Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. நம்பிக்கைத்துரோகிகளால் ஏற்பட்ட மனஉளைச்சல். விக்கியரை விரட்ட மாவையரை கொம்பு சீவினர், பின்னர் மாவையருக்கே குழி பறித்தார். பாவம் மாவையர், ஒரு வாயில்லாப்பூச்சி. சுமந்திரனை கட்சிக்குள் சேர்த்தவர் இவர்தான் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சம்பந்தர் இருந்தபோது அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் சொல்வதை தலைமேல் தாங்கினார். எதிர்த்து கதைத்தது கிடையாது. அவரை கதைக்க சம்பந்தர் விட்டதுமில்லை. தட்டி அடக்கியே வைத்திருந்தார். அதையே நேற்று வந்த சுமந்திரனும் கடைப்பிடித்தார். சுமந்திரனை எதிர்த்தால், கட்சியை நடுவீதிக்கு கொண்டு வந்து விடுவார் என்பதால் அமைதியாக இருந்தார். அதை தெரிந்துகொண்ட சுமந்திரன் அதையே தனது ஆயுதமாக பயன்படுத்தி தனது திட்டங்களை நிறைவேற்றத்தொடங்கினார். எது நடந்துவிடக்கூடாது என பயந்து மாவையர் அமைதி காத்தாரோ அதுவே நடந்தது. இப்போதும் கட்சியை பாதுகாப்பதற்காக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவரை வைத்தியசாலையில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதையும் வீட்டுக்காக செலவழித்தவர்.
  2. சுமந்திரன் தனது நோக்கங்களை அடைவதற்கு கையாளாக சிறீதரனை பாவிக்கிறது. உண்மையான நட்பு கிடையாது. முன்பு உள்ளூராட்சி தேர்தலின்போதாக இருக்கலாம், மாவை பதவிவிலகவேண்டும் என சுமந்திரன் அறிக்கை விட்டபோது, அவரின் தலைமை பதவிக்கு சிறீதரனையே கொம்பு சீவினார். அது சறுக்கி விடவே இவரின் தந்திரத்தை புரிந்துகொண்ட சிறீதரன் ஒட்டியும் ஒட்டாமலுமே சுமந்திரனுடனான உறவை வைத்துக்கொண்டார். அதன் பின் தமிழரசுக்கட்சி தலைவர் பதவி சிறீதரனுக்கு வந்ததே, அந்த கட்சி நீதிமன்றத்திற்கு போக காரணம் என்கிறார்கள். அப்போ; பதவியேற்க தான் தயார் என அறிக்கை விட்ட சிறீதரன், இப்போ; பதவியை ஏற்க இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்? மது பானசாலை அனுமதி பெற்ற பெயர்கள் என்கிற விஷயம் அடிப்பட்டபோது சிறீதனின் பெயரும் முதலில் அடிபட்டது, இது இப்போதல்ல பலகாலமாக பேசப்பட்டது. இப்போ, அவசரமாக விசாரணை, அது மதுவுக்கு அடிமையான ஒருவர் பரப்பிய வதந்தி என்று அறிக்கை விட்டதும், சுமந்திரன் ஓடிப்போய் அந்த பெயரை வெளியிடுங்கள் நாங்கள் அவர்களை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விட்டதும், அந்தகையோடேயே நானும் சிறிதரனும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறோம் என அறிவித்ததும், இதற்கு பின்னால் ஒரு நய வஞ்சக திட்டமுண்டு. இருவர் மனதுக்குள்ளும் நீறு பூத்த நெருப்புப்போல் ஒரு பகை உள்ளது. அது எப்போதும் வெடிக்கலாம் அல்லது அடக்கி வாசிக்கலாம், அது தேர்தலின் பின் வரும் முடிவுகளை பொறுத்தது.
  3. அதெப்படி உங்களால் சகித்துக்கொள்ள முடியும்? எனது இவ்வளவுகால அவதானத்தின்படி, உங்களுடைய அணுகுமுறையைத்தான் எழுதினேன்.
