Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. விசயத்திற்கு ஏற்ற தலைப்பு போட முடியாத வக்கற்ற பத்திரிகைகள், போலி அரசியல்வாதிகள் உள்ளவரையும், மக்களும் ஏமாற்றப் பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
  2. வகுப்பறையில் கெட்டித்தனமான மாணவர்கள் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பர். அதே நேரம் கெட்டித்தனத்தை வெளிப்படுத்த முடியாத மாணவர், குசும்புகள், கோள் சொல்லுதல் மூலம் எல்லோரின் கவனத்தை தம் பக்கம் ஈர்ப்பர். சம்பந்தப்பட்ட கடந்த அரசாங்கங்களோடு கூடிக்குலாவும்போது சவால் விட மறந்து விட்டார். இப்போ, அனுராவின் கவனத்தை தன் பக்கம் திருப்ப சவால் மேல் சவால் விட்டு தன்னை வெளிப்படுத்துகிறார். இது கொஞ்ச நாளைக்கு ஓடும் இன்னொரு செய்தி அகப்படும்வரை.
  3. உங்களின் குடும்ப ஆட்சியால் ஏமாற்றமடைந்த மக்களே அனுராவை தேர்ந்தெடுத்தனர். ஆகவே அவர்கள் சார்பாக கோரிக்கை வைப்பதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நாங்கள் ஊழல் செய்திருந்தால் நிரூபியுங்கள் என்று சவால் விட்ட இவர், இப்போ தம்பியை கைது செய்தவுடன், எங்களை கைதுசெய்தால் பொருட்கள் விலையேறுமென பயமுறுத்துகிறார். தந்தையாரோ, எப்போ அரசாங்க வாசஸ்தலத்தை விட்டு நான் வெளியேறவேண்டுமென நேரடியாக எனக்கு அறியத்தாருங்கள், நான் வெளியேறி விடுகிறேன் என கோரிக்கை வைக்கிறார். சரியான நகர்வை நோக்கி பயணிக்கிறாரோ அநுர? தேர்ந்தெடுத்த மக்களே விரட்டி விட்டார்கள், தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்குபோடுவதை நிறுத்திவிட்டார்கள், தொடர்ந்து சிங்கள மக்களும் கைவிட்டுவிட்டார்கள். இவர்கள் இப்போதும் புலிகளை மறக்கமுடியாமல் நோபல் பரிசு எதிர்பார்ப்பில். அரசியல் அரை விசர்களுக்கு மக்களின் நிராகரிப்பு, முழு விசராக்கிவிட்டது போலிருக்கிறது.
  4. அவர்கள் சுரண்டிய பணத்தை மீட்க்கும்படியே அனுராவை சிங்கள மக்கள் தெரிந்தெடுத்தனர். இது ஒருபுறமிருக்க, அரகலிய போராட்டமே இவர்களை துரத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. தேர்தலில் விரட்டியடித்து விட்டார்கள். இதெல்லாம்எதிர்கால சந்ததி கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது காறி உமிழவும் கூடும். பறவாயில்லையா? இலங்கை வரலாறு காணாத அவமானம் அடைந்தது போதாது பதப்படுத்துங்கள்.
  5. பாதிக்கப்பட்ட, தான் சார்ந்த மக்களின் பாதிப்புகளுக்காக குரல் எழுப்பிய சிறிதரனுக்கு நிகழ்ந்த கெடுபிடிகளை, அதற்காக சொல்லப்படும் காரணங்களை பார்த்தால், அந்த காரணங்களை வெளியிட்டவர்களின் சேவையில் சந்தேகம் ஏற்படுகிறது. பிந்தைய தகவல்: தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும்போது சுமந்திரனையும் சி. வி. கே. சிவஞானத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென சுமந்திரன் அடம்பிடித்தாராம். அதில் சிவஞானத்தை சேர்க்கலாம் சுமந்திரனை சேர்த்துக்கொள்ள முடியாது என கூறியதால், கூட்டம் கலைந்ததாம். ஏன் வெளிநாட்டு தூதுவர்களை, அரசியல் தலைவர்களை சுமந்திரன் சந்திக்கும்போது, தனியாகத்தான், ரகசியமாக சந்தித்தார். அவர்கள், தன்னை தனியாக வரும்படி அழைத்தார்கள் என்று விளக்கம் வேறு கொடுத்தார். இப்போ ஏன் அடம்பிடிக்கிறார்? அரசுக்கு உளவு பார்க்கவேண்டும், பதவி பெற வேண்டும். இந்த வேண்டாத கல்லை அகற்ற முடியாது, முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகிறார்.
