Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8488
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. இல்லை, முதற் பிழையிலேயே திருந்தியிருக்க வேணும். திருந்தவில்லை, இனி அதற்கு இடமுமில்லை சந்தர்ப்பமுமில்லை அதனால் பலனுமில்லை. இவர்கள் அழிவது ஒன்றே முடிவு. ஒன்றை மறைக்க இன்னொன்றை செய்து குவித்து விட்டார்கள். மீண்டு வர இடமில்லை விடவும் மாட்டார்கள்.
  2. ஆமா ..... இவர் பெரிய புகழின் உச்சிக்கொம்பில் இருக்கிறார், இவரை விழுத்துவதற்காக இவரின் பெயரை பயன்படுத்துகின்றனர், இவருக்குள் ஒரு நினைப்பு. இதுக்கே இப்படியென்றால்; இன்னம் பல சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தொடர்ந்து வரும்போலிருக்கிறதே. கோத்தா சாட்சியங்களை அழிக்காமல் உறங்க மாட்டார். இவர் முக்கியமான சாட்சி, இவர் எடுப்பார் கைப்பிள்ளை. தன் தலைவனையே காட்டிகொடுத்தவருக்கு, அதை நிஞாயப்படுத்தியவருக்கு இது ஒன்றும் புதிதில்லையே. அதுசரி .... ஹன்சீர் அஷாட் மௌலானா எதற்காக வெளிநாட்டில் தஞ்சம் கோரவேண்டும்? அதற்காக, ஏன் இவரின் பெயரை பயன்படுத்தவேண்டும்? வெளிநாட்டில் தஞ்சம் கோருவோரெல்லாம் இவரின் பெயரை பாவித்தா பெறுகின்றனர்? அப்போ ..... இவரால் ஹன்சீர் அஷாட் மௌலானாவுக்கு பாதுகாப்பு பிரச்சனை இருந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார் இவர். அதை ஏன் அவர் இலங்கையில் முறையிட விரும்பவில்லை? தனக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதை அவர் உணர்ந்துள்ளளார். அப்படி ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட காரணம் என்ன? அவர்களை (ஐ. எஸ்) உங்கள் எஜமானரின் அரசியல் நோக்கத்திற்காக மரணிக்க ஊக்குவித்ததாகவே தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார், உங்கள் கூற்றும் அவரின் சாட்சியமும் ஒத்து வருகின்றது. தாங்கள் நினைத்ததை சாதிப்பதற்கும் தங்கள் அடாவடிகளை மறைப்பதற்கும், அதிலிருந்து தப்பிப்பதற்கும் வன்முறைகளை தூண்டுவதும், பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துவதும் இந்த நாட்டின் கலாச்சாரம், அது இந்த நாட்டுக்கு ஒன்றும் புதிதில்லை, அதனாலேயே இந்த நாடு அழிந்து குட்டிச்சுவரானது, ஆனால் அதை செய்பவர்கள் செய்ய வேண்டும், தெரியாதவங்க செய்ய வெளிக்கிட்டால் அதனாலேயே அழிவர். பன்றியோடு சேர்ந்த கன்றும் ஏதோ தின்னுமாம், சேர்ந்த இடம், அவர்களுக்காக செய்யுந்தொழில் அப்படி பேச வைக்குது. கூட இருந்தவனாலேயே காட்டிக்கொடுக்க முடியும். எதற்காக காட்டிக்கொடுத்தார் என்பது நன்றாகவே இவருக்குத் தெரியும், தெரியாவிட்டால் தன் கடந்த அனுபவங்களை மீட்டிப்பார்க்கலாம். துரோகி துரோகத்தாலே அழிவான். கூலிக்கு கொலை செய்பவனை கொலை செய்ய, இன்னொருவன் கூலிக்கு அமர்த்தப்படுவான். இன்னும் நிறைய துரோகங்களையும் பரபரப்புச் செய்திகளையும் மாற்றங்களையும் எதிர் பார்க்கிறோம். சவேந்திர சில்வா அடுத்த சாட்சியாளராக மாறவும் இடமுண்டு. எதுவும் எந்த நேரத்திலும் இடம்பெறலாம் யாக்கிரதையாக நடமாடவும், முடிந்தால்........? தஞ்சமும் கோரலாம் வெளிநாட்டில்!
