Everything posted by satan
-
காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி
அப்பாவி மக்களை கொல்வதற்கென்றே இந்த மருத்துவமனைகளை பயன்படுத்துகிறார்களா? இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் புரிகிறது. கமாஸை காரணமாக வைத்து அந்த நாட்டை அழிப்பது போர் நிறுத்தம் ஒன்று வருவதற்குமுன் அதை செய்து முடித்து கமாஸை அழித்து விட்டோமென விழா எடுப்பார்கள். இத்தனை மக்கள் நாளாந்தம் கொத்துக்கொத்தாக இறக்கிறார்கள், காரணம் நெதன்யாகு எனும் கொலைக்குற்றவாளி. அவனை கைது செய்ய முடியவில்லை, அதன் பின் மக்கள் எல்லாம் இறந்து புதைகுழியானபின் விசாரணையென உலகத்தை ஏமாற்றும், காலத்தை இழுத்தடிக்கும் செயலை அரங்கேற்றுவார்கள். ஒருதடவையில் பாடம் படிக்காதவர்கள் எப்போதுமே படிக்கச மாட்டார்கள். தாக்கப்பட்டவனையே பழி சொல்வார்கள். கோத்தா சொன்னானே, சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர எங்களை வற்புறுத்தியது, நாங்கள் அதற்கு செவிமடுக்காமல் போரை தொடர்ந்து செய்தோம், அதனால் சர்வதேசம் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்குகிறது. இதுதான் ஒரு இனத்தை அழிக்கும் யுக்தி. எப்போ எதிர்த் தரப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தவில்லையோ, அப்போதே போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள். தொடர்ந்து ஒரு தரப்பு அதுவும் வென்ற தரப்பு போரை நடத்துவது என்பது மிஞ்சியுள்ள பொதுமக்களை அழித்து, அவர்களுக்கு சொந்தமான நாட்டை, நிலத்தை கைப்பற்றும், அபகரிக்கும் செயல். அதற்கு வேறு விளக்கம், நாம் செய்தது எதிரியுடனான போர் என, கோழைத்தனமான விளக்கம். அதையும் பார்த்துக்கொண்டே மனிதாபிமான சபைகள் நிறுவனங்கள் இருக்கின்றன. அவைகள் நடந்து கொள்ளும் விதமும் ஒவ்வொரு போரின்போதும் வெளியில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருவேளை இவர்களே போரை உந்தித் தள்ளுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு? இவர்களால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை, பாதுகாப்பு? அவர்கள் முன்னாலேயே இவ்வளவு கொடூரங்களும் நிகழ்கின்றனவே.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
குறைந்தது தனக்குப்பின் கட்சியை கொண்டுசெல்ல ஒருவரை தயார் படுத்தாமல் யமனோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு கடைசிவரை தலைவர் பதவியில் குந்திக்கொண்டிருந்தவர். கட்சியின் கொள்கை ஒழுக்கத்தை கைவிட்டவர். இப்போ; பதவிக்காக அடிபாடு நடக்கிறது. இதில சம்பந்தரை யார்? ஏன் நினைவு கூரவேண்டும் ?சுமந்திரன் எனும் கொள்ளிக்காம்பை செருகியவரே இந்த ராஜ தந்திரிதான் கட்சியை சிதிலமாக்க.
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
அவர் கொண்டுவந்த பார்சல்கள் பிரித்து பங்கிடுவதில் மும்முரமாக இருக்கிறார், கண்டிப்பாக உங்களுக்குரிய பார்சலோடு அழைப்பு வரும்!
-
வவுனியா வடக்கில் மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்
மன்னிக்கவும்! அவர்களுக்கு இப்போ இவற்றுக்கு நேரமில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். உட்கட்சிப்பூசல், குழி பறித்தல், உறுப்பினர்களை கட்சியிலிருந்து விரட்டியடித்தல் என்பவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
-
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை
அதே! இனியாவது சொல்வதை செய்வார்களா? இந்தப்போக்கு நிலைத்தால்; எதிர்காலத்தில் இவர்களின் பொருட்களை வாங்குவோருமில்லை, இவர்கள் உற்பத்திசெய்யும் தேவையுமில்லை.
