Everything posted by satan
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க மக்களை தூண்டியது யார்? யாரால் மக்கள் ஜே .வி .பியை தெரிந்தெடுத்தனர் என்பதை எல்லோருக்கும் புரியும். உங்களுக்கு புரியவில்லையென்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவுக்கு தமிழினம் கால் கழுவுவதை இந்தியாவுடன் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்."
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
அப்போ சுமந்திரன் வலுவாக இருக்கிறாரோ? நீங்கள் நிதர்சனத்தை ஏற்றிக்கொள்ளும் ஆளல்ல என்பது எல்லோரும் தெரிந்த விடயம். தேர்தல் முடிவுகள் உங்கள் தலையில் குட்டிச்சொல்லியும் புரியவில்லை என்பதால், உங்கள் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை.
-
மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல
இவர்கள் அரசியலுக்கு வரும்போது, மக்களுக்கு கூறிய விடயங்களை, அரசியலில் இருந்து போகும்போது கூட நிறைவேற்றாதவர்கள், நாள்க்கணக்கு காட்டுகிறார்கள். இவர்கள் உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்திருந்தால்; அதன் கஸ்ரம், நிறைவேற்ற எடுக்கும் காலம் தெரிந்திருக்கும். அரசியலுக்கு வந்த உடனேயே, யார், எவ்வளவு பணம், எப்படி சேர்ப்பது என்கிற குறியிலேயே இருந்திருப்பார்கள். அவற்றை தேடி சுத்தப்படுத்தவே காலம் காணாது. இது எல்லாம் மக்களுக்கு தெரியாதென நினைத்து மக்களுக்காக அழுகிறார்களாம். அங்காலை ஒருவர், முடிந்தால்; நாங்கள் ஊழல் செய்தோம் என்பதை நிரூபியுங்கள் என்று சவால் விட்டவர், இப்போ எங்களை விமர்சிப்பதை விட்டு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்கிறார். மக்களுக்கு மூன்று வேலை உணவு கொடுத்தாலே போதும் என்கிறார். மக்களின் தேவை அவ்வளவுதான் என நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ? இன்னொரு கூட்டம், பதவியை ராஜினாமா செய்த முன்னாள் சபா நாயகரை பற்றி இன்னும் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்கள் ஊழலை விசாரிப்பதை விமர்சிக்கிறார்கள் எதிர்க்கிறார்கள். வேறொருவர் கட்சியை முடக்கி வைத்துக்கொண்டு, அனுராவுக்கு சவால் விடுகிறார். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அவசரம். இவர்களுக்கிடையில் மாட்டுப்பட்டு அவதிப்படுவது மக்கள்தான். மக்களை வைத்து தாம் பிழைப்பதும் தம்மை மறைப்பதுமே இவர்கள் செய்வது.
-
மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல
அதுமட்டுமல்ல, இந்த அரசை தொடரவிட்டால், தாங்களும் மக்களின் நிலைக்கு தாழ்ந்து வரவேண்டுமே என்கிற பயமும் கூட. மக்களின் பணத்தை இதுவரை காலமும் சுரண்டி கொழுத்திருப்பவர்கள், இனிமேல் தங்கள் பணமும் சுரண்டப்படுவதை தவிர்க்க முயலுகிறார்கள்.
