Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அவர்களுடைய வரலாறு அவர்களுக்கே விளங்காது. தங்கள் எண்ணத்துக்கு ஒவ்வொரு பிக்கு ஒவ்வொரு வரலாறு எழுதுவார் பௌத்தத்தையும் சிங்களத்தையும் பெருமைப்படுத்தி தமிழ்ப்பெயரை மாற்றி சிங்களப்பெயர் என்றும் கூறுவார்கள், அதனாற்தான் நாட்டில் இவ்வளவு குழப்பம்.
  2. அவர் ஏதோ பொழுது போக்குக்காக தான் சமூக சீர்கேடுகளை களைகிறேன் என்று போக்கு காட்டுகிறார், நீங்களும் நம்பிக்கொண்டு. பல காலமாக இந்த மதுபான சாலைகள் திறக்கப்படும்போதெல்லாம் மக்கள் எதிர்த்து போராடியிருக்கிறார்கள், நீதிமன்றங்களை நாடியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பேசாதவர், இப்போ ஏன் பேசுகிறாரென யோசியுங்கள். அனுரா, இவரை அழைத்து விசாரிக்க வேண்டும், நான் ஜனாதிபதியோடு தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசினேன், அவர் எனக்கு வாக்குறுதியளித்தார் என்று உளறிக்கொண்டு திரியலாம். ரணில் மதுபான சாலை உரிமம் கொடுத்தது தப்பில்லை, அது யாருக்கு கொடுத்தது என்று அறிவிப்பேன் என்று அனுரா சொல்லிவிட்டு சொல்லாமல் திரிவதுதான் தப்பாம். இதுமட்டுமா, மோடி அனுராவிடம், உங்கள் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொன்னதும் கேவலமாம். அதோட குபேந்திரன் என்கிற பெயரையும் அறிமுகம் செய்து வைக்கிறார். இனிமேற்காலங்களில் அடிக்கடி இவரது பிரசன்னம்/பெயர் வரும். அடுத்த தேர்தலுக்கு வேட்ப்பாளராக அறிமுகமாகலாம்.
  3. அப்படித்தான் நினைத்தாலும், இங்கு ஒருவர், இவர் சொன்னதை மட்டும் தூக்கிக்கொண்டு மேடைபோட்டு விமர்ச்சிக்கிறார். அதனாலஅனுரா நடைமுறைப்படுத்தினாலும் படுத்தலாம். அல்லாட்டி சிங்கன் குடைச்சல் கொடுத்து, வழக்கு போட்டு பதவிவிலக வைத்துவிடுவார். அனுரா இவரை உள்ளுக்கு இழுக்குமட்டும், சிறிதரன் பதவி விலகுமட்டும் திரும்பத் திரும்ப பழைய சீலை கிழிஞ்ச மாதிரித்தான். ஆடின காலும் பாடின வாயும் சும்மா இராது கண்டியளோ! இன்னும் கொஞ்ச நாளில் தன்னிலேதான் கதைக்க வேண்டி வரப்போகுது. மக்கள் எத்தனை அல்லோல கல்லோல பட்டார்கள், வைத்தியசாலை அதிகாரிகளின் முறைகேடுகளால், இன்னும் பல ஊழல்களால். அதை கவனிக்க நேரமில்லை விரும்பவில்லை, தைரியமில்லை. தனக்கு கதிரை கிடைக்கேல என்கிற கடுப்பில் உளறிக்கொண்டு திரியிறார்.
  4. மாத்தையா, சீனாவுக்கு போய் என்ன வாங்கிக்கொண்டு வாறார் என்று பாப்போம். எங்களின் நாடு இவ்வளவு சீரழிந்ததற்கும் இரத்தம் சிந்தியதற்கும் காரணம் இந்தியாவின் பாதுகாப்பு முன்னுரிமை, தன்னைவிட இலங்கை முன்னேறிவிடக்கூடாது என்கிற கொள்கை. அதை இனவாதிகளும் பயன்படுத்திக்கொண்டனர். இது அனுராவுக்கு ஒன்றும் தெரியாததல்ல, தெரிந்தும் அந்த வலையில் விழுகிறாரென்றால் இவரால் மற்றைய தலைவர்களை விட பெரிசாய் எதை சாதிக்கப்போகிறார்? இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாடு முன்னேறுவது இயலாத காரியம்.
