Everything posted by satan
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
அவ்வளவும் எனக்குள்ளே கனன்று கொண்டிருக்கும் வெறுப்புத்தீ, சின்ன பொறி பட்டாலே பற்றி எரியும் நிலையில், கையாலாகாத்தனம், நப்பாசை என்றுஞ் சொல்லலாம்.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
நன்றி சார் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஐயா! யான் தவறொன்றும் இழைத்திலேன், சொன்னவர் மேல் அதீத நம்பிக்கை கொண்டவன் நான். அதிலும் இன்றைய நாட்டின் நிலை கருதியும் அதனால் இந்த முட்டாள்கள் தினம் நினைவுக்கு வரவில்லை, எதிர்காலத்தில் இந்நாளை சிறியர் நினைவாக வைத்திருப்பேன். சிரிப்பேன், பகிர்வேன். மகன் பிரித்தானிய பிரஜையை செய்துள்ளாராம், இவரோ அமெரிக்க பிரஜை! இவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நாட்டுப்பற்று பற்றி இப்போ புலம்பி என்ன பலன்? அரசியல் வங்குரோத்து ஆகிவிடும் என்பதால் இரகசியமாக செய்கிறார்கள் போலுள்ளது.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ஒரேயடியாக பதவிப்பிரமாணம் செய்ய வருவதற்காகத்தான் மோடி இலங்கை விஜஜத்தை பின்போட்டாரோ? நாடே நாறப்போகுது!
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
வந்தே விட்டது.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
ராஜீவ் காந்திக்கு பிடரியில போட்ட கோபத்தையும் வைத்து சாத்துவான். இந்தியா, இலங்கை பட்ட கடன் பத்திரத்தை நீட்ட கோத்தா எந்தப்பக்கம் போவார்? இப்ப பிக்குகளும் சேர்ந்து சாத்தப்போகுதுகள். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகரவும் சேர்ந்து திட்டுறார். நான் சொல்லேல .... ராஜபக்சாக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அவர்களை தலைமேல் ஏற்றி கொண்டாடி தலைகால் தெரியாமல் ஆடவைத்த கூட்டம், கலைத்து கலைத்து தாக்குது. அந்த முட்டாளுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இல்லையென்றால்; உள்நாட்டு கலவரத்தையடக்க கூட்டம் கூட்டமாக இராணுவ விமானங்களும், பெருந்தொகை இராணுவமும் கூப்பிட்டவுடன் கேட்டுகேள்வியில்லாமல் வந்து இறங்குவினமே? அவையும் ஆயத்தமாகத்தான் சந்தர்பத்துக்காய் காத்திருந்திருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறன்.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
அவர்களின் கையாலாகாத்தனத்தினாலேயே இவர்கள் வரவழைக்கப்பட்டார்கள் இனி இந்திய இராணுவம்; புலிகளை அழிக்க முடியாது என்று எல்லோரும் நம்பிய போது அவர்களை அடக்கிய இலங்கை இராணுவத்தை நாங்கள் அடக்கினோம் என்று தங்களை புகழ்ந்து கொள்வார்கள். சீனனை தடுக்க இதுதான் தருணம் என்று இந்தியா போர் இல்லாமல் வந்து புகுந்து கொண்டது. சிங்கள மக்கள் வருந்தி வினையை வேண்டினார்கள், வந்த வினையோ வலிய வேதனையை வருவித்துக்கொண்டது. நல்லது! பங்காளிகள் அடிபட்டு சாக, இலங்கை கடன் கொடுக்க வேண்டுமேயென்று முழிக்கத் தேவையில்லை. இலங்கை ஒரு கல்லில் பல மாங்காய்கள் என்கிற திட்டத்தோடதான் இந்திய இராணுவத்தை அழைத்திருக்கு. கதையோட கதை, பஷிலின் மகள் இந்திய றோ தலைவரின் மகனைத்தான் திருமணம் செய்துள்ளாராமே! கேள்விப்பட்டனீங்களோ?
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
போர்க்குற்ற விசாரணையை மேற்பார்வை செய்ய, அல்லது நல்லெண்ண செயற்படுகளை கண்காணிக்க ஓரிருவர் வந்தாலே நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முக்கினவை, அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் விட்டவை, இந்தியா தமிழருக்கு ஈழம் பெற்றுக்கொடுத்துவிடும் என்று அப்பாவி சிங்களவர் பயப்படுகிறார்கள் என்று இங்க கூட சிலர் மூக்காலை அழுதவை. இப்ப என்னடாவென்றால் ஒரு இரவில் ஆறாயிரம் இராணுவம், இன்னும் போர்க்கப்பல்கள் விரைந்து வந்துகொண்டிருக்காம். நாட்டில் என்ன நடக்கிறது? தங்கள் பிழைகளை மறைக்க உடனே போரை ஆரம்பிக்கிறது. சிங்கள மக்கள் உணரும் காலமிது. இந்த நன்னாளுக்காவே நான் காத்திருந்தேன், இவ்வளவு விரைவாக வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இனவாதம் பேசி வாக்கு கேட்ப்பவர்களை செருப்பாலடித்து வீட்டுக்கனுப்பவேண்டும்! தங்கள் சுகபோகத்துக்காக மக்களை ஏமாற்றி, உசுப்பேற்றி வாக்கு வாங்கி, கதிரை ஏறிய பின் அந்த மக்களை நடுவீதியில் அலையவிட்டு, அதை அடக்குவதற்கு அயல்நாட்டு இராணுவம் வருவிப்பு. இந்த முட்டாளுகள் கூப்பிட்ட உடனே அவையும் தாரை தம்பட்டையோடே வருகினமாம், எல்லாம் பழக்கதோஷம். அந்த முட்டாளுக்கு அறிவு வேண்டாம்? சர்வதேசமே விடுதலைப்புலிகளை உங்களால் அழிக்க முடியாது என்று சொன்னபோதும் எமது இராணுவம் அவர்களை இலகுவாக வெற்றிகண்டார்கள் என்று வருடாவருடம் விழா எடுத்து கொண்டாட, சொந்த இன மக்களை அடக்க ஏன் எங்களை அழைக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்? தன் இராணுவத்தையும், தன்னையும் பாதுகாத்து இந்தியாவை சிங்கள இனவாதப்போரில் மாட்டிவிட்டு தான் தப்பும் நோக்கமாக இருக்கலாம், இந்தியா தானாக வராமல் இதே சாட்டோடு இங்கு வந்து குந்துற நோக்கமாக இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனால் சேர்ந்து அழித்தவர்கள் சேர்ந்தே அனுபவிக்கவும் வேண்டும் என்று விதி நினைத்ததோ யார் கண்டா? முள்ளிவாய்க்கால் போரில் என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களும் உணரவேண்டும், தமது அரசின், இராணுவத்தின் யோக்கியதை தெரிய வேண்டும். வாக்கு போட்ட எங்களை அடக்க அயல் நாட்டு இராணுவத்தை அழைக்கும் இவர்கள், பாதைகளை அடைத்து எங்களை எப்படி சித்திரவதை செய்துஇருக்கும் என்பதை யோசித்து பார்க்கட்டும். சணல் நான்கின் படம் இருந்தால் சிங்களவரின் முகநூலில் இணைத்து விடுங்கள் பார்த்து உணரட்டும்.