  6. முன்னைய அரசாங்கங்களே, இவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதென கூறி பாதுகாப்பு அளித்தார்கள். சுமந்திரன் அரசுடன் சேர்ந்து செயற்படுவதால், அதாவது அவர்களுக்கு கால் கழுவுவதால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் என காரணமும் கூறினார்கள். பின்னர், அவருக்கு அப்படியேதும் அச்சுறுத்தல் இல்லை, அவர் பேரணியில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் கலந்து கொள்கிறார்,ஆகவே அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை அது விலக்கப்படும் என்று விளக்கமளித்தார்கள். (இங்கே கவனிக்கப்படவேண்டியது: பாதுகாப்பு கொடுக்கப்பட்டதற்கும் , விலக்கப்பட்டதற்கும் கொடுக்கப்பட்ட காரணங்கள்). ஆனால், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? இது பற்றி அப்போது சுமந்திரனிடம் வினவியபோது, தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தான் முறையிடவில்லை, பாதுகாப்பு கோரவில்லை என்றார். சரி...... அப்போ ஏன் எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என மறுக்கவில்லை? அவர்கள் சொன்னது, அவர்கள் சந்தேகம், நான் அப்படி பாதுகாப்பு கோரவில்லை என மறுப்பு தெரிவிக்கவில்லை? ஏன் அந்த அப்பாவி இளைஞர்களை விடுவிக்கவில்லை? சரி, அனுரா ஆட்சியில் சுமந்திரன் மக்களாலும் அவர் சார்ந்த கட்சிகளினாலும் நிராகரிக்கப்பட்டவர். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக எங்கேயும் அனுராவிடம் முறையிடவில்லை. தன்னிச்சையாக இந்தியாவுக்கே போய் பகிரங்கமாக படம்பிடித்து பேச்சுக்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது. அவர் சொன்னது! அப்படியிருக்கும் போது, நமக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது பாதுகாப்பு தாருங்கள் என்பவர்களின் பாதுகாப்பை குறைத்தவர்கள், வெறும் சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு கொடுப்பதன் அவசியம், மர்மம் என்ன?
  7. அதுதான் சுமந்திரனுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய பணி. அதை நிறைவேற்றால் அவர் அயர மாட்டார். போலி அரசியல் வாதிகள், போலி சாமியார்கள், போலிப்பத்திரிகையாளர் சமுதாயத்தை அழிக்கின்றனர்.
  8. தமிழ் மக்களும், சொந்த கட்சியும் இவரை நிராகரித்து விட்டார்கள். ஆனாலும் வெளியேறமாட்டேனென அடம்பிடித்து இந்த நரியை வைத்து காய் நகர்த்துகிறார். இந்தகூழ்முட்டைக்கு ஒரு பதவியை காட்டினால் போதும், சுமந்திரன் என்ன தன்னையே மறந்து பேசுவார். பார்த்தோமே! முதல் நாள் பேட்டி, சுமந்திரனை தூற்றி. இரண்டுநாள் கழித்து அதே சுமந்திரனை போற்றி பேட்டி. காரணம்; பதவி!
