Everything posted by satan
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அட... அது நீங்கள் இல்லையா? நீங்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்!
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கவி அருணாச்சலத்திற்கு! தொடருங்கள் தங்கள் பணியை.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அதுவும் மோடி கொடுத்த ஆலோசனைதான். பின்னர், அனுரா நாட்டுக்கு திரும்பி வரவேண்டாமோ? இந்து ஆலயங்களை தரிசிக்கவில்லையா இந்தியாவை (மோடியை) மகிழ்விக்க?
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அந்த தீவிரமான குற்றச்சாட்டுக்கள் என்னவென்று வெளியில் எடுத்து வையுங்கள், சான்றுகள் இல்லையா இருக்கா என்று பார்க்கலாம்! ஒரு கட்சி அங்கத்தவர், மற்ற அங்கத்தவர்களைப்போல் இயங்குகிறாரா? மற்ற உறுப்பினர்களை பாதுகாக்கிறாரா? மதிக்கிறாரா? மற்ற உறுப்பினர்களை கடைத்தெரு வியாபாரிகள்போல் பொது இடத்தில தூற்றுகிறார், பதவி விலக வேண்டுமென்கிறார், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார், சந்திக்கிறார், கருத்து அறிக்கை விடுகிறார், அநாகரிக வார்த்தைப்பிரயோகம். மற்றவர் ஏதாவது ஒன்று செய்தாலே பதவி விலகு, இடை நிறுத்து, நீதிமன்றம் என்று இழுத்தடித்து மற்றவர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கிறார். இதை யாராவது உங்களுக்கு செய்தால்; பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்வீர்களா? சிறிதரனையும் சாடுகிறோம். தவறு செய்பவர் எல்லோரையும் விமர்ச்சிக்கிறோம். காரணம்; இது மக்களின் பிரச்சினை, அதற்காக மக்கள் இழந்தவை ஈடு செய்ய முடியாதவை! இவர்களின் ஈனச்செயலால் பாதிக்கப்படுவது, சாதாரண ஏழை மக்கள். இதற்காகவா மக்கள் இவர்களை தெரிந்தெடுத்தனர்?
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
ரொம்ப அடாவடித்தனம், கொலை முயற்சி. இதை தட்டிக்கேட்க்கத்தான் வேண்டும். 2000ம் ஆண்டென்றால் அங்கயனுக்கும் தொடர்பு இருக்கலாம்.
-
யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
காரணம் காட்டமுடியாத பணச்சேர்ப்பு, அதில ஒரு வயதான பாட்டியை தனது பாட்டி அவரின் சொத்து, அவருக்கு இப்போ ஞாபக மறதியென்று நாமல் விசாரணைக்கு கூட்டி வந்திருந்தார் முன்பு. அதெல்லாம் ரணில் காலத்தில் ஒப்புக்கு எடுத்துவிட்டு மூடிவிட்டார். இவர்களுக்கு தெரியும் தாங்கள் எப்போதும் சட்ட சிக்கலை சந்திக்க வேண்டுமென்று. அதனாலேயே மக்களை கூட்டிக்கொண்டு விசாரணைக்கு தோன்றினர். இப்போ மக்களே இந்த திருடரை பிடியுங்கள் என்று கூறி விட்டனர். அனுராவை மக்கள் தேர்ந்தெடுத்ததன் முக்கிய நோக்கமும் அதே. சட்ட நடவடிக்கை எடுக்காமல் கைவிட்ட யாவரும் தண்டிக்கப்படவேண்டும்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கடுப்பேத்திற