Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. அதுமட்டுமில்லை சாமியார், சாதாரணமாக இந்த கால பருவத்தில் மரக்கறி, வெங்காயம், மிளகாய் பரவலாக விலை உயர்ந்துதான் இருக்கும். போன வருடம் இதே போன்று பச்சை மிளகாய் ஆயிரம் ரூபா விலைபோனது. மழைக்காலம், மேட்டுநில உற்பத்திகளே வரும். இந்த முறை அளவுக்கதிகமான மழை, காற்று, மேட்டுநில உற்பத்திகளும் பாதிப்படைந்து உள்ளது. இப்போ விவசாயம் செய்வது கொஞ்சம் கஸ்ரம். பசளை, கூலி, எரிபொருள் கொடுத்து செய்வது கட்டுப்படியாவதில்லை. மக்கள் விவசாயம் செய்ய பின்னடிப்பதற்கு இதுவும் காரணிகள். முன்பெல்லாம் உயர் படிப்பு படிக்க முடியாதவர்கள் விவசாயத்தில் இறங்கி விடுவார்கள். இப்போ வெளிநாடு போக வேணும். அந்தரத்தில் அந்நிய தேசத்தில் அந்தரிகிறார்கள்.
  2. அடி ஆத்தி, இதுக்குத்தானா நாங்கள் இவ்வளவு அலறித்துடிக்கிறோம்? ஐயாவுக்கு குசும்பு கூடிப்போச்சு. கால நேரந்தெரியாமல் விளையாடத்துடிக்கிறார். விமானம் குண்டு போட்டு அழிச்ச இடத்துக்கு முதலாளாய் ஓடினவராச்சே. தழைத்தோங்கின மரங்களை பருவகாலம் மாறமுதல் கத்தரித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டாம்? மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை கொடுத்து, உடனடியாக அவர்களை வெளியேற்றும், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். என்ன அரசாங்கங்களோ? தேவையில்லாதவற்றுக்கு செலவழிப்பார்கள், மக்களின் பாதுகாப்பை கவனத்திற் கொள்ளவில்லை. பிறகு இயற்கையை குற்றம் சொல்லுறது!
  3. ம், பாராளுமன்றத்தில் புத்த மதத்திற்கு முன்னுரிமை! ஆமா சாமி, தமிழருக்கெதிரான சட்டம் யாப்பு! ஆமா சாமி, எல்லாம் அமுலாக்கியபின் சர்வதேசம் தலையிடவேண்டும்! தீர்வை பெற்றுத்தரவேண்டும்! கோசம். அப்போதே, தமது எதிர்ப்பை காட்டி வெளிநடப்பு செய்யவில்லை, ஜெனிவாவில் போய் நம் பிரச்சனையை எடுத்துச்சொல்ல மாட்டோம், அதற்கும் அமெரிக்கா போக வேண்டும். அப்போ மக்கள் ஏன் இவர்களுக்கு வாக்களித்தார்கள்? ஏன் மக்களிடம் வாக்களிக்கும்படி கேட்க்கிறார்கள்?
  4. இவரது பாடல்களை நான் என்னை மறந்து ரசிப்பதுண்டு. அதிலும், எனக்கு மிகவும் பிடித்த இவரது பாடல் கடன்மீன்கள் படத்தில் பாடிய "தாலாட்டுதே வானம்." இவருக்கு இவ்வளவு வயதென்று நான் அறிந்திருக்கவில்லை. இவரது புகைப்படத்தை இன்றுதான் காண முடிந்தது. அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.