  9. கனடாவுக்கோ, வேறு வெளிநாடுகளுக்கோ சுமந்திரன் பயணம் செய்யும் போது எந்தப்பாதுகாப்புமில்லாமல் பயணம் செய்து கூட்டங்களில் பகிரங்கமாக பங்கேற்றுவிட்டு எந்தப்பாதிப்புமில்லாமல் வந்தார். அப்படி அங்கே அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால்: சுமந்திரன் உயிருக்கு அச்சுறுத்தலான பயணங்களை தவிர்க்கலாம். அவர் அந்த நாடுகளுக்கு போய் எதுவும் சாதிப்பதில்லை, யாரும் கட்டாயப்படுத்தி அழைப்பதுமில்லையே. இந்தியாவுக்கே எந்தப்பாதுகாப்புமில்லாமல் தானாகவே அழைப்பை ஏற்படுத்தி, போய், நன்றாக படங்கள் பிடித்து விளம்பரப்படுத்தி வந்துள்ளார். நிற்க, அவர் இப்போ பாராளுமன்ற உறுப்பினருமல்ல. அப்படியிருக்க அவருக்கு உயிர் அச்சுறுத்தலாம், அதற்கு பாதுகாப்பாம். தமிழரசுக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாருக்கும் வழங்கப்படாத பாதுகாப்பு இவருக்கு மட்டும் எதற்கு? சிறிதரன் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டதற்கு சிவஞானம் கொடுத்த விளக்கம், சிறிதரன் அரசாங்கத்தை விமர்சித்ததால் இந்த நிலையேற்பட்டது என்கிறார். சுமந்திரன் சொல்கிறார், இலங்கையரசால் தடையுத்தரவு பெற்ற கனடா தமிழ் அமைப்போடு சிறிதரன் சந்திப்பை நடத்தியதால், அவருக்கு விமான நிலையத்தில் பிரச்னையேற்பட்டதென்கிறார். விமான நிலைய அதிகாரியோ அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்கிறார். அப்போ சிறிதரனுக்குத்தான் பாதுகாப்பு தேவை. இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, அவர் சிங்களத்துக்கு கால் கழுவும் வேலைக்காக இருக்கலாம். அல்லது பதவிக்கு நாண்டு பிடிப்பதால் பாதுகாப்பை அளித்து சமாதானப்படுத்தியிருப்பாரோ அனுரா?
  10. இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அர்ச்சுனா, சைவ இந்துக்களை பற்றி தவறான கருத்து வைத்திருந்தால் அது நாட்டிலுள்ள எல்லா சைவ இந்துக்களையும் பாதித்திருக்கும். இவர்களை மட்டும் பாதிக்கும்படி அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என இவர்கள் அறிவிக்கவில்லை. இவர்களை மட்டும் பாதிப்பதுபோல் ஏதோ சொல்லியிருப்பார் போல. இங்கு பிரதேசவாதத்தை வலிந்து திணிப்பது நீங்கள். தமிழர், விடுதலை வேண்டி போராடினார்கள். வடக்கு படையணி கிழக்கிலும், கிழக்கு படையணி வடக்கிலும், ஒரே விடுதலைக்காக போராடினார்கள். அங்கே எங்கும் பிரதேசவாதம் இருக்கவில்லை. எல்லோருக்கும் அவரவர்க்குரிய பதவிகள் வழங்கப்பட்டன. அது தமிழரின், இனத்தின் விடுதலைக்கான போராட்டம். இவர் இங்கு, இந்துக்கள் என்றும் கூறுகிறார், சைவர் என்றும் கூறுகிறார். அப்போ ஏன் நாட்டின் மற்றைய பகுதிகளில் உள்ள சைவர் இதை எதிர்க்கவில்லை என்றுதான் கேட்க்கிறேன். இது அவர்களுக்கு மட்டுமுரிய போராட்டமா என்று. நீங்கள் தேவையற்ற ஒன்றை செருகி பிரச்சனையை உருவாக்க துடிக்கிறீர்கள்.
  11. வடக்கு மற்றும் நாட்டின் மற்றைய பகுதிகளில் சைவ குருமார் இல்லையோ? இவர்கள் மட்டும் ஏன் போராடுகிறார்கள்? இவர்களுக்குத்தான் தொப்பி அளவோ என்னவோ?
