Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Maruthankerny

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Maruthankerny

  1. இவை Public Offence இதற்கு இங்கும் தண்டனை உண்டு நான் கூறுவது படம் வீடியோ எடுப்பது பற்றியது நான் சில வீடியோ பார்த்து இருக்கிறேன் போலீஸ் FBI ஏஜெண்ட்ஸ் உடன் கூட சண்டைக்கு போவார்கள். அவர்கள் நிஜாயம் நான் பப்ளிக் ஏரியாவில் நிற்கிறேன் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று வாதம் செய்வார்கள். போலீஸ் கூட ஒன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டு நிற்பார்கள்
  2. ஹாங்காங் ஐ பின்புலமாக கொண்ட Aitken Spence Ltd இந்த நிறுவனம் விமானங்களை ரீசைக்கிள் (recycle) செய்யப்போவதாகவும் பெருமளவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் முன்பு செய்தி வாசித்தேன். தெற்காசியாவிலேயே பெரிய விமானம் திருத்தும் இடமாக இதை மற்ற இருப்பதாகவும் இருந்தது. இதில் சிறு தொழிவாய்ப்பு நன்மை இருப்பினும் நீண்ட கால நோக்கில் தேவையற்ற உதிரிகளை குப்பையாக போட்டு விட்டு சென்று விட கூடிய தீமையும் உண்டு. இரத்மனலையில் ஏற்கனவே ஐரோ ஸ்பெஷ இன்ஜினியரிங் ( Aero Space Engineering) பிரிவு இருக்கிறது என்று எண்ணுகிறேன் அதை என்னும் மேம்படுத்தி அதிகமான மாணவர்களை உள்ளவாங்கி மேம்படுத்தி .... முற்றுமுழுதாக அந்த குறித்த கொம்பனியின் தனியார் மயமில்லாது இலங்கை அரசும் இணைந்து (Joint Venture) நடாத்தும் ஒரு முயற்சியாக இருந்து திறம்பட செய்வார்கள் ஆனால். பெருத்த லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும் சாத்தியம் நிறையவே உண்டு. பல ஐரோப்பிய அமெரிக்க விமான நிறுவனகளே அங்கு தமது விமானங்களை திருத்துவதற்கு செல்வார்கள்.
  3. இது சரியான தகவல்தானா? இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை பப்ளிக் ஏரியாவில் நீங்கள் வீடியோ/ படங்கள் எடுக்கலாம்.... அது எத்தனையோ பேர்களின் தனி வாழ்வை கெடுகிறது. பெரும் பணக்காரர்கள் சினிமா அரசியல் பிரமுகர்கள் கூட (குறிப்பாக பெண்கள்) இதனால் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். இருந்தாலும் பப்ளிக் ஏரியா என்பதால் அப்படி படம் எடுப்பவர்களை சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது இருக்கிறது. ( டயானா இறந்த போதுஅந்த மரணத்தை வைத்து சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தும் பெரிதாக எந்த பயனும் கிடைக்கவில்லை) நிறைய உயர்நிலை பெண்பிள்ளைகளின் விளையாட்டு போட்டிகள் தவறான முறையில் வீடியோ/ படங்கள் எடுத்து பகிர படுகிறது அவர்கள் வயது 16-18 க்குள்தான் இருக்கிறது இருப்பினும் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க படுவதில்லை.
