Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by satan

  1. போர் வெற்றியை கொண்டாடுவதை விட்டு வெட்கப்படுங்கள். கொலைவெறியாடிய ராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு அளிப்பதை கண்டியுங்கள். உங்களாலேயே எங்களது இழப்புகளுக்கும், அடிமை வாழ்வுக்கும் விடுதலை கிடைக்க வேண்டும், செய்வீர்கள். வீரக்கதைகளையும் பொய்க்கதைகளையும் கேட்டு மகிழ்ந்த நீங்கள் உண்மையை கண்டு வெட்கப்படுங்கள். அங்கே நடந்தது போரல்ல மனிதப்படுகொலை!
  2. அவசரப்படாதேங்கோ! இவர்கள் ஒருவரும் அரிச்சந்திரன் பக்கத்து வீட்டுக்காரரல்ல. எந்த நேரமும் அறிக்கை மாறும். போரே நடைபெறவில்லை நடந்ததெல்லாம் மனித மீட்பு என்கிறார்கள். அதே நேரம் போரென்றால் மனித இழப்புகள் இருக்கும் என்கிறார்கள். எழுபத்தையாயிரத்துக்கும் குறைவான மக்களே இருந்தனர் என்கின்றனர், அதே நேரம் இரண்டு லட்ஷத்து தொண்ணூற்று ஐந்தாயிரம் தமிழரை பாதுகாத்தே இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்கின்றனர், மூன்று லட்ஷம் தமிழரை பணயக்கைதிகளாக புலிகள் வைத்திருந்தனர் என்கின்றனர். இவையெல்லாம் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள். ம்ம் ... சும்மா வேலியில போன ஓணானை பிடிச்சு வேட்டிக்குள்ள விட்டிட்டு குத்துது குடையுது என்று அலறுங்கோ. கள்ளனைதான் காவலுக்கு கூப்பிடுங்கோ. உள்ளதை எடுத்துப்போட்டு தமக்கு சார்பானதை புதைத்து விட்டு புது கதைகளும் தடைகளும் ஏற்படுத்த இலகுவாக இருக்கும்.
  3. இவரின் நாக்கில் சனியன் நடனமாடுகிறார். போராட மறுத்த, தப்பியோட முயற்சித்த இராணுவத்தினரை தாமே போட்டுத்தள்ளிய, புலிகளால் ஒப்படைக்கப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை எரித்துவிட்டு புலிகளின் மேலும், தப்பியோடிய இராணுவத்தினர் என்றும் அறிவித்து தப்பியவர்கள், இப்போ தங்கள் வாயாலேயே உளறித்தள்ளிவிட்டனர். இனி அந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும். புத்திசாலியென்கிற நினைப்பு! "நுணலும் தன வாயால் கெடும்." என்பதுபோல் வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டுவிட்டாரே. எல்லாவற்றையும் புலிகளின் தலையில் கட்டியடித்து தமிழரின் மேல் குரோதத்தை வளர்த்து தப்பிக்கொண்டதுபோல் தப்பமுடியாது. ஆப்பிழுத்த குரங்குபோல இனி இழுத்துப் பாக்கட்டுமேன். முடிந்தால் முகநூலில் சிங்களத்தில் உரையாடக்கூடியவர்கள் இவரின் இந்த செவ்வியை இணைத்து விடுங்கள், இராணுவ முகாமில் எப்படி இராணுவத்தினரின் உடல்கள் புதைக்கப்பட்டது? ஏன் குடும்பத்தினருக்கு அறிவிக்கவோ, வழங்கவோ இல்லையென கேள்வி எழுப்பிவிடுங்கள்!
