடைக்காய் பிடிபட்டுள்ளார். யாரும் இப்படியொரு கட்சி அரசமைக்கும் என்று நினைக்கவில்லை. அதனால் எல்லோரும் தைரியமாக இருந்தார்கள், திரிந்தார்கள். அரசுமாற்றம் வந்தவுடனேயே எல்லோருக்கும் புரிந்து விட்டது. இதுவும் சிங்களகட்சிதான், காட்சிகள் வேறாக இருந்தாலும் முடிகள் ஒன்றாகத்தானிருக்கும். தங்களுக்கு வரக்கூடிய சவால்களை தடுக்கவும் மல்க்கம் ஆண்டகை கொடுக்கும் தொந்தரவு, விடுக்கும் எச்சரிக்கை, தேர்தல் கலக்கம் அவர்களையும் ஏதோ செய்யத் தூண்டியுள்ளது. ஒருவேளை அனுரா ஆட்சி கவிழ்ந்தால்; உடனடியாக கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படுவார். போரை தானே நிறைவுக்கு கொண்டுவந்தேன் என்று அறைகூவியவயவர், விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து சென்று, தமக்கு உதவியதாலேயே போரை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது எனக்கூறியும், எதிர்த்து சிவநேசதுரை சந்திரகாந்தன், வி. முரளிதரன் போரின் நிறைவுக்கு செய்த பங்களிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள, பாராட்ட தயாரில்லை. இப்போ இராணுவத்தை தம் பக்கம் இழுக்கவும், அனுராவின் செயற்பாடுகளை சிங்களவரை தூண்டி தடுக்கசெய்யவுமே கம்மன்பில அவசரம் காட்டுகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எத்தனையோ பேர் கைதுசெய்யப்பட்டனர், இன்னும் சிலர் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஆஜராகாத இவர்கள் ஏன் இந்த சந்திரகாந்தன் கைதுசெய்யப்படவுடன் முண்டியடிக்க வேண்டும்?
  7. ரணில் நல்ல பிள்ளை மாதிரி நடித்து ஆடிய நாடகமெல்லாம் வெளியில் வரப்போகிறது என்கிற பயமவருக்கு. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை சர்வதேசம் விசாரிக்கக்கூடாதாம். ஏனென்றால், அதை தொடர்ந்து யுத்த போர்க்குற்றத்தையும் ஆராய்வார்களாம். அப்போ.. ஒரு விசாரணை வேறொரு இடத்திற்கு இட்டுச்செல்லும் என்பது யாவருமறிந்ததே. போர்க்குற்ற விசாரணை சர்வதேசம் செய்யக்கூடாதென தற்போதைய அரசாங்கம் கூறினாலும், பட்டலந்த குற்றம் பற்றி சர்வதேசம் விசாரிக்க வேண்டுமாம். இந்த கோரிக்கை கூட நாளை மாறலாம். எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டாலும் தமிழருக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் கட்சி பேதமின்றி உறுதியாக இருக்கிறார்கள். இதனால் ஒருநாள் எல்லோரும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து வருந்த நேரிடும். எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையை புதைக்கிறோமோ, அவ்வளவு அது வீரியம் கொண்டெழும். அது எழும்ப முடியாமல் தடுப்பது, இழப்புகளை சந்தித்த இனமே அது மேலெழும்புவதை விரும்பவில்லை. சுயநலம்.