நீ? இந்த வரவேற்பு, நாடகமெல்லாம் தங்கள் பாதுகாப்புக்கும் தங்கள் அபிவிருத்திக்குமே. இந்தியாவுக்கு உண்மையில் இலங்கை நலனில் அக்கறை இருந்திருந்தால்; போரையே உருவாக்கி நாட்டை அழிக்காமல் இருந்திருக்கும். அது அனுராவுக்கு நன்கு தெரியும், சிங்கள இனவாதிகளுக்கும் தெரியும். சுடுகாடாக்கிவிட்டு அபிவிருத்தி செய்கிறாராம். முட்டாள் சுயநலவாதிகள் இருக்கிறவரைக்கும் அவர்களுக்கு வெற்றியே.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அதை சுமந்திரனே வெளிப்படுத்தி, அவர்கள் பதவி விலக வேண்டுமென்கிறார், கொழும்புக்கு ஓடி விட்டார் என்கிறார். யாரை சாடுகிறார் என்று தெரியவில்லையா உங்களுக்கு? விக்கினேஸ்வரன் அதற்கு பொறுப்பேற்று தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கொழுப்புக்கு போனாலென்ன, லண்டனுக்கு போனால்த்தான் இவருக்கென்ன? அவரை விமர்ச்சிக்க இவர் யார்? ஏன் அடுத்த கட்சிக்குள் மூக்கை நுழைக்கிறார்? இது அநாகரீகமில்லையா? தன் தோல்விக்கு பொறுப்பெடுத்து கட்சியின் சகல நடவடிக்கையிலும் இருந்து விலக துப்பில்லை, போனதடவை மாவையரை விரட்ட பத்திரிகை அறிக்கைகளும் கூட்டங்களும் நடத்தியவருக்கு தெரியாதா தனது நிலை? எதுக்கெடுத்தாலும் பதவி விலக வேண்டுமென்ற கூப்பாடு, இதை தவிர வேறேதும் உருப்படியா செய்ததில்லை. அதுதான் மக்கள் ஓய்வெடுக்கும்படி அனுப்பியுள்ளனர். அடங்குதா மனிசன்? யாரை பதவி விலத்துவேன் என்று கூவித்திரியுது.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? அனுமதியளித்தவர் ரணில், அவரின் தோஸ்து சுமந்திரன். அப்பவே தடுத்திருக்க வேண்டுமே சுமந்திரன்? ஏன் அதை செய்யவில்லை சமூகத்தில் அக்கறையிருந்தால்? இப்போ தேர்தல், பாராளுமன்ற கதிரை ஆசை வந்தவுடன் தனது பதவிக்காக தூக்கிப்பிடித்தால்; அது சமூக நலன் கிடையாது, சுத்த சுயநலம். அனுமதியளித்தவர் நாட்டின் ஜனாதிபதி! இங்கே ரணிலை குற்றம் சொல்ல பயம், வாங்கியவர்களை பதவிவிலக வேண்டுமாம். அது அவர்களுக்கு வாக்களித்தவர்கள் பிரச்சனை. அதை தெரிந்துகொண்டேதான் மக்கள் இவரை நிராகரித்து அவர்களை தெரிந்தெடுத்துள்ளனர். தனது தோல்வியையும், அவர்களின் வெற்றியையும் தாங்க முடியாமல் வயிற்றெரிச்சலில் தவிக்கிறார். இவரின் வாக்கு, செயல்களில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. இவர் இதை தேர்தலுக்கு முன்பு சொல்லி தடுத்திருந்தால் மக்களிடத்தில் இவரின் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருந்திருக்கும். மக்களுக்கு நன்றாகவே தெரியும் இவர் ஒரு பொறாமைக்காரன் என்று. இந்தபசாசு கட்சிக்குள் நுழைந்தபின்தான் இத்தனை குழப்பங்கள் விரிசல்கள். இத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, இவரை மட்டும் ஏன் விமர்சிக்கிறார்கள் என்று யோசித்தால். உண்மை விளங்குமுங்களுக்கு!
