Everything posted by satan
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
சாய், பக்கத்திலிருந்த புத்தர் கூட கைவிட்டு விட்டாரே பசிலை? கையிலை எத்தனை மீற்றர் நூல் கட்டியிருந்தும் பயனில்லை, பிறகேன் அதை ஓதி கட்டுகிறார்கள்?
-
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
என்னது..... கதிரையிலிருந்து விழுந்து காயமடைந்து ஆறுமாதம் விமானத்தில் பயணம் செய்ய முடியாதா? அப்படியென்ன கதிரையது? அது கதிரையாக இராது, குதிரை என நினைக்கிறன். நீதிமன்றம் போகவேண்டி வந்தால் அரசியல்வாதிகள் பலருக்கு உடல்நல பிரச்சனை வருவது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழமை.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அப்படியா நான் அதைக்கவனிக்கவில்லையே?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
அது ஒன்றுமில்லை, ஒரு சில மாதங்களுக்கு முன், ஒரு இஸ்லாமியர் நல்லூருக்கு சொந்தம் கொண்டாடி, இப்படி ஒரு கதை சொன்னார். தாயின் கற்பத்தில் இருந்த குழந்தையை புலிகள், தாயின் வயிற்றை கீறி வெளியே எடுத்தார்கள் என்றொரு உண்மைக்கு புறம்பான கதையை பரப்பி அப்பப்போ முபாறக்அப்துல் மஜீத் என்பவர் தமிழர்மேல் தனக்குள்ள வெறுப்பை கக்குவார். அதை சிலர் உண்மையென நம்பி அனுதாபம் தெரிவிப்பது. அதுவே அவர்களுக்கும் சாதகமாகிறது, தாம் சொன்ன பொய் உண்மையென சாதிப்பார்கள் எதிரிகள். உங்களைப்போல் யார் ஆதாரம் கேட்டு தெளிகிறார்கள் நம்புவதற்கு முன்?
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூரில் கோயில் வலயத்திற்குள் வசிப்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை. அப்போ அவர் அங்கே தனது நிறுவனத்தை நடத்துவதால் அவருக்கு என்ன பயன்? அங்கே கொள்வனவு செய்ய வருவோர் யார்? அவர்களுக்கு அந்த ஊரின் கோவிலின் புனிதம் தெரியாததா? ஒன்று புரிகிறது. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. அங்கே அசைவம் விற்பனை செய்யப்படுகிறது, அல்லது அங்குள்ளவர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்பது. ஒரு தொழில் ஆரம்பிப்பவர், அந்த சூழ்நிலை அறியாமல் அங்குள்ளவரின் அறிமுகமேதுமில்லாமல் விற்பனையை ஆரம்பித்து இருக்க வாய்ப்பில்லை. யாரோ ஒருவர் இதற்கிடையில் தரகராக இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
இவரை தூஷண பிக்கர் என்பதை விட, அடாவடி பிக்கர் என்பது தான் பொருத்தம். ஒருதடவை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கெல்மெட் போடாமல் பயணிக்கிறாரென நடுவீதியில் சட்டத்தை கையிலெடுத்து அடாவடி பண்ணினார், சில மாதங்களுக்கு முன் ஒரு பிக்கு இதே தவறை செய்த போது, காவற்துறையினர் விசாரிக்கும் போது, தான் ஒரு பிக்கு, கெல்மெட் போடத்தேவையில்லை, தனக்கு நாட்டுச்சட்டங்கள் பொருந்தாது என வாதிட்டார். சட்டம் ஏன், எதற்காக பாவிக்கப்படுகிறது? ஹெல்மெட் போடாவிட்டால் யாருக்கு கேடு என்பதை கூட புரியாமல் விவாதம் செய்தார். அது இருக்க, இவர் பாவித்த மின்கட்டணத்திற்கான நிலுவையை செலுத்தவில்லை, இணைப்பை துண்டிக்கப்போன ஊழியரை தூஷணத்தால் திட்டி அடித்து திருப்பி அனுப்பினார். அன்றிலிருந்துதான் இவருக்கு தூஷணப்பிக்கர் என்கிற பெயர் வெந்திருக்கும். இவர்களின் அடாவடிக்கு பணிந்து போகும் சட்டம், காவற்துறை, ஜனாதிபதி இவர்களால் தாக்கப்படுவார்கள். இவர்களுக்கு சட்டம் நீதியின் மரியாதை தெரிவதில்லை. ஒருதடவை ஒரு கட்டிடத்தில் ஏறி நின்று சண்டித்தனம் விட்டார். நமது சாணக்கியன் எம்பியின் கூட்டாளியும் கூட!