Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அதுசரி, இந்த வீராவேசத்தை ஏன் கடந்தகால அரசாங்கங்களின் மேல் இவர் காட்டவில்லை? இதே தவறுகள் அப்போதும் நடந்ததே. இவர் சந்திக்க போனபோது, அனுரா இவருக்கு பதவி உத்தரவாதம் வழங்கவில்லை என்கிற கோபத்திலா இப்படி அனல் கக்குகிறார்? எலி தானாக போய் பொறியில் தலை வைக்கப்போகிறது போலுள்ளது.
  2. அப்போ, கட்சியில் சுமந்திரன், சிவஞானம், சாணக்கியன், சத்தியலிங்கம் தான் கட்சியில் மிஞ்சியுள்ளார்களா? எல்லா வழிகளிலும் முயற்சித்து முடியாமல், இப்போ இந்த வேலையில் இறங்கிவிட்டார்களா? நல்லது. அதோடு கட்சியுமில்லை, அரசியலுமில்லை. இதுதான் சட்டத்தரணியின் சாணக்கியம். சாணக்கியன் எந்த கட்சியிலும் குடியேறுவார்,அவருக்கு இது பழகிப்போன ஒன்று. சுமந்திரனும் அனுராவின் காலில் விழுந்தாவது பதவி பிடிப்பார். மற்றவர்கள்......?
  3. சந்திரகாந்தனை மாட்டி விட்டவரே இவர்தான், அதை மறைக்க தேர்தல் கூட்டு வைத்து, இப்போ முதலிக்கண்ணீர் வடிக்கிறார். அவர் தன் பங்குக்கு சும்மாவா இருப்பார்? இருவரும் சேர்ந்த கள்ளர்தானே!
  4. கந்தையர் கிண்டலாக சொன்னதை நீங்கள் சீரியஸாக எடுத்து உணர்ச்சி வசப்படுகிறீர்கள். இவர் ஒரு கட்சியை சேர்ந்தவர், அதிகம் பேசப்படாத கட்சி.
  5. இந்தியா வெருட்டும் ஆனால் தொடங்காது என நான் நினைக்கிறன். தானே ஆசியாவின் வல்லரசு என எண்ணிக்கொண்டிருக்கிறது. தோற்றால்; அதன் நிலைமை என்னாவது? பிறகு இலங்கையே மதிக்காது அதுவும் தன் பங்குக்கு வெருட்டும். அப்படியொரு நிலைமை வரவேண்டும் என்பது எனது அவா.
  6. தமிழரையும் சிங்களவரையும் மோதவிட்டு ரசித்தவர்களின் வீரத்தை, நாமும் பார்த்து ரசிப்போமென்றால்; இந்தியாவை அடித்து விரட்டி விட்டார்கள் போலுள்ளதே!
  7. அமெரிக்காவுக்கு ஓடியோடி பேச்சுவார்த்தை நடத்துவதே வேலையாகிப்போய்விட்டது. சமாதான விரும்பி.
  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க சர்வதேசம் வேண்டாமென்றார், சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டவுடன் பேசவேண்டுமென்றார், இப்போ அமெரிக்கா சீற்றமடையுமென்கிறார். இவரின் பிரச்சனைதானென்ன? கூண்டுக்குள் அடைபட்ட எலிபோல் துடிக்கிறார். இவருக்கு, அனுரா வைத்தியம் பார்ப்பது நல்லது. அனுரா பதவியேற்றவுடனேயே ராஜபக்ஸாக்களுக்கு முதலே இவர் பதற ஆரம்பித்து சாபமிட்டார். குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனையை விட, அவரை காப்பாற்றியவர், ஆதாரங்களை மறைத்தவர்களுக்கு கூடுதல் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இவர் ஆட்சிக்கு வந்ததுமுதலே அவர்களை காப்பாற்றியே வந்துள்ளார். ஒரு கள்ளன் மற்ற கள்ளனை காப்பாற்றவே செய்வார்.