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சம்பந்தர் இருக்கும் காலத்தில், அவர் தவறு செய்தாலும் அவரின் மூப்பு காரணமாக அவரை எதிர்க்காமல் மதிப்பளித்தனர் மற்றைய உறுப்பினர். அதனை அவர் தனது திறமை, மற்றவர்களின் இயலாத்தன்மை என தவறாக விளங்கிக்கொண்டார். அதனாலேயே சுமந்திரனுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினார் சம்பந்தன். சுமந்திரன் விடும் தவறுகளை மற்றையோர் சுட்டிக்காட்டியபோதும் அவர் தன் அதிகார தொனியை பயன்படுத்தி கடிவாளத்தை சுமந்திரனுக்கு கொடுத்தார். இதனால் இப்போதும் அவர்களால் சுமந்திரனை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை. சம்பந்தர் காலத்திலும், அதிகாரம் அவர் கையை மீறிப்போயிருந்தது. வருந்துவதை விட அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பதவிகள் யாவருக்கும் வழங்கப்படவேண்டும், எல்லோரையும் சரிசமமாக மதிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் எப்படி ஒருவர் பேச்சாளர் பதவியை வகிக்க முடியும்? முன்னைய பேச்சாளர் எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்? கட்சி யாப்பின்படி ஒருவர் எத்தனை ஆண்டுகள் பதவி வகிக்கலாம்? ஏன் அந்த கொள்கை பின்பற்றப்படவில்லை? இந்தப்பேச்சாளர் பதவியை தன்வசப்படுத்தி, கட்சிக்கு, இனத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது, அதே மற்றவர்கள் கருத்து கூறினால், கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என நடவடிக்கை எடுப்பது எந்த விதத்தில் நிஞாயமானது? இவரை இந்தபதவியிலிருந்து அகற்ற வேண்டும். குரங்கின் கைபூமாலை போன்றது இவர் கட்சியில் எந்தப்பேச்சாளர் பதவியையும் வகிப்பது. அவர் தனது பதவியை துஸ்ப்பிரயோகம், செய்து கட்சிக்கு அபகீர்த்தியை, முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார். கட்சியை தன் சொத்துபோல் ஆள்கிறார். கட்சி யாப்பின்படி அவரை விலத்த வேண்டும். இதிலிருந்தே இவருக்கு சட்டம் தெரியாது என்பது புலனாகிறது. சட்டம் தெரிந்திருந்தால்; அதற்கு மதிப்பளிக்க தெரிந்திருக்கும். அவ்வாறான ஒருவர், கொள்கைகளை உதாசீனம் செய்து கொண்டு, நீதிமன்றத்திற்கு போவேன் என்று உறுப்பினரை மிரட்டுவதும் நீதிமன்றத்தை அவமதிப்பதுபோல் செயற்படமாட்டார். நீதிமன்றம் என்பது இவரது வீடா, தொட்டதற்கெல்லாம் நீதிமன்றம் இவர்களை விசாரிக்க? அப்போ கட்சியின் யாப்பு என்பது எதற்காக? மக்களின் எத்தனையோ பிரச்சனைகளை தீர்க்க நேரம் காணாமல் நீதிமன்றம் திணறுகிறது. இதற்குள் இவர் சொறிச்சேடடை. இவர் ஒரு சட்டத்தரணி. நீதிமன்றத்தின் பழு, மாண்புதெரியாதா இவருக்கு? இவர் எவ்வகையில் பார்த்தாலும் நீதிக்கோ, கட்சிக்கோ கட்டுப்படுபவரல்ல. கடிவாளம் இல்லாத குதிரை போல தான் நினைத்தபடி ஓடுபவர். தானே கட்சிக்குள் வலிய வந்து தன் பெயரை இழுக்குப்படுத்திவிட்டார். இனி இவரால் பழைய தொழிலையும் தொடர முடியாது. கட்சிக்கு பிடித்த ச***. இவரிடமிருந்து கட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும்.
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
எத்தனை உண்மை! ஒரு மனிதன் செய்யும் தீங்கு, ஒரு மனிதனை மட்டுமல்ல அல்லது ஒரு பண்பை மட்டுமல்ல மொத்த சமூகத்தையும் மனித மாண்புகளையும் புரட்டிப்போட்டுவிட்டது என்பது கசப்பான உண்மை.
-
மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல
தோல்வியடைந்த அரசியல்வாதிகளெல்லாம், கூடிப்பேசி, கருத்து தெரிவிக்கிறார்களோ என்றொரு சந்தேகம் எனக்கு. காரணம் இந்த அரசில் அதிகம் பாதிக்கப்படப்போவது ,ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். அதனால் அவர்களே அதிகம் மக்கள் பற்றி கவலைப்படுகிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள். இவர்கள் செய்தது போதுமென்றே இவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். இவர்கள் காலத்தில் தேனும் பாலும் ஓடியதுபோல பீலா விடுகிறார்கள். படிக்கிற காலத்தில் சில பிள்ளைகள், தாங்களே தவறு செய்து விட்டு முதலில் ஓடிப்போய் ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட மாணவனை குற்றம்சாட்டுவது போலுள்ளது, இன்றைய போலிப்பணக்காரர், அதிகாரிகள், அரசியல் வாதிகளின் குற்றச்சாட்டுக்கள். இதில தாங்கள் தலைவர், மக்களுக்கு சேவை செய்கிறோம் என்கிற எண்ணம் வேறு. இதை மக்கள் சொல்லவில்லை, அவர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். "ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாய் ஒன்று."