  4. மிகுதி பத்தும், வாடகைக்கு விட்டு உழைப்பதற்கு, பின்னாளில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு. ம்...... இந்த காவியள் அடிக்கடி சொல்லி பயமுறுத்துதுகள், கடந்தகாலத்தை மறந்து போச்சினம் தமிழர், ரத்த ஆறு ஓடும், நாடு பற்றி எரியுமென்று. தொண்ணூறொன்பது வீதந்தை நாசமாக்கி போட்டுதுகள், இருக்கிற மிச்சத்தையும் வம்புக்கிழுத்து, போகலையென்றால் இழுத்துவந்து முடிச்சுப்போடுங்கள். சிங்களவரோடு இருப்பது அதிஸ்ரம் என்று அறிக்கை விட்டதுகள், சங்கமமானதுகள் எல்லாம் கொழும்போடு வாழப்போய் விடுங்கள், போவதென்ன? வாழுவதே அங்கேதான். வாக்கு சுற்றுலா மட்டும் வடகிழக்கில். அவர்கள் போட்ட பிச்சைதான் அவர்களது சுக வாழ்க்கை. அதை விடுங்க ...... பிறகு லங்கா சிங்கள பௌத்த நாடு கோசந்தான். யாரும் கேள்வி கேட்கமுடியாது. கொழும்புகாரருக்கும் வேறு நாதியில்லை ஏமாற்றி இருப்பை தக்க வைத்துக்கொள்ள.
  5. பொறுங்கள்! மக்களிடம் கொள்ளையடித்து உகாண்டாவிலோ வேறெங்கிலோ பதுக்கி வைத்திருக்கும் பணம், பலமடங்காக நாட்டுக்கு திரும்பி வரப்போகுதென முன்னறிவிப்பு வந்திருக்கு இச்சம்பவத்தின் மூலம். நல்ல சகுனம்!
  6. அதுதானே உங்கள் பணி. அதற்காவே காத்திருப்பீர்கள், உடனே வந்துவிடுவீர்களே!
  7. விழப்போகும் வீட்டை அதிலிருந்து தடுத்து நிறுத்த, வைக்கப்படும் வீசுகால் (கம்பு). எப்போதெல்லாம் வீடு வீழ்ச்சியை காணுதோ அப்போவெல்லாம் புதியவர்களை ஆகா ஓகோ என்று பாராட்டி வீட்டிற்குள் வரவேற்பார்கள். வீழ்ச்சி தடுக்கப்பட்டபின் அவர்களை விமர்சித்து, நாறடித்து, சேறடித்து, சவால் விட்டு விரட்டுவார்கள். இதுதான் தொடரும் வரலாறு. சி. வி. விக்கினேஸ்வரன், சசிகலா ரவிராஜ். இப்போ இவர் மாட்டிக்கின்னார். சோழியன் குடுமி சும்மா ஆடாது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செல்வநாயகம், கட்சி என்று சட்டாம்பி ஆற்பரித்ததுக்கு பின்னால் இவருக்கு கொடுக்கப்பட்ட முகவரி, கட்டியம் என்று புரிகிறது. செல்வநாயகம் கட்டியெழுப்பிய வீட்டை குட்டிச்சுவராக்கிப்போட்டு மீண்டும் அவரையே அழைக்கிறார்கள் புனரமைப்பதற்கு. அதற்கு முன், வீட்டை அரித்து பலவீனமாக்கும் கறையான்கள் அழிக்கப்படவேண்டும். இல்லையேல் வீட்டை காப்பாற்ற முடியாது.