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கோவில் ஆலய வலயங்களுக்குள் வாழ்பவர்கள் அசைவம் சமைப்பதில்லை, சாப்பிடுவதில்லை என்றால், அவர் யாருக்கு, எப்படி அங்கு வியாபாரம் நடத்த முடியும்? எல்லா ஊரிலும் பல பிரபலமான சைவ, அசைவ உணவகங்கள் வந்துள்ளன. ஊர்விட்டு ஊர்வந்து யாரும் அசைவம் சாப்பிட வேண்டிய தேவையில்லை என நினைக்கிறன். ஒருவேளை தங்கள் இரகசிய உணவுமுறை, இந்தக்கடையால் வெளியே வந்துவிடுமென அச்சப்படுகிறார்களோ தெரியவில்லை. கீழ் சாதிக்காரர் தேர் இழுக்கக்கூடாது, ஆனால் பல உயிர்களை காவு கொண்ட ஆமிக்காரர், இயந்திரங்கள் தேர் இழுக்கலாம் என்னும் வாதம் போன்றது. இவர்கள் தங்கள் சண்டித்தனத்தை தையிட்டியில் காட்டி விகாரையை அகற்றியிருந்தால் பாராட்டியிருப்பேன். எல்லாம் பெலயீனர்களிடந்தான் தமது சண்டித்தனத்தை காட்டுவார்கள். சரியான அணுகுமுறையை கையாண்டு பிரச்சனையை சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் தேவையில்லாத பிரபல்யம் அடையப்போய் தங்கள் சண்டித்தனத்தை பிரபல்யப்படுத்தி பகைமையை வளர்த்திருக்கிறார்கள். எனக்கு அசைவம் பிடிக்காது, அசைவரையும் பிடிக்காது என்று அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது, அச்சுறுத்துவது மனித நேயமுள்ள செயலல்ல. அதை மதங்கள் போதிப்பதுமில்லை. எல்லோரையும் மதிக்கும் பண்பு வேண்டும். இந்த பின்போக்கு தனமும் பாராளுமன்றத்தில் ஒலிக்கலாம். நாங்கள் ஒரு பகுதியினரை எமது நலன்களுக்காக அடக்கலாம், வெறுக்கலாம், விரட்டலாம். ஆனால் நமக்கு யாரும் அதை செய்யக்கூடாது. இதுதான் எமது வாதம், அப்பப்போ வெளிவருகிறது. பொங்கல் முடிந்தவுடன் மீன்கடைக்கு போவோரையும் கண்டிருக்கிறேன், கோயில் கொடியேறி விட்டது, வீட்டில் மாமிசம் சமைக்கஊடாது என வீட்டுக்கோழியை பிடித்து அடுத்த வீட்டில் சமைத்து சாப்பிடவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த வீடுகள் கோயிலின் பக்கத்திலேயே இருக்கின்றன. அது அவரவர் உணவுப்பழக்கம், சுதந்திரம். அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. நாங்கள் அசைவம் சாப்பிடுகிறோம், நீங்களும் அசைவம் சாப்பிடுவதென்றால் எங்கள் வலயத்தில் இருக்கலாமென யாரும் கட்டுப்பாடு போடுவதுமில்லை, அவர்களை விலக்கி வைப்பதுமில்லை. அடுத்தவரை மதித்து வாழ்வதே மதம். சாப்பாட்டில், சாதியிலில்லை. நாங்கள் வெளிநாடுகளில் அசைவம் சாப்பிடுபவர்களின் பக்கத்தில், வீடு வாங்குவோம், கோயில் கட்டுவோம். ஆனால் ஊரில் உள்ளவர்கள் சைவ சமய சட்ட திட்டப்படி வாழ வேண்டும். நமது வீடுகளை விற்கும்போது, யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு விற்போம், அங்கு சூழலில் இருப்பவர்களின் மனநிலையை கணக்கில் எடுக்க மாட்டோம், இந்த சாத்திரங்கள், வாதங்களை கையிலெடுக்க மாட்டோம். இதுதான் எமது நியதி.
