Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்ற சுமந்திரன், போர் முடிந்தபின்னும் மக்களுக்கெதிராக ஆயுதம் பாவித்த டக்கிலஸிடம் ஆதரவுதேடிப்போன சிவஞானத்தை ஏன் தடுக்கவில்லை? சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஷ்டம்என்று சொன்ன சுமந்திரன், புலிகளைச்சாட்டி நான் வாக்கு கேட்க்கவில்லை என்று சொன்ன சுமந்திரன், தமிழரோடு வாழாதவர், அவர்களின் இன்னல்களில் பங்கெடுக்காதவர், இன்றும் புலிகளை நேசிக்கும் மக்களின் தலைவனாக வர துடிப்பது ஏன்? தமிழருக்கு நடந்த கொடுமைகளை ஜெனிவா சென்று எடுத்துரைக்க பின்னடித்த சுமந்திரன், எப்படி அவர்களுக்கு விடுதலையை வேண்டிக்கொடுப்பார்? மன்னாரில் மனிதப்புதைகுழி தோண்டும்போது நானும் அங்கே சமூகமளித்திருந்தேன் என்று சொன்ன சுமந்திரன், அது கிடப்பில் போடப்பட்ட போது அதை வெளிக்கொணருவதற்கு என்ன செய்தார்? பிறகு அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்வதுதான் அந்த மக்கள் சார்ந்து அவரது பொறுப்பா? இதற்கு பிறகும் இலங்கையில் நடந்தது இனவழிப்புதான் என்று நிரூபிப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று வாதாடுகிறார். எங்கோ இருக்கிற கனடா அமைச்சர் துணிந்து, இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான், அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று உரத்து சொல்லி வருவதோடு அதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக தடைகளை அறிவிக்கிறது. அது எப்படி கனடாவால் முடிந்தது? தமிழருக்கு நடந்த, நடக்கிற கொடுமைகளை வெளிக்கொணர, எடுத்துச்சொல்ல விரும்பாதவர், அந்தப்பிரச்சனையில் இலங்கைக்கு கால அவகாசம் வாங்கிக்கொடுப்பதற்கு அமெரிக்கா விரைய அவசியமென்ன? சுமந்திரனின் அனுதாபிகள் இதற்கு விளக்கம் தருவார்களா?
  2. வாழ்த்துக்கள்! வெற்றி வீரப்பேச்சுகளை புறந்தள்ளி பொறுப்புணர்ச்சியுடன் மக்களுக்கு விசுவாசமாக உழையுங்கள். அவர்கள் மிகவும் விரக்தியடைத்துள்ளார்கள் தமது அரசியற் தலைமைகளின் செயல்களால். மக்களுக்கு தலைவனாக விரும்புகிறவர், தெரிந்துகொள்ளப்பட்டவர்; அவர்களுக்கு சேவையாளராக இருக்கட்டும், இருக்கவேண்டும். அப்போதே அந்த பதவி நிலைக்கும்.
  3. தங்கள் தங்கள் இடத்திலேயே காலங்காலமாக வழிபாடுகளை நடத்தி வந்த விகாரைகள் இருக்க, இங்கு ஏன் ஏறி எழுந்து வருகிறார்கள்? எங்கிருந்தாலும் வழிபாடு ஒன்றுதானே. இங்கு இருக்கிற, வந்து பிரச்சனைகளை தூண்டுகிற பிக்குக்களையும் சோதனை செய்ய வேண்டும். ஆயுதங்களும் கொண்டுவந்திருப்பார்கள். பிரச்சனை செய்வதற்கென்றே ஓசியில பஸ் சேவை, உணவு வசதி, தங்குமிட வசதியெல்லாம் கொடுத்து சமூக நல்லிணக்கத்தையும் கெடுத்து, சீர்கேடுகளையும் வளர்க்கிறார்கள்.
