Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. கனக்க யோசிக்காதீங்கோ பிரோ! இன்னும் நிறைய சமாச்சாரங்கள் உண்டு, விரைவில் வெளி வரும்.
  2. இல்லையில்லை, நான் நம்பமாட்டேன். அவர் அப்படித்தான் சொல்வர், ஆனால் அது உண்மையல்ல. சுமந்திரனைப்பற்றி விமர்சனம் வந்தால், ஏதோ ஒரு வகையில் விமர்ச்சித்தவரை நையாண்டி செய்து கருத்தெழுதுவர். இல்லையேல் காரணம் தேடிப்பிடிப்பார், அவரை எப்படியாவது உயர்த்தி விடமாட்டேனா எனும் நப்பாசையில். ஒருவர் இரு பெயர் சமாச்சாரங்களுமுண்டு. கண்டுபிடித்துவிட்டால், ஹிஹி...... வெளியே வருவார். எப்படியும் சமாளிச்சுப்போடும், ஆள் பலே கில்லாடி!
  3. உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது, எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அத்தனையையும் உடைத்துக்கொண்டு ஒருநாள் தக்க சமயத்தில் வெளியில் வரும். சமுதாயத்தில் மதிக்கப்படவும் வரலாற்றில் இடம்பெறவும் செய்த சாகசங்கள் பின்னாளில் மறக்கப்பட்டு குற்றவாளிகளாக வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களுமுண்டு. இதுதான் ஆரம்பம் உண்மைகள் வெளியே வர, இது தொடரும். எல்லோராலும் சிங்கள இனவாதிகளின் முகம் வெளியே கொண்டுவரப்படும். புதிய சமுதாயம் இதற்காக வெட்கப்படும்.
  4. குற்றவாளிகளை யார் உருவாக்கினார்களோ, பயன்படுத்தினார்களோ அவர்களே அவர்களின் செயலுக்கும் பொறுப்பானவர்கள். அங்கேதான் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பும். நாட்டை சுற்றுவதை விட இவர்களின் வீட்டையும் ஒருக்கா சுற்றி நோட்டமிடலாம், தப்பில்லை.
  5. சிங்கள அரசுகள் தமிழருக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை, தாம் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்பது கடத்திய காலம், சொல்லும் நிஞாயம் தெளிவாக சொல்கிறது. நிற்க, கடந்த கால அரசுகளும், முக்கியமாக வகைதொகையின்றி தமிழரை அழித்தவர்களும் இதையேதான் செய்தார்கள். அவர்களை சுமந்திரன் விமர்ச்சிக்கவில்லை, இன்னும் அவர்களுக்கு அனுசரணையே வழங்கினார், கால அவகாசம் கொடுக்கவேண்டும் என்று விளக்கம் வேறு சொன்னார். இப்போ திடீரென்று இவருக்கு என்ன வந்தது? எப்படியாவது அனுராவின் கடைக்கண் பார்வையாவது தன்மீது விழும் அவரோடு கைகோர்க்கலாமென என்னென்ன விதையெல்லாம் காட்டுகிறார், சவால் விடுகிறார். ஒருவேளை தான் இப்படி குரல் எழுப்பினால் சமரசம் செய்வதற்கு தன்னை அழைப்பார் என நினைத்து சத்தம் போடுகிறாரோ?
  6. வடக்கில் ஆவா குழுவை உருவாக்கியது, போதைப்பொருள் கடத்தல் முகவர்களை அனுப்பி விற்பனை செய்ததெல்லாம் திட்டமிட்டு ஆயுதப்படையினரால் அரங்கேற்றப்பட்டது. உழைப்பில், பொருளாதாரத்தில், கல்வியில், ஒழுக்கத்தில், அனிஞாயங்களை தட்டிக்கேட்பதில் முன்னின்ற சமுதாயத்தை பல தடையுத்தரவு, அதிகாரப்பறிப்பு என தடைகளை ஏற்படுத்தியபோதிலும் அவர்களை முழுமையாக அடிமைகளாக்க முடியவில்லை. அதை எதிர்த்து போராடினார்கள். இனிமேல் தமிழர் எதிலும் மேலெழக்கூடாது, எதையும் முன்னோக்கி சிந்திக்க கூடாது, அடிமைகளாக அலைய வேண்டுமென திட்டமிட்டு ராஜபக்க்ஷ பட்டாளம் செய்த வேலை. இவர்களது குடும்ப வாரிசுகளின் எதிர்காலம் எப்படி போகிறது என்பதை இவர்கள் இருந்து பார்க்கப்போவதில்லை, ஆனால் பல கடந்த பெரிய செல்வாக்கான மனிதர்களின் வாரிசுகளில் நாம் காண்கிறோம். எதை விதைத்தோமோ அதையே நம் சந்ததி அறுவடை செய்யும்.