  3. தமிழரின் காணிகளை பறித்த்து விகாரைகள் எழுப்ப பயன்படும். பாராட்டுவதும் நிதியளிப்பதுமே அவர்களின் பங்களிப்பு.
  4. குண்டுத்தாக்குதல் நடந்த கால கட்டத்தில் சர்வதேச விசாரணை செய்ய முன்வந்தன, ஆனால் அது தமக்கு இழுக்கு என அதை ஏற்க மறுத்தவர் கோத்தா. இன்றுவரை அவர்களால் சரியான விசாரணை அறிக்கையை வெளியிட முடியாததும் சணல் நான்கு வெளிப்படுத்தியதும் இழுக்கல்லவே அவர்களுக்கு. கண்டிப்பாக தாங்கள் மாட்டுப்படுவோம் என்பதற்காகவே தடுத்திருந்தார். ஐயோ...ஐயோ! அவர்கள் ஐ .எஸ் அமைப்பினர். அவர்களுக்கு ஏற்கெனவே தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். சிறையில் எதற்காக இருந்தார்கள்? அதைவிட தற்கொலை குண்டுதாரிக்கு அப்படியென்ன பயிற்சி தேவை? அவர்கள் என்ன எதிரியின் பாசறையிலா தாக்குதல் நடத்தினர்? அல்லது போரிட்டா இறந்தனர்?
  5. எனக்கென்னவோ ராஜபக்சாக்களின் அரசியல் பயணம் அஸ்தமிக்குது என்றே தோன்றுகிறது. நாமலை ஜனாதிபதியாக்க மஹிந்தா எடுத்த முயற்சியே இவர்களுக்கு கஸ்ர காலத்தை தொடக்கியது. நானே அரசன் என்று நினைத்து ஆடும்போது நினைத்திருக்க மாட்டார்கள் இப்படி மாட்டுவோமென. வெற்றி விழா கொண்டாடும்போது அறிந்திருக்க மாட்டார்கள் தூக்கியெறியப்படுவோமென. இனி புத்தராலும் இவர்களை காப்பாற்ற முடியாது. எப்போதும் ஒரே தந்திரம் பலிக்காது. அப்படி செய்ய வெளிக்கிட்டால் அந்த தந்திரத்தில் அவர்களே சிக்கிக் கொள்வார்கள். குண்டு வெடித்து அரசை கைப்பற்றிய ருசி, வன்முறையை கிளப்பி மீண்டும் அரச கதிரையேற துடித்தவர்கள், சரியான நேரத்தில் சணல் 4 உண்மையை வெளிப்படுத்தி அடையாளம் காட்டியிருக்கிறது. இனி விதி அவர்களை பாத்துக்கொள்ளும். இல்லையேல் சிங்கள மக்களே இந்தமுறை அவர்களின் வன்முறையில் சிக்குவார்கள். இது இவர்களின் வழமையான பல்லவி என்பது உலகறிந்த விஷயம். ராஜபக்சவின் உருவச்சிலையை அடித்து நொருக்கியதை உலகமே கண்டதே. . ஏற்கெனவே மக்களால் துரத்தப்பட்டவர்களுக்கு ஏன் சேறடிக்க வேண்டும்? தூய்மையானவர்களுக்கு சேறடித்து அவர்களின் புகழை மறைக்கிறார்கள் என்று சொல்லலாம், திருடர் மாதிரி ஒளித்து ஓடியவர்கள் மேல் ஏன் சேறடிக்க வேண்டும்? ?
  6. நம் அரசியற் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்து தடுக்க முயற்சிக்கலாம், அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் காணியில்லாமல் தவிக்கும்போது, அரசுக்கு எதற்கு காணி? மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை. அந்ததந்த பிரதேசத்தில் உள்ள காணிகள் அந்த பிரதேச மக்களுக்கேயுரியது. அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படவேண்டும். காணி சீர்திருத்தச் சட்டத்தை ஆராய்ந்தால் இதற்கு சரியான பதில் கிடைக்குமென நினைக்கின்றேன். சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுகிறது, தேவைக்கதிகமான விகாரைகளை தனிப்பட்ட மக்களின் காணிகளிலேயே நிறுவுகிறது. இந்த அடாவடிகளை சர்வதேசத்துக்கு இடை விடாமல் அறிவிக்க வேண்டும், இல்லையேல் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களாக சிங்கள மக்களே கருத்தப்படக்கூடும்.