  4. உந்த சுமந்திரன் கொசுறு, எல்லோரையும் கட்சியை விட்டு விரட்டியது, தானே எல்லா அதிகாரத்தையும் சுவீகரித்துக்கொள்வதற்காகவே. பாராளுமன்றத்தேர்தலில் கூட எல்லோரையும் கொலைகாரர், கள்ளர் என்று என்னென்னவோ எல்லாம் விமர்ச்சித்தவர். ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்றவர் டக்கிலஸின் காலடியில் கட்சியை விழவைத்தார், அங்கே இவருக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் வேறு வழியின்றி பாதை மாறி விக்கியர் வீட்டு கதவை தட்டியுள்ளார். இது அவரின் பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்கே மக்களுக்காகவல்ல. மக்கள் கவனமாக செயற்படவேண்டும். மக்களாலேயே இந்த மாற்றம் ஏற்படுத்த முடிந்தது. தமிழரசுக்கட்சிக்கு விழுந்த வாக்குகளை, கிடைத்த செல்வாக்கை சுமந்திரன் தனதாக்கி அறிக்கை விடக்கூடாது.
  5. அவர்களெல்லாம் தலைமைத்துவ போட்டியில் மும்முரமாக இருக்கின்றனர், இதுகளுக்கெல்லாம் அவர்களுக்கு நேரமேது. ஏதாவது ஓய்வு நேரம் கிடைத்தால் இவை பற்றி அறிக்கை விடுவார்கள்.
  6. நான் சொல்லேல.... எங்கும் எதிலும் ஊழல், அது அம்பலமாகும்போது தமிழர் பக்கம் பிரச்சனையை திசை திருப்புவது. இது உடனடியாக தீர்க்கக்கூடிய பிரச்சனையல்ல. இதற்கு அனுர நிறைய விலை கொடுக்க வேண்டி வரும், அதை செய்தால் இவரை யாரும் அசைக்க முடியாது அரசியலில்.
  7. இந்த திஸ்ஸ விகாரை கட்டுவதற்குமுன் எங்கே பௌர்ணமித்திருநாளை அனுசரித்தார்கள்? அங்கே அனுசரித்தால் புத்தர் ஏற்றுக்கொள்ள மாடாரோ? இதெல்லாம் தமிழ் மக்களை சீண்டும் செயல். திஸ்ஸ விகாரைக்கு வீம்புக்கு வருவோரை புத்தரே பழி வாங்க வேண்டும். இதுதான் சரத் வீர சேகராவின் இந நல்லிணக்கம். ஒரு மதத்தை தழுவும் மக்கள் சூழ்ந்துள்ள இடத்தில அவர்களின் வழிபாடுகளை தடுத்து, எங்கோ வாழுபவர்களுக்கு வழிபடும் இடம் அமைக்கிறார்கள். இவர்களைப்போல் அறிவாளிகள் வேறெங்குமில்லை.
  8. ஆமா, முன்னர் விசாரணை நடந்தது, பின்னர் அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. சொல்வது யார், மக்களின் அரசியற்தலைவர், சட்ட மேதை, ஆயுதப்போராட்டத்தை எதிர்ப்பவர். இதுவரை இவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, பத்தோடு பதினொன்றாக அறிக்கை விடுகிறார். இந்தியத்தூதுவரை சந்திக்கும்போது இதுபற்றி பேசினாரா? தனது பதவி பற்றி மட்டும் எடுத்துரைத்திருப்பார். யாரிடம் எதை முறையிடுவது என்று தெரியாமல் பேசும் நகைச்சுவையாளன்!
