Everything posted by satan
-
வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்
ஐயா ..... தேர்தலில் போட்டியிடுபவர்கள், முதலில் தேர்தல் ஒழுங்கு விதிகளை பின்பற்ற கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களை குற்றம் சுமத்துவதற்காக நாமே வலிந்து அதற்குள் அகப்படலாமா? அவர்கள் சும்மாவே கைது செய்யும் கூட்டம் என்பதற்காக நம்மை பிரபல்யப்படுத்த வேண்டும் என்பதற்காக வலியப்போய் பொறியில் தலையை மாட்டலாமா? உங்களையுந்தான் நிராகரிக்க போகிறார்கள், நீங்களும் போட்டியிடாமல் தள்ளி நில்லுங்கள், பகிஸ்கரியுங்கள். இருப்பவன் சரியாய் இருந்தால் சிரைப்பவன் சரியாக செயற்படுவான். நீங்கள் சரியாக செயற்படவில்லை உங்களுக்கு வாக்குப்போட்ட மக்களுக்கு. எங்களைத்தவிர வேறு யாருக்கும் வாக்குபோடக்கூடாது என கட்டளையிட நீங்கள் யார்? உங்களால் சாதிக்க முடியாவிடில் விலகுங்கள். மக்களுக்கு உங்கள் மேல் மரியாதையே போய்விட்டது, தேர்தலுக்கொரு கட்சியில் போட்டியிடுகிறீர்கள். ஒரே கட்சியாக ஒரே கொள்கையாக வாருங்கள், சொல்வதை செயலில் காட்டுங்கள், நீங்கள் சொல்லவே தேவையில்லை மக்களுக்கு என்ன செய்யவேண்டுமென. தமிழ் தேசியம் எனும் மாயையை வைத்துக்கொண்டு அந்த மக்களை ஏமாற்றி அலைக்கழிக்காதீர்கள் உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக.
-
தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்
முடிந்தால்; தமிழ்தேசியக்கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்று சவால் விட்டு விக்கினேஸ்வரனை விரட்டியது யார்? அவர் பதவி விலகவேண்டுமென வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தது யார்? அவர் சாராயக்கடைக்கு அனுமதி பெற்ற போது ரணிலுக்கு பின்னால சுற்றிய தனிமையில் பேசிய இவர் ஏன் அதை தடுக்கவில்லை? சிறீதரனை பதவியை ஏற்கச்சொல்ல இவர் யார்? கட்சியின் தலைவரா இவர்? அப்போ ஏன் தமிழரசுக்கட்சி நீதிமன்றத்திற்கு போனது? இவர் கட்சியை விட்டு வெளியேறியிருந்தால் வீடு அமைதியாக இருந்திருக்கும். எல்லோரையும் விரட்டி விட்டு தான் ஆட்சி செய்கிறார். வடக்கின் வசந்தம், தனது சிபாரிசில் எடுத்த திட்டம், ஆரம்பிக்கப்பட்ட திட்டம், என்று சொல்லிக்கொண்டு போனார். இவரோ, நான் அரசியல் திட்ட வரைபை செய்தவன், ஆகவே நான் பாராளுமன்றம் போக வேண்டுமாம். திட்ட வரைபை செய்தேன் என்று இவர் சொல்கிறாரே தவிர வேறு யாரும் சொல்லவில்லை. அதோடு முன்னைய அரசாங்கம் செய்ததோ இல்லையோ அதற்கு அனுரா அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கப்போவதுமில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறார்களோ அதை தமது கட்சியுடன் பேசி ஏனைய சிங்கள கட்சிகளும் அனுமதித்தால் மாத்திரமே நடைபெறும். இவர் அரசியலுக்கு வந்து இவ்வளவு காலமும் ஒட்டியிருந்த அரசாங்கங்களால் செய்விக்க முடியவில்லை, இனி அனுராவை கொண்டு செய்விக்கப்போறாராம். அதற்கு இவர் பாராளுமன்றம் போக வேண்டுமே? அப்படித்தான் போனாலும் இவரால் ஒன்றும் செய்ய முடியாது. முயல் பிடிக்கிறதின் மூஞ்சியை பாத்தாலே புரியுமாம். இவர் முகத்தில் கலக்கம் தெரிகிறது, வலிந்து சிரிக்க முயற்சிக்கிறார், அத்தனை வஞ்சகம். "அகத்தின் அழகு முகத்திற் தெரியுது."