  7. இது இயற்கை. அவருக்கே அவரில் நம்பிக்கையில்லாத போது, சிவஞானத்தை வைத்து காரியம் நகர்த்த முயலும்போது, மற்றவர்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது இவரால்? தொடர்ந்து அடாவடி செய்தால், அதற்கு பெயர் அரசியல் ரவுடி. தங்களது அரசியலும் இருண்டு வருவதை காணும் புத்திசாலிகள், சந்தர்ப்பவாதிகள் விலகத்தான் செய்வார்கள். ஒரு அன்பான வேண்டுகோள் உங்களிடம். விளங்குமென நினைக்கிறன்.
  8. சுமந்திரன் என்பவர் மக்களின் ஆணையை மதித்து சிறிது ஓய்வெடுத்து, தனது செயலை மாற்றி, எல்லோரையும் மதித்து, கட்சியின் கொள்கைகளோடு சேர்ந்து செயற்பட்டிருந்தால்: பின்னாளில் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவரோ, மக்களின் ஆணைக்கு சவால் விடுவதுபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை வெளியே தள்ளி, சர்வாதிகாரிபோல் இல்லாத பதவிகளை உருவாக்கி கையகப்படுத்திக்கொண்டிருந்தால், என்ன அர்த்தம்? கடந்த தேர்தலுக்கு முந்திய தேர்தலில் மாவையர் தோற்றபோது என்ன நடந்தது? அவர்க்கு அறிவிக்காமல், அவரோடு கலந்து பேசாமல், அவருக்கெதிரான கருத்துக்களை ஊடகங்களில் தன்னிச்சையாக பகிரங்கமாக அறிவித்து, சிறிதரனை மாவைக்கெதிராக கொம்பு சீவி அவரை அவமானப்படுத்தவில்லையா? இப்போ இவர் தோற்றபோது எப்படி செயற்படுகிறார்? இதுதான் கட்சியின் கொள்கையா? சட்டத்தரணியின் சமநிலை பேணும் தன்மையா? இவரது சர்வாதிகார செயலெல்லாம் அவரது திறமையில் உள்ள பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார், ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தான் ஒருபோதுமே மக்களால் தெரிவு செய்யப்படமாட்டேன் என எண்ணுவதினாலேயே குறுக்கு வழிகளை அவசரமாக தேடுகிறார்.
  9. அனுராவுக்கு தேவையானவர்களை அவர் தெரிந்தெடுத்துவிட்டார் மக்களை கொண்டே. மக்களால் நிராகரிக்கப்பட்ட, கட்சியால் நிராகரிக்கப்பட்ட இவரை எதற்கு? இடத்தை அடைத்துப்பிடிக்கவோ? இவருக்குரிய பதிலை அனுர கட்சியை சார்ந்தவர், ஏற்கெனவே ஹக்கீமுக்கு வழங்கியுள்ளார். இவர் அதை நேரடியாக கேட்க விரும்பினால் முயற்சிக்கட்டும்.