  9. எழுபத்தாறு வருடங்களாக இனவாதத்திலும் சிறுபான்மை அடக்குமுறையில் ஊழல் லஞ்சம் கொலை கொள்ளையிலும் மக்களை ஏமாற்றி தங்களை தக்கவைத்துக்கொண்டது சிங்களம். அதிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாமல் தாங்களே தலைமை என்று வீராவேச பேச்சுக்களில் காலத்தை கடத்தியது தமிழ்த்தலைமை. இலங்கையில் நடப்பது பயங்கரவாதம் என்று கூறி சர்வதேசத்திடம் ஆதரவு திரட்ட சிங்களத்தால் முடிந்தது என்றால், அதற்கு தலைமை தாங்கி செல்ல தமிழரால் முடிந்ததென்றால், அதற்கு முன்னே தோன்றிய இனவாதத்தையும் கலவரங்களையும் அடக்குமுறைகளையும் அநீதிகளையும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல ஏன் நம்மவர்களால் முடியவில்லை, முயலவில்லை? எல்லோருக்கும் பதவி வேண்டும், அதற்கு அப்பாவி மக்களின் வாக்கு, உயிர், இழப்பு வேண்டும். அப்படி ஊறிப்போன ஒரு கூட்டிலிருந்து வந்த அனுர உடனேயே பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என கனவு காண்பதென்பது முட்டாள்தனம். இனவாதிகளை உடனேயே கைது செய்ய முடியாது, அப்படி செய்யாமல் இனவாதத்தை தீர்க்கவோ நாட்டை கட்டியெழுப்பவோ முடியாது. தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் அவர் தமிழருக்கு நன்மை செய்கிறார் என்கிற ஒரு பொறியே போதும் நாட்டை பற்ற வைக்க. தமிழரும் என்னை தெரிந்தெடுத்துள்ளார்கள், நான் அவர்களுக்கும் ஜனாதிபதி என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய கடமையுள்ளது. இது சிங்கள பௌத்தநாடு எனும் மாயையை மாற்றவேண்டும். அது அவ்வளவு இலகுவல்ல. நீண்ட பெரிய பொய்யை உடைப்பது சாதாரணமுமல்ல. ஆகவே மக்களே குற்றவாளிகளை காட்டிக்கொடுத்து, கைது செய்து தண்டியுங்கள் என்று சொல்லும் சூழல் வரவேண்டும் குரல் எழ வேண்டும், அதற்கான காரியங்களே ஆரம்பித்துள்ளன. இனவாதிகளுக்கு ஊழல் வாதிகளுக்கு நடுக்கம் ஆரம்பித்து விட்டது. கட்டிலாலை கதிரையாலை விழுகிறார்கள் ஏன் என்றால், அவர்களது அரசியல் கதிரை பலம் நழுவிப்போகிறது. தங்களுக்கு சிறை உறுதியென சொல்கிறார்கள், நாள்தான் தெரியவில்லை. எங்களை தண்டிப்பதை விட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்கிறார்கள். அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியே ஊழல்வாதிகளை கைது செய்வதுதான் என்பதே இவர்களுக்கு விளங்கவில்லை. மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப்பாயுமாம். துள்ளிக்குதித்தவர்கள், குரைத்தவர்கள், சவால் விட்டவர்கள் எல்லாம் மௌனிகளாகின்றனர். ஆகவே இவற்றை எல்லாம் கடந்து நீதியை நிலைநாட்டி நாட்டை கட்டியெழுப்பினால் சிங்கப்பூருக்கு ஒரு லீக்குவானி போல் இலங்கைக்கு அனுராவாக இருக்க முடியும். பொறுத்திருந்து பாப்போம், அவர்களுக்குள் இருக்கும் ஊழல்வாதிகள் இனவாதிகளையும் இனங்கண்டு களைய வேண்டும். நிற்க.... தமிழ்மக்களால் அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட கஜேந்திரனோடு சேர விரும்பாமல் டக்கிளசோடு சேரத்துடிப்பது ஏன்? கையில வெண்ணெயை வைச்சுக்கொண்டு ஊரெல்லாம் அலையுறார் சிவஞானம். ஏனென்றால், தங்களை மிஞ்சினவர் பதவிக்கு வரக்கூடாது, தாம் அடக்கியாள வேண்டுமென நினைக்கிறார்கள். ஒரு கட்சியின் கோப்பை மதிக்காதவர்கள், அதை கட்டிக்காக்க திறமையில்லாதவர்கள், மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள்? இவர்களெல்லாம் சட்ட மேதைகளாம், ஆரம்பகால உறுப்பினர்களாம், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பார்கள் ஆனால் வடக்கில் தமிழருடன் இணக்கப்பாட்டுக்கு வரமாட்டோம் அல்லக்கைகளோடுதான் கைகோப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள். விடுங்கள், வெகு விரைவில் டக்கிலஸிடம் குட்டு வாங்குவார்கள். அங்கு சுமந்திரன் பேச்சாளராக இருக்க முடியாது. டக்கிளஸ் போடும் நிபந்தனைகளே போதும் இவர்களுக்கு. எத்தனையோ முறை டக்கிளஸ் இவர்களோடு சேர முயன்றும் சேர்க்கவில்லை. இப்போ அவருக்கு தகுதியானவர்கள் சேரத்துடிக்கிறார்கள்.