-
இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா?
தும்புத்தடியாலேயே பாடம் புகட்டுவர்! மக்களின் உணர்வு, உயிர் மூச்சு என்னவென்பது என்று தேர்தலில் நிற்கும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே அவர்களை கவர்வதற்கு, ஏமாற்றுவதற்கு, குழப்புவதற்கு இவ்வாறு பெயர்களை மாறி, மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த உணர்வுக்கு உயிர் கொடுக்க மக்கள் இழந்தவை அநேகம், இழப்பின் வலி, துரோகத்தின் வடு அவர்களை வாட்டி வதைக்கிறது. தாங்கள் தன்னிறைவுடன் உழைத்து வாழும்போது, அதை அடைந்துவிடவேண்டும் என அனைத்தையும் கைவிட்டனர். இன்று இழப்பதற்கு அவர்களிடம் ஏதுமில்லை, ஏதிலிகளாய் நிற்கின்றனர். இந்த நிலையை வைத்து அவர்களை அடக்கிவிட்டதாக எதிரியோடு நம் தலைமைகளும் நினைக்கின்றன. இனி தேசியம் உணர்வோடு மட்டுந்தான், நமது அன்றாட வாழ்வே சுமையாகிப்போய்விட்டது. ஆகவே மக்கள் தனித்து, தன்னைப்பற்றி தனது சூழலைப்பற்றி சிந்திக்க தொடக்கி விட்டார்கள். இனி தும்புத்தடியல்ல, வீடல்ல எவராலும் மக்களின் தோல்வியை ஈடுகட்ட முடியாது. அப்படி யாராவது நினைத்தால்; தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கின்றனர், கனவு காண்கின்றனர் என்றே கொள்ளலாம்.
-
உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு - அமெரிக்கத் தூதர் ஜுலி சங்
"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்." இலங்கையில் முக்கியமான தருணங்களில் இவர் சூறாவளி சுற்றுலா செய்வார். கொழுத்தி விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இவர்களின் வழமை. இவவும் இலங்கை தேர்தலில் போட்டியிடுகிறாவோ? அழுதுகொண்டு திரியிறா.
-
தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்...!
மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும்போது, சமுதாயத்தில் அக்கறை பிறக்கவில்லை, இளைஞர்களுக்கு ஊத்திக்கொடுத்து வாக்கு கேட்க வெட்கமில்லை, ஆனால் மற்றவர்களை பழிவாங்க அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இவர்களிடம் பதவி கொடுத்தால் எங்கள் இளம் சமுதாயத்தின் நிலை எதிர்காலம் எப்படி இருக்கும்? வடக்கில் இளைஞர்களின் சமூக விரோத செயல்களை பற்றி இவர்கள் அக்கறை காட்டினாரா? ஓநாய்களை நம்பி மந்தையை மேய்க்கும் பொறுப்பை வழங்கலாமா? மக்களே சிந்தித்து முடிவெடுக்கட்டும். இவர்களுக்கு வாக்கு அளித்தால் நம் இளம் சமுதாயம் அழிந்து போகும் அபாயமுண்டு.
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
யாரெல்லாம் பதவியேறுகின்றனரோ அவர்களை வாழ்த்துவது என்கிற பெயரில் ஓடோடுவது தாங்கள் சிங்களத்துக்கு செய்த சேவையினை, தம்மை நம்பிய மக்களுக்கு செய்யும் துரோகத்தினை எடுத்து வைத்து பதவி பெறுவதற்கே. அனுரவுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கவேண்டுமென்று. முதலில் ஓடிய சிங்கத்துக்கு நல்ல விடை கிடைக்கவில்லை. கட்சியை நொறுக்கினார், அதுவே அவரது திறமைக்கு நல்ல சிறப்பு சான்றிதழ், கடந்த அரசுகளில் இவர்கள் அடைந்த சலுகைகள் அடுத்த முக்கிய சிறப்பு, இவர்களுக்கு பதவியளித்தால் என்ன நடக்குமென்று கடந்த அரசுகளின் வங்குரோத்து நிலை தெளிவாக்கியுள்ளது. இவற்றை சந்திக்க சென்ற யாரும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அடுத்து வடக்கின் வசந்தம், காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதென்று ஓடிப்போய் விழுந்தார் காலில். விரட்டிவிட்டார், பாராளுமன்றம் வாங்கோ அங்கே வந்து காட்டுங்கள் உங்கள் திறமையை என்று. கோத்த பாய விரட்டப்பட்டபின் ஒரு குழப்பமான நிலையில், தான் பிரதம மந்திரி பதவியை ஏற்க தயார் என்றவர் ஒரு செயல்வீரன். சிங்களத்தை அவர் அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான். தேர்தலில் தோற்றார் என்றால் அவரது வாழ்வே கேள்விக்குறியாகும். இவரை யார் சட்டத்தரணியாக நியமிப்பார்? அதுதான் அவரது பொய், பிரட்டல் எல்லாம் சர்வதேச தூதுவர்கள் அறிந்த விடயமாச்சே. திறமையிருந்தால் பதவி தானாக தேடி வரும், பதவியை தேடி அலைந்தால் அவமானப்பட நேரிடும்.
