Everything posted by satan
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
"வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா." தமிழ் பொதுவேட்பாளர் தேர்தலில் நின்றபோதும் குறை கூறினார்கள். இப்போ பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் குறை கூறுகிறார்கள். கழுதை வியாபாரியின் கதைதான் இது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
வியாழேந்திரனின் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் நினைக்கிறன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரென. அதன் சின்னம் சங்கு, சித்தார்த்தன்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
செலஸ்ரீன் என்பது தமிழ் கிறிஸ்தவ பெயர். ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன். செலஸ் ரீன்
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
சில கருத்துக்கள் வேறு வேறு பெயரில், வசனநடை, பொருள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன, பதியப்படுகின்றன. ஒரே கருத்து பலபெயரிலா? அல்லது பல பெயரில் ஒருவரா?
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
வாசிப்பதில்லை ஆனால் பதில் எழுதுகிறீர்கள் அது எப்படி? நான் லைக்குகளை எதிர்பார்த்தோ, விமர்சனங்களுக்கு பயந்தோ எழுதுவதில்லை. தமிழரசுக்கட்சியில் எந்த வேட்பாளருக்கும் இல்லாத உயிரச்சுறுத்தல், பாதுகாப்பு சுமந்திரனுக்கு மட்டும் ஏன்? எதற்காக? அப்படியென்றால்; அவர் சிங்களத்தோடு இணைந்து வேலை செய்கிறார் என்பது நிதர்சனம். அப்படி புலம்பெயர்ந்தோரால் அவருக்கு ஆபத்து என்றால்; அவர் எப்படி வெளிநாடுகளுக்கு செல்கிறார், பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார்? சுமந்திரனின் சுத்துமாத்துகளை மக்கள் விமர்சிக்கிறார்களேயொழிய அவரது மதத்தையல்ல, அவர் மற்றைய மதத்தினரோடேயே கட்சியில் இருக்கிறார், மற்றைய மதத்தினரின் வாக்குகளை கேட்கிறார், மற்றவர்களின் பதவிகளை கையகப்படுத்துகிறார், தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடுகிறார், முடிவுகளை எடுக்கிறார், நியமனங்களை செய்கிறார், அப்படியிருக்க பொருத்தமில்லாத காரணத்தை நீங்கள் வைத்தீர்கள் அதற்கான பதில்களையே நான் கொடுத்திருந்தேன். நீங்கள் அதை அலட்டல் என்று நினைத்தால்; கடந்து போங்கள். அதை விட்டு தேவையற்ற அநாகரிக வார்த்தைகளை தவிருங்கள். இங்கு ஒரு அநாகரிக வழமையுண்டு. தங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகாதவரை, உண்மையை எடுத்துச்சொல்பவரை கருத்தால் கையாளத்தெரியாவிட்டால்; அவர்களை இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது. இது அவர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனம். மழை மேகங்களால் சூரியனை மறைக்கமுடியாது!
-
எனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவரின் கணவர் கேள்விப்பத்திரத்தை பெறுவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க முயன்றார்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
தனக்கு சொந்தமான காணிகளை விற்று காருக்கு பெற்றோல், ஊழியருக்கு சம்பளம் இப்படி பல செய்கிறாவாம். காணிகளை வாங்க ஒரு காலம், விற்க ஒரு காலம், வீர வசனம் பேச ஒருகாலம், அனுதாபம் தேட ஒருகாலம். இதுதான் வாழ்க்கை. ஏழை விழுந்தால் தனது சொந்த முயற்சியால் சீக்கிரம் எழுந்து விடுவான். அவர்களுக்கு சிலர் இரங்குவர். அரசியல்வாதி விழுந்தால் யாரும் தூக்கிவிடவர மாட்டார்கள். விலகியே செல்வர். உதாரணம்; இவர், மஹிந்த, கோத்தா, சரத் பொன்சேகா இப்படி நீளும் வரிசை.
