Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. இதுவே, தன் மகள் மாப்பிள்ளையின் காரில் அருகில் இருந்து பயணம் செய்திருந்தால், எப்படி மகிழ்ந்திருந்திருப்பார் இந்த மாமியார்!
  2. எதுக்கு? இராணுவத்தளம் அமைக்க இடம் பாக்கினமோ?
  3. இங்கு இணைக்கப்படும் இணைப்புகளை சொடுக்கினாலும் பார்க்க முடியவில்லை, அது ஏன்?
  4. வேலிக்கு வைச்ச முள்ளு, ஒருநாள் வைத்தவரின் காலையே பதம் பார்க்கும். அப்போ தெரியும் அதன் வலி.
  5. நாமல் வைக்கும் கோரிக்கையைப்பாத்தால் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாம். போதைப்பொருள் காரரை கைது செய்வதை விடுத்து, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்கிறார். இஷாராவை கைது செய்ய ஒரு வருடம் எடுத்திருக்கிறது இந்த அரசாங்கத்திற்கு என்று வேறு விமர்சிக்கிறார். இவ்வளவும் செய்த அரசாங்கத்திற்கு இந்தப்பெண்ணின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது பெரிய விடயமா? அல்லது அது தெரியாமல்த்தான் நேபாளம் வரை சென்று கைது செய்தார்களா என்ன? இவருடைய நூறு கோடி சொத்துக்கள் எங்கிருந்து கிடைத்தன, நூறு கோடி மட்டுந்தானா என்பதையும் வெளிக்கொண்டு வரத்தான் போகிறார்கள். அதை விட, வெளிநாட்டில் பதுங்கியுள்ள சொத்துக்களும் அரச உடமையாகத்தான் போகிறது. இவர்களின் கோரமுகத்தை மக்களிடம் இருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை இழுத்து மறைக்கப்பார்கிறார்கள். இவர்களின் சுய ரூபம் வெளிப்படுத்தப்படும்போது என்ன நடக்கபோகிறதென பாப்போம். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பியோட முடியாது. போதைப்பொருள் தாதாக்கள் என்றால், சர்வதேசமே பிடித்து அனுப்பிவிடும். பல நாடுகளின், துரோகியின் உதவியில்லாமல் புலிகளை முறியடித்திருக்க முடியாது என்று சொன்னவர்கள், பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது என்று சர்வதேசத்துக்கு பயிற்சியளித்தார்கள். போதைப்பொருள் மாபியாக்களை எப்படி கைது செய்து வலையமைப்பை அழிப்பது என்று பயிற்சி பெற சர்வதேசமே அனுராவை தேடி வரப்போகிறது. அதுமட்டுமல்ல இங்கையின் எந்த அரசாங்கமும் செய்யாத, செய்ய முயற்சிக்காத அதிரடியை செய்து, நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களை உடனடியாக அடையாளம் கண்டு பிடித்தது பெரும் சாதனை. அதுவும் பதவியேற்று ஒருவருடத்திற்கு முன்.
  6. ஜெனீவாவின் இயலாமை. ஒரு இனவழிப்பை செய்துபோட்டு, இலங்கையில் இனவழிப்பே நடைபெறவில்லை, நடந்ததெல்லாம் பயங்கரவாதம், மோதல் என்று காட்ட சிங்களம் தலையாலை ஓடி காலால நடக்குது. ஆனால் அழிக்கப்பட்ட நம்மினத்தின் பிரதிநிதிகள், ஜெனிவாவில் போய் அதை நிரூபிக்க முயற்சித்ததுமில்லை, மாறாக வீட்டிலிருந்து கொண்டு நடந்தது ஆயுதப்போராட்டம், அதை நாம் ஆதரிக்கவில்லை, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என நிரூபிக்க ஆதாரமில்லை என வாதாடுகிறார்கள். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வேண்டிக்கொடுப்பதும் இரகசிய சந்திப்புகளை நடத்துவதும் செய்து கொண்டு எப்படி நமக்கு நிஞாயம் கிடைக்குமென எதிர்பார்க்க முடியும்? எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனென்ன?