  10. ஆமா, எல்லோருக்கும் இப்போ தேசியத்தலைவரின் பெயர் மலினமாகிவிட்டது. தேசியத்தலைவர் போல் இவர் யாருக்கும், எதுக்கும் அஞ்சாமல் நேர்மையாக முடிவெடுத்து இனவிடுதலைக்காக உழைத்தாரா? அல்லது தன்னைப்போல் பதவிக்காக தலைவர் மாற்றி மாற்றி பேசினாரா? என்னதான் சொல்ல வருகிறார் இவர்? தமிழரசுக்கட்சி தனித்தே இந்த முடிவெடுத்தது, எந்தக்கட்டத்திலும் கூட்டமைப்பிலிருந்த எந்த கட்சிக்கும் முறையாக அறிவிக்கவில்லை. கூட்டங்கள் கூடினர், பேசினர் ஆனால் தாம் தனித்து போட்டியிடுவதுபற்றி அமுக்கமாகவே இருந்தார்கள். இதை சொல்ல உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? அன்றைய உங்கள் முடிவையும் நேரடியாக அவர்களுக்கு விளங்கப்படுத்தி சமாதானமாக போட்டியிட்டிருக்கலாமே?அவர்கள் கூட்டணியாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென பத்திரிகைகள் உங்கள் தனிப்பட்ட முடிவை அறிவிக்கின்றன. அவர்கள் தனித்து போட்டியிடுவதற்கு தயாராகவில்லை, போதிய கால அவகாசம் இல்லை, உண்மையாகவே நீங்கள் அதை செய்யவில்லை. சுமந்திரன் அவர்களுக்கு சவால் விட்டார், கட்சி சின்னத்தை பாவிக்கப்படாது என. இதெல்லாம் தற்செயலாக நடந்ததா? அல்லது அவர்கள் தான் தவறாக சித்திரித்தார்களா? அப்போ எங்கே போனது தலைவரின் வழி? நீங்கள் தமிழினம் சார்ந்து எப்போ செயற்பட்டிருக்கிறீர்கள்? தேர்தல் வரும்போது உறுப்பினரை குழப்பியடித்து வெளியேற்றுவீர்கள், சவால் விடுவீர்கள், அவமதிப்பீர்கள். இப்போ உங்களுக்கு பயம் வந்ததாலேயே அவசரமாக அழைக்கிறீர்கள். எங்களுக்கு பயமில்லை என்கிறீர்கள். ஏமாற்றம் தெரிவிக்கிறீர்கள். அவர்களை குறை கூறுகிறீர்கள். ஏன் பாராளுமன்றத்தேர்தல் முடிந்தவுடன் உந்தகாரணத்தை சொல்லி அவர்களை அழைத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? கட்சி உறுப்பினரை விரட்ட சதிசெய்து கொண்டு, அவர் பதவியை ஏற்கவிடாமல் தடைகளை ஏற்படுத்திக்கொண்டு, இல்லாத பதவிகளை கையகப்படுத்திக்கொண்டு, அவரை கஜேந்திரனோடு சேர விடாமல் தடுத்துக்கொண்டு இனம் சார்ந்து யோசிக்கிறாராம். நம்புங்கோ! அவர்களுக்கு, தங்கள் விருப்பை தெரிவிக்கவோ, ஆலோசிக்கவோ உரிமை இருக்கிறது. உங்கள் தலைவர் யாரென்பது எங்களுக்கு தெரியும். எங்கேயாவது தோல்விப்பயம் வருபவர்கள், தலைவர் பெயரை உச்சரிப்பார்கள் என்பதும் நமக்குத்தெரியும். தமிழரசுக்கட்சி உங்கள் தனிப்பட்ட கட்சியாக கருதி எல்லோரையும் வெளியேற்றினீர்கள். இப்போ வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு உதவி தேடுகிறீர்கள் உங்களை மீட்க.
  11. அவரின் ஆடை அலங்காரமெல்லாம் மக்கள் முன் அவரை உயர்ந்தவராக காட்டவில்லையே? உந்த ஆடை அவருக்கு தகுதியற்றது என ஆயிற்று. செய்வாரென்றா நினைக்கிறீர்கள்? அப்படியானால் ஏன் சிறிதரனை அங்கே கலைத்து தான் பாராளுமன்றம் போக முயற்சிக்கிறார்? தானே முதலமைச்சருக்கு போட்டியிடலாமே? அவர் இப்போ தன் நிலைமையை இன்னும் மோசமாக்கி வைத்திருக்கிறார். அவரெல்லாம் தேர்தலில் நின்று வெல்வதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. யாரையாவது விழுத்தி, ஏமாற்றி, குறுக்குவழியில் பாராளுமன்றம் போய் அநுராவின் காலை பிடிப்பதற்கு முயற்சிக்கிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் அந்த தொழில்தான். சுமந்திரனுக்கு இப்போ இறங்கு முகம் போலுள்ளது, அவரது எஜமான்கள் வீழ்ந்தது. கண்டிப்பாக! அதுவரை அவருக்கு உறக்கமில்லை. அவர் எடுக்கிற முயற்சியெல்லாம் தடக்கிறது.
