Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. யேர்மன் மொழியில் செய்தியை கேட்க, பார்க்க விரும்பினால், https://www1.wdr.de/nachrichten/iran-protest-unterwasche-festnahme-100.html செய்தியின் சுருக்கம், ஈரானில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பல்கலைக்கழக மாணவி தன் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக்கழக முன் வளாகத்தில் வெளியார் முன்பாக நடமாடினாள். ஈரானிய இஸ்லாமிய அரசில், பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடு இருக்கின்றது என்பது உலகம் அறிந்த விடயம்தான். ஆனாலும் அவ்வப்போது தெஹ்ரான் போன்ற பெருநகரங்களில், இளம் சமுதாயத்தினர் ‘முக்காடு அணிய வேண்டும்’ என்ற அரசின் கொள்கையை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மஹ்சா அமினி என்ற பெண் முக்காடு விடயத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போய் சித்திரவதையின் விளைவாக இறந்தார். ஈரானில், ஆடைக் கட்டுப்பாடுகளை பெண்கள் மீறினால் சித்திரவதைகளை,வன்முறைகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு மஹ்சா அமினி ஒரு சாட்சி. ஈரானில், தனியார் பல்கலைக்கழகமான ஆசாத் பல்கலைக்கழகத்தின் ( Asad-University) நிர்வாகிகள், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் கட்டாயம் மொட்டாக்கு அணிய வேண்டும் என்று அறிவித்ததன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின் கோபம் கொண்ட ஒரு மாணவி எதிர்ப்பைக் காட்டுவதற்காக தனது ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக் கழகத்துக்கு முன்பாகக் காட்சி தந்தார் என மனித உரிமை அமைப்பான ஹெங்கா (Hengaw )தெரிவித்திருக்கிறது. பல்கலைக் கழக நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளார்கள். இப்பொழுது அந்தப் பெண் ஒரு மனநோயாளி எனவும் அவள்மேல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்கள். ஈரான் ஜனாதிபதி Massoud Peseschkian தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் மீதான ஆடைக் கட்டுபாடுகள் பற்றிய பிரச்சினையை தீர்க்கப் போவதாக உறுதியளித்திருந்தார். புதிய ஜனாதிபதியாக இருந்தாலும் அவரும் பழமைவாத-மிதவாத ஜனாதிபதிதான். இங்கே யார் மனநோயாளி என்பதில் ஒரு குழப்பம் வருகிறதல்லவா?
  2. அழைப்புக்கு நன்றி தமிழ்சிறி. இலங்கைத் தேர்தலில் இப்பொழுது யார் யார் அதிகம் வாக்குகளைப் பெறுவார்கள் என்று கணிக்கக் கூடிய அறிவு உண்மையில் எனக்குக் கிடையாது. இன்றுள்ள அரசியலில் நல்லவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. நல்லவர்கள் யாரையும் கண்ணுக்கு எட்டிய தூரத்திலே காணவும் முடியவில்லை. வல்லவர்கள் வர வேண்டும். அதை மதிப்புக்குரிய பொதுமகன் தெரிவு செய்வார் என்று நம்புகிறேன்.
  3. பாரதிதாசனின் எழுதிய “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?..”பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலை பல பாடகர்கள் பாடி இருக்கிறார்கள். நேற்று இந்தப் பாடல் முகநூலூடாக எனக்குக் கிடைத்தது
  4. குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு ரணில் ஒப்புக் கொண்டிருந்தால் பல நூறு கோடி ரூபாய்க்கள் இலங்கைக்குக் கிடைத்திருக்கலாம். ஒரு பேட்டியில் துக்ளக் சோ இப்படிச் சொல்லியிருந்தார்,”இலங்கை ஒரு தீவு. அது மீன்(ரின்) இறக்குமதி செய்கிறது” என்று. என்ன செய்ய எங்கள் அறிவு அவ்வளவுதான்.
  5. இதுவரை 155 பேர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பலரைக் காணவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
  6. நன்றாகப் பார்த்தீர்களா Sasi_varnam? என் பார்வையில் மரத்தில் ஆணி அறைந்தது போல் தெரியவில்லை
  7. “ஜாம்ஷிட் ஷர்மாத்துக்கு( Jamshid Sharmahd)வழங்கப்பட்ட தீர்ப்பானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தயவு செய்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்” என யேர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பொக் ஈரானைக் கேட்டிருந்தார். ஆனால் தான் வழங்கிய தீர்ப்பில் ஈரான் உறுதியாக இருந்தது. யேர்மனி,ஈரான் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஷர்மாத்துக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு இப்போது மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. ஷர்மாத் அவரது ஏழு வயதில் தனது தந்தையுடன் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். ஷர்மாத் சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்திருக்கிறார். 2003 முதல் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்தார். 2007இல் ஒரு சைபர் தாக்குதலை நடத்தினார் என்று ஈரான் ஷர்மாத் மேல் குற்றம் சுமத்தியது. அத்துடன் ஈரானுக்கு எதிரான ரொன்டர் (Tondar) இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும், ரொன்டர் இயக்கத்துக்காக,லொஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி,வானொலி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு உதவினார் என்றும் ஈரான் அவர்மேல் குற்றம் சாட்டியிருந்தது. 2020இல் தொழில் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றி விட்டு யேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷர்மாத், விமானம் இடைத் தங்கலுக்காக துபாயில் நின்ற போது ஈரானிய உளவாளிகளால் ஈரானுக்குக் கடத்தப்பட்டிருந்தார். ஈரானில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்ட ஷர்மாத்துக்கு 2023ம் ஆண்டு ஈரான் புரட்சிகர நீதிமன்றம் மரணதண்டனையை விதித்தது. ஷர்மாத்திற்கு வழங்கப்பட்டஇந்தத் தீர்ப்புக்கு யேர்மனி உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் மனித உரிமை அமைப்புகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. ஈரான் மரண தண்டனைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தினாலும், மேற்கத்திய வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது மிகவும் அரிதானது. ஆனால் ஷர்மாத்தின் விடயத்தில் அவர் ஈரானிய குடியுரிமையையும் வைத்திருந்ததால் அவருக்கான மரணதண்டனையை ஈரானால் நிறைவேற்ற முடிந்திருக்கிறது. சிறையில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 69 வயதான தனது தந்தையை விடுவிக்க ஷர்மாத்தின் மகள் கெஸல் இறுதிவரை போராடினர். அவரது போராட்டமும் பலனில்லாமல் போனது. 28.10.2024 அதிகாலை ஷர்மாத், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காக தூக்கிலிடப்பட்டார் என ஈரான் அறிவித்திருக்கிறது. சில ஆண்டுகளாக ஈரானுக்கும் யேர்மனிக்கும் இடையே நல்ல உறவுகள் இருக்கவில்லை. இப்பொழுது இன்னும் மோசமான நிலை ஏற்படலாம் என யேர்மனிய வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பொக் தெரிவித்திருக்கிறார். https://www.spiegel.de/ausland/jamshid-sharmahd-iran-weist-deutschlands-kritik-an-hinrichtung-zurueck-a-dd4d9b9d-e8b0-4a5e-bdd0-4c5f8edc748a

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.