Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. நம்ப வைத்து கழுத்தறுத்த நரியின் கருமவினை அவரை தொடர்ந்து போட்டறுக்குது. மகிந்த பட்டாளத்துக்கு ஒரு கோஷம், "நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட கதாநாயகர் நாங்கள்." இவருக்கு ஒரு கோஷம், நாட்டை வரிசை யுகத்திலிருந்து மீட்டேன்." இவரை பொம்மைபோல வைத்து காரியம் சாதிக்க நினைத்த மகிந்த பட்டாளத்துக்கு பெரிய ஏமாற்றம். அவர்களுக்கு ஆபத்தில் கைகொடுக்க இனி யாருமில்லை, கூடியிருந்தவர்களும் ஓட தொடங்கி விட்டனர். போர் வெற்றி பேசிய சரத்தும் மண் கவ்வினார். மக்கள் எதிர்பார்த்தது வேறு. அதை தேடி அனுராவை அண்டியிருக்கின்றனர். பாப்போம் அனுரா எப்படி வெட்டியாளப்போகிறாரென.
  2. வயிற்றெரிச்சலால் சம்பந்தமில்லாமல் ஏதோ புலம்புகிறார் அவர், அவருக்கு நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வுமில்லை. விழுந்து போன தன் இனத்தை பார்த்து தோல்வியை எள்ளி நகையாடுபவர் அந்த இனத்துக்கு வேண்டியவருமில்லை. விடுங்கள் அவரை, அவர்பாட்டில் களைத்ததும் ஓய்ந்து விடுவார்.
  3. அனுரவின் வெற்றி உங்கள் கருத்துக்கு எதிராக இருக்கிறதே. அனுரவின் கட்சி வெல்லும் என கடந்த தேர்தல்களில் யாரும் நினைக்கவில்லை. தமிழரசுக்கட்சியிலுள்ள புல்லுருவிகளை களைந்தால் நமக்கு வெற்றி நிட்சயம். சளைக்க மாட்டோம். தமிழர் எல்லோரும் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சிக்கு மட்டுமா வாக்களித்தனர்?
  4. பொது வேட்பாளர் என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.
  5. இவர்கள் அத்தனைபேரும் இனி அனுராவுக்கு தூது அனுப்புவார்களா அல்லது தொலைபேசி எடுத்து நேரடியாக வாழ்த்து சொல்வார்களா?
  6. ஹிஹி..... அமெரிக்காவுக்கு குடியேற்ற விசா ஏற்க விரும்பவில்லைபோலும். இந்த முறை விசேட அறிவிப்பு. கடந்தகால அனுபவத்தினால்.
  7. கண்டிப்பாக இல்லை. மஹிந்த குடும்பம் விசாரணைகளை எதிர்கொள்ளும், தமிழருக்கு கொடுமை செய்ததற்காகவல்ல, பதுக்கிய சொத்துக்களை பறிப்பதற்காக. போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் கண்துடைப்பு விசாரணை செய்து, நடந்தது என்னவென்று காட்ட முயற்சிப்பார். அவர் ஏற்கெனவே கூறி விட்டார், அதாவது போரில் என்ன நடந்தது என அறியவே தமிழர் விரும்புகின்றனர், யாரையும் தண்டிக்க அவர்கள் விரும்பவில்லை, அது எனது வேலையுமில்லை, அதை நீதிமன்றம் கையாளும் என்று உறுதிபட கூறிவிட்டார். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்கிற நிலையில் தமிழர் இப்போ. இந்தியா மூக்கை நுழையா விட்டால் சரி.
  8. தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே பரவாயில்லை என்று நினைத்திருப்பார்களோ என்னவோ? என்ன கந்தையர் தூக்க கலக்கமோ? அனுரா இன்னும் ஜனாதிபதியாகக்கூட பொறுப்பேற்கவில்லை அதற்குள் பாராளுமன்றத்தேர்தல் தேர்தல் பற்றி கவலைப்படுகிறீர்கள். தேர்தலில் நிற்கும் எண்ணம் உண்டோ?
  9. இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா கிடவாது. போர்க்காலத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் தண்டிக்கும் என்று அனுரா சொன்னதை நம்பி விட்டார்கள் போலுள்ளது. அனுராவுக்கும் தமிழருக்கும் சிண்டு முடியிற வேலை. அனுரா தமிழரின் கடந்த கால அழிவுகளை, காயங்களை கணக்கிலும் எடுக்க மாட்டார். காயங்களுக்கு கட்டு போடவோ, அனுதாபம் தெரிவிக்கவும் மாட்டார். தனது அரசியலை எப்படி வளர்ப்பது கொண்டு செல்வது என்பதே அவரது இலக்கு.