-
அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு
யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை ஜே. வி. பி. ஆட்சியமைக்குமென. ஆனால் அது வென்றபோது அந்தக்கட்சியில் உள்ளோரும் எம்மைப்போன்று சித்திரவதைகளையும் இழப்புகளையும் வலிகளையும் சந்தித்தவர்கள், ஆகவே எமது வலி, இழப்பு, ஏக்கம் இவர்களுக்கு புரிந்திருக்கும், அதைவிட அனுரா மிகவும் இளமையானவர், முற்போக்காக சிந்திப்பார், மாற்றங்களை செய்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் அது கடந்தகாலத்தில் தமிழருக்கெதிராக செய்த அநீதிகளும் அறிந்தே இருந்தோம். ஜே. வி .பி. இல்லையென்றாலும் எங்களை நேரடியாக அழித்த ஒரு கட்சிதான் வந்திருக்கும். இந்த அனுரா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி எமது காயங்களை ஆற்ற மறுப்பாரானால், இனி சிங்களத்தின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு, அவகாசம் வழங்கப்படுகிறது. எவ்வளவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அவர்கள் தமக்குத்தாமே அழிவை தேடிக்கொள்கிறார்கள். இனப்படுகொலை நடைபெறவேயில்லை என தம் மனச்சாட்சியை, பதவிக்காக ஏமாற்றுகிறவர்கள், ஆதாரத்துடன் நிரூபிக்கும்போது எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? இதுவரை காலமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, ஆதாரங்களை வெளிக்கொணரவுமில்லை இனிமேலும் எதுவும் நடைபெறாது என தைரியமாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் நினையாத நேரத்தில், நினைத்திராத மனிதர்களால் எல்லாமே வெளிவரும். அப்போ இவர்கள் எதையும் செய்யவோ, சொல்லவோ சந்தர்ப்பம் கிடைக்காது. அன்பையும் அஹிம்சையையும் கொண்ட மதத்தின்பேரால் இவர்கள் செய்த அனிஞாயங்கள் வெளிவரும்போது அந்த மதமே அவர்களுக்கு கைகொடுக்காது.
-
அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின் மனச்சாட்சியும்
ம், ஏமாந்து களைத்த மக்களை ஏமாற்றி பதவியில் அமர்ந்ததே ஜே .வி. பியின் வெற்றி. தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிப்போம் என்றார்கள், அதுபற்றிய உரையாடலின் நடுவே வெளியேறினார்கள், இனவழிப்பு ஒன்று நடைபெறவே இல்லை என்கிறார்கள், உண்மையை கதைத்தால் சட்டத்தால் அடக்குவோம் என அச்சுறுத்துகிறார்கள், நேரம் ஒரு கதை, ஆளுக்கொரு பேச்சு பேசுகிறார்கள். இதுதான் இவர்களின் கள்ள மனச்சாட்சி, கோழைத்தனம். இதனை துணிச்சல் என பிதற்றுகிறார்கள்
-
யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் - இளங்குமரன் எம்.பி
அப்போ, வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளுக்கு இராணுவத்தினர் பெயரில்லா உறுதி உள்ளது? தையிட்டி திஸ்ஸ விகாரை இவரது காணியிலா அமைந்துள்ளது?
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
மக்களை தலைவன் இல்லா மந்தைகளாக்கி, கட்சியை கூறு போட்டு வைத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன கேடு வரப்போகிறது? ஒன்று கட்சி அழியும் அல்லது இவர் பலாத்காரமாக வெளியேற்றப்படுவார். கட்சியால், மக்களால் நிராகரிக்கப்பட்டும் தலைமைக்கு அடிபட்டு, அடுத்தவர் பதவியை கவர்ந்து இதல்லாம் ஒரு பிழைப்பு? இதை சட்டம் தெரிந்த சாணக்கியன் என்று புகழ்ச்சி வேறு. இவர் பாராளுமன்றம் போனாலும் ஏளனப்படுத்தப்படுவார். அதற்குத்தான் இவ்வளவு அவசரம். பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு அலைபவர்கள், கிடைக்கவில்லையென்றவுடன் கட்சியை பிரிந்து சென்றுவிட்டார்கள் என்று சொன்ன சுமந்திரனும், இங்கு சிலரும் கவனிக்க வேண்டும்; கட்சியின் அடாவடி, தன்னலம், ஓரங்கட்டல், குடைச்சல் தாங்காமல் மரியாதையாக வெளியேறினார்கள். ஆனால் மற்றவர்களை குறை சொல்லி, கட்சியை முடக்கி, உறுப்பினர்களை செயற்படவிடாமல் தடுத்து வைத்திருப்பதற்கு என்ன பெயர் சூட்டலாம்?