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
அது! அவர் எதை இழந்தார் கவலைப்படுவதற்கு? சும்மா இருந்தவருக்கு தோல்வி ஏது? கட்சிக்குள் அடாவடி குறைந்ததா? எல்லாம் அப்படியே ஆளுகிறார். மக்கள் அடித்தாலென்ன? கட்சி அடித்தாலென்ன அவருக்கு நோகாது, அப்படி ஒரு எ---த் தோல். ஆமா ஒன்று சொல்லி அதை மறுத்து பத்திரிகையாளரை குற்றம் சாட்டும் இவரை எல்லாம் ஏன் பேட்டி எடுக்கிறார்கள். சரி எடுத்தவர்கள் தான் எடுத்தார்கள், மக்கள் ஏன் உங்களை தேர்தலில் நிராகரித்தார்கள் அதன் காரணம் என்ன எண்டு கேக்கிறார்களா? கேட்டால் சொல்வார், எங்கள் கட்சி பெரிய வெற்றி, வடக்கில் மூன்று, கிழக்கில் அபார வெற்றி எனக்கூறி தனது தோல்வியை மறைத்து கட்சி வெற்றி தனது உழைப்பால் வந்த வெற்றி என்பார். துரோகிகளுக்கு கோபம் ரோசம் மானம் இல்லை, பதவி அதிகாரமே குறியாக இருப்பர். நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
சொல்ல நினைத்தேன் சொல்லிவிட்டீர்கள். அதுவும் செந்நிற கசங்கல் சேட்டு, நிக்கிற நிலையை பாத்தா நீங்கள் சொல்லுறது சரிபோலவே தெரிகிறது. சுமந்திரன் யாரையும் சந்திப்பதற்கு எந்த முகாந்திரமும் தேவையில்லை. ஒரு கமராவை, வெளிநாட்டு தூதுவரை, மக்கள் பேரணியை கண்டால் போதும், தலையை காட்டுவார். முந்தி டக்கிலஸை யாரும் அழைத்தா நுழைந்தவர்?
-
13 ஆவது திருத்தம் , மாகாண சபை முறைமை நாட்டுக்க அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும் ; சரத் வீரசேகர !
இவரும் இந்த நாட்டின் சாதாரண பிரஜை. மற்றவர்கள் இருப்பதுபோல் இவரும் இருக்க வேண்டும். நாட்டுக்கு எது நல்லது என ஜனாதிபதியும் அவரை தெரிந்தெடுத்த மக்களும் தீர்மானிப்பார். கடந்த அரசுகள் அவ்வாறே சொல்லித்திரிந்தன. மக்கள் தமக்கு அளித்த ஆணையையே நிறைவேற்றுவோம் என்று. அதை இன்றைய ஜனாதிபதி செய்ய விட்டு அமைதியாக இருங்கள். உங்களுக்கு யாரும் ஆணை தரவில்லை, நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டியதுமில்லை.
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
இவருக்கு இப்போ என்னதான் பிரச்சனை? ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தின்கீழ் ஒரு வருடத்துக்குள் ஏக்கய ராஜ்ய அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகுவேன் என்று சவால் விட்ட அய்யாத்துரை பதவி விலகினால் தமிழ் மக்கள் சந்தோசமாக இருப்பார்கள், தமிழரசுக்கட்சியும் தமிழ்தேசியக்கட்சியாய் குடைச்சல் இல்லாமல் ஒன்றாய் இயங்கும். நாட்டில இப்போ நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன, இதில நானுந்தான் என்று சொல்லிக்கொண்டு தலையை நீட்ட முடியவில்லையே என்கிற கவலை அவருக்கு. போற இடமெல்லாம் பதவி விலக வேண்டும், பதவி விலக வேண்டுமென்று கூவித்திரிகிறார். தான் இல்லாத பாராளுமன்றில் தமிழர் யாரும் இருக்கக்கூடாது என்பது அவர் எண்ணம். அதிலும் இப்போ சிறீதரனிலை கடுப்பான கடுப்பு. அன்று மாவைக்கு எதிராக சிறிதரனை தலைவராக்க ஓடுப்பட்டவர். இப்போ, அவர் தலைவரானது பொறுக்கவில்லை. நாளை சி. வி. கே. சிவஞானத்துக்கும் சத்தியலிங்கத்துக்கும் நடக்காது என்கிறது என்ன உத்தரவாதம்? சணம் பித்தம் சணம் வாதம் சுமந்திரனுக்கு, இவரை நம்பி கொஞ்சம் பின்னாலை அலையுதுகள்.
