Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. கொஞ்சம் பொறுங்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான விபரம் இன்னும் வெளிவரவில்லை. சிறீதரன் என்கிறார்கள், ஈ. பி .டி .பி என்கிறார்கள், மாவீரர் போராளிகள் குடும்ப காப்பகம் என்கிறார்கள். இந்தப்பிரச்சனைக்கு கடந்த மாவீரர் தினத்திலேயே அடிக்கல் போட்டாயிற்று. சிறிதரனை இலக்கு வைத்து பல பிரச்சனைகள், சேறடிப்புகள் பல பக்கத்தாலும் அரங்கேறுகிறது. சொந்த புத்தி இல்லாமல் இரவல் புத்தியில் கொஞ்சம் ஆடுதுகள். மாவீரர், எங்கள் நிம்மதிக்காக உணவிழந்து, உறக்கமிழந்து, உறவிழந்து, போராடி இப்போ, அமைதி கொள்கிறார்கள். அங்கேயும் அவர்களை அமைதியாக உறங்க விடக்கூடாதென எதிரி அவர் உடல்களை கிளறினான். இப்போ, இன்னொரு கூட்டம் அந்த வேலையை ஆரம்பிச்சிருக்கு. வேலையில்லாததுகளின் தேவையில்லாத வேலையிது. எங்களுக்காக உழைத்து, இன்று தங்கள் வாழ்வை கொண்டுசெல்ல முடியாமல் ததத்தளிக்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு இவர்கள் முண்டியடிக்கட்டும் பாப்போம்! மாவீரர் துயிலும் இல்லத்தில் அரசியல் செய்யும் தேவை யாருக்கோ இப்போது எழுந்திருக்கிறது.
  2. இதைத்தான் நானும் சொல்ல வந்தேன். அவர்கள் அழிவுக்கும், எத்தனையோ வாழவேண்டிய, போராட்டத்தோடு சம்பந்தப்படாத இளைஞர்களின் அழிவுக்கும் காரணமானவர்கள். ஆமா.... கறுத்த கண்ணாடியோடு நிற்பவர், தன்ர அம்மாவுக்கு நடந்ததைத்தான் கேட்க்கிறேன் என்கிறார். என்னவோ ஒரு தேவை ஏற்பட்டிருக்கு, பொறுப்போம்.
  3. சாதாரண மக்களுக்கெல்லாம் உந்தப்புத்தி வராது. உதுகள் பிறப்பிலேயே கிரிமினல் புத்தியோடு பிறந்திருக்குங்கள். அதென்ன பழக்கம்? ஒருவரின் நல்ல பெயரை கெடுப்பது, தான் விட்ட பிழையை முந்திக்கொண்டு மற்றவர் மேல் சுமத்துவது, ஒருவருக்கு சிறப்பு விருந்தினராக வந்த அழைப்பை தடுத்து, தான் போவது? ஒரே கட்சியை சேர்ந்தவர்கள், ஒரே நிகழ்வுக்கு போகிறார்கள், சிறியரை, தனிய சிக்கலில் மாட்டி விட்டு ஓடிப்போய்சந்திக்கினமாம். அங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் இந்த பிரிச்சுக்கொட்டிகளை பார்த்து? இந்தத்திறத்தில இது, கட்சியின் தலைவர் பதவிக்கு அடிபடுகுது. சி .ஐ. டிக்கு இவரின் கடவுச் சீட்டில் தவறு இருக்கிறது என்று அறிவித்து, அவர்கள் குடி வரவு அகல்வு நிலையத்துக்கு அறிவித்தார்களாம். இந்த இரண்டு கோணங்கிகளை தவிர, யார் இதை செய்திருப்பார்கள்? இன்று சிறியர் விமான நிலையத்துக்கு வருவார் என்று யாருக்கு தெரியும்? யாருக்கு அந்த அவசியம்? முன்பெல்லாம் என்னை தனியாக அழைத்தார்கள் என்று ஓடித்திருந்தார், இப்போ அழையா விருந்தாளியா முன்னுக்கு ஓடித்திரியிறார். இப்ப, சிறியர் இதை மேல் விசாரணைக்கு கொண்டு போனால் தெரியும் யார் அந்த களவாளிகள் என்பது. பலநாள் கள்ளன் ஒருநாள் வசமாய் மாட்டாமலே போகப்போகிறார். கட்சியை முடக்கி வைத்துக்கொண்டு, அதன் பெயரால் ஊர் சுற்றுகிறார்கள். இந்த, கட்சி யாப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இப்படியான கோணங்கிகள் கட்சியை முடக்கி அவசர நிலையை ஏற்படுத்தும்போது, கட்சி வேலைகள் தடங்கல் ஏற்படாமல் எப்படி மீள்வது, இப்படியான குழப்பிகளை எப்படி கையாள்வது, அல்லது கட்டுப்படுத்துவது, கண்டிப்பாக, கொள்கைகளை மீறி செயற்படுபவர்களை உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், இப்படியான கண்டிப்பான மாற்றங்களை கொண்டுவரவேண்டும் யாப்பில்.
