Everything posted by satan
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அவர்தான் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு திரியிறார் என்று வர்ணிக்கப்படுகிறார் இங்கு. அவர் அப்படி செய்வதில் தவறேதும் இல்லை, ஆனால் தமிழரசுக்கட்சியை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு? வெறும் அறிக்கைகளையும் மிரட்டல்களை விரட்டல்களையும் தவிர்த்து. அவரையும் கொஞ்சம் விமர்சித்தால் நீங்கள் நடுவுநிலையாளர்.
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
ஏன், கந்தையர்தான் திருடினார் என்று முடிவு செய்து விட்டீர்களா? பாவம் கந்தையர்.
-
34 ஆண்டுகள் கண்டுகொள்ளப்படாத வடக்கு முஸ்லிம் சமூகம்!
ம்..... சிங்களத்தோடு கூத்தடித்துக்கொண்டு இருப்பார்கள், தமிழருக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தி வந்தால் கிளம்பி விடுவினம். அவர்கள் கேட்கமாட்டார்கள், தமிழர் தனிநாடு கோரினால், பங்கு கேட்கவும் அதை தடுக்கவும் வருவார்கள். ஏன், ரவூப் கூறினாரே போரில் தாங்களும் அரசுக்கு உதவியதனாலேயே போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்று.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
அதுசரி, இந்த வீதியை திறக்குமாறு வேண்டுகோள் வைத்தவரின் தலைக்கறுப்பையே காணமே. அவருக்கு தெரிவிக்காமலேயே திறந்து விட்டார்களோ? யாராவது வந்து ஆடம்பரமாக திறந்திருந்தால், சுமந்திரன் வந்து வாய்வீச்சு விட்டிருப்பார். பாவம் அவர்தான் கோரிக்கை வைத்தார் அவருக்கு சொல்லாமலேயே எல்லாம் நடந்து முடிந்தது. இந்த மக்களின் மனம் மாறமுதல், அனுரா வருவார் வாக்கு கேட்க. சரி, செய்து காண்பித்து விட்டு கேட்பதில் தவறில்லை. ஒன்றும் செய்யாமலே வாங்குகளை வாங்கியோரும், வாங்கிக் கொடுத்தோரையும் விட இது பரவாயில்லை. ஆனால் தேர்தல் முடிய வீதியை பூட்டாமல் இருந்தால் சரி. பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், அப்படி வந்தால் அந்தபதவி நிலைக்கும். நான் வீதியை திறக்கப்போகிறேன் என்று அறிவித்திருந்தால்; தெற்கில் இருந்து ஒரு குழப்ப கோஷ்ட்டி வந்திறங்கியிருக்கும், வடக்கிலிருந்து வசந்தம், சுமந்திரன் போன்றோர் பட்டு வேட்டிகளோடு உரிமை கோரி வந்திருப்பினம். இப்போ, இவர்களே கேட்டுத்தான் அறிதிருப்பினம் இந்த விடையத்தை. அதுவே நல்ல விடையம். இதற்கு ரணில் எதிர்ப்பு தெரிவிப்பார். ரணிலை அன்று புலிகள் தேர்தலில் புறக்கணித்தது தவறு என எத்தனைபேர் பாடம் எடுத்தார்கள். இன்று மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்படக்கூடாது என கூறுகிறார். எனக்கு வேண்டாம் அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்கிறார். இதிலிருந்தே அவர் அன்று பதவிக்கு வந்திருந்தால்; என்ன செய்திருப்பார் என்பதை விளங்கிக்கொள்வது ஒன்றும் கடினமில்லை அறிவுள்ளவருக்கு.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
சும்மா இருந்து வாக்கு சேர்க்கிறவர்களுக்கு, தாங்களும் செயல் வீரர் என்று காட்ட இதுகளை எதிர்பார்த்திருப்பார்கள், சம்பவ இடத்துக்கு அழைப்பில்லாமலேயே வலியப்போய் படம் எடுத்து தங்கள் சாதனை என்று சொல்வார்கள். செய்கிறவர்களோ தங்களுக்கு மக்கள் வாக்கு போடுவார்கள் எனும் எதிர்பார்ப்பிலேயே அதிரடியாக தக்க சமயத்தில் இவற்றை செய்கிறார்கள். இதைத்தான் வடக்கின் வசந்தமும் செய்கிறார், வலியப்போய் கூட்டத்தில இருப்பார், படத்துக்கு எட்டி முகம் காட்டுவார், கருத்து சொல்லுவார். அவர் சட்டம் ஒன்றும் படிக்கவில்லை, இனத்தை விற்று பதவி பெறுகிறார். இவர் படித்தவர் என்று சொல்கிறார் கட்சியை உடைத்து, தேசியத்தை விற்று பதவியில் தொடர்ந்து இருக்க பாடுபடுகிறார். தனது பதவியாசையை மற்றவர்மேல் திணிப்பார்.