  5. தயவு செய்து அந்த அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, படித்த, துடிப்புள்ள, இளம் பட்டதாரிகளை நியமியுங்கள். அல்லது காது வைத்திய நிபுணரிடம் அனுப்பி பரிசோதனை செய்து காது கேட்க்கும் கருவி வசதியை ஏற்படுத்துங்கள் அவர்களுக்கு. செவிப்புலனற்றவர்கள், தாம் சேவை செய்ய முடியவில்லையே என வருந்துகிறார்கள். இவர்களுக்கு கொடுத்த வசதியை வைத்து மற்றவர்களை வதைக்கிறார்கள்.
  6. முன்னெச்சரிக்கை இல்லாத செயற்பாடு. நம்மிடம் எல்லா வளங்களுமுண்டு, பருவ காலத்திற்கேற்ப பாவிக்க, பதப்படுத்த, சேமிக்க தெரியவில்லை. இப்பிடித்தான் தரம் குறைந்தவைகளை கூடிய விலைக்கு இறக்குமதி.
  7. அதே, பின்னர் இதுவே அவர்களுக்கு பாதகமாய் அமைந்து விடும். இருந்தாலும் தான் நல்லபிள்ளை, இஸ்ரேல்தான் அடுத்தவரின் உரிமைகளை பறிப்பதுபோல் அறிக்கைகளும் விடுகினம்.
  8. இதிலிருந்து தப்புவதற்காக அனுராவுடன் இணைய முயற்சிக்கிறார், அனுரா தடாலடியாக இனவாத பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார். இவர் சிலரை மாட்டிவிட உத்தேசிப்பதுபோலுள்ளது. பாப்போம் எப்பிடி போகுதென்று?
  9. மாற்ற முடியாத அரசியல் என்று தமிழருக்கு சாதகமானவையை நீக்கி யாப்பு வடிச்சு வைச்சிருக்கினமெல்லோ, அப்படி, வலுவான, மாற்றமுடியாத, அசைக்க முடியாத சட்டமாக இயற்றி, நடைமுறைப்படுத்தவேண்டும் இவரது காலத்திலேயே. இவர் சொன்னவற்றை நிறைவேற்றினால்; இவர்தான் சதாகால ஜனாதிபதி! சின்னப்பொடியன்தானே, காலம் நிறைய இருக்கு அவருக்கு.
  10. கவலைப்படாதீர்கள் பாஸ்! சந்தேகம் தெளிந்திருந்தால் அவரே அனுப்பி வைப்பார். அது ஒன்றும் சாதாரண சந்தேகமில்லை, சுமந்திரன் மேலுள்ள நம்பிக்கையினால், ஏற்றுக்கொள்ளாமையினால் உண்மையை கூறுபவர்கள் மேல் வந்த ஒரு வெறுப்பு போலுள்ளது. இல்லையென்றாலும் நீங்கள் அனுப்பி வைக்கலாம். நான் ஒன்றும் தவறாக, தனிபட்ட காழ்ப்புணர்சியினால் எழுதவில்லை. இன்னும் எத்தனையோ இருக்கு. உண்மையாகவே விளங்காதவராக இருந்தால்; இந்த விளக்கம் போதும். இல்லை சோதிக்கிறாரென்றால்; எந்த விளக்கம் கொடுத்தாலும் பிரயோசனமில்லை.
  11. இது வாலில்லை, தலைதான்! பயம் தெளிஞ்சு போச்சுது போல. கோசானுக்கு தெரியுமோ இந்த விஷயம்?