  8. பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் எனும் உத்தரவுக்கு, மஹிந்த பயங்கரவாதத்தை முறியடித்தபடியால் அவருக்கு உயிர் ஆபத்து இருக்கென்றும் அதை மீளப்பெற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்ததாக செய்தி ஒன்று சொல்கிறது. எல்லா இடமும் போகிறார்கள், விழா எடுக்கிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள், புலிகளை அழித்துவிட்டோம் இனி இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்கிறார்கள், உலகிலேயே சிறந்த இராணுவ, புலனாய்வு பிரிவு தம்மிடம் இருப்பதாக பீற்றிக்கொள்கிறார்கள், பிறகு பாதுகாப்பு வேண்டுமாம். இதெல்லாம் சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியே வர முடியாத நிலை. மக்களின் பணம் வீணடிக்கப்படும் விதம். பதின்மூன்று வாகனங்களில் எப்படி பயணம் செய்கிறார்கள்? அதற்கு எரிபொருள், சாரதி. ஒரு கார் காணாதா? சந்ததிக்கு வாகனம் சேர்க்கிறார்களோ? ரணிலுக்கு எதற்கு பதின்மூன்று?
  9. அவருக்கு தெரிந்திருக்கு, தமக்கு இலக்கு வைக்கப்படுமென்று. யாராவது சொல்லிக்குடுக்காமலா விடப்போகிறார்கள்?
  10. தேர்தலுக்கு பயன்படும் போல. ஒட்டுக்கேட்டிருப்பார்களோ?
  11. அவர்களுக்கு வாய் கொஞ்சம் பெரிசெண்டு நினைக்கிறன்.
  12. ரத்தன் ராரா ( Ratan Tata) என்றொரு இந்திய பெரும் செல்வந்தர் போனவாரம் காலமானார், அவரது பொன்மொழி, "உங்களை நோக்கி யாராவது கல் வீசினால் அவற்றை ஏந்தி நினைவாலயங்கள் எழுப்புங்கள்." என்றாராம். நல்ல விமர்சனங்களை ஏற்று, ஆய்வு செய்து உங்களை திருத்திக்கொள்ளுங்கள். பொறாமையால் எழும் தப்பான, பொய்யான விமர்சனங்களை புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள், அதற்காக காலத்தை வீணாக்காதீர்கள். எதிரி எமக்கு போடும் முட்டுக்கட்டை, உளவியல் ரீதியாக நம்மை பின்னடையச்செய்யும் ஒரு உத்தி இது.
  13. ஹிஹி.... உப்பிடி பலமுறை நழுவியிருக்கிறார், நழுவும்போது தேவையற்ற ஒரு கம்பு செருகி, தான், நடுவு நிலையாளன் என்பது போல சாதிப்பார். முன்னைய திரிகளை அலசிப்பார்த்தால் தெரியும். தானே செருகிய கம்பை, யாரோ செருகினார்கள் என்று தனக்கு ஒவ்வாதவரை கற்பனை செய்து தி(தீ)ட்டுவார்.
  14. பதவி ஆசை தலைதூக்காமல், ஒருவரிடம் அதிகாரம் குவியாமல், மற்றவரை குற்றம் சாட்டி தங்களை மறைத்துக்கொள்ளாமல் எல்லோரையும் சமமாக மதித்து அவரவர்க்குரிய மரியாதையையும் பதவிகளையும் பகிர்ந்தளித்து கொள்கைகளை மதித்து உட்பட்டு மக்கள் நலனை கருத்திற்கொண்டு கூடி ஆலோசித்து ஒருமித்து முடிவுகளை எடுத்து காரியமாற்றினால்; இந்த கட்சி எல்லோரையும் இணைத்து வீறுநடை போடும். அதற்காக குள்ள நரிகளையும் குழப்பிகளையும் குடைச்சல் காரரையும் தூரவே வையுங்கள்.