  12. ரணிலும் இப்போ இவர் மாதிரி புலம்பிக்கொண்டும் சாபம் போட்டுக்கொண்டும் திரியிறார். எப்போ ஆட்சி கவிழும், தான் கதிரை ஏறுவேன் என்று. இவரை மக்கள் பாராளுமன்றம் அனுப்பும்போது அவர்களுக்கு இவர் உதவி வேண்டும். இப்போ இவரை மக்களும் கட்சியும் நிராகரித்துவிட்டார்கள். யாருக்குமே உதவாமல் போய் விட்டார். "வெறுங்கை முழமிடுமா?" இவர் சவால் விட்டு கத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான். அவர் நினைக்கவில்லை, அனுரா அரசு வெல்லுமென்று, இரண்டிலொரு பெரும்பான்மைக்கட்சியே வெல்லும், எப்போதும்போல் தரகர் வேலை செய்து பிழைக்கலாமென்று தெனாவெட்டாக இருந்ததுமல்லாமல், அநாகரிக வேலை செய்ததுமே இவருக்கு ஆபத்தாக முடிந்தது. இனியாவது மக்களுக்கு சேவைசெய்து இழந்துபோன மரியாதையை கட்டியெழுப்பி மக்கள் மனங்களில் இடம்பிடிப்போம் என நினையாமல், குறுக்குவழியில் மற்றவர்களை பின்தள்ளி முன்னுக்கு வர முயற்சிக்கிறார். இது அவரோடு கூடப்பிறந்த குணம் மாறாது. அனுரா இவரை கூப்பிட்டு கதிரை கொடுக்கும்வரை சவால், கூக்குரல் நிற்காது.
  13. மக்களிடம் இழந்துபோன தன் மதிப்பை இதன் வழியாக உயர்த்தலாமென நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்றை உணர மறுக்கிறார், சிறிதரனை பார் சிறியர் என்று பலகாலமாக பேச்சு அடிபடுகிறது, அவரை பெரும்பாலான மக்கள் அழைப்பதும் அப்படியே. இருந்தும் தேர்தல் காலத்தில் உச்சஸ்தாயில் கத்தி வெளிப்படுத்தினவரும் இவர்தான். ஆனால் மக்கள் அவரையே தம் பிரதிநிதியாக தெரிந்தெடுத்துள்ளனர். இவரை நிராகரித்து மக்கள் சொல்லும் செய்தி; இதைவிட பெரிய, மன்னிக்க முடியாத துரோகி சுமந்திரன் என்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். அது அவருக்கு விளங்கவில்லை, அவ்வளவு பதவியாசை, அதிகார வெறி அறிவை மயக்கி வைத்திருக்கிறது. அது தெளிய வேண்டுமானால்: மக்கள் இவரை சிறப்பு விருந்தினராகவோ, விருந்தினராகவோ எங்கும் அழைக்கக்கூடாது, ஊடகங்கள் இவரை பேட்டியெடுப்பதை தவிர்க்க வேண்டும், நீதிமன்றம் இவர் தொடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது; கட்சியை முடக்கி, செயற்படாமல் தடுத்ததற்காக இவரை எச்சரிக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சுய நினைவு வர வாய்ப்புண்டு.
  14. இந்தியாவில் ஸ்ராலினோடு நின்று சுயபடம் எடுத்து முகநூலில் விளம்பரம் செய்தது வெறும் புலுடா. அங்கு விருந்தினர்களாக வந்தவர்களை சுற்றி, அவர்களுக்கு வாழ்த்துச்சொல்லி கொண்டுவரும்போது, படம் எடுக்க விருபியவர்களின் தொலைபேசியை வாங்கி அவர்களோடு சேர்த்து படம் எடுத்து ஸ்ராலினே கொடுத்தாராம். அங்கு வந்திருந்த அனைவருமே அவரோடு நின்று சுயபடம் எடுத்துக்கொண்டார்களாம். படம் எடுத்தால்; இவர்களை அழைத்து கதைத்தார் என்று பொருள் இல்லை. இதிலிருந்து முன்பு வெளிநாட்டு தூதுவர்களோடு நின்று எடுத்து வெளிவந்த படங்களும், அதுசார்ந்த செய்திகளும், விளக்கங்களும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. இதற்கான, பதில் அனுராவோடு படம் எடுத்து விளம்பரம் செய்த போதே கொடுக்கப்பட்டு விட்டது. இனிவருங்காலத்தில், இவர் வெளியிடும் பிரமுகர் படங்கள், அறிக்கைகள், செய்திகள் இவரின் மதிப்பை கூட்டப்போவதில்லை. தனது தவறுகளையும் குழிபறிப்புகளையும் மறைப்பதற்கு இவ்வாறான பிரச்சனைகளை ஊதிப்பெருபிப்பதை தவிர இவருக்கு வேறு வேலையில்லை. மதுபான சாலைகளை மூடுங்கள் என்று கேட்டால்; அது