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
சிறியர் தனக்கு மட்டுமா கொண்டுவந்தவர்? பக்கத்துவீட்டுக்கார(ரி)ர், நண்பர்கள் இப்படி ஏகப்பட்ட கூட்டம் ஐயாவைசுற்றி போகப்போகிறாரென கேள்விப்பட்டதுமே. எத்தனைபேர் பட்டியல் கொடுத்திருப்பார்கள்? எத்தனைபேரை இரகசியமாக மனதுக்குள் நினைத்து வாங்கியிருப்பார். அவர் கொடுத்து வைத்தவர், வயிறு எரியுது எனக்கு.
-
விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை - அருண் சித்தார்த்
இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தின் காலத்திலேயே அடையாளம் காணப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு சாட்சிகளால், குற்றவாளிகளால் ஒப்புக்கொண்டு, அடையாளகாட்டி, அகழப்பட்டு,உறுதிப்படுத்தப்பட்டு பெயர் விவரங்கள் கொடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு மேலும் கிளறினால் தங்கள் கொலைகள் வெளியே வருமெனப்பயந்து அகழ்தல், பொறுப்புக்கூறல் கைவிடப்பட்டு இப்போ, மீண்டும் தொடர்கிறது. இவை யாவும் சம்பந்தப்பட்ட காலத்தில் தொடங்கி தொடர்கின்றன, மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. அவைக்கு சாட்சியாக விசாரணைக்கோப்புகள் இன்னும் உள்ளன. ஆனால் அருண் என்பவரோ, அவரின் மனைவி என காண்பிக்கப்படுபவரோ கூறப்படும் காலத்தில், அங்கே பிரசன்னமாகி இருந்தது, இந்திய இலங்கை இராணுவமும் இவர் போன்ற ஒட்டு ஆயுதக்குழுக்களும். நாலாயிரம் பேர் என்கிறார், அவர்களின் பெயர் விபரங்கிகள் வெளிவரவில்லை, ஆதாரங்கள் இல்லை, சாட்சிகளில்லை, முறைபாடுகளில்லை, விசாரணையேதும் நடைபெறவில்லை, காணாமற் போனவர்களை தேடி எடுக்கப்படும் போராட்டங்களில் கூட இவர்கள் யாரும் பங்குபற்றியதாக தகவலேதுமில்லை. சம்பவம் நடந்ததாகஇவர்கள் கூறும் காலப்பகுதியில் புலிகள் அதிகாரத்திலில்லை, அவர்களே மறைந்து வாழ்ந்த, வேட்டைடையாடப்படும் காலத்தில் அவர்கள் பிரபல்யமான இடத்தில், பகிரங்கமாக அலுவலகம் நடத்தினார்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? அந்தக்காலத்தில் யார் பிரசன்னமாகியிருந்தனர் என்று தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இவர்களின் வயதும் இருக்கவில்லை. யாரோ சொன்னார்கள் என்பது இவரது தர்க்கம். அந்த யாரோ என்பது யார்? அவர் ஏதும் ஒட்டுக்குழுவை சார்ந்து இந்தக்கொலைகளை நடத்தி தப்பிக்கும் நோக்கில் இவர்களை வழிநடாத்துகிறாரா? எந்த ஆதாரமுமில்லாமல் நடைமுறைகளுமில்லாமல் இப்போ திடுதிப்பென்று வந்து ஒரு குற்றச்சாட்டை வைப்பது அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு காரணமே. இவரை கஷ்ரப்பட்டு படிக்க வைத்த தந்தையாரை தலைகுனியச்செய்யும் செயல். காரணம் சொல்லும் பொய்யை கூட பொருந்தச்சொல்லவே தெரியவில்லை இவரால். தன்னை சமுதாயம் தள்ளி வைத்தது என்பது இவரது கற்பனை. இவரது வக்கிரப்பேச்சு, செயலே அதற்கான காரணம். சம்பாதிக்க அப்பப்போ ஏதோ ஒன்றை தானே தேடிக்கொண்டிருக்கிறார். வயிற்றுக்கு வேணுமே! பாவம் ஏதோ கற்பனையில் வாழ்ந்து ஏமாற்றம் தாங்காமல் இப்படி ஒரு சம்பவத்திற்கு காத்திருந்து,பின்னால் ஓடிச்சென்று பிழைப்பு நடத்துகிறார். அதை உணரும் தன்மை கூட இல்லாத ஜென்மம் இது!