  5. ஆமா! இது எவ்வளவு காலமாக, சட்ட விரோதமாக நடைபெறுகிறது. மக்கள் போராடி, முறையிட்டு களைத்துப்போய், இளங்குமரனை நாடி, அவர் ஓடி பிடித்தபின், இப்பதான் நித்திரையிலிருந்து எழுந்து வந்ததுபோல் அறிக்கை விடுகிறார்கள். தொழிலதிபர் பதினான்கு வருடங்களாக இந்த தொழிலை செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்போ, இப்போதான் அகப்பட்டிருக்கிறார். இல்லையென்றால் நமக்கென்ன என்று எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். எல்லாத்துக்கும் ஒருவர் வந்து கேள்விகேட்கவேண்டும். இளங்குமரனின் நடவடிக்கைகளை அடக்கி, கலைத்துவிட்டு தாம் தம் தொழிலை தொடர்வதற்காகவே அவரொருவர் இருவரை கூட்டிவந்து, அவர்கள் நிஞாயமாக அகழ்கிறார்கள், நான் அவர்களிடம் இருந்து பெற்று தொழில் செய்கிறேன் என்று சோடித்து, மாட்டி விட்டிருக்கிறார். அதில் அதிகாரிகளையும், அவர்கள் வழங்கிய அனுமதிகளையும் ஆதாரமாக காட்டியிருக்கிறார். இனி எல்லோரும் பதில் சொல்லவேண்டியவர்களாவர். போலீஸ் மா அதிபர் சொல்கிறார், இது பொலிஸாரின் வேலை இல்லையாம். கடற்தொழில் அமைச்சர் சொல்லுறார் இளங்குமரன் பொலிஸாருக்கு அறிவித்திருக்கலாமென. பொறுத்திருந்து பாப்போம். யார் பொறுப்பு, யார் பிரச்சனை, யார் மாட்டுறார் என்று.
  6. மருதங்கேணியரை சொல்லுறியளோ? கள உறவுகள் எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்.
  7. இந்தப்படத்தை பாத்தபோது நான் நினைச்சேன், அனுராவுக்கு சாரதிவேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு வந்திருக்கிறார், வழியில் இவரையும் சந்தித்திருப்பார் என்று. பிரதமர்..... பிரதமர்!
  8. அவரே, யூலி சங்கோடு தனியாய் சந்திக்க முடியலையே என்றாலும் இந்த படத்தில தலையை கூட காட்ட முடியலையே என்கிற கடுப்பிலும் வருத்தத்திலும் இருக்கிறார். நீங்கள் வேற.
  9. ஆமா....., ஜஸ்ரின், யூட், கற்பகம் எல்லோரும் அங்குதானே இருக்கிறார்கள்? சத்தத்தை காணவில்லை. தெரிந்தவர்கள் யாராவது அழைப்பெடுத்து பார்க்கவும்.
  10. அதேபோல் விமானத்தில் பயணஞ் செய்யும் பெண்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தால்: சாமியாருக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை கொடுப்பார், ஆனால் வீட்டுக்கார அம்மாவையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.
  11. சட்ட விரோதமானவரிடம் பொருளை வாங்குவதும், விநியோகிப்பதும் குற்றம் என்பது சட்டத்தரணிக்கு தெரியவில்லையோ? அப்போ, தான் பொருள் யாரிடம் பெறுகிறேன் அவர்கள் எப்படிப்பெறுகிறார்கள் என்று அழைத்து வந்து கருத்து தெரிவித்தாரே, அது எப்படி? அப்படியென்றால், போதைப்பொருள் கடத்துபவரையல்லவா கைது செய்ய வேண்டும், ஏன் வியாபாரிகளை கைது செய்கிறார்கள்?