  7. இதுதான் ஆரம்பம்! உண்மைகள் இவர்களுக்குள்ளேயே பிரிந்து அடிபட்டு இவர்களாலேயே வெளிக்கொண்டு வரப்பட்டு சிங்கள மக்களுக்கு அறிவிக்கப்படும். யார் வன்முறைகளை தூண்டினார்களோ அவர்களே அதற்கு இரையாகி இந்தப்பிரச்சனை அவர்களோடுஅழியும்.
  8. அன்றே விசாரணையை நீதியோடு முன்னெடுத்து இவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கியிருக்கலாம். ஒன்று அன்று மக்களிடையே செல்வாக்கு மிக்கவர்களாக இராணுவ வலுவுள்ளவர்களாக ராஜபக்ச குடும்பம் இருந்தது. மக்கள் சக்திக்கு, இவர்களின் அடாவடிக்கு பயந்து அவர்களை கைது செய்யாது தன்னிடமிருந்து இவர்களை விலத்தி வைக்கும் செயற்பாடாகவே அன்றைய ரணிலின் நடவடிக்கை இருந்தது. அதோடு விஜேஜ தாச ராஜபக்ச கோத்தாவை காப்பாற்றுவதிலே கவனமாக இருந்தார். அதனாலேயே எதுக்கு ரணில் அஞ்சினாரோ அது நடந்தது. இப்போ நிலைமை வேறு. அமெரிக்க தூதுவர் அடிக்கும் சூறாவளிப் பயணத்தை பாத்தால் இந்திய இராணுவத்தை விட அமெரிக்க இராணுவமே உதவிக்கு வரலாம் போற் தெரிகிறது. இலங்கை இராணுவத்தை தன் கைக்குள் அடக்கப்போறா போலுள்ளது. அன்று விடுதலைப்புலிகளை முறியடிக்க ரணில் பின்னிய வலை இன்று சிங்களத்துக்கே திரும்பும் போலிருக்கிறதே. நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. எதற்கும் தாடியரிடம் தீர்க்கதரிசனம் கேட்டுபாக்கலாம். அதை நிட்சயப்படுத்த அவரும் உயிரோடு இருக்க மாட்டார் நானும் உயிரோடு இருக்க மாட்டேன்.
  9. பல அரசியல்வாதிகள் பலர் இந்தத்தாக்குதல் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தனர். ஹரின் பெர்னாண்டோ அந்தச்சமயத்தில் தனது தந்தையை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றபோது தன்னை உயிர்த்த ஞாயிறு திருப்பலிக்கு போகவேண்டாம் என்று தந்தையார் தடுத்ததாக கூறியிருந்தார். அதற்கு இந்த மல்கம், அதை தனக்கு அறிவித்திருந்தால் தான் இந்த அசம்பாவிதத்தை தடுத்திருப்பேன் என்று கூறியிருந்த்தார். எது எப்படியோ உண்மை தெரிந்தும் அதை மறைத்து இத்தனைபேர் பலியாக காரணமாயிருந்த எல்லோருமே குற்றவாளிகள், அவர்களது மனச்சாட்சி அவர்களை தண்டிக்கும்.
  10. இது இலங்கையின் வழக்கமான செயற்பாடாக இருந்தாலும் ஏதாவது ஒன்றுக்கு மறுப்பு தெரிவித்தால் பரிசீலிக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான மறுப்பு, ஒரு சாராரை சாடுவது சிந்திக்கப்பட வேண்டியது அதுமட்டுமல்ல, ஒரே தவறை பகிரங்கமாக செய்து கொண்டு எச்சரித்துக்கொண்டு எப்படி மற்றவர் மேல் குற்றம் சுமத்த முடியும்? இது இவர்களின் அறியாமை என்பதோடு மற்றவர்களை அறிவிலிகள் என்றும் தம்மைப்போல் தான் இருப்பார்கள் என நினைக்கும் மடமைத்தனம்.