-
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!
பெண்ணின் முன்னாள் காதலனாம்.
-
ஹிஜாப் அணியவில்லையாம்.. யூடியூப்பில் பாடிய பாடகிக்கு ஈரான் கொடுக்கும் தண்டனை.. நீதித்துறை அறிவிப்பு
வேடிக்கையான, தனிமனித மாண்பை மதிக்கத்தெரியாத துறை, நீதித்துறையாம். சிரிப்பாய்க்கிடக்கு.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஆனந்தசங்கரியும் சம்பந்தனும் தமிழர் விடுதலை கட்சியை மீட்க கோட்டுக்கு போய் பிரிந்ததுபோல், சுமந்திரனிடமிருந்து தமிழரசுக்கட்சியை மீட்டெடுக்க நீதிமன்றத்தினால் மட்டுமே முடியும். பதவியாசைக்காக நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு திரிகிறார்கள், அது கிடைக்காத போது கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்றெல்லாம் வசை பாடினார்கள். இப்போ, பலவந்தமாக பதவிகளை கையகப்படுத்தி வைத்திருப்பது யார்? கட்சியை இரண்டு படுத்தி உறுப்பினர்களை வெளியேற்றுவது யார்? இவர்கள் பதவியாசை இல்லாத துறவிகளா?
-
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!
சுட்டிக்காட்டியதற்கு நன்றி! ஒருதலைக்காதலென்றால் கடத்தல், கொலையில் முடியும். இருதலைக்காதல் என்றால் இருவரும் சேர்ந்து தப்பியோடிவிடுவார்கள் சமூகத்திலிருந்து.
-
கிளிநொச்சியில் இரவு இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட யாழ்ப்பாண இளம் பெண்!
ருதலைக்காதலாக இருக்குமோ?
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
எனக்கு அளிக்கப்பட்ட பதவியை பார்த்து பயந்து விட்டீர்கள் போலிருக்கிறது! பரவாயில்லை, தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை இவ்வாறு பல முத்திரை குத்துவார்கள். அதற்காக நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லாமல் இருக்க முடியாது. நான் யாரென்று எனக்குத்தெரிந்தால் இதற்கெல்லாம் பயப்படவேண்டியதில்லை.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
என்னது...... சம்பளமில்லாத தொழலுக்கா இவ்வளவு அடிபாடு? இவர்கள்தான் பெருத்த ஊழல் பெருச்சாளிகளும் தெருச்சண்டியரும். பொறுங்கோ, அனுரவை குடைச்சல் இல்லாமல் இருக்க விட்டால், இவர்களெல்லோரும் தீயில நடக்கவேணும். வேண்டுதல் ஒன்றுமில்லை, மக்களுக்கு சேவை செய்து உறுதிப்படுத்தினாலே அவருக்குரிய வேதனத்தை பெற முடியும், அது போக சமூக சேவை செய்பவர் தனது காரை தானே ஓட்டிப்போக வேண்டும். மக்கள் அலுவல் சம்பந்தமான போக்கு வரத்துக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படவேண்டும், இல்லையேல் ஒதுங்க வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்கிடையில் குறிப்பிட்ட வேலைகளை செய்து உறுதிப்படுத்தவேண்டும், இல்லையேல் தங்கள் சொந்த நேரத்தில் முடிக்க வேண்டும் சம்பளம் கிடையாது. திறமையற்றவர்கள் விலகி, படித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு இடம்விட வேண்டும்.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
இவருக்கு ஒரு கதிரையை கொடுத்துவிட்டால்; இழுத்துபோட்டுக்கொண்டு இருந்து சபையை ரசிப்பாரே. இதுகூட அனுராவுக்கு புரியவில்லையே. தடாலடியாக யாரும் பதவி கேட்டு வரவேண்டாமெண்டு ஒரு போடு போட்டார் பாருங்க, அதுதான் யாராலும் பொறுக்க முடியாத ஒன்று.
