Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. ம், புலம்பெயர்ந்தோர் கக்கூசு கழுவத்தான் வெளிநாடு போனார்கள் என்று ஒரு காணொளி அர்ச்சுனா வெளியிட்டுள்ளாராம். நான் பார்க்கவில்லை. இதனைக்கண்டித்து கடற்தொழிலாளர் சமாய உப தலைவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது தொழிலையே ஒழுங்காக பார்க்க வக்கில்லாதவர், புலம்பெயர்ந்தோரை விமர்சிக்க வந்துவிட்டார். முன்னைய காணொளிகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து யார், யார் எவ்வளவு பணம் தனது வழக்குகளுக்காக அனுப்பினர் என்று வெளியிட்டவர். இன்று இவ்வாறு கூறுவது சுத்த அயோக்கியத்தனம். இதைப்பார்த்தாவது கவுசலியா இந்தாளின் சகவாசத்தை விட்டு விலகுவது அந்தப்பெண்ணுக்கு நல்லது.
  2. விகாரை ஒன்றும் சும்மா கட்டவில்லை. அதை சுற்றி, சிங்கள குடியேற்றம் நிகழும். சிங்களவர் இல்லாத இடத்தில, விகாரை, தியான மண்டபம், விடுதி எல்லாம் யாருக்கு? இதற்கு மாற்றீடு கேட்டுப்பெற்றால், அதை தொடர்ந்து இந்த இடத்தில சிங்கள குடியேற்றம் உடனடியாக நிகழும். அடுத்து இதேபோல் தமிழரின் ஏனைய காணிகளுக்கு நிகழும். அப்போ நம்ம தலைவர்கள், ஆளுநர் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதேகாரணத்தை சொல்லி நம்மை ஏமாற்றிக்கொண்டு தமது பதவிகளை காத்துக்கொள்வர். அவர்கள், முதலில் தமது காணிகளை பகிர்ந்து கொடுக்கட்டும் பாதிக்கப்பட்ட, காணியற்ற மக்களுக்கு.
  3. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது. பெயர் வெளியிடப்படவுடன் தாங்கள் பெற்ற கடனை திருப்பியளிக்க வேண்டியது கடன் பெற்றவரின் கடமை. வீட்டை விட்டு வெளியேறும்படி முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எத்தனை தடவை அறிவித்தல் விட்டாயிற்று, வெளியேறினாரா அவர்? அவர் அனுபவிப்பது ஒன்றும் அனுராவின் சொத்தல்ல, மக்களின் உழைப்பு. சட்டமா அதிபர் பிழைவிடுவதால், மக்கள் வீதியில் இறங்கி நீதி கேட்கின்றனர். ஜனாதிபதியாக விளக்கம் கேட்பது அவரது பொறுப்பு. நீங்கள் உங்களை ஊழலை மறைக்க ஊளையிடுகின்றீர்கள். உங்கள் எஜமானர், தங்கள் ஊழலை மறைக்க உங்கள் ஊழலை கண்டுகொள்ளவில்லை. நீங்கள் உங்களை காப்பதற்காக இவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள். அனுர, மக்களின் ஜனாதிபதி. அவர் மக்களுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் விலகி இருங்கள்.
  4. உங்கள் மனைவி உங்களுக்கு செவிடன் என்று பட்டம் சூட்டினால், நீங்கள் புத்திசாலி, வாதத்தை வளர்க்க விரும்பாதவர் என்று அர்த்தம். இன்று பல ஆண்கள் வீட்டில் செவிடர்களாகவே இருக்கிறார்கள்.
  5. சுவியர் கெட்டிக்காரன். எல்லோரையும் கட்டிப்போடும் விடயத்தை தெரிந்து, கதையை ஆவலோடு எதிர்பார்க்க வைத்து கடைசியில் கோட்டையை இடிக்க வாருங்கள் என்று கூப்பிட்டால் என்ன செய்வீர்கள், தொடருங்கள் நாங்களும் வருகிறோம் என்று பின்தொடரும் நீங்களெல்லோரும்?