  10. புலிகள் அவர்களை பணயக்கைதிகளாக வைத்து தம்மை காப்பாற்ற முனைந்தால்த்தான் இராணுவம் வேறு வழியின்றி அப்படி நடந்து கொண்டது என குதர்க்கம் பண்ணவும் நம்மில் சிலருண்டு பாத்துக்கதையுங்கோ!
  11. சும்மா அச்சுறுத்தலா, உண்மையாகவா? அவர் கட்டிலாலை விழுந்து வைத்தியசாலையில் அனுமதி பெறப்போகிறார்.
  12. நாட்டிலே தமிழருக்கெதிரான இனவழிப்பு கலாச்சாரம், நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தொடர்கிறது நேற்று வந்த அர்ச்சுனாவை காரணம் காட்டும் சரத் வீர சேகர முழுப்பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்க முயல்கிறார். இவர் தெருக்களில் நின்று தமிழருக்கெதிராக விகாரையை சுற்றிவளைக்க கூவிக்கூவி ஆட்களை திரட்டும்போது, நாட்டிலே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் கெடவில்லையா? என்ன மாதிரியான புத்திசாலிகள் நாட்டில்?
  13. பதவி அதிகாரம் தமக்கு வேண்டுமாம், அதற்கு மற்றவர்கள் ஆதரவு தரவேண்டுமாம், ஆதரவை கொடுத்து அவர்கள் பதவி பெற்றபின், ஆதரித்தவர்கள் வாய் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமாம். அதனாலேயே வீடு குட்டிச்சுவரானது. இது தெரியாதவர்களா ஏனையோர்? ஏன் அவர்களுக்கு பதவியாசை இருக்கக்கூடாதா? சரி, இவர் சொல்லும் பதவி பவர் அதிகாரம் இருந்து இவர்கள் என்னத்தை சாதித்தார்கள்? இனிமேல் இவர்களுக்கு என்ன இருக்கிறது பதவி பெற்று மக்களுக்கு சாதிக்க? இவர்கள் பதவியை வைத்துக்கொண்டு வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தது போதும். ஏதாவது நன்மை நடந்தாலும் அது தங்களாலேயே நிகழ்ந்தது என்று ஆர்பரிப்பார்கள். மக்கள் முதுகில் ஏறி சவாரி விட்டது போதும், வீட்டிலிருந்து கொட்டாவி விடுங்கள்.