  9. புத்தரின் பெயரால் இத்தனை அட்டூழியங்களையும் நிகழ்த்தி விட்டு, ஐ. நாவில் அதற்கொரு கொண்டாட்டம். அழிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தால்; போர்க்கொடி தூக்கி, கேள்வி எழுப்பி, அறிக்கை, கண்டனம் விடப்படும் வினோதமான உலகம்!
  10. நான் கேட்க நினைத்ததை படமாக தந்துள்ளீர்கள் ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான் இலங்கை! உண்மைதானோ அல்லது ஒருவரை ஒருவர் பயமுறுத்துகிறார்களோ? ம் ..... உங்களுக்கென்றபடியால் இரத்தம் கொதிக்கிறது, மற்றவர்களின் இரத்தத்தை வெளியேற்றி ரசிப்பீர்கள். நாலு பக்கத்தாலும் உலகை அழிக்கிறோமென அடம் பிடிக்கிறார்கள், அழியப்போவது தாங்களுந்தான் என்பதை உணராமல். பகிடி என நினைத்து வெருட்டுகிறார்களோ ஒரு பகுதி மற்றொரு பகுதியை? விளையாட்டு வினையாகப்போகிறது.
  11. வடமாகாணத்தில் ஜனாதிபதிக்கு மாளிகை அமைத்த மஹிந்தா, இப்போ உத்தியோகபூர்வ மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார். போற போற இடங்களில் சின்ன வீடு வைப்பதுபோல். வீடு மாறுவதற்கு பணம் இல்லையாம். தமிழ் மக்களை சொந்த இல்லங்களில் இருந்து விரட்டி ரசித்தவருக்கு இந்த நிலை. இலங்கை அரசியலை சொந்த குடும்ப அரசியலாக்க கனவு கண்டவருக்கு விழுந்த அடிமேல் அடி. தங்கள் அரசியலை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களை கொன்றார்கள், இப்போ தம் ஊழல் கொலைகளை மறைப்பதற்கு தங்கள் விசுவாசிகளையே கொலை செய்கின்றனர். மக்கள் பணத்தில் ஆடிய ஆட்டம், இந்த நிலைக்குத் தம்மை தள்ளுமென எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பௌத்த மதமே கர்மா பற்றி அதிகம் சொல்கிறது. இவர்கள் தமது சொந்த லாபத்திற்காக மதத்தை மாறினார்கள், உபயோகித்தார்கள். இப்போ அது தன் வேலையை தொடங்கியுள்ளது. எத்தனை பேரை கொன்றாலும் இவர்கள் தப்ப முடியாது. இன்னும் குற்றங்கள், தண்டனைகள் இவர்கள் மேல் பெருகும்.
  12. ஹிஹி..... சிவஞானத்திற்கு அறளை பேந்து போச்சுதா அல்லது அரசியல்வாதியின் ஏமாற்று குணமா? நேரத்திற்கு நேரம் ஒரு பேச்சு பேசுறார். இவர் எல்லாம் ஒரு பழுத்த அரசியல்வியாதி. சாச்சா ... அப்பிடியொன்றுமில்லை. சுமந்திரனாவது அரசியலில், அதுவும் தமிழ் அரசியலில் இருந்து ஒதுங்குவதாவது. மக்கள் அவரை ஒதுக்கியபோதும் ஒதுங்காதவர், அவர் தமிழ் இனம் ஒழிக்கப்படும்வரை அரசியலில் இருந்து ஒதுங்கமாட்டார். அதன் பின் அரசியல் செய்யும் காரணமும் இருக்காது அவருக்கு. அவர் கட்சியை வெல்லவைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசி மக்களை ஏமாற்றுங்கள் என்று இவருக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார். வென்றபின் நான் அப்பிடி சொல்லேலை, அது பச்சைப்பொய் என்று காலை ஆட்டியவாறு பத்திரிகையாளருக்கு சொல்லி, நான் சொன்னதென்னவென்றால், ...... என்று உருட்டி பத்திரிகையாளரை முட்டாளாக்குவார். அதெல்லாம், மக்களை ஏமாற்றி வாக்கு பெட்டியை நிரப்புவதற்காக போடும் நாடகம். இவர் கதையெல்லாம் ஒரு கதையா? அவர் என்ன விரும்பியா பேசுகிறார்? பேசவேண்டிய கட்டாயத்தில் பேசுகிறார். இப்போதுதானே பதில் தலைவர் பதவியை ஏற்றிருக்கிறார். சம்பந்தர் இறக்கும்வரை, அந்தபதவியை விட்டிறங்க விரும்பவில்லை. மாவையர் தானாகவே விட்டுக்கொடுத்தும் அந்தபதவி வில்லங்கமே அவரது உயிரை காவுகொண்டது. இவரும் அவ்வாறே இருக்க பல தகிடுதத்தம் ஆடியவர். தலைவர் என்றால்; பதவி என்பதுதான் இப்போது பொருளாகும். ஆனால் பொறுப்பு எந்தவிதத்திலும் இல்லை. பதவிக்காக தெருவிலே சண்டையிடுமளவிற்கு கேவலமாகிவிட்டது. மக்கள் தொடர்ந்து தமக்கு வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கும் இவர்கள், மக்கள் எதிர்பார்ப்பதுபோல் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்களா?