  12. சிரிப்பதை தவிர வேறொன்றுமில்லை. எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே வட்டத்தை சுற்றி, மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடி, மீண்டும் தாங்களே ஏக பிரதிநிதிகள் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டு வந்து, மக்களை தொடர்ந்து ஏமாற்றியதும், சக உறுப்பினர்களை தனது வயதை வைத்து சர்வாதிகாரிபோல் நடந்ததும், ஒரு குழப்பியை சட்ட மேதை என்று கட்சிக்குள் புகுத்தி அதன் அடாவடியை எல்லாம் கண்டும் காணாமல் விட்டதும், தனது காலத்திற்கப்பால் அந்தக்கட்சி நிலைத்து நிற்க முன்னோக்கு இல்லாமல் செயற்பட்டதையும் தவிர அவர் சாதித்தது என்ன? குறைந்தது நீதி நிஞாயம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு ஆள். ஆளுக்கொரு நீதி, சட்டம். குரங்கின் கைப்பூமாலை போன்று சுமந்திரன் கையில் கொடுத்துவிட்டு அவரை அடக்கமுடியாமல் மௌனமானார். முன்னுக்கு பின் முரணான கருத்து. அதைவிட, சிவஞானம் பதவி பறிபோகிறதென்றால் தூற்றுவார், கிடைக்கிறதென்றால் மீண்டும் அதே வாயால்போற்றுவார். இந்த இரண்டுமூன்று நாள் இடைவெளியில் அவரது இரண்டு முகத்தையும் பார்த்துவிட்டோம். அவர் தமிழரசுக்கட்சியை கூறு போட்டவர் அவர். தன் மக்கள் சார்பாக எங்கேயும் எதையும் பேசிப்பெறவில்லை. மக்களாலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களாலும் நிராகரிக்கப்பட்டவர். குறித்த கட்சியை நடைபெறாமல் நிறுத்தி, இடையூறு விளைவித்துக்கொண்டிருப்பவர். பதவிகளை நிஞாயத்துக்கப்பால் கைப்பற்றி மற்றவர்களை புறந்தள்ளுகிறார். இவர் பக்கம் நிற்பவர்கள் நிஞாய வாதிகளோ, அறநெறி சார்ந்தவர்களோ, பகுத்தறிவு உள்ளவர்களோ இல்லை. பதவிக்காகவும் பணத்துக்காகவும் அலைபவர்கள். தன்னிச்சையாக முடிவெடுத்து கட்சியை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதன் பலனை வெகு விரைவில் அறுப்பார்கள். மக்கள் பிரதிநிதி மக்களால் தெரிவுசெய்வயப்பட்டவர். அவர்களுக்கு என்ன தேவை என்று தெரியாதவரை சிங்களம் தெரிந்தாலென்ன, சர்வதேசம் தெரிந்தாலென்ன? அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். மக்களுக்காக எதுவும் செய்யாதவர். எப்படி சொன்னாலும் சிலருக்கு யதார்த்தம் புரிவதில்லை. உளறிக்கொண்டு இருப்பார்.
  13. அவனவனுக்கு எத்தினை எதிர்பார்ப்பு, சிலருக்கு பாதுகாப்பாய் விமானப்பயணம் அமைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு, இன்னும் சிலருக்கு பயணத்தை தடங்கல் இல்லாமல் சுகமாய் சென்று மீள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, பரிமாறும் உணவு ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, இன்னும் சிலருக்கு உறவுகளை பிரிந்து மீண்டும் சந்திக்கப்போகிறோமென்கிற எதிர்பார்ப்பு, நம்ம சாமியாருக்கு; விமானத்தில் வேலை செய்பவர்கள் வடிவாக இருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு. ரசனை மன்னன்!
  14. உலகின் எல்லாப்பகுதியும் ஏதோ ஒரு வகையில் அழிவை சந்தித்துக்கொண்டு வருகிறது.
  15. ஆமா, இப்படியான சட்ட விரோதமான தொழில் செய்பவர்களுக்கு உதவுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது பரீட்சயந்தான்.
  16. அட கடவுளே! விகாரை காணாதென்று பள்ளிவாசல்களும் சேர்ந்து கோவில்களை தின்னப்போகுது. சிங்களவனுக்கு இடம் கொடுத்ததால் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாய் அலையிறோம். இதுக்குள்ள இது வேற. ஏன் காத்தான் குடியில் குடி அமர்த்தினால் என்ன இவர்களை? நான் ஒன்றும் பாகுபாடு காட்டவில்லை முன்னெச்சரிக்கை செய்கிறேன். நாளைக்கு இவர்களும் நாட்டுக்கு சொந்தம் கொண்டாடினால், நாம் எங்கே போவது?