  7. இஷாரா செவ்வந்தி ஒன்றும் நேற்று இயங்கத்தொடங்கியவரல்லர். அவரது குழு, தலைவர்கள், இயக்கியவர்கள், இயங்கியவர்களென உங்கள் குடும்ப ஆட்சியிலிருந்தே உள்நாட்டுக்குள் இயங்குகிறார்கள். ஆனால் அவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ, பயங்கரவாதிகளை அழித்தோம் என மார்தட்டும் உங்களால் முடியவில்லையே. காரணம் என்ன? நீங்கள் சாதித்தவைகள் இவையா? அன்றி பயங்கரவாதத்தை நாங்கள் அழித்தோம் என்று பெருமைப்படுவது இன்னொருவரின் சாதனையை உங்களது ஆக்குவதா? யாரவது நாட்டுக்கு நல்லது செய்தால், சாதித்தால் உங்களுக்கு பொறுக்காது, அதை உங்களது ஆக்குவதற்கு எது வேண்டுமானாலும் செய்து போலிப் பெருமை தேடுவீர்கள். நீங்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தீர்கள் இத்தனை ஆண்டுகளாய் ஆட்சி செய்தபோது? அதன் பயன்தான் இப்போ வெளிவருகிறதே. இதுவும் மக்களுக்கான சேவை என்பதை புரிந்து கொள்ளத்தெரியாதவருக்கு ஜனாதிபதி ஆசை வேறு. ஏன் இவர் சும்மா வாயை கொடுத்து தன்னை காட்டிக்கொடுத்து மாட்டிக்கொள்கிறார்?
  8. அதில் ராஜபக்ச குடுப்பதில் எத்தனை பேருக்கு தொடர்பு? யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! சுமந்திரனின் விசிறிகள் கட்டியம் சொல்கின்றனர்.
  9. சந்தேகம் என்ன? இந்த மாபியாக்கள் கைது செய்யப்படும்போது, எதிர்கால கனவு ஜனாதிபதி பதறித்துடித்து, இதெல்லாம் தேவையில்லை, அபிவிருத்தி தான் நாட்டுக்கு தேவை என்று குதித்தாரே, இதிலிருந்து தெரியவில்லையா? சிலர் கொலை செய்யப்பட்டனரே, அதிலிருந்து தெரியவில்லையா முதலாளி முதலைகள் யாரென்று? இவர்களின் ஊழலை விசாரிக்கத் தொடங்கியிருந்தால் இவ்வளவு வெற்றி கிடைத்திருக்காது. இப்போ, தானாகவே சிக்கப்போகிறார்கள். அதை தவிர்ப்பதற்காக ஏழை மக்களை ஏமாற்றி, வீட்டுக்கு அழைத்து படம் காட்டி, தங்கள் குற்றங்களை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். இந்த மக்கள் தானே இவர்களை வேரோடு அரசியலில் இருந்து விரட்டியவர்கள்? இவர்களை தேர்தலில் வீட்டிற்கு அனுப்பியவர்களும் இந்த மக்கள் தானே? சிறை செல்வதென்று முடிவாகிவிட்டது, எப்படி சிறையில் சாதாரண சிறைக்கைதிகள் போல வாழ்வதற்கு தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு கொலையை மறைத்து, தப்ப முயற்சி பண்ணி இப்போ பல கொலைகள், கொள்ளைகள், ஊழல்கள் பெருகி இவர்கள் வெளியே வரமுடியாதளவுக்கு தண்டனை காலம் இவர்களது வாழுங்காலத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல லட்ஷம் கொலைகளை, ஊழல்களை செய்தவர்களுக்கு மரணதண்டனையே பொருத்தமானது. பரம்பரையே உள்ளே போகப்போகிறது. குடும்பத்தில் ஒருவனாவது நல்லவன்? பெற்றவர்களைபோலவே பிள்ளைகளும் இருப்பார்கள். கசாப்புக்கடைக்காரருக்கு அரசியல் வந்தால், அரசியலும் கசாப்புக்கடையாய் மாற்றி விடுவார்கள், விட்டார்கள் முட்டாள்கள்.
