satan
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: புது வருட சிரிப்புகள்.
Everything posted by satan
-
தேசிய போர் வீரர்களின் நினைவு: மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு
கேட்ப்போம் அனுரா என்ன உரையாற்றுகிறார் என்று.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து தாயகத்தை விடுவித்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்; சஜித் பிரேமதாச
சிங்களம் எப்போதும் தமிழரை ஏமாற்றுவதிலும், அடிமைப்படுத்துவதிலும், தமிழரை வெற்றிகாண்பதிலும் என்றும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆனால் நம்மவர் மட்டும் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்?
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
உயிரோடு இல்லாத போது இது ஒரு வினோத ஆசை இவருக்கு.
-
10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்
முட்டாள் பெரியண்ணனின் சமயோசித புத்தி. இவர் எத்தனை நாளைக்கு அதிகாரம் செலுத்த முடியும்? அதன் பின் குடியேறியவர்களின் நிலை என்னாவது? தனது நாட்டுக்குள் வரக்கூடாது என்று தடைபோடும் இவர், இன்னொரு நாட்டில் எப்படி இவர் முடிவெடுக்க முடியும்? முதலாவது பாலஸ்தீனியர்கள் லிபியாவில் குடியேற விரும்புவார்களா? அல்லது அவர்கள் நாட்டை அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதற்கு ஏற்கெனவே போட்ட திட்டமா இது?
-
வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
இதிலும் தோல்விதான்!
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சுமந்திரன் முதலொரு தடவை ஆர்னோல்ட்க்கு எதிராக மணிவண்ணனை பாவித்தார். இப்போ, இவரை சிறிதரனுக்கு எதிராக இறக்கி குடைச்சல் கொடுக்க விழைகிறார். பாராளுமன்றத்தேர்தலின்போது பரப்புரைகளில், கொலைகாரர், ஆயுதக்காரர் என்று சுமந்திரன் இவர்களை விமர்ச்சித்திருந்தார். டக்கிளசுக்கும் தூது விட்டவர் சுமந்திரன். இவர் தனது நன்மைக்காக எந்த மட்டத்திற்கும் இறங்குவார். கொள்கை, நேர்மை இல்லாதவர். நான் ஆயுதப்போரை ஆதரிக்கவில்லை என்றவர், இப்போ யாரோடு கூட்டுச்சேர்ந்துள்ளார். கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு குழி பறிக்கும் ஓநாய் இவர்.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
லஞ்ச ஊழலை தடுப்பதற்கு ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களாமே? இது இவர்களுக்கு தெரிய வரவில்லையா? அல்லது அவர்களுக்கும் லஞ்சம் கொடுப்போம், வாங்குவோம் என்கிறார்களா. நீங்கள் நேரம் மினைக்கெட்டு இவற்றைப்பார்த்து பதில் எழுதி ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்பதே எனது ஆச்சரியம்? சுமந்திரனை விட திறமைசாலி இல்லை, அவர் அரிச்சந்திரனுக்கு அடுத்த ஆள் என நினைப்பவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.
-
மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
தரமான மீனை எப்படி பார்த்து வாங்குகிறது என்கிற யோசனையை தரப்போகிறார் என்று நினைத்தே வாசிக்க ஆரம்பித்தேன். அங்க பாத்தால், ம்ம்..... தனது மீன் விற்பனையியாளின் வசன அலங்காரத்தை கூறுகிறார். இவர் மீன் சந்தைக்கு போகும்போது மனையாளும் கூடப்போவது நல்லது. மனையாள் திட்டினால் பொறுக்காது, மீன்வியாபாரி திட்டினால் ரசிப்பு. வீட்டுக்காரி சரியில்லை.
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
தமிழரசுக்கட்சி, ஈ பி டி ஐ தவிர்த்து மற்றைய கட்சிகளோடு இணைந்து கஜேந்திரன் பொன்னம்பலம்செயற்படலாமே? சுமந்திரனை வெளியேற்றாவிட்டால், தமிழரசுக்கட்சி வெகு விரைவில் காணாமல் போய்விடும். தாழுகிற கப்பலில் பயணம் செய்ய ஏன் நினைக்கிறார்?
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
அது சரி, சில நாட்களுக்கு முன், இவரேதான் அறிக்கை விட்டிருந்தார். போரில் சம்பந்தப்படாத சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டபோது தனது தந்தை மிகவும் கவலையடைந்திருந்தார் என்று. மாற்றி மாற்றி கதைப்பது இவர்களுக்கு கைதேர்ந்த கதை. அப்படி இனப்படுகொலை நடைபெறவில்லை என்றால், ஏன் இவரின் தந்தை தன்னை மின்சாரக்கதிரையில் ஏற்றப்போகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தவர்? இன்னும் ஐ. நாவுக்கு படையெடுக்கிறார்கள்? அதே! போர்குற்றவிசாரணையை மறுத்துக்கொண்டு, நாம் நல்லவர்கள் என்று அலம்புவதை விட்டு, விசாரணைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து உங்களை நிரூபியுங்கள்.