  17. முன்பு ஒரு காணொளி பாத்தேன், பேரூந்தில் ஒரு பிக்கு ஆசனத்தில் அமர்ந்திருந்தது. நீண்ட நேரமாக நின்ற ஒரு சாதாரண மனிதர், அதற்கு பக்கத்தில் இருந்த இடத்தில அமர்ந்தார் பாருங்கள்; மனிசன் உருக்கொண்டு எழும்பி, அந்த மனிதரை தாக்க தொடங்கி விட்டார். பார்த்தவர்களெல்லோரும் முகம் சுளித்தார்களேயொழிய கேள்வி கேட்கவில்லை. நம்ம மதகுருமார் இப்படி நடந்து கொண்டதை நான் காணவுமில்லை கேள்விப்படவுமில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு தாம் எழுந்து தம் ஆசனத்தை அளித்திருக்கிறார்கள். உதுகள்தான் வாகனங்களுக்கு சாசும் கொடுக்காதுகள், எல்லாம் பிரத்தியேகமாக வேண்டுமென்று அடம்பிடிக்குங்கள். வீடுகளுக்கு போனாலும் ஆசனத்தில் வெள்ளைசேலை விரிக்குமட்டும் காத்து நிற்குங்கள். உண்மையிலேயே மதகுருமாருக்கு மக்கள் விரும்பினால் மதிப்பளிக்கலாம், அளிக்கவேண்டுமெனும் கட்டாயமில்லாமல் ஆக்கவேண்டும். அனுரா மாத்தையா செய்வார்!
  18. சீனா, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவின் விமான நிலையத்தை நெருக்கமாக நோட்டமிடப்போகிறதாம், ஹி..... ஹீ. சீனாவை இவ்வளவு நெருக்கமாக இலங்கைக்குள் ஊடுருவ அழைத்ததே இந்தியாதான்.
  19. இந்தியாவுக்கு கடுப்பேத்துறது எண்டே சீனா நிக்குது. அடுத்து இந்திய கப்பல் வரும். என்ன கொண்டு வரும்? 🙄
  20. அவர்கள் ஏதும் பதிந்து விபரம் தந்ததாக நினைவில்லை. நாய் நடக்க முடியாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டது, சாப்பிடவில்லை. இருந்தாலும் அதன் நன்றியுணர்வு, யாராவது வீட்டுக்கு வந்தால், தனது பின்பக்கத்தால் அரைந்து சென்று அவர்களை பார்த்து குரைத்தது. எல்லா நாய்களுக்கும் பாவித்த ஊசியை பாவித்தார்களோ, அல்லது காலஞ்சென்ற ஊசியை செலுத்தினார்களோ தெரியவில்லை.
  21. நான் சொல்லல, பொலிஸாருக்கு தமது கடமை பற்றிய தெளிவு, அறிவு இல்லை. கிளீன் என்றவுடன், அர்த்தம் புரியாமல், வாகனங்களை கிளீன் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். காரணம், பெரும்பாலும் அவர்கள் லஞ்சம் பெறும் இடங்கள் இவைதான்.
  22. போகிற போக்கைப்பாத்தால், அப்பிடிப்போலத்தான் கிடக்கு. ஆனால் அந்த நிலம் எங்கிருந்து வரும்? இராணுவம் பிடித்துவைத்திருக்கிற மக்களின் காணியை சொந்தக்காரருக்கு திருப்பி கொடுக்க மறுக்கிறது. இவ்வாறு இருக்கும்போது, இருக்கிற சனத்தை விரட்டிவிட்டு அவர்களின் நிலத்தை கொடுக்குமோ? சொந்த மக்களை கொலைசெய்து இருப்பவரையும் விரட்டி விட்டு, வேறு நாட்டவரை குடியேற்றி விட்டால்; வரலாறு மாறி, இது சிங்களவரின் பூர்வீக நாடாகிவிடும். மக்களை கொன்றழித்துவிட்டு, நாய்களை காக்கும் காருண்ய நாடு இது.
  23. இது அரசாங்கத்திற்கு குடைச்சல் கொடுக்கும் வேலை. வெகு விரைவில் வெளிவரும். எல்லாப் பக்கத்தாலும் குடைச்சல் கொடுத்தால், தங்களுக்கெதிரான விசாரணைகள் தாமதமாகும், அதற்குள் வேறு பிரச்சனைகளை உருவாக்கி அரசை கவிழ்த்து விடாலாமென நினைக்கிறார்கள். இந்தபெருச்சாளிகளை வெளியில் விட்டால் இதுவும் நடக்கும், இதற்கு மேலும் நடக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.