Everything posted by satan
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
முன்பெல்லாம், பங்குக்கு கிணறு என்றிருந்தது. பல குடும்ப உறவுகள் சேர்ந்து பொதுவாக கிணறு பாவித்தார்கள், உறவும் வளர்ந்தது. இன்று அப்படியில்லை அந்தக்கிணறுகள் பாவனையற்று புதர் மண்டியிருக்கிறது, உறவுகள் வெளியேறிவிட்டார்கள். இருப்பவர்களும் ஒருவரோடொருவர் கதைக்க விரும்புவதில்லை. நான்கு புறமும் மதில்கள், வீட்டுக்கொரு குழாய்கிணறு, அடுத்தவீட்டில் அழுது கேட்டாலும் போய்ப்பார்த்து என்னவென்று கேட்க மனித நேயமில்லை, நேரமில்லை. தோட்டத்தில், சுற்ற உள்ள வயல் காணிக்காரர் முறை போட்டு பகிர்ந்து வேலை செய்தார்கள், கூலியில்லை. இப்போ, அவன் காணியில் விளைச்சல் அதிகமாகிவிட்டால், தொண்டைக்கால தண்ணி இறங்காது. ஒருவன் விழுந்தால், மற்றவன் சிரிக்கிறான், ரசிக்கிறான். ஆனால் இயற்கை மட்டும் எங்களுக்கு ஏற்றவாறு உதவிபுரியவேண்டும். நாங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? சிங்களவன் குடியேறுகிறான் என்று பொருமும் நாம், எமது இடங்களை சுருக்கி அவனை வரவழைக்கிறோம். நாம் சிந்திக்கணும், நமது எண்ணங்களை மாற்றவேணும். வீடு கட்ட வேண்டுமா, கிணறு தோண்ட வேண்டுமா, கழிப்பறை அமைக்க வேண்டுமா? சுகாதார பரிசோதகர் வந்து பரிசோதித்து தகுந்த இடம் காட்டுவார். இப்போ யார் அதை கடைபிடிக்கிறார்கள்? பரிசோதகர் என்று இருப்பார், அவருக்கே முறைகள், சட்டங்கள், ஒழுங்குகள் புரிவதில்லை, தெரியாது. தனக்கு வேண்டியவருக்கு ஒரு சட்டம், தனக்கு வேண்டாதவருக்கு வேறொரு சட்டம், ஒழுங்காக அனுமதிக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் விண்ணப்பங்களை ஆராயாது, யாராவது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் முறையற்ற விதத்தில் முறைப்பாடளித்தால், உடனடியாக வந்திறங்கி, முறையற்ற விதத்தில் தடைகளை ஏற்படுத்தி, அவர்களின் முயற்சியை தடுப்பது. நாமும் எமது திணைக்களங்களும் அதிகாரிகளும் இதில மற்றவரை தூற்றிக்கொண்டு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்பிடி மரியாதையா எளிமையா சொல்லுங்கோ சாமியார், "ஆடையில்லா ஊரில், கோமணம் கட்டியவன் விசாரன் பைத்தியக்காரன்." அப்பத்தான் எல்லாருக்கும் விளங்கும்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
அவ்வளவு நம்பிக்கையா மனைவிமேல்? ரொம்ப அப்பாவி ஐயா நீங்கள்!
-
சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச
இவர்களது ஊழல்களும் அதிகார துஸ்பிரயோகமும் கொலைகளுமே இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட காரணம். தேர்ந்தெடுத்த மக்களே காரணம் சொல்லி விரட்டினார்கள், தேர்தலில் இவர்களை நிராகரித்தார்கள். தாங்கள் வென்றால்; மக்கள் எங்களுக்கு தந்த ஆணை என்று சொல்லி, இல்லாததும் பொல்லாததும் நிறைவேற்றுவார்கள். தங்கள் இஷ்ட்டத்துக்கு ஆடுவார்கள். அதே மக்கள் நிராகரித்தால்; ஊடக சூழ்ச்சி, உள்நாட்டு, வெளிநாட்டுச்சதி என்று எங்கோ கைகாட்டுவார்கள். இதன்மூலம் தெரிவது; இவர்கள் தாங்கள் உத்தமர்கள், எதையும் திருத்தப்போவதில்லை என்பதோடு இவர்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தால்; இந்த நிலையே தொடரும் என்பதே இதன்மூலம் இவர்கள் தெரிவித்துக்கொள்கிறார்கள்!