  12. வணக்கம் சிறியர்! சுமந்திரன் பின்வருபவற்றை முன் யோசிக்காமல் சறுக்கி விட்டார். சிறிதரன் தான் முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தது மட்டுமல்லாமல் அதற்குரிய காரணத்தையும் விளக்கியுள்ளார். நீதிமன்றத்துக்கு போய் சிறிதரனின் தலைவர் பதவியை பறிக்க போட்ட திட்டம் இப்போ, அவரை முதலமைச்சர் பதவிக்கு ஆசை காட்டி அவரை விரட்டி விட்டு தான் பாராளுமன்றம் போக போட்ட திட்டத்தை அப்படியே திருப்பி விட்டுள்ளது. சிறிதரன் முதலமைச்சர் போட்டியிட்டாலும் வெல்வார், அதற்குரிய வழிவகைகளை சுமந்திரன் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் தனக்கு பதவியாசை இல்லையென்று விட்டார். இப்போ சுமந்திரன் சத்தியலிங்கத்தை நோக்கி திரும்புவார். அது எதிர்பார்த்ததுதான், நான் இதை உனக்குத்தருகிறேன் பின்அதை எனக்கு திருப்பித்தா என்பதுதான் உடன்பாடு.
  13. உந்த விசரில யாரையாவது இரகசியமாய் போட்டுத்தள்ளி விடுவாரோ என்று பயமாய் கிடக்கு. எதுக்கும் சிறிதரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  14. சத்தியமூர்த்தி விலகினால் ஒன்றும் கட்சி முழுகிப்போகாது, அவர் ஒரு வவ்வால். அவர் கட்சியில் இருந்து சுமந்திரனுக்கு ஏவல் வேலைதான் பார்ப்பார். ஆனால் சிறிதரன் இவரின் பேச்சுக்கு எடுபடுமளவுக்கு முட்டாளல்ல. ஏற்கெனவே மாவையரை தலைவர் பதவியிலிருந்து விரட்ட சிறிதரனை கையாளாக பாவித்தவர் சுமந்திரன். அதிலிருந்து பாடம் கற்றிருப்பார் சிறிதரன். அந்தப்பாவத்திற்குத்தான் இப்போ அனுபவிக்கிறார். இனி சுமந்திரனால் விரட்டப்படுவது சிவஞானம் அண்ட் சத்தியலிங்கம். வெறி பிடித்து அலைகிறார் என்றும் சொல்லலாம். அது நிறைவேறாவிடில் ஆளுக்கு விசர் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  15. சிறிதரனை கட்சியிலிருந்து துரத்துவதற்கு எத்தனை தந்திரம் செய்கிறார் எதுவும் பலிக்காதுபோல் இருக்கிறது. போட்டியிடலாம், யார் வாக்களிப்பது இவருக்கு? அதோடு வீட்டில போய் மோட்டைபாத்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அவருக்கு தெரியும், எங்கேயாவது நுழைந்து புகுந்து வந்தால் ஒழிய, நேர்வழியாய் வரமுடியாதென்பது. அதனால் சிறிதரனை சுத்துகிறார் செக்கு சுத்துற மாடு மாதிரி. கட்சியை பலாத்காரமாக கையகப்படுத்தினால் போதுமே, அவர் அதிகாரம் செலுத்த ஆட்கள் வேண்டுமே.
  16. எனக்கென்னவோ சுமந்து அவமானப்படுத்தப்படப்போகிறாரோ எனத்தோன்றுகிறது. ஒன்று அனுரா எடுக்கும் முயற்சிகளை தடுப்பார், அல்லது நான் சொல்லித்தான் நடந்தது என வியாபிப்பார். சிங்களத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வரவேண்டும், சுகம் அனுபவிக்க வேண்டும், யாரையும் அண்ட விடமாட்டார்.