  14. நீங்கள் எப்படி ஒப்பந்தம் எழுதியிருந்தாலும், சிவஞானம் சொல்லியிருக்கிறார், அதாவது தமிழரசுக்கட்சியை இல்லாமல் அழிப்பதற்காக, மட்டந்தட்டுவதற்காக, திட்டமிட்டு தாங்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். கள்ளன் நினைக்கிறது, மற்றவர்களும் தங்களைப்போல் தானென்று. தமிழரசுக்கட்சியை யாரும் வெளியிலிருந்து வந்து அழிக்கத்தேவையில்லை. அவர்களே போதும் அதை அழிப்பதற்கு, பெரும்பாலும் அழித்தே விட்டார்கள். தாங்கள் தான் மக்களின் ஏகோபித்த ஆதரவாய்ப்பெற்ற பெரும்பான்மை கட்சி என்று பீற்றிக்கொண்டு தெரிந்தவர்கள், மக்களால் வெறுத்தொதுக்கப்பட்ட கட்சியின் அலுவலகம் சென்று ஆதரவு தாருங்கள் என்று கெஞ்சியதும், பழம் முற்றி பாலில் விழுந்ததுபோல் டக்கிளஸ் ஒரு கேலிப்புன்னகையோடு, பெருமையாய், அகம்பாவமாய் நின்றதை பார்த்து தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் வெட்கி தலைகுனிந்து இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. தான் ஏற்கெனவே சொன்னதுதானாம், தமிழ்கட்சிகளோடு இணைந்து செயற்படுவோம் என்று ஆதாரம் வேறு சொல்கிறார். இருக்கட்டும்... அப்போ ஏன் இவ்வளவுகாலமும் இணைந்து செயற்பட முடியவில்லை? ஒருவரை ஒருவர் விமர்சித்து மக்களை ஏமாற்றினார்கள்? அரிய நேந்திரனின் கூட்டத்தில் பேசியவர்கள், ஆதரித்தவர்கள் எல்லோருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியவர்கள், இதற்கு என்ன சொல்லபோகிறார்கள்? பாராளுமன்றத்தேர்தலில் ஒரு விமர்சனம் வைத்தார்கள், அதாவது சில உறுப்பினர் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைந்தவர்கள் அது கிடைக்கவில்லை என்றவுடன் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்று. இன்று சிவஞானம் சொல்கிறார், ஆட்சி என்பது பவர், அதிகாரம், பதவி, அரசியல். அது இல்லையென்றால் என்னத்துக்கு வாய் பாத்துக்கொண்டிருப்பதற்கா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இப்போ சொல்லுங்கள்! யார் பதவியாசை பிடித்தவர்களென்பதை. தனக்குப்பின்னால் தனது பதவிக்கு ஆபத்து இருக்கிறது என்பதையே மறந்து பேசுகிறார். இவர்கள் மக்களுக்காகவா, பதவிக்காகவா அரசியல் செய்கிறார்கள் என்பதை போட்டுடைத்து விட்டார். இனி வருங்காலத்தில் தமிழரசுக்கட்சி மக்களுக்காகவோ அவர்களது இலட்சியத்துக்காகவோ அல்லது அவர்களின் விடிவுக்காகவோ செயற்படாது. மக்களின் தேவைக்காக உழைக்கும் தலைவர்கள், கட்சியை உருவாக்கி செயற்படவேண்டும். ஆயனை அழித்தார்கள், துணைபோனார்கள், மக்களை அடிமைகளாக்குவதற்கு. அதனால் பல ஓநாய்கள் உருவாகி அவர்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழரசு என்று கனவு காண்பவர்களுக்கு அனுதாபங்கள். கஜேந்திரனோடோ அல்லது சுமந்திரனுக்கு சவாலானவர்களோடோ தமிழரசுக்கட்சி ஒருபோதும் இணையாது. சுமந்திரன் சொல்வதை, செய்வதை வாய்பொத்தி, காது பொத்தி அவரின் வாய் பாத்து கேட்டுக்கொண்டிருப்பவர்களோடேயே அவர்கள் கூட்டிணைவார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. இப்போ, கஜேந்திரனுக்கு ஒரு வாய்ப்பு, மக்களின் உணர்வறிந்து செயற்பட. தவறினால் எழுபத்தாறு ஆறுகால ஆண்டு அவகாசமெல்லாம் கிடைக்காது. தன்னலம் மறந்து மக்களுக்கு சேவை செய்தால்; மக்கள் உங்களை தாங்கிக்கொள்வார்கள் என்பது கடந்தகால அனுபவம்.