நிஞாயம். அதைவிட்டு, ஆட்களை வெளிப்படுத்துங்கள் என்று அடம் பிடிப்பது; இவரின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இவரே வெளிப்படுத்திவிட்டு, இப்போ தனது இந்திய பயணம், குழிபறிப்பு பற்றிய கேள்வியை தவிர்ப்பதற்காக பயன்படுத்தும் சவால் இது. தான் தோற்ற பின்னும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இப்படி முட்டாளாக, மக்களை முட்டாள்களாக்க செயற்படுகின்றாரே. சிறியர் தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்காக அதிக சேவை செய்து மக்களின் பாராட்டைபெற வேண்டும். இப்போது சுமந்திரனுக்கு உள்ள ஒரே சவால் சிறிதரன் மட்டுமே. அவரை விலக்கி விட்டால் தான் நினைத்தது போல், நீதிமன்ற செயற்பாடுகளை தான்நினைத்ததுபோல் மீளப்பெற்று, சர்வாதிகாரியாக செயற்படலாமென நினைக்கிறார். ஆனால் சிறிதரனின் பொறுமை, இவரை பைத்திய நிலைக்கு இட்டுச்செல்கிறது. இவர் ரொம்ப அவமானப்படுத்தப்படப்போகிறார். இதோடு தனது ஆட்டதை முடித்து ஒதுங்கிக்கொள்வது இவருக்கு நல்லது!
  15. உனக்கும் பேய் உன் அப்பனுக்கும் பேய் எண்டுறார். இந்தியாவின் போர்க்கப்பல் வரப்போகுதோ, இல்லை போர்தான் மூளப்போகுதோ தெரியவில்லையே?
  16. இந்தியா எப்படித்தான் விழுந்து விழுந்து இலங்கைக்கு உதவினாலும், தமிழ் மக்களை கொல்வதற்கு அனுசரணை வழங்கி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், இறுதியில் இந்தியாவை மாட்டிவிடும் வழக்கம் இலங்கையிடம் உண்டு. ஆனால் இந்தியா பாடம் படிப்பதாக இல்லை. ஒரு நேர்காணலில் அனுரா கூறிய வார்த்தை: "இலங்கையில் இரு இன மக்களின் அழிவிற்கும் காரணம் இந்தியாதான். அது தனது சுய லாபத்திற்காக எங்களிடையே மோதலை உருவாக்கியது. இதற்காக இந்தியா எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று கூறியிருந்தார். சும்மா இந்தியாவை தனது தேவைக்காக சிங்களம் பாவிக்கிறதேயொழிய, அதை கவனத்திலெடுப்பதில்லை. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் மூழுமானால், இலங்கை கண்டிப்பாக சீனா பக்கமே சாயும். அதை இந்தியா கண்டபின்னே தன் தவறை உணரும். முன்பும் இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்சினை உருவானபோது, இலங்கை பாகிஸ்தானுக்கே தன் ஆதரவை வழங்கியது. இருந்தும் இந்தியா நம்மை வைத்து சிங்களத்தை வளைக்க முயற்சிக்கிறது.
  17. "ஆடத்தெரியாதவள் அரங்கு பிழை என்றாளாம்." இவர், கடற்தொழில் அமைச்சராக இருந்து என்னத்தை சாதித்தார்? கைவிட்டுப்போன பதவியை நினைத்து புலம்ப வேண்டியதுதான். விசாரித்துப்பார்த்தால், உண்மை விளங்கும். முன்பு காணி விடுவிப்புக்கும் இங்கு ஒருசில அரசியல்வாதிகள் இவருட்பட உரிமை கொண்டாடினர். பின்னர் பார்த்தால், அதன்பின்னால் வேறு ஒருவர் இருந்ததாக இப்போ தெரியவருகிறது. அப்படியேதும் சாதனை இருந்திருந்தால், யாராவது கேட்டிருந்தால், சொல்லியிருப்பார். அவர் எல்லாவற்றையும் சொல்ல விரும்பவில்லை. அப்படியெல்லாம் நன்மை செய்த இவரை நிராகரித்து, ஒன்றுமே செய்யாதவர்களை ஏன் மக்கள் தெரிந்தெடுத்தார்கள் என்பதையாவது இந்த முட்டாள் ஒருநாளாவது யோசித்துப்பார்த்து, தன் பல்லவியை மாற்ற மாட்டாரா? திருந்த மாட்டாரா? தேர்தல் வரும்போதெல்லாம் இவர் கெஞ்சாத கெஞ்சலில்லை இருந்தாலும் சாதித்தேன் என்று புலம்புகிறார். பதவி இருக்கும்போது சாதிக்காதவர், இனிமேலும் சாதிக்கமாட்டார், வாயால் பினாத்துவார் என்கிற உண்மை மக்களுக்கு புருந்திருக்கிறது.