  11. ஆமா.... நாட்டிலே எத்தனையோ அரசியல் வாதிகள் இருக்க, தங்கள் பெயரை மட்டும் பயன்படுத்த காரணம் என்ன? அவ்வளவு புகழ் வாய்ந்த பெயரோ, பதவியோ தாங்கள் வகிப்பது? நாட்டுக்காக போராடிய எத்தனையோ போராளிகள் இன்னும் சிறைகளிலும் அச்சுறுத்தலிலும் கண்காணிப்பிலும் இருக்கும்போது, தங்களுக்கு மட்டும் இராஜாங்க அமைச்சர் பதவி எப்படி கிடைத்தது? அதற்கு தங்களுக்குள்ள தகுதியென்ன? ஒரு பியோனை நியமிக்க அதிகாரமற்ற முதலமைச்சர் பதவி என்று புலம்பியவரை எதற்காக இலக்கு வைத்து குற்றம் சாட்டப்படுகிறது? அப்படி எதனை இவர் சாதித்தார்? சிங்களம் தன்னை பாதுகாக்கவும் தனது திட்டங்களை நிறைவேற்றவும் தான் சிக்கிக்கொள்ளும்போது இவர்களை பலியிடவும் இவர்களுக்கு பதவி அந்தஸ்த்து மரியாதையை கொடுத்து காப்பாற்றுகிறது, சமயம் வரும்போது தான் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்போது விபத்து ஒன்று போதும், இவர்களை இல்லாமல் செய்வதற்கு அதனாலேயே கூட இருந்து செயலாற்றிய பலர் தங்களுக்கு எதிராக சூழ்நிலை திரும்பும்போது நாட்டை விட்டு தப்பிவிடுகின்றனர். அதை யாரும் மறுக்கவில்லையே, இவர் விளக்கம் கொடுப்பதற்கு தேவையில்லையே. அறிவிலிகள் கொடுக்கும் விளக்கம் தங்களையே காட்டிக்கொடுத்து விடும். ஐ .எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு காரணம் ஒன்று இருக்கத்தேவையில்லை. அவர்கள் எந்த நோக்கமும் அற்றவர்கள், கொலை ஒன்றே அவர்களை இலட்சியம். ஐ. எஸ் அமைப்பினருக்கும் இலங்கை தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் என்ன பிரச்சனை இருந்தது குண்டுத்தாக்குதல் நடத்துமளவிற்கு? அல்லது சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கும் ஐ. எஸ் அமைப்பினருக்கும் இடையில் என்ன தகராறு இருந்தது? அவர்கள் யார்? அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? இவ்வளவு விளக்கம் கொடுப்பவர் அதையும் விளக்க வேண்டும்! சிறைச்சாலையில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிட்டு வெல்லமுடியுமென்றால் ஏன் கொலை செய்ய முடியாது? மலேசியாவில் இருந்த ஒருவர், சிங்கப்பூரில் இருந்த ஒருவர், சிறையில் இருந்த ஒருவர் தீட்டிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் பலர் இருக்கின்றனர். தாங்கள் ஏன் சிறையில் இருந்தீர்கள் என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும். உயிரை காப்பாற்றுவதற்காக என்று சொல்வதே பொருத்தமாகும். சரியான வார்த்தைப்பிரயோகம் . உள்ளூர் ஆட்சித்தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் ஒன்றா பொடி மாத்தையா? அப்போ எதற்கு பாராளுமன்றத் தேர்தல்? அதோடு ஆட்சியை நடத்தியிருக்கலாமே? அப்படி அமோக வெற்றி பெற்றவர்கள் தப்பியோட காரணமென்ன? அதெப்படி இந்தக்குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒரே பல்லவியை போடமுடியும்? அப்போ..... ஒரே குறிக்கோளுடன் ஒருமித்து செயற்பட்டிருக்கிறீர்கள், அதனாலேயே வேறு மாதிரி சிந்திக்கவோ விளங்கப்படுத்தவோ முடியவில்லை. கருத்து, செயல் ஒற்றுமை எங்கேயோ உதைக்கிறதே? மைத்திரியும் தங்கள் தந்தையாரும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றியிருக்கின்றனரே இந்த தாக்குதலின்பின் ஆட்சி மாற்றத்தின் பின், அதெப்படி? சிங்கள இனவாதிகள் எந்தக்கட்சியில் இருந்தாலும் அவர்களின் தமிழின அழிப்பு கொள்கை ஒன்றுதானே. வாப்பா இருக்கும் கட்சியில் மகனும் இருக்க வேண்டும் என்று கட்டாயம் எதுவுமில்லையே. தாக்குதலை நடத்தியவர்கள் ஐ. எஸ் தீவிரவாதிகள் என அந்த இயக்கமும் நீங்களும் அறிவித்தீர்களல்லவா? பிறகு ஏன் இப்படி குழப்புகிறீர்கள்? அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியை தாக்கியதாக யாரும் கூறவில்லையே? தாக்குதல் நடந்து இத்தனை காலம் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிஞாயம் வழங்கப்படாதது ஏன்? அது யாரின் தவறு? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாது என்பதே நிஜம் என்பது நாட்டு மக்கள் நன்கறிவர். காலம் எத்தனை விசித்திரமானது! ஆட்சியை இழந்தவர் கதிரையில், ஆட்சியை தக்க வைக்க பாதிக்கப்பட்ட மக்கள், பகடைக்காய்களாக பாவிக்கப்பட்ட மக்கள், உங்களுக்காக வாதாடிய மக்கள் உங்களை தண்டிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். இனி நீங்கள் செய்தவற்றுக்கு அனுபவிக்க தயாராகுங்கள். எங்கள் தாய் தந்தையர் குழந்தைகள் தெருவிலே உறவுகளை தேடியலைகிறார்கள், இழந்து தவிக்கிறார்கள் அவர்களுக்கு காலம் பதில் சொல்லவேண்டும்.