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
ம் ..... எப்படி பெருமையாய் இருந்த பெயரை இப்படி நாறடிச்சிட்டாங்களே, இனி கந்தையா என்ற பெயர் உள்ளவர்கள் வெளியில் சொல்லவே பயப்படுவார்கள். சும்மா பகிடிக்கு.
-
சமஷ்டியே தீர்வெனக்கூறும் தமிழரசுக் கட்சி இருக்கும் போது “நிழல்” கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை - சுமந்திரன்
ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று அலம்பித்திரிந்தவர், இப்ப எப்படிப்பேசுகிறார் பாருங்கள்! அது சரி.... வெள்ளை வேட்டி சட்டையோடு வலம்வந்தவர், திடீரென்று ஜே .வி. நிறத்தில் திரியுறார், அதுவும் பேட்டிகளில். ம் .....மக்களிடம் ஒன்று, சிங்கள தலைவர்களோடு வேறொன்று பேசுகிறமாதிரி இப்போ, இரண்டையும் கலந்து நடமாடுகிறார், பேசுறார். ஆனால் அனுரா இதற்கெல்லாம் எடுபடப்போவதில்லை. தனது நம்பிக்கைக்குரியவராக ஆளுநரை தெரிவு செய்துள்ளார். அவர் வழியாகவே தமிழரின் பிரச்சனைகளை அணுகுவார். வடக்கின் வசந்தம் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் ஒன்று சொல்வார், அதாவது தான்தான் தீர்க்கதரிசனமாக பதின்மூன்றாம் அரசியல் சட்டத்தை அன்று முதல் ஏற்றுக்கொண்டவர் என்றும் அதை அன்று எதிர்த்தவர்கள் இன்று அதை நிறைவேற்றும்படி கேட்கிறார்கள் என்றும் அடிக்கடி புகழுவார். அவரது தீர்க்கதரிசனம் இன்று வரை நிறைவேறவில்லை, இவரால் நிறைவேற்றுவிக்கவும் முடியவில்லை. அதை அவர் தனது தீர்க்கதரிசனம் என்று சொல்லித்திரிகிறார். அவர்கள் என்றுமே எதையும் நிறைவேற்றப்போவதில்லை. சும்மா தங்களை பிரபல்யப்படுத்துவது. அன்று சமஷ்டி தீர்வை அளிக்க மஹிந்த முன்வந்தாராம், ஆனால் புலிகள் அதை ஏற்க மறுத்து விட்டனராம் என்று வேறு விளக்கம். அப்படி கொடுப்பவர்கள் போர் முடிவுக்கு வந்தவுடன் தாம் சொன்னதை நிறைவேற்றியிருக்கலாமே, புலிகளை அழித்த பின்னர் தமிழருக்கான தீர்வை வழங்குவேன் என்று சர்வதேசத்துக்கு வாக்களித்தார்களே அதற்கு என்ன நடந்தது? அவர்களே பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள், புலிகளை அழித்துவிட்டோம், இனிமேல் , தமிழருக்கு தீர்வு என்று ஒன்றுமில்லை, அவர்கள் இங்கு வாழ விரும்பினால் வாழலாம், உரிமை எல்லாம் கோரமுடியாது சொன்னவர்கள், இன்று தம்மை தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில இவர்கள் வேற உரிமை கோரிக்கொண்டு, நான் சொன்னேன், நீ சொன்னாய் என்று. நாங்கள் கடந்த தேர்தலில் இதை நிறைவேற்றுவதாக வாக்களித்தோம் அதை நிறைவேற்றியிருக்கிறோம், இனிமேல் என்ன சாதிக்கப்போகிறோம் என்று ஏதாவது சொல்கிறார்களா? திட்டம் ஏதும் இருக்கிறதா? ஒருவரை ஒருவர் சாடுவதற்கும், சேறடிப்பதற்கும், வீம்பு பேசுவதற்கும் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம்.