  10. போருக்கான அணிகளை அணியும்போது வீரம் பேசக்கூடாது, அவற்றை களையும் போது மற்றவர்கள் அதை பேசுவார்கள். சர்வாதிகாரி என்கிற பெயரை எடுக்காமல் இருந்தால் சரி.
  11. ரணிலை மிதப்படுத்தி பேசியதெல்லாம் பொய் என மக்களுக்கு புரியும் என்பது தெரியாமலேயே அவிழ்த்துவிட்டு காத்திருந்தனர். எந்த வைத்தியராலும் அவரை காப்பாற்ற முடியாது, எந்த மருத்துவமனையிலும் அவருக்கு இடமில்லை. ஏற்கெனவே அவர் ஒரு தனிமரம், அது தெரியாமல் தோப்பாக நினைத்தார், தான் இருந்த மரத்திலிருந்தே சறுக்கி விழுந்து விட்டார். இனி ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மொட்டுக்கட்சி மெல்ல மெல்ல சரியும். நாமல் எக்காலத்திலும் ஜனாதிபதியாக முடியாது!
  12. சுமந்திரனின் குலுமாசு: "இலங்கை வாக்காளர், தேர்தல் மேடைகளில் நான் கொடுத்த சைகையை சரியாக பயன்படுத்தி, எனது கருத்துக்களைப் கேட்ட பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ததாக நான் நம்புகிறேன், அதை நீங்களும் முன்னைய தேர்தலில் அவதானித்திருப்பீர்கள், இது எங்களின் ராஜதந்திரம்." "இதை தாங்கள் கவனத்தில் எடுத்து எனக்கு பதவியளித்தால், அதை நீங்கள் எனக்களிக்கும் கெளரவமாகக் கருதுகிறேன்." கண்டிப்பாக இப்பவே வாழ்த்து என்கிற பெயரில் அழைப்பெடுத்து கோரிக்கை விடுத்து காத்திருப்பார்கள், இனி அனுராவை புகழ்ந்தே பேசுவார்கள், ஆனால் இந்த வௌவால் கூட்டத்தை அனுரா சேர்த்துக்கொண்டால் மற்றவர்களைப்போலவே இவரின் ஆட்சியும் குப்பையாக மாறும். இவரின் கொள்கை மாற்றமடையும், இவருக்கு கிடைத்த இந்த அருமையான வாய்ப்பை இவர் தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படாது என்பதை அவர் அறிவார். ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். பின்னர், எங்களின் கொள்கை சரியானது அதை நிறைவேற்ற மக்கள் எங்களுக்கு ஆணை (சந்தர்ப்பம்) தரவில்லை என்று பின்னாளில் புலம்புவதில் பயனில்லை. சொல்லும் செயலும் ஒன்றானதா என்பதை இவர்களின் அமைச்சரவையிலிருந்து புரிந்து கொள்ளலாம். ராஜா பக்க்ஷக்களுக்கு எதிராக தொடங்கிய அரகலியாவை அடக்கி அதை தன் தோளில் சுமந்து அவர்களை காப்பாற்றியவர் ரணில். அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் பெறுபேறுகள்! அது நாமலின் தவறு.. இவர்கள் வேண்டாமென்றுதானே மக்கள் இவர்களை விரட்டியடித்தாகள், அந்த வெறுப்பு ஆறுமுன், எனக்கு வாக்கு போடுங்கள் என்று வெட்கமில்லாமல் மேடையேறியது யார் தவறு? அந்த இடத்தில் மஹிந்த இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இது அவருக்கு பெருத்த அவமானமாக இருந்திருக்கும். அவர் தப்பித்துக்கொண்டிருந்தார். தமிழரை அழித்த கையோடு, அதை விழாவாக எடுத்து எக்காளம் ஊதிக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம், தப்பித்து துயரை தாங்கமுடியாது தவித்தவர்களிடம் வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்டவரின் புதல்வாராயிற்றே நாமல்! நுணலும் தன் வாயாற் கெடும். இவர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளல்லர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இவர்கள் அரசியலில் இருந்து வெளியேறுவது இவர்களுக்கு நல்லது. இல்லையேல், பாராளுமன்றத்தேர்தலில் தகுந்த பாடம் அளிக்கப்படும். இவர்களின் வழமையான போலி வாக்குறுதிகளும் நாடகங்களும் இனியும் எடுபடாது. இவர்கள் தமிழரை வைத்து நகைச்சுவை செய்திருக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு முட்டாள்தனம். இந்த இனவாத அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும், நாட்டின் பொருளாதாரமுந்தான் ஏப்பமிடப்படுள்ளது எனும் உண்மையை