  10. விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்டபின், தமிழ்ப்பிரதேசங்களை ஆக்கிரமித்த இராணுவ, போலீஸ் புலனாய்வுப் பிரிவின் நேரடி, மறைமுக தலையீட்டின் வழிநடத்தலில் செயற்பட்ட ஆவா குழுவாக இருக்கலாமென சந்தேகம் எனது. தெற்கில் பாதாள, போதைக் குழு. வடக்கில் ஆவா குழு. ஆவா என்கிற பெயர் வடக்கில் அறிமுகமானது, இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னே. வடக்கில் தமிழர் தலைமை, அதற்கு பெயர் மட்டும் ஏன் "ஆவா." முன்னைய அரசாங்கம் இராணுவ, போலீசாரை பயன்படுத்தி. தமிழரின் கல்வி, கலாச்சாரம், சுதந்திரம் போன்றவற்றை நிரந்தரமாக அழிக்க, சமூக விரோத செயல்களை ஊக்குவிக்க, திட்டமிட்டு புகுத்தப்பட்ட போதை, வாள்வெட்டு. இதில் முன்னைய அரசாங்கங்களுக்கு பாரிய பங்கு உண்டு. சட்டம், நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களை அதை அழிப்பதற்கும், தங்களை செல்வாக்கை செழிப்பாக்குவதற்கும், பதவிகளை தக்க வைப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டார்கள். அனுரா அரசால் இதை செய்ய முடிந்ததென்றால்; ஏன் முன்னைய அரசாங்கங்களால் இதை செய்ய வேண்டாம், நடவடிக்கை ஏதும் செய்யப்படவில்லை? இப்போ நாமல் என்ன கருத்து வெளியிடப்போகிறார்? கோத்தா முந்திக்கொண்டு, சில போதைக்கும்பல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, தனக்கு அவர்களுடன் தொடர்பில்லை என கருத்து வெளியிட்டிருக்கிறார். அது ஏன்? சிக்குவாரா முன்னாள் சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர், நாமலின் நண்பர்?
  11. அது சரி, இதை வெளியிட எதற்காக இவ்வளவு காலம் காத்திருந்தார் இவர்? மஹிந்தவோ, புலிகளை அழித்தது தான் என்று பெருமையடிக்கிறார், கோத்தாவோ, போரை நிறுத்துமாறு சர்வதேசம் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது, இருப்பினும் அதற்கு அடிபணியாது நாமே புலிகளை முற்றாக அழித்து போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்கிறார். அதை விட, தான் நம் தலைவரை நாயைப்போல் இழுத்து வந்ததாக வேறு கூறுகிறார். என் தலைவன் நிழலைக்கூட அவர் உயிருடன் இருக்கும்வரை நெருங்க முடியவில்லை இவர்களால். இன்று இல்லாவிடினும் என்றோ ஒருநாள் இவர்கள் வாயாலேயே அது வெளிவரும். மிஸ்ரர் பொன்சேகா! நீங்கள் இன்னும் சொல்லுங்கள், நிறைய சொல்லுங்கள், நாங்கள் கேட்ப்பதற்கு தயாராகவே இருக்கிறோம். உங்கள் கருத்துக்களுக்கு அவர்களும் பதில் சொல்லத்தானே போகிறார்கள். மக்கள் தம்மை மறந்துவிடக்கூடாது, அதே நேரம் தமது ஊழல்களை மறைக்கவும் கனவிலும் புலிகளை நானே அழித்தேனென புலம்புகிறார். பிரபாகரனை அழித்தேன் என்று யாரும் துணிந்து கூறவில்லை, கூறவும் முடியாது.