  12. ஓ ..... மன்னித்துக்கொள்ளுங்கள் குருசோ. முன்பொருதடவை கோத்தா ஜனாதிபதியாவதற்க்கு முன், தேர்தல் களம் களை கட்டியிருந்தவேளை, யாழ்களத்தில் ஒரு விவாதம் சூடாக போய்க்கொண்டிருந்த போது, ஒரு கள உறுப்பினர் வங்காலையானோ, றொபின்சன் குருசோவோ ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தார், அதாவது; தேர்தலில் கத்தோலிக்கர் தனித்து போட்டியிடப்போவதாகவும், இந்த மல்கம் என்றவர் தங்களுக்காக வரப்போகும் அரசியற் தலைவர்களுடன் சேர்ந்து உதவப்போவதாகவும் கூறியிருந்தார். அந்த கள உறவின் பெயர் காரணமாக குழம்பி உங்களுக்கு கருத்தை கூறியதற்காக, நீங்கள் அவராக இல்லாதவிடத்து, நான் உங்களுக்காக இட்ட பதிவுக்காக வருந்துகிறேன்! ஏன் மல்கத்துக்கு உந்த வேண்டாத வேலை? இவருக்கு எதுக்கு அரசியல்? கோத்தா ஆட்சிக்கு வந்தவுடன் அவரை தமது நிகழ்வுகளுக்கு அழைப்பதும், சிறப்பிப்பதும் பாராட்டுவதும் தமது செயற்திட்டங்களை சுற்றிக்காட்டுவதுமாக திரிந்தாரே,எதற்கு இந்த வழமைக்கு மாறான செயற்பாடு? தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ ஆலயங்கள் குண்டுபோட்டு அழிக்கப்பட்டன, தஞ்சமடைந்த மக்கள் கொடூரமாகக்கொல்லப்பட்டனர் அப்போவெல்லாம் வாய் திறக்காத மனிதர், முந்திக்கொண்டு முதலைக்கண்ணீர் வடித்ததன் காரணம் என்ன? தமிழர் முஸ்லிம்கள் தமக்கு வாக்குப்போட மாட்டார்கள் ஏ ன்பது ராஜபக்ஸாக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே சிங்கள மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளை அபகரிப்பதற்கு, மீண்டும் அந்தமக்களிடையே கதானாயகர்களாக காட்டப்படவேண்டும், அதிலும் கிறிஸ்தவ சிங்கள மக்களின் ஆதரவையும் தக்க வைக்க வேண்டும். ஆனால் சிங்கள கிறிஸ்தவர்களை இலக்கு வைக்க விரும்பவில்லை, அதேநேரம் கர்தினாலை வைத்து சிங்கள கிறிஸ்தவர்ளை தன்பக்கம் இழுக்க வைக்க, அசிங்கமான செயலை அரங்கேற்றினர். இந்த மல்கம் கர்தினாலாகவல்ல மனிதனாக இருக்கவே லாயக்கற்றவர். வெள்ளை உடை போர்த்த, அதிகார ஆணவ ஆசை பிடித்த சாத்தான்! தன்னை நீதிமானாக காட்ட போடும் வேஷமே இது இடும் கூக்குரல்.