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
எவ்வாறு ஒசாமா பின்னலேடனை அழித்து, ஆப்கானிஸ்தானை சூறையாட, சதாம் குசேனை கொன்று, ஈராக்கை சுடுகாடாக்க, நாடகம், கதாபாத்திரம் தயாரித்தார்களோ, அவ்வாறே தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வேண்டிய இடத்தில் தங்கள் நாடகங்களை அரங்கேற்றுவார்கள். அவர்களுக்கு எந்த மக்களைப்பற்றியும் கவலையில்லை. அப்பாவிமக்களே அவர்கள் பாவிக்கும் கேடயங்கள். நாம் என்ன செய்ய முடியும்? நாமும் அவ்வாறே, பல தலைமுறைகளை, அவர்கள் வருந்தித்தேடிய யாவற்றையும் இழந்தவர்கள். நீங்கள் மனித நேயம் மிக்கவர் என்று தெரிந்துகொண்டேன், உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். ஆமாம். அந்த அதிர்ச்சி செய்தி, எல்லோருக்கும் விசர் வர வைத்ததோடு அச்சத்தையும் ஏற்படுத்தியது. செய்வதேறியாமல் தாக்குதல் நடந்த இடத்துக்கு போயிருந்தார்கள்.
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
கடந்தகாலங்களில் முட்டுக்கொடுத்து, கூட இருந்து, தனியாக கதைபேசிய அரசாங்கங்களிடம் இந்த கோரிக்கையை வைத்தா இதெல்லாம் செய்தார்? அவர்களிடமே பெற்றுக்கொள்ள இவரால் முடியவில்லை, இவரிடம் யார் ஆதரவு கேட்டார்கள் என்று முறுகுகிறார் இப்போ? தமிழ் மக்களே இவரை நிராகரித்து விட்டனர், இனி யாருக்கு நாடகம் நடித்து காட்டுகிறார்? காற்றுள்ள போதே தூற்றாதவர், இப்போ வாயால் தூற்றுகிறார். நான் சொல்லல, இவருக்கு வாய் கொஞ்சம் நீளம் என்று? இப்படி போலி அறிக்கை, ஊடக சந்திப்பு நடத்தாவிட்டால் தூக்கம் வாராது போலிருக்கு. முதலில் உந்த பேச்சாளர் பதவியை பறிக்க வேண்டும் இவரிடமிருந்து. சும்மா உளறிக்கொண்டு. அட....., அவர்கள் இவ்வளவு சொன்னபோதும் மூன்று தடவை சந்தித்திருக்கிறார். தன்மானமற்ற மனிதர். தனிமையில் சந்திக்க வேண்டும், பேசவேண்டும் அதுவே அவரது பணி. பேச்சாளர் பதவியை காலம் கடந்தும் தன்வசம் வைத்திருப்பதின் உள்நோக்கம் இதுதான். தான் நினைத்த நேரமெல்லாம், நினைத்ததை அறிவிப்பதற்கு. இந்த பதவியை இவ்வளவு துஸ்பிரயோகம் செய்பவர், தலைவர் பதவியை பறித்து தன் வசம் எடுத்தால், எவ்வளவு சாதிப்பார்? கட்சியில் ஆயிரம் பிரச்சனைகளை குழப்பங்களை உருவாக்கி உறுப்பினரை வெறுப்பேற்றி, வெளியேற்றி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கூட்டப்பட்ட கூட்டங்களில் முடிவேதும் எட்டப்படாமலேயே கலைந்து, நேரத்தை விரையம் செய்துகொண்டு, அதற்குள் எங்கே, புதிய அரசியலமைப்பு தொடர்பான நிலைப்பாடு எடுப்பதற்கு நேரம் அவர்களுக்கு? ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலைப்பாடு, கருத்து, அணி. சுமந்திரனுக்கு இதை விட்டால் வேறு வேலையுமில்லைபோல மினைக்கெடுகிறதற்கு .