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
நீங்கள் சொல்லாமலே எனக்குத்தெரியும் சிறியர், நீங்கள் ஒரு வெள்ளைபேப்பர். கஸ்ரம்சிலை உங்களை சோதிக்க வேண்டிய தேவை வைக்க மாட்டீர்களென்பது. அதிருக்க; பக்கத்து வீட்டுக்காரிக்கு பிடித்தமானது எதையாவது வீடுக்குத்தெரியாமல் எடுத்து வரவில்லையே? அங்கு பிடிபடாமல் முக்கியமான சோதனைச்சாவடியில் சிக்கி முழிக்கப்போகிறீர்களோ என்கிற பயத்தால் கேட்டேன்! பயணக்களையில் மறந்து கோட்டை விட்டிட்டு மாட்டுப்படாதீர்கள். உங்கள்மேலுள்ள அக்கறையினால் சொல்கிறேன்.
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
நல்ல பாம்பாக இருக்குமோ? அசையாமல் இருந்திருக்குது. எப்படி இந்த மலைப்பாம்புகளை உள்ளாடைக்குள் வைத்துக்கொண்டு இயல்பாக நடந்திருக்க முடியும்? ஒருவேளை பயணப்பெட்டியில் உள்ளாடைக்குள் சுற்றி மறைத்து வைத்திருந்திருந்திருப்பாரோ? வாசகர்களை குழப்பியடிக்கிற மாதிரியான செய்திகள்! நீங்கள் ஒன்றையும் மறைத்து கொண்டுவரவில்லைத்த்தானே சிறியர்? எனக்குத்தெரியும் நீங்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடியவரல்ல.
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
நல்லவேளை ஸ்கான் எடுப்பதற்காக அவர் பாராளுமன்றம் போகவில்லை. ஆசுபத்திரியில, சிறையிலே இருக்கவேண்டிய கேசுகளெல்லாம் இப்போ பாராளுமன்றத்தில நிறைஞ்சு இருக்கு.
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
நம்ம அரசியல்வாதிகள்? அவர்களின் வேலை அதுவா? மக்களை சந்திக்கவே மறுக்கின்றனர், மக்களோடு சேர்ந்து நின்று அவர்களுக்காக பேச வெட்கப்படுகின்றனர். அப்படியெனில் தேர்தல் காலங்களில் முயற்சிக்கலாம். இப்போ; தேர்தல் காலங்களிலும் மக்களை சந்திக்க அவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. மக்களுக்கு வேறு தெரிவு இல்லை எனவே தமக்குத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டுமென்கிற தெளிவு அவர்களிடத்தில்.
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
குடும்பத்தில் ஏதோ மங்கள காரியம் நிகழப்போகிறதென நண்பர் கோடிட்டு காட்டியுள்ளார்.