  12. பயமா? முத்திரைக்கா? என்னை விட நீங்கள் அரசியல், சட்ட, பரந்த, இதர பல திறமையுடையவர். நான் ஒரு சாதாரணமான ஆள். எனது சொந்த சுற்றாடல் அனுபவத்தை வைத்தே எழுதுகிறேன். இவ்வளவும் கோசானின் தலைமையில் நடைபெற வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்!
  13. நான் எதை சொன்னாலும் மல்லுத்தான் என்றாகிப்போச்சு. நீங்கள் நினைத்தபடியே வைத்துக்கொள்ளுங்கள். சிங்களம் தமிழருக்கு வைக்கும் தேர்வு இது போன்றதே. எதை தெரிந்தாலும் பாதகம் நமக்குத்தான். அது தேர்வல்ல பொறி! பதிலளித்தேன் என்று வையுங்கோ; எல்லா திரியும் அமோகமா ஓடும்! எனக்கெதிரா கூட்டம் இலகுவா சேர்த்துவிடுவீர்கள் போங்கோ!
  14. பாவம் அந்தப்பிள்ளையை விடுங்கோ! நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டுமென்கிற நிலையில், அவரின் எதிர்காலம் பாழாகப்போகுது.
  15. ஆண்டு சரியாக நினைவில்லை, தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். ஜெனிவா கூட்டத்திற்கு நமது பிரச்சனைப்பற்றி கதைப்பதற்காக த. தே. கூட்டமைப்பு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. அப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சாளராக இருந்தார். இந்த முடிவு எட்டியபின், சுரேஷ், அவருடன் சிலர் இந்தியா சென்றிருந்தனர். அந்த சமயம் சம்பந்தர், சுமந்திரன் கூடி ஜெனிவா போவதில்லை என முடிவெடுத்து வெளியிட்டனர். இது சுரேஷுக்கு தெரியாது. அவரை விமான நிலையத்தில் பேட்டி எடுத்த ஊடகவியலாளர், ஜெனிவா போவது பற்றி கேள்வி எழுப்பிய போது, நாம் செல்வோம் என்று பதில் கூறினார். அதற்கு பத்திரிகையாளர் சம்பந்தர் சுமந்திரனின் முடிவை கூறினார். இது சரியா? ஒரு கட்சி எடுத்த முடிவை இருவர் தன்னிச்சையாக, கட்சியோடு ஆலோசிக்காமல், தெரிவிக்காமல், முடிவெடுப்பது சரியா? உங்கள் வீட்டில், நீங்களும் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து, (உங்களுக்கு அந்த பந்தம் ஏற்பட்டிருக்கோ தெரியவில்லை, உதாரணத்துக்கு சொல்கிறேன். கோவிக்க வேண்டாம்!) எடுத்த முடிவை, உங்கள் மனைவி அதை உங்களுக்கு தெரியாமல் மாற்றி அதை இன்னொருவர் வந்து உங்களிடம் அறிவிக்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அதுவும் உங்கள் குடும்பத்துக்கு பாதகமான முடிவை எடுக்கும்போது? இருக்கட்டும், அதன்பின் ஊடகவியலாளர்கள் இவரை அணுகி ஜெனீவாவுக்கு போவதாக எடுக்கப்பட்ட முடிவை ஏன் மாற்றினீர்கள்? எனக்கேட்ட போது, அமெரிக்கா சொன்னது, நீங்கள் வரவேண்டாம் அது நாங்கள் பாத்துக்கொள்கிறோம் என பதிலளித்தார். சொல்லுங்கள்! பாதிக்கப்பட்டது உங்கள் குடும்பம், வழக்கு நடக்கிறது, பாதிக்கப்பட்டவர் சார்பில் யாரும் இல்லாமல் வேறு ஒருவர் நமது துயரங்களை இழப்புகளை வலிகளை எடுத்துச்சொல்ல முடியுமா? நாமே அக்கறையில்லாமல் இருந்தால், விசாரிப்பவர்களுக்கு என்ன கரிசனை வந்துவிடப்போகிறது? சரி, அவர்கள் இழுத்தடிக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி நீதியை தேட வேண்டுமோ இல்லையோ? புலம்பெயர்ந்தோர் தவறாமல் போய் போராடுகிறார்கள். அவர்களையும் புலம்பெயர்ந்தோர் விருப்பத்திற்கு இங்கு அரசியல் செய்ய முடியாது என்றார். ஆனால் புலம்பெயர்ந்தவரிடம் ஏன் போகிறார்? இன்னொருதடவை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போது, இவர் அடிச்சு விழுந்து அமெரிக்காவுக்கு போய், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்கிறார். எதற்கு? பிரச்சனையை அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்றவர், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க ஏன் ஓடினார்? அதை அமெரிக்கா பாத்துக்கொள்ளாதா? பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி, ஏன் அரசுக்காக ஓடுறார்? சும்மா வாயை வைச்சுக்கொண்டு இருக்க கூடாதா? முன்னாள் பிரித்தானிய பிரதமர் தமிழ் மக்களை, அவர்களின் பிரச்சனைகளை சந்திக்க, அரசாங்கத்தின் கெடுபிடிகளை, தடைகளையும் தாண்டி வருகிறார். மக்களின் பிரதிநிதிகள் அங்கில்லை. அப்போது, அவரது ஆங்கில புலமை, திறமை, சட்ட அறிவு, கோட்டு சூட்டு எங்கே போனது? அப்போ, மக்கள் இவரது புலமை, அறிவு, திறமை, இல்லாமல் தங்கள் சாதாரண உடையுடன் தங்கள் துயரங்களை பகிரவில்லையா? அல்லது டேவிட் கமரோன் அவர்கள் துயரங்களை கேட்க மறுத்தாரா? அவர் அந்த மக்களின் குடிசைகளை, வெள்ளம் நிரம்பிய பாதைகளை கடந்து சென்று, அவர்களோடு பேசினார். இவர் ஒருநாளாவது அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பாரா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் வருகிறதாம். அதற்கு நமக்கென்ன? அது தெரிந்துதானே அந்தக்கட்சியில் இணைந்தார், ஏன் இணைந்தார்? அதை இல்லாது செய்து சிங்களத்துக்கு மகழ்ச்சியை அளிக்கவா? அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்? தன் மக்களுக்கு நடந்த அனிஞாயங்களுக்கு தீர்வு இல்லை, ஆறுதல் சொல்ல யாருமில்லை, முஸ்லீம் மேடையில் இருந்து முழங்குகிறார். இவர் யாரின் பிரதிநிதி, யாருக்காக பேச வேண்டும்? சிங்கள மக்களுடன் வாழுவது தனது அதிஸ்ட்டமாம். இருக்கட்டுமேன். யார் இவரை தட்டு வைத்து அழைத்தார்கள் தமிழரோடு வாழுங்கள் என்று? அங்கேயே வாக்கையும் சேகரிக்க வேண்டியதுதானே. இப்போ மக்கள் இவரை நிராகரித்து சிங்கள மக்களோடு வாழுங்கள் என்று அனுப்பிவிட்டனர். போகிறாரா மனிசன்? இன்னும் கூவிக்கொண்டு இங்கேதான் திரிகிறார். ஏனென்றால்; எம்மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், நேரம் செலவிட்டு அடிமேல் அடிஅடித்தால் நகருவார்கள் என அவர்களின் இயலாமையை பாவிக்க நினைக்கிறார். எம்மக்கள் இழப்பிலே துவளுகிறார்கள் இறந்தவர்களை நினைவு கூர முடியாமல். இவர் பொப்பி பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போகிறார். கேட்டால், இராணுவத்தினருக்கு மரியாதையாம். ஒன்று அவர்கள் பக்கம் இருக்க வேண்டும் எங்களை விட்டு விலகி. நல்லாட்சி கலைக்கப்பட்டபோது இவர் ரணிலுக்காக நீதிமன்றம் போய் எதை சாதித்தார்? இருந்த ஒரு, மக்கள் அளித்த எதிர்க்கட்சி கதிரையும் பறி போனது. சரி, எங்களுடைய