  17. தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவே காய் நகர்த்தியவர், இப்போ வேறொரு துருப்பு கிடைத்ததால் கதையை மாற்றுகிறார். சிறிதரனை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட வைத்தால், தன்மேலுள்ள விமர்சனம் தடுக்கப்படும், ஏனைய கட்சிகள் தங்களோடு ஒன்றிணைவதில் தடையேதும் இருக்காது என நினைக்கிறார். தேர்தலுக்கு முன்பாக அவசர வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தேர்தலில் தனித்து நின்று பின்னர் இணைவோம், கட்சி சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் பத்திரிகை அறிக்கை மூலம் சக கட்சிகளுக்கு தெரியப்படுத்தியவர், இப்போ மாறி அழைக்கிறார். பின் அவர்களை துரத்த மாட்டார் என்பது என்ன நிட்சயம்? சணம் வாதம், சணம் பித்தம் கொண்ட புத்தியுள்ளவர் இவர். "வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்." சலன புத்தியுள்ளோரின் சகவாசம் வேண்டாம். நான் தேடுவது கள உறவு சிறியரை! அடித்து துரத்திய நாகபாம்பு மீண்டும் படமெடுக்க துடிக்குது.
  18. இவரும் சத்தியலிங்கமும் தலையாட்டிகள், அவர்களுக்கென்று ஒரு கொள்கை கிடையாது, தன்மானம் கிடையாது, நீதி நேர்மை கிடையாது, சுயமாக சிந்திக்க தெரியாது, எடுப்பார்க்கைப்பிள்ளைகளை பயன்படுத்துகிறார்கள். பின்னர் இவர்களையே சாடி வெளியேற்றுவார்கள். அப்போ, சிவஞானம் ஊடகங்களை கூட்டி ஒப்பாரிவைப்பார்.
  19. நீங்கள் போங்கோ என்று விரட்டினால் போகோணும், வாங்கோ என்று கூப்பிட்டால் வந்திடணுமா? அது எந்தக்கோட்டுச்சட்டம்? பதவியாசை பிடித்த உங்களுக்கே இந்த திமிர் என்றால், எங்களுக்கும் தன்மானம் இருக்கு. ஓரங்கட்டுவீர்கள், சவால் விடுவீர்கள், கட்சி உங்களது சின்னத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளை போடுவீர்கள், பின் பதவி கொடுக்கவில்லை என்று கட்சியை விட்டு வெளியேறினார்கள் என்றுஅபாண்டமா பழிபோடுவீர்கள். உங்களோடு இணைவானேன் வருத்தப்படுவானேன்? உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், எங்கள் வேலையை நாங்கள் பாத்துக்கொள்கிறோம். உங்கட சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம்.
  20. ஹஹ்ஹா...... முதலமைச்சராகிறாரா அர்ச்சுனா? தங்களை தேர்தல் மேடைகளில் விமர்ச்சிக்கக்கூடாது என்று சிவஞானம் எதிர்பார்க்கிறார். அவர் எதிர் பாராத திசையிலிருந்து விமர்சனம் கிளம்புகிறது. இப்போ இவர் என்ன செய்வார்? தமிழரசுக்கட்சி என்றுமில்லாதவாறு யாவராலும் விமர்ச்சிக்கப்படப்போகிறது. பாவம் மக்கள். கனத்த ஏமாந்த குமுறலுடன் தெற்கு கட்சிக்கு வாக்களிக்க உந்தப்பட்டுள்ளனர். இவர்கள் வந்தாலும் தீர்வு வரப்போவதுமில்லை, வர இவர்கள் விடப்போவதுமில்லை. ஆகவே மக்கள் தாம் விரும்பியவர்களை தெரிவு செய்யும்போது குறைகூறவும் இடமில்லை. எழுபத்தாறு ஆண்டுகள் மக்கள் இவர்களோடு பயணித்ததன் பயன்; பல கட்சிகளை உருவாக்கி, தென்னிலங்கைக்கட்சிகளையும் நுழைத்தவர்களும் இவர்களே. அதற்கான பொறுப்பு இவர்களையே சாரும்.