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
அட, இதுதான் காரணமோ? நானும் என்னவோ ஏதோ என்று கலங்கிப்போனேன். பலதடைவை யோசித்ததுண்டு ஆனால் விசாரிக்க தோன்றவில்லை. காணாமல் போனோர் பக்கத்தில் கேட்டிருக்கலாம். நலமாய் வந்து சேர்ந்தது சந்தோசமே. இனி பயணக்கட்டுரை எழுதி அசத்துங்கோ களத்தை. இல்லையில்லை உங்கள் பதிவை பார்த்து பலபேர் பயண ஆயத்தம் செய்வர் என்பதற்காக சொல்கிறேன், நம்ம அரசியல் வாதிகளைப்பற்றியும் அரசல் புரசலாக எழுதுங்கோ. சாதாரண முருங்கைக்காய் கறியே போதுமானது எனது நாவுக்கு. நான் யாருக்கும் பயப்படுவதில்லை, காரணம் தவறு செய்யவில்லை. யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன், அதே ஆள் தவறு செய்தால் விமர்சிப்பேன்!
-
"காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்" முன்னாள் பாதுகாப்பு ஊழியர் பிபிசிக்கு தகவல்
ரொம்ப ரொம்ப அவமானம்! இந்த நிலைகளே உலகில் நலிந்தவர்கள் தாக்கப்படவும், குரல்வளைகள் நசுக்கப்படவும் காரணம். மனித நேயமே இல்லாத மிருகங்கள் மனித நேயப்பணியில். இவர்கள் இப்படியான சூழ்நிலைகளை வளர்த்து பிழைப்பு நடத்துகின்றனர்.
-
'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
ஒரு உடையை நிலத்தை வாங்கும்போது தெரிவுசெய்யும்போது எத்தனை யோசிக்கிறோம் விசாரிக்கிறோம் ஆனால் பெண்ணை கொடுக்கும் போது அவ்வளவு சிரத்தை எடுப்பதில்லை பெரும்பாலும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் காரணம் யாராவது காது குத்தி குழப்பிப்போடுவார்கள் என்கிற பயம் இது இருபாலாருக்கும் பொருந்தும். தெரிந்தவர்கள், உறவினர், எதிரிகள், அண்டை வீட்டார், தொழில் புரியுமிடம் என பலரிடமும் விசாரிக்க வேண்டும். இதற்குத்தான் நம்மவர் சொல்வர் "ஒரு கலியாணம் செய்து வைப்பதென்றால் ஏழு செருப்பு தேயவேண்டுமென்று." பெண் வீட்டிலிருந்து பெறும் வரதட்ஷணையில் வாழ நினைப்பதும், தொடர்ந்து வாங்கி வாழலாம் என நினைப்பதும் தவறு. இதுவே இன்றைய ஆண் பிள்ளைகள், அவர்களைப்பெற்றவர்களின் நினைப்பு. பணமும் போய் பிள்ளையையும் இழந்து தவிக்கிறார்கள்.
-
யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!
சேர்ந்து குடித்தவர்கள், விசாரணை என்றவுடன் தலைமறைவு. தங்கள் பெயர் வெளிவரக்கூடாது என்றா? விசாரணையை எதிர்கொள்ள பயமா? "நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியவர்." என்றவுடனேயே சொல்லாமலே நண்பர்கள் யார் என்று தெரிந்துவிடும்.
-
துணுக்காயில் இருந்தது இந்திய இலங்கை படைமுகாமே! மக்களின் வாக்குமூலம்
செம்மணி அகழ்வை திசைதிருப்பி, அங்கே இராணுவ உடல்கள் என ஆதாரப்படுத்த சில அடையாளங்களை புதைப்பதற்கும் அகழ்வை நிறுத்துவதற்கும் செய்யப்படும் தந்திரோபாயமாக இருக்கலாம். அங்கே ஒரு மர்மம் வாகனம் நோட்டமிடுவதாக செய்தி வருகிறது. துணுக்காயில் சடலங்கள் புதைக்கப்படிருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை, இந்திய, மற்றும் துணை ஆயுதக்குழுக்களே பொறுப்பு. அவர்களை விசாரியுங்கள். தனது தந்தை என்ன தொழில் செய்து தன்னை படிக்க வைத்தார் என்று சொல்லும் அருண் சித்தார்த், தான் படித்தாரா என்று சொல்லவில்லை. பாவம் அந்த தந்தை! தன்னைப்போல் கஷ்ரப்படாமல் மகன் படித்து முன்னேற வேண்டுமென்று நினைத்திருப்பார், ஆனால் நடந்தது, தனது சமூகத்தாலேயே வெறுத்தொதுக்கும் வேலையை செய்து அந்த தந்தையின் கனவை சிதறடித்துள்ளார். தனது தந்தையையும் சமூகத்தையும் கேவலப்படுத்துகிறார்.