  4. உந்த இரண்டு சகுனியளும் சேர்ந்து, வெகுவிரைவில் வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை உருவாக்கி மக்களை அடிபட தூண்டப்போகுதுகள். போரின்பின், கனிமொழி இலங்கைக்கு வந்து மஹிந்தவின் உபசாரத்தில் மகிழ்ந்து வந்த நோக்கத்தையே மறந்து போனவா. பக்கத்தில நிக்கிற இரண்டும் மகிந்தவின் தரகர்கள், இதுகள் எங்கை தமிழர் பிரச்சனையை கதைக்கப்போகுதுகள்? அதில அவவின் அப்பா, ஈழத்தமிழர் அழியும்போது தனக்கு ஆதரவு தேடி நாடகம் நடித்த கதாநாயகன்.
  5. அவர்களின் ஆலோசனை ஆயிரத்தில் ஒன்று. நீங்களும் விரும்பினால்; இலவச ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
  6. இதன் இலைகள் மேற்பரப்பில் எல்லாம் எண்ணெய்த்தன்மை கொண்டவை. இலகுவில் வெயிலினால் தீ பற்றக்கூடியது. உயர்ந்த இந்த அடர்ந்த மரங்கள் காற்றையும் பலமாக ஏற்படுத்தும் போலிருக்கிறது. அதனாலேயே விரைவாக தீப்பிடித்து பரவுகிறது என நினைக்கிறன். இலங்கையில் இந்த மரம் அதிகமாக இருக்கிறதோ தெரியவில்லை. அங்குதான் இந்த மருந்து தயாரிக்கிறார்கள். விக்ஸ், சித்தா லெப்பை போன்றவை.
  7. தெரியும் சிறியர். 2020’ம் ஆண்டு, தான் தேர்தலில் வெல்வதற்காக, அந்த அப்பாவி மக்களுக்கு தூசணப்பிக்கரை இறக்கி நாடகம் ஆடியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இந்த தேர்தலின்பின், வடக்கை எங்களிடம் தாருங்கள் என்று அறைகூவல் விட்டவர். அடுத்த தேர்தலில் காணாமல் போவார், உந்த குழப்பியின் சகவாசத்தை விட்டு விலகி உண்மையாக மக்களுக்கு சேவை செய்யாவிடில். கிழக்கில் மேய்ச்சல் தரை பறிப்பு விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் மக்கள் போராடுகிறார்கள். இதில வடக்கையும் தன்னட்ட தரட்டாம். அவ்வளவுதான் அவரின் அறிவு. தன்னை முன்னுக்கு கொண்டுவந்து, காட்ட துடிப்பவர். அதற்காக எப்படியும் மாறுவார், யாரோடும் சேர்வார், எந்தக்கட்சிக்குள்ளும் நுழைவார்.