  15. ஒருதடவை, பொதுமக்கள் சுமந்திரன் சந்திப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டம் நேர்த்தியாக போய்க்கொண்டிருந்தது சுமந்திரன் பேசும்வரை. அதன் பின், ஒரு பொதுமகன் எழும்பி சுமந்திரனிடம் கேள்வி கேட்டார் பாருங்கள், வந்ததே வந்தது சுமந்திரனுக்கு கெட்ட கோபம்., உடனே, "இங்கே இருப்பதென்றால்; வாயை மூடிக்கொண்டு இருக்கவும், இல்லையேல்; வெளியேற்றப்படுவீர்கள்." என்று எச்சரித்தார். இராணுவமோ புலனாய்வோ என்னவோ ஒன்று இதற்காகத்தான் இவர் பின்னால் திரிகிறதோ என்னவோ? "ஊமையர் சபையில் உளறுவாயன் மகா பிரசங்கி."
  16. தமக்கு போட்டியானவர்களை தொடர்ந்து ஓரங்கட்டிக்கொள்வது. கேட்டால்; பதவியாசையில் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்று தங்கள் அநாகரிக பாஷையில் விமர்சிப்பது. தாங்கள் தொடர்ந்து இருப்பது மட்டும் ஞானி குடில்,. உண்மையை சொல்பவர்களை இழிவு படுத்துவது, கேள்வி கேட்பவர்களை விரட்டுவது. தம்மை மறைத்து முந்திக்கொண்டு மற்றவரை குற்றவாளியாக்குவது. கட்சியின் கொள்கைகளை கடைப்பிடிக்காதவர்கள், உடன் அங்கத்தவரின் உரிமைகளை மறுக்கிற சர்வாதிகாரிகள் எப்படி மக்களைப்பற்றி சிந்திப்பார்கள் என நாம் எதிர்பாக்கலாம்?
  17. சுட்டுப்போட்டாலும் நம்ம அரசியவாதிகளுக்கு அது எட்டாப்பொருத்தம். அவர்கள் அதைப்பற்றி சிந்தித்திருந்தால்; வடக்கில் இவ்வளவு கட்சிகள் போட்டியிட வாய்ப்பில்லையே. நாளைக்கு சீனன் போட்டியிட்டாலும்வியப்பில்லை. அபிவிருத்தியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் அது மக்களுக்கானதல்ல. அதனாலேயே மக்களிடம் வரும்போது சிலருக்கு சிங்கள புலனாய்வு பாதுகாப்பளிக்கிறது. தேவைப்படுகிறது.
  18. நீங்கள் விரட்டினாலும் அவருக்கு இருக்கவே இருக்கிறது வீடு, ஓடிப்போய் பாதுகாப்பாக ஒழிப்பதற்கு.
  19. வியாழேந்திரனின் கட்சி, "ஜனநாயக தேசிய முன்னணி." இப்போ பெயர் மாற்றம் செய்யப்பட்டதோ தெரியவில்லை. எல்லோரும் ஒரே வட்டத்துக்குள் சுற்றுகிறார்கள். ஜனநாயக தேசிய கூட்டணி, ஜ. தே. முன்னணி. ஐக்கியம், ஜனநாயகம், தேசியம், சுதந்திரம் என்று மாற்றி மாற்றி மக்கள் காதில் பூச்சுற்றுகிறார்கள். இப்போ, மக்கள் கட்சியை பார்த்து வாக்களிப்பதில்லை, ஒன்று செயற்பாடுகளை தேடுகிறார்கள், அப்படி ஒருவரும் இல்லை. ஆகவே ஏதோ ஒன்றுக்கு கடமைக்காக வாக்களிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. மக்கள் வாக்களித்து, போராடி, களைத்துவிட்டார்கள். இழப்பும் ஏமாற்றமும் தோல்வியும் வறுமையும் விரக்தியும் மிஞ்சியுள்ளது. தமிழ், மக்கள் தலைமைகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களுக்குள் தலைமைக்காக அடிபடுகிறார்களேயொழிய அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவுமில்லை நம்பிக்கையாய் இருக்கவுமில்லை. மக்களுக்கு அந்த நம்பிக்கையுமில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?