-
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
இவர் கட்சியிலுள்ளவரே, சில வாரங்களுக்கு முன், பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதை செய்திருப்பார்களென்றால், யுத்த காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்களென்று பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் சந்தேகம் எழுப்பியிருந்தார். இவரும் அங்கேதானே இருந்தார், ஏன் இவரால் பதில் சொல்லமுடியவில்லை? இதே அனுரா, பத்திரிகையாளர் சந்திப்பில், வடக்கில் உள்ளதுபோன்று தெற்கில் இராணுவ காவல் அரண்கள் இல்லை, இன்றும் தங்கள் பிள்ளைகளை தேடி அலைகின்றனர்என்று சொன்னாரே, அதற்கு இவர் பதில் என்ன? நீங்கள் சம்பளத்திற்காக போரிட்டவர்களை நினைவு கூரலாம் என்றால், நாம் ஏன் நம் வீரர்களை நினைவு கூரக்கூடாது? நீங்கள் எங்கள் சொந்த மண்ணில் விகாரைகளை அமைத்துக்கொண்டு நல்லிணக்கம் என்றால், கனடாவில் உள்ள நினைவுத்தூபியால் எப்படி நல்லிணக்கம் குலையும்? பகுத்தறிவு இல்லாதவர்கள் படித்தாலென்ன, படிக்காவிட்டாலென்ன எதுவும் மாற்றமடையாது? உரத்து சொல்லுங்கள், தமிழ் இன அழிப்பு இலங்கையில் நடைபெறவில்லையென, சர்வதேசம் எங்கும் இனவழிப்பிற்கான குரல்களும், நினைவாலயங்களும் கிளம்பும். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். நாளடைவில் சிங்கள மக்களே, இனஅழிப்பினாலேயே இந்த நாடு அழிந்தது, தனித்து விடப்பட்டது என நீதி தேடி அலைவார்கள். சர்வதேசம் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறது? ஆதாரங்களை அவரவர் புகைப்படங்களுடன் வெளியிட்டு நிரூபிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. எங்களுடைய இன்றைய இந்த துயர நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐ .நா. சர்வதேச நாடுகளே காரணம்! ஏன் ஐ நா சபைக்கு காலத்திற்கு காலம் காவடி எடுக்கிறீர்கள்? கொழும்பில் தமிழரை தேடித் தேடி கொல்லவில்லையா? அல்லது அப்போது இவர் பிறக்கவில்லையா? இவரைப்போல் பொய்யன் வேறு யாருமில்லை. இனவழிப்பு நடைபெற வில்லையென்றால், விசாரணைக்கு தயங்குவதேனோ? அதற்கான காரணத்தை அறிவியுங்கள்! மைத்திரிபால சொன்னார், "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறி விட்டது." என, அப்போ இந்த வெளிவிவகார அமைச்சர் எங்கே போயிருந்தார்? தன்நாட்டில் நடந்தவை அறியாத, மறந்த இவருக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
என்ன சிறியர் இப்படி சொல்லிவிட்டீர்கள்? நாங்களும் எங்கள் பாடுமாக இருந்த எங்களை அகதிகளாக்கி, தன் நாட்டுக்கு வரவழைத்து, இந்த ஆராத்தி எடுத்ததே இந்தியாதான். ஒரு உச்சமன்ற நீதிபதி பாவித்த வார்த்தைப்பிரயோகம்? அந்த மனிதனின் தன்மானத்தை கீறிக்கிழித்துள்ளது. ஆமா, இதை அறியாத இந்தியா தன் மக்கள் பிரச்னையோடு நின்று இருக்கவேண்டும். தன் பிரச்சனையை தீர்க்க முடியாத நாடு, எங்கள் விடுதலையில் ஏன் தலையிட்டது? ஏன் எடுத்ததற்கெல்லாம் இங்கே மூக்கை நீட்டுது? அதற்கு இந்த குஜராத் நீதிபதி பதில் சொல்ல கடமைப்படுள்ளார். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து எழுதுவதற்கு காரணம் என்ன? பாகிஸ்தான் ஆயுதம் தூக்குது, எங்கள் ஆயுதங்களை பிடுங்கியெடுத்தால் பேனாவால் தாக்குவோம். நாங்களும் மனிதர்கள், எங்களுக்கும் உணர்வுகள் உண்டு, நாங்கள் எழுதுகிறோம், பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருப்பதுதானே? எதற்கு மீண்டும் மீண்டும் எங்கள் பிரச்சனையை சிக்கலாக்குகிறார்கள்? தனது பாதுகாப்புக்கு எங்களை பணயம் வைக்கிறார்கள், மற்றைய நாடுகளை எங்களுக்கு உதவ விடாமல் தடுக்கிறார்கள், கனடா எங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பது, ஆதரவு தருவது இவர்களின் குற்ற உணர்வை தாக்குகிறது. அதுவே அவர் பெயர் குறிப்பிடாமல் வேறு நாடுகளுக்கு செல்லுங்கள் என்கிறார். அதை சொல்வதற்கு இவர் யார்? அப்படி செல்ல முடியுமென்றால் அவர்களே போவார்கள். விழுந்தவனை ஏறி மிதிப்பது எல்லோருக்கும் இலகு.