-
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
அது பிள்ளைகளின் பிரச்சனையல்ல. அடுத்த குடும்பம் கெடுவதே பிரச்சனை.
-
மாத்தறை சிறைச்சாலை சம்பவம்; மேலும் ஒரு கைதி உயிரிழப்பு!
ம், விபத்து எங்கும், எதிலும். முந்தாநாள்த் தான் உலகில் சனத்தொகை அதிகரிப்பு என்றார்கள். செய்தியோ, விபத்து அழிவு என்று வந்துகொண்டிருக்கிறது.
-
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
குடிப்பழக்கமும் அப்படித்தான் சுவியர். வற்புறுத்தி அறிமுகப்படுத்துவர், பிறகு குடிகாரன் என்பர்.
-
மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை
கல்விப்பணிப்பாளர்? கல்விக்கு, மாணவர்க்கு செய்த துரோகம். வேலியேபயிரை மேய்ந்துள்ளது. சமூகம் கெட்டு குட்டி சுவரானதற்கு யார் காரணம்?
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
அரசியலில் நிலைக்க வேண்டுமாயின்; மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். போற்றல் தூற்றல்களை கடந்து அமைதியாக. இறுதியில் யார் தூற்றினாலும், அவர் மனது சொல்லும்; என்னால் இயன்றதை, நன்றே செய்தேன் என்று மனது அமைதியடையும். இதுவே உண்மையான சேவை. மக்கள் பணி, மகேசன் பணி. ஒன்று, யாராவது ஒரு நல்லது செய்தால்; அதை பொறுக்காதவர்கள் சேறடிப்பார்கள் அல்லது அவரை தொடர்ந்து தாமும் ஏதும் செய்யவேண்டுமென்று செய்வார்கள். மணி, நல்ல துடிப்புள்ள இளையவர். மக்களுக்கு இன்று நிறைய சட்ட உதவிகள் தேவை, ஊழலை அடாவடியை அகற்ற. ஆகவே இவர் நல்ல மனதோடு மக்களுக்கு சேவை செய்ய முன்வருவாரானால் இணைந்து செய்யலாம். நாளடைவில், தமிழரசுக்கட்சியை சிதைக்க, சொந்தமாக்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்து கனவு காணவேண்டியது.
-
கரைச்சல் வேண்டும்
ரசோதரன், உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்வேன், வேறொருவருக்கும் சொல்லிபோடாதேங்கோ. முக்கியமாக கோசானுக்கு சொல்லிபோடாதேங்கோ. அனுரா மாத்தையாவுக்கு மட்டும் எந்த ஒரு கரைச்சலும் குடைச்சலும் வரக்கூடாது! பிரார்த்தனையும் செய்யிறேன். மனுஷன் ரொம்ப சாதுவாய், வாயில்லாப் பூச்சியாய் இருந்திருப்பார். அதனாலேயே சாதிக்க முடிந்திருக்கு. ஆனால் எங்கட சுமந்துக்கு வாய்தான் அதிகம். அதிலும் உளறுவாய், நாறல் வாய்.
-
வடக்கு மாகாண ஆளுநருக்கும் பலாலி விமானப்படைத்தளபதிக்கும இடையில் சந்திப்பு
நாங்கள் நினைத்தது, எங்களுக்கு வேண்டியது நடக்காவிட்டால்; அவரை தூற்ற வேண்டியது. இப்பவே படங்களையும் சேகரித்து வைப்போம். வேதநாயகம் சூடு கண்ட பூனை, அதை ஏற்கெனவே அனுபவித்தவர்.