  4. ஒழுங்கா தமிழே வாசிக்க தெரியாது இதிலே இங்கிலீஷில் விளக்கம் வேற எதோ தாங்கள்தான் உலகத்தில் சடடம் இயற்றியது போல ஏதும் பெருமை என்னமோ தெரியவில்லை
  5. இங்கு அமெரிக்காவில் பல கறுப்பு இளைஞர்கள் மீது வெள்ளைக்கார பெண்களால் இப்படி பொய் வழக்குகள் போடப்பட்டு ... அது கோட்டிலேயே பொய் என்று நிரூபணம் ஆனா போதும்கூட ....... வெறும் மன்னிப்பு கேட்டு பெண்கள் சுதந்திரமாக சென்று இருக்கிறார்கள். எதனை பேர்கள் நிரூபிக்க முடியாது உள்ளே இருக்கிறார்களோ தெரியவில்லை. நான் வசிக்கும் இடத்தில் ஒரு கறுப்பினத்தவரை (ஆயுத முனையில்) கடையில் களவு போன வழக்கில் தவறான நபரை 17 வயதில் கைது 20 வருடங்கள் பின்பு இப்போதான் அவர் இவர் இல்லை என்று விடுதலை செய்து இருக்கிறார்கள். 20 வருடங்கள் செய்யாத தப்புக்கு உள்ளே இருப்பது என்பது எவ்வளவு கொடுமை அதே போல கொழுத்த பணக்கார பையன்கள் ஏழை பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு .... பணம் மற்றும் அந்தஸ்து அரசியல் பின்புலங்களை பாவித்து சுதந்திரமாக திரிகிறார்கள் ஒரு வழக்கு டாகுமெண்டரி ஆக கூட வந்திருக்கிறது இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை
  6. இந்த வழியாக தலதா மாளிகைக்கு சென்று கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி இருந்தால் போலீஸ் காரர்கள் இன்னமும் குழம்பி இருப்பார்கள்
  7. உக்ரைன் ரசிய போர் நடந்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நன்று என்றே நான் எண்ணுகிறேன். ஒன்று இதில் நேரடியாக எந்த ஆள் சேதமும் அமெரிக்காவிற்கு இல்லை. மற்றது அமெரிக்காவோ மற்ற மேற்கு நாடுகளோ உதவி என்று சொல்லி யாருக்கும் செக் எழுதி பணத்தை கொடுப்பதில்லை. மாறாக உள்ளூர் உற்பத்திகளைத்தான் கொடுக்கிறார்கள். இங்கே அமேரிக்கா இங்கே தயாரிக்கும் ஆயுதங்களைத்தான் கொடுக்க போகிறது உள்ளூர் ஆயுத உற்பத்தி தொழிவாய்ப்பு என்பன முன்னேற்றம் காணும். டிராம் இதை நிறுத்த முடிவெடுத்தது உக்ரைனில் இருக்கும் லித்தியத்தை பெற்றுக்கொள்ளவே அமெரிக்காவிற்கு லித்தியம் மற்றும் ரர் மெட்டல் இரண்டுக்கும் பாரிய தட்டுப்பாடு உள்ளது அதை சீனவிடம் இருந்தே பெற வேண்டி இருக்கிறது. அது தவிர இங்கு யாழ்களத்திலும் மற்றும் மேற்கு ஊடங்களிலும் வெற்றிவேல் வீரவேல் என்று படம் காட்டிக்கொண்டு இருக்க ... புட்டின் கைப்பற்றிய 20 வீத உக்ரைன் நிலப்பரப்பும் செழிமையான லித்தியம் மற்றும் தைத்தானியம் நிறைந்த நிலப்பரப்புகள் ஆகும் இப்படியே போனால் மிகுதியையும் புடின் கைப்பற்றலாம் எனும் எண்ணமாகவும் இருக்கலாம். அதுதான் இப்போ பிரிடிஷ் காரர் தாம் இராணுவத்தை அனுப்ப போவதாக கூறி இருக்கிறார். போனது போக மீதி லித்தியம் தைத்தானியத்தை அள்ளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இப்போதைய ( அப்போதைய திடடமும் அதுதான்) ட்ராமின் திடடம்
  8. அந்தார்டிக்கா வில் இருந்து சவூதி ஒரு பனிப்பாறையை இழுத்து செல்வதற்கு முயற்சி செய்வதாக எங்கோ செய்தி வாசித்த ஞாபகம்