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
அட.... நீங்களும் இதற்குள் இருக்கிறியள். கவனம், பாத்து நடந்துக்கோங்க. நினைக்கிறதென்ன வலைவீசி தேடப்போகிறார்கள் கந்தையாவா, கந்தப்புவா என்று.
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
முப்பத்து நான்கு வருடங்களாக பூட்டப்பட்டிருந்த வீதியைப்பற்றி மாறி மாறி முண்டுகொடுத்த அரசுகளுடன் வாயே திறக்காதவர், திடீரென கரிசனை வந்தது எப்படி? மக்களிடம் வாக்கு கேட்க ஒரு துருப்பு கிடைத்துவிட்டது. வாக்கு விழுந்தால் அதோடு பாராளுமன்றம் போகலாம் அல்லது ஜனாதிபதிக்கு ஒரு நன்றி, பாராட்டு அனுப்பி இணைந்துகொள்ளலாம். இப்போ பல அரசியல் வாதிகள் முன்னைய அரசோடு ஒட்டிக்கொண்டதுபோல் அனுராவோடு ஒட்ட முடியவில்லையே, ரகசியமாய் சந்தித்தாலும் பகிரங்கப்படுத்தி விடுகிறார்கள், வரப்பிரசாதங்களும் நிறுத்தப்படப்போகிறது என்கிற பதட்டத்தில் புகழ்ந்தும், வாக்குவங்கிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் இகழ்ந்தும் உளறுகிறார்கள். வர வர சுமந்திரன் வடக்கின் வசந்தத்தின் நிலைக்கு வந்து நிற்கிறார். வடக்கில் என்ன திட்டங்கள் நிறைவேற்றுவதென்றாலும் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கமையவே அமுல்படுத்தப்படும். எதற்கும் சுமந்திரன் வடக்கு ஆளுநருக்கு தூது அனுப்புவது நல்லது. அவர் சுமந்திரனை ஏற்றுக்கொண்டால். இவர்களுக்கு ஊர்சுற்றாமல், படம் காட்டாமல், நான் தான் சாதித்தேன் என்று புழுகித்திரியாமல் இருக்க முடியாது. எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என தெரியவில்லையே? அடுத்த தேர்தலோடு அரசியலில் இருந்து விலகுவேன் என்றார் ஒருவர், மற்றவர் தானும் சேர்ந்து வரைந்த அரசியல் யாப்பின்படி ஒருவருடத்திற்குள் தீர்வு காணாவிட்டால் பதவி விலகுவேன் என்று கர்ச்சித்தார். இவர்கள் பேச்சு வெறும் மேடைப்பேச்சு, மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்து வேறொரு சவாலுடன் வருவார்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொண்டு.
-
"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024]
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன்!
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
தான் சமையற் கட்டுக்கு போகவேண்டி வரும் என நினைத்து குமுறுகிறார் போலுள்ளது. இவரது கணித அறிவை சஜித் ஒருதடவை பாராட்டியிருந்தார். ஜெனிவா கூட்டத்தொடரில், பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்றிருந்தன, ஒரு சில நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நாடுகள் தங்களை ஆதரித்தன என்று கூறி தம்மை சாதனையாளராக காட்டியபோது, சஜித் இவர்களின் கணிதவியல் அறிவை வியந்து புள்ளிவிபரத்தோடு உரையாற்றியிருந்தார்.