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னமே சிவஞானம் டக்கிலஸை குறிவைத்து, ஆயுதம் ஏந்தியவர் எல்லோரும் விடுதலைக்காக போராடியவர்கள் என்று கட்டியம் கூறும்போதே நினைத்தேன், டக்கிலஸை விட இவர் ஒருபடி கீழ் என்று. உண்மையிலேயே இவர்கள் ஈ. பி. டி. பியோடு இணைவதுதான் பொருத்தமானது. வீட்டை உடைத்தாயிற்று, அங்கே குடியேறுவதுதான் இவர்களுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும். சிங்கள எஜமானாரோடு கூடிக்குலாவி, அவர்களுக்கு வாக்கு போடும்படி மக்களை வழிநடத்தியவர்கள், அனுரா மட்டுமே ஏதோ சிங்களகட்சி அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது என்று கூட்டம் போட்டு கத்திவிட்டு, பின் அவர்களோடேயே டீல் போட்டு, சரிவராத சந்தர்ப்பத்தில் டக்கிலஸை வரவேற்கினம். வெட்கம், தன்மானம் கெட்டவர்கள். இந்த மனிதனுக்கு வயதிற்கு தகுந்த அறிவுமில்லை, அனுபவமுமில்லை, பட்டறிவுமில்லை. வெறும் வெத்து.
-
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் - மஹிந்த ராஜபக்ஷ
இவ்வளவுகாலமும் போர் வெற்றிக்கதைகளைப்பேசியவர், சற்று மாற்றிப்பேசுகிறார். அனுராவின் பேச்சை கேட்டு சுருதி மாறிவிட்டதோ? அதை எப்படி இவர் சொல்லமுடியும்? போர் கனவிலேயே இருக்கிறார்.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
இந்த சிவஞானம் மூத்த அரசியல்வாதியா? அப்படி தெரியவில்லையே? மக்களால், கட்சியால் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அவரின் பதவியை முடக்கி வைத்துக்கொண்டு, பிடுங்கியெடுத்த பதவியை வைத்துக்கொண்டு ஆசைகாட்டும் சுமந்திரனின் பதவிக்காக தலையாட்டுகிறார். இவர்கள் எல்லாம் தன்னம்பிக்கையற்றவர்கள், மற்றவர்களை புகழ்ந்து, சார்ந்து வாழ்பவர்கள். இப்படியானவர்கள் இருக்குமட்டும், அவர்கள் தலையாட்டுவதில் அடிபொறுக்கிகள் தலைவராவர்.
-
யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் - 16 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி
எல்லாம் சரி. அந்த போராட்டம் எதனால், யாரால்.எழுந்தது என தெளிவு படுத்த மறந்து விட்டாரா? மறைத்து விட்டாரா? போராட்டத்தின் மூல வேரை அறிந்து அகற்றாவிட்டால், இவர்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் சமாதானம், நல்லிணக்கம் ஒருபோதும் உருவாகாது. சாந்தி, சமாதானத்தை அழித்த விழாவை கொண்டாடிக்கொண்டு, அதுபற்றி பேசுவது தங்களை தாங்களே ஏமாற்றுவதாகும். பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கும் ஜனாதிபதி என்று சொல்ல தகுதியற்றவர். இல்லை, தங்கள் பதவிகளை தற்காத்துக்கொள்ள அந்த ஏழை இளைஞர்கள் பலி கொடுக்கப்பட்டனர். சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக அவர்கள் போர்புரிந்திருந்தால், உயிர் துறந்திருந்தால், இன்று போர் வெற்றி விழா அல்ல சமாதானத்தின் விழாவாக இருந்திருக்கும். எத்தனை பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளின், கணவரின், தந்தையின் இறுதி உடலை காணாமல் அவர்களுக்கு என்ன நடந்ததென அறியாமல் இன்றும் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அது அந்த இறந்த வீரர்களுக்கு செய்யும் துரோகம். ஆமா, வெற்றி நாயகனின் உரை இன்னும் வெளிவரவில்லையா? இதற்குமேல் அவரால் என்ன உரையாற்ற முடியும்?