  8. இந்தக் கூற்று எப்போ கூறப்பட்டது? சர்வதேச தலையீட்டை கோருவோம், அதோடு காலாவகாசமும் கொடுப்போம், ஆனால் அங்கே எல்லாம், போய் உண்மையை கூற மாட்டோம். அது அமெரிக்கா பாத்துக்கொள்ளும். இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க, கால நேரம் பாக்காமல் அமெரிக்கா பறப்போம். அவர்கள் இனப்படுகொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையென்று மறுவளம் விவாதிப்போம். அதென்ன சுமந்திரனின் மேடையில் ஒரு பூத்தெரிகிறதே! கார்த்திகைப்பூவா? தேர்தல் வந்தால்; கார்த்திகைப்பூ. வென்றால்; பொப்பிப்பூ. ஆமா.... காலங்காலமாக தமிழரசுக்கட்சிக்கு மக்கள் வாக்களித்து காத்திருந்தபோது எதை சாதித்தீர்கள், இனிமேலும் சாதிப்பதற்கு? நீங்கள்தான் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூவித்திரிந்ததைவிட. அப்படி சாதித்திருந்தால் நீங்கள் கேட்க்காமலேயே மக்கள் வாக்களித்திருந்திருப்பார்கள், மேலும் பல கட்சிகள் தோன்றியிருக்காதே. தேர்தல் வந்தால் நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் மாற்றம் தெரியும் என்பது மக்கள் உங்கள் ஊடாக கண்டுகொண்டவையே.
  9. சந்திரகாந்தனின் கைதால் பலர் வெலவெலத்து, பரபரப்படைந்து உளறுகிறார்கள். கைதி எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் தருணமிது, அவர்களுக்கு தெரியும்; விசாரணை முறை, அறிக்கை தயாரிக்கும் முறை எப்படியானது, யார் யார் எல்லாம் சிக்குவார்கள் அல்லது சிக்க வைக்கப்படுவார்கள் என்பது. சம்பந்தப்பட்ட எல்லோருமே முடிவை நெருங்கிக்கொண்டு, வாசலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏதாவது வழியில் கைதியை போட்டுத்தள்ளி உண்மையை மறைக்க முயன்றாலும் அதற்கு வழியில்லை. கோத்தா போல் தப்பியோடவும் முடியாது. ஆகவே குற்றவாளிகளில் யாராவது ஒருவர் தான் தப்பிக்கொள்வதற்காக ஒப்புதல் வாக்குமூலமளித்து தன்னை காப்பாற்ற முயற்சிப்பார். இதில் சுரேஷ் சாலே அல்லது சொனிக் சொனிக் யாராவது இருக்கலாம்.
  10. வாக்குப்போடுவது மக்கள். யார் என்ன சொன்னாலும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
  11. இவரின் கூற்றை கேட்டால் சிரிப்பாக வருகிறது. நியூசிலாந்து பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதலுக்கு இலங்கை தமிழர் கத்தோலிக்க தேவாலயத்தில் பழிவாங்கப்பட்டனராம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போட இவரால் மட்டுந்தான் முடியும். தாக்குதல் நடத்தியவர்கள் சொல்லாத காரணத்தை இவர் ஏன் வலிந்து திணிக்கிறார்? அப்போ இவரும் சூத்திரதாரியே! கோத்தாவை ஆட்சிக்கு கொண்டுவரவும் கர்தினால் முன்னின்றவர். கள்ளனிடமே திறப்பை கொடுத்தவர் தான் அவர். கோத்தபாயவாலும் ஏமாற்றப்பட்டார் மல்கம்! ஆடு நனையுதென்று இந்த ஓநாய் இவ்வளவு காலமுமில்லாமல் இப்போ அழுகுது. அனுராவின் அறிக்கை இன்னும் வரவில்லை, குண்டுத்தாக்குதலுக்கான காரணமும் அவர்களால் வெளிப்படுத்தவில்லை. இவர் ஏன் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படவில்லை, நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்கல் என்று விசாரணையை திசை திருப்புகிறார்? நியூசிலாந்துக்கும் இலங்கைத்தமிழருக்கும் கத்தோலிக்கருக்கும் என்ன தொடர்பு? இவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும், தாங்களாகவே வாயை கொடுத்து பொறியில் மாட்டப்போகிறார்கள். ஒருத்தர் முந்திக்கொண்டு ஆஜர் ஆகிறார். இவர் விசாரணையை திசை திருப்புகிறார், தாக்குதலுக்கு முன், தாக்குதலாரிகள் பேசிய காணொளி ஒன்று பின்னாளில் வெளிவந்தது. அதில் அவர்கள் சொல்லாத காரணத்தை சரத் வீரசேகர சொல்கிறார். ஆகவே இதைப்பற்றி விமர்சனம் செய்யும் யாவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படவேண்டும்.