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
அது வேற கந்தையாவாம். கந்தையர் என்றாலே வில்லங்கம் பிடிச்ச பெயர் போலிருக்கே! பெயரை மாத்துங்கோ.
-
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது - கஜேந்திரகுமார்
ஆமா... அந்த ஒற்றை ஆட்சி அமைப்பை தானும் சேர்ந்துதான் வரைந்ததாகவும் அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்த தான் பாராளுமன்றம் போயே ஆகவேண்டுமென்றும் சுமந்திரன் சொந்தம் கொண்டாடுகிறாரே, அது எப்படி? இது நடைமுறைப்படுத்தாவிட்டால் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என்று சூளுரைத்தாரே. இதைத்தான் ஏக்கய ராச்ஜய என்று விளக்கமளித்தவர். இப்போ அவரும் இந்த அரசை சாடுகிறார் தன்னை அழைத்துப்பேசவில்லை என்கிற கோபத்தில். இவர்களெல்லாம் பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்று நினைத்திருந்தால்; எப்பவோ தீர்த்திருக்கலாம். பிரச்சனையை நீட்டி வைத்து தம்மை வளர்ப்பவர்கள் இவர்கள். எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் இவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு, தீர்வை எடுக்க க்கூட்டமைப்பினரே பின்னடித்தனர்,சுயலாப அரசியலே கூட்டமைப்பினரின் இலக்கு, என்று விமர்சித்தனர். எப்படி அவர்களால் சொல்ல முடிந்தது? அந்த கூற்றை மறுத்து இவர்கள் அறிக்கை விடவுமில்லை, மறுக்கவுமில்லை மாறாக மௌனம் காத்தனர். இப்போது தான் தூக்கத்திலிருந்து எழும்பியதுபோல் குதிக்கிறார்கள்.
-
ஜே.வி.பி இன் இனவாதப்போக்கை உணர்ந்தே தமிழர்கள் அவர்களை நிராகரித்தனர் - தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவிப்பு
இதென்னடா புதுக்கதை? இவ்வளவுநாளும் இவர்கள் மாறி மாறி முட்டுக்கொடுத்து கொண்டாடிய அரசுகள் இனவாதம் அற்றவையோ? அவர்கள்தானே பயங்கரவாதச் சட்டத்தையே உருவாக்கிய சட்ட வல்லுநர்கள். அப்படி இருக்கும்போது இவர்களை மட்டும் விமர்சிப்பதன் மர்மம் என்ன? ஓ...... இவர்களை அழைத்துப்பேசவில்லை, இவர்கள் தேடிப்போனபோதும் அணைக்கவில்லை என்கிற கோபமாய் இருக்குமோ அல்லது இவர்களது வாக்குவங்கிக்கு போட்டியாய் வந்துவிட்டார்கள் என்பதாலா? சிங்களமக்கள் ஊழல் அரசை கலைத்தார்கள், நாம் ஊழல் அரசியல் வாதிகளை அகற்றுவோம்.
-
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை
இந்த ஒரு உரிமையை வைத்துக்கொண்டு தப்பிவிடுவார்கள் குற்றவாளிகள். வெளிநாட்டிலேயே ஒரு ராஜதந்திரி இப்படியென்றால், இலங்கையில் இவர்கள் அனுபவிக்கும் விடுபாட்டுரிமை சொல்லவேண்டியதில்லை. சாதாரண மக்களே எல்லாவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர் தண்டிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஏன் பதவியளித்து நாட்டின் மதிப்பை குறைத்துக்கொள்கிறார்கள். வெளிநாடுகள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும், வெளிநாடுகளிலேயே இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தம் நாட்டில் சிறுபான்மையினரை எப்படி கையாள்வார்கள், போர்க்காலத்தில் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருப்பார்கள் என்பதை நேரடியாக காணக்கூடியதாக உள்ளது.
