Everything posted by Kavi arunasalam
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இவர்களிடம் வைகோ மண்டியிட வேண்டும். தூள் கிளப்புறாங்கள்
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
சிறி, நீங்கள் யதார்த்தத்தை விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். நான் அவர்கள் கட்சி ஆதரவாளர் இல்லை. அவர்கள் இனவாதம் பேசினார்கள். தங்கள் நிலைப்பாட்டைச் சொன்னார்கள். எழுதினார்கள். அவர்களது நோக்கம் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே இருந்தது என்பது இப்பொழுது உ றுதியாயிற்று என்று குறிப்பிட்டேன். அவ்வளவுதான். அவர்கள் மக்களுக்கு தேசியம் என்ற படத்தைக் காட்டி தங்களுக்கான இலாபங்களைத் தேடுகிறார்கள். இது என் கணிப்பு. பொது வேட்பாளருக்கு இரண்டு லட்சத்துக்கு மேல் வாக்கு விழுந்தால் என்ன அது உங்களால்தான் கிடைத்தது என்றால் என்ன, பொது வேட்பாளர் என்பவர் தமிழினத்தின் கேலிச் சித்திரம். ஆனாலும் “சங்குச் சின்னத்தை எந்தக் கட்சி எடுத்தது அதற்கு ஆதாரம் இருக்கிறதா?” என்று ஒரு திரியில் ஆவேசமாகக் கேட்டிருந்தீர்கள். நானும் ஆதாரத்தை இணைத்திருந்தேன். இப்பொழுது, “உனக்கென்ன.. உனக்கென்ன..” என்று பாடுகிறீர்கள். இருட்டினில் வாழும் இதயங்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
சிறி, உங்கள் வேகத்துக்கு என்னால் ஓட முடியவில்லை. நான் இன்னமும் ‘சங்கு’க்குள்ளேயே சுத்திக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் அதைத் தாண்டிப் போய்விட்டீர்கள். பொது வேட்பாளர் விடயத்தில், போட்டியிடுகிறவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடாது, சின்னமும் பயன் படுத்தக் கூடாது என்றுதான் தீர்மானம் எடுத்தார்கள். இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர்கள் சங்கு சின்னத்தைப் பயன் படுத்துவதாகச் சொல்வது தப்புத்தானே. ஆக பொது வேட்பாளர் என்ற மாயமானை அவர்கள் கொண்டு வந்ததே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி என்றுதானே அர்த்தம். ஒரு கட்சியின் தலைவராக தன்னை முன்னிறுத்தும் ஒருவர், (அதுவும் ஒரு ஆசிரியர்) கட்சியின் தீர்த்துமானக்கு முரணாக வெளி இடத்தில் நடந்து கொள்ளும் விதம் நன்றாகவா இருக்கிறது? இவர் எப்படி தமிழர்களின் நலன்களைப் பேணப் போகிறார்? ஆக அர்ச்சுனன் கண்களுக்கு எப்படி கிளி மட்டும் தெரிந்ததோ அது போல் எனக்கு சிறீதரன் மட்டும்தான் தெரிகிறார். ஒரு பெரிய கோட்டை சிறிதாக்க வேண்டுமானால் அதன் பக்கத்தில் அதைவிட பெரிய ஒரு கோட்டை வரைய வேண்டும் என்பார்கள். அந்த வேலையைத்தான் சிறீதரன் செய்து கொண்டிருக்கிறார்.
-
தீர்மானம் எடுக்க முடியாது ; தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றம் !
பல எலிகள் சேர்ந்தால் புத்து எடுப்பது கஸ்ரம்
-
சமஸ்டியை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை அறிக்கை
இந்தப் பிரச்சாரம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. ரஞ்சித் அந்த வேலையில் முனைப்பாக இருக்கிறார். வரலாறுகளை மீட்டிப் பார்க்கிறோம். அடுத்து என்ன என்பதை மதிப்புக்குரிய பொதுமகன் தேர்தலில் சொல்வார்
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச
- கருத்துப்படம் 06.10.2024
From the album: கிறுக்கல்கள்
- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
- கருத்துப்படம் 06.10.2024
From the album: கிறுக்கல்கள்
- புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அல்லது, தூங்கிட்டீங்கள் அல்லது ஏராளன் இணைக்க (விரும்ப) இல்லை https://www.tamilmirror.lk/செய்திகள்/சங்கு-எங்கள்-சின்னம்-எங்கும்-குதிப்போம்/175-344879- புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம்! - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
வேறு யாராக இருக்கும்? சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறீகாந்தா,….. இத்யாதிகள். ஜனாதிபதித் தேர்தலில் சங்கு ஊதியவர்கள்- சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
- கருத்துப்படம் 05.10.2024
From the album: கிறுக்கல்கள்
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நட்பார்ந்த நொச்சி, இங்கு யாரும் தமிழ் தேசியத்தை நிராகரிக்கவில்லை. சிங்கள தேசிய விசுவாசிகளும் இல்லை. நீங்கள் நினைக்கும், விரும்பும் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்களை யாராவது வைத்தால் அவர்களை, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள் அல்லது தேச விரோதிகள் எனச் சாயம் பூசப் பார்க்கிறீர்கள். ஒரே இடத்தையே நீங்கள் சுற்றிச் சுற்றி வருவதால் தேசியத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் வரையறை செய்து வைத்திருக்கும் அந்தத் தேசியத்தை விட்டு வெளியே வந்து பேசுங்கள். புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான ஒரு போராட்ட வடிவம். அதில் தோற்று விட்டோம். நினைத்துப் பார்க்க முடியாத இழப்புக்களையும் சந்தித்து விட்டோம். ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை’ என்று பிரபாகரன் சொன்னதை இங்கு நினைவு கூர்கிறேன். இலங்கை அரசியலில் வரலாற்றில் இல்லாத ஒரு மாற்றம் இன்று நிகழ்ந்திருக்கிறது. ‘இலங்கையில் இடதுசாரி ஆட்சியா?’ என அயல்நாடு உட்பட மேற்கத்திய நாடுகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது எங்களுக்கு ஒரு புதிய தளம் கிடைத்திருக்கிறது. அங்கேயும் ஒரு தடவை நாங்கள் முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அதற்கும் கால அவகாசம் தர வேண்டித்தான் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் முடிய வேண்டும். சர்வதேசமோ, இந்தியாவோ தங்கள் நலன்களைக் கருதாமல் தமிழர்களின் உரிமைகளுக்கான ஒரு தீர்வைத் தரப் போவதில்லை என்பதும் நாங்கள் அறிந்த பாடம்தான். சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்க நாங்கள் செய்யாத ஆர்ப்பாட்டங்களா? சனல் 4 வெளியிடாத ஆவணங்களா? சங்கு ஊதித்தான் தெரியப்படுத்த வேண்டுமா? இன்று நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனக் கொலைகள், யார் சொல்லியும் கேளாமல் அடுத்த நாட்டுக்குள் புகுந்து அழிக்கும் இஸ்ரேலின் ஆணவம்… என்று பலதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்துக்கு புதிதாக நாங்கள் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது? விட்டால் தமிழ் மக்கள் சிங்களத்துடன் ஒத்துப் போய் விடுவார்களோ என்ற ஒரு அச்சம் தான் இன்று பலரைக் கிலி கொள்ள வைத்திருக்கிறது. தேசியத்தை வைத்து எழுதுபவர்கள், மக்கள் மத்தியில் தங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்கள் இப்பொழுது பலமாக குரல் தருவதும் அதற்காகத்தான். ஜனாதிபதிக்கான வெற்றி வாய்ப்பில் மூன்று பேர்கள் இருந்தார்கள். அதில் அனுராவும் இருந்தார். அப்பொழுது அவரைப் பற்றிய விபரங்களை மக்களுக்கு நினைவூட்டி இருக்கலாம். அவர் வென்றதன் பின்னர், இப்பொழுது எதற்கு இவ்வளவு அவசரம்? வெற்றுப் பேச்சு மறவர்களுக்கு புது வேலை ஒன்று வந்திருக்கிறது, அது அனுராவை விரைவில் வெளியே அனுப்புவது. இப்படியான செயல்களைச் செய்விக்க அயல்நாடு கூடத் தயங்காது. ஆனால் செய்பவர்களுக்கு ஏதாவது கிடைக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது இப்படியானவர்கள்தான் தேசியத்தை அழிப்பவர்கள் என்று. இன்னும் ஒன்று, புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்களுக்காக நிழலி ஒரு திரியைத் திறந்திருந்தார். உங்களுக்கான அழைப்பையும் நான் அங்கே ஏற்கெனவே விடுத்திருந்தேன். வாருங்கள் ‘அடுத்தது என்ன?’ என்பதை அங்கே பேசுவோம்.- தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
- கருத்துப்படம் 04.10.2024
From the album: கிறுக்கல்கள்
- The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
திமுக, வேறு கட்சிகளை வளர விடாமல் இடையிலேயை கிள்ளி எறிந்து விடும். சினிமாவில் இருந்து ஒரு தளபதி வருகிறார். அவரை அரசியலில் இருந்து விரட்டுகிறார்களா? அவர் தாக்குப் பிடிப்பாரா? பார்க்கலாம்.- கருத்துப்படம் 03.10.2024
From the album: கிறுக்கல்கள்
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நாங்கள் ‘தமிழ்..தமிழ்’ என்று உயிரைக் கொடுக்கிறோம். அதுபோல்தான் மற்ற மொழி பேசுபவர்களும் இருப்பார்கள். சிங்களவர்கள், “நடந்தது எல்லாம் துன்பியல் சம்பவங்கள்’ என்றால் நாங்கள் ஒத்துக் கொள்வோமா? இன்று மூச்சு விட அவகாசம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியையே விமர்சிக்கும் அளவுக்கு நிலமை வந்திருக்கிறது. யேர்மனியில் கிழக்கு மாநிலங்களுக்குப் போக இப்பொழுது சற்று பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு யேர்மனியில் இனவெறி வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அப்படியானதொரு நிலமை இன்றில்லை. மாவீரர் தினத்துக்கு நாட்டுக்குப் போய் படங்கள் எடுத்து வந்து யாழில் பதியக் கூடியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. கொஞ்சம் யதார்த்தத்தைக் கதைத்தால், தேசியவாதிகளுக்குக் கோபம் வருகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட,கிழக்கில் மக்கள் அளித்த தீர்ப்பு அங்குள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பக்க பலமாக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யலாம். தேசியம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.- பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்
- கருத்துப்படம் 02.10.2024
From the album: கிறுக்கல்கள்
- பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு
- கருத்துப்படம் 02.10.2024
From the album: கிறுக்கல்கள்
- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
விசுகு, வரலாறுகளை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்க முடியாது. நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கின்றேன். ‘எங்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது’ என்று சொல்லியிருந்தேன்.- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
‘பழம் தின்று’ என்று எழுதி கொமா போட்டுவிட்டு சற்று இடைவெளி விட்டுவிட்டீர்கள். அதனால் முதலில் நான் தப்பாக விளங்கிக் கொண்டுவிட்டேன். - கருத்துப்படம் 06.10.2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.