  4. செய்த தவறை ஏற்று, மனம்வருந்தி, மன்னிப்பு கேட்டு, திருந்திக்கொள்வதற்கு பதிலாக முட்டாள்தனமான பதில் சொல்லி தப்பிக்கும் முயற்சி. சீருடைகளையும் சின்னங்களையும் அணிவதால் மட்டும் போதாது அதற்கேற்ற அறிவுத்திறனும் வேண்டும். மனிதனை தவிர டைனோசரும் ஆடை அணிந்தது என்று புதிய அத்தியாயம் மகா வம்சத்தில் எழுதுங்கள், தொல்பொருள் அகழ்வை நிறுத்தி மனித எச்சங்களை தோண்டுங்கள், விகாரை கட்டுமானங்களை நிறுத்தி கல்லறைகளை எழுப்பி கண்ணீர் விட்டு பாவத்தை கழுவுங்கள். இதற்கு காரணமானவர்களும் தங்கள் பிள்ளைகளை, மனைவியரை, கணவனை இழந்து அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாமல் தவிப்பார்கள். நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டோம் என்று கொக்கரித்தவர்கள் அதற்காக வெட்கப்படட்டும், அவர்களை போற்றியவர்கள் அவர்கள் முகத்தில் காறி உமிழட்டும், வெற்றிக்கோபுரங்கள் உடைத்தெறியப்படட்டும், வரலாறு இந்த கொடூரத்தை பறை சாற்றட்டும். இன்னும் எத்தனையோ வெளிவந்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கட்டும். எல்லாம் தமக்குள் என்று நிலைதெரியாமல் ஆடியவர்கள் தரையில் விழுந்து மிதிபடட்டும். ஐ ,நா. தேவையில்லை, மனித உரிமைகள் பேசுவோர் பேசவில்லை, காலம் கேள்வி கேட்க்கும். ஆட்டம் முடிந்தது பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்குகிறது.
  5. சிறியர், கந்தர்மடம் என்று உங்களையும் சேர்த்து சொல்கிறார். நீங்கள் இருபாலை என்கிறீர்கள், எல்லாம் குழப்பமாக இருக்கிறது. குண்டு வெடித்த பிரதேசத்திலதானம் காணி வாங்குவார்களாம், விலை அப்பிடி. பொறுத்திருங்கள் இருபாலையில குண்டுவெடிக்கட்டும்.
  6. யானையின் பெயரை கவனித்தீர்களோ? அதனாற்தான் கவனிக்காமல் விட்டு துன்புறுத்தினார்களோ? பௌத்த புண்ணியம் நாட்டில் தழைத்தோங்கும் லட்ஷணத்தின் சான்று விகாரைக்குள் இருந்து வெளிப்படுகிறது.
  7. ஏன் சிறியர்... முன்பொருதடவை, கோண்டாவிலில் தொலைபேசி திருட்டு நடந்தபோது நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டமழைத்தாக நினைவு. இப்போ கந்தர்மடம் என்கிறீர்கள், இரண்டும் ஓரிடமா, அல்லது எங்கும் நிலம் வாங்கி விட்டிருக்கிறீர்களா, ஏது உங்களிடம்? சும்மா தமாஸுக்கு! ம்ம்.... தவிச்ச முயல் அடிக்கலாம்! இப்ப இல்லையாம். இங்கு அமளி முடிய இன்னோர் இடத்தில் குண்டு வெடிக்கும், அப்போ; அங்கு காணி வீடு இருப்பவர்கள் விற்க துடிப்பார்கள். இதற்காகவே குண்டு வெடிக்கும் புலம்பெயர் காணி வீடுகளை இலக்கு வைத்து. வாள் வெட்டு சலித்து விட்டதோ அல்லது முன்னேற்றமோ தெரியவில்லையே? நாளாந்தம் ஏமாற்று, களவு, கொலை. எப்படி மாறி எதிரியின் திட்டத்திற்கு வலுச்சேர்க்கிறோம். இழப்பை மறந்து, தேசியத்தை மறந்து, நாளாந்த உயிர் வாழலுக்காக போராட வேண்டியுள்ளது. நம்மை நாமே அழித்துக்கொள்ளப்போகிறோம்!
  8. மரபணுப்பரிசோதனையில் வேறு விதமாக இறந்தார், யார் செய்தார், என்று காட்டுமோ? அவரே அன்ரனா வயரை கொண்டு தன்னைத்தானே இறுக்கி தற்கொலை செய்தார் என்று கண்டுபிடித்தார்கள். இனி நடத்தப்படும் சோதனை யாரை குறிவைத்தோ?
  9. இலங்கையில் சட்டம் அப்படித்தான்! கேள்வியெல்லாம் கேக்கப்டாது. பாதிரியார் ஜிம் பிறவுண் காணாமல் ஆக்கப்பட்டபோதும், பல போராட்டங்களின் பின் ஒரு சடலம் கடலில் கல்லோடு கட்டப்பட நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அப்போ அந்தச்சடலம் பாதிரியாருடையதுதானா என்று உறுதிப்படுத்துவதற்காக அவரின் தாயாரை கொழுப்புக்கு அழைத்து பரிசோதனை செய்ததாக அறிந்தேன். அதாவது இழப்பில் வாடுவோரை, இழுத்து அலைக்கழித்து தங்களது திறமையின்மையை கொடூரங்களை மறைப்பதற்காக.