  9. அந்த விளக்கத்தில் ஏதாவது உங்களுக்கு புரிஞ்சுதா? எனக்கு வாசித்ததும் சாக் அடிச்ச மாதிரி ஆச்சுது ........ கருத்துக்கு இத்தனை வறுமை இருக்கிறவர்கள் வேறு எதை எழுத முடியும்? இனி அப்பிடியே ஊரோடு சேர்த்து உள்ளே அடைக்க வேண்டியதுதான்
  10. எல்லாம் தனி தனியே ட்ரம்பை சந்திக்கும்வரைதான் இதை உண்மை என்று நம்பினால் உக்ரைன் மக்கள்தான் பாவம் ட்ரம்பின் வரி கட்டுப்பாடுகளை இதன்மூலம் கொஞ்சம் தளர்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பில்தான் இவர்கள் கூடி இருக்கிறார்கள் அந்த ஐரோப்பா கூட்டுக்குள் கனடா காரரும் புகுந்து நிற்கிறார். எல்லோருக்கும் தனி தனி கூப்பிட்டு குழை அடித்தால் சகஜ நிலைக்கு திரும்பிடுவார்கள்
  11. அமெரிக்க உதவி இல்லையென்றால் இதுவரையிலும் இனிமேலும் ரசியாவை எதிர்த்து செலென்ஸ்கியால் போரிட முடியாது (செலென்ஸ்கி போரை முன்னெடுக்கலாம் உக்ரேய்ன் இராணுவத்தால் முடியாது) அமெரிக்காவை எந்த ஐரோப்பிய நாடும் எதிர்க்கப்போவதில்லை அதற்கு மேலால் பிரான்ஸ் மக்ரோன் செலென்ஸ்கிக்கு ஒரு கதை சொல்வார் ட்ராமை கண்டால் நீயும் நானும் சகோதரம் என்று கட்டி பிடித்து கொள்வார் போர் முடிந்தால் உக்ரேனில் தேர்தல் வரும் தேர்தல் வந்தால் செலென்ஸ்கி வெல்ல முடியாது அதனால் உக்ரைன் நாட்டு மக்களை அடகுவைத்து ஒரு ஒரு ஹீரோவிஷ்யத்தை உருவாக்க எண்ணி இருக்கிறாரார் ட்ரம் கேட்க்கும் மினரல் ஒப்பந்தத்தை வரும் வாரமோ அல்லது வரும் மாதமோ செலென்ஸ்கி கையெழுத்த்து இட்டுதான் ஆகுவார் முகத்தில் கரி பூசிக்கொண்டு கையெழுத்து இடுவதை விட அதை வெள்ளைமாளிகையில் செய்துவிட்டு கவுரமாக சென்று இருக்கலாம் கீரோயிச நாடகம் தேர்தலுக்கு பயன்படும் என்று செலென்ஸ்கி எண்ணி இருந்தால் அதுபோல ஒரு அடிமுடடாள் சிந்தனை வேறெதுவும் இருக்க முடியாது சில பண ஊழல் மோசடிகளை செலென்ஸ்கி ஒரு அமெரிக்கா நிறுவனத்துக்கு உள்ளலேயே செய்து இருக்கிறார் இதுவே ட்ரம்பிற்கு போதுமானது அதையும்தாண்டி செலென்ஸ்கி சில ஆயுதங்களை விற்று அவை காமாஸ் கைகளுக்கும் சென்று இருக்கிறது செலென்ஸ்கிக்கு எதிராக பிளேடடை மாற்ற இந்த இரண்டுமே அமேரிக்க அரசுக்கு போதுமானது. இதை வைத்தே ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டொவை ட்ரம் கையுக்குள் கொண்டுவந்து விடுவார் இப்போதே உக்ரைனில் செலென்ஸ்கியின் நடத்தைக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. போலந்து அரசுகள் கங்கேரிய அரசுகள் (இத்தாலி) ஏற்கனவே வலதுசாரி கொள்கை உடையவை டிரம்புடன் நெருக்கமானவை இவர்கள் செலென்ஸ்கிக்கு எதிராக திரும்பினால் அகதிகளாக இருக்கும் மில்லயன் கணக்கான உக்ரைன் மக்கள் நடு ரோட்டில் நிற்பார்கள். பூனை கவிதை அழகானது உலக நடைமுறை வேறானது நல்ல கற்பனை கதை நீளம் போதாது
  12. ஏற்கனவே பெருமையோடுதான் கற்பனை பெயர்கள் கொடுத்து சுயஇன்பம் கண்டு வாழ்கிறார்கள் ..... இனி என்ன புதுசா பெருமைபட்டுக்கொள்ள இருக்க போகிறது?