  12. ஏங்கோ அவ்வளவு தூரம் போறீங்கோ. நம் இனம் விழுந்து, எழுந்து நடமாட துடித்திருக்கும்போது, அந்த இனத்தின் பிரதிநிதி என்று பினாத்திக்கொண்டு திரிபவர், அவர்களை அழித்தவர்களோடு கிறிக்கெற் விளையாடினார். கேட்ட போது, அவர்களோடுதான் பேச்சு நடத்த வேண்டும் ஆகவே நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாடினேன் என்று விளக்கம் கொடுத்தார். நமது விடுதலைக்காய் போராடி இறந்த நம் வீரருக்கு வணக்கம் செலுத்த முடியவில்லை, இவரோ பொப்பிப்பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போய் நம் இனத்தை அழித்த இராணுவத்திற்கு தம் மரியாதையை காட்டினார். சிங்கள மக்களோடு வாழ்வது தனது அதிஷ்டம் என்று வேறு பெருமை பாராட்டினார். ஆனால் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் மகன்கள் சிங்கள பெண்களை மணந்ததால், சிங்களச்சம்பந்தி என்று வாய்க்கு வாய் தூற்றிக்கொண்டு திரிந்தார். தனது மகன் சிங்களப்பெண்ணை மணந்து, தான் சிங்களசம்பந்தியான போது அமைதியாக இருந்துவிட்டார். எங்கள் வீட்டில் நடந்தால் போற்றுவோம், அடுத்தவர் வீட்டில் நடந்தால் தூற்றி ஏளனம் செய்வோம்.
  13. எதற்கு, கடத்துபவர்கள் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காகவா? இத்தனை சட்ட விரோத செயல்களுக்கும் காரணமானவர்களே போலீசார்தானே! போதைப்பொருளுடன் போலீசார் கைது, கொலையில் போலீசார் கைது, ஊழல், கொள்ளை, கடத்தல் போன்றவற்றுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு. இவர்கள் எப்படி அவற்றை தடுக்க முடியும்? நாமாக நம் வளங்களை பாதுகாக்காவிடின் இவர்கள் அழிக்கவென்றே அனுப்பப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா? இவற்றை ஊக்குவிப்பதன்மூலமே அவர்கள் மேலதிக வருமானம் ஈட்டுகிறார்கள்.
  14. காதலனா, கள்வனா அவன்? இப்போவெல்லாம் எல்லாவற்றிலும் புதுமை! கலியாணம் செய்தாலும் வரதட்ஷணை என்கிற பெயரில் கொள்ளையிடுகிறார்கள். ஆண்கள் மட்டுமா? இப்போ, பெண்கள் கலியாணம் என்கிற பெயரில் செய்துவிட்டு வரதட்ஷணை கொடுமை, வீட்டு வன்முறை என்கிற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். காதலும் வேண்டாம், கலியாணமும் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் சில இளையவர்கள்.
  15. அவர் அரசியலுக்கு வந்ததே தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கே. நாளொரு சிக்கலில் மாட்டுப்படுவதும், வலிய பிரச்சனைகளை வாங்கி வாயை கொடுப்பதும், அவருக்கு வக்காலத்து கொடுப்பவர்களை புகழுவதும் இவரது பிழைப்பு. இவரை நம்பி தமிழர் இல்லை. அவருக்கே தான் ஏன் பாராளுமன்றம் போனேன் எனத் தெரியவில்லை. தலைவரின் பெயரை உச்சரித்தால் வாக்குகள் விழுமென நினைத்து தேவையில்லாமல் தலைவரின் பெயரை இழுத்து தனது தவறுகளை, முட்டாள்தனத்தை மறைக்கப்பார்க்கிறார். இவரைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. அவரின் கோமாளித்தனத்தை ரசிப்போம். வெகுவிரைவில் எல்லோராலும் கைகழுவி விடப்படுவார்.