  10. எப்படி சிரிக்காமல், இலங்கையின் நீதித்துறையை வியக்காமல், சர்வசாதாரணமாக இந்தக்கேள்வியை உங்களால் கேட்க முடிந்தது? அதாவது இவரது சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது, தினேஷின் தாயாரின் மரபணுவை சோதித்து, தினேஷ் அவரின் பிள்ளைதானா என உறுதிப்படுத்தப்போகிறார்கள் என நினைக்கிறன். அவர் எப்படி இறந்தார் என்று ஏற்கெனவே உறுதிப்படுத்தி விட்டார்கள். யாரால்? ஏன்? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை, ஆகவே தினேஷ் அந்த தாயின் மகன் தான் என்று உறுதிப்படுத்த, இவ்வளவு காலம், ஆலாபனை. இப்படித்தான் விசாரணை திருப்பப்படுகிறது பொலிஸாருக்கு பாராட்டு வழங்க! இந்தக்கேள்வியை நீங்கள் மட்டுந்தான் கேட்டிருக்கிறீர்கள், நீதிபதிகூட கேட்கவில்லை, தலையை ஆட்டிவிட்டார். தமிழன் இறந்தாலும், மண்ணுக்குள்ளும் நிம்மதியாக உறங்க முடியாது. கிளறி எடுத்து நிஞாயம் கேடபார்கள். நீ யார், எப்படிப்பிறந்தாய், ஏன் பிறந்தாயென? இதுதான் இந்த நாட்டின் சட்டம், தமிழனின் விதி! .
  11. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், உடல்நிலையில் வெளியே சொல்லமுடியாத, சொல்ல யாருமற்ற பிரச்சனைகள், நெருக்கடிகள் காரணமாக இருக்கலாம். குற்ற உணர்விலிருந்து மீண்டு வர காலம் எடுக்கும். உடற்காயம் கண்ணுக்கு தெரிவதால் மருந்திட்டு குணப்படுத்தலாம், மனக்காயம் அப்படிப்பட்டதல்ல. ஒருவேளை நீங்கள் கதைக்காமல் இருப்பதும் அவரை தண்டிக்கக்கூடும். இவ்வளவும் செய்த நீங்கள் அவரை நேர்நேரே சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் எல்லோரும் தவறு விடுவது இயல்பு, இது ஒரு விபத்து என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் மன்னிப்பை அவர் உணரும்போது அது குணமடையும். அது அவர் மேல் நீங்கள் காட்டும் பரிவு, அவன்மேல் உங்களுக்கு கோபமில்லை என்பதை எடுத்துக்காட்டும் செயல் போதுமானது. கொஞ்ச கால அவகாசம் கொடுத்துப்பாருங்கள். நீங்கள் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அவருக்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டீர்கள் அது பாராட்டத்தக்கது. ஆகவே விடுங்கள் ஒருநாள் வருவார், தனது வருத்தத்தை தெரிவிப்பார். இல்லையேல் அவருடன் வேலை செய்ய நேரிட்டால் கூடுதல் கவனம் எடுங்கள்.