-
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு
அவர் போனவிடயம் அதுவல்ல.... சந்திப்பின் முக்கிய விடயம் இங்கிருக்கிறது. அவரவர் வகிக்கும் பதவிகளில் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று அனுரா ஏற்கெனவே கூறிவிட்டார். என்றாலும் தனது தில்லுமுல்லுகளை அறிக்கையிட்டு பதவி வாங்க போய் மண்டியிட்டுள்ளார். ஏதாவது சாதித்தேன் என்று சொல்லியுள்ளாரா? ஆரம்பிக்கப்பட்ட திட்டம், முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டம், சிபாரிசு செய்யப்பட்ட திட்டம். இதில் இவரின் திறமை, செயற்பாடு எங்கிருக்கிறது? எல்லா பதவிகளுக்குள்ளும் மூக்கை நுழைத்து படம் காட்டி விளம்பரம் தேடுவதுபோல் படம் காட்டப்போனாராம். அனுரா, அவரின் திறமைக்கு பதிலளித்துள்ளார் பாருங்கள்.... இவர் இனி தேர்தலில் வென்றாற்தான் தொடர்ந்து சந்திப்பு, சும்மா அலட்டல் பாட்டிகளோடு அரட்டை அடிக்க அவருக்கு நேரம் எங்கிருக்கிறது? அவருக்கே தலையை பிடுங்குமளவுக்கு பிரச்சனை இருக்கிறது. பாராளுமன்றத்தில் பேசுவோம், தனியாக பேச வேண்டாமே என்றும் சொல்லியிருக்கலாம். ஆனாலும் இதுகளுக்கெல்லாம் வெட்கம் எங்கிருக்கிறது? இவர்களின் முகவர் வேலையெல்லாம் அவர்களுக்கு தேவையில்லை. அவர்களே நேரடியாக சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கையையும் எடுப்பார்கள்.
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே ஜனாதிபதி தெளிவுபடுத்தட்டும் என்கிறார். தானே இனப்பிரச்சினையை கிழப்பாமல், யோசனை கொடுக்கிறாராம். இறுதியில் சிறைக்குத்தான் போகப்போகிறார். ஆளான ஆளெல்லாம் வாய் மூடி இருக்கினம், இவர் துள்ளுவதைப்பார்த்தால்; நிறைய ஊழலில் சிக்கப்போகிறார் போலுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டுக்காரர் ஒருவரின் காணியை கள்ள உறுதி முடித்து விற்பனை செய்த வழக்கு உள்ளது இவர்மேல். சுமந்திரன் இதை செய்ய நினைத்திருக்க மாட்டார், ஒருவேளை கம்மன் பில செய்யும் காமெடியில் நடந்தாலும் நடக்கலாமே தவிர சுமந்திரனுக்கு உந்த உணர்வு தவறியும் வராது. இப்போ நாட்டில் ஒரு குழப்பம் வெடிக்க வேணும், அதில் கம்மன் பில வாக்கு அள்ள வேண்டும்! பரவணிக்குணம்.
-
தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக செயற்படமாட்டோம்! - அமெரிக்க தூதுவர் உறுதி.
புரியவில்லை..... எமது அரசியல் தீர்வுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் என.