  6. போராட்ட பாதை வளைந்து, நெளிந்து, சுருங்கி, விரிந்து போகுது. நீங்களோ, நாங்களும் தொடருகிறோம் என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியேல்லை. நானும் ஏதோ கோட்டையை இடிக்கிற போராட்டமாக்கும் என்று ஆவலோடு தொடர்கிறேன். கதை எல்லோரின் ஆவலையும் தூண்டுகிறது.
  7. இவர்கள்தான் ஏமாற்றுக்காரரின் முதல். இவர்களை தேடியே வலை விரிப்பார்கள். யாரைத்தான் நம்புவது மக்கள், தங்கள் துயர் களைவார்களென்று?
  8. இல்லை, இவர் அனுரா அரசாங்கத்துக்கு கேக்காமலே வக்காலத்து வாங்கி, தன்னை முதன்மைப்படுத்தவும், தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்கி, கெத்துக்காட்டவும் நினைத்தார் அது நடைபெறவில்லையென்றவுடன், தலைவரை இழுத்து மக்களை அரசுக்கு எதிராக கிளப்ப முனைகிறார். ஆயனில்லா மந்தைகள் தங்களை மீட்ப்பார் என நம்பி, ஓநாய்களை தெரிவு செய்கிறார்கள், மக்கள் தான் பாவம். இவருக்கு காரில சுத்துவதும், காணொளி வெளியிடுவதும், அடுத்தவர் பேச்சுக்களில் குறுக்கிடுவதும், அமளி பண்ணுவதும், வீண் வம்புகளில் மாட்டுப்படுவதும் வேலையாய் போச்சு. வெகு விரைவில் பாராளுமன்ற பதவியை இழக்கும் அபாயமுமுண்டு. கவுசலியா, இவருக்கு வக்காலத்து வாங்கி தன் நன்மதிப்பையும் எதிர்காலத்தையும் வீணடிக்காமல், தன் வேலையை பார்ப்பது நல்லது. இல்லையேல் அவர் மேலும் வீண் பழி சுமத்தி சேறடிப்பார்.
  9. தேவையில்லாமல் எல்லாவற்றுளுள்ளும் மூக்கை நுழைப்பது, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கிறது, பிறகு தமிழேண்டா என்று தலைவரின் பெயரை இழுக்கிறது, காணாமற் போன உறவுகளுக்கு தீர்வு சொல்லுறது, தையிட்டி விகாரை விடயத்தில் தீர்வு சொல்லுறதுக்கு யார் இவர்? இவருக்கு மேலேயே ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், வழக்குகள். இதில தேவையில்லாத பிரச்சனைகளை காவிக்கொண்டு திரியிறார். காணொளி பைத்தியம் என்று நேரடியாகவே சொல்லி கேலி செய்கிறார்கள்.
  10. ஏன் இவர்களால் இப்போ ஆட்சியிலிருப்பவர்களுடன் சேர்ந்து செயற்பட முடியவில்லை?
  11. ஆமா.... குற்றவாளி, உடனே நான்தான் இந்தக்குற்றத்தை செய்தேனென ஒப்புக்கொண்டுவிடுவார். தெரியாது என்றவுடன் நீங்கள் தப்பித்துக்கொண்டுவிடுவீர்கள். தேசியத்தலைவரை நாயைப்போல கட்டியிழுத்தேன் என்று பகிரங்கமாக கரினுக்கு அச்சுறுத்தல் விட்டவர்தானே நீங்கள்!
  12. தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களாலும் தமிழ்மக்களாலும் நிராகரிக்கப்பட்டவர், கட்சியின் முக்கியஸ்தர் என தன்னைத்தானே கூறிக்கொள்கிறார். மாவை உயிரோடு இருக்கும்போது அவருக்கு குழிபறித்தவர், மரண சடங்கிற்கு போக முடியவில்லையாம். முடியாவிட்டால் வீட்டில் இருக்க வேண்டியதுதானே, இவர் வரவில்லையென்று யார் அழுதார் அங்கே. அல்லது இவர் வரவில்லையென்று செய்யவேண்டிய காரியங்கள் நடைபெறாமல் கார்த்திருக்கின்றனவா இவருக்காக? தம்மை முன்னிலைப்படுத்த இப்படியான கோணல் மாணல் வேலை செய்து தன்னை பிரபல்யப்படுத்துறது இவரது வழமையான செயல். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.