  8. போன வாரந்தான், இந்தியாவின் கால் கழுவுகிறார்கள், ஏதோ குடிக்கிறார்கள் என்று ஒருவர் அநாகரிகமாக வர்ணித்தார். இப்போ, உறவு சிறிதரனுக்கு முன் போய் இந்தியாவில் இறங்கி நின்று ஆதாரம் வெளியிடுகிறார். மாவையர் கூட்டத்துக்கு வருவதற்குமுன், அவரின் பதவியை பறிக்க அந்தரப்பட்ட சாணக்கியன் சுமந்திரன் கூட்டு, சிறிதரன் எங்கோ இருந்தார், நான் அவரோடு கதைக்கவுமில்லை, கட்சி எடுத்த முடிவை நான் அறிவித்தேன் என்று சிறுபிள்ளைத்தனமாக விளக்கம் கொடுக்கும் சுமந்திரன், ஆதாரத்தை வெளியிட்டு எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்கிறார். பொய்யும் புரட்டும் பண்பாளர்களை ஒன்றும் பாதிக்காது. மாறாக தீயவர்கள் தாங்கள் மக்களின் உண்மையான தலைவர்கள் இல்லை, அதற்கு பின்னால் இருக்கும் அவர்களின் சுயநலத்தை திரும்ப திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.
  9. அது என்ன விஷயமென்றால்; சிறிதரனுக்கும் விஷேட அழைப்பு வந்ததாம், அவர் விமான நிலையம் சென்றபோது, சி. ஐ. டி. அவரது பாஸ்போட்டில் தவறு இருக்கிறதென்று தடுத்து விட்டார்களாம். இதே கடவுச்சீட்டுடன் அண்மையில் மூன்று தடவைகள் இதே விமான நிலையத்தினூடாக வெளிநாட்டுக்கு சிறிதரன் சென்றிருக்கிறார். அப்போ இல்லாத பிழை இப்போ எப்படி வந்தது? அவரை தடுத்துவிட்டு, இவர்கள் முன்னுக்கு ஓடிப்போய் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என ஆதாரம் தெரிவிக்கினமாம். இதுதான் சட்ட மேதையின் திறன். "உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்." என்று இருவரும் புலம்பும் நேரம் வரும். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தார்களா? உல்லாசம் அனுபவிக்க வந்தார்களா? "அழியிற காலத்துக்கு எழுகிறது அகந்தை." இதைத்தான் அத்தைக்குணம் என்று ஊரில் சொல்வார்கள்! சாணக்கியனோடு ஒட்டிக்கொண்டு திரிந்து பயிற்சி அளிக்கிறாராம். மக்களை எப்படி ஏமாற்றுவது, இரகசிய சந்திப்புகளை எப்படி நடத்துவதென்று. இருக்கட்டும், அவ்வளவு திறமையானவரை ஏன் கட்சியும், மக்களும் நிராகரித்தார்கள் என்பதை ஆய்ந்தறிய சாணக்கியனுக்கு அனுபவம் இல்லை. இவரில தொங்கிக்கொண்டு திரிந்தால் அது வராது, கபடப்புத்திதான் வளரும்.
  10. என்னது? அன்றே சாணக்கியன் தமிழரசுக்கட்சியில் இருந்தாரா? ஐ .நா. பிரதிநிதி எப்போ அமெரிக்க தூதுவரானார்? சிலர் மற்றவரை முட்டாள்கள், தாங்கள் மேதாவிகள் என நினைத்து தங்கள் முட்டள்தனத்தை பகிரங்கப்படுத்துகிறது.
  11. ஆமாம். அதன் காரணத்தை விளக்கினால், களத்தில பலருக்கு சௌகரியமாய், அவற்றை தெரிந்து வழக்கு. பிரச்சனை, நட்டஈடு என்று சிக்காமல் காரியத்தை ஆற்றலாம். அதிலும் விமானத்தில் என்றால் இன்னும் சிறப்பாய் பலர் முண்டியடித்து பயணசீட்டுக்கு பதிவர். பயணமும் இன்பமாய் இருக்கும், அனுபவமும் புதுமையாய் இருக்கும். இதை அக்குவேறு, ஆணிவேராய் விளக்குவதற்கு சிறியர், ஈழப்பிரியன் சரியான ஆட்கள் என்று நினைக்கிறன்.