  21. இனத்தின் நலன் கருதியா அல்லது உங்களின் தனிநலன் கருதியா? அவர்களை கழட்டி விடும்போது உந்த ஞானம் எங்கே போனது? அங்கும் பாடி, இங்கும் பாடி இறுதியில் தனித்தே விடப்படப்போகிறார் இந்தக்கூத்தாடி. அவசரமாக தங்களது இடத்தை மக்களிடத்தில் தக்கவைப்பதும், அவர்களை திட்டமிட்டு ஒன்றுசேரவிடாமல் தடுப்பது, தம்மேல் எழும் விமர்சனங்களை தவிர்ப்பது முக்கிய நோக்கம். தொடர்ந்து குழிபறிப்புகளை செய்துகொண்டு, உறுப்பினர்களை வெளியேற்றிக்கொண்டு இந்த அழைப்பை விட வெட்கமில்லையா இவருக்கு? கூடி இருந்தவர்களை தொலைத்துவிட்டு, அதற்காக வருத்தப்படாமல், மீண்டும் அவர்களோடு உறவைபுதுப்பிக்க முயலும்போது அது உண்மையான உறவுமில்லை, அவர்கள் அதே ஆட்களாகஉங்களுக்கு திருப்பி கிடைக்கவும் மாட்டார்கள். இதுதான் உங்களின் சாணக்கியம்!
  22. அதேதான்! நாங்கள் கேட்டோம் நீங்கள் எங்களுடன் இணையவில்லை, அதனால டக்கிலஸை சேர்த்துக்கொண்டோம் என்று கூறி அவரை அழைத்து சிறிதரனுக்கு குடைச்சல் கொடுத்து கட்சியை விட்டு வெளியேற்றுவதே சுமந்திரனின் திட்டம். சுமந்திரன் சொல்லியிருக்கிறார், தேர்தலில் சிறிதரனுக்கு அடுத்து தான் அதிக வாக்குகள் பெற்றதால் சிறிதரன் ஏதாவது காரணத்தால் பதவி விலகினால் தான் பாராளுமன்றம் செல்லக்கூடிய ஏது இருப்பதாகவும், யாழ்ப்பாணத்திற்கு இரண்டு ஆசனம் கிடைத்திருந்தால் தான் பாராளுமன்றம் போயிருப்பேன் என்றும் விளக்கமளித்துள்ளார். இவ்வளவு காலமும், தமிழரசுக்கட்சி எதுவும் மக்களுக்கு செய்யவில்லை, எனக்கு வாக்களித்தால் நான் பலவற்றை நிறைவேற்றுவேன் என்று புலம்பியும், என்னையும் தமிழ்கட்சிகளுடன் இணைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியும் கிடைக்காத சந்தர்ப்பம் இப்போ தானாக, சிவஞானத்தின் அழைப்பு கிடைத்ததில் டக்கிளஸ் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். கூட்டிக்கழித்துப்பார்த்தால் சுமந்திரன் தமிழரசுக்கட்சியை தனது அதிகாரத்துக்குள் கொண்டுவருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதேநேரம் சுமந்திரனால் கழற்றி விடப்பட்ட தேசியக்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள விளைகின்றன, அவர்களும் டக்கிலஸை தம்மோடு இணைப்பது பற்றி சிந்திப்பதாக தெரிகின்றது. டக்கிளஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர், அடுத்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து விலகுவேன் என்று ஏற்கெனவே அறிவித்தவர். அவரில் ஒருவரே சுமந்திரனும். ஏதோ தமிழரசுக்கட்சியில் நுழைந்ததால் அரசியலில் தானும் ஒருவர் என்று சொல்லிக்கொண்டவர். குழப்பிகளை மக்கள் விருப்பத்திற்கு மாறாக இணைத்துக்கொண்டால்: அழிவை தேடி மக்களை வேறொரு பக்கத்திற்கு நீங்களாகவே அனுப்புகிறீர்கள். சுமந்திரன் தமிழரசுக்கட்சியை சின்னாபின்னமாக்கி தனது கைக்குள் கொண்டுவரலாம், ஆனால் அக்கட்சி தொடர்ந்து உயிர் வாழுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். தன் கட்சியில் உண்மையாக இல்லாமல் தில்லு முல்லு செய்பவர், மக்களுக்கு எதை சாதிக்கப்போகிறார்?
  23. உதாரணம்; ஒசாமா பின் லேடன், மத்திய கிழக்கு நாடுகள், இப்போ உக்ரேன். முட்டாளை நம்புவோரின் நிலை அம்போ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.