  13. அடுத்து, அர்ச்சுனாவின் இரட்டை வேடம் கலையுது. ஒருபக்கம் நான் தமிழேண்டா! மறுபக்கம் அனுராவுக்கு எடுத்துக்கொடுப்பு. வெகுவிரைவில் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் அறிகுறிகள் தெரிகின்றன.
  14. அவர்களும் கைது செய்யப்படுவார்கள். எடுத்தவுடன் பெரிய தலையில் கைவைக்காமல் சின்னவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று, ஆறுதலாக இறுதியாக, உறுதியாக கைவைக்கும்போது எதுவும் சொல்லி தப்பிக்க முடியாது. அதாவது அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கல் அது இதென்று.
  15. கரணம் தப்பினால், இவர்கள் அவர்களுக்கு எதிராக எடுக்கும் ஆயுதம் இவர்களை அழிக்கும். ஆகவே, இவர்கள் நிதானமாக, விரைவாக அவர்களை உள்ளே அனுப்பவேண்டும். அவர்கள் படுகிற அவஸ்தை, விடுகிற அறிக்கைகளை பாத்தா: இந்தமுறை தப்பமுடியாது போலிருக்கு. மக்களும் கைவிட்டு விட்டார்கள். பிச்சை எடுத்து வீடு கட்டுவோம், இறந்த உடலை பதப்படுத்துவோம் என அறிக்கைகள் தூள் கிளப்புகிறது. உடலை பதப்படுத்துவோம் என்றவரை உள்ளுக்கை சேர்க்க வேண்டாமென எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ஊழல்வாதிகளெல்லாம் மஹிந்தாவுக்காக அழுகிறார்கள், அவர் நிழலில் தாங்கள் தப்பிப்பதற்காக.
  16. முதல்வர் விக்னேஸ்வரன் காலத்தில் அப்படி பணம் ஏதும் திருப்பி அனுப்பப்படவில்லை தாங்கள் அதை சரியாக செலவிட்டதாக அறிக்கை விட்டிருந்தார். மற்றோரு குற்றச்சாட்டும் இருந்தது. அதாவது, அபிவிருத்திக்கான பணத்தினை முன்கூட்டியே அனுப்புவதில்லை என்றும் காலந்தாழ்த்தி அனுப்புவதால் குறிப்பிட காலத்திற்குள் அந்த பணத்தை செலவிடமுடியாமையினால் திருப்பி அனுப்பப்படுவதாகவும். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் அதை அரசாங்கத்தோடு ஆலோசித்து குறிப்பிட்ட காலத்துக்குள் பெற்று மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அரசும், தமிழ் தலைமைகளும் இதய சுத்தியோடு மக்களுக்கு சேவை செய்வதில்லை. பலமுறை சிங்கள தலைமைகள் வைத்த குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரச்சனையை தீர்க்க விரும்புவதில்லை, தங்கள் நலனையே நினைத்து செயற்படுகின்றனர் என. அவர்கள் கேட்க்காவிட்டாலும் அரசாங்கம் என்கிற முறையில் இவர்கள் தங்கள் குடிமக்களுக்கு செய்யவேண்டியதை செய்திருக்கலாம் நினைத்திருந்தால். அவர்களுக்கு சன்மானம் அளித்து அவர்கள் வாயை அடைப்பதும் இவர்கள் தான். தங்கள் பக்கம் மக்களை இழுப்பதற்காக எது வேண்டுமானாலும் சொல்லலாம், அதிலும் அவர்கள் நலனே இருக்கும். அனுரா, தானே தொடர்ந்து நாட்டை ஆள வேண்டுமென நினைக்கிறார், அது தவறில்லை. ஆனால் நேர்மையில்லாமல் தந்திரத்தை கையாண்டால் அது நிறைவேறாது.