-
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி
அதே தான்! அந்தக்கட்சியை இல்லாமல் செய்ய ஒருவர் படாத பாடு படுகிறார், இதற்குள் இவர் ஒருவர் சமிக்கை காட்டுகிறார். உள்ளதே நாலு ஆசனம், அரசாங்கம் இவரை திரும்பியும் பாக்கவில்லை. இதற்குள் இவரின் அறிக்கை வேறு. சீசீ.... இந்தப்பழம் புளிக்கும்!
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இப்போ புரிகிறதா மக்கள் ஏன் தென்பகுதி கட்சிகள் பக்கம் திரும்புகின்றனர் என்று? கெஞ்சி கூத்தாடி வாக்கு பெறுவது, பின்னர் ஆதிக்கம் செலுத்துவது. சுமந்திரனுக்கு யாரும் வாக்களிக்கவில்லை, வாக்களித்த மக்களுக்கே தாங்கள் விரும்புவோரை நியமிக்க அதிகாரமிருக்கிறது. சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றாவிடின், கட்சி மக்களிடமிருந்து நிராகரிக்கப்படும்.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
கனடாவில் போன வருடம் இலங்கையர் துள்ளிக்குதித்து போது, கனேடிய அமைச்சர் ஒருவர் கூறியது, எங்களுடைய நாட்டின் சட்டத்தில் தலையிட முடியாது, வேண்டுமென்றால் கொழும்பில் போய் செய்யுங்கள் என்று கூறியவுடன் அவர்களின் எதிப்புக்குரல் அடங்கிவிட்டது. வழமையாக கனேடிய அமைச்சரை வரவழைத்து தமது கண்டனங்களை தெரிவிப்பவர்கள் அதையும் செய்ய மறந்து விட்டனர். தமது நாட்டு சட்ட திட்டங்களை எதிர்ப்போரை அவர்கள் நாடுகடத்தலாம், அந்த உரிமை, எங்கள் நாட்டின் இறையாண்மையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் இலங்கைக்கு கிடையாது.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
ம்.... வெளிநாடுகளில் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழரால் நடத்தப்படும்போதெல்லாம், சில இலங்கையர்கள் அவர்களை அச்சுறுத்துவதும் குழப்புவதும் அவர்களுக்கெதிராக கூப்பாடு போடுவதும் வழமை. கடந்த தடவை வழமைபோன்று அவர்கள் பிரச்சனை செய்தபோது, இலங்கையின் பாணியிலேயே பதில் வழங்கப்பட்டது. இந்த பேச்சை கேட்டதும் தாம் இலங்கையர் என்பதை மறைத்து, ஒதுங்கியிருக்க வேண்டும். அல்லது தாங்களும் சேர்ந்து போராட்டம் நடத்தவேண்டும். இது சிங்கள, பவுத்த நாடு தமிழரெல்லாம் வந்தேறு குடிகள் என்று சண்டித்தனம் காட்டுபவர்கள், குடியேறிய நாடுகளிலும் தங்கடை சண்டித்தனத்தை விடவில்லை. கனடாவைப்பின் பற்றி எல்லா நாடுகளும் இந்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். காசை கொடுத்து தமிழரின் போராட்டங்களை தடுக்க களமிறக்கப்பட்ட கூலிப்படைகள் கைதும் செய்யப்படலாம் குழப்பம் விளைவித்தால்.
-
பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்திரன்
இப்போ விநயமான வேண்டுகோள் வைப்பார், தன் காரியம் முடிந்தவுடன் அதிரடியாக விசராட்டம் ஆடுவார். எப்படியும் சிறிதரனை துரத்தவே பார்ப்பார். சுமந்திரனோடு கூட்டுச்சேர்கிறவர்கள் மூட்டைப்பூச்சியோடு உறங்குவதற்கு சரி.
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வெசாக் கொண்டாடும் கைதிகள் மட்டுமே விடுதலை செய்யப்படுவாராம், சில சமயம் போதை வஸ்து கடத்தியோர், ஆடு, மாடு கடத்தியோர், களவெடுத்தோர், தங்கச்சங்கிலி அறுத்தோர், பெண்களோடு சேட்டை விட்டோர் என்பவரும் இதற்குள் அடங்கலாம். தமிழ் அரசியல் கைதிகளே இல்லையாம் இலங்கை சிறைச்சாலைகளில். ஒருவேளை, அவர்களையும் காணாமல் செய்து போட்டார்களோ தெரியவில்லை.