  18. இந்த ஓநாய் மக்களுக்காகவா அழுகிறது? சிறியரை கட்சியை விட்டு விரட்டுவதற்கு வழிதேடுகிறார். கட்சிக்காக மக்களில்லை, மக்களுக்காகவே கட்சி. மதுபானசாலை விவகாரத்தை தூக்கிப்பிடித்து, தான் புனிதன் என்பது போல் எங்கள் கைகள் சுத்தம் என்று சொல்லி தொண்டை கிழிய பிரச்சாரம் செய்தார். விழுந்தது சிறிதரனுக்கு வாக்கு. இன்னும் உணராமல் கத்துகிறார் என்றால் இவரின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. இவர் சிறியரை விழுத்த எடுக்கும் ஒவ்வொரு படியும், இவரை இன்னும் தாழ்த்திக்கொண்டு போகும். சிறியர் இவர் எடுக்கும் படியால் மேல் ஏறி இவருக்கு முன்னுக்கு போய் விடுவார். எல்லோருக்கும் தெரியும் தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட புழுக்கத்தில் புலம்புகிறாரென்று.
  19. ஐயோ, மக்கு பெருமாள். ஐயா! நீங்கள் ஏன் மேடையின் கீழ் பார்வையாளர் வரிசையில் இருத்தப்பட்டீர்கள், எதற்காக சிறீதரனுக்கு முன்னாடியே இந்தியாவுக்கு சென்றீர்கள், சேர்ந்து போயிருக்கலாமே, அங்கு எமது மக்கள் சார்பாக என்ன பேசினீர்கள் என்று கேட்டால், என்ன சொல்வது? அதை தவிர்ப்பதற்காக, சிறீதரனுக்காக அழுகிறார்களாம். அப்படி அக்கறையுள்ளவர்கள், ஏன் அவரை விலத்திவிட்டு சென்றார்கள்? நாங்கள் எங்கே இருந்தோம் என்பதை கேட்கமுதல், சிறிதரன் இரண்டாவது வரிசையில் இருத்திவிட்டார்கள் என்று கூப்பாடு போட்டால், அதோடு கதை திசை திரும்பிவிடும். இது ஒரு தந்திரம்! தங்கள் குற்றத்தை, வெட்கத்தை மறைக்க. நீங்கள் ஏன் தோற்றீர்களென்றால்; நாங்கள் நான்கு ஆசனங்களை பெற்று வென்றிருக்கிறோம், இது வெற்றிதான். தமிழ் மக்களுக்கான பிரச்சனையை கதைக்க, விளக்க ஜெனிவா போங்கள் என்றால்; அது அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்பவர்கள், வைகோ போகிறார் அதுபற்றி பேச. அயலக தமிழர் தினத்துக்கு முண்டியடித்து ஓடுகிறார்களாம். எது முக்கியம் நமது அரசியல் சட்ட மேதைகளுக்கு?