-
'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
ம் ....வரதட்ஷனை இல்லாதவர்களை யாரும் பெண் பார்ப்பதில்லை, காதலிப்பதில்லை. தன் பெண் வாழவேண்டுமென்பதற்காகவே எத்தனையோ பெற்றோர் கடன் வாங்கி கலியாணத்தை நடத்தி பின் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள். வரதட்ஷனை கொடுக்க மாட்டேன் என அடம்பிடிப்பவர்கள் வாழ்நாள் எல்லாம் வாழாக்குமரி எனும் பட்டம். தன் பெண்ணுக்கு திருமணமாகிவிட வேண்டுமென பல லட்ஷங்களை செலவிடும் பெற்றோர் மாப்பிள்ளையின் தொழில், குடும்ப பின்னணி ஆராய்வதில்லை, பின் பெண் திரும்பி பிறந்த வீட்டுக்கு வந்தால் குடும்ப கௌரவம் போய் விடும், ஏனைய பிள்ளைகளுக்கு வரன் வராமல் போய்விடுமென சமாதானம் செய்து புகுந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள், அல்லது தமது பெற்றோர் பட்ட கஷ்ரம், படும் கஸ்ரம் கண்டு மேலும் கஷ்ரப்படுத்தாமல் தவறான முடிவை எடுக்கிறார்கள். இதுவே ஆண் வீட்டடாருக்கு வசதியாக போய்விடுகிறது. கிடாய் வளர்ப்பது போல் சீதன சந்தையில் விற்று விட தீனி போட்டு வளர்க்கிறார்கள், நல்ல பண்பை, தன் மானத்தை சொல்லிக்கொடுப்பதில்லை. காதலித்து தந்தையாகிய பின்னும் சீதனம் என்றவுடன் வாயைப்பிளந்துகொண்டு இன்னொரு கலியாணத்திற்கு சம்மதிக்கிறார்கள். நம்பிய பெண்ணை கைவிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். இதுவே பெண் செய்தால் ஏற்றுக்கொள்வதில்லை. பெற்றோர் பெண்குழந்தைகளை வெறுப்பதற்கும் சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதற்கும், சீதன தொகை உயர்வுக்கும் காரணமாகிறது. அதிக சீதனம் கொடுப்பதோடு வாழ்நாள் பிரச்சனைகளையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்கிறார்கள் பின் வேறொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் காரணம், சீதனச்சந்தையில் அதிக விலைகொடுத்து வாங்கிவிட்டார்கள். சீதனம் எனும் பிரச்சனையால் கரையேறாக் குமரிகளும் தன்மானம் கெட்ட கழுதைகளும் பெரும் சுமையாக உள்ளது. படித்த பெண்ணுக்கு அதிக வரதட்சனை. காரணம் பெண்ணை விட படித்த, மேலான வேலை பார்க்கும் மாப்பிளை என்பதால். படித்த மேலான வேலை பார்க்கும் ஆணுக்கு ஒரு பெண்ணை காப்பாற்ற முடியாதா? அப்படிப்பட்டவரை நம்பி எதற்கு பெண்ணை ஒப்படைகிறார்கள். இது சீதனமுமல்ல அந்தப்பெண்ணை பராமரிப்பதற்கு அளிக்கப்படும் தொகை, பிச்சை. அந்தப்பெண், பிள்ளை பெற மாட்டேன் என்றால் சம்மதிப்பார்களா? அல்லது அதற்கு பணம் கொடுப்பார்களா மாப்பிள்ளை வீட்டார்? சீதனத்தையும் கொடுத்து அந்த வீட்டுக்கு சம்பளமில்லாமல் மாடாய் உழைக்கிறாள் பெண். அதில் பெண் குழந்தை பிறந்தால் அது வேறு அவள்தான் தாக்கப்படுகிறாள். குழந்தை பெறாவிட்டாலும் வசை பாடுகிறார்கள், வேறு கலியாணம் செய்கிறார்கள். சீதனம் கொடுப்பது, பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண்ணை வாங்குகிறார்கள். அவளுக்கும் மனதுண்டு, ஆசை, விருப்பு வெறுப்பு உண்டு என்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆணிற்த் தான் குறைபாடு என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.