  13. தேர்தல் வந்தால், இப்படி தலைகீழாக பேசி மக்களை ஏமாற்றுவார்கள், பின் தாம் என்ன சொன்னோம் என்பதையே மறந்து, ஏக்கய அரசியல் வரைபை வரைந்ததே நாம், ஏக்கய என்பதற்கு சரியான விளக்கம் இல்லை என்று விளக்கம் வேறு சொல்வார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடனேயே அந்த ஏக்கய வரவின்படி பிரச்சனையை தீர்க்கப்படும் என்று வேறு சட்டாம்பி தெரிவித்திருந்தாரே, அப்போ இந்த சிவஞானம் எங்கே போயிருந்தார்? எதிர்த்து குரல் எழுப்பவில்லையே? தேர்தலில் வெல்வதற்காக சிவஞானம் எதை வேண்டுமானாலும் பிரட்டி சொல்வார். சுமந்திரனை தாக்கி அறிக்கை விட்ட சிவஞானம், மறுநாள் அதற்கு மாறாக அறிக்கை விட்டவர். அவரிடம் எந்த அதிகாரமுமில்லை, அவரை யாரும் நம்பிக்கைக்குரியவராக ஏற்றுக்கொள்வதுமில்லை சுமந்திரன் உட்பட. ஆனால் முடிந்தவரை அவரை தன் காரியங்களுக்காக பயன்படுத்திக்கொள்வார் அவ்வளவுதான்.
  14. மஹிந்தா, கோத்தா போன்ற இடி அமீன்களின் உல்லாச விடுதிகள், அதற்கு இணையாக விகாரைகள். இதுதான் போருக்குப் பின்னான சாதனையென தெற்கு மக்களுக்கு அறிவியுங்கள். பொருளாதார வீழ்ச்சியின் காரணம் எதுவென தெரிவியுங்கள். இனிமேலும் இவர்களோ, இவர் சந்ததியினரோ ஆட்சிபீடம் ஏறுவதை கனவிலும் காணாதபடி செய்யுங்கள்.
  15. இவர்களை ஆட்சியில் அமர்த்துவது மக்கள், இந்த சோம்பேறிகளிடம் ஆசி பெற்று நாட்டை சுடுகாடாக்கிறது. இதுதான் எல்லா ஆட்சியாளர்களும் செய்தது, செய்கிறது.