  12. அப்போ, எதற்காக சந்திரகாந்தன், வி. முரளிதரன் தண்டிக்கப்படவில்லை? எதற்காக அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன? அவர்கள் நாட்டுக்காக, உயிரையும் அர்ப்பணித்து சேவை செய்தார்கள் என்று புகழாரம் சூட்டினார்கள்? புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற இராணுவத்தினருக்கு பாரிய பங்களிப்பை செய்த வி. முரளிதரனுக்கு விசேட விருது கொடுக்கப்பட வேண்டுமென, தாய் நாட்டுக்கான இராணுவத்தினரின் அமைப்பின் இணைப்பாளர் அஜித் பிரசன்னா வலியுறுத்தினார், அவ்வாறு கொடுக்கப்படாவிட்டால் பொன்சேகாவுக்கு கொடுக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தினார். அப்போ ஏன் இந்த சரத் பொன்சேகா அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை? கேள்வி கேட்கவில்லை? மஹிந்தா இவர்களுக்கு பதவி, பணம் கொடுக்கும்போது தடுக்கவில்லை? இப்போ இவர்கள்தாங்கள் செய்த துரோகத்தை நினைத்து கண்டிப்பாக புலம்புவார்கள், புலம்புகிறார்கள். என்ன பயன்? பெயர் வைத்து, புகழ் கொடுத்த தலைவனை காட்டிக்கொடுத்த துரோகம் இப்போ இவர்களுக்கெதிராக. அதே துரோகிகளால் அழிவை சந்திப்பார்கள்.
  13. எதிரியோடு இயங்கியதை எவ்வாறு சொல்வார்? அதனாலேயே கிழக்கில் தொடருகிறது கைது. அடுத்து இவர்பக்கமே திரும்ப இருக்கிறது. அதனாலேயே கம்மன்பிலவும் புலிகளை அழைக்கிறார், இவரும் பூச்சடிக்கிறார். இவர்கள் அங்கேயும் பாதுகாப்பு தேடி போக இயலாது, இங்கேயும் அனுதாபம் பெற இயலாது. இவர் கைது செய்யப்படும்போது வெடிகொழுத்தி ஆராவாரிப்பார்கள் வடக்கு மக்கள். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான். இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று ஏற்கெனவே தெரியும், இவ்வளவு விரைவாக வருமென்று நினைக்கவில்லை. நாம் செய்த குற்றங்களை, எங்களால் பாதிக்கப்பட்டவர்களை நாம் மறந்து விடலாம், ஆனால் அந்த குற்றங்கள் மறப்பதில்லை. அது நம்மோடேயே பயணம் செய்யும் நம்மை பழி தீர்க்கும்வரை.
  14. 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் கைதாகி இருந்தவரை 2019இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூற முயல்வதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆமா .... சிறையில் இருந்தவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி தெரியாது. ஆனால் அது பற்றி பக்கம் பக்கமாக கடிதம் எழுதவும், புத்தகம் எழுதவும் எப்படி தெரிந்ததாம்? அது இருக்க தமிழ் இளைஞர்களை கைது செய்யும்போது உறவினர்களுக்கு அறிவித்தார்களா? சிறையில் இருந்த இளைஞர்களை உறவினர்கள் சந்திக்க அனுமதியளித்தனரா? கைது செய்தவர்கள் எங்கே, அவர்களுக்கு என்ன நடந்தது என்று உறவினர்களுக்கு அறிவித்தார்களா? அப்போ இவர் அதுபற்றி ஊடக சந்திப்பு நடத்தி கேள்வி கேட்க்காதது ஏன்? இவர் சிவநேசதுரை சந்திரகாசனுக்காக வாதாடுகிறாரா? தங்கள் பெயர்கள் வெளிவராமல் தடுக்கிறாரா? சிறையில் சந்திக்கும் வக்கீல் இவராம், நீதிமன்றத்தில் வழக்காடுவது