  13. அசாத் மௌலானா மேல் இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் இருந்தும், அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றி வாக்குமூலம் அளிக்கும்வரை, எதிராக குற்றச்சாட்டுக்களை வைக்கும்வரை ஏன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? அவருக்கு அந்தப்பணம் எங்கிருந்து வந்தது என்று ஆராயவேண்டியது வெளிப்படுத்தவேண்டியது யாரின் கடமை? இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, சர்வதேசப் பொலிஸாரின் உதவியுடன் அவரை விசாரித்து எத்தனை தமிழரை கைது செய்து பணயமாக பெற்ற பணம் அது என்கிற உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள் அறிய ஆவலாயுள்ளோம். அவ ர் செய்த பணி என்ன என்பதையும் வெளிப்படுத்துங்கள். அதுமட்டுமல்ல, கோத்தபாயவின் படுக்கையறையில் இவ்வளவு பணம் எங்கிருந்து, ஏன் வந்தது என்பதையும் வெளிப்படுத்தவேண்டும். வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தின் விபரங்களு ம் வெளிப்படுத்த வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இவ்வளவு தொகை ஏன் அசாத் மௌலானாக்கு வைப்பிலிட வேண்டும்? அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? உங்கள் தவறுகளை மற்றவர் மேல் சுமத்தி தப்பும் தந்திரத்தை கைவிடுங்கள். உலகம் உங்களை பார்த்து நகையாடுகிறது. அப்போ... தேர்தலை நடத்தி ஏன் நாட்டுப்பணத்தை, நேரத்தை வீணடித்தீர்கள்? அது ஏன் இந்தக்குடும்பம் பதவியை இழந்தபின், தேர்தல் காலங்களில் வன்முறைகள் இன மத முரண்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன? கோத்தபாய தான் பதவியேற, அப்பாவிகளின் உயிரை பறித்தாரே, அவர் இறக்கும் தருணத்தில் என்ன நன்மையடைவார் என்பதையும், இனக்கலவரங்களை நடத்தி அநிஞாயப் போரிலே மக்களை கொன்றவர்கள் இறக்கும் தருவாயில் என்ன அடைவார்கள் என்பதையும் அறியதந்தால் நல்லது.
  14. நேற்று, இந்தியாவைத்தான் ஆதரிப்பேன் என்று சொன்னார். இன்று, சீன முதலீட்டாளர்களுடன் சந்திப்பு. நேரம் ஒரு கதை, அறிக்கை, கதிரை, இடம். ரொம்பபொருத்தம் குறிகோள் அற்றவர்களுக்கு.
  15. இந்தகுண்டுத்தாக்குதலின் பின்னால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவ கலவரத்தை உருவாக்கி அதிலே இந்த குண்டுத்தாக்குதலை மூடிமறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் காத்த பொறுமை அதற்கு இடம் அளிக்கவில்லை, ஆகவே தாங்கள் ஒரு வலிந்த தாக்குதலை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்து, அவர்களை பேச விடாமல் அடக்கினர். மனித உயிர்களை கொன்று அவற்றின்மேல் அரசியலமைத்தவர் நெடுங்காலம் அதை அனுபவிக்கவில்லை, மாறாக அவரை தெரிந்தெடுத்தவர்களே அரச கதிரையிலிருந்து இழுத்து விழுத்தினர். அப்பாவி மக்கள் காரணமின்றி சிந்திய குருதி வீண் போகவில்லை. காதோடு காதாக பேசிய ரகசியம், இப்போ உலகெல்லாம் கசிந்தது எப்படி? அன்று அவர்கள் மௌனமாக வடித்த கண்ணீருக்கு கிடைத்த வெற்றி!
  16. இதில் என்ன மாற்றம் வரப்போகிறது? புலம்பெயரின் சதி, பணம், சர்வதேசத்தின் சதி என்று வழமைபோல் தன் பிழையை மற்றவர் மேல் போட்டு தப்பித்துவிடும்.
  17. தானும் இருக்கிறேன் என்பதை காட்ட எழுப்பும் குரல் இது. இதற்கு முக்கியத்துவம், கயிறிழுப்பு என்று சொல்வதெல்லாம்: அதிகம்!