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
தான் ஒரு பெண் என்பதையும், தனக்கும் பிள்ளைகள் உண்டு என்பதையும் மறந்து பிள்ளையை இழந்த பெற்றோரின் மனநிலை ஏற்க மறுத்தும், அவர்களில் தவறு என்பதுபோல் காட்ட முயற்சி செய்கிறார். இவருக்கும் அந்த சூழ்நிலை வந்தால் புரியும். இவரின் இந்த கருத்துக்கு இவர் ஆதாரம் கொடுக்க வேண்டும். பிள்ளைக்கு சிகிச்சை அளித்தவர், எப்போ எதற்காக சிகிச்சை அளித்தார் என்பதை விளக்க வேண்டும். ஆசிரியரின் அத்துமீறிய செயலால் மனதளவில் பாதிக்கப்பட்ட குழந்தையை ஆற்றுப்படுத்த உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். அது மனநோய் அல்ல என்பதை பொறுப்புள்ள அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஒரு விமானம் வீழ்த்தப்பட்டால், அடுத்த விமானத்தை அனுப்ப பலதடவை யோசிப்பார்கள். அப்படியிருக்கும்போது இந்தியா இத்தனை விமானங்களை தொடர்ந்து அனுப்பியிருக்குமா என்கிற கேள்வி எழுகிறது. அப்படி உண்மையாகவே நடந்திருந்தால், இந்தியாவைப்போல் முட்டாள் இல்லை என்றே சொல்லலாம். இதற்குள் ஒரு றோ படை, பிராந்திய வல்லரசு என்றொரு எகத்தாளம். உண்மையிலேயே ஈழத்தமிழன் மிகவும் பரிதாபகரமானவன். இந்தியன் தனது நலனுக்கு இலங்கையை கையாள ஈழத்தமிழனை நசுக்குகிறான், சிங்களவன் இந்தியா நமக்கு ஏதோ அடைக்கலம் தந்துவிடுமென்று நம்மை அழிக்கிறான், இதற்குள் பாகிஸ்தான் நாம் இந்தியாவின் கைக்கூலிகள் என்று நம்மை அழிக்க உதவுகிறான். காரணமில்லாமல், கேட்க நாதியில்லாமல் அழிகிறான் ஈழத்தமிழன். காஸ்மீர் உண்மையிலேயே பாகிஸ்தானுடனேயே இணைய வேண்டிய பிரதேசம். ஆனால் இந்தியா தேவையில்லாமல் ஆக்கிரமிச்சு காலத்தையும், வளத்தையும், மக்களையும் அழிக்கிறது. அதனாலேயே நாம் சுதந்திரமாக பிரிந்து வாழுவதை இந்தியா தடுக்கிறது. ஐ. நாவில் எமக்கு எதிரான நிலையை எடுக்கிறது. எமது பிரிவை தடுத்தால் தான் காஸ்மீரை ஆக்கிரமிப்பது நிஞாயமானது என நினைக்கிறது. இந்தியா அழிந்தால் ஒழிய நமக்கு விடிவு வர விடாது. இவனுகள் எல்லாப்பக்கமும் போர் என்று தொடங்கி, மக்களை அழித்து, பஞ்சத்தை ஏற்படுத்தி, உலகை அழிக்கப்போகிறார்கள். ஒவ்வொருவரும் உலகப்போர், அணுவாயுதம் என்று ஒருவரை ஒருவர் அச்சுறுத்தி போட்டுத்துலைக்கப்போகிறார்கள்.
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
புலிகளை வித்து அரசியல் செய்தவர் இனி அவர்களை வைத்து தனது சுயநல அரசியலுக்காக வாழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவரது எஜமானார்களே தலைவரை உயர்த்த ஆரம்பித்து விட்டனர், இவர் தன் பங்குக்கு சும்மா இருப்பாரா என்ன? ஒவ்வொரு விடயமாக கையிலெடுக்கிறார், அது கடைசி ஆயுதமாக இருக்கலாம் தனது ஒட்டுமொத்த அரசியல் சரிவை தடுக்க.
-
இலக்கில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால் நிச்சயம் வென்றே தீருவோம்..
வாழ்த்துக்கள்! பெற்றோரின் அன்பான தூண்டுதலும், வழிகாட்டலும், பிள்ளைகளின் பொறுப்புணர்ச்சியும் முன்மாதிரியும் இருந்தால்; பிள்ளைகளால் உயர முடியுமென்பதற்கு இது ஒரு சான்று. அவரின் பொறுப்பான நண்பர்களுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். இதே பொறுப்பு, இலட்சியத்துடன் படித்து முன்னேறி மக்களுக்கும் வீட்டுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன். இணைப்புக்கு நன்றி ஓணாண்டி!