  20. இலங்கை விமான நிலையத்தில் வந்திறங்கி, இங்குள்ள ஊடகங்களுக்கு, பேட்டி கொடுக்கும்போது தங்களது கண்டனத்தையும் கவலையையும் வெளியிடுவார்கள். இவர்கள் விரும்பாத, பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கும் பதிலிறுக்க வேண்டிவரும். ஆனால் எஎல்லாவற்றுக்கும் தயாராய்த்தான் வருவார்கள். "தலைக்கு மேலே வெள்ளம் போனபின், சாண் ஏறினாலென்ன முழம் ஏறினாலென்ன?" சிறிதரன். நானும் போகலாம், விரும்பிய யாரும் போகலாம். ஆனால் குறிப்பிடப்பட்ட தொகையை செலுத்துவது முக்கியம்! இந்த வழியாக பதிவு செய்து முன்னுக்கு ஓடி சந்திப்புகளை நடத்தினால், முதல் இருக்கை கிடைக்கலாமென நம்பி முண்டியடித்து சிறிதரனுக்கு அறிவிக்காமல் ஓடியிருப்பார்களோ? சிவஞானம் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, சிறிதரனை இலங்கை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதற்கு காரணம்; மக்களின் பிரச்சனைகளை பற்றி கதைத்ததாலாம். அப்போ, இவர்கள் யார், என்ன செய்கிறார்கள், ஏன் ரகசிய சந்திப்புகளை தனியாக நடத்துகிறார்கள்? ஏன் வெளிநாடுகளுக்கு, இந்தியா உட்பட போகிறார்கள்? தனிப்பட்ட பயணம் போகட்டும். மக்களுக்காக போனோம், பேசினோம் என்று ஏன் புலுடா விடுகிறார்கள்? போனவுடனே, போகிற இடங்களிலே, அரசியல் முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து படம் பிடித்து போடுவதிலேயே நேரம் செலவழித்திருக்கிறார்கள். மக்களுடைய பிரச்சனை அவர்களுக்கு இப்போ முக்கியமில்லை, தங்களை முன்னிலைப்படுத்த முக்கியம்.
  21. ம், வரப்போவது பாலியல் குற்றவாளி. அதில முகவசீகரம் தேவைதானா? பயம் அவமானம் அவற்றை தாங்குமா, காக்குமா? அவரும் கதாநாயகன் போட்டியென்று, அலங்காரத்துடன் வந்து துலைக்கப்போகிறார்.
  22. இன்றுடன் பொய்க்கு வக்காலத்து குறைந்து விடும்..... நிற்க, தேர்தலுக்கு முன் ஒரு நேர்காணலில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கட்சியின் வழக்கு பற்றி சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், தேர்தல் முடிந்தபின் அந்த வழக்கை மீளப்பெற்று கட்சியை முன்கொண்டு செல்வோம் என்றார். அதை ஏன் இன்னும் செய்யவில்லை? எது தடுக்கிறது? அப்போது, அவரது நம்பிக்கை, மதுபான சாலை அனுமதிப்பத்திர விடயத்தை ஊதிப்பெருக்கி விட்டேன், மக்கள் இந்த அரிச்சந்திரனின் வாக்கை கேட்டு சிறிதரனை நிராகரிப்பார்கள். அதன் பின் இந்த தலையாட்டிகள் சிவஞானம், சத்தியலிங்கத்தை பொம்மைகளாக ஆட்டிக்கொண்டு சிறிதரனை விரட்டுவதே அவரது திட்டம். ஆனால் நடந்ததோ வேறொன்று. இவர் தமிழ் மக்களையும் அவர்தம் அபிலாசைகளையும் எதிரிக்கு அடிமைகளாக அனுமதிக்கிறார், அதை மறைப்பதற்கு, தொடர்ந்து செய்வதற்கு சிறிதரனை குறிவைக்கிறார் என்பது யாவருமறிந்தது. சிறிதரனுக்கு சுமந்திரன் வெட்டிய குழியில் தானே விழுவேனென எதிர்பார்க்கவில்லை, பதவியாசை விடவுமில்லை. இது ஒரு முக்கியமான கட்டம். இதோடு தமிழரின் அபிலாசைகள் குழிதோண்டிப்புதைக்கப்படும் அபாயம். இதற்கான சகல வேலைகளும் சட்ட வரைபுகளும் முடிந்திருந்தன. சுமந்திரன் பாராளுமன்றம் போயிருந்தால்; அதற்கான இறுதி ஆணி அடித்திருப்பார். ஆனால் காலம் விடவில்லை. மக்கள் பகிரங்கமாகவும் நேரடியாகவும் தெரிவித்திருந்தார்கள். சுமந்திரனுக்கு தக்க பாடம் புகட்டுவோமெண்டு. உண்மையிலேயே