  17. கட்சிக்குள் இடையில் வந்து பூந்த கோடரிக்காம்புகளை அதிகாரம் செலுத்த விட்டது யார் தவறு? ஏன் அவர்கள் தவறு விடும்போது, எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலாய் அவரை முறியடிக்க முடியவில்லை? இனியாவது எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்து, வெளிநடப்பு செய்யுங்கள், நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து ஒழுங்காற்று நடவடிக்கை எடுங்கள். அவருக்கு தெரியும், கட்சிக்குள் பிணக்கு இருப்பதை வெளியில் தெரிவிக்கவோ, கட்சிக்கு களங்கம் ஏற்படவோ உறுப்பினர்கள் விரும்பமாட்டார்கள், அதனால் தான் என்ன செய்தாலும் கட்சியின் நலன் விரும்பிகள் மௌனம் காப்பர். சுமந்திரனுக்கு கட்டுப்பாட்டு, கட்சி ஒழுங்கு என்று ஒன்றும் கிடையாது, வந்தேறி. அதனால் அவர் உளறிக்கொண்டு, கட்சியை இரண்டுபடுத்திக்கொண்டு திரிவார். அவர் வாய்க்கு வந்தபடி மற்றவர்களை விமர்ச்சிப்பார், தன்னை யாராவது விமர்ச்சித்தால்; ஒழுங்காற்று நடவடிக்கை என்பார். இந்தளவுக்கு, மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இவ்வளவு அதிகாரம் செலுத்த ஏன் விடுகிறீர்கள்? சாணக்கியன் அடுத்தது. சிங்களகட்சியில் நின்று வெல்ல முடியாதவர் இடையில வந்து பூந்து, சும்மா படங்காட்டிக்கொண்டு அவர் அடுத்த முதலாளி. ரொம்ப துள்ளினால் அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.
  18. இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் முன்னோக்கு சிந்தனையில்லாத சர்வாதிகாரி சம்பந்தனே! தன்னோடு தோளோடு தோளாக நின்ற மாவையரை அவர் மதித்ததேயில்லை. சொல்லப்போனால், சுமந்திரனுக்கு முன்னாலேயே அவரை கடிந்துள்ளார். சம்பந்தன் மேல் உள்ள மரியாதை, வயதுக்கு கொடுத்த மதிப்பு, கட்சி உடைந்து போகக்கூடாது என்கிற எண்ணம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார். அவ்வாறே ஏனைய உறுப்பினர்களும் சம்பந்தனை பகைக்காமல் நடந்து கொண்டனர். அதை அவர்களின் பலவீனமாகவும், தான் ஏதோ சாணக்கியன் போலவும் நடந்துகொண்ட சம்பந்தர். தனக்குப்பின் கட்சியை அநாதரவாக விட்டுச்சென்ற முட்டாள். அதை சுமந்திரன் என்கிற பேராசை பிடித்த ஊழல்வாதி சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். எந்த இலட்சியம், திறமை இல்லாத இரண்டு நரிகள் சிங்கத்தின் வாலோடு வால் இணைத்துக்கொண்டு திரியுதுகள். இவர்களுக்கு எதிராக அம்பு திரும்பும்போது புலம்புவதை தவிர வேறுவழியிருக்காது. சுமந்திரனை இவர்கள் பாதுகாத்து காப்பாற்றியதும் அவரின் அடுத்த இலக்கு இவர்கள்தான். சுமந்திரனுக்கு பதவியாசை மட்டுமல்ல, அவருக்கு இருப்பது தன்னைவிட அறிவாளியில்லை என்கிற ஒரு மனநோய்.
  19. இவர்கள் தங்கள் பதவியை விட்டு விலகும்போது, மக்கள் சொல்ல வேண்டும். அப்படி இவர்கள் சொர்க்க தங்கமாய் இருந்தால்; இலங்கையில் வேறொரு அரசாங்கம் இனிமேல் பதவியேற்கவேண்டிய தேவையில்லை என்கிறீர்கள்? எனது எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால் நம்மடையள் சிலதுகள் அதை தடுக்குதுகள் போலிருக்கே தமது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக.
  20. சொந்த குடிமக்களையே கொன்றும், புதைத்தும், பலவந்ததாக காணாமல் ஆக்கியும், சொந்த இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக வெளியேற்றிவிட்டு அவர்களின் பூர்வீக காணிகளில் விகாரைகளை கட்டி அபகரித்துக்கொண்டு, அதிகாரத்தை காட்டி மிரட்டும் நாடு இது. அது, மற்றைய நாட்டு மக்களை பாதுகாத்து, தனது அடாவடியை மறைத்து, பிரச்சாரம் செய்யுதாம். "ஓதுறது பிரித், இடிக்கிறது சிவன் கோயில்."