  13. சொந்த நாட்டில் அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கும் இன்னொருவனுக்காக அயல்நாட்டுக்கு துரோகம் இழைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சோவியத் யூனியன் பிரிந்தபோது உக்ரைன் ஒரு அணுவாயுத நாடு (பெலாரஸ் மற்றும் கசகஜிதான் கூட ) அது எத்தனை பேருக்கு இங்கு தெரியும் என்று தெரியவில்லை. உக்ரைன் மீது போர் செய்து உக்ரைனை கைப்பற்றிக்கொண்டு ரசியாமீது போர்செய்ய நேரிடலாம் எனும் தொலைநோக்கு பார்வையில் உக்ரைன் அணுவாயுதங்களை ரஸ்யாவிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை உருவாக்கியதே அமெரிக்காதான். 2014 இல் கிரிமியா தன்னை சுதந்திர நாடக பிரகடனப்படுத்திய பின்புதான் தன்னை பிடெரசன் ஒப் ரசியாவுடன் இணைத்துக்கொண்டது. அப்போதுதான் மற்ற எல்லைப்புற ரசிய நகரங்களில் ரசியர்களுக்கு எதிராக உக்ரைன் செய்துவந்த இனத்துவேச படுகொலைகள் உக்ரைனுக்கு எதிராக மாறப்போவதை உணர்ந்துகொண்ட அமெரிக்க- பிரிடிஷ் அரசுகள் ஜி8 ௮ நாடுகளில் இருந்து ரசியாவை நீக்கினார்கள் ஆனாலும் உள்நாட்டு சிறுபான்மை ரசியர்களுக்கும் உக்ரேனிய அரச படைகளுக்கும் உள்நாட்டு போர் நடந்துகொண்டுதான் இருந்தது. மேற்கு ஒருபோதும் உக்ரைன் நலன் கருதி உக்ரைனுக்கு உதவியதில்லை ... ரசிய எல்லையில் தம் ஆதிக்கத்தை செலுத்தவே உக்ரேனை பகடைக்காயாக பாவித்து வந்தார்கள். ஏன் இவ்வளவு காலமும் ஆளை விடடால் போதும் என்று பின்லாந்து நேட்டோவில் சேராமல் இருந்தார்கள்? இப்போ உக்ரைன் போர் நெருக்கடிக்குள் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து இணைத்தது கொண்டார்கள் அதற்க்கான பலனை இப்போதே அவர்கள் அனுபவித்து வருகிறார்கள் அவர்கள் எனர்ஜி செலவு இரட்டிப்பாகி இருக்கிறது. இவ்வளவு கெடுபிடிக்குள்ளும் பிரான்ஸ் ஜேர்மன் ரசிய பெட்ரோலில்தான் வாழ்வு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்ன நேரடியாக இல்லாமல் இந்தியா போய் ( கங்கையில் நீராடி புனித பெட்ரோலாக) வருகிறது. நாம் ஒரு பக்க செய்தி மட்டுமே கேட்டு வாழ்கிறோம் 2022ல் போர் தொடங்குமுன் இரவு புடின் பைடனுடன் 2 மணிநேரம் பேசினார். அவர் என்ன பேசினார் என்பதை மக்களுக்கு காட்டி .... புடின் எவ்வளவு கொடியவர் என்பதை எங்களுக்கு நிரூபித்து காட்டி இருக்கலாமே? நாங்கள் ஒன்றும் பெரிதாக சுதந்திர நாடுகளில் வாழவில்லை .... செய்திகள் இருட்டிடப்பு செய்பட்டு ஒற்றை பக்க செய்திகளை மட்டும்தான் பார்க்கிறோம். ஆனால் ரசிய சீன போன்று அடக்குமுறைகள் இங்கு இல்லை இந்த உக்ரைன் ரசிய போர் அமளிக்குள் இரண்டு ஆஃப்ரிக்க நாடுகள் பூரண சுந்திரம் அடைந்து தமது சொந்த கால்களில் நிற்க தொடங்கி இருகிறார்கள் மிக பெருத்த வளர்ச்சியிலும் சென்றுகொண்டு இருக்கிறார்கள். மேற்கு உலகிற்கு தாங்கவே முடியாத கசப்பாக இருக்கிறது ரசிய உதவிதான் அதற்கு பின்தளம் அதன் மீது எப்படி அழிவை கொண்டு வருகிறார்கள் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்
  14. ஒரு சீமானால் எவ்வளவு உயிரினங்களுக்கு தீனி கிடைக்கிறது பாவங்கள் இவ்வளவு பட்டினியில் கிடந்தது இருக்கிறார்களே
  15. வெற்றிவேல் வீரவேல் ஏவுகணைகள் இனி வெடிக்காது என்று அவர்களுக்கே கொஞ்சம் புரிந்து விடடது என்று எண்ணுகிறேன்
  16. இடுப்பு எல்லாம் சரியாதான் இருக்கு பிள்ளை வளர்ப்பு செலவுதான் விண்ணுக்கு ராக்கெட் விடும் செலவை விட அதிகமா இருக்கு ketamine இதுதான்
  17. தேயிலை பறிக்கும் தொழிலாளிகள் இவ்வாறான நரி வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் ..... இது சொந்த செலவில் வைக்கும் சூனியமாகவும் மாறலாம் தேயிலை பறிக்கும் சராசரி நேரத்தை வைத்து இனி வரும் நாட்களில் அவ்வ்வளவு தேயிலை பறிக்க வேண்டும் என்று வந்து நிற்கும் இந்த முதலாளி முதலைகள்
  18. இன்னும் எந்த கோட்டிலும் எதுவும் நிரூபணம் ஆகவில்லை நீங்கள் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்? சீமானுக்கு பக்கத்தில் படுத்து இருந்தீர்களா?