புரிந்து கொண்டுள்ளார்கள். ஏங்கோ! சிங்களத்துக்கு எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு நம்பிக்கையோடு இருந்த மூஞ்சிக்கு என்ன நடந்தது? அந்த மூஞ்சியில் கரியைப்பூசி அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்? இது கூடத் தெரியாதா? சொல்கிறேன் கேளுங்கள்! தமிழர் இனியும் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் இவர்களுக்கு வாக்களிக்கத் தயாரில்லை என்கிற தரப்புக்குள் வரும்! இனவாதம் பேசுவோரை விரட்டியடிக்க தொடங்கியதோடு புதிய கொள்கைக்கு இடம் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அனுரா அதை சரியாக பயன்படுத்தினால் சரி, இல்லையென்றால் அவருக்கும் இதே கதிதான். இந்த நாட்டை கட்டியெழுப்புவது, ஊழலை ஒழிப்பது சாதாரண விடயமல்ல, விடவும் மாட்டார்கள். அவர்களின் சும்மா இருந்து பணம் உழைக்கும் வழி இது. தமது ஊழலையும் சிறை வாழ்வையும் தக்க வைக்க எந்த நிலைக்கும் போவார்கள். எழுபத்தைந்து வருடங்களாக வாக்குபோட்டுப்பழகிய பழக்க தோஷம், செம்மறிகூட்டங்களாக கேள்வி கேட்காமல் தலையாட்டிய கூட்டம், உடனடியாக புது பாதையை தெரிவது கொஞ்சம் சிரமம். ஆனாலும் முதல் தரத்திலேயே மக்கள் ஏற்றுக்கொண்டது பெரும் சாதகமே! இது தொடர்ந்து மக்களோடு பயணித்தால்; வெற்றியடையலாம். நரி, ஆபத்து நேரமெல்லாம் மஹிந்த கொம்பனிக்கு கை கொடுத்து ஒற்றையாட்சி கொள்கையை காப்பாற்றியதன் விளைவு; தன் வாலை இழந்து நிக்குது. இனி இந்த கிழட்டு நரி அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது. அனுரா கட்சிக்கு அரகலியா ஏற்படுத்திக்கொடுத்த அரிய வரப்பிரசாதம். இது கடைசியும் முதலுமானது, இதை இவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் இனவாதிகளையும் அவர்களின் அரசியலையும் முற்றாக ஒழித்து நாட்டை முன்னேற்றலாம். இவர் சரியாக தமிழரை அணுகினால் முதலீடுகளை பெறலாம். இல்லையேல் இந்தக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்த இளைஞரை அவமதிப்பதோடு எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒருபோதும் அரசியல் செய்ய இடமளிக்கப்படாது.
  13. இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது.
  14. தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
  15. மலைப்பாம்பு, தான் கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
  16. அதிலென்ன சந்தேகம்? நல்லாட்சி அமைந்தபோது ஒளிந்திருந்த மஹிந்த குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பியது ரணில், தன்னுடைய பதவிக்காலத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து தண்டிக்காது பாதுகாத்தது ரணில், அநுர வந்தால்; ரணிலுக்கும் ஆப்பு இருக்கு. இன்னும் ஒரு நாளில் தெரிந்து விடும். யார் வந்தாலும் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பது மட்டும் உண்மை.
  17. இதுதான் விஷயம். பணம் இல்லையென்றால் இவருக்கும் வேலை இல்லைத்தானே, கிளம்பிவிட்டார். கிளம்பியவர் குற்றச்சாட்டுடன் கிளம்பியிருக்கிறார். தன் சொந்த உழைப்பில் சேவை செய்பவர் ஏன் இவ்வளவுகாலம் பணம் தீரும் வரை அவர்களோடு ஒட்டியிருந்தார் என்பதையும் விளக்கியிருக்கலாம். அவரை குற்றம் சாட்டுவதற்கு முன் அவர் குற்றச்சாட்டை முந்திக்கொண்டு வைத்துவிட்டார். நம்புவது யார்?
  18. இப்போ ஒரு பண்பு வளருகிறது, எல்லா குற்றங்களையும் தாங்களே செய்வது, பின் அங்கு திருட வழியில்லை, என்கிற வங்குரோத்து நிலை வந்தவுடன், இலகுவாக தங்கள் குற்றங்களை மற்றவர் தலையில் கட்டிவிட்டு தாம் ஏதோ நல்ல மனிதர்போல் அறிக்கை விடுவர். அரசுமுதல் சாதாரண மனிதர் வரை தொடர்கிறது.