-
ஈஸ்டர் அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்; ரணில் விக்ரமசிங்க கோரிக்கை
ஆமா..... வெளிநாட்டு புலனாய்வுப்படை ஒன்று ஸ்கொட்லன்ட்? இருக்கலாம், தாம் ஈஸ்ரர் குண்டுவெடிப்பை விசாரிப்பதாக அறிவித்தபோது, இலங்கையில் திறமை மிக்க புலனாய்வுப்படை இருக்கிறது, வெளிநாட்டினரின் உதவி தேவையில்லை, அது தமது நாட்டின் மதிப்பை குறைக்கும் என்றார் கோத்தா. அவர்கள் வந்தால் தான் கைது செய்யப்படுவேன் என்று பயந்தாரோ என்னவோ. குண்டு வெடிக்கப்போகிறது என்று கணித்து துல்லியமாக வந்த செய்தியை நடை முறைப்படுத்த தெரியாமல் கோட்டை விட்ட புலனாய்வு, முஸ்லீம் தீவிரவாதிகள் கொன்ற போலீசாரை முன்னாள் போராளிகள் என்று கைது செய்த புலனாய்வு, இந்த திறமையில் சும்மா சாதாரண மனிதனுக்கு உயிராபத்து என்று புலனாய்வை நியமிக்கினமாம். உலகிலேயே சிறந்த புலனாய்வுப்படை என்று சான்றிதழ் கொடுக்கினமாம். அதில விடுதலைப்புலிகளை வேறை அழித்தவையாம். செல்லும் செல்லாததுக்கெல்லாம் முன்னாள் விடுதலைப்புலிகளை கைது செய்து புலனாய்வை புகழுகிறது.
-
தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளா?
தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் பதவி காலாவதியாகிவிட்டது, இன்னும் அந்தபதவியை பிடித்து வைத்துக்கொண்டு அலம்பித்திரியிறார். தலைவர் பதவியை முடக்கி வைத்திருக்கிறார், கட்சிக்குள் ஏகாதிபத்தியம் செய்கிறார், அவருக்கு பதவியாசை இல்லை. எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கவேண்டும் என்னும் பகுத்தறிவு இல்லை, செயற்றிறன் இல்லை, மற்றவர்களையும் மதித்து அவர்களுக்கும் உரிய சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அதை மறுக்கும், அதை நிஞாயப்படுத்தும் யாவரும் அடாவடிகள். அவர்களது கல்வி வெறும் ஏட்டுக்கல்வியே அன்றி பொது வாழ்வுக்குதவாது.
-
லலித்-குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரம் - நீதிமன்றத்தில் ஆஜராக தயார் – கோட்டாபய
கண்டிப்பாக! நீதிமன்றம் மரண தீர்ப்பளித்த ஒரு குற்றவாளிக்கு, அந்த தீர்ப்பை சவாலுக்கு உட்ப்படுத்தும் வகையில் கோத்தா அந்த குற்றவாளிக்கு விடுதலை அளித்து பதவி கொடுக்கலாம், சாதாரண மக்கள் கேள்வி எழுப்பக்கூடாதோ? அது என்ன நீதி? அரசியல்வாதிகள் நீதி அமைச்சில் தலையிடாதவரை, நீதி அமைச்சில் எல்லோருக்கும் ஒரே சட்டம் எனும் நிலை வராத போது, இப்படியான நிகழ்வுகள் நடந்தே தீரும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நீதியை தேடி அடைய உரிமை இருக்கிறது, அதை யாரும் கேள்விக்குட்ப்படுத்த முடியாது. லலித் குகன் யாழ்ப்பாணத்தில் வைத்தே அன்றைய இராணுவ புலனாய்வாளர்களால் காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாட்டில் எந்தப்பக்கமும் யார் வேண்டுமானாலும் போய்வரக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தோம் என்றவர்கள், இப்போ தாம் வரப்பயப்படுவதேன்? ஒருவேளை தான் செய்தது தனக்கே திரும்பி வந்துவிடுமென பயப்படுகிறாரோ? மஹிந்தா தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்தார் பயமில்லாமல், இப்போ அவருக்குரிய பாதுகாப்பு குறைப்பு என்கிற பேச்சு வந்தவுடன் தனக்கு பயங்கரவாதிகளால் ஆபத்தாம். மற்றவரை வகைதொகையின்றி கொன்று குவித்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள். இப்போ தனக்கு என்றவுடன் பயப்படுகிறார்கள்.
-
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் ராஜபக்ஷர்கள் மீது பொறுப்பை சுமத்த ஒருசில மத தலைவர்கள் முயற்சி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன!