  12. உண்மைதான் சாமியார். எங்கேயாவது இயற்கை அழிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்தால், எங்கட சனம் வண்டிலிலை வெங்காயம், மிளகாய், அது இதென்று கொண்டுவந்து குவிச்சுப்போடும். காசு, உடை கொடுப்போர் சிலராகத்தான் இருப்பர். யாராவது வீட்டுக்கு வந்தால் அவர்கள் போகும்போது இவற்றை கட்டியனுப்புவர். தாங்கள் உறவினர்களை சந்திக்கபோனாலும் இதே நிலைமைதான். ஞாபகம் வருதே....
  13. எங்கள் வீட்டில் இரண்டு மரங்கள் அப்பா கொண்டு வந்து வைத்தார். இவ்வளவு உயரமாக வருமென்று அப்போ நினைத்திருக்கவில்லை. ஒரு மரம் ஓரளவு உயரத்தில் பட்டுவிட்டது. ஊரிலுள்ளோர் அனைவரும் வந்து அதை மொட்டையடித்து விடுவார்கள், குளிர் காலத்தில் சுடு நீராவி பிடிப்பதற்காக. அப்பா அதை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். இடப்பெயர்வின் பின் மீண்டும் வந்தபோது, அது நின்ற இடமே தெரியவில்லை, கவலையாக இருந்தது. நல்ல வேளை! அது இப்போ நின்றிருந்தால் முழு இடத்தையும் அடைத்திருந்திருக்கும்.
  14. இப்போ, பல வீடுகளில் சாமிக்கு வைக்கவே பூ இல்லை. ஒவ்வொரு சமையல் செடி இளித்துக்கொண்டு நிக்குது.
  15. நல்லவேளை! தக்க சமயத்தில் ஓடி வந்து நினைவூட்டியிருக்கிறார். இல்லையேன்றால் இந்த கலேபரத்தில் நிரந்தரமாகவே மறந்திருப்பியள் அவரை. பாவம், அப்பாவி மனுசி போல. அதுதான் அவ்வளவு இலகுவாக மறந்து விட்டார். இல்லையென்றால்; செய்தி கேட்ட உடனேயே, வேக வேகமாக எடுத்ததும் எடுக்காததுமாக ஓடி மறைந்திருப்பார்.
  16. இல்லை, ஒத்த குண இயல்புடையவர்கள் அவ்வாறே இருப்பார்கள். அதிலும், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். எதிர்க்கருத்து வைக்க முடியாமல் ஒதுங்குவோர் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் உண்மையை ஏற்க மறுத்து, தான்பிடிச்ச முயலுக்கு மூன்று காலென்று காட்ட முயன்று, எந்தளவுக்கு எதிர்க்கருத்தாளரை வசை பாட முடியுமோ அந்தளவுக்கு பாடி, கேலி பண்ணி, மற்றவரின் கருத்துக்களை மூர்க்கத்தனமாக எதிர்ப்பவருடன் எந்தப்புத்திசாலியும் கருத்தாடி, தனது நேரத்தை வீணாக்கி, வாசிப்பவரை குழப்பமாக்கி, அவரோடு எங்களையும் ஒப்பிட வைக்க விரும்ப மாட்டார்கள் என்பதே யதார்த்தம்! இது, இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படித்தான். தானே ஒரு கருத்தை வைப்பார், அது பிழையென நிரூபிக்கப்படவுடன் உங்களையே தப்பு சொல்லி அடாவடி பண்ணுவார். இல்லை உங்களுக்கு பகிடியும் வெற்றியும் தெரியவில்லை என்று நழுவுவார். அதனாற்தான், பலதடவை நான் எச்சரிப்பது உண்டு. "நேரம் பொன்னானது." "ஒரு சொல் போதுமென்றால், இரு சொற்களை செலவு செய்யாதே, எவ்வளவு சொல்லியும் பயன் இல்லையென்றால், ஒரு சொல்லையும் விரயமாக்காதே." என்பது எவ்வளவு உண்மையானது என்பதை இங்கு அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.