அரசியல் கைதிகள் எங்களை மீட்பார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், இவர்களுக்காக இவர் என்ன செய்தார்? இரண்டொரு வருடத்திற்கு முன் தியாகி திலீபனின் நினைவு கூரலுக்கு நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய தடை அறிவித்தது. இதுபற்றி ஊடகவியலாளர் சுமந்திரனிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில், போனதடவை ஆர்னோல்ட் என்னை கேட்ட படியால் நான் நீதிமன்றம் போய் அனுமதி பெற்றேன். இந்தமுறை அவர் என்னை கேட்கவில்லை, (அவர் ஏன் கேட்கவில்லை என்பது அவர்களிருவருக்குந்தான் தெரியும்). நீதிபதி தடையுத்தரவு அளித்துவிட்டார், இது தாமதமாகிவிட்டது என்றார். சொல்லுங்கள்! அந்த மக்களின் பிரதிநிதி, அவர்களுக்காக தானாக ஒன்றும் செய்ய மாட்டார், யாராவது கேட்கவேண்டும், தட்ஷணை வைக்கவேண்டும். இலங்கைக்காக அமெரிக்கா ஓடுகிறார், ரணிலிக்காக நீதிமன்றம் செல்கிறார். இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு? ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று நக்குண்டார் நாவிடார், சுயநலம், அவரைப்பற்றி முழுமையாக தெரியாமை, அவரது குணாதிசயங்களோடு ஒத்தமை. அனுமதிப்பத்திரம் வழங்கிய செய்தி வந்தவுடன், அவர்கள் பெயர் அறிவிக்காமல், இவர் எப்படி பெயர் சுட்டி பிரச்சாரம் செய்தார்? ஏன் அனுமதி வழங்கிய ரணிலுக்கெதிராக ஏதும் கூவவில்லை? அதை தெரிந்தே மக்கள் குறிப்பட்டவர்களுக்கு வாக்களித்தார்கள், அதோடு அந்தப்பிரச்சனையை கைவிட வேண்டியது அல்லது சமூகபொறுப்புணர்ச்சி இருந்தால் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது மக்களுக்கு. செய்ய வேண்டியதை செய்யாமல், தனக்கு வேண்டியதை மட்டும் செய்தால், அது அவர் வீட்டில் செய்ய வேண்டும். ஏன், தேர்தலுக்கு முன்னர் என்ன சொன்னார்? நான் தனிப்பட்ட சந்திப்பை நடத்தி ரணில் எங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார். அடுத்தநாள், தான் யாருக்கும் எந்த உறுதியும் அளிக்கவில்லை எண்டு ரணில் பகிரங்கப்படுத்தியபின் வேறு கட்சிக்கு ஆதரவு என்றார். ஏன் இவ்வளவு அவசரம்,அபிமானம், பாசம் தனது மக்களை தவிர? இவரை இவ்வளவு காலமும் அரசியலில் இருக்க விட்டதே மக்களின் பெருந்தன்மை! இந்த வசனம் உங்களது அனுபவம் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது. ஆனாலும் என்னை சிக்க வைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ தெரியவில்லை. எனக்கு அவரோடு எந்த தனி கொடுக்கல் வாங்கலுமில்லை, நடந்ததை சொல்லியிருக்கிறேன். முதல் முன்னாள் விக்கினேஸ்வரனுடன் சமராடினார். அவர் பதவி விலகவேண்டும் என்று போற வாற இடம், தெருக்கோடி எல்லாம் கூவினார், சவால் விட்டார், ஆட்களை கூட்டி விரட்டினார். பின்னர் வேறொரு கதை சொன்னார், அதை சொல்வதற்கு இவர் யார்? முடிந்தால் இந்தக்கட்சியை விட்டு வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் என்றார். அவர் செய்து காட்டினார். இன்னும் விடுகிறாரா அவரை? இவர் ஒரு தனி ரகம் சார்! தான் தான் எங்கும் எதிலும் முன்னுக்கு