  19. ஜனநாயகம், ஜனநாயகம் என்று தொண்டை கிழிய கத்துவார்கள். ஆனால் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பார்கள். கேட்டால்; நாங்கள் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பர். இவர்களாலேயே பல கட்சிகள் உருவாகி மக்களை அங்குமிங்கும் அலைக்கழிக்கிறார்கள். தேர்தல் என்றவுடன், தலைவர்கள், மக்கள் நலன் என்று ஓடோடி வருவார்கள், வாக்குகளை கொள்ளையடித்த கையோடு மக்களை மறந்து, மறைந்து விடுவார்கள். இதுதான் இவர்களின் தலைமைப்பண்பு. மக்களுக்கு என்ன தேவையிருக்கிறது,அவர்களோடு உடனிருக்க வேண்டுமென்பதெல்லாம் அவசியம் என்பதை விட, சிங்களத்துக்கு உடனிருந்து, தோள் கொடுத்து தூக்கி விடுவதே முக்கியம் அவர்களுக்கு.
  20. இவ்வளவு காலமும் ஒத்தோடினவருக்கு இப்போ சடுதியாக அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு. சோழியன் குடுமி சும்மா ஆடாது கண்டியளோ .... பொறுத்திருப்போம்.
  21. ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையாரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக!
  22. தாங்கள் தேர்தலை பகிஷ்கரிப்பது என்றாகிவிட்டது, பின் யார் யாருக்கு வாக்களித்தால் இவருக்கென்ன?ஏன் சஜித்தின் வாக்கு குறைகிறது என அழுகிறார்? அவர் ஒற்றையாட்சி பிரதிநிதி இல்லையா? ஒவ்வொருவரின் கபட நாடகமும் வெளிவருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளையே மாற்றி முடிவை வெளியிடுகிறார்கள், இவர் பகிஷ்கரித்தால்; இவரின் வாக்கு பத்திரமாக வெற்றிடமாக அறிவிக்கப்படுமா?
  23. இது நான் கேள்விப்பட்டது; ரோகண விஜயவீர உயிரோட இருந்தபோது, தேர்தல் காலத்தில் பிரச்சார மேடையில் முழங்கினாராம், தான் தேர்தலில் வென்றால்; இருபத்துநான்கு மணி நேரத்தில் விடுதலைப்புலிகளை தூக்கிலே போடுவேன் என்று. இந்த கட்சியின் கொள்கை இதுவா? வடக்கு கிழக்கை பிரிக்க நீதிமன்றம் சென்றது யார்? இத்தனை கொடுமைகளும் தமிழருக்கு எதிராக நடந்த போது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? ஏன் கேள்வி கேட்கவில்லை? நாளைக்கு இவர்கள் அரசியல் தலைமை ஏற்றால்; தாவித்திரியும் கூட்டமெல்லாம் இங்குதானே தங்கும். இவையெல்லாம் தேர்தல் பேச்சுக்கள், முடிந்தவுடன் தாங்கள் என்ன பேசினோம் என்பதையே மறந்து விடுவார்கள். நாங்கள் யாரையும் நம்பத்தயாரில்லை, இப்படிப்பட்ட பேச்சுக்களை கேட்டுகேட்டு நம்பி ஏமாந்து விட்டோம், நம்ப வைத்து ஏமாற்றினீர்கள். இனிமேல் இவர்களின் செயல் தான் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும், சொன்னதை செயலில் காட்டுங்கள். எம்மை குற்றம் சொல்ல முடியாது, சொன்னதை நிறைவேற்ற தவறியமையே காரணம். யார் வென்றாலும், தமிழரின் மனதை வெல்ல முடியுமா, அவர்களின் காயங்களுக்கு கட்டுப்போட முடியுமா அவர்களால்? அதுதான் நமது கேள்வி. கடந்த காலத்தில் எமக்கு ஆதரவோ, அனுதாபமோ காட்டவில்லையே இவர்.
  24. ஒற்றையாட்சிக்கு வாக்களிப்பதென்றால்; ஏதோ ஒரு சிங்களகட்சிக்கு தானே வாக்களிப்பது? இங்கு, இன்னும் ஒரு இனமுண்டு, அவர்களுக்கும் அரசியல் அதிகாரம், கனவு, உரிமை, சுதந்திரம் உண்டு, இதுவரை அது ஏற்றுகொள்ளப்ப்டாதத்தினாலேயே இன்று அதற்கான தேவையேற்படுள்ளது எனக்காட்டுவதே பொதுவேட்பாளரின் தோற்றம். இங்க ஒற்றையாட்சி எங்கே வந்தது? எங்களையும் சமஉரிமையாய் நடந்து இல்லையில் உனக்கு எதற்கு எங்களின் வாக்கு என்பதே இங்கு உணர்த்தப்படுகிறது. ஆளாளுக்கு ஏதோ விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், மக்களின் தேவையில், இழப்பில் உடனிருக்க, ஆறுதலளிக்க, கேட்க யாருமில்லை. தேர்தல் வந்தால்; கனைக்க வந்துவிடுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.