ஆமா... உங்களின் அரசாட்சி காலத்தில் விசாரணை அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே, ஏன் அதை செய்யாமல் விட்டுச்சென்றீர்கள்? அதன் கதை முடிந்தது என்று முடிவு செய்தீர்களோ? வகை தொகையின்றி கொலை செய்து மகிழ்ந்த உங்களுக்கு இதெல்லாம் பெரிதல்ல. உறவுகளை இழந்தவர்களுக்கு அவர்கள் மரணிக்கும்வரை அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. உங்கள்வீட்டில் ஒரு இழப்பு வந்தால் உணருவீர்கள் அதன் வலி என்ன என்பது.
-
ரவி செனிவிரத்னவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி - உதயகம்மன்பில
இரண்டு அரசாங்கங்கள் மாறி மாறி வந்த போதும் இதுபற்றி மூச்சு விடாத உதயன் கம்மன்பில இப்போ தானாக முன்வந்து இதனை வெளியிடுவதும், அவர்களை பதவி விலக்க வேண்டுமென்றும் அடம் பிடிப்பதற்கும் பின்னால் இவருக்கும் அவர்களுக்குமிடையில் ஏதோ பிணக்கு இருக்கிறது போல் தெரிகிறது, அதனால் முந்திக்கொண்டு அவர்கள் மேல் குற்றச்சாட்டு வைக்கிறாரோ என சந்தேகம் எழுகிறது. எதற்கும் கொஞ்சம் அமைதியாய் இருப்போம் அவர்களால் வெளிவரும். அட..... கோத்தா, மஹிந்தா, சரத் பொன்சேகாவை அமைச்சர்களாக நியமித்திருந்தால் முக்கிய தகவல்கள் வெளிவந்திருக்கும் போலிருக்கிறதே. "கலகம் பிறந்தாற்தான் நிஞாயம் பிறக்கும்." நீங்கள் உங்களின் அறிக்கையை வெளியிடுங்கள், அவர்கள் தங்கள் அறிக்கையை வெளியிடட்டும், அதை தொடர்ந்து இதனோடு சம்பந்தப்பட்டமற்றவர்களும் வெளியிடட்டும். குற்றவாளிகளை கைது செய்ய இலகுவாக இருக்கும்."உப்பு போட்ட பாண்டமும் நியாயங்கற்ற நெஞ்சும் தட்டி உடையாமல் தானே உடையுமாம்." சொல்லுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறோம்.
-
தனிநபரின் கம்பனியாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி - கே.வி.தவராசா
தமிழ் தேசியமானது மண்ணுக்குள் புதைத்து, அதற்கு மேல் நின்றுதான் அரசியலே நடக்கிறது. அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க என்ன இருக்கிறது? ஒன்றும் பெறாதவர்கள் பெறுவதற்கு ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால் எதுவும் சாதிக்காமல், நான்தான் எப்போதும் முன்னுக்கு இருக்கவேண்டும் என்று இருப்பவர்கள், நாம் தான் இந்த பதவிக்கு தகுதியுடையவர் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம், யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பது கட்சியுமல்ல, ஜனநாயகமுமல்ல. அது, சுத்த போக்கிரித்தனம், சுயநலம், சர்வாதிகாரம். இப்படி பலர் வெளியிலேயே இருக்கின்றனர், அதனால் அது அவர்களுக்கு தப்பாக தெரிவதில்லை.
-
சங்கு சின்னம் எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல – அரியநேத்திரன்
நல்லவேளை, சங்கை இறுக கட்டிப்பிடித்து, தனி உரிமை கோரிக்கொண்டு, மற்றவரை விரட்டவில்லை. அந்தளவில் அரியநேந்திரனை பாராட்டலாம். ஆனால் அந்த சின்னத்தை, ஜனாதிபதி தேர்தலில் வெறுத்தவர்கள், விமர்சித்தவர்கள், இப்போ அதை திருடி விட்டனர் என உரிமை கோரி சத்தமிடுகின்றனர். அதற்கு நீதிமன்றத்தில் முறையிட இடமில்லையா? முறையற்ற வகையில் குற்றம் சாடுகின்றனரா? அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறதா? அது தவறெனில் தேர்தல் திணைக்களம் எவ்வாறு சங்கை தேர்தல் சின்னமாக பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்தது? அனுமதி மறுப்பதும் ஏற்பதும் தேர்தல் திணைக்களத்தின் பணியல்லவா? ஒரு சிறிது காலத்தில் சங்கு அவ்வளவு பிரபல்யமடைந்து விட்டதே, சங்கை கண்டு பயப்படுவதற்கான காரணம். உண்மையாகவே அரியநேந்திரன் ஒரு உயர்ந்த மனிதன்.