நிக்க வேணும் என்று அடம் பிடிப்பார். எதிர்ப்பவர் யாரும் இருந்தால், அவர்களை நாறடிச்சிடுவார். இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை தெரிந்தவர்கள் தொடர்வார்கள். நீங்கள் ஒன்றும் தெரியாமல் கேட்கவில்லை, ஆனாலும் கேட்டபடியால் சிலதை மட்டும் கூறியிருக்கிறேன். நேரில் சில சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடக்கின்றன சாட்சியாக. அவை உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, அதை நீங்கள் நம்பமுடியாவிட்டால் நான் சொல்வதையும் விளங்கி தெளியும் என நான் நம்பவில்லை. விளங்குகிறது. நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரித்து, இன்னொருவரை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதில்லை. மக்களுக்கு எதிராக செயற்படும் யாரையும் சாடுகிறேன், விமர்ச்சிக்கிறேன். அதை நீங்கள் காணத்தவறி விட்டீர்கள், அல்லது விரும்பவில்லை என நினைக்கிறன். சிலர் எனது கருத்தை மேலோட்டமாக வாசிப்பார்கள். காரணம் பந்தி. நான் எழுதும் கருத்துக்கு ஆதாரம் கொடுக்கும்போது பந்தியாகிறது, கொடுக்காவிட்டால் உங்களைப்போல், மூர்க்கத்தனமாக எதிர்க்கிறேன் என்பார்கள். நான் அனுராவை புகழ்வது கோஸானை சீண்டுவதற்கே. எல்லாத்திரிகளிலும் நான் சொன்னதை இழுத்துக்கொண்டு ஓடி வருவார், அதை நான் ரசிப்பதுண்டு. முக்கியமாக "அனுரா தெய்யோ, கண்ணை குத்திப்போடுவார்." போராடி களைத்த, இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆதரிக்க யாருமில்லை என ஏங்கும் என் இனத்துக்கு, கடைசி நட்சேத்திரம் அனுரா ஏதும் செய்ய மாட்டாரா என்கிற எதிர்பாப்பும் ஏக்கமும் பிரார்த்தனையும் இருக்கிறது. நன்றி வணக்கம்!
  16. சத்தியமூத்தியை எதிர்க்கிறேன் என்று போய், சத்தியமூத்தியின் கையில் பொல்லைகொடுக்கிறாரே? அவசர காரனுக்கு புத்தி மத்திமம். "யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு." சந்தர்பத்திற்கேற்ப பேசத்தெரியவில்லை. வலி நிறைய அனுபவித்திருப்பார் போல்.
  17. இல்லை. மௌனம், தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை, பயனில்லை என்று எனது அர்த்தம். எனது கருத்து எடுபடாதென உணரும்போது மௌனமே சிறந்த வழி.
  18. அங்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் இதுதான் நிலை. ஆனால் தன்னை பாதுகாக்க ஆயுதம் தூக்கினால் வரிஞ்சு கட்டிக்கொண்டு வரிசையில வருவினம். இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும், வெகு விரைவில் நடக்கலாம் காலந்தாழ்த்தியும் நடைபெறலாம்.
  19. சகுனி நிக்கிற இடத்தில சில உறுப்பினர் தலை காட்ட விரும்புவதில்லை.
  20. இங்குள்ள சைவ ஆலயங்களை இடித்து விகாரை கட்டுவது, இந்தியாவுக்கு போய் திருப்பதியில் விழுந்து கும்பிடுகிறதெல்லாம் காலை வாருகிற வேலை. மனிசன் இங்கு எதை செய்தாரோ அதை யாருக்காகவும் மாற்றவில்லை எங்கும். அனுரா சொன்னால் சொன்னதுதான்! ஞானசார தேரரையே மனமுருக வைத்துவிட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.