  19. சென்னை நீதிமன்றுக்கு........ தமிழ்நாட்டு காவல்துறைக்கு .......... மாமி வேலை என்ன என்றே தெரியாது பொதுவாவே இப்படியான காமெடிக்கு வெளியில் இருந்தே வாசிச்சு சிரித்துவிட்டுதான் செல்வேன் ...... வயிறு வலி தாங்கல
  20. ஐயோ புலவர் ......... இப்போ அதுவல்ல பிரச்சனை. ஒரு வேளை காசு கறப்பதர்க்கவே கண்ணகி வியலடசுமி இதை செய்துகொண்டு இருந்தாலும் கூட வியாஜலடசுமி காசு கறக்க பாக்கிறார் ...... அப்படி என்று எப்படி சீமானால் பேச முடியும்? சீமான் இப்படியே பேசி கொண்டு இருந்தால் ...... இங்கு யாழ்களத்தில் நாம் எதற்கு இருக்கிறோம்?
  21. எத்தனையோ கிறிஸ்தவ குழந்தைகள் பட்டினியில் சாகிறார்கள் இவர்கள் தங்க கட்டிகளின் மேல் படுத்து கிடக்கிறார்கள் ........ இந்த கொடியவர்கள் வயதான காலத்தில் சாகப்போகிறார்கள் என்று இங்கு ஒரு அடி முடடால்கள் கூட்டம் அழுதுகொண்டு கிடக்கிறது. வத்திக்கானில் சொத்து மதிப்பு பலநூறு பில்லியன் டாலர்கள் இவர் இறந்ததும் இன்னொரு ரட்ஷகரை அறிமுகம் செய்து வைப்பார்கள் அவர் மொத்த உலகையும் இரடசிப்பார். ரோம இராச்சியம் அழிந்துபோகவில்லை அது வத்திக்கான் என்று பெயர்மாற்றம் கொண்டுள்ளது
  22. சுவிஸ் நாட்டில் ப்ராட்பூஸ்ட் டும் ஒரு சாதாரண பாணும் சின்ன சின்ன ஊர் திருவிழாக்களில் விற்பார்கள் அதை ஒத்த ருசியை வேறு எங்கும் நான் இதுவரை சுவைத்ததில்லை. அதுபோல இத்தாலியில் சால்சித்தா என்று அழைப்பார்கள் அதுவும் ஒரு தனி சுவை. அதே நினைப்பில் ஒரு முறை ஜேர்மன் ரயிலில் உள்ள உணவகத்தில் ப்ராட்பூஸ்ட் பார்த்துவிட்டு ரொம்ப பசியில் ஆசைப்பட்டு வாங்கினேன் உண்ணவே முடியவில்லை அவ்வளவு கேவலமாக இருந்தது பத்தியில் நிறுத்தி விட்டிட்டேன் சுவிஸ் ப்ராடவூஸ்ட் இத்தாலிய சால்சித்தா சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் வாங்கி சுவையுங்கள் Italian Salsiccia St. Galler Bratwurst
  23. முழுமையாக பாருங்கள் .......... வேலைச்சலிப்பு மற்றும் டிப்ரெஷன் உள்ளவர்கள் அடிக்கடி பாருங்கள் சிரிப்பு எல்லா மனிதர்களுக்கும் நல்ல நிவாரணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.