  15. உலகம் எங்கே போகிறது? அவர்களை தண்டிக்கக்கூடாது, மற்றவர்களை அவர்கள் தண்டிக்கலாம், தடை செய்யலாம். யார் இவர்கள்? அடாவடி புரியும் வல்லரசுகளின், வாலரசுகளின் சட்டம், நீதியது.
  16. ம், உங்களுக்கு உதவிகளை செய்கிறோம், அதனால் அத்துமீறி உங்கள் கடல் வலயங்களில் மீன்பிடியில் ஈடுபடும் நம் கடற்தொழிலாளரை அனுமதியுங்கள். இவ்வாறே இலங்கை அரசும் எங்கள் நிலத்தில் கடந்து கொள்கிறது, பிச்சை கொடுத்து அடிமையாக்குவது.
  17. தன் இனத்தையே கொத்துக்கொத்தாக கொலை செய்த, செய்ய உதவிய பலபேர் தேர்தலில் நின்று அந்த மக்களாலேயே வெல்ல வைக்கப்பட்டு பாராளுமன்றம் செல்கின்றனர் என்றால்; இதுவும் சாத்தியமே.
  18. வக்கத்த அரசியல்வாதிகளுக்கு குழப்பங்களே அரசியல் முதலீடு. இவர்களை சிறைக்கு அனுப்பாவிடில் நாட்டில் குழப்பங்களும் பிரிவினைகளும் மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தெருவில் நின்று அரசியல்வாதி முதல் காவியுடை தரித்தவர்கள் வரை நாட்டை கொளுத்துவோம், இரத்த ஆறு ஓடப்பண்ணுவோம் என்று ஊழையிடுகிறார்கள். அவர்களுக்கு தமிழரின் இரத்த தாகம் எடுக்கிறது
  19. இரண்டுமே மூழ்கப்போகிற படகுகள். அதில் இரு பகுதியினரும் ஏறி சவாரி செய்யத்துடிக்கின்றனர். அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் கூட்டுச்சேர தூது, நாமே மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று வீர வசனம் பேசியவர்கள், அடுத்த கட்சிகளின் ஆதரவில் ஆட்சியைப்பிடிக்க எந்தப்பேயோடும் கூட்டுச்சேர அழைப்பு. எங்கே இருந்த கட்சியை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சியும் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் பிழைத்த மாதிரித்தான். சுமந்திரன் அனுரவில் கடுப்பான கடுப்பில் இருக்கிறார். வாழ்த்து சொன்னார், நேரில் போய்ப்பார்த்தார், படம் பிடித்தார், அச்சுறுத்தல் விடுத்தார் ஒன்றுக்கும் அனுராவிடமிருந்து அழைப்பு வரவில்லை. அவரோ விடுகிற மாதிரியில்லை. தமிழ் மக்கள்யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்களுடனேயே அனுரா சேர்ந்து கொள்வார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை அவருக்கு தேவையில்லை, இவர்களோடு சேர்த்து இவர்களது எஜமானர்களையும் மக்கள் நிராகரித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள்.
  20. நல்ல முடிவு! பேரினவாத கட்சிகள் வேறு, ஈ. பி. டி .பி. கட்சி வேறல்ல. டக்கிளஸ், இப்போ தனித்து விடப்பட்டுள்ளார், அதில தமிழ்மக்கள் பாசம் பெருகி ஓடுவதுபோல் அறிக்கை, நிபந்தனை வேறு அவருக்கு.
  21. விசாரணை நடத்தி.....? இறந்த சிறுவனை மீட்டுத்தருவாரா? அவனுக்கு நிஞாயம் கிடைக்குமா?