வேறொரு சட்டத்தரணியாம். இதிலிருந்தே இவர் ஏன் இப்படி அவசரப்படுகிறார் என்பது தெரிகிறது. இப்போ சந்திரகாசனால் இவர்களும், இவர்களது அவசரத்தினால் சாந்திரகாசனும் மாட்டுபடப்போகிறார்கள். இப்போ, கிழக்கு பல்கலை விரிவுரையாளர் கடத்தல் சம்பந்தமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றே வி. முரளிதரன் இவரை காட்டிக்கொடுத்தார், கைதும் அதற்காகவே. தப்பில்லையென்றால் ஏன் இவ்வளவு அவசரம்? ஒப்பீட்டுப்பேச்சு? புலிகளை ஏன் இழுத்து தங்களை மூட முயற்சிக்கிறார்? அப்படியா? அப்போ ஏன் ஓடி இராணுவத்திடம் சரணடைந்தனர்? மஹிந்தா தான்தான் புலிகளை வெற்றி கொண்டேனென விழா கொண்டாடினார்? அவ்வளவு வீரன் ஏன் கண்ணீர் வடிக்கிறார்? அதற்குள் கம்மன்பிலவே கைது செய்யப்படலாம். ஏற்கெனவே வேறொருவருக்கு சொந்தமான காணியை விற்று காசு பார்த்தார், அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படலாம். ம் .... இவர்களுக்காக பல குற்றங்கள் புரிந்த தன் இனக்காரன் கஜ்ஜாவையே சிறையில் சென்று சந்திக்கவில்லை என்கிற கோபத்தில் இவர்களை காட்டிக்கொடுக்க வெளிக்கிட்டு பிள்ளைகளையும் தன்னையும் அவர்களிடம் பலி கொடுத்தார். இவரும் அவர்களாலேயே தீர்த்துக்கட்டப்படுவார். இவர் மட்டுமல்ல இவரோடு சேர்ந்து இயங்கிய பலரின் கதை இயக்கியவர்களாலேயே முடியலாம். பழியை அரசாங்கத்தின் மீது போடலாம். அவர்களும், அவர்களுக்காக இவர்களும் செய்த கொலைகளில் இது ஒன்றும் பெரிதல்லவே.
  15. இப்போ எதற்கு இந்த புது விளக்கம்? ஐயா விரைவில் கம்பி எண்ண போகப்போகிறாரென கதை அடிபடுகிறது. புலிகள், தாம் இருக்குமளவும் என்னென்ன செய்யவேண்டுமோ செய்துவிட்டார்கள். ஆனால் இப்போ அரசியல் செய்வோருக்கெல்லாம் புலிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டி இருக்கு. காட்டிக்கொடுத்தவன் கூட்டிக்கொடுத்தவனுக்கெல்லாம். இவர்களுக்கெல்லாம் பணம், பதவி வந்தது அவராலேயே.
  16. தங்களின் இடத்தை சுத்தமாக வைத்திருக்க தெரியாதவர்கள், சும்மா நித்திரை கொண்டுவிட்டு, வேலை செய்பவனை பார்த்து இப்படி கூறினால், தங்கள் தப்பு மறைந்துவிடுமென நினைக்கிறார்கள், அற்பங்கள். இதுகள் வெளிநாட்டுக்கு போனாலும் உழைக்க மாட்டார்கள். வெளிநாட்டில் சும்மா பணம் அள்ளிக்கொட்டுகிறார்கள் என சிலர் நினைத்து கதையளப்பர். அவர்களின் அறிவு அவ்வளவு மந்தமானது.
  17. ஒன்று வரி செலுத்துங்கள், இல்லையேல் உடலை வருத்துங்கள். எப்படியென்றாலும் உங்கள் உடல் உழைத்தாலேயே வரியும் செலுத்த முடியும். புல் பிடுங்குவது ஒரு பொழுது போக்கு, உடற்பயிற்சி. ஒரு உழவாரம் வாங்குங்கள், முதலில் ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் முப்பது நிமிடம் செருக்குங்கள், பின் நீங்களாகவே உங்களையறியாமல் நேரம் போவது தெரியாமல் செருக்குவீர்கள். அல்லது அயலில் யாராவது மாடு வைத்திருந்தால் செருக்கி எடுக்கும்படி சொல்லுங்கள். அதுவும் இல்லையென்றால், உழுது விட்டு புல்லை வேரோடு அரித்து எடுத்து எரித்து விடுங்கள்.