-
"நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
அவர்கள் இன்று, சிறுபான்மை இனங்களை நசுக்கும் வர்க்கத்திற்கு தோள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், அதை மறைக்க அவ்வப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் மேலெழுந்து விடாமல் பாத்தும் கொள்கின்றனர்.
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
ஏன், உங்களுக்கு மட்டுந்தான் கற்பனைக் கதை எழுத வருமோ? அல்லது உங்கள் கதைமட்டுந்தான் உண்மையானதோ?
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
எதிர்க்கருத்து வைக்க முடியாவிட்டால், அமைதியாக இருங்கள். நானொன்றும் சொல்ல மாட்டேன், வற்புறுத்தவும்மாட்டேன். அதுதான் உங்களுக்கு வராதே. எழுதுங்கள் .......
-
இலங்கையில் 50 ஆண்டுக்கு முன் திருடிய 37 ரூபாயை பன்மடங்காக திருப்பிக் கொடுத்த கோவை தொழிலதிபர்
தேர்தல் பேச்சுக்கள்? அப்படி ஒன்று செய்யாவிட்டால், இவரை நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள். குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் அநுராதான் ஊழல் செய்தவர் என்று கதையை மாற்றி விடுவார்கள்.
-
எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது - டக்ளஸ்
ஒவ்வொரு அரசாங்கத்திடமும் போய் அமர்வதற்கு இந்த கோசம் நல்ல வரவேற்பை கொடுக்கிறது போலும். வழமையான அரசுகளுக்கு சொன்ன கோசத்தையே புது அரசுக்கும் சொன்னால்; அவர் கோபிக்கப்போகிறாரே. அந்த மக்களை அடிமைகளாக வைத்து, பிற தொடர்புகள் இல்லாமல் தனித்தீவாக வைத்து அவர்களின் வாக்குகளை பிடுங்கி பாராளுமன்றம் போய் அந்த மக்களுக்கு என்ன செய்தார்? உண்மையிலேயே அந்த மக்கள் இவராலேயே தம் சுயத்தை இழந்தவர்கள். வெட்கமில்லை? நாங்கள் சொல்வதை ஏற்று எங்களை பாராளுமன்றம் அனுப்பிவைத்தார்கள் என்று வாய்வீரம் பேசி மீண்டும் அவர்களிடம் வந்து வாக்கு கேட்கிறீர்கள். வந்து இருக்கும் மக்களின் தொகையை கணக்கிட்டு முடிவு செய்யுங்கள், நீங்கள் பாராளுமன்றம் போவதா சொன்னமாதிரி ஓய்வுபெற்று வீட்டுக்கு போவதா என்று. இனிமேல் உங்கள் பிரசன்னம் பாராளுமன்றத்திற்கு தேவையுமில்லை, நீங்கள் சொல்வதை இனிமேலும் சொல்லவேண்டிய அவசியமுமில்லை.
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
நம்பிக்கைத்துரோகிகளால் ஏற்பட்ட மனஉளைச்சல். விக்கியரை விரட்ட மாவையரை கொம்பு சீவினர், பின்னர் மாவையருக்கே குழி பறித்தார். பாவம் மாவையர், ஒரு வாயில்லாப்பூச்சி. சுமந்திரனை கட்சிக்குள் சேர்த்தவர் இவர்தான் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சம்பந்தர் இருந்தபோது அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் சொல்வதை தலைமேல் தாங்கினார். எதிர்த்து கதைத்தது கிடையாது. அவரை கதைக்க சம்பந்தர் விட்டதுமில்லை. தட்டி அடக்கியே வைத்திருந்தார். அதையே நேற்று வந்த சுமந்திரனும் கடைப்பிடித்தார். சுமந்திரனை எதிர்த்தால், கட்சியை நடுவீதிக்கு கொண்டு வந்து விடுவார் என்பதால் அமைதியாக இருந்தார். அதை தெரிந்துகொண்ட சுமந்திரன் அதையே தனது ஆயுதமாக பயன்படுத்தி தனது திட்டங்களை நிறைவேற்றத்தொடங்கினார். எது நடந்துவிடக்கூடாது என பயந்து மாவையர் அமைதி காத்தாரோ அதுவே நடந்தது. இப்போதும் கட்சியை பாதுகாப்பதற்காக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவரை வைத்தியசாலையில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதையும் வீட்டுக்காக செலவழித்தவர்.