  22. ஆமாம் உண்மை அதற்காகவே யாழ் நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது, தமிழர் தமது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டப்பட்டு அவர்களது தொன்மைகள் அழிக்கப்பட்டு புதிதான சரித்திரமும் சின்னங்களும் முளைத்து பரப்பப்படுகின்றன, போதிக்கப்படுகின்றன. அவற்றிற்காக நமது தலைமைகளுக்கு விலைகளும் கொடுக்கப்படுகின்றன. தமிழருக்கெதிராக இனப்படுகொலை நடக்கவில்லை என்றது சிங்களம். அதற்கான ஆதாரம் இல்லை என்றது அவர்களின் கைக்கூலிகள். இன்று அத்தனையையும் தகர்த்து கனடாவில், நடந்தது இனப்படுகொலையே என்று உலகெங்கும் உரத்துச்சொல்கிறது நினைவுத்தூபி. ஒரு சட்ட மேதை, ஆதாரங்களை திரட்டி, உண்மையை நிரூபிக்க தவறிய பட்சத்தில் கனடா செய்து நிரூபித்தது. அதற்கு முதல் கனடாவுக்கு தெரியாதா இதனால் என்ன நடைமுறைச்சிக்கல் வருமென்று? அதற்கு பதிலளிக்க வேண்டிய ஆதாரங்கள் எல்லாவற்றையும் சேகரித்து, உறுதிப்படுத்திய பின்பே நிறுவுவதற்கு அனுமதி வழங்கியிருப்பார்கள். இவர்களோ அரசியல், வாக்குகள் என்று தங்களது வரலாற்று பதிலை வைத்து கொக்கரிக்கிறார்கள். வேறு நாடுகளெதுவும் விளக்கம் கோரவில்லையே. சரித்திரத்தை அழித்து விட்டோம் மூத்த இனத்தை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று இவர்கள் ஆறுதலடையலாம் இப்போதைக்கு. ஆனால் இந்த நினைவு தூபி உண்மையான சரித்திரத்தை சொல்லும், ஏன் அங்கு இனப்படுகொலை நடந்ததென தேடச்செய்யும் அதை பார்ப்போரை.
  23. சுட்டிக்காட்டியதற்கு நன்றி! தொன்மை என்பது மூத்த, பழைமை, முதல், பெருமை என்று பொருள்படும். இன்னும் பல சொற்களுண்டு. அதை மறைக்கவே எல்லா பின்வேலைகளும் நடக்கின்றன. புதிய சரித்திரம், வாழ்விடங்களில் இருந்து துரத்துதல், கொலை செய்தல், பழைய வரலாற்றுச் சின்னங்களை களவாடுதல் அழித்தல், தடுத்தல், புதிய சின்னங்களை அதிகாரத்தின் மூலம் நிறுவுதல் இவை எல்லாம் சான்றுகள்.. மொழி, மதம், சரித்திரம் இவையெல்லாம் தற்போது சுய நல அரசியலில் பெரும் பங்காற்றுகின்றன, அழிவை ஏற்படுத்துகின்றன. போரில் தான் செய்த கொடுமைகளை மறைத்து தர்மத்தை போதிக்க அசோக சக்கரவர்த்தி கையாண்ட ஆயுதம் பௌத்தம். அதை இலங்கைக்கு தனது மகள் மூலம் கடத்தினார்,அது இலங்கையில் சன்னதம் ஆடுது. சிங்களம் இலங்கையில் அன்றி வேறெங்குமில்லை, அது தோன்றிய இடத்திலேயே இல்லை. ஹிந்தி பேசுகிறர்கள் எழுத்து வேறு மாதிரியானது. அண்மையில் ஒரு பாகிஸ்தானியை எனது வேலை சம்பந்தப்பட்ட இடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்போ என்னுடன் வந்திருந்த இந்தியர் ஹிந்தியில் அவருடன் பேச ஆரம்பித்து விட்டார். நான் விளக்கம் கேட்ட போது, பாகிஸ்தானியர் சொன்னது தான், உருது, ஹிந்தி, பஞ்சாப் அல்லது குஜராத்தி (சரியாக நினைவில் இல்லை) மொழி பேசுவேனென்றார். இதில் ஹிந்தி, உருது இரண்டுமே ஒரு மொழி. அவர்கள் உருது என்கிறார்கள் இவர்கள் ஹிந்தி என்கிறார்கள். ஆனால் எழுத்துக்கள் ஒரே மாதிரியானவை அல்ல, அவர்கள் இடப்பக்கத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறார்கள் என விளக்கமளித்தார்.ஒருவேளை அரபிக் முறை எழுத்துக்களாக இருக்கலாம். இவை அவர்கள் எனக்குச் சொன்ன விளக்கங்கள்.