  16. இன்றுதான் உங்களுக்கு இந்த உண்மை புரிந்ததா? அல்லது புரியாததுபோல் இருந்தீர்களா? இணைந்திருந்த வடகிழக்கை நீதிமன்றம் மூலம் பிரித்தது உங்கள் கட்சிதானே. சமாதான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்போது ஆர்ப்பாட்டங்கள் செய்ததும் உங்கள் கட்சிதானே. சரி, நடந்தது நடந்து கடந்து போயிற்று. இனியாவது நீதியோடு, இதய சுத்தியோடு நசுக்கப்பட்ட இனத்திற்கு தீர்வை வழங்குங்கள். உங்கள் கட்சியில் அதிதீவிர சிந்தனையுடையவர் நீங்கள். இனியாவது உண்மை வரலாற்றை ஏற்று, திரிபுபடுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை வழங்குங்கள். நீங்களும் தவறினால் இலங்கை கடனால் மூழ்கி மீள முடியாத நிலைக்கு செல்லும், அதற்கு நீங்களும் காரணமாவீர்கள். நீதியுடன் செயற்பட்டால்; சிங்கப்பூருக்கு ஒரு லீகுவானி போல, இலங்கையில் நீங்கள் போற்றப்படுவீர்கள். உங்களால் நாடு எழுச்சி பெறும்.
  17. சொந்தம், இறையாண்மை என்று சொல்லிக்கொண்டு, சர்வதேசத்தை கூட்டி வைத்து நீங்கள் ஆடிய ஊழிக்கூத்து மறந்து, மறைத்து பேசுகிறார். அலுவகங்களை திறப்பதாலோ, ஆணையகங்களை நிறுவுவதாலோ, உறுதிப்பாடுகளை அளிப்பதாலோ, ஆளையாள் மாறி மாறி குற்றஞ்சாட்டுவதாலோ நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. ஏதாவது ஒரு அரசாங்கம், எதிர்க்கட்சி பொறுப்பு எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. எல்லோரும் பங்காளிகளாகவே இருந்து ஒரு இனத்தை போட்டிப்போட்டு அழித்தீர்கள். நீங்கள் அவர்களை தடுத்தீர்கள், அவர்கள் உங்களை தடுப்பார்கள். நல்லிணக்கத்தை இலங்கையில் உங்கள் யாராலும் ஏற்படுத்த முடியாது, வீர வசனம் மட்டுமே பேச முடியும். அப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த நினைத்தால் அது யாராய் இருந்தாலென்ன நிறைவேற்ற அனுமதி கொடுக்க வேண்டும். நாம் செய்வோம் என கூறி பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன, இனியா நிறைவேற்ற போகிறீர்கள்? போரின் கதா நாயகர்களை, கொலைகாரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படையுங்கள். அவர்களே சொல்கிறார்கள்; எங்களுக்கு மின்சாரக்கதிரையே தண்டனை என்று. இதைவிட வேறு ஆதாரம் தேவையென்ன? அந்த நடவடிக்கைகள் என்னவென்று விளக்கினால்; புரிந்து கொள்ள முடியும். முந்தைய ஆட்சியாளர்களும் இவ்வாறு சுற்றியவர்கள் தான். ஆனால் இன்றும் ஒரு இம்மியளவு கூட நகரவில்லை, நகரப்போவதுமில்லை. இந்த ஏமாற்றும் தந்திரம், பிடிவாதம் நாட்டையும் இனத்தையும் அழிப்பதோடு சாபமும் சூழும்.
  18. ஒரு நீதிமன்றம் அளித்த தண்டனையை, இன்னொரு நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி, அந்த நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்குகிறது. எதற்கு இத்தனை நீதிமன்றங்கள்? குற்றவாளிகள் துணிந்து தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார்கள். இந்த நீதிமன்றத்தில் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் விடுதலையாகிவிடலாமென்கிற துணிவு. இவர் நாளைக்கே பயமில்லாமல் இன்னும் எத்தனை பேரை சீரழித்து கொலை செய்யபோகிறாரோ? அப்படி நடந்தால்; அவரை விடுதலை செய்த நீதிபதியே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்
  19. அவருக்கெதிராக போர்குற்றச்சாட்டுக்களை கூட பணியாற்றியவர்கள் வைக்கலாம், நிரூபிக்கலாம். கூட்டாக போயிருந்தது வீரக்கதைகளை பரிமாறலாம். குற்றச்சாட்டுக்கள் இன்னும் சூடு பிடிக்கவில்லை. பிடிக்கும்போது எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம், அதற்காகவே காத்திருக்கிறோம்!