  17. மனித மூளைக்கு வேலையுமில்லை, மதிப்புமில்லை. இது, ஒரு பரீட்சையில் பார்த்தெழுதுதல் போன்றது. கஸ்ரப்பட்டு படித்து, மீண்டும் உடலை வருத்தி உழைப்பவனுக்கு ஊதியம் குறைவு, கேள்வி அதிகம், மதிப்பும் சொல்லும்படி இல்லை பணி நிலையங்களில். ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் எந்த கஸ்ரமும் இல்லாமல் பெற்று விடுகிறார்கள். இனி வருங்காலத்தில் பாடசாலைக்கு சென்று கஸ்ரப்பட்டு கல்வி கற்கும் தேவையும் வராது. அறிவு, தொழில் நுட்பம் வளர்வது முன்னேற்றமாக இருந்தாலும், உடலுழைப்பு இல்லாமை, அழிவு, களவு போன்ற சீர்கேடுகளையும் வளர்க்கிறது. வீட்டிலிருந்தபடியே அடுத்தவன் கஸ்ரப்பட்டு சேர்த்த செல்வத்தையெல்லாம் மிக கச்சிதமாக அவர்களின் சம்மதத்துடனேயே திருடி மறைந்து போகிறார்கள். நாங்கள் நினைப்பதையெல்லாம் வெளிப்படுத்திவிடும் தொழில் நுட்பம் வெகு விரைவில்.
  18. அநேகமாக, மாரி காலத்தில் தோட்ட வயல்களெல்லாம் நீரில் மிதந்துவிடும். மேட்டுக்காணிகள், வீட்டுத்தோட்டங்களில் இருந்தே இவைகள் சந்தைக்கு எடுத்து வருவார்கள். இப்போ வீடுகளுக்குள் வீடு, அதைவிட பாரிய வெள்ளம் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய நிலை. தோட்டக்காரர் சிலவேளைகளில் அதிக லாபம் எடுத்தாலும், பலவேளைகளில் பருவம் பிந்திய முந்திய மழை, வறட்சி அவர்களை நிலையான சந்தோஷத்தில் இருக்க விடுவதில்லை. இயற்கையால் அதிக அழிவுகளை சந்திப்பவர்கள் விவசாயிகளே!
  19. அப்போ, செய்தி உண்மைதான். இதுவே இலங்கையில் என்றால்; குற்றச்சாட்டு எல்லாம் மறைந்து விடும். சுனாமி பண முறைகேட்டு வழக்கு மஹிந்தவுக்கு எதிராக வந்தபோது ஜனாதிபதியாக போட்டியிட்டு வென்றார், தாக்கல் செய்த வழக்கு காணாமல் போய்விட்டது. அடுத்து, ஆயுத கொள்வனவில் முறைகேடு சம்பந்தமாக கோத்தாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள். அவர் ஜனாதிபதியானதும் அந்த வழக்கும் மாயமானது. கொள்ளை அடித்து வாக்கு வாங்க செலவழிக்கிறது, பின் மக்களை கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்குகிறது. இதுகளையும் அநுர கவனிக்க வேண்டும். கொஞ்ச நாளா, எனக்கு உயிர் அச்சுறுத்தல், பாதுகாப்பு வேண்டும் என்று அலறினார், கூட இருந்தவர்களையும் தட்டிவிட்டார். பொன்சேகாவின் பேட்டியோடு எல்லாரும் அடங்கி விட்டார்கள்.
  20. ஜனாதிபதி சட்டத்தரணி என்றால்; ஏதோ பாண்டித்தியம் பெற்றதுபோல் புலுடா விடுவது போல் இதுவும் ஒன்று. சும்மாவே தனக்குள்தான் கட்சி என்பதுபோல், தொடக்க காலத்தில் இருந்து இருக்கும் வயதில் மூத்தவர்களை கட்டிப்போட நினைக்கும் சாணக்கியனுக்கு, இந்த ஒரு பதவிகாணும். மணி கட்டின மாதிரி துள்ளுவதற்கு .அவருக்கு அனுபவமோ, பக்குவமோ இல்லை. ஏதோ கொம்பு முளைச்சமாதிரி துள்ளுறார், கவுண்டு விழுந்தாலும் விழலாம். பதவி வரும்போது பணிவு வரவேண்டும். இது அதிகார மோகம் உச்சத்துக்கு ஏறி யாரோடு பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதையறியாமல் தான் வந்த பாதையை உணராமல் அறிக்கை விடுவார். அத்தைக்கு பவுசு வந்தா அர்த்தராத்திரியில் எழும்பி குடை பிடிக்குமாம். மக்கள் போட்ட பிச்சையில் வந்து நின்று கொண்டு, வடக்கையும் எங்களிடம் தாருங்கள் நாங்கள் திருத்துகிறோம் என்று அறிக்கை விட்டவரல்லோ. அப்போ, கிழக்கிலே ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாம் நிறைவாக இருக்கிறது. இப்போ, வடக்கிலதான் பிரச்சனை என்பது உண்மையை ஏற்றுக்கொள்ளாத தன்மை. அதிலிருந்து அவரது அறிவை புரிந்து கொள்ளுங்கள். துள்ளுற மாடு பொதி சுமக்காது.