-
கரைச்சல் வேண்டும்
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். " அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்? ரசோதரன், இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சனை. தன் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ரன்வெல. ஆனா இன்னும் அதை பிடிச்சு தொங்கிக்கொண்டு, மக்களின் பிரச்சனை, தங்களின் ஊழல் பிரச்சனையை மறைத்து, வளங்களையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு பாராளுமன்றத்தை அவமதிக்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் சொல்லும் இந்த கரைச்சல் சரிவராது, வேறேதும் வேண்டும். நல்லா யோசிச்சு சொல்லுங்கோ! அதோட, நம்ம சுமந்து இந்த வருடத்துக்குள் வீட்டை இடித்து தரை மட்டமாக்குவது என்று அடம் பிடிக்கிறார், அவருக்கும் ஏதாவது .....? இருந்தா சொல்லுங்கோ.
-
கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
இறுதியில் இவர்களால் எல்லா அழிவையும் சந்திக்க போவதும் அமெரிக்காதான். எங்கெங்கு எதையெதை விதைத்தார்களோ, எல்லாம் ஒன்றுசேர்ந்து திருப்பி தாக்கும் நேரம் வரும். ஏன், நெருங்கி விட்டது என்றே சொல்லலாம்.
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு!
இனி, எங்கட கட்சிக்கை மோதல்களும் களைகட்டும்.
-
2024/2025 புது வருடம்!
நன்றி, தங்களுக்கும் உரித்தாகட்டும்.
-
புத்தாண்டில் அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம்!
அவர்கள் அனுதாபத்தை தேட முன், அவர்கள் மேல் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர்களை கைது செய்தாலும் கேள்வி கேட்கும், கைது செய்யாவிட்டாலும் கேள்விகேட்கும் ஒரு கூட்டம். ஊழல் வாதிகளை கைது செய்ய வேண்டுமென்றே மக்கள் அனுரவுக்கு ஆணை வழங்கினர்!
-
பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் - ஜனாதிபதி
ஜனாதிபதியின் நிதியத்திலிருந்து மில்லியன் கணக்கில் திருடிய அந்த வெள்ளை வேட்டிக்காரரை பிடித்து சிறையிலடையுங்கள் முதலில். அதன் பின், இந்த நிறுவனத்தை நிறுவுங்கள். நிதி நிறுவனமென்றாலே ஒரு திருடர் கூட்டம் அதை சுற்றித்திரியும். பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம்; மக்களின் பணத்தை திருடிய கூட்டமே. அவர்களை விசாரணை செய்து, அரசியலில் கால் வைக்காதபடி குடியுரிமையை பறியுங்கள்.
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
இன்று மாவையர் வேறு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சகுனி கட்சிக்குள் நுழைந்து, இனத்துக்கு எதிரான சதி வேலைகளை செய்யும் போதே தலையிலடித்துச்சொன்னோம், எச்சரித்தோம். யாரும் கேட்கவில்லை. தலையில் வைத்துக்கொண்டாடினார்கள், சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார்கள், சட்ட நிபுணர் என்று புகழாரம் வேறு சூட்டினார்கள். இப்போ எப்படி துரத்துவது என்று தெரியாமல், அவரின் தன்னிச்சையான அடக்குமுறைகளை தாங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஒன்று சட்டப்படி இவரை கட்சியிலிருந்து நிறுத்த வேண்டும். அல்லது கட்சித்தொண்டர், ஆதரவாளர்கள், மக்கள் இவருக்கெதிராக கிளம்பி ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் வெளிப்படுத்த வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு ஏன் அதிகாரங்களை வழங்குகிறார்கள்? அல்லது அதிகாரம் செலுத்த விடுகிறார்கள்? மற்றய உறுப்பினர் தோற்ற போது அவர்களுக்கு என்ன செயல்முறையை நடைமுறைப்படுத்தினார்களோ அதையே இவருக்கும் செய்ய வேண்டியதுதானே. வலிய வீட்டுக்கை பூந்த ச**னை, குனியை விரட்டுவது கஸ்ரம்.
-
புத்தாண்டில் அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம்!
எடக்குமுடக்கான கேள்வியெல்லாம் புதுவருஷத்தில கேட்கக்கூடாது. வந்த வருஷத்தை வரவேற்று கொண்டாடுகிற வழியைப்பார்க்க வேணும். வருட முடிவில், அதிரடியின் காயங்களை பலபேரின் பதவிகளில், சிறைச்சாலைகளில் காணுவீர்கள்.