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
சுமந்திரன் தனது நோக்கங்களை அடைவதற்கு கையாளாக சிறீதரனை பாவிக்கிறது. உண்மையான நட்பு கிடையாது. முன்பு உள்ளூராட்சி தேர்தலின்போதாக இருக்கலாம், மாவை பதவிவிலகவேண்டும் என சுமந்திரன் அறிக்கை விட்டபோது, அவரின் தலைமை பதவிக்கு சிறீதரனையே கொம்பு சீவினார். அது சறுக்கி விடவே இவரின் தந்திரத்தை புரிந்துகொண்ட சிறீதரன் ஒட்டியும் ஒட்டாமலுமே சுமந்திரனுடனான உறவை வைத்துக்கொண்டார். அதன் பின் தமிழரசுக்கட்சி தலைவர் பதவி சிறீதரனுக்கு வந்ததே, அந்த கட்சி நீதிமன்றத்திற்கு போக காரணம் என்கிறார்கள். அப்போ; பதவியேற்க தான் தயார் என அறிக்கை விட்ட சிறீதரன், இப்போ; பதவியை ஏற்க இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்? மது பானசாலை அனுமதி பெற்ற பெயர்கள் என்கிற விஷயம் அடிப்பட்டபோது சிறீதனின் பெயரும் முதலில் அடிபட்டது, இது இப்போதல்ல பலகாலமாக பேசப்பட்டது. இப்போ, அவசரமாக விசாரணை, அது மதுவுக்கு அடிமையான ஒருவர் பரப்பிய வதந்தி என்று அறிக்கை விட்டதும், சுமந்திரன் ஓடிப்போய் அந்த பெயரை வெளியிடுங்கள் நாங்கள் அவர்களை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விட்டதும், அந்தகையோடேயே நானும் சிறிதரனும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறோம் என அறிவித்ததும், இதற்கு பின்னால் ஒரு நய வஞ்சக திட்டமுண்டு. இருவர் மனதுக்குள்ளும் நீறு பூத்த நெருப்புப்போல் ஒரு பகை உள்ளது. அது எப்போதும் வெடிக்கலாம் அல்லது அடக்கி வாசிக்கலாம், அது தேர்தலின் பின் வரும் முடிவுகளை பொறுத்தது.
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
அதெப்படி உங்களால் சகித்துக்கொள்ள முடியும்? எனது இவ்வளவுகால அவதானத்தின்படி, உங்களுடைய அணுகுமுறையைத்தான் எழுதினேன்.
-
ரணில் மற்றும் மஹிந்தவின் வாகனங்களை கோரும் அரசாங்கம்
மிகுதி பத்தும், வாடகைக்கு விட்டு உழைப்பதற்கு, பின்னாளில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு. ம்...... இந்த காவியள் அடிக்கடி சொல்லி பயமுறுத்துதுகள், கடந்தகாலத்தை மறந்து போச்சினம் தமிழர், ரத்த ஆறு ஓடும், நாடு பற்றி எரியுமென்று. தொண்ணூறொன்பது வீதந்தை நாசமாக்கி போட்டுதுகள், இருக்கிற மிச்சத்தையும் வம்புக்கிழுத்து, போகலையென்றால் இழுத்துவந்து முடிச்சுப்போடுங்கள். சிங்களவரோடு இருப்பது அதிஸ்ரம் என்று அறிக்கை விட்டதுகள், சங்கமமானதுகள் எல்லாம் கொழும்போடு வாழப்போய் விடுங்கள், போவதென்ன? வாழுவதே அங்கேதான். வாக்கு சுற்றுலா மட்டும் வடகிழக்கில். அவர்கள் போட்ட பிச்சைதான் அவர்களது சுக வாழ்க்கை. அதை விடுங்க ...... பிறகு லங்கா சிங்கள பௌத்த நாடு கோசந்தான். யாரும் கேள்வி கேட்கமுடியாது. கொழும்புகாரருக்கும் வேறு நாதியில்லை ஏமாற்றி இருப்பை தக்க வைத்துக்கொள்ள.