  18. இவரும் கைது செய்யப்படும் காலம் வரும் அதுவரை பிள்ளையான் கைதை வரவேற்று காத்திருக்கட்டும். விநாயக மூத்தி முரளிதரன், டக்ளஸ் இப்படி பட்டியல் நீளும். மஹிந்தா ரணில் உதயன் கம்மன்பில இப்படிப்பலர் சிக்குவார்கள். இவர்களில் இப்போ கைவைத்தால், அரசியல் பழிவாங்கல் என்று கூப்பாடு போடுவார்கள். அதையே வைத்து அனுதாப அலையில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற பயன்படுத்துவார்கள். பிள்ளையான் இவர்களின் எடுப்பார்க்கைப்பிள்ளை, இவர் இப்போ எல்லோரையும் போட்டுக்கொடுக்கப்போகிறார், பிள்ளையானோ, முரளிதரனோ ஏன்? யாருக்காக கொலைகளை செய்தனர் என்பது விசாரணையில் வெளிவர, அதன்பின் வரிசையாக உள்ளே அழைக்கப்படுவார்கள். அதனாலேயே ரணில் அவரை சந்திக்க துடிக்கிறார். அப்போ ரணிலுக்கும் பிள்ளையான் கொலைகளுக்கும் தொடர்புண்டா? அல்லது மஹிந்த கூட்டத்திற்காக சென்றாரா? வழமையாக மஹிந்தாதான் இவர்களை சந்திக்க ஓடுவார், இவர் ஏன் குறுக்க ஓடுறார்? இவரே தனது நல்லாட்சிக்காலத்தில் அவரை கைது செய்து சிறையில் வைத்தவர்தானே? இப்போ என்ன அவ்வளவு அவசர சந்திப்பு வேண்டிக்கிடக்கு இவருக்கு? இவரும் போகத்தான் போகிறார் அப்போ சந்திக்கலாமே?
  19. நீங்கள் கடினமான வேலை செய்து பழக்கப்படாதவர், முதல்முதல் பிடுங்கும் போது அப்படித்தான் வரும். தொடர்ந்து செய்யும்போது கைகள் பலப்பட்டு, பின்பு நீங்களே வேலை பழகி, அவர்களை விட வேகமாகவும், அழகாகவும் செய்வீர்கள். அதன்பின் வீட்டில் இருக்க மாட்டீர்கள், தோட்டத்திற்குள் ஏதாவது செய்துகொண்டே இருப்பீர்கள். வேலையாட்கள் தேவையில்லை என்றே சொல்வீர்கள். எங்கள் அம்மாவுக்கும் உந்த வேலைகள் பரீட்சயமில்லை. ஆரம்பத்தில் விரல்கள் எல்லாம் பொக்களமாக்கி பல ஊசிகள் ஏற்றப்பட்டன. அதன்பின் தோட்டத்தில் எல்லாவேலையும் தானே செய்வா வீட்டுக்கு வராமலே நின்று. நாங்கள் கற்றுக்கொண்டு நமது வேலையை நாமே செய்ய ஆரம்பிக்கும்போது, தாங்கள் முறையாக, நிஞாயமாக வேலை செய்யாவிட்டால் தம்மை இனி யாரும் வேலைக்கு அழைக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து சரியாக செய்வார்கள். இல்லது வேலை என்று சொல்லி வந்து சொறிவதை மறந்து விட வேண்டும்.