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
எனது பல உறவினர்கள் போலீஸ் துறையில் பணிசெய்தார்களாம். அதன்பின் இந்த சிங்கள திணிப்பு வந்ததால் எல்லாரும் தம் வேலையை இராஜினாமா செய்துவிட்டு ஊரில் வந்து தோட்டம் செய்வதாக கூறியிருந்தார்கள். இன்று தமிழ்ப்பொலிசாருக்கு நிறையவே தட்டுப்பாடுள்ளது. இவையெல்லாம் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டன. இதை பண்டாரநாயக்க வாரிசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தவறு. தமிழர் ஒருபோதும் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை, எவ்வளவுக்கு விட்டுக்கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கு விட்டுக்கொடுத்துபோனார்கள். இருந்தும் சிங்களம் அதற்குமேலும் அடித்து பறிக்க நினைத்தது. தலைநகரில் சிங்களமும் தமிழும் கதைத்த தமிழரையே முதலில் அடித்து விரட்டியது. கல்வி தரப்படுத்தல் சட்டம் யாருக்கெதிராக, யாரால், ஏன் கொண்டுவரப்பட்டது? வரலாறு ஏன் யாருக்கெதிராக திரிக்கப்பட்டது? தமிழர் ஒரு விடாமுயற்சியுள்ளவர்கள், சிக்கனமானவர்கள், கட்டுப்பாடும் கல்வியில் ஒழுக்கத்தில் ஆர்வம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் உழைத்து முன்னேறினார்கள். அதை அவர்களால் பொறுக்க முடியவில்லை. தங்களை சுரண்டித்தான் அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று இனவாதிகள் அரச கட்டிலேறுவதற்கு மக்களின் ஆதரவை பெறுவதற்காக கிளப்பப்பட்ட வதந்தியே (வாந்தியே) நாட்டை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. விழுந்துபோன நாம் எதையோ சொல்லி சரியாக்கப்பார்கிறோம். ஆனால் எதிரி அதை தனது பலமாக எடுக்கிறான். இது வரலாறாகிவிட்டது. நாங்கள் அதற்கு நிறைய விலையும் கொடுத்துவிட்டோம். நம்மை நாமே நோவதை, சமாதப்படுத்துவதை தவிர வேறு தெரிவில்லையோ எனத்தோன்றுகிறது.
-
ஆளும் தரப்பு அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடி: மன்னாரில் சம்பவம்
மாற்றுவது ரொம்ப ரொம்ப கஸ்ரம், இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. இவர்களே அரசுக்கெதிராக கலகம் செய்வார்கள். அனுராவுக்கு இதை கடப்பது லேசானதல்ல. கடந்துவிட்டால் கண்டத்தை தாண்டியதுபோல்.
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
பா. உறுப்பினர் வேலையை உருப்படியா செய்த்தால் அது தேவையில்லை. அதைத்தான் அவர்கள் செய்வதில்லையே? கல்வியமைச்சர் வேலை வேணுமாம்! எங்கன்ர சுமந்திரனுக்கு வெளிநாட்டலுவலர் பதவி கிடைக்கப்போகுதென்று உதயன் கம்மன்பில சொன்னார், அதற்கு சுமந்திரன் சொன்னார், அது உதயன் கம்மன்பிலவின் கற்பனை. எனக்கு பிரதம மந்திரி பதவிக்கு அனுரா அழைப்பு விடுவார் என்று சொல்லி காத்திருந்தார். அது ஏன் அப்படிச்சொன்னார்? மக்கள் அதனை நம்பி தனக்கு வாக்களிப்பார்கள் என்று ஒரு உத்தி. ஆனால் அனுரா பக்கமிருந்து அவரை தலைகுனிய வைக்கும் அவர் எதிர்பார்க்காத பதில், மக்களிடம் இருந்து ஒரு ஆணை!
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
கவலையே வேண்டாம்! சூட்டோடு சூடு தட்டிக்கேட்க ரணில் இந்தியா புறப்படுகிறார். சுமந்திரனின் தோழராச்சே! என்ன சூழ்ச்சி செய்யப்போறாரோ தெரியலை?