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
தமிழரசுக்கட்சி, தற்போது புதியதொரு கண்டுபிடிப்பை பிடித்திருக்கிறார்கள். கனடாவில் குளிர் அதிகமானால் சுமந்திரனையும் சம்மந்தனையும் சொன்னார்களாம், ஊரில் யாருக்கும் குழந்தை பிறக்காவிட்டால் அதற்கும் அவர்களையே காரணமாக சொல்வார்களாம். ஏன் கனடாவுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? பிள்ளை பிறக்காவிட்டால் ஏன் இவர்களை குற்றம் சொல்லவேண்டும்? அதாவது பிழையை சுட்டிகாட்டி காரணம் கேட்டால்; அவர்களை கேலி செய்து தங்களை மறைத்துக்கொள்வது. மக்களுக்கு தெரியும், எதுக்கு யாரை காரணம் கேட்கவேண்டுமென்று. ஏதோ நகைச்சுவை விடுவது போல் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்கிறார்கள். அவர் குறிப்பிட்டு நகைச்சுவை பண்ணும் கூட்டத்தில் அவரும் ஒருவர். அவரும் தாயக மக்களின் உரிமைகளில் தலையீடு செய்து, தமது நலன்விரும்பிகளின் தவறுகளை மூடி மறைப்பதும் வக்காலத்து வாங்குவதும் அவரது தலையாய கடமை. யாராவது சுமந்திரன் என்றால் போதும் வந்து விடுவார் வரிஞ்சு கட்டிக்கொண்டு தூள் கிளப்ப
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
இருப்பதே இரண்டு பேர், இவர்களுக்கு பதினாறு சமையல் காரர் எதற்கு? ஹோட்டல் ஏதும் நடத்துகிறாரா தெரியவில்லை? இவரிடமே இத்தனை சமையல் காரர் கேட்க்கிறார் என்றால், இவரது ஆட்சிக்காலத்தில் எவ்வளவு பேரை நியமித்திருப்பார்? நாட்டை எப்படி கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள் என்பது இப்போது புரியுது. அதைவிட இலக்கத்தகடுகள் இல்லாமல், உரிமை பெறாமல் பாவனையில் இருந்த பல வாகனங்கள் அங்கங்கு கைவிடப்பட்டுள்ளன. இதை யாரும் கணக்கெடுக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. சாதாரண மக்கள் பசியினால் களவெடுத்தால் நீதிமன்றத்துக்கு கொண்டு போகிறார்கள், பாராளுமன்றம் கள்ளர்களால் நிறைந்திருந்திருக்கிறது. இதற்கு மேல் அனுபவம் வாய்ந்த அரசியலாளர் என்று தம்மை வேறு அழைக்கிறார்கள். திருட்டுகூட்டம்.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
தமிழ் கட்சிகள் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு வரக்காரணம் என்னவென்று கூற முடியுமா? நீங்களும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறுகிறீர்கள், உங்கள் செயலற்ற தன்மை விடுவெளியை ஏற்படுத்திற்று, அந்த விடுவெளிக்குள் அவர்கள் புகுந்துள்ளார்கள். இதற்கு யார் காரணம்? எத்தனை ஆண்டுகள் அவகாசம் தந்து உங்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்து காத்திருந்தார்கள்? உங்களுக்கு வாக்கு, சுகவாழ்க்கை வேண்டும். மக்களின் ஏமாற்றம், உங்கள்மேல் ஏற்பட்ட வெறுப்பே அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது, அதை நீங்கள் சிந்திக்க, ஏற்றுக்கொள்ள, திருந்த தயாரில்லை. மக்களை குற்றம் சாட்டாதீர்கள். சாதாரண மக்களைப்போல் வாழப்பழகிக்கொள்ளுங்கள். இனிமேல் அதுதான் உங்கள் நிரந்தர வாழ்க்கை.