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
சுமந்திரனோடு சேர்ந்து போராடப்போபவர்களுக்கு ஒரு அறிவித்தல்! அவருக்கு வாக்களியுங்கள், உங்கள் காணிகளை மீட்டுத்தருவார். ஆமா, உறுதி இருக்கிறது, உரிமகாரரும் சொந்த நாட்டிலேயே இருக்கிறார்கள் அகதிகளாக. அவர்களின் காணியில் விகாரை அமைத்து சொந்தமாக்கி வைத்திருக்கிறார்கள் பௌத்த மகா சங்கத்தினர். அவர்களுக்கெதிராக சவால் விட மாட்டீர்களா?
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
தந்தை செல்வாவைப்பற்றி சொல்லும் தகுதி இவருக்குண்டா? அவர் சென்ற வழியில் இவர் செல்கின்றாரா? அவரே, தமிழரை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கையளித்தவர். பாராளுமன்றத்தேர்தலில் அவர் குடும்ப உறுப்பினரை களம் இறக்கினாரே, மக்கள் செவி சாய்த்தனரா? அவர் வழியை விட்டு விலகி பலதூரம் சென்று தொலைந்தபின் அவர் வழியை மீண்டும் தேடி கண்டுபிடிக்க, பல நபர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். உந்த பச்சா எல்லாம் வாய்க்காது. உதெல்லாம் தேர்தலுக்கான தந்திரமென மக்கள் நன்கறிவர்.
-
இறுதி யுத்தத்தில் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இராணுவத்தினால் போலீசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இவை உண்மையான தங்கந்தானா என்பது யாருக்குத் தெரியும்? மஹிந்தவின் காலத்தில் ஒருவருக்கு இந்த நகை அளிக்கப்பட்டது, அதை பரிசோதித்த போது அது போலியானது என பத்திரிகைகளில் வெளிவந்தது. இவ்வளவுகாலமும் வெளிவராத நகை இப்போ வெளிவந்ததன் பின்னணி என்ன? போலியானாலும் மக்கள் திரும்பப்போய் கேட்பார்களா வாங்கியவர்கள்? அதை திருப்பி அவர்கள் மேல் பழிபோட மாட்டார்களா? இவ்வளவையும் இழந்த பின்னும் புலிகளை வணங்குபவர்கள், புலிகள் கொள்ளையடித்தார்கள் என்று சொல்வார்களா? சுமந்திரன் தனக்கு முன்னாள் விடுதலைப்புலிகளால் உயிர் அச்சுறுத்தல் உள்ளது எனக்கூறி, இராணுவபாதுகாப்பு கோரியதையே ஆதாரமாக வைத்து பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய முடியாதென சர்வதேசத்துக்கு அறிக்கை விட்ட முன்னைய அரசாங்கம், இதனையும் ஆதாரமாகக் கொண்டு தம் போர்க்குற்றங்களை நிஞாயப்படுத்தும். ஏதோ ஒரு அவசரம் அவர்களை இப்படி ஒரு கதையை உருவாக்க வைத்துள்ளது. சர்வதேசத்தை ஏமாற்றி, போர்க்குற்றங்களை, மக்களை பாதுகாப்பதற்கே போர் புரிந்தோம் அது குற்றமாகாது மக்களே சாட்சி என்று இந்த சம்பவத்தை ஆதாரமாக வைக்கலாம். தேர்தல் வெற்றி. அரசாங்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக யோசிக்கின்றன தம்மை பாதுகாக்க. ஆனால் நம்ம தலைமைகளும், அவர்களோடு சல்லாபிக்க மக்களை பணயம் வைக்கின்றனர். மக்களின் வீட்டு கதவு, யன்னல்களை திருடிக்கொண்டுபோன இராணுவம், நிலத்தை கிண்டி நகை தேடிய இராணுவம், இத்தனைகாலம் தமிழரின் நகைகளை பாதுகாத்து வைத்திருந்ததாம், நம்பிற்றோமில்ல. அவர்கள் எடுத்தது இவ்வளவு தங்கம் அவ்வளவும் இங்குள்ளது என்று நிரூபிப்பயது யார்?
-
மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள்
இலங்கையில்தான் யாழ்ப்பாணம் உள்ளது என நான் இவ்வளவுநாளும் நம்பிக்கொண்டிருந்தேன். ஹிஹி.
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
எதற்கு இப்போ இந்த அனாவசிய கேள்வி? சுமந்திரனின் கபடத்தனத்தை, கையாலாகாத்தன்மையை எடுத்துக்கூறியதாலா? யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவேன், நல்லது செய்தால் பாராட்டத்தயங்க மாட்டேன். ஒருவரை கண்மூடித்தனமாய் நம்பி, சாமரம் வீசி, அவர்களின் தவறுகளை மூடி மறைக்கவும் மாட்டேன்.