  21. அதற்கு முன்னாலேயே போட்டாயிற்று. பிரதமமந்திரி பதவி என்று பேட்டி கொடுத்ததை, யாரோ போட்டுக்கொடுத்து விட்டானுகள். பறந்து வந்தது அடுத்த அறிவிப்பு. அவருக்கு பதவியேதுமில்லை. கேவலம் என்னவென்றால், வடக்கின் வசந்தத்தோடு சேர்த்து சொன்னது. இவர் ஒரு சட்ட மேதை என்று சிலர் கருதுகின்றனர். பாவம் அவர்கள். ஒரு கட்சியின் யாப்பை பின்பற்றத்தெரியாதவரெல்லாம் சட்ட மேதையாம். அவர்களுக்கு சட்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். சாம்பல் குளித்த நரி, ஒருநாள் மெத்த மழையில் மொத்தமாய் நனைந்து சாயம் வெளுக்காமலா போகும்? அதுவரை ஏமாற்றட்டும். ஏமாளிகள் இருக்கும்வரை, ஏமாற்றுபவரும் இருக்கத்தான் செய்வர்!
  22. சிவஞானம் யார் இதை சொல்வதற்கு? இந்தப் பதவிக்காக சுமந்திரனை தூற்றியவரும், அது கிடைத்தவுடன் வாயை அடக்கியவருந்தான் சிவஞானம்! தான் அந்தபதவிக்கு பொருத்தமானவரா என்று கூட யோசிக்க முடியவில்லை அவரால். தலைவர் பதவியாகட்டும் செயலாளர் பதவியாகட்டும் பெயர் இவர்களுடையது, அதிகாரம் சுமந்திரனின் கையில்த்தான் இருக்கும். அவர்களுக்கு, அது பரவாயில்லை, தங்கள் பெயர் இருந்தால் போதுமென்றிருப்பவர்கள். அண்மையில் கூட சுமந்திரன் சொன்னார். கட்சியில் சிறிதரன் பதவியை பற்றி ஊடகவியலாளர் கேள்வி கேட்டபோது, நான் சிறிதரனுக்கு தூரவே இருந்தேன், கட்சியில் முடிவெடுத்தார்கள், அதை வெளியிட அவர்களுக்கு முதுகெலும்பில்லை அதை சொல்வதற்கு, நான் பேச்சாளராக இருப்பதால் நான் அறிவித்தேன் என்றார். சரி, முதுகெலும்புள்ளவருக்கு, சரி பிழை தெரியாதா அல்லது அது பிழை என்று சொல்ல அவருக்கு முதுகெலும்பு இல்லையா? அப்போ அந்தப் பதவியிலிருந்து ஏன் இன்னும் விலக மாட்டேனென அடம்பிடிக்கிறார்? அவருக்கு தெரியும். கட்சிக்கு எதிரான தனது செயற்பாடுகளுக்கு எதிராக அன்று சம்பந்தனோ, வேறெவரோ நடவடிக்கை எடுத்திருந்தால்; சுமந்திரன் என்றொருவரை யாரும் நினைத்துப்பார்த்துக்கூட இருக்க மாட்டார் இன்று, அதே நேரம் தான் செய்தது கட்சிக்கு எதிராக வேண்டுமென்றே செயற்பட்டேன் என்பதும் தெரியும். அதனால் தனக்கு எதிராக வரக்கூடியவர்களை, தனது தன்னிச்சையான செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை விரட்டி விட வேண்டும் என்கிற ஒரே கொள்கையில் செயற்படுகிறார். அதே நேரம், சிங்களம் காலால் இட்ட பணியை, தான் தலையில் வைத்து கொண்டாடிய படியாலே எந்த அரசு ஆட்சிக்கு வந்தபோதும் தனக்கென்று ஒரு ஆசனத்தை, மரியாதையை, கட்சியை கடந்து பெற முடிந்தது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். ஆகவேதான் தனக்கு பிரதமமந்திரி பதவியேற்க அழைப்பு வருமென அறிவித்து காத்திருந்தார். அது கைகூடவில்லையாயினும் மனந்தளராமல் குறுக்கு வழிகளை கையாண்டு கொண்டு நம்பிக்கையோடு இருக்கிறார். இந்த அனுபவத்தில், தன்னை கேள்வி கேட்கத்துணியாத, விமர்ச்சிக்காத, தான் இட்ட கட்டளையை தலையால் செய்யக்கூடிய, பதவி மட்டும் போதுமென்று அலைகிற கூட்டத்தை தன்னோடு சேர்த்துக்கொண்டால், தனது பதவிக்கு ஆபத்தில்லை என நினைக்கிறார். அப்படி ஏதும் வந்தாலும் கூட, அவர்களுக்கு முடிவு எடுக்கவோ, அறிவிக்கவோ முதுகெலும்பில்லை, நான் பேச்சாளராக இருப்பதால் அவர்களின் முடிவை அறிவித்தேன் என்று தப்பிக்கொள்வார். ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சி மக்களின் நல்மதிப்பை பெற்றிருந்தது உண்மை. காரணம் பெயர், வேறு தெரிவுகளும் மக்களுக்கு இருக்கவில்லை. இருபத்திரண்டு ஆசனங்களை பெற்ற கட்சி இன்று, எத்தனை பெற்றிருக்கிறது? விழுந்தவன் மீசையில மண் ஒட்டேல என்பதுபோல், நாம் தான் வெற்றி என்கிறார்கள்,தம் தனிப்பட்ட நிராகரிப்பை மறைத்து. ஒரு காலத்தில் வேறு கட்சியில் தோற்றவர்கள் தமிழரசில் சேர்ந்து வெற்றியீட்டி பின் வெளியேறி தோற்ற வரலாறுமுண்டு. வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டால்; எந்த அடாவடியும் பண்ணி விட்டு பாதுகாப்பாக ஒளிந்து கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. இன்று அப்படியில்லை. வீட்டுக்குள் புகுந்திருப்பதெல்லாம் கரு நாகங்கள் என்பது மக்களுக்கு தெரியும். இன்று மக்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றன. இளம் செயற்திறனுள்ள உறுப்பினர்கள் இருக்கிறார்கள், தங்களோடு நின்று, தங்களுக்காக, பிரச்சனைகளுக்காக பேசுபவர்களை தெரிந்துகொள்கிறார்கள். இனிமேல் தமிழரசு என்பது அவர்களுக்கு தேவையில்லை. அதனால் தாம் பட்ட கஸ்ரங்கள், இழப்புகள், தனிமை, கையறுநிலை, துரோகம் எல்லாம் அனுபவித்து விட்டார்கள். அது இனிமேல் தமக்கு உதவாது என்பதும் தெரியும். மக்கள் பலபேர் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். அதற்கு காரணம்; சுயநலமிக்க, முன்னோக்கு இல்லாமல், பதவிக்கு அலையும் நபர்கள். ஆகவே இன்னொரு தேர்தல் வரும் சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியை மக்கள் ஏற்கப்போவதில்லை. இதே சாணக்கியன், இதே தேர்தல் தொகுதியில், சிங்கள கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின் இங்கு உள்ளீர்க்கப்பட்டு, முதல் தேர்தலில் தூஷணப்பிக்கரை அழைத்து, வலிந்து ஒரு நாடகம் நடத்தி, அப்பாவி மக்களை பயங்காட்டி வென்றார். அந்த காணொளியை பாத்தாலே அப்பட்டமாக தெரிகிறது. இந்தமுறை இவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கான விசாரணை இவரது வெற்றியை நிர்ணயித்தது. அதற்கு அனுரா வேண்டுமென்றே இதை ஆரம்பித்ததும் காரணம். இல்லையென்றால், சந்திரகாந்தன் சிறையிலிருக்கும்போதே வெற்றியடைய வைக்கப்பட்டவர். அதை மறந்து சாணக்கியன் ஆட வெளிக்கிட்டால், தமிழரசுக்கட்சியையே மக்கள் நிராகரிப்பார்கள். எதற்கும் அடக்கி வாசிப்பது நல்லது. நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான், மற்றவர்களை அடக்கவும், விமர்சிக்கவும் தொடங்கி எல்லாவற்றுக்கும் தானே காரணம் என்று அடுத்த சுமந்திரனாக அடக்கியாள வெளிக்கிட்டால், வெகு சீக்கிரம் பாடம் படிப்பார்.
  23. தானே சட்ட விரோதமாக அனுமதிப்பத்திரம் தயாரித்து, தானே மணல் அகழ்ந்திருக்கிறார் என்றால்; அவர் எவ்வளவு பெரிய கேடி. ஆமா, இவ்வளவும் நடந்துகொண்டிருக்கு, இதற்குரிய அதிகாரிகள் இதனை கண்டுபிடிக்காமல் தூங்கிக்கொண்டிருந்தார்களா? அவர்களும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும். புலிகளின் விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர் தொடங்கி, இன்றுவரை சட்ட விரோத பனைமரம் மற்றும் ஏனைய விலை உயர்ந்த மரங்கள் தறிக்கப்பட்டு வருகின்றன. அதை யாரும் தட்டிக்கேட்கவில்லை, தடுக்கவுமில்லை. நேற்று, ஒருவர் திடீரென தோன்றி, ஏதோ இன்றுதான் பனைமரம் சட்ட விரோதமாக தறிப்பது போலவும், அதுவும் அர்ச்சுனா தன்னை கேள்வி கேட்டதாலேயே, அது நடந்தது, தன்னால் தடுக்க முடியாமல் போனது போலவும் ஒரு காணொளி வெளியிட்டு அர்ச்சுனாவை சாடியிருக்கிறார். இதில தான் புலிகளின் காலம் தொடக்கம் வேலை செய்ததாகவும், தனது திறமையினால் கட்சி அபிமானம் இல்லாமல் சேவை செய்வதாகவும், அடிக்கொரு தடவை அந்த காணொளியில் அர்ச்சுனாவை கேலி பண்ணி போட்டிருக்கிறார். இளம், துடிப்பான பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டவுடன் இவர்களுக்கு பயம் வந்து, அவர்களை துரத்தியடித்துவிட்டால், இஷ்டம் போல் ஆடலாமென கனவு காண்கிறார்கள். வேலை செய்ய முடியாவிட்டால், விலகி மற்றவர்களுக்கு இடம் விடலாம். ஆனால் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலக்க இவர்களால் முடியாது. இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டுமென்றே மக்கள் இவர்களை தெரிந்தெடுத்து, சமூகத்தில் நடக்கும்அநீதிகளை, அதிகாரிகளின் முறைகேடான செயல்களை, பாராமுகத்தை முறையிட்டுள்ளார்கள். அவர்கள் ஒன்றும் தானாக உங்களை குறை சொல்லவில்லை. மக்கள் கொடுத்த முறைபாட்டையே அவர்கள் கேட்கிறார்கள். காரணம்; அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதனாலேயே இன்று பலகாலம் அரங்கேறிய சட்ட விரோத மண் அகழ்வை கண்டு பிடித்து விசாரணை செய்ய முடிந்தது. இதுவும் சட்ட விரோதம். அருச்சுனா வருவதற்கு முதல், சட்ட விரோத பனை மரம் தறித்தலை நீங்கள் அனுமதித்திருந்தீர்கள், அல்லது உங்கள் பொறுப்பை சரியாக செய்யவில்லை. கேள்வி கேட்ட அருச்சுனாவை பழிவாங்க துடிக்கிறீர்கள். சட்ட விரோதிகள், அதை அனுமதித்தவர்கள், இப்போ காணொளிகளோடு தம்மை பரிசுத்தப்படுத்த அலைகிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.