  20. நாங்கள் ஒரு வேலைக்கு போனால்; மனச்சாட்சிக்கு பயந்து, சரியாக, வாங்கும் சம்பளத்துக்குஉண்மையாக, சம்பளம் தருபவர் மனநிறைவடையும் படி உழைக்கிறோம். அப்படித்தான் மற்றவர்களும் என நினைப்பது தவறு. அவர்கள் ஓம் என்று ஒத்துக்கொள்வார்கள், பிறகு ஏதேதோ சொல்லி இடையில் சென்றுவிடுவார்கள். அவர்கள் விட்ட குறை வேலையை வேறொருவர் தொடர மாட்டார். காரணம், அவர்களுக்குள் ஒரு கொள்கை. அதனால் அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடித்து தாங்கள் நினைப்பதை சாதித்து விடுகிறார்கள். ஒன்று, நீங்களும் அவர்களோடு களத்தில் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும், எல்லா வேலைகளும் முடியாது. புல்லுபிடுங்கல், கூட்டல், துடைத்தல் வேலைகளில். மற்ற வேலைகளில் அவர்களோடு கூட நிற்பது நல்லது. நாங்களும் எங்கள் உறவினர்களை வேலைக்கு அழைத்தே நிறைய இழந்துவிட்டோம், இதனால் அவர்கள் நினைப்பது; நம்மை எப்படியென்றாலும் ஏமாற்றலாம், அவர்களை விட எங்களுக்கு வேலைக்கு வேறு கதி இல்லையென்றே. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்ற கற்றுக்கொண்டு விட்டார்கள். நாமே நம் வேலை செய்ய முயற்சித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.
  21. வாரம் செய்தறி, வழி நடந்தறி, தோழமை கூடியறி என்பார்கள். அனுபவமே சிறந்த ஆசிரியர். இனி ஊரிலை வசிக்கிற எண்ணம் இருந்தால்; எதற்கும் அவசரப்படாமல் நன்றாக விசாரித்து அறிந்து வேலைக்கு ஆட்களை அமர்த்துங்கள், பழகுங்கள். பழையவர்களை பகைமை பாராட்டாமல் விலத்தி நடவுங்கள். உங்களை ஏமாற்றியவர்கள் உங்களுடன் நட்பாக இருப்பவர்களை உங்களுக்கு எதிராக திருப்புவார்கள். கவனம்!
  22. ஒரு கள்ளன் இன்னொரு கள்ளனை அறிமுகப்படுத்தி கருவறுக்கிறது இந்த லட்ச்சணத்தில பத்து வருஷம் தரட்டாம். இப்பவாவது புத்தி வந்ததே அதுவே போதும். உந்த கூட்டத்தோட என்னென்று குடியிருக்கிறது? ம், அக்கா வீட்டில தான் மண்வெட்டி இருந்ததோ? தாங்களாகவே வீட்டில இருக்கிறதென முடிவு எடுத்திட்டினம். வாங்கின வீட்டை ஊரோட உறவோட வாங்கியிருக்கலாம், எடுத்தாலும் உறவுக்குள்ள என்று மனம் ஆறலாம். இப்போ ஊர் ரொம்ப கெட்டுப்போச்சு உயிரோட வந்ததே பெரிய காரியம். ஒருநாளைக்கு நித்திரையால எழும்ப பிந்தினால் தூக்கிக்கொண்டுபோய் தீ வைத்து விடுவார்கள். ஒருவரைபாத்து மற்றவர் பழகுவது, மற்றவரை குறை சொல்லிக்கொண்டு தாங்கள்நல்லவர்கள் போல், தங்கள் குறைகளை மறைப்பது.
  23. நாள் கூலி இல்லாமல் கொண்ராக்காக கொடுத்தீர்களென்றால் அரைநாளிலேயே செய்து முடித்து விடுவார்கள். சிலர் ஆடு கடித்ததுபோலவும் செய்வார்கள்.
  24. அவர்கள் காரணம் ஏதும் தெரிவிக்க விட்ட்டாலும், கைது செய்யப்பட்டவருக்கு தெரியும் காரணம். ஏற்கெனவே விநாயக மூர்த்தி முரளிதரன் தனது விசாரணையில் எல்லாவற்றையும் கூறிவிட்டார். இனி இவர் தன் பங்குக்கு அவரை காட்டிக்கொடுக்கட்டும். தான் விட்டெறிந்த பந்து திரும்பி வந்து தன்னை தாக்குமென்று தெரியாதவர்களா இவர்கள்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.