  12. ஒரு வைர வியாபாரியின் மகன் தன்தந்தையிடம் வந்து கேட்டானாம், அப்பா நான் வாழ்க்கையின் பெறுமதியை எப்படி அளப்பது? எப்படி அதற்கேற்ப என் வருங்காலத்தை அமைத்துக்கொள்வது என்று கேட்டானாம். அதற்கு அப்பா, நாளைக்கு வா நான் சொல்லித்தருகிறேன் என்றாராம். அடுத்தநாள் மகன் வந்தபோது அவன் கையில் ஒருவித கல்லைக்கொடுத்து இதை நீ உன்கையில், மற்றவரின் கண்ணில் படும்படி வைத்துக்கொண்டு குப்பை கொட்டும் இடத்தில் காலையிலிருந்து மாலைவரை நில். என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். மாலையில் வீடு வந்தமகன், அந்தக்கல்லை யாரும் பெரிதாக எண்ணவில்லை, ஏதோ வந்து பார்த்துவிட்டுப்போய் விட்டார்கள் என்றானாம். அடுத்தநாள் இதை பல்பொருள் அங்காடியில் வைத்துக்கொண்டு நில் என்றாராம், மாலையில் வந்த மகன் அதை சிலர் வந்து பார்த்தார்கள் சில்லறை விலை கேட்டார்கள் என்றானாம். மறுநாள் படித்தவர்கள் கூடும் இடமான நூல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தாராம், வந்த மகன் சொன்னாராம், யாரும் பெரிதாக அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, வந்து பார்த்தார்கள் அது என்ன விலை என்று கேட்டார்கள் போய் விட்டார்கள் என்றானாம். இன்னொருநாள் மிகுந்த ஆடம்பரமான செல்வர்கள் கூடுமிடத்தில் வைத்துக்கொண்டு நிற்கும்படி கூறினாராம். மகனுக்கு ஒரே ஆச்சரியம், என்னதான் சொல்லித்தருகிறார், கடைசியாக இதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணிக்கொண்டு போய் நின்றாராம். அவன் அங்கே நின்ற போது ஒரு பணக்காரர் அலங்கார உடையுடன் பெரிய காரில் வந்து இறங்கினாராம், இவனது கையில் கிடந்த கல்லைக்கண்டதும் அவனருகில் சென்று என்ன இங்கே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்துச்சென்று விலையுயர்ந்த ஆசனத்தில் அமரவைத்து உபசரித்து அவனது கல்லின் பெருமையையும் விலை மதிப்பையும் கூறினாராம். அவர் யாருமல்ல, வைர வியாபாரி. அதே போலவே நாம் மற்றவர்மேல் காட்டும் மரியாதை, அன்பு, இரக்கம் போன்றவையும். அதை மதிக்கத் தெரிந்தவர்களுக்கே அதன் பெருமை புரியும். நீங்கள் அவரின் குடும்ப பின்னணி, எதிர்காலம், வயதை எண்ணி மன்னித்திருந்தாலும் அவர் அதை உங்களில் பிழை இருந்தபடியாலேயே அதை செய்தீர்கள் என தவறாக நினைத்திருக்கலாம். இருந்தாலும்; உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி என்று ஒரு வார்த்தை சொல்ல தகுதியற்றவரோ என எண்ணத்தோன்றுகிறது. உங்களில்தான் பிழை என கருதுவாராகில் அவர் மீண்டும் தவறு செய்ய வாய்ப்புண்டு, அப்போ யாரும் உங்களைப்போல் பெருந்தன்மையாக நடந்துகொள்ளப்போவதில்லை, ஏற்கெனவே சிலர் இந்த விடயத்தில் அவரைப்பற்றி புரிந்திருப்பார்கள், அவரது செயலுக்கான குறிப்பும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், அப்போ அவர் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வதுடன் அதற்க்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டி வரலாம். போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்ட போது, அவருக்கு தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக எப்படி நடக்கவேண்டுமோ அப்படி மரியாதை செலுத்தியிருப்பார். ஆனால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரை மன்னிப்பு கேட்க செய்யாமல் காட்டிய பெருந்தன்மையை அவர் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கலாம். எது என்னவாக இருந்தாலும் பெரியவா பெரியவாள் தான்!
  13. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை, தொடருங்கள்! மன்னிப்பு கேட்பது பெருந்தன்மை, மன்னிப்பது மகா மகா பெருந்தன்மை. சிலர் தம் தவறை மற்றவர்மேல் போட்டு தப்பித்துவிடுவார் இது பெரும்பாலும் பலரில் காணலாம் தற்போது, அல்லது அதற்கொரு விளக்கம் கொடுப்பார். இன்னும் சிலர் குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் தம்மையே வருத்திக்கொண்டும், தவித்துக்கொண்டும் எப்படி அதிலிருந்து விடுபடுவது என்று தெரியாமலும் ஒதுங்கியிருப்பர். சிலநேரம் அது மிகவும் இலகுவானது ஆனால் பயம் விடாது அல்லது இப்படி ஒரு வழி இருக்கிறது என்பது புரியாமல் அவர்கள் பழிவாங்கி விடுவார்கள், மன்னிக்க மாட்டார்கள் என்கிற உணர்வு. சிலநேரம் ஈகோ. ஒவ்வொருவரின் மனநிலை, ஏற்றுக்கொள்ளும் தன்மையிலுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.