-
எனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவரின் கணவர் கேள்விப்பத்திரத்தை பெறுவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க முயன்றார்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
ஏன் அவரை லஞ்ச தடுப்புக்காவலர் கைது செய்யவில்லை? இவர் லஞ்சம் வாங்காவிட்டால், வேறொருவர் வாங்குவர். இவரிடம் இருந்து வந்தவர் தானே மஹிந்த. அவரிடம் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது? இவர் ஊழல் மோசடிக்காரரை தண்டிக்காது விட்டால் லஞ்சத்தைஅனுமதித்தார் என்பதுதானே அர்த்தம். நாடு வங்குரோத்தில்த்தான் இயங்குது என்பதை யாரும் இவருக்கு இன்னும் தெரிவிக்கவில்லைப்போலும்.
-
தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் - அரியநேத்திரன்
வீட்டில், சேடன், வேதாளம் எல்லாம் புகுந்து விட்டது, இனி என்ன மாற்றம் செய்யப்போகிறீர்கள்? முதலில் அவற்றை வீட்டை விட்டு விரட்டுங்கள். முடியாவிடில் வீட்டை இடியுங்கள்.
-
ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில-
அப்போ, இதுவரை இதை திருடி ஒளித்து வைத்திருந்தவர் இவர்தானா? தெரியாமல் மாட்டிக்கினார். இவரை துணிந்து கைது செய்து விசாரணை செய்யலாம். தானாகவே துணிந்து சாட்சியமளித்துள்ளார்.
-
கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
அரசாங்கத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது? மக்களின் வரிப்பணம், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று சர்வதேசம் வழங்கிய நிதி, கழட்டியும் இடித்தும் கொண்டு போனவை எல்லாவற்றையும் திரும்ப கொண்டுவந்து படம் காட்டுகிறார்கள். இதுதான் எதிரியின் தந்திரம்!
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
கிணறு வெட்ட பூதம் கிழம்பியதுபோல், தங்களையுமறியாமல், மதத்தை அனுதாபத்திற்கு இழுத்து, விழும் சொற்ப வாக்குகளையும் இழக்க வாய்ப்பளிக்கிறார்கள் அதி புத்திசாலிகள்! செயலற்ற வாய் வீரரின் கருவியது.
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அவர்கள், தாங்கள் தெரிந்தெடுத்து அழகு பாத்த தங்கள் தலைவனை விரட்ட எடுத்த முயற்சியது. அதில் நமக்கு பங்குமில்லை பாகமுமில்லை. தமிழீழ போராட்டம் நடக்கும்போது அவர்கள் பங்குபற்றவில்லையே.
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ் நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை. தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
அடங்காகுதிரைக்கு கடிவாளம் ஒன்று அவசியம். பின் நான் அப்படி சொல்லேலை, பத்திரிகைக்காரர் திரித்து விட்டார்கள் என்று மறுதலிக்க வாய்ப்பில்லை.
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச
அட, இவர் என்ன இப்பிடி பிரட்டிப்போடுறார்? இவர்களுடைய மூளை கணத்துக்கு கணம் மாறும்போல.
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
போனவருடம், உள்ளூராட்சி தேர்தல் நடைபெறப்போகிறதென்று ரணில் அறிவித்தவுடன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பை கழட்டி விட்டு தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதாக இந்த சட்டாம்பி முடிவெடுத்தார். ஆனால் அந்த முடிவை அங்கத்துவ கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை. அவர்கள் வழமைபோல தங்கள் செயற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் பத்திரிகைகளில் இதை அறிவித்துள்ளார் இந்த மேதை. இதையறிந்த கட்சிகள் இதுபற்றி இவரிடம் வினவியபோது; இந்த அரிச்சந்திரன் சொன்னார், கூட்டமைப்பு தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு, ஆகவே தனித்து போட்டியிடும் தீர்மானம் இல்லை என்று சமாளித்தார். அவர்களும் உண்மையென நம்பி இருக்கும்போது, இந்த ஒரு மனநிலை