இவர் ஒரு அரசியல் சாணக்கியன் என்றால், மக்களுக்கும் கட்சிக்கும் நன்மை செய்பவராக இருந்திருந்தால்; சிறிதரனை வசை பாடுவதை நிறுத்தியிருப்பார், தான் போட்டியிடுவதை தவிர்த்து வேறொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பார், தானும் பழிச்சொல்லில் இருந்து தப்பியிருப்பார். அதைவிட, அவருக்கும் தான் தோற்பேன் என்கிற பயம் இருந்ததினாலேயே சிறிதரன் மற்றும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் மீது கட்டுப்பாடில்லாமல் குற்றச்சாட்டுகளையும் சேறையும் வாரிக்கொட்டினார். அது தனது திறமை என எண்ணினார். ஆனால் இவரது செயற்பாடு, சிறிதரனுக்கு ஏணியாய் அமைந்தது. வெட்கம், மானம், ரோசம், குற்ற உணர்வுள்ளவர்கள் அதோடு தமது வக்கிரத்தை நிறுத்தி விலகியிருப்பர் அல்லது தமது செயற்பாட்டை மாற்றியிருப்பர். மாறாக சுமந்திரன் தன் சுயரூபத்தை வெளிப்படையாக வெறித்தனமாக, அற்ப ஆசை கொண்டதுகளை வளைத்துக்கொண்டு ஆட வெளிக்கிட்டார். "கோவிற் பூனை தேவரை மதியாது." என்பார்கள். நீதிமன்றம் என்பது எவ்வளவு மதிப்பானது, நம்பிக்கையானது என்பது சட்டம் தெரிந்தவர் தொடங்கி பாமரர் வரை அறிவர். ஆனால் இந்த சட்டமேதை, எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றத்தை தன் வீடு போல பாவிக்கிறார். சட்டத்தையும் நீதிபதியையும் தான், தன் சுயநலத்திற்கு வளைத்து சாதித்து விடுவேன் எனும் பிழையான கருத்தை விதைக்கிறார். இதனால் மக்கள் நீதிமன்றத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை, மதிப்பை இழக்க தூண்டுகிறார். இவரின் இந்த இழிவான செயலை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும். உயர் நீதிமன்றம், இவரின் இந்த பிழையான செயலை தீர ஆலோசித்து, இவர் சட்டத்தரணி தொழில் செய்ய தகுந்தவரா என்பதை கண்டறிந்து, இவரின் அனுமதியை ரத்துசெய்ய வேண்டும். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் தாக்கல் செய்த தவறான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் யாருக்கு குழி பறித்தாலும் இனிமேல் அதில் விழுவது இவராகத்தானிருக்கும். சிறிதரன் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாதென இவர் செய்த சகுனி வேலையின் பின்பகுதியை இனி உணர்வார். தமிழ் நாட்டுப்பத்திரிகைகள் இதை எவ்வாறு பார்க்கின்றன என்கிற கருத்து நேர்காணல் அதை விபரிக்கும். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." கடந்த 2020 தேர்தலுக்குப்பின், சுமந்திரன் காட்டிய பதவியாசையில் மாவையருக்கு எதிராக எழும்பிய சிறிதரன், அதற்கான விலையை இப்போ கொடுத்துக்கொண்டிருக்கிறார். காலம் சென்றாலும் நீதி தவறாது. ''மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர், மற்றவர்க்கு குழி பறிப்பார். அது தன் பக்கம் பாத்திருக்கும்என்பதை தானறிய மறந்திருப்பார்.'' அடுத்து வரப்போவது; சிவஞானம், சத்தியலிங்கத்தின் அறுவடை நேரம். வரும்போது யாரும் இருக்க மாட்டார்கள் இவர்களை தேற்ற. "நாலும் நடந்து முடிந்தபின்னே நல்லது கெட்டது புரியும்."
  23. சிறியர்! ஏன் இதை இங்க இணைத்து மானத்தை வாங்கிறேள்? இருக்கிற கொஞ்ச நஞ்ச நல்ல பிள்ளையளின்ர மனதிலே நஞ்சை வார்த்து, அமைதியாய் போகும் சிலரின் வாழ்விலும் பூகம்பம் கிளப்ப வேண்டுமென்றா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.