  16. எல்லா ஆட்சியாளர்களும், ஆயுதப்படைகளுக்கு போலீஸ் உட்பட அளவுக்கதிகமான சலுகைகள், அதிகாரங்கள், தண்டனை விலக்களிப்புகள், பதவிகள், பணம் அனுமதிக்கப்பட்டு தங்கள் காரியங்களை, திட்டங்களை நிறைவேற்றினார்கள். இப்போ, அந்த ஆயுதப்படை ஊதிப்பெருத்து யாராலும் கட்டுப்படுத்த முடியாத, யாருக்கும் கட்டுப்படாத அளவுக்கு வளர்ந்து விட்டுள்ளது. கேள்வி கேட்டால்; தமிழரை அடக்குவதற்கு அவர்கள் தேவை, அவர்கள் தேசிய வீரர்கள் என காரணம் காட்டுகிறார்கள். நாடு எந்த நிலைக்கு போனாலும் பரவாயில்லை, தமிழரை தலைநிமிர விடக்கூடாது, அவர்களிடம் அதிகாரம் செல்லக்கூடாது என்பது அவர்கள் திட்டம். காரணம், சோம்பேறி இனம் தமிழரின் எழுச்சியை பொறுத்துக்கொள்ளாது. ஆகவே ஆயுதப்படையை யாராலும் அடிபணிய வைக்கமுடியாது. சந்திரிகா முயன்று தோற்றார், கோத்தபாயவையே அவர்கள் மதிக்காததனாலேயே அவர் நாட்டை விட்டு தப்பியோடினார். காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு அரசியல்வாதிகளின் தேர்தல் துருப்புச்சீட்டு. அதை யாரும் எழிதில் விடுவிக்க மாட்டார்கள். நம் அரசியல் வாதிகளும் அதற்கு வற்புறுத்த மாட்டார்கள், அவர்களுக்கும் கையிருப்பு அதுவே. ஒருவேளை இராணுவ ஆட்சி வந்து, இந்த தலைவர்களெல்லாம் கைதுசெய்யப்பட்டு, பின் இராணுவமும் பலமிழந்து துரத்தப்பட்டாலேயொழிய ஆயுத அடக்குமுறையை மாற்றுவது கடினம். இது எனது கருத்து!
  17. ஒரு காலத்தில், இனக்கலவரங்களாலும் தமிழ் மக்களின் குருதியிலும் நிறைந்த, நனைந்த நாடு, இப்போ துப்பாக்கி மரணங்களால் அலறப்போகிறது. தங்கள் விசுவாசிகளை தாங்களே கொன்றுவிட்டு, சிறப்பு பெயர்களை அளிப்பார்கள். ஆரம்பத்தில் எல்லாம் களிப்பு, இறுதியில் கலக்கம். இது யாம் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். இது இறுதி சந்தர்ப்பம் ஆட்சியாளருக்கு. இல்லையேல் இவர்களும் இதே நிலையை எதிர்கொள்வர். கொலைகள், குற்றச்சாட்டுக்கள் இந்த நாட்டுக்கு ஒன்றும் புதியதல்ல.
  18. மஹிந்தவின் புதல்வர்களின் திருமணத்திற்கு செலவாகிய பணம் யாருடையது? ஒவ்வொரு புத்த சங்கத்திலுள்ள குடும்பத்தினருக்கும் பணம் கொடுத்து வடக்கிற்கு அனுப்பி, தாங்கள் கைப்பற்றிய இடங்களை, புனரமைத்த விகாரைகளை பார்வையிடவும் தரிசனம் செய்யவும் கொடுத்த பணம் யாருடையது? சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி முரளிதரன் காட்டிக்கொடுத்து, உலகநாடுகளின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவந்த போரை, தாம் வெற்றி கொண்டதாக வெற்றி விழா கொண்டாடிய பணம் யாருடையது? கோத்தாவின் மகனின் திருமணத்திற்காக வெளிநாடொன்றிலிருந்து விமானம் மூலம் பூக்களை கொண்டுவந்த பணம் யாருடையது? இவற்றை மறந்து மற்றவர்களுக்கு போதிக்கிறார் பொடி மாத்தையா.