இல்லாதவர் சொன்னார், வேறு கட்சிகளுக்கு போகும் வாக்குகளை தடுப்பதற்காக நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம், பின் மீண்டும் ஒன்று சேருவோம். என்று விட்டார் பாருங்கோ ஒரு விடுகை. அவர் அப்பவே போட்ட திட்டம் தமிழரசுக்கட்சியை பிரித்து மற்றவர்களை விரட்டுவதென்று. காரணம் சரியென்றால் ஏன் அதை அவர்களுக்கு விளக்கி கூறியிருக்கலாமே? மனதில் நெல்லெண்ணம் இல்லை, எப்போ, யாரை எப்படி விரட்டுவேன், எதை கைப்பற்றுவேன் என்பதே அவர் சிந்தனை. வாக்களித்த மக்களின் கோரிக்கை என்ன, தனது பணி என்ன என்று யோசிப்பதில்லை. ஏனெனில் அவர் செயல் வீரரல்ல, ஆட்களை சேறடித்து விரட்டி அதை சாகசம் எனக்காட்டி எப்படியோ நுழைந்து விடுவார். இதற்கெல்லாம் வைப்பார் ஆப்பு அநுர. இப்போ சேர்ந்திருப்பவர்களுக்கு எப்போ பிரியாவிடை கொடுப்பாரோ தெரியவில்லையே. சரி.... யாரின் கட்சியையும் சின்னத்தையும் யார் திருடினார்களாம்? அவையும் அவர் சொத்துக்களா? அவர்கள் கட்சி, அவர்கள் சின்னம், இவர் ஏன் அந்தரப்படுகிறார்? எல்லாம் வேண்டுமாமோ தெரியவில்லை.
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
இண்டைக்கு தொலைஞ்சசீங்க போங்கோ! காலையில் சொன்னதை மாலையில் மறுப்பது, தனக்கு பிடிக்காதவர்களை திட்டம் போட்டு தாக்கும் தந்திரம், திறமை, பொருத்தமானவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் முடக்குவது, ஓரங்கட்டுவது, மற்றவர் அவர்களை தொடர்வதை தடுத்து தன்னை முன்னிலைப்படுத்துவது இன்னும் பல....
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
இந்த குற்றச்சாட்டை நிர்வாகம்தான் உறுதிப்படுத்தவேண்டும். ஐயா, முன்னாள் புலி உறுப்பினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி மஹிந்தா இவருக்கு இராணுவ பாதுகாப்பளித்தது. இவர் இராணுவத்துடன் வலம் வந்த படங்களும் பத்திரிகைகளில் வந்தது. என்னால் தேடி எடுக்க முடியவில்லை, முடிந்தவர்கள் இணைப்பார்கள் என நம்புகிறேன். அதன் பின் கொக்கிளாய் தொடங்கி பொலிகண்டி வரை பேரணி வந்ததை கண்ட அரசு, சுமந்திரனின் குற்றச்சாட்டு பொய்யானது, அப்படி அவரது உயிருக்கு ஆபத்து இருந்தால் எப்படி ஊர்வலம் போக முடியும் என்கிற கேள்வியுடன் அவருக்கு அளிக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
சுமந்திரனின் பிரசங்கத்திற்கு கைதட்ட தெரிந்தால் போதும், கேள்வி ஏதும் கேட்கக்கூடாது. அவர்களையே தேடி எடுத்திருப்பார். இவருடன் கூட்டு வைப்பவர்களின் திறமையை இலகுவில் கணக்கிட்டு விடலாம்
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
அவர்களுக்கு முன் சுமந்திரன் சந்தித்து, மூக்குடைபட்டு வந்து, பிரச்சார மேடைகளில் மற்றையவரை கேலிபண்ணுவதும் சேறடிப்பதும் அதோடுஅனுராவுக்கும் சவால் விடுகிறார்.
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
தமிழ் இளைஞர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி இராணுவ பாதுகாப்பு பெற்று வடக்கிற்கு வலம் வந்தவர், சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஸ்ரம் என்று பேட்டி கொடுத்தவர், இன்று எப்படி இளைஞர்களை கட்சியில் சேர்க்கிறாராம், வெட்கமில்லாமல் வடக்கு மக்களிடம் வாக்கு கேட்க்கிறார்? பேச்சாளர் பதவிகாலம் முடிந்துவிட்டது, அதிலிருந்து விலகவில்லை, தலைவர் பதவியை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார். அவருக்கு தெரியும் இவைகளை விட்டால் தன்னை ஒரு தூசாக கூட யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது. தட்டித்தவறி வருங்காலத்தில், யாரும் தங்கள் கட்சியிலோ, வேறு எந்த குழுவிலோ இவரை சேர்த்து விடாதீர்கள், எல்லோரையும் இரண்டுபடுத்தி, விரட்டி விட்டு அமர்ந்துவிடுவார். பின் இவரை அப்புறப்படுத்துவது மிக மிக கஸ்ரம்.