  20. அடுத்தது யார்? அரச சாட்சியா அல்லது சிறையா? இவர்களின் வாக்கு மூலம் அடுத்தவர் யார் என முடிவு செய்யும்.
  21. இனியென்ன, போட்டுக்குடுத்து விட்டு வெளியேறவேண்டியது. பசிலை போட்டுக்கொடுத்ததும் இவர்தானாமே, பேசிக்கொள்கிறார்கள். முகத்தில் அவ்வளவு கலக்கம், வெளியில் சவால் விட்டுக்கொண்டு திரிந்தார்.
  22. பேச்சுவார்த்தை நடத்துபவர்களும் அதில் பங்குபற்றுவோரும் தமிழரை வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள். அவர்களது பிழைப்புக்கு உதவுவது தமிழர் விவகாரம். கூத்தாடிகள் தேடுவது ஊத்தைவாளிகளையே! இல்லையென்றாலும் இதுகள் வாசலில் போய் நின்று தட்டுகிறார்களே.
  23. தமிழரின் வாழ்வாதாரத்தை அழித்து, குடும்பங்களை கலைத்து, நிற்கதியாக்கியதே இந்தியாதான். அனைத்தையும் செய்து ரசித்துவிட்டு, இப்போ உதவியாம். அதற்கு சுமந்திரனுடன் பேச்சாம். தமிழரசுக்கட்சியை இல்லாமல் செய்து, அவர்களுக்குரிய தீர்வை நீத்துப்போகச்செய்தவர் சுமந்திரன். தமிழர் எழுந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து குட்டுகிறார்கள். தமிழரின் துயரில், எழுச்சியில் எந்த பங்கும் பாகமும் வகிக்காத சுமந்திரனுடன் பேச்சா? அல்லது சுமந்திரனே வலியப்போய் சந்தித்து படம் காட்டுகிறாரா? பாடின வாயும் ஆடின காலும் சும்மா கிடவாது. தமிழரின் விடிவிற்காக உழைத்ததை விட, ஓடியோடி பின்கதவால் சந்திப்புகளை நடத்தி படம் காட்டினதுதான் இவர் சாதித்தது.
  24. அடிப்படை எழுத்தே தெரியாதவனை கட்டுரை எழுதச்சொல்வது போல் உள்ளது ஐ. நா. வின் அறிக்கை. இலங்கையர்களுக்கு சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாமல் ஆரம்பத்திலிருந்தே, எதிரான விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் வருகிறார்கள். ஐ. நா. வால் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை. காலத்தை இழுத்தடிப்பதை விடுத்து, சமாதானம், ஒற்றுமை, நல்லிணக்கம், மனித உரிமை என்றால் என்ன, அதற்கு முக்கியமானது என்ன, அதை எப்படி இனங்களிடையே கட்டியெழுப்புவது என்கிற பாடத்தை இவர்களுக்கு எடுத்து விளக்குவது பிரயோசனமானது என்பது எனது கருத்து. இல்லையெனில், ஒவ்வொரு கூட்டத்திற்கும் இதே பல்லவியை எழுதிக்கொண்டு வந்து வாசிப்பார்கள். அவர்களது கலாச்சாரமே; அடித்து, கொலை செய்து, பறித்து வாழ்வாதாரம் நடத்துவது. அது தான் சரியானது என்பது அவர்களது தரப்பு வாதம்.
  25. இவர்களுக்கு அதை சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு இனம் கொத்துக்கொத்தாக அழிக்கப்படும்போது மவுனமாக இருந்தார்களே, அப்படி இருக்க வேண்டியதுதானே. ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டுமானால், இவர்கள் ஐ. நா. கூட்டத்தொடருக்கே வந்திருக்கத்தேவையில்லை, தங்கள் நாட்டில் இருந்து தங்கள் இறையாண்மையை கவனித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.