  21. இந்த ஆலயத்தை இடிக்க முடிந்ததென்றால், ஏன் தையிட்டி விகாரையை இடிக்க முடியாதென்று ஆளுநரையும் அர்ச்சுனாவையும் கேட்க்கிறேன். சட்டம் எல்லோருக்கும் சமம். அன்று, மத குருக்கள் என்று கூறிக்கொள்ளும் அடாவடிகள் செய்த முறைபாட்டுக்கமைய கோவிலுக்குரிய காணியில் அனுமதி பெறாமல் காட்டியதற்காக இடித்தார்கள். ஆனால் இங்கு வேறொருவருக்கு பொதுமகனுக்கு சொந்தமான காணியை அபகரித்து, எந்தவொரு அனுமதியும் இல்லாமல், வெறும் ஆக்கிரமிப்புக்காக கட்டப்பட்ட விகாரையை இடிப்பதில் என்ன பிரச்னை? அங்கு உள்ள மக்களால் தமது வழிபாட்டிற்காக கட்டப்பட்ட ஆலயம் அது. இது, வழிபடுவதற்கு ஆட்களே இல்லாத, அதிகாரத்தை நிலைநாட்ட கட்டப்பட்ட திருட்டு விகாரைக்கு, வக்காலத்து வாங்க சில தரகர்கள். அப்படி இடிக்க முடியாதென்றால், மற்றைய அரசுகளுக்கும் இன்றைய அரசுக்கும் என்ன வித்தியாசம்? புதிய மொத்தையில் பழைய கள். இதற்கு ஏன் பெரிசாக அலட்டிக்கொள்ள வேண்டும் நாம்?
  22. தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி உட்ப்பட அந்த மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும்.
  23. இந்த அடாவடிக்கு நாம் இடம் கொடுத்தால், இந்த பௌத்த மத, இன பரம்பல் வடக்கில் கூடும். மாற்றீடு, இழப்பீடு என்று சொல்வார்கள். அதிலும் பார்க்க, சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. மதிலென்றாலென்ன, வீடென்றாலென்ன, விகாரையென்றாலென்ன ஒன்றே கடைபிடிக்க வேண்டும். வேண்டுமானால், ஆளுநர் காணியிலோ, அர்ச்சுனாவின் காணியிலோ விகாரையை கட்ட பரிந்துரை செய்யலாம். கலந்துரையாடுகிறார்களோ, அச்சுறுத்தி வற்புறுத்துகிறார்களோ தெரியவில்லை. தானாகவே சிங்கள குடியேற்றம், இராணுவ இருப்பை அங்கீகரிக்கிறார்கள்.
  24. நேற்று, மாவையரின் வீட்டில் கல்லுளி மங்கன் போல் அமர்ந்திருந்த அவரைப் பார்த்து நானும் அதைத்தான் நினைத்தேன். மாவையரின் இரத்த அழுத்தம் அதிகரித்ததற்கு இந்த பதவியாசை பிடித்த தலையாட்டிகளே காரணம். மாவையர் ஒன்றும் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேனென அடம் பிடிக்கவில்லையே. தர்மப்படி, கொள்கைப்படி, சட்டப்படி தலைவருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரை பதவியை பொறுப்பெடுக்கும்படியே கேட்டுக்கொண்டார். அதை மறுத்து காரணமில்லாமல் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்று முடக்கி வைத்திருப்பது யார்? அந்த தீர்ப்பு வரும்வரை மாவையர்தான் தலைமைபொறுப்புக்கு உரியவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்தால்; கட்சியின் முடிவை ஏற்காமல், எதை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தீர்கள், என்று நீதிபதி கேட்டால்; சட்டமேதை என்று சொல்லிக்கொள்பவர் என்ன பதில் சொல்வார்? நான் தலைவனாகும்படி தீர்ப்பு சொல்லுங்கள் என்பாரா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.