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
ஹிஹி..... சுமந்திரனை எல்லோரும் மதித்தார்கள், அவருக்கு மற்றவரை மதிக்கவும் தெரியாது, மதிப்பை ஏற்றுக்கொள்ளவும் தெரியாது.யாரோடு முரண்பட்டு கட்சியிலிருந்து வெளியேறினார்கள் என்பதை தெரியாதா? அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா? தமிழரசு ஒன்றும் அவரது ஏக சொத்தல்ல. அங்குள்ளவர்களின் கருத்துக்களை ஏற்கவும் அவர்களை மதிக்கவும் கட்சியின் கொள்கைகளை மதித்து நடக்கவும் எல்லோரையும் சமமாக வழிநடத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அது அங்கே நடந்ததா? ஆம் என்று நீங்கள் சொல்வீர்களானால் உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. ஒரு தலைவரின் சொல்லுக்கு மதிப்பில்லாமல், தான் தோன்றித்தனமாக நடப்பவரை பாதுகாக்க முனைகிறீர்களென்றால்; உங்கள் குணாதிசயமும் ஒன்றே. தமிழரசு செய்த ஒரே தப்பு, இவரை கட்சிக்குள் புகுத்தியதுமட்டுமல்ல, அவர் செய்த தவறுகளை தட்டிக்கேட்க்காமல், கண்டும் காணாதமாதிரி இருந்து கட்சிக்கு சாவு மணி அடித்தார்கள். இனி மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
ஆமா, கன்ரீன் சாப்பாடு சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் ருசி தெரியும், அதனால் அவர்களும் விரும்புவதில் தப்பில்லையே? இவளவு நாளும் அவர்கள் வெளியேற நினைக்கவில்லை, இப்போ நினைக்கிறார்கள். உலக்கைதேய்ந்து உளிப்பிடியாய் நிற்குது, இனிமேல் பிடிக்க ஆளில்லாமல் மறையப்போகுது. சாப்பாடு என்று கூறி சாப்பாட்டை கேவலப்படுத்தாதீர்கள், அது இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் பறந்துபோகும். மஹிந்த பட்டாளம் அதற்கு உதாரணம். உண்மையை எதிர் கொள்ள முடியாவிட்டால், அவர்களை கேவலப்படுத்துவது. அதுதான் தேர்தல் மேடையில் நடக்கிறது. நீங்கள் இங்கு களத்தில் ஆடுவதை எல்லோரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள், அது உங்களுக்கு புரிவதில்லை.
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
இது சுமந்திரனுக்கும் பொருந்தும். அதனாற்தான் மற்றவர்களை மதிக்காமல் தன்னை மட்டும் இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென பொறுப்புணர்ச்சியில்லாமல்.
-
தமிழரசின் தனிப் பயணம்; சுமந்திரனின் வெற்றி தோல்வியை ‘இறுதி’ செய்யும் தேர்தல்!