  19. தமிழரசுக்கட்சி உதிரிகளுக்கு தெரியும் தங்களது தோல்வி. பாராளுமன்றத்தேர்தலில் தோல்வி, இப்போ கட்சி இரண்டுபட்டு ஒன்றுக்கெதிராக குழிபறித்து எல்லோராலும் விமர்சனத்துக்குள்ளாகி ஓரங்கட்டப்பட்டு நிற்கிறது. சத்தியலிங்கம் விடும் அறிக்கை எப்படியாவது அரசுடன் சேர்ந்து கொள்வதே. தாங்கள் அரசுடன் இணைந்து இயங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவர்கள் எப்போதும் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் சேர்ந்து கூத்தடிப்பவர்கள் தான். விழுந்தும் மீசையில் மண் ஒடவில்லை என்பதுபோல் சுமந்திரன் அனுராவுக்கு வாழ்த்துச்சொல்ல போயிருந்தார், எடுபடவில்லை. எடுத்ததற்கெல்லாம் சவால் விட்டுப்பார்த்தார், யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போ இணைந்து செயற்படப்போகிறார்களாம். இவர்களை இணைப்பது யார்? இல்லையென்றால், இவர்களுக்கும் பயம் வந்து விட்டதா என எண்ணத்தோன்றுகிறது.
  20. அதென்ன முகக்கவசமா?அதாலை ஏன் முகத்தை மூடுகிறீர்கள்?
  21. இந்த வடகிழக்கு அரசியல்வாதிகள், மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை, செய்யபோவதுமில்லை. மக்களை பிரதேசவாதத்தால் பிரித்து, தம்மை தலைவர்களாக்கி, இனத்தையும் நிலத்தையும் விற்பவர்கள். உண்மையான குற்றவாளிகளில் நேரடியாக இப்போ கைவைக்க முடியாது. ஒன்று, அரசியல் பழிவாங்கல் என்கிற குற்றச்சாட்டு, அடுத்து காவற்துறையோ, இராணுவமோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பு. தென்னக்கோனை கைது செய்யும் விடையத்தில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே முதல்ல எடுபிடிகளை கைது செய்யும் போது, இவர்கள் அடையும் பரபரப்பு, காட்டும் அவசரம், அவர்களை விடுவிக்க எடுக்கும் முயற்சி, அவர்களுக்கு அளிக்கும் முன்னுரிமை, முடியாதவிடத்து முந்திக்கொண்டு விடும் அறிக்கை, நடக்கும் கொலை, யார் சூத்திரதாரிகள் என்பதை காட்டுகின்றன. சிவநேசதுரை சந்திரகாந்தனோ, வியாழேந்திரனோ மக்களுக்காக செய்த நன்மைக்காக கைது செய்யப்படவில்லையே. அவர்கள் ஏன், யாருக்காக கைது செய்யப்படார்கள்? அவர்கள் பின்னணி என்ன, ஏன் அவர்களின் கைதுக்காக நாம் வருந்தவேண்டும்? எம் இனத்தையே எதிரிக்கு காட்டிக்கொடுத்து அழித்தவர்களல்லவா இவர்கள்? இவர்களின் கைதுகளுக்காக ஏன் சிங்களம் முன்னுரிமை கொடுக்கிறது? இனத்தை காட்டிக்கொடுக்கும் கௌதாரியை, மீனை அழிக்கிறார்கள். அதற்காக நாம் வருந்த வேண்டியதில்லை. நான் புலிகளை காட்டிக்கொடுத்து இராணுவத்துக்கு உதவியதாலா எனக்கு இந்த தண்டனை? என்னை உபயோகித்து விட்டு இப்போ கைவிட்டு விட்டார்கள் என்று சிறையிலிருந்து புலம்புகிறாராம். துரோகத்துக்கு பலன் துரோகந்தானே!
  22. சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டின் தேசிய வீரன், டான் பிரியஸாத் சமூக சேவகர், கஜ்ஜா குறிப்பிடப்படவில்லை. இந்த சந்திர காந்தன் பிணையில் வந்தால், அவரும் மேலே அனுப்பிவைக்கப்படுவார். இன்னும் ஒரு சிங்களப்பாடகரையும் குறிப்பிடுகிறார்கள். ஒரு வேலையாளை ஒழித்துக்கட்ட இன்னொரு வேலையாள் அமர்த்தப்படுகிறார். அமர்த்துபவர்கள் ஒழியுமட்டும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.