  24. இதனால் இவருக்கு என்ன நஷ்டம்? இவரை கைது செய்து நாலு சாத்து சாத்தினால் தெரியும் இவரின் வாய்வீரம். தமிழர்மேல் சட்டம் பாயும் என்று அச்சுறுத்தியவர் எங்கே போய்விட்டார்? சட்டம் தவறு செய்யும் எல்லோர் மேலும் பாராபட்சமின்றி பாய்ந்திருந்தால் இவர்கள் எல்லாம் முளைத்திருக்க வேண்டிய தேவையே வந்திருக்காது. ஏதோ வடக்கு தன்வீட்டு சொத்துமாதிரி அலறுகிறார்.
  25. இனவழிப்பு என்பது மட்டுமல்ல, புலிகள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் சிங்களத்தின் இந ஒடுக்கலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடி தமது நிலத்தையும் பண்பாட்டையும் மக்களையும் விடுவிக்க போராடிய விடுதலை வீரர்கள் என்பதையும் நோக்கி சர்வதேசத்தை நகர்த்துகிறார்கள். இவர்கள் விடும் கண்டனம் கோசம் சவால் எல்லாம் நமக்கு ஆதரவாகவே திரும்புகின்றன. இனக்கலவரம் வெடிக்கும், இரத்த ஆறு ஓடும் என எச்சரிப்பது, இவர்களது கடந்தகால வரலாற்றுக்கு சாட்சியம். பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற நடத்திய மனிதாபிமானப்போர் என்கிறது. அப்படியெனில் மக்களின் பாதுகாப்பை கருதாமல் அவர்கள்மேல் குண்டுகளை பொழிந்து, அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்துகளை தடுத்தது ஏன்? அவர்கள் தப்பித்து சென்று உயிர் வாழும் சந்தர்ப்பங்களை மறுத்து, வீதிகளை அடைத்து கெடுபிடிகளை ஏற்படுத்தியதும் ஏன்? அவர்கள் உயிர் காக்க தஞ்சமடைந்த இடங்களை அழித்து அவர்களை விரட்டியது ஏன்? சரணடைந்தவர்களை கொன்றது ஏன்? புலிகள் வெற்றிகொள்ளப்பட்ட பின்னும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்திருப்பது ஏன்? அவர்கள் நிலங்களில் அவர்கள் வாழ்வியலை தடுத்து அவர்களுக்கு பொருத்தமில்லாத விகாரைகளை எழுப்பி அவர்களை சீண்டுவது ஏன்? மக்கள் இவர்களிடம் புலிகளுக்கெதிராக முறையிட்டார்களா? பாதுகாப்பு கேட்டார்களா? இன்னுமேன் மாவீரர் தினத்தை நினைவு கூர முண்டியடிக்கிறார்கள்? இன்னும் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அப்போ எங்கே தவறு புலிகளிலா சிங்களத்திலா? சர்வதேசம் ஒன்றும் முட்டாளல்ல என்பதை சிங்களம் தனது முடிவின்போது கண்டு அதிர்ச்சியுறும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.