ஆளுக்கொரு நீதி உள்ள வீடு நிலைக்காது. "சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க்கணி." தமிழரசை உரிமை கோரும் சுமந்திரனும் சான்றோனல்ல, அவருக்கு வக்காலத்து வாங்கும் இந்த மூத்தவரும் சான்றோனால்ல. தலைவனுக்குரிய தகுதியுமிதுவல்ல, அதை சுட்டிக்காட்டும் தகுதியும் இவருக்கில்லை. மொத்தத்தில் தமிழரிடம் வாக்கு கேட்க எந்தக்கட்சிக்கும் தகுதியுமில்லை, அவர்கள் மக்களுக்கு எதையும் செய்வதற்காக தேர்தல் களமாடவுமில்லை. மக்களை வைத்து, ஒருவரை ஒருவர் வீழ்த்தி வீரவசனம் பேசுவதற்கே முற்படுகின்றனர். அதன் முன்னோட்டந்தான் தேர்தல் மேடைபேச்சு. சுமந்திரன் அனுராவிடம் ஓட்டமாய் ஓடி, மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடுங்கள் அவர்களை தகுதியிறக்க வேண்டும் என்று கோரினார். ஏன்? சமுதாயத்தின் மேல் அவ்வளவு அக்கறையா? அதுவும் தேர்தல் வந்ததாலா? ஏற்கெனவே இந்த அக்கறையை காட்டினாரா? இவர் அநாகரிகமாக எதிர் வேட்பாளர்களை மேடையில் சேறு பூசி தன் வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காக. எழுபத்தாறு வருடங்களாக வீட்டை உரிமை கொண்டாடியவர்கள், அந்த வீட்டை அவர்களுக்கு அளித்து அழகு பார்த்த மக்களை நடுவீதியில் விட்டு வேடிக்கை பார்த்தவர்கள் இவர்களல்லவா? அந்த வீட்டை நேற்று வந்த சுமந்திரன் என்கிற கறையான் அரித்து குடிச்சுவராக்கி அதிலிருந்தவர்களை வெளியே துரத்தியதைவிட வேறெதை சுமந்திரன் சாதித்தார்? இவர்களின் செயலற்ற தன்மையையும், ஏமாற்றும் தன்மையையும் பயன்படுத்தி இன்று எத்தனை கட்சிகள் நுழைந்து விட்டன? அத்தனையும் வீட்டுக்காரரின் சாதனையல்லவா? இவர் ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாமல் தாங்கள் வீதிக்கு வந்து நின்று மக்களுக்கு எதை சாதிக்கப்போகிறார்கள்? கதைக்க வேண்டிய நேரத்தில் கதைக்காமல், நமக்கென்ன வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறோமென மற்றவர்களை துரத்தும் போது மௌனமாக இருந்ததன் விளைவு; இன்று அவர்களுக்கு வந்துவிட்டது. கடந்த உள்ளூராட்சி தேர்தல் என நினைக்கிறன் மாவையர், மக்கள் தங்களைத்தான் ஆதரித்தார்கள் என்று பெருமிதமாக பேசினார். இன்று தலைகுனிந்து நிற்கிறார். இந்த நிலை ஒவ்வொருவருக்கும் வரும். கழுதை தேய்ந்து கட் டெறும்பு ஆன நிலையிலும் வீம்பு பேசுதுகள். அவர்கள் சாதித்ததுமில்லை ,சாதிக்க இவர்களால் ஒன்றுமில்லை. அதனால் தேர்தல் மேடையில் வாக்குறுதிகளை விட சேறடிக்கும் கேவலமான பேச்சுக்கள் மலிந்திருக்கின்றன. இதற்கு மற்றக்கட்சிகள் செய்ய வேண்டியவை, இந்த கோமாளியை விமர்சிப்பதை தவிர்த்து, மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அறிவியுங்கள், அதை செயற்படுத்துங்கள். இவர் கையூட்டு பெற்று மேடைகளில் சிங்களத்தை புகழ்ந்து சாதிக்க இனிமேல் உள்ள அரசு இவரை பயன்படுத்தாது. அந்த தேவையுமில்லை அவர்களுக்கு. ஆகவே மக்களாணையை நயவஞ்சகமாய் பெற்று, அரியாசனம் ஏற துடிக்கிறார். இவர் எங்கே வைக்கப்படுவார் என்பது முன்பே அறிமுகத்தில் இருந்து தெரிகிறது. எல்லா சிங்களத்துக்கும் காட்டிக்கொடுக்கும் அடிமைகள் தேவையில்லை. இருந்தவர்தான் இருந்தார் இந்தக்கூத்தையும் பார்த்து வீட்டை மூடிய நிம்மதியுடன் கண்ணை மூடியிருக்கலாம். பாதியில் விட்டிட்டு போட்டார்.