  14. மரணம், சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்டிருந்தால் உடனே உண்மை மரண விசாரணையில் வெளிவந்திருக்கும். கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்ப்பட மரணம் என்றே அறிக்கை வெளிவந்தது. சுத்துமாத்து பண்ணி, விசாரணையை திசைதிருப்பி, பேரம்பேசி, வெள்ளையை கறுப்பாக்கி, உண்மை திரிய கால அவகாசம் வேண்டாமோ? பேரம் இரண்டு மாதத்தில் படிந்து விட்டதென்றால் தொகையை கற்பனை பண்ணிப்பாருங்கள்.
  15. இவர்களை பெரிய புத்திசாலிகள் என்றா நினைத்துக்கொண்டிருந்தீர்கள்? அவர்களின் விசாரணை போன போக்கை பாக்கத்தெரியவில்லை அவர்களின் திறமை? நாட்டில் கோடீஸ்வரர் கொலை தொடர்ந்து வரும்போலுள்ளதே! முன்பு தமிழர், இப்போ பாகுபாடில்லாத கோடீஸ்வரருக்கு வந்த சோதனைக்காலம்.
  16. தினேஷ் நடத்திய கணக்காய்வு நிறுவனம் பதிவு செய்யப்பட்டதா? அவர் வைத்திருந்த பணத்திற்கு வருமானவரி செலுத்தியிருக்கிறாரா என்று விசாரணை நடக்குதாம். அவரைகொலைசெய்யப்பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கேபிள் அவர்கள் வீட்டில் கண்டு பிடிக்கப்படவில்லையாம். ஒருவேளை வருமானவரித்துறை இந்த கொலையை செய்திருக்குமோ? அப்பாடா! இனி கொஞ்சம் நிம்மதியாய் உலாவலாம் மனுஷர்.
  17. எதுக்கு இந்தக்கொலை வெறி? தடுமாறினவர்களுக்கு துப்புக்கொடுத்தது தவறாய் போச்சுது. நாங்கள் துப்புக்கொடுத்த படியாற்தானே விசாரணை சரியான ஒருவழிக்கு திரும்பியிருக்கு. இலங்கையில் எத்தனை மெலிந்த உயரமான மனிதர்கள் இருக்கிறார்கள்? அதுவும் தற்போதைய பொருளாதார நிலையில் பெரும்பாலானோர் அந்த நிலைக்கு வந்துவிட்டார்கள், யாரை என்று கண்டுபிடிப்பார்கள்? ஆமா! சன்மானம் வாங்க கூட்டுத்தேவை, காட்டிக்கொடுக்கிறதென்றா சாத்தான் தான். நல்ல கூட்டாளிகள்! உங்களது உயரம் எல்லாம் நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுத்துவிட்டு, இப்போ சாத்தானை மாட்டிவிடுகிற வேலையெல்லாம் வேலைக்காகாது. நீங்கள் பதிந்த உயரத்தை கையில வைச்சுக்கொண்டுதானாம் சந்தேக நபரை தேடுகிறார்களாம். இலங்கை எம்பசி பக்கம் போய்விடாதீர்கள்.
  18. நெடுநாள் பகையாய் இருக்கும்போல! ஆரம்ப செய்திகளில் மூன்று மணி என்று வாசித்ததுபோல் உள்ளதே
  19. அவர்கள் இப்போது ஒருவரை இவர்தான் கொலைகாரர் எனத் தெரிவு செய்திருப்பார்கள், சுட்டிக்காட்டுவதற்கு அவர்வரை விசாரணை வரும்வரை புலுடா விட்டு சோடிக்கிறார்கள். அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது இவர்கள் சொல்கிற கோணத்தைப்பாத்தா!