  20. ஐயா.... குற்றச்சாட்டு உண்மையாயிருக்கிற பட்ஷத்தில் தானே போலீசில் முறைப்பாடு செய்யலாம். சரி.... முறைப்பாடு செய்யவில்லை, எப்படி எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் அதிலும் தமிழ் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படாத அந்த உயர் பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்பட்டது? அதை அவர் என்ன முறையில், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார்? அதே புலம்பெயர்ந்தோரிடம் எந்த பாதுகாப்பும் இல்லாமல் போய் பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அது முடிகிறது? புலம் பெயர்ந்தோர் சில ஆட்களுக்கு பணம் அனுப்பி கொலை செய்ய திட்டம் போட்டார்கள் என்றால்; எப்படி பகிரங்கமாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்? அந்த கொலைகாரர் யார்? இரண்டு முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகளில் வந்தன. பின் ஏன் அவருக்கு இன்னும் பாதுகாப்பு? அன்றைய சிங்களஅரசு தெரிவித்தது, தங்களுடன் இணைந்து செயற்படும் பாராளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்து இருப்பதாக. அப்போ அவர் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுத்தார் என்பது உண்மை, வாக்களித்த மக்களுக்கு அவர் செய்வது துரோகம் என உணர்ந்த அரசு அவருக்கு பாதுகாப்பளித்தது. மற்றப்படி அவர் தமிழ் இனத்துக்கு, தனக்கு வாக்கு போட்டவர்களுக்கு என்ன செய்தார்? ஒரு வீரன், ஒரு துரோகி இவர்களுக்கு உயரச்சுறுத்தல் இருப்பது வழமை. இவர்தான் மேடைகளில் தன்னை துரோகி என்று மக்கள் சொல்வார்கள் நான் அதற்கு அஞ்சசப்போவதில்லை என அடிக்கடி சவால் விடுகிறாரே. ஈஸ்ரர் குண்டு வெடிக்கமுன் எத்தனை உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுத்தகவல்கள் வந்தும் தடுக்க தவறிய புலனாய்வு, சுமந்திரனுக்கு விஷேச புலனாய்வு பாதுகாப்பு வழங்கியதாம். முஸ்லீம் தீவிர வாதிகள் போலீசாரை கொலை செய்து பறித்த ஆயுதங்களை, முன்னாள் போராளிகள் செய்தார்கள் என கைது செய்த புலனாய்வு, சுமந்திரனுக்கு புலம்பெயர்ந்தோரால் உயிராபத்து என துல்லியமாக கண்டுபிடித்து உயர் பாதுகாப்பு வழங்கியதாம். சொல்பவர் சொன்னாலும் கேட்ப்பவருக்கு மதி இருக்க வேணும், இருக்கு.
  21. ஐயோ...... பயமுறுத்துகிறியள். மஹிந்த, இப்படியொரு பதாகை வைத்தார் பாருங்கோ.... கண்ணூறு பட்ட மாதிரி அதோடு முடிவாகிப்போனது அவரது அரசியல் கனவு.
  22. ஆயிரத்தில் ஒருவன்! இவ்வளவையும் வாசித்து தாங்கிப்பிடித்து வாக்களிக்கும் மக்கள் மயங்கி விழப்போகிறார்கள். தேர்தல் திணைக்களம் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் அடையப்போகிறது. ஒருமித்து மக்களுக்குகாக போராடி உயிரை விட்ட மண்ணில், இத்தனை கட்சிகள் முளைத்திருக்கின்ற.
  23. "வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா." தமிழ் பொதுவேட்பாளர் தேர்தலில் நின்றபோதும் குறை கூறினார்கள். இப்போ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் குறை கூறுகிறார்கள். கழுதை வியாபாரியின் கதைதான் இது.
  24. வியாழேந்திரனின் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் நினைக்கிறன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரென. அதன் சின்னம் சங்கு, சித்தார்த்தன்.
  25. செலஸ்ரீன் என்பது தமிழ் கிறிஸ்தவ பெயர். ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன். செலஸ் ரீன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.