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
பாவம் இவர்! பதவிக்காக எப்படியெல்லாம் ஆமா போடுகிறார். கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்துவதே இவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ள பதவியாசை விடவில்லை. ஆமா, ஆமா என்று எல்லாப்பக்கமும் தலையாட்டுவார், பின்னர் எல்லோராலும் கைவிடப்படுவார்.
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
தமிழர்களை அழித்து அவர்களை ஏதிலிகளாக்கும்போது இந்தியா இதை உணர்ந்திருக்க வேண்டும். அடைக்கலம் கொடுக்க முடியாதவர்கள் ஏன் அவர்களை அழிக்க தூண்டினர், உதவி செய்தனர்? எங்களது இன்றைய கையறுநிலைக்கு, இந்தியா, பிரிட்டன், ஐ.நா, இன்னும் சர்வதேச நாடுகளே பொறுப்புக்கூறவேண்டும், பொறுப்பெடுக்க வேண்டும். இந்த லட்ஷணத்தில காசா மக்களை லிபியாவில் குடியேற்ற போகிறாராம் ஒருவர். அப்போ நினைத்தேன், தமிழரை இந்தியாவில் குடியேறுங்கள் என்று சொன்னாலும் சொல்வார் என்று. அதற்குள் இந்தப்பதில் கிடைத்துள்ளது. அவர்களை தங்கள் நாட்டில் அமைதியாக வாழ விட்டிருந்தால், அவர்கள் ஏன் பிறநாடுகளில் தஞ்சமடைய வேண்டும். தமது நாட்டில் இருபத்தாறு பேர் கொலைசெய்யப்பட்டபோது, போர் முரசு கொட்டியவர்கள், லட்ஷம் பேரை காலத்திற்கு காலம் கொன்றபோது தம்மைப்பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை கூடி அழித்தது எந்த வகையில் நிஞாயம்? அதற்கும் இந்த நீதிபதிகள் பதில் சொல்ல வேண்டும்!
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர் - தடைகள் காரணமாக என்னால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லை - சவேந்திர சில்வா
ம், எத்தனை கனவுகளோடு அமெரிக்காவுக்கு போனார், சொல்லாமல் கொள்ளாமலே ஓடி வந்ததனால் தப்பிவிட்டார். தனது குடும்பத்துக்கும் தடை விதித்தது பெரிய கவலை. இதுவா... இன்னும் இருக்கு, அதை அவர் உணரவில்லை. தன் குடும்பம் பலியாகும்போது உணர்வார்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்; சஜித் பிரேமதாச
கட்சி பேதம் மறந்து சிங்களம் ஒன்று சேருகிறது. பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்களும், சட்டாம்பியும் கொடுத்த ஆதரவிற்கு கைம்மாறு. எந்தக்கட்சியும் வாக்குக்காகவே தமிழரை பயன்படுத்துகிறது.
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர் - தடைகள் காரணமாக என்னால் தென்னாசிய நாடுகளிற்கு கூட செல்ல முடியவில்லை - சவேந்திர சில்வா
ம், சொந்த அப்பாவி மக்களை கொன்றது கொண்டாடப்படவேண்டியது?
-
தேசிய போர் வீரர்களின் நினைவு: மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு
கேட்ப்போம் அனுரா என்ன உரையாற்றுகிறார் என்று.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்; சஜித் பிரேமதாச
சிங்களம் எப்போதும் தமிழரை ஏமாற்றுவதிலும், அடிமைப்படுத்துவதிலும், தமிழரை வெற்றிகாண்பதிலும் என்றும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆனால் நம்மவர் மட்டும் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்?
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
உயிரோடு இல்லாத போது இது ஒரு வினோத ஆசை இவருக்கு.