  20. போற இடமெல்லாம் சாத்தானையும் கட்டியிழுக்கிறதென்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால், நான் என்ன செய்யிறது? இழுபடவேண்டியான். ஒருவரின் கருத்து மேல் நம்பிக்கை வைத்து பதில் கருத்து எழுதியது தப்பா மை லோர்ட்? அவரின் பிற்குறிப்பை பாக்கத் தவறியது என் தப்புத்தான். அவ்வளவு அந்தக் கருத்து தந்த உணர்ச்சி எனது அறிவை மறைத்து விட்டது. அந்தச் செய்தி என் வாழ்வை புரட்டிபோட்ட நாட்டைகுறித்தது. எனக்கு இது பற்றி நிறைய ஊகங்கள் எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தச் செய்தியை பாத்ததும் பொத்திக்கொண்டு விட்டேன். ஆனாலும் ஒரு கேள்வி, ஏன் கோஸான்?, இந்த தினேஷ் தற்கொலை செய்வது என்று முடிவெடுத்திருந்தால்; அதை இந்தச் சாவுக்கு யாரும் காரணமில்லை எனது கடன், அல்லது பிரையன் தோமஸ் அல்லது நான்தான் காரணம் என்று எழுதிப்போட்டு வீட்டில் அமைதியான ஒரு சாவைத் தெரித்தெடுத்திருக்கலாமே, எதுக்கு ..... இப்பிடி ....? தினேஷ் அங்காலை போனபின்தான் பிரையன் தோமஷின் நினைவு வந்திருக்கும் அவருக்கு, பின் செய்தியை அனுப்பியிருப்பார். தினேஷ் தன்ர கையை கட்டிப்போட்டு கழுத்தை இறுக்கியிருப்பாரா? அல்லது கழுத்தை இறுக்கிப்போட்டு கையை கட்டியிருப்பாரா? எது முதலில் நடந்திருக்கும்? ஒருவேளை ..... இப்பிடியிருக்குமோ ....? சீச்.....சீ அப்பிடியிருக்காது. தினேஷின் சாவு ஈடு செய்ய முடியாதது, தடுத்திருக்க கூடியது. அதைவைத்து கருத்து எழுதுவது எனது நோக்கமல்ல, ஆனால் இந்த போலீசார் விடுகிற நகைச்சுவை தாங்க முடியவில்லை. ஏதோ தாங்கள் ஜேம்ஸ் பாண்ட் என்கிற நினைப்பில் கருத்துக்களை வெளியிடுவதும் பிறகு மறுப்பதும் எரிச்சலை கிளப்புது. சாத்தியமான வழிகளில் விசாரிக்கிறார்களா? நமக்கெதுக்கு வம்பு தினெஸே கடைசியாக இப்படியொரு நல்ல மகளை பெற்றுத்தந்ததற்கு நன்றியென சிறப்புச்சான்றிதழ் கொடுத்துச் சென்ற பிறகு? இல்லை ...! இந்த சான்றிதழையாவது சாவதற்கு முன் கொடுத்தாரா? என்கிற எனது இறுதிகேள்வியோடு முடிப்போம். உங்களுக்கும் இப்பிடி இடக்கு முடக்காய் ஏதாவது கேள்வி எழுந்தால் தயங்காமல் எழுதுங்கள் கோஷான். எனக்கும் பேச்சுத்துணைக்கு ..... இரண்டுபேரும் சேர்ந்து துலக்கிடுவோம். சிறியர் ரொம்பப் பயப்படுறார், அவரை விட்டுவிடுவோம். பாவம் அவர்!
  21. அட... சிறியர் ஒரு துணிஞ்ச கட்டை என்றல்லவா இவ்வளவுநாளும் நான் நினைத்திருந்தேன்!
  22. நான் வரேல்லை உந்த சன்மானத்திற்கு. வேண்டுமென்றால் சிறியரை கேட்டுப்பாருங்கள். இருந்தாலும் சொல்லுறேன் 4ம் மாடிக்கு சன்மானம் கேட்டுப்போனால்; வெகு விரைவில் தினேஷிடமே யார் கொலையாளிகள் என்று நேரடியாக கேட்டு அறிந்து விடலாம்.
  23. கோஸான், சிறி! சந்தேகமேயில்லை, இலங்கை போலீஸ் குற்றபுலனாய்வாளர் எங்கள் செய்திகளை வாசிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. சந்தேகத்துக்கிடமான ஒருவரை பின்தொடர்கிறது குற்றப்புலனாய்வு, விசாரணை தீர்க்கமான கட்டத்தை நெருங்கி விட்டது என்று அறிக்கை விட்டவர்கள் மீண்டும் விசாரணை அவரின் மனைவியின் பக்கம் திரும்பியுள்ளது. நாங்கள் கொடுத்த துப்பு வேலை செய்கிறது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.