-
பயந்தாங்கொள்ளி
மிருக வளர்ப்பில் கொஞ்சம் அனுபவம் தெரிகிறது!
-
அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கிருஷாந்தியின் தாயை குறிப்பிட்டிருப்பாரோ?
-
பயந்தாங்கொள்ளி
எல்லாம் வீட்டுக்காரி இந்தப்பக்கம் வரமாட்டார், படிக்கமாட்டார் என்கிற துணிவுதான்.
-
துணுக்காயில் இருந்தது இந்திய இலங்கை படைமுகாமே! மக்களின் வாக்குமூலம்
அங்கே, இந்திய, இலங்கை இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களும் இயங்கி இருந்தன. இவ்வளவு காலமாக தேடாத தந்தையை, இப்போ தனியாக தேடுகிறாராம். சுன்னாகத்தில் அலுவலகத்தில் சலீம் என்பவரை அன்று சென்று விசாரித்தனராம். அந்த நேரம் சுன்னாகத்தில் அலுவலகம் நடத்திய துணை ஆயுதக்குழு எது? சலீம் என்பவர் யார்? என்பதை விசாரித்தால் உண்மை வெளிவரும். செம்மணி புதைகுழி விடயம் வெளிவரும் வரை இந்தப்பெண் தனது தந்தையை தேடாமல், முறையிடாமல், ஏனையோரைபோல் போராடாமல் காத்திருந்த மர்மம் என்ன?
-
'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?
தொழில் இல்லாதவர்களுக்கும் பெண்ணிடம் சன்மானம் கேட்கும் தன்மானமில்லா ஆண்களுக்கும் ஏன் பெண்ணை கொடுக்கிறார்கள் ?
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
அவ்வளவு தூரம் காரை ஓட்டி வந்த பெண், தானே வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றிருக்கலாம், அல்லது தாயை கோவில் வாசலில் இறக்கிவிட்டு தான் சென்று நிறுத்தியிருக்கலாம். ஒரு உயிர் போய்விட்டது, இனி ஒரு உயிர் போகாமல் பாதுகாக்கலாமேயொழிய போன உயிரை திரும்பப்பெற முடியாது. கார் ஓட்டத்தெரியாதவர் சாவியை வாங்கியிருக்கக்கூடாது. வீட்டிலிருந்து பத்திரமாய் கொண்டுவந்த நகையை இவ்வாறு அசமந்தமாய் விட்டிருக்கலாமா?
-
பயந்தாங்கொள்ளி
ஒரு பயந்தாங்கொள்ளியாற்தான் மற்ற பயந்தாங்கொள்ளியை இனங்காண முடியும். நசிந்து தொங்கும் பூனைக்குட்டியை கண்டவுடனேயே ஓடிய ஆள் எப்படியான ஆள்? தூக்கிவிடவே பயம். அதுக்கு அந்தபெண் பூனையே பரவாயில்லை, அங்கேயே துணிந்து குட்டி போட்டு பாதுகாத்திருக்கிறது. அதற்குள் பயந்தாங் கொள்ளிகுட்டியெது என்கிற ஆராய்ச்சி வேறு. நல்லவேளை! இவர் கடுவன் பூனையின் கண்ணில் படவில்லை.