-
பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்குக்கு வருகை!
தமிழ் தலைவர்களையே தேர்தல் வந்தால்தான் மக்கள் காணலாம் அவர்களும் மக்களை காண வருவர்.
-
வடக்கு கிழக்கில் அநுர அலையும் சுமந்திரனும்!
ம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேடபாளருக்கு வாக்களிக்க வேண்டாம் சஜித்துக்கு வாக்களியுங்கள் என்றார் இப்போ அனுராவுக்கு வாக்களிக்க வேண்டாம் தனக்கு வாக்களியுங்கள் என்கிறார் சந்தர்ப்பவாதி. அனுராவுக்கு தமிழர் வாக்களிக்க கூடாது, அவர் தேர்தலுக்கு முன் இரகசியமாய் சந்திக்கலாம் உடன்படிக்கை செய்யலாம். விசித்திரமான மனிதன்.
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் - அனுர
அதை செய்யுங்கள் முதல், அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கு ஏழைமக்கள் இரத்தம் சிந்தி வரி செலுத்தவேணுமாம். நல்லாய் இருக்கு, ஊழல் செய்து சேகரித்து பதுக்கியது ஒருபுறம், இது வேறு. அவர்களுக்கு சம்பளத்தையும் குறையுங்கள். அப்போதான் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை புரியும். மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியவாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவார்கள், உண்மையான மக்கள் சேவையாளர்கள் உருவாவர். சும்மா வாக்குவங்கிக்காக சொல்லிப்போட்டு தேர்தல் முடிய வாபஸ் பெறக்கூடாது.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில
இவருக்கு ஏதோ கஸ்ரகாலம் ஆரம்பிக்குது போல கிடக்கு. இவ்வளவு காலமாய் கர்தினால் மல்கம் கேட்டுத்திரிந்தபோது மௌனம் காத்தவர்கள், இப்போ வெளியிடப்போகிறார்களாம். இவர்களை உடனே கைது செய்து இவர்கள் திருடிய அறிக்கையை பிடுங்கி எடுக்கவும்.
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
வாங்கோ, வாங்கோ, சொல்லுங்கோ புதினத்தை. நீங்கள் காணாமல் போன அப்பவே நினைத்தேன் தேர்தல் வேலையாய்த்தான் மினைக்கெடுக்கிறியள் என்று. கண்டது சந்தோசம் இனி களம் கலகலப்பாயிடும்.
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
சூனியம் வைத்து விட்டாரா? இப்படி உறுதியாக சொல்கிறாரே? என்னமாதிரி இருந்த நாட்டை சுடுகாடாக்கியது, அனுபவ சாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாடாளுமன்றத்தில், அரசியலில் இருந்துதானே அதை சாதித்தார்கள்.
-
தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்களாகிவிட முடியாது - பிமல் ரத்நாயக்க
இதற்குத்தான் சொன்னேன், மக்களுக்கு சேவை செய்பவர் மக்களின் ஆணை பெற்று தைரியமாக பாராளுமன்றம் போய் பகிரங்கமாக பேச வேண்டும். அது என்ன செய்வது, பழக்கதோஷம் விடவில்லையே? கடத்தல்காரர், கொள்ளைக்காரர், என்று சிலரை விமர்சித்தார், அவர்கள் கௌரவமாக இருக்கிறார்கள். இவரோ, வடக்கின் வசந்தத்தின் நிலைக்கு தாழ்ந்து விட்டார். தான் தான் அவர்களின் பெரும்பாலான வழக்குகளில் ஆஜர் ஆகிறேன், எனக்கு பிரதம மந்திரி பதவியை ஏற்க அழைப்பு வருமென காத்திருக்க, இப்படியொரு அவமான செய்தியை எப்படி தாங்கப்போகிறார்? பொய்யும் புழுகும் கன நாளைக்கு நிலைக்காது. எதை விதைத்தாயோ அதையே அறுப்பாய் என்பார்கள், உடனேயே பலித்துவிட்டது.