  18. அந்தச்சமயம் இவர் சிங்கப்பூரிலோ வேறொரு நாட்டிலே இருந்தார் என நினைக்கிறன். பயணத்தை மேற்கொள்வதற்கு முதல், அன்றிருந்த பிரச்சனைகளுக்கு தனது பயணத்தை முடித்துக்கொண்டு வந்தபின் பதில் வழங்குவதாக கூறியிருந்தார். தாக்குதலுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்தபின் தன்னை அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே அந்த பயணத்தை மேற்கொண்டிருந்ததாக நான் நினைக்கிறன். பல கொலை கொள்ளை சம்பவங்களின் சூத்திரதாரிகள் தாங்கள் அப்போது நாட்டில் இல்லை, பதவியில் இல்லை அல்லது சம்பவ இடத்தில் இல்லை என கூறி தங்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சம்பவத்தை திட்டமிட்டு நடத்தும் கருத்தாக்கள் சம்பவ இடத்தில இருக்க வேண்டுமென்பதில்லை, அவர்கள் எங்குமிருக்கலாம். திட்டம் நடைமுறைப்படுத்தல் இவர்களுடையது. வேண்டுமென்றே தங்களை விடுவித்து தப்பித்துகொள்வதற்காக இப்படியான பயணங்களை வைத்தியசாலைகளை பயன் படுத்துகிறார்கள். மூளை இவர்களுடையது, இவர் சம்பந்தப்படாமலிருந்திருந்தால் ஏன் நட்ட ஈடு வழங்க கேட்கப்பட்டிருக்கிறார்? இவரும் ஒரு பகுதியை செலுத்தியிருக்கிறாரே? தான் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை நிரூபிக்க மக்களிடம் கை நீட்டுகிறார். நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை, மனவருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவில்லை, நட்ட ஈடு வழங்க வக்கில்லை. இவரை மக்கள் ஏன் தெரிந்தெடுக்க வேண்டும்? பிழைகளை மக்கள் தெரிந்தெடுப்பார்கள் என்கிற நம்பிக்கை, அதனால் ஏற்பட்ட அரசியல் அவரை அப்படி சிந்திக்க தூண்டுகிறது. இந்த சிந்தனையை நடைமுறையை மக்களே மாற்றவேண்டும் இல்லையேல் அதற்கு அவர்கள் பலியாவார்கள். அந்த சமயம் பிள்ளையானும் சிறையில் இருந்தார் என நினைக்கிறன். ஆனால் சிறையிலிருந்துகொண்டே தேர்தலில் வெல்ல முடியுமென்றால்; ஏன் இதை செய்ய அவரால் முடியாது? தனது அரக்கத்தனத்துக்கு எதிராக போராடிய விடுதலை போராளியை தனது கொலைகளுக்கு சிங்களம் பாவிப்பதை எப்படி சொல்வது? இவர்கள் போராடப் போகாமல் இருந்திருந்தால்; இவர்களுக்கும் போராட்டத்துக்கும் இனத்துக்கும் நலமாக இருந்திருக்கும்!
  19. உங்களின் ஆசை அளவுக்கு மீறியது. யாராம் எங்களை ஆளுவது? அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? நட்ட ஈடு வழங்க முடியாமல், விரும்பாமல் அதற்குள்; மீண்டும் அரசியல் செய்ய ஆசை துடிக்கிறார். உண்மையிலேயே மனச்சாட்சியுள்ள மனிதன் எவரும் அந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பேற்று அரசியலில் இருந்து ஒதுங்கி விடவேண்டும். இங்கு இறந்தது, தாக்கப்பட்டது, யாருமற்ற ஏதிலித்தமிழன்தானே. அவன் இருக்குமட்டும் அவன் முதுகிலேறி அரசியல் செய்யலாம் ஜாலியாய். அன்றைய உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புத் தாக்குதலும், இன்றைய பிக்குகளின் கோரத்தாண்டவமும் எதை சொல்கிறது? தாங்களே வன்முறையை தூண்டுவதும் அதை அடக்கும் கதாநாயகர் தாம் என்று பிரசாரம் செய்து ஆட்சியை பிடிப்பதும் இது காலாகாலமாக நடக்கும் ஒன்று. இதுவே இவர்களின் அரசியலுக்கும் இருப்புக்கும் ஆப்பாக மாறலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.