-
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை..! கண்கண்ட சாட்சி வாக்குமூலம்
உண்மைகள் என்றும் உறங்குவதில்லை! அதன்மேல் எவ்வளவு மண்ணை போட்டு மூடினாலும், அதற்கு மேல் ஏறி, மேலெழுந்து வரும். அதை செய்யாவிடில், அனுர சொல்வீரராக மட்டுமே இருப்பார். அனுர அப்படியிருக்க மாட்டார் என்பதற்கு இவர் கொடுக்கும் சாட்சி ஒன்றே போதுமானது. இப்போ, இந்த கொலையின் சூத்திரதாரி படும் அவசரம் விடும் அறிக்கையை எதிர்பார்ப்போம். ஒரு தடவை ஐ. நாவில் அப்போதைய இலங்கை பிரதிநிதி, இந்த எக்னெலிகொட பிரான்சில் வசிப்பதாக ஒரு கதைவிட்டார். அதற்கான ஆதாரம் கேட்டபோது; யாரோ சொன்னார்களாம். ஒரு பொறுப்பான அதிகாரி சொல்லும் பதிலா இது? அவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்!
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
பாஞ் அவர்களே! தலையங்கங்களுக்கும் உங்களுக்கும் என்ன ஒரே பிரச்சனை? எப்போதுமே தலையங்கத்தை குறை பிடிக்கிறீர்களே? தலையங்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் போலுள்ளதே. ம்... திரிஷாவை அங்கம் அங்கமாக ரசித்திருக்கிறார்.
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
தேங்காய் வாங்க காசில்லாமல் இருப்பவர்களுக்கு கொடுப்பதே கடவுளுக்கு செலுத்தும் நேர்த்தி. பாவப்பட்ட மக்கள் இதை எடுப்பதற்கு அனுமதித்திருப்பார்களா, தேங்காய் அடித்து நேர்த்தி செலுத்துபவர்கள்? ஒருவர் பிள்ளையாருக்கு வடை மாலை போடுவிட்டு, கண்மூடி தேவாரம் பாடினாராம், தேவாரம் முடிய கண் திறந்து பார்த்தபோது வடை மாலையை காணவில்லையாம். பின் என்ன நடந்திருக்கும்? வாசகர்களுக்கே விடுகிறேன் விடையை கண்டுபிடியுங்கள்!
-
வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டங்களில் பாரிய நிதியிழப்பு : தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு
வீதியமைப்பில் பனையோலை. கள்ளத்தரகர் மூலம் நடத்தப்படும் ஊழல்.
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
ஐயா! நீங்கள் கூறியதற்குத்தான் பதிலளித்தேனே தவிர அதைவிட தவறாக நானேதும் கூறவில்லையே. ம்..... செய்வது மனித படுகொலை. இதில ஜீவ காருண்யம் பேச்சு, செய்த தவறுகளை மறைக்க. போகப்போக உலகநாடுகளுக்கு தர்ம சிந்தனை போதிக்குது இலங்கை. ஐ . நாவிலே தனது குற்றத்தை மறைத்து பேய்க்காட்டிக்கொண்டு.
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முடிவு சி. வி. கே. கு மகிழ்ச்சியை கொடுத்திருக்குமென நம்புகிறேன். இனி சுமந்திரனை வாழ்த்துவார். கட்சி தொண்டர்கள், பதாதை வைத்து "கட்சியை சிதைக்காதே" போன்ற வாசகங்களை கூட்டத்திற்கு முன் மண்டப வாயிலில் வைத்திருந்தனர். இவர் ஒரு சட்ட நிபுணர் என இங்கு சிலர் புழுகுகின்றனர். அதனாலோ என்னவோ, அவரும் தான் பெரிய சட்ட மேதை என்கிற நினைவில், கேள்வி கேட்டால் நீதிமன்றத்தில் சந்திப்போம் என எச்சரிக்கிறார். இவ்வளவுதான் இவரது சட்ட அறிவு, பொறுப்பு. நீதிமன்றம் இப்படியான வழக்குகள் வந்தால்; இவர்களை எச்சரித்து, கட்சியை தடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சிறு பிள்ளைகள் மாதிரி, நீதிமன்றத்தில் நிற்பதும், நீதிமன்றத்தை காட்டி பயமுறுத்துவதும், தன்னை விட்டால் மற்றவர்களுக்கு சட்டம் தெரியாது என்கிற மமதை. இனிமேல் இப்படியான சிறுபிள்ளைத்தனமான சில்மிஷங்கள் சுமந்திரன் கட்சிக்குள் செய்தால்; கட்சி தொண்டர்கள், அபிமானிகள், அங்கத்தவர்கள் சுமந்திரனுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்து, கட்சியை விட்டு துரத்த வேண்டும். அதோடு, பொறுப்பில்லாமல் கருத்துக்களை வெளியிடும் உளறுவாயனிடமிருந்து பேச்சாளர் பதவியை பிடுங்க வேண்டும். ஏற்கெனவே சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூடியபோது, இவர் பொருந்தாத காரணம் கூறி அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார். இப்போ, மக்கள் இவரை நிராகரித்த பின்னும் விடாப்பிடியாக கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறார். தனக்குப்பிடிக்காதவர்களை நாறடிக்க இந்தபதவி தேவை அவருக்கு. ஊடகவியலாளர் இவரிடம் பேட்டி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
அவரிருக்கப்பயமேன்? ஊரோடு ஒத்தது. யார் பாதுகாப்புக்கும் யாரும் உத்தரவாதமில்லை.
-
ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
ஓய்வில் இருந்து கொண்டு விசாரணையை எதிர்கொள்ள சுலபமாக இருக்கும் இவருக்கு. இப்போ, இவர் செய்த கொடூரங்களை, சிங்கள மக்கள் பார்வையிட செய்ய வேண்டும். "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்."
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
தப்பித்து வெளிநாடுகளுக்கு ஓடிய குரங்குகளும், சமயத்தில் திரும்பி வரும். கவனமாக தப்ப விடாமல், விமான நிலையத்தில் வைத்தே பிடித்து அனுப்பிவிடுங்கள் சீனாவுக்கு. இந்தக்குரங்கு இங்கிலிஷ் கதைக்கும் என்றும் சொல்லுங்கள் மறக்காமல்.
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
அப்படியுமிருக்கலாம். வருட ஆரம்பத்தில் தேசிய நல்லிணக்கம் என்று, கூடி ஆரம்பிப்பார்கள். பிறகு, அவர்களின் கோயிலை இடித்து, வழிபாட்டை தடுத்து, ஆர்ப்பாட்டம் பண்ணி அதுதான் தேசிய நல்லிணக்கம் என்று முடிப்பார்கள். ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் தொடர்பே இருக்காது. இப்போ, இவர்களின் சாசனத்தில் நாற்பத்தி இரண்டாம் மூன்றாம் பிரிவுகளில் மாற்றம் செய்யபோகிறார்களாம். பாப்போம், தேசிய நல்லிணக்கம் தேசிய பிணக்காக மாறாமல் இருந்தால் சரி.
-
யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா
தேசிய, மத, இன நல்லிணக்கமுங்கோ!
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஹீ.... ஹீ .... அந்த வயதிலும் எத்தனை பெரிய கவலை உங்களுக்கு உருவாக்கி விட்டார் உங்கள் பாட்டி! அது சரி, உங்களுக்கு கலியாணம் நடக்கும்போது, அது நடந்ததா? அதைநினைத்து முன்னாயத்தங்கள் செய்தீர்களா இல்லையா? குறும்புப்பாட்டி உயிருடன் இருந்தாவா உங்களுக்கு கலியாணம் நடக்கும்போது? சிறு வயதில், எங்களுக்கு எங்கள் மூதாதையரால் சொல்லப்பட்ட கதைகளில் சில அறிவு சார்ந்த விஞ்ஞான, அர்த்தமான கருத்துக்களும் உண்டு. அவற்றை விளக்கி சொல்ல அவர்களுக்கு தெரியவில்லை, எங்களால் கேள்வி கேட்கவும் முடியவில்லை. சில, எங்களின் குறும்புத்தனத்தை மட்டுப்படுத்த சொல்லப்பட்ட பொய்கள். அவை நமது தன்னம்பிக்கையை பாதித்திருக்கின்றன என்பதை இன்று நான் உணர்கிறேன். ஆனால் இன்றைய சிறுவர்களை நாம் அப்படி முடக்கிவிட முடியாது. ஒன்று; கேள்வி கேட்கிறார்கள், தாங்களாகவே உண்மைத்தன்மையை ஆராய்கிறார்கள். மற்றையது; நமது அனுபவம் நம் பிள்ளைகளை ஏமாற்ற இடமளிப்பதில்லை. அவற்றை நினைத்து இப்போ நாம் சிரிக்கிறோம், அவர்கள் எங்களை முட்டாள்களாக நினைப்பார்கள்.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
அந்த, பாதிக்கப்பட்டவர்களுக்காக தண்ணீர் கேட்டுத்தான் வாதாடுகிறாரோ அர்ச்சுனா? ஏற்கெனவே இரணை மடுக்குளத்தில் கட்டிய கட்டுமானம், தரமில்லாமல் இடிந்து விழுந்ததாக அண்மையில் செய்தி ஒன்று வந்ததே.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
இப்பவெல்லாம் தலையங்கத்தை வைத்து செய்தி வாசிக்கக்கூடாது. தலையங்கத்துக்கும் செய்திக்கும் தொடர்பே இருக்காது. முதலில் செய்தியை வாசியுங்கள், தலையங்கத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இதனாற்தான் சிலர் தடுமாறுகிறார்கள் செய்தியை விளங்கிக்கொள்வதில். தவறு செய்து பழக்கப்பட்ட ருசிப்பட்டவனே திரும்ப திரும்ப செய்வான். மாட்டினாலும் பயமோ, வெட்கமோ கிடையாது. காரணம்; அரசியலே அங்குதான், அதிற்த்தான் தங்கியுள்ளது. அப்பன் காலத்தில், ஸ்ராலின் ஒரு பெண் செய்தி வாசிப்பாளரை கடத்தியதாக செய்தியுண்டு. "அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி." ஒருவரின் பின்புலம் தெரியாமல், நெருக்கத்தில் வைத்திருப்பார்களா? தங்களுக்கு வேண்டிய போது, தமது எதிரிகளை தாக்க, மிரட்ட இவர்கள் வேண்டும் அவர்களுக்கு. இவர்கள் பிடிபட்டால் அவருக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை, எதிர்க்கட்சிகள் தங்கள் மேலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இணைத்துப்பேசுகிறார்கள் என்று கைகழுவி விடுவார்கள். எங்கள் நாட்டில் நடக்காத விஷயமா? இவர் தன்னைத்தானே அடிக்க விட்டிருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர்களால் அடிவாங்கியிருக்க வேண்டும். அவரது முதுகை யாராவது பார்த்து, ஒத்தடம் கொடுத்திருந்தால் அடி முதுகை எவ்வளவு தாக்கியிருக்கிறதென தெரிந்திருக்கும். மக்களின் அப்பாவித்தனத்தையும், உணர்ச்சிகளையும் அரசியலுக்காக பாவிக்கிறார்கள். இவரைப்பார்க்கும்போது, எமது அரசியற்தலைவர் எனகூறிக்கொள்ளும்சாணக்கியனின் நினைவுதான் எனக்கு வருகிறது.
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
சொல்லில், செயலில் பொறுமையும் நிதானமும் மரியாதையும் வேண்டும் அர்ச்சுனாவுக்கு. அப்போ கள்வரை மிக இலகுவாக கையாளலாம். இல்லையேல்; அர்ச்சுனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி பொறுமையிழக்கச்செய்து தப்பித்து விடுவார்கள் ஊழல்வாதிகள்.
-
சவேந்திர சில்வாவின் பதவி பறிபோகின்றது!
ம்..... பார்ப்போம் ஏதாவது கசியுதா என்று?
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
சுமந்திரன் யாரை வைத்து தனது திட்டங்களை நிறைவேற்ற பாவிக்கிறாரோ, அவர்களை வைத்து நிறைவேற்றிய பின் அவர்களை தூக்கி எறிந்து விடுவார். காரணம்; அவர்கள் சாட்சியாக இருந்துவிடுவார்கள் என்பதற்காக. முதலில் மாவையரையும் சம்பந்தரையும் பாவித்தார், அடுத்து ஆனோல்ட், முறையே சிறிதரன் சி வி கே சிவஞானம். அடுத்து தொடரப்போவது, சத்தியலிங்கம் இறுதி சாணக்கியன். அதற்கிடையில் சுமந்திரனை எல்லோரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். நாம் ஏற்கெனவே எச்சரித்தோம், அப்போவெல்லாம் மௌனம் காத்தவர்கள், இப்போ காய் தமக்கெதிராக திரும்பும்போது கருத்து தெரிவிக்கிறார்களாம். இவர்கள் சோரம்போகாமல் இருந்திருந்தால்; அவர் தானாகவே வெளியேறியிருப்பார். இந்தியப்புலனாய்வு? இல்லை, அவருக்கு ஏற்கெனவே தெரியும், அந்த சதிவலையில் அவருக்கும் பங்குண்டு. பதவிக்காக காத்திருந்திருக்கிறார், இப்போ அது வேறு திசை மாறுவதால் இவர் தனது ஏமாற்றத்தை எச்சரிக்கையாக கொட்டுகிறார்.
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
இயற்கை காவு கொண்ட அனைத்து ஆன்மாக்களும் அமைதியில் இளைப்பாறுக, அவர்களின் எதிர்பாரா இழப்பால் துயருற்று வலிகளோடு வாழும் அனைத்து உறவுகளுக்கும் ஆறுதல் கிடைப்பதாக.
-
பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
நாளைக்கே, மது போதையில் வந்து செய்வதெல்லாம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்கிறீர்கள். மது போதை, அதில் எங்கே, என்ன வேண்டுமென தெரிந்திருகிறது அவருக்கு. அவர் நல்லவர், அவர் அருந்திய மதுதான் குற்றவாளி.
-
இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்குமாறு வடக்கு மக்கள் கோரவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
முன்னர், மக்களுக்காக வேலை செய்கிறோம் என்று கூறிக்கொண்டு வந்த எந்த ஆளுநரோ, நம்ம தலைவர்களோ சொல்லாத உணர்வு பூர்வமான வார்த்தை. இவரை விரட்டாமல், மக்களுக்கு சேவை செய்ய விட்டால் சரி.
-
இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் - ஆளுநர் தெரிவிப்பு
இந்தப்பிரதேச விடுவிப்புக்கு பலர், தாமே காரணமென உரிமை கோரியிருந்தனரே? யாரோ செய்யும் செயல்களுக்கு தாம் உரிமை கோருவது, தாம் செய்யும் தவறுகளுக்கு மற்றவரை குற்றம் சுமத்துவது கையாலாகாதவரின் செயல்! ஒருவருடைய பாதிப்புகளையும் வலிகளையும் அதே பாதிப்புகளை அனுபவித்தவராலேயே முழுமையாக அடையாளம் கண்டு தீர்வை பெற முடியும். வெறும் பதவிகளுக்காக வருபவர்கள் அதன் பின்னாலேயே அலைவர். இனிவருங்காலத்தில் இப்படியானவர்களை மக்கள் இனங